Jump to content

சீரற்ற காலநிலை: வவுனியாவில் பல குடும்பங்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டன


Recommended Posts

சீரற்ற காலநிலை: வவுனியாவில் பல குடும்பங்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டன

by : Yuganthini

http://athavannews.com/wp-content/uploads/2020/12/home-1.jpg

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவிலும் பல குடும்பங்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

கடந்த சிலநாட்களாக தொடர்ச்சியாக வீசிவரும் காற்றுடனான கடும் மழைக்காரணமாக வவுனியா வேலங்குளம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் 6வீடுகள் சேதமாகியுள்ளதோடு, 4குடும்பங்களைச் சேர்ந்த 15பேர் இடைத்தங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை), சின்னத்தம்பனை கிராமத்தில் தற்காலிக வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்த காரணத்தினால், வீடுகளுக்குள் கைக்குழந்தைகளுடன் வாழ்வது அபாயமானது எனக் கருதி வேவலங்குளம் கிராமசேவையாளரின் ஆலோசனைக்கு அமைய குறித்த கிராம மக்கள் தேவாலயம் ஒன்றில் தற்காலிக முகாம் அமைத்து, தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மக்களுக்கு  அவசர உதவியாக சமைத்த உணவுகள் மற்றும் குழந்தைகளுக்கான பால்மா போன்ற அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றது.

எனவே, இந்த விடயம் தொடர்பாக சமூக அமைப்புகள் இணைந்து நிவாரணப் பணிகளை முன்னெடுக்கவேண்டும் என பெரும்பாலானோர் எதிர்பார்க்கின்றனர்.

http://athavannews.com/wp-content/uploads/2020/12/home-2.jpg

http://athavannews.com/wp-content/uploads/2020/12/home-3.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்டத்தில் 54 ஆயிரம் பேர் பாதிப்பு – 2 ஆயிரம் வீடுகள் சேதம்

 
j5.800-696x348.png
 38 Views

புரெவி புயலின் காரணமாக ஏற்பட்ட மழைவீழ்ச்சி யாழ். குடாநாட்டில் தொடரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் மட்டும் 16 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 163 பேர் பாதிப்படைந்துள்ளமையோடு 2 ஆயிரத்து 443 வீடுகளும் சேதமடைந்துள்ளன என மாவட்டச் செயலகத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

மாவட்டச் செயலகத்தினால் அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு நேற்றைய தினம் இந்தப் புள்ளிவிவரம் அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதேநேரம் இவ்வாறு பாதித்த 54 ஆயிரத்து 163 பேரில் 1,072 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 687 பேர் 33 நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் சேதமடைந்த 2 ஆயிரத்து 443 வீடுகளில் 55 வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளன எனவும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேநேரம் கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிலிற்கு செல்ல முடியாத நிலமையே காணப்படுவதனால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகவே உள்ளது

 

https://www.ilakku.org/யாழ்-மாவட்டத்தில்-மட்டும/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாய்க்காலை மூடி அமைத்த வீதியால் வீடுகளுக்குள் வெள்ளம்!

IMG-20201205-WA0034-960x540.jpg?189db0&189db0

 

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கந்தர்மடம், இலுப்பையடிச் சந்திப்பகுதியில் உள்ள வெள்ள நீர் வடியும் வாய்காலை மூடி வீதி அமைக்கப்பட்டதனால், இன்று (05) அதிகாலை தொடர்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து, மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

வீடுகளின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும், எதுவித்தான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரவிப் புயலின் தாண்டவமும் மற்றும் அதனை தொடர்ந்து பெய்த கனமழையால் நல்லூர் ஆலயச் சூழலை வெள்ளம் சூழந்து விட்டது. சரியான வடிகாலமைப்பு இல்லாத காரணத்தினால் வெள்ளம் வழிந்தொடவும் வாய்ப்புக்கள் இருக்கவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் மழை புயலால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்புக்கள் அதிகம் பதிவாகியுள்ளது.

புரவி புயலின் பின்னர்  ஏற்பட்ட கடும்மழை,பலத்தகாற்று மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் கோப்பாய் பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட இருபாலைதெற்கு இருபாலைகிழக்கு கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக குறித்த பகுதிகளில் வீடுகள் இடிந்து வீழ்ந்ததோடு புதியசெம்மணிவீதி,ஆனந்தபுரம்,ஞானவைவரவர் கோயிலடி,வசந்தபுரம்,மடத்தடி போன்ற கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக செயலிழந்துள்ளது நேற்று(05) சனிக்கிழமை  காணப்பட்டது.

புதிய செம்மணிவீதி,கட்டப்பிராய் கலைமணிவீதி,சின்னக்கோவில்வீதி மற்றும் பலவீதிகள்,ஒழுங்கைகள் மழை வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்கள் பெரும் சௌகரியங்களை  ஏதிர்கொண்டிருந்தனர்.

நேற்று(05) சனிக்கிழமை காலை  குறித்த பிரதேசங்களின் பாதிப்புக்களை நேரில் சென்று பார்வையிட்ட வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் நடேஸ்சபிள்ளை கஜேந்திரகுமார் இருபாலை தெற்கு விவசாய சம்மேளனத்தின் தலைவர் தவராசா தர்சன் மற்றம் ஜப்னா மின்னல் சமூகசேவையாளர் செய்தியாளர் தங்கராசா ஷாமிலன் ஆகியோர் மக்களின் நலன்களை பேணும்வகையிலும், பாதிப்பு நிலைமைகளை  கிராமசேவையாளர் ஊடாகவும்,பிரதேசசபையின் ஊடாகவும் பிரதேச செயலர் ஊடகவும்  குறித்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாகவும் கலந்துரையாடி மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் மழை புயலால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்புக்கள் அதிகம் பதிவாகியுள்ளது.

எனது ஊரும் இருபாலை.
கிணறு கக்கூசு எல்லாம் வெள்ளம் மூடிநிற்கிறது என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் தங்கள் ஊர்களை பொறுப்பெடுப்பது நல்லது இந்தவேளையில் .ஏனேன்றால்  அரசு உதவிகள் தாமதமாகவே கிடைக்கும் தொடர் மழை  பெய்கிறது குளிரிலும் மழையிலும் கொரானாவிலும் அனாதையாக உள்ளார்கள் .

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

அங்கு வெள்ளம் இங்கு வெள்ளம் என்று படம் அனுப்பியவர்கள் இந்த பிள்ளையின் கண்களில் உள்ள பசி ஏக்கத்தை கவனிக்கவில்லையாக்கும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.