Jump to content

புரெவி சூறாவளி செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புரட்டி எடுத்த புரவி சூறாவளி! திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சியின் தற்போதைய நிலை

புரவி சூறாவளியின் தாக்கத்தை அடுத்து திருகோணமலையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

இரவு பலத்த காற்றுடன் ஓரளவு மழை பெய்தமையும் திருகோணமலை மாவட்டத்தில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இருப்பினும் பல பிரதேசங்களில் அடித்த பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் சேதங்களும் விளைவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் திருகோணமலையை அண்டிய கடற் பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பும் பாரிய அலையும் வழமைக்கு மாறாக உள்ளது.

பொது மக்களின் பாதுகாப்பு கருதி திருகோணமலை மாவட்ட செயலகம் ஊடாக பல முன்னெடுப்புக்கள் தற்போது வரை இடம் பெற்று வருகிறது. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 24 மணி நேர சேவையில் ஈடுபட்டு வருகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா,மூதூர்,குச்சவெளி,தம்பலகாமம்,திருகோணமலை உள்ளிட்ட 11 பிரதேச பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்களுக்காக பிரதேச செயலாளர் ஊடாக முன்னறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக வீதி ஓரங்களில் நீர் வடிந்தோட முடியாமலும் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து தடை என்பனவற்றை இலகுபடுத்த உள்ளூராட்சி மன்றங்கள்,பிரதேச செயலகங்கள்,முப்படையினர்கள் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கு மேலதிகமாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட கிளை ஊடாகவும் மருத்துவ மற்றும் முதலுதவி சேவைகளும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு நகரிற்குள் பிரவேசிக்கும் அனைத்து வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுகின்றது.

இதில் வட்டுவாகல் பாலம், செல்வபுரம் பகுதியிலான வீதிகள் இந்த நிலமை காணப்படுகின்றபோதும் கேப்பாபுலவு முல்லைத்தீவு வீதியே தற்போது தப்பியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இரு வீடுகளின் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் இரு வீடுகளும் சேதமடைந்தன.

இதனால் இரு குடும்பங்களும் இடப்பெயர்வை சந்தித்துள்ளன. இதேபோன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிக மழை பொழிவு இருந்தது.
 

https://www.ibctamil.com/srilanka/80/155446?ref=home-imp-parsely

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரெவி சூறாவளி- வடக்கில் 5000 குடும்பங்களைச் சேர்ந்த 22,000 பேர் பாதிப்பு

 
December 3, 2020

புரெவி சூறாவளி காரணமாக வடக்கில் 5000 குடும்பங்களைச் சேர்ந்த 22,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

cycljaff1-300x225.jpg

 

மன்னார், முல்லைத்தீவு யாழ்.மாவாட்டங்களில் 150 வீடுகள் முழுமையாகவோ அல்லது ஓரளவோ சேதமடைந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

cyclone-5-300x225.jpg

 

வடக்குகிழக்கில் நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர் அவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் கடற்படையினரும் கரையோர காவல் படைப்பிரிவினரும் ஈடுபட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

cyclone4-300x169.jpg

 

https://thinakkural.lk/article/94905

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.நெல்லியடியில் மின்சாரக் கம்பிகளுக்கு மேல் விழுந்த மரம்

December 3, 2020

யாழ். மாவட்டத்தில் தற்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பொழிந்து வருகிறது. இந் நிலையில் நெல்லியடி- கொடிகாமம் வீதியில் சாமியன் அரசடிக்கு அண்மையில் மரம் ஒன்று சரிந்து மின்சாரக் கம்பிகளுக்கு மேல் விழுந்துள்ளது.

மின் கம்பிகள் அறும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

128310225_1092099964577963_5940914967635

 

https://thinakkural.lk/article/94847

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளக்காடாக கட்சியளிக்கும் வடக்குப் பகுதி ; பல குடும்பங்கள் நிர்க்கதி

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக் காரணமாக ஆறு மாவட்டங்களில் 3, 575 குடும்பங்களைச் சேர்ந்த 12, 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 15 வீடுகள் முழுமையாகவும் 192 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இன்று பிற்பகல் 12 மணிவரையில் பதிவுசெய்யப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டே அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

spacer.png

spacer.png

spacer.png

மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தின் நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி, மடு மற்றும் மன்னார் நகரம் ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் 2,236 குடும்பங்களைச் சேர்ந்த 7, 749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இங்கு 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 1,778 குடும்பங்களைச் சேர்ந்த 6,795 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

யாழ்ப்பாணம் மாவட்டம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கரவெட்டி, சங்கானை, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய், மருதங்கேணி, சாவகச்சேரி, நெடுந்தீவு, உடுவில், பருத்தித்துறை மற்றும் வேலணை பிரதேச செயலாளர் பிரிவுகளில் 829 குடும்பங்களைச் சேர்ந்த 2, 986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு அனர்த்தம் காரணமாக நால்வர் காயமடைந்துள்ள நிலையில் ஒருவர் காணாமலும் போயுள்ளனர்.

15 வீடுகள் முழுமையாகவும் 152 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன், 139 குடும்பங்களைச் சேர்ந்த 539 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

கிளிநொச்சி மாவட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

 

முல்லைத்தீவு மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு மற்றும் மணலாறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் 405 குடும்பங்களைச் சேர்ந்த, 1,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 130 குடும்பங்களைச் சேர்ந்த 444 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

வவுனியா மாவட்டம் 

வவுனியா மாவட்டத்தில் வவுனியா, வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு மற்றும் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் 74 குடும்பங்களைச் சேர்ந்த 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளது.

 

திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் வெருகல், கந்தளாய், சேருவிலை, மொரவெவ, குச்சவெளி, கிண்ணியா, தம்பலகாமம், பதவிசிறிபுர மற்றும் திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவுகளில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு 19 வீடுகள் பகுதிளவில் சேதமடைந்துள்ளதுடன், 864 குடும்பங்களைச் சேர்ந்த 2,558 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

https://www.virakesari.lk/article/95851

 

Link to comment
Share on other sites

இலங்கையை விட்டு விலகி சென்ற புரெவி

 

இலங்கையை விட்டு விலகி சென்ற புரெவி

 

புரெவி (“BUREVI”) என்ற சூறாவளியானது தற்போது மன்னாருக்கும் பூநகரிக்கும் இடையிலாக நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான வேகம் கொண்ட இந்த சூறாவளியானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 90 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும்.

கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் நாளை காலை வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

ஏனைய கடற்பரப்புகளில் மீனவர்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் இடையிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனைய கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது 60-70 கிலோ மீற்றர் வரை காணப்படும். இக் கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது 40-50 கிலோ மீற்றர் வரை காணப்படும். இக் கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும்கொந்தளிப்பாக அல்லது உயர் அலைகளுடன் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நீர்கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாககாங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளில் கரையோரத்தை அண்டிய பகுதிகளில் கடல் அலைகள் 2.0 - 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் குளங்கள் உடைப்பு : 275 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்

வவுனியாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக இரண்டு குளங்கள் உடைப்பெடுத்துள்ளதுடன் அதன் கீழ் செய்கை பண்ணப்பட்டிருந்த 275 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளன.

spacer.png

 

வங்களா விரிகுடாவில் உருவாகிய “புரெவி” புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் நேற்று முதல் காற்றுடன் கூடிய கன மழை பொழிந்து வருகின்றது.

கனமழை காரணமாக மாவட்டத்தில் அனேகமான குளங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதுடன் வவுனியா வடக்கில் அனைத்து குளங்களும் முழுகொள்ளளவை எட்டிய நிலையில் மேலதிக நீர் வெளியேறி வருகின்றது.

spacer.png

 

இந்நிலையில் வவுனியா வடக்கு பகுதியில் அமைந்துள்ள இலுப்பைக்குளம், மற்றும் ஏம்பன் குளத்தின் அணைக்கட்டுகளில் அதிக நீர் வரத்து காரணமாக உடைவு ஏற்பட்டுள்ளமையால் அதன் கீழ் செய்கை பண்ணப்பட்டிருந்த 275 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளது.  

 

இலுப்பைக்குளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்டிருந்த 245 ஏக்கர் வயல் நிலங்களும், ஏம்பன் குளத்தின் கீழ் 30 ஏக்கர் நெற்பயிர்களும் இவ்வாறு அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் குளங்கள் உடைப்பு : 275 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் புரெவி புயல் தாக்கத்தினால் பெருமளவான மக்கள் பாதிப்பு!

 
4-696x392.jpg
 57 Views

புரெவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில்   பெருமளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் சில இடங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

1-20.jpg

இந்நிலையில், இந்த அனர்த்தம் குறித்து யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவிக்கையில்,

“யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து 346 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 703 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2.jpg

அத்தோடு, யாழ். மாவட்டத்தில் தற்போது 32 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 879 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 189 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

6.jpg

மேலும், கடும் காற்றினால் 48 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 826 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளனர்.

5.jpg

குறிப்பாக, யாழ். மாவட்டத்தில் பருத்தித்துறை, சண்டிலிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளவர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்றார்.

 

https://www.ilakku.org/யாழில்-புரெவி-புயல்-தாக்/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.