Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் பெண் என்பவள் வியப்பின் முழு வடிவம் ஆண்டவன் படைத்த மன உறுதியின் மறு வடிவம்....

விண்ணுலகில் மின்னும் வைரங்கள் விண்மீன்கள் என்றால் மண்ணுலகில் மின்னும் வைரங்கள் பெண்கள்....

தன் குடும்ப நலன் கருதி தூக்கத்தை துறப்பாள் உணவைத் துறப்பாள் கல்வியைத் துறப்பாள் ஏன் தன் இலட்சியக் கனவைக் கூட துறப்பாள் ஆனால் கணவனை குழந்தைகளை ஒரு போதும் துறக்க மாட்டாள்.....

பெண் எப்போதும் தாயாகவே இருக்கின்றாள் தாய்மை உணர்வற்ற ஒரு கணம் கூட வாய்ப்பதில்லை அவளுக்கு....

இப் பரந்த உலகெங்கும் காத்திருப்பு மட்டுமே வாழ்வாகிறது பெண்களுக்கு பெண் அன்பினாலும் நிறைந்தவள் கண்ணீரினாலும் நிறைந்தவள்....

பெண்ணின் மனவறிவினால் இவ் மண்ணுலகும் அறிவுறுகிறது யாவும் படைத்த ஆண்டவனுக்கு நிகர் அவளே....

பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள் மட்டுமன்றி பின்பற்றப்பட வேண்டியவர்களும் கூட....

-தமிழ்நிலா.

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

வணக்கம் அம்மணி. பெண்ணைப் பற்றிய சுருக்க உரை நன்றாக இருக்கிறது..!

குடும்பத்தின் அச்சாணியும், கெளரவமும் பெண்ணிடமே இருக்கிறது. போற்றுகிறோம், வணங்குகிறோம்..

ஆனாலும் கொஞ்சம் ஆண்கள் மீதும் கருணை வையுங்கம்மா..! 😜

 

Edited by ராசவன்னியன்
  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ராசவன்னியன் said:

வணக்கம் அம்மணி. பெண்ணைப் பற்றிய சுருக்க உரை நன்றாக இருக்கிறது..!

குடும்பத்தின் அச்சாணியும், கெளரவமும் பெண்ணிடமே இருக்கிறது. போற்றுகிறோம், வணங்குகிறோம்..

ஆனாலும் கொஞ்சம் ஆண்கள் மீதும் கருணை வையுங்கம்மா..! 😜

 

மிக்க நன்றிகள்...இதோ ஆண்களைப் பற்றிய கவிதையையும் பதிவிடுகின்றேன்

Link to comment
Share on other sites

வணக்கம் தமிழ் நிலா,

உங்களை கருத்துக்கள உறவுகள் எனும் உறுப்பினர் பிரிவுக்கு உயர்த்தியுள்ளேன். இனி உங்களால் கள உறவுகளுக்கான அனைத்து திரிகளிலும் திரிகள் திறக்கவும் கருத்தாடவும் முடியும்.

அத்துடன் உங்களின் சில பதிவுகளை பொருத்தமான பகுதிகளுக்கும் நகர்த்தி விடுகின்றேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிழலி said:

வணக்கம் தமிழ் நிலா,

உங்களை கருத்துக்கள உறவுகள் எனும் உறுப்பினர் பிரிவுக்கு உயர்த்தியுள்ளேன். இனி உங்களால் கள உறவுகளுக்கான அனைத்து திரிகளிலும் திரிகள் திறக்கவும் கருத்தாடவும் முடியும்.

அத்துடன் உங்களின் சில பதிவுகளை பொருத்தமான பகுதிகளுக்கும் நகர்த்தி விடுகின்றேன்.

நன்றி.

மிக்க நன்றிகள்

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று நான் தம்ம்பியாருடன் கதைத்தனான் மண்கும்பானுக்கு அருகில் பென்னாம் பெரிய ஒரு தண்ணீர் தொட்டி மிக உயரமாகக் கட்டியிருக்கினமாம் யாழ்ப்பாணத்தில நிண்டு பாத்தாலே தெரியுமாம் நான் நினைக்கிறன் சாட்டியிலிருந்து நயினாதீவுக்குக் கொண்டுபோகினம் போல இருக்கு.  gravity water supply system என நினைக்கிறன்
    • ஆரம்பத்தில் இனப்பெருக்கத்துக்கான உறவுமுறை தெரிவு கட்டுப்பாடுகளற்று இருந்தது. பின்பு பொது மனித முன்னேற்றம் கருதி நாகரீக வளர்ச்சியின் படியில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு கடைப்பிடிக்கப்பட்ட வருகிறது.  உதாரணமாக நெருங்கிய உறவினரிடையே திருமணம் செய்ய முடியாது.  தனி மனித உரிமை தானே என்று சொல்லி யாரவது நெருங்கிய உறவினரிடையே திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினால் ஏற்றுக்கொள்ளலாமா.  உதாரணமாக தாய் மகனை மணம் புரிதல்.  இங்கே நான் சட்டத்தை பற்றி கதைக்கவில்லை. மாற்றங்களே மனித வரலாற்றில் மாறாதிருப்பவை எனினும் காட்டு வாழ்க்கைக்கு திரும்பிப் போகாமலிருப்பது நலம் எனவே தோன்றுகிறது. தனிப்பட்ட முறையில் இருக்கும் புறநடைகளை கொண்டாட வேண்டியதில்லை என்பது எனது அபிப்பிராயம் ...  
    • நானும் ஒரு அமைப்புத் தொடங்கப்போகிறேன் யாரவது நல்ல ஒரு பெயர் சொல்லுங்கோ, ஆரம்பத்தில் நான் வாழும் நாட்டின் பெயர் இருக்க வேண்டும் அல்லது ஐரோப்பிய இல்லாவிடில் உலக எனப்பெயர் வரவேண்டும். உதவிசெய்யுங்கோ. ஐந்து நட்சத்திர விடுதியில் சட்டை போட்ட கதிரையிலிருந்து எந்த வெக்கையாக இருந்தாலும் ஒரு தடிப்பமான துணியில தைத்த கோட்டுச்சூட்டுப் போட்டுக்கொண்டு அவங்கள் பேசுற மொழி விளங்குதோ இல்லையோ ஆனால் புரிந்ததுபோல நடிச்சு மற்றவையளது முகபாவனையை வைத்து எங்கட முகத்தைச் சிந்திப்பதுபோல வைப்பதா அல்லது கடவாயுக்குள்ள நமட்டிச்சிரிப்புச் சிரிப்பது போல் இருப்பதா அல்லது கெக்கட்டம் விட்டுச் சிரிப்பதா அதைவிட எல்லோரும் சீரியசா கதைக்கும்ப்போது கிடக்கிற பலகாரங்களை எடுத்து லவட்டுறதா என ஒரே காமடிதான் போங்கோ. ஊருக்குப்போனால் உடும்புக்கறியுடன் விருந்தும், "அம்பல் தியாவுடன்" சிங்களச்சாப்பாடும் சோக்கா இருக்கும்.
    • தீபாவளி நெருங்க நெருங்க இன்னும் புது புதுசா சந்தைக்கு வர கிடக்கு..😊
    • (நா.தனுஜா) இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிகள் குழுவை இன்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடிய சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினை நிறுத்தவேண்டாம் என்று  கேட்டுக்கொண்டுள்ளனர். மாறாக அவ்வரிச்சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்கான மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம்சார் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கான அழுத்தங்களை அரசாங்கத்திற்கு வழங்குமாறும் அவர்கள் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளனர். இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினைத் தொடர்ந்து வழங்குவது குறித்த மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக நாட்டை வந்தடைந்திருக்கும் ஐவரடங்கிய ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர், நேற்று முன்தினத்தில் இருந்து தமது மதிப்பீட்டுப்பணிகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்‌ஷ்மன் கிரியெல்ல மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது ஜனநாயகம், மனித உரிமைகள், சிறைக்கைதிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகாலத்தொடர்பு குறித்தும் நினைவுகூரப்பட்டது. இச்சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவிடம் வினவிபோது, ஏற்கனவே வாக்குறுதியளிக்கப்பட்டவாறு பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் உரியவாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியம் தொடர்பில் இதன்போது வலியுறுத்தப்பட்டது. அதன் அவசியம் தொடர்பில் ஏற்கனவே லக்‌ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டிப்பேசியுள்ளமை குறித்து நாம் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தோம். அத்தோடு இலங்கைக்கு வழங்கிவருகின்ற ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தவேண்டாம் என்று சஜித் பிரேமதாஸ ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார். இதன்மூலம் நாட்டுமக்கள் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பதுடன், தற்போதைய டொலர் பற்றாக்குறை நிலைவரத்தில் இவ்வரிச்சலுகை மூலமான ஏற்றுமதிகள் நாட்டிற்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்றும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார். இவ்வரிச்சலுகையை இரத்துச்செய்வதால் நாட்டுமக்களே பாதிக்கப்படுவர். ஆகவே ஜீ.எஸ்பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கு அவசியமான மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்தல் உள்ளிட்ட கடப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கான அழுத்தங்களை அரசாங்கத்திற்கு வழங்குமாறும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டோம் என்று குறிப்பிட்டார்.   ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தவேண்டாம் - ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிகளிடம் எதிர்க்கட்சி | Virakesari.lk
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.