Jump to content

வெடிபொருட்கள் மீட்பு; நால்வர் கைது! – அரசியல் சதியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலை புலிகளை மீள உருவாக்க முயன்றதாக 2014ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட கோபி எனும் பொன்னையா செல்வநாயகம் கஜீபனின் கிளிநொச்சி – இயக்கச்சி, பனிக்கையடி பகுதியில் உள்ள வீட்டில் இன்று (03) பல்வேறு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கோபியின் தாய் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் பரந்தன் பகுதியில் பஸ் ஒன்றில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டு, அது தொடர்பில் தம்பதி ஒன்றும் கைது செய்யப்பட்டது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து கோபியின் வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட வெடி பொருட்கள் மீட்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கோபியின் தாயும், மற்றுமொரு வயோதிப பெண்ணும் கைது செய்யப்பட்டனர். இதன்படி தயானுஜன் அம்பிகா (35-வயது), சிங்கராஜா தயானுஜன் (29-வயது), செல்வநாயகம் ராசமலர் (வயது-67), குலசிங்கம் புவனேஸ்வரி (வயது-62) ஆகியோரே கைதாகியுள்ளனர்.

கொரோனா தொற்று மற்றும் மஹர சிறைக் கலவரம், காரணமாக அரசின் மீது பல்வேறு அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

Link to comment
Share on other sites

வெடிபொருட்கள் அப்படியே புத்தம் புதிதாகத் தோற்றம் தருகின்றனவே....🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டிருந்த கிளைமோர் மீட்பு !

  • December 3, 20209:19 pm

குழந்தையுடன் கிளைமோர் குண்டொன்றை கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் வைத்தே, இவர்கள் நேற்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த சந்தேகநபர், பையொன்றில் மிகவும் சூட்சமமான முறையில் இந்த குண்டை மறைத்து, கொண்டு சென்றுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் வலையமைப்பின் ஊடாகவே குறித்த நபருக்கு கிளைமோர் குண்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸர்லாந்திலிருந்து இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டமிடப்படுவதாக கூறப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இலக்கு வைத்து, கிளைமோர் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், வெளிநாடுகளிலிருந்து தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புலனாய்வு பிரிவு தெரிவிக்கின்றது.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், வெளிநாடுகளிலிருந்து இலங்கை மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்ட 15வது சந்தர்ப்பம் இதுவென கூறப்படுகின்றது.

2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நெடுங்கேணி வனப் பகுதியில் இராணுவ தாக்குதலினால் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கோபியின் சகோதரர் ஒருவர் சுவிஸர்லாந்திலிருந்து, இலங்கை மீது தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக தகவல் கிடைத்துள்ளதென பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், இயக்கச்சி பகுதியிலுள்ள கோபியின் தாய் வாழும் வீட்டிற்கு முன்பாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக வெற்று காணியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், புதைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் சிலவற்றையும் பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

நேற்றைய தினம் கைப்பற்றப்பட்ட கிளைமோர் குண்டு, ஒன்று தசம் 800 கிலோகிராம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கைக்குண்டினை கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த ஒருவரினாலேயே, இந்த கிளைமோர் குண்டு தனக்கு கிடைத்துள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்காக வெளிநாடொன்றிலிருந்து இவருக்கு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எந்தவித சந்தேகமும் எழக்கூடாது என்பதற்காகவே, தனது 7 வயதான பிள்ளையையும் குறித்த பெண் தன்னுடன் அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்திற்கும், குண்டொன்றை கொண்டு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த குழுவின் இலக்கு தொடர்பில் இராணுவு புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவு ஆகியன விசாரணைகளை ஆரம்பித்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

https://www.meenagam.com/கிழக்கு-மாகாணத்திற்கு-அன/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கொரோனா மற்றும் மகர சிறைச்சாலைப் படுகொலைகளிலிருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி, பாவம் அந்த அப்பாவிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வாதவூரான் said:

இது கொரோனா மற்றும் மகர சிறைச்சாலைப் படுகொலைகளிலிருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி, பாவம் அந்த அப்பாவிகள்

அதோடு தமிழரை அச்சுறுத்துவதும் சிங்களவர்களுக்கு எதிராக ஆயுதப்படையின் வன்முறை எழும்போது அதை கட்டுப்படுத்தி அவர்களது கோபத்தை  தமிழர் பக்கம்  திசை திருப்பி தாம் தப்பும்  தந்திரம்  இது. எவ்வளவு காலம் எடுபடும் என்று பாப்போம்... இவன் எடுக்கும் தந்திரங்களை முறியடிக்கும் கலையை  தமிழர் எடுக்கும் வரை தொடரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2020 at 06:33, கிருபன் said:

சுவிஸர்லாந்திலிருந்து இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டமிடப்படுவதாக கூறப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இலக்கு வைத்து, கிளைமோர் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

****

அப்பப்ப ஒவ்வொரு நாட்டில் இருந்து தாக்குதல் நடத்துவதாக புரளி எழுப்புவான். ஆனால் பெயர் விபரம் வராது, அந்த நாட்டு அரசுடன் தொடர்பு கொண்டு குறித்த நபரை கைது செய்யலாமே? அது ஒண்டுமில்ல ஓணாண்டி, வெளிநாடுகளில் இருந்து புனரமைப்பு, அபிவிருத்தி என்று கழகங்களுக்கு உதவி செய்பவர்களை குறி வைத்து செய்யப்படும்  விசமத்தனமான பிரச்சாரம்.  தங்கள் ஊடாக செய்யாமல் இவர்கள் தங்கள் வழியில் செய்வதால் தாங்கள் கொள்ளை அடிக்கமுடியாது, தடை போட்டு நடைபெறும் அபிவிருத்திகளை தடுக்க முடியாது, தங்களது அபிவிருத்தி என்று படம் காட்டமுடியாது என்கிற வயிற்றெரிச்சல்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.