கருத்துக்கள உறவுகள் பிழம்பு 351 பதியப்பட்டது December 4, 2020 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது December 4, 2020 பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைக்க மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கயன் இராமநாதன் தலைமையிலானவர்கள் அடிக்கல்லை நாட்டி வைத்து அங்குரார்ப்பணம் செய்து வைத்த அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றிய நிலையில் பொலிஸ் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலானவர்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான ஊரெழு அம்மன் கோவில் வீதியை புனரமைக்கவுள்ளதாக அடிக்கல்லை நாட்டி வைத்தனர். இவ் வீதியை புனரமைக்க முகவராக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயரில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டு திட்டப்பெயர்ப்பலகை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந் நிலையில் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தவிசாளருக்கு தகவல் வழங்கியமையை அடுத்து வீதி அதிகார சபைக்கு விரைவாக குறித்த பெயர்ப்பலகையை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குக் கடிதம் (தொலைநகல் வாயிலாகவும்) அனுப்பியிருந்தார். ஒரு கடமை நாள் சென்ற பின்னரும் அவர்கள் அகற்றாத நிலையில் பிரதேச சபை ஒன்றிற்குச் சொந்தமான வீதியை மத்திய அரசாங்க நிறுவனமாக இருந்தால் என்ன எந்த நிறுவனமாக இருந்தால் என்ன எக் காரணம் கொண்டும் பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் புனரமைக்க முடியாது எனத் தெரிவித்து தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குறித்த பெயர்ப்பலகையை அகற்றுமாறு பணித்திருந்தார். இதன்படி பிரதேச சபையினால் குறித்த அறிவிப்புப் பலகை எடுத்துவரப்பட்டு சபையில் வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அம் முறைப்பாட்டை அடுத்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரிடம் பிரதேச சபைக்கு வருகைதந்து அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர். இதில் பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை சபையின் அனுமதியின்றி வீதி அதிகார சபை புனரமைப்பதற்கு முயற்சித்தமை சட்டவிரோதம் எனவும் அதனாலேயே சபை ஒன்றிற்கு பகிரப்பட்ட அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவே தாம் குறித்த திட்ட பெயர்ப்பலகையை அகற்றியதாகவும் உரிய முறைப்படியான அனுமதி பெறப்பட்டால் அல்லது உரியவாறு அணுகினால் குறித்த பெயர்ப்பலகையை கையளிக்கத் தயார் எனவும் வலி.கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். மேலும், பிரதேச சபை என்பது அதிகார பகிர்விற்கான ஓர் இலகு என்ற அடிப்படையில் மத்திய அரசாங்கத்தின் சட்டத்துக்கு விரோதமானதும் தேவையற்ற தலையீட்டையும் தாமும் தமது சபையும் ஏற்க முடியாது. அபவிருத்திக்கு நாம் தடை அல்ல. ஆனால் அதனை சட்டதிட்டங்களுக்கு ஏற்ப பொறுப்புச்சொல்லும் பாங்குடன் மத்திய அரசாங்கத்தின் நிறுவனங்கள் செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அங்கயனின் அபிவிருத்தித்திட்ட பெயர்ப்பலகையை அகற்றிய தவிசாளர் நிரோஷிடம் பொலிஸ் வாக்குமூலம் – Thinakkural Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Justin 1,447 Posted December 4, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 4, 2020 (edited) அபிவிருத்தியை யார் செய்தால் என்னய்யா? வீதியைப் புனரமைக்க பிரதேச சபை இவ்வளவு காலமும் ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டு இப்ப ***** ****** அடம் பிடிக்குது போல! Edited December 5, 2020 by நியானி நீக்கப்பட்டுள்ளது Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் satan 550 Posted December 5, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 5, 2020 ஐயோ என்ர கடவுளே! வாள்வெட்டு குழுவிடம் இருந்து நம்ம தவிசாளர் நிரோஷய் நீர்தான் காப்பாற்ற வேணும் சொல்லிப்போட்டன். இன்னும் ஓரிரு மாதம் கடந்தால் வாள் துப்பாக்கியாக வலம்வரும். Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Robinson cruso 96 Posted December 5, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 5, 2020 23 hours ago, Justin said: அபிவிருத்தியை யார் செய்தால் என்னய்யா? வீதியைப் புனரமைக்க பிரதேச சபை இவ்வளவு காலமும் ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டு இப்ப ***** ****** அடம் பிடிக்குது போல! ஜஸ்டின், அபிவிருத்தி நல்லதுதான். ஆனாலும் அந்த படிமுறையை பின்பற்ற வேண்டும். இல்லாவிடடாள் நடைமுறை சிக்கல் வரும். பின்னாட்களில் யார் அதை பராமரிப்பது, அதட்குரிய ஆளணி , பணம், இயந்திரங்கள் இருக்கிறதா போன்ற பிரச்சினைகள் வரலாம். சில நடைமுறை சிக்கல்கள் வரும். இது அரசியல் நோக்கத்துடன் செய்யும் திடடமாக இருந்தாலும் உள்ளூர் அமைப்புக்களுடன் இணைந்து செய்வதுதான் நல்லது. Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் satan 550 Posted December 5, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 5, 2020 அதொன்றும் இல்லை..... மாவீரர் வாரம் வந்துது பாருங்கோ! உந்த அரசாங்கத்தை காக்கிற நம்ம வசந்தங்கள், விடிவெள்ளியளை எல்லாம் பத்திரிகைக்காரனுகள் "ஏன் மாவீரர் தினத்தை அனுசரிக்க அனுமதி கோரவில்லை, நீங்களும் மக்களின் பிரதிநிதி, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறீர்கள்?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுக்க துவங்கிட்டானுகள். வேற வழியில்லை, அவையளிட்டை போய் கேக்க முடியுமே? எங்கட மக்களுக்கு அபிவிருத்திதான் முக்கியம், நாங்கள் அதை செய்கிறோம் என்று காட்ட ஆளாளாளுக்கு சந்திப்புகள், அறிக்கைகள், அபிவிருத்திப் படங்கள் காட்ட வெளிக்கிட்டு செய்த வேலை. உந்த அனுமதிப்பத்திரம் என்கிற இழவுகள் எல்லாம் தெரியாமற் போச்சு. இது தெரியாமல், மதிக்காமல் ஒரு அமைச்சர். பதவி....? எல்லாம் படத்துக்கு, விளம்பரத்துக்கு, கவர்ச்சிக்கு. என்ன நிரோஷன் பிடுங்காமல் விட்டிருந்தாலும் அடுத்த தேர்தல் வரை பலகை அப்படியே இருந்திருக்குமா? காற்றோ, மழையோ அடிச்சுக்கொண்டு போயிருக்கும். ஆனாலும் அங்கயனின் அறிவு, தெளிவு வெளிப்பட்டிருக்காது. Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் satan 550 Posted December 5, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 5, 2020 உப்பிடித்தான் எங்கட வடக்கின் வசந்தம், சிலருக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு தகுதியற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு என்று அபிவிருத்தி காட்டினார். அந்தந்த திணைக்களங்களில் பல்வேறு குளறுபடிகள். தாங்கள் கொடுத்ததை எடுக்க.... எல்லாம் பணம், ஏமாற்று, தகுதியின்மை கேட்டால்... அதை மறைக்க சண்டித்தனம், இழுத்தடிப்பு. என்னத்தைச் சொல்ல...... நடக்கிற கூத்துக்களை. Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Justin 1,447 Posted December 5, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 5, 2020 14 hours ago, Robinson cruso said: ஜஸ்டின், அபிவிருத்தி நல்லதுதான். ஆனாலும் அந்த படிமுறையை பின்பற்ற வேண்டும். இல்லாவிடடாள் நடைமுறை சிக்கல் வரும். பின்னாட்களில் யார் அதை பராமரிப்பது, அதட்குரிய ஆளணி , பணம், இயந்திரங்கள் இருக்கிறதா போன்ற பிரச்சினைகள் வரலாம். சில நடைமுறை சிக்கல்கள் வரும். இது அரசியல் நோக்கத்துடன் செய்யும் திடடமாக இருந்தாலும் உள்ளூர் அமைப்புக்களுடன் இணைந்து செய்வதுதான் நல்லது. றொபின்சன், உங்கள் கருத்தில் பகுதியளவு உண்மை இருக்கிறது. ஆனால், ஒரு அபிவிருத்தித் திட்டத்தை ஒரு அமைப்பு ஆரம்பிக்க, பராமரிப்பை இன்னொரு அமைப்பு எடுத்துக் கொள்ளக் கூடிய hybrid வசதி இருந்தால் இலங்கை போன்ற நாடுகள் முன்னேறும். இந்த "கட்டுபவர் தான் பராமரிப்பையும் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்ற வாதத்தை அரச மட்டத்தில் மட்டுமல்ல, ஏதாவது நன்கொடையாக திட்டங்களை முன்மொழிந்து ஆரம்பிக்க முனையும் போதும் பல உள்ளூர் சேவை அமைப்புகளும் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதில் சில நியாயங்கள் இருந்தாலும், மேலோங்கி நிற்பது சோம்பேறித்தனம் என்பது என் கருத்து. 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Robinson cruso 96 Posted December 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 6, 2020 12 hours ago, Justin said: றொபின்சன், உங்கள் கருத்தில் பகுதியளவு உண்மை இருக்கிறது. ஆனால், ஒரு அபிவிருத்தித் திட்டத்தை ஒரு அமைப்பு ஆரம்பிக்க, பராமரிப்பை இன்னொரு அமைப்பு எடுத்துக் கொள்ளக் கூடிய hybrid வசதி இருந்தால் இலங்கை போன்ற நாடுகள் முன்னேறும். இந்த "கட்டுபவர் தான் பராமரிப்பையும் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்ற வாதத்தை அரச மட்டத்தில் மட்டுமல்ல, ஏதாவது நன்கொடையாக திட்டங்களை முன்மொழிந்து ஆரம்பிக்க முனையும் போதும் பல உள்ளூர் சேவை அமைப்புகளும் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதில் சில நியாயங்கள் இருந்தாலும், மேலோங்கி நிற்பது சோம்பேறித்தனம் என்பது என் கருத்து. இதை நான் எழுதினேன் எண்டால், அரச சார்பற்ற நிறுவனங்களால் கடடபடட கைட்டிடங்கள் நிறைய பராமரிக்கப்படாமல் பாழடைந்துபோய் கிடக்கின்றது. சில கட்டிடங்கள் சில உள்ளோராட்சி அமைப்புகளுடன் கலந்துரையாடி கட்டப்பட்டும் பராமரிப்பில்லாமல் இருக்கின்றது. இது போன்ற பிரச்சினைகள் வரக்கூடாது, வந்தாலும் இந்த உள்ளோராட்சி அமைப்புக்கள் சாட்டு போக்கு சொல்ல முடியாது. மழை காலங்களில் நீர் தேங்கி நிற்கலாம், அப்போது யார் தீர்த்து வைப்பது. ஆகவே உள்ளோராட்சி அமைப்புக்களுடன் பேசி செய்யும்போது அது முழுமை பெரும். இல்லாவிடடாள் அது பிரச்சினையாக மாறும். இங்கும் அவர் அந்த ரோட்டு போடுவதட்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே நிறைய பணம் செலவழித்து செய்யும்போது அதை முறையாக செய்ய வேண்டும். அரசியல் நோக்கத்துக்காக மட்டும் செய்தால் அங்கு அது பிரச்சினையாக மாறலாம். மற்றப்படி அபிவிருத்தி திட்ட்ங்களை நான் ஆதரிக்கிறேன். Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் உடையார் 2,707 Posted December 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 6, 2020 மத்திய அரசின் பெயர்ப்பலகையினை அகற்றியமை; தவிசாளரிடம் இரண்டாவது நாளும் வாக்குமூலம் 5 Views வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் அனுமதியின்றி, சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு திரைநீக்கம் செய்துவைக்கப்பட்ட திட்ட அறிவிப்புப் பெயர்ப்பலகையினை அகற்றியமை தொடர்பில் சனிக்கிழமை இரண்டாவது தடவையும் தவிசாளர் தியாகராஜா நிரோஷிடம் அச்சுவேலி பொலிசாரினால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், குறித்த அறிவித்தல் பலகையினை மேலதிக விசாரணைக்காக எழுதுமாறு கோரி பொலிஸார் பெற்றுச் சென்றுள்ளனர். இது பற்றி அவர் தெரிவிக்கையில், காலை நீர்வேலியில் வெள்ள தணிப்புச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யும் களப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தவிசாளரைச் சந்தித்து மேலதிக நடவடிக்கைகளுக்காக பிரதேச சபையில் பாதுகாப்பில் உள்ள அறிவித்தல் பலகையினைத் தருமாறு என்னைக் கேட்டுக் கொண்டார். நான் கடிதம் ஒன்றைக் கோரி அவணப்படுத்திய பின் மேலதிக நடவடிக்கைக்காக என்ற காரணத்தினால் அப் பொயர்ப்பலகையினை வழங்கினேன். அவ் அறிவித்தல் பலகையினை வழங்கியபோது மீளவும் குறித்த பொயர்ப்பலகை அகற்றப்பட்டமைக்கான காரணம் உள்ளடங்கலாக வாக்குமூலம் ஒன்றை மேலதிகமாக பொலிஸார் பெற்றனர். நான் இன்றைய வாக்குமூலத்தில், பிரதேச சபைக்குச் சொந்தமான வீதி ஒன்றை எமது சம்மதமோ அனுமதியோ பெறாது புனரமைப்பதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேவேளை அவ் அறிவித்தல் பெயர்ப்பலகையிலும் எமது பதிவிற்கு உட்பட்ட வீதியை புனரமைப்பதற்காக ஊரெழு அம்மன் கோவில் வீதியை புனரமைத்தல் என்ற தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் பிரதேச சபை ஒன்றின் பகிரப்பட்ட அதிகாரத்தினை நிலைநாட்டுவதற்காக அகற்றினேன் என்பதை சொல்லியிருக்கின்றேன் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தொரிவித்தார். https://www.ilakku.org/மத்திய-அரசின்-பெயர்ப்பலக/ Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பிழம்பு 351 Posted December 7, 2020 Author கருத்துக்கள உறவுகள் Share Posted December 7, 2020 அங்கஜனின் படத்திற்காக வலி கிழக்கு தவிசாளரை கைது செய்ய முயற்சி? வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷை கைது செய்வதற்கான முயற்சியில் கோப்பாய் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகத் தவிசாளர் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. கோப்பாய் பொலிஸார் தன்னைத் தொடர்பு கொண்டதாகவும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளதாகவும் தவிசாளர் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொது சொத்துக்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் முயற்சி இடம்பெறுவதாகத் தெரிய வருகிறது. இந்தத் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் 14 நாட்கள் பிணை இல்லாமல் அவரைத் தடுத்துவைக்க முடியும் என்பதால் இந்த முயற்சி இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் வீட்டிலோ, அலுவலகத்திலோ இல்லாததால் தவிசாளர் இதுவரை கைது செய்யப்படவில்லை. பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைக்க மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலானவர்களால் அண்மையில் அடிக்கல் நாட்டி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதனைக் குறிக்கும் வகையில் நாட்டப்பட்ட அறிவிப்புப் பலகையை அண்மையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றினார். அது குறித்து அவரிடம் இரண்டு நாட்கள் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர். பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைக்க பிரதேச சபையின் அனுமதியின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டமை சட்டவிரோதம் என நிரோஷ் தெரிவித்துள்ளார். சபை ஒன்றிற்கு பகிரப்பட்ட அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவே தாம் குறித்த திட்ட பெயர்ப்பலகையினை அகற்றியதாகவும் உரிய முறைப்படியான அனுமதி பெறப்பட்டால் அல்லது உரியவாறு அணுகினால் குறித்த பெயர்ப்பலகையை கையளிக்கத்தயார் எனவும் வலி கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். அங்கஜனின் படத்திற்காக வலி கிழக்கு தவிசாளரை கைது செய்ய முயற்சி? | NewUthayan Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பிழம்பு 351 Posted December 7, 2020 Author கருத்துக்கள உறவுகள் Share Posted December 7, 2020 (edited) வலி கிழக்கு தவிசாளரை கைது செய்ய அவரது இல்லத்தை சல்லடை போட்டு தேடிய பொலிஸார் – நிரோஷ் தலைமறைவு? day ,07 Dec 2020,06:00:49pm Today's E-Paper வலி கிழக்கு தவிசாளரை கைது செய்ய அவரது இல்லத்தை சல்லடை போட்டு தேடிய பொலிஸார் – நிரோஷ் தலைமறைவு? Bharati December 7, 2020வலி கிழக்கு தவிசாளரை கைது செய்ய அவரது இல்லத்தை சல்லடை போட்டு தேடிய பொலிஸார் – நிரோஷ் தலைமறைவு?2020-12-07T22:01:18+05:30 FacebookTwitterMore தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷை கைதுசெய்வதற்குப் பொலிஸார் பிரதேச சபை அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருந்தும் தவிசாளர் சபைக்கு வருகை தராததால் அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். அதேவேளையில் நிரோஷின் இல்லம், அவரது மனைவியின் தாயாருடைய இல்லாம் என்பன பொலிஸாரால் சல்லடை போட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த இரண்டு இடங்களிலும் நிரோஷ் இருக்கவில்லை. நிரோஷ் எங்கே எனக் கேட்டு குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் தெரியாது எனப் பதிலளித்தனர். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியைப் புனரமைக்க யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலானவர்கள் அடிக்கல்லை நாட்டி வைத்து அங்குரார்ப்பணம் செய்து வைத்த அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றிய நிலையில் பொலிஸாரால் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலானவர்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான ஊரெழு அம்மன் கோவில் வீதியை புனரமைக்கவுள்ளதாக அடிக்கல்லை நாட்டி வைத்தனர். இவ்வீதியை புனரமைக்க முகவராக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயரில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டு திட்டப் பெயர்ப்பலகை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்தநிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தவிசாளருக்குத் தகவல் வழங்கியமையை அடுத்து, விரைவாக குறித்த பெயர்ப்பலகையை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அவர் கடிதம் (தொலைநகல் வாயிலாகவும்) அனுப்பியிருந்தார். ஒரு கடமை நாள் சென்ற பின்னரும் அவர்கள் அகற்றாத நிலையில் பிரதேச சபை ஒன்றுக்குச் சொந்தமான வீதியை மத்திய அரச நிறுவனமாக இருந்தால் என்ன எந்த நிறுவனமாக இருந்தால் என்ன எக்காரணம் கொண்டும் பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் புனரமைக்க முடியாது எனத் தெரிவித்து தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குறித்த பெயர்ப் பலகையை அகற்றுமாறு பணித்திருந்தார். இதன்படி பிரதேச சபையால் குறித்த அறிவிப்புப் பலகை எடுத்துவரப்பட்டு சபையில் வைக்கப்பட்டது. இந்தநிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அந்த முறைப்பாட்டை அடுத்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரிடம் பிரதேச சபைக்கு வருகை தந்து அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர். இதில் பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியைப் புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை சபையின் அனுமதியின்றி வீதி அதிகார சபை புனரமைப்பதற்கு முயற்சித்தமை சட்டவிரோதம் எனவும், அதனாலேயே சபை ஒன்றுக்கு பகிரப்பட்ட அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவே தாம் குறித்த திட்டப்பெயர்ப்பலகையை அகற்றியதாகவும், உரிய முறைப்படியான அனுமதி பெறப்பட்டால் அல்லது உரியவாறு அணுகினால் குறித்த பெயர்ப்பலகையை கையளிக்கத் தயார் எனவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். மேலும், பிரதேச சபை என்பது அதிகாரப் பகிர்வுக்கான ஓர் அலகு என்ற அடிப்படையில் மத்திய அரசின் சட்டத்துக்கு விரோதமானதும் தேவையற்ற தலையீட்டையும் தாமும் தமது சபையும் ஏற்க முடியாது எனவும், அபிவிருத்திக்கு நாம் தடை அல்லர், ஆனால், அதனைச் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப பொறுப்புச் சொல்லும் பாங்குடன் மத்திய அரசின் நின் நிறுவனங்கள் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். தவிசாளரிடம் இரண்டு தடவைகள் அச்சுவேலி பொலிஸார் வாக்குமூலம் பெற்றிருந்த நிலையில் இன்று அவரைக் கைது செய்வதற்காகப் பிரதேச சபை அலுவலகத்தில் பல மணி நேரமாகக் காத்திருந்தனர். குறித்த செய்தியை அறிந்த வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எஸ்.சுகிர்தன், பா.கஜதீபன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் பிரதேச சபைக்கு வருகை தந்திருந்தனர். எனினும், தவிசாளர் சபைக்கு வருகை தராததால் நீண்ட நேரம் காத்திருந்த பொலிஸார் திரும்பிச் சென்றனர். அதன்பின்னர் நிரோஷின் இல்லம், அவரது மனைவியின் தாயார் வசிக்கும் இல்லம் என்பன பொலிஸாரால் சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தப்பட்டது. வீட்டிலிருந்தவர்களும் விசாரிக்கப்பட்டனர். வலி கிழக்கு தவிசாளரை கைது செய்ய அவரது இல்லத்தை சல்லடை போட்டு தேடிய பொலிஸார் – நிரோஷ் தலைமறைவு? – Thinakkural Edited December 7, 2020 by பிழம்பு Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் satan 550 Posted December 7, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 7, 2020 4 hours ago, பிழம்பு said: பிரதேச சபை என்பது அதிகாரப் பகிர்வுக்கான ஓர் அலகு என்ற அடிப்படையில் மத்திய அரசின் சட்டத்துக்கு விரோதமானதும் தேவையற்ற தலையீட்டையும் தாமும் தமது சபையும் ஏற்க முடியாது எனவும், அபிவிருத்திக்கு நாம் தடை அல்லர், ஆனால், அதனைச் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப பொறுப்புச் சொல்லும் பாங்குடன் மத்திய அரசின் நின் நிறுவனங்கள் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இங்கே எங்கே நீதி ஒழுங்கு கடைப்பிடிக்கப்படுகிறது? மாவீரர் நாளை திசை திருப்புவதற்காக அங்கஜன் போட்ட நாடகத்திற்காக தன் சட்டத்தையே மாற்றியமைக்கும் காவற்துறையும், அரசாங்கமும் அதற்கு அங்கீகாரம் வழங்கத் துடிக்கிறது. நிரோஷன் கைதானால் நீதிமன்றம் எப்படி வளையும்? எதை சரியென்று நிலைநாட்டும்? யார் மேல் தவறு என்று தீர்ப்பிடும்? தனது இரட்டை வேடத்தை எப்படி காட்டும்? அரசியல்வாதிகளின் மக்களைக் குழப்பும் செயல்களையும், காவற்துறையின் எடுபிடி வேலைகளையும் துகிலுரிக்க நமது சட்டதரணிகள் முன்வரவேண்டும். ஒரு பொதுமகன் இதே தவறைச் செய்திருந்தால் சட்டம் எப்படி அணுகும் என்பதையும் தெளிவாகக் நீதிமன்றம் கூறவேண்டும்? எடுத்ததுக்கெல்லாம் தடை போடுவதையும், தடுத்து விசாரிக்க அனுமதியளிப்பதையும் நீதிமன்றம் தவிர்த்து எல்லோருக்கும் நீதி சமம் என்பதை நிரூபிக்க வேண்டும். அரச ஊழியரை தம் பணியைச் செய்ய விடாமல் காவற்துறை இடையூறு விளைவிப்பதையும், பயமுறுத்துவதையும் தடுக்க நீதிமன்றம் ஆவன செய்ய வேண்டும். இல்லையேல் தொடரும் தவறுகளுக்கு நீதிமன்றமே பொறுப்பேற்க வேண்டும். மாவீரர் தினத்திற்கு தடை விதித்த நீதிமன்றத்தையே அரசு கைகாட்டியது. Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் உடையார் 2,707 Posted December 11, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 11, 2020 அதிமேதவிகள் சிங்களத்துக்கு முட்டுகட்டை கொடுக்கமட்டும்தான் தெரியும், அதன் அரசியல் இன்னும் விளங்கவில்லை அல்லது விளங்காத மாதிரி நடிப்பு. என்னவொரு உலகமகா நடிப்புடா Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் தனிக்காட்டு ராஜா 2,065 Posted December 12, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted December 12, 2020 On 5/12/2020 at 03:38, Justin said: அபிவிருத்தியை யார் செய்தால் என்னய்யா? வீதியைப் புனரமைக்க பிரதேச சபை இவ்வளவு காலமும் ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டு இப்ப ***** ****** அடம் பிடிக்குது போல! மக்களே ஆர்ப்பாட்டம் பண்ணுது யாரும் செய்ய மாட்டினுமாம் ஆனால் செய்ய வந்த ஆட் களையும் விட மாட்டினுமாம் தவிசாருக்கு எதிராக வலி .. கிழக்கு என டீவியில காட்டுகிறார்கள். எல்லாம் கட்சி பிரச்சினைகள்தான் போல Quote Link to post Share on other sites
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.