Jump to content

காணிக்கை என்ன - கண்ணீரும் கார்த்திகைப் பூக்களுமா -சபரி


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

”காணிக்கை என்ன?கண்ணீரும் கார்த்திகைப் பூக்களுமா”-சபரி

 
maveerar-naal.jpg
 15 Views

“உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் – அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம். தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியரசென்றிடுவோம் – எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்”

ஈழத்தில் ஒவ்வொரு மாவீரர் நாளன்றும் துயிலும் இல்லங்கள் தோறும் கல்லறைகளுக்கும், நடுகற்களுக்கும் முன்னால் கண்ணீர்மல்க நின்று இவ்வாறு சத்தியம் செய்தவர்கள் நாங்கள்.

ஆம்! தாயக விடுதலை என்ற கனவைத் தம் நெஞ்சங்களில் நினைத்து, சாவைத் தம் தோள்களின் மீதே சுமந்து நடந்த எங்கள் தேசத்தின் புதல்வர்களுக்கு – மாவீரர்களுக்கு – உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் செய்து கொடுத்த சத்தியம் இது.

யாரந்த மாவீரர்கள்? ஏனிந்த சத்தியம்?

சோற்றைக் குழைத்து உருண்டையாக்கிக் கையில் வைத்து, “சாப்பிடு ராசா… பசியோடை வந்திருப்பாய்…” என்று பாசத்தோடு சொன்ன அம்மாவின் முகத்தைப் பார்க்காமல் குனிந்தபடியே இருந்த அவனுடைய கண்களை நீர் திரையிட்டது.

“அம்மா… உன்ரை கையாலை நான் சாப்பிடுற கடைசிச் சாப்பாடு இது”

தனது சாவுக்கு நாள் குறித்து விட்டவன், இன்னும் சில நாட்களில் காற்றோடு காற்றாய்க் கலந்துவிட இருந்தவன், போகுமுன் ஒரு தரம் பெற்றவளின் முகம் காணத் துடித்தவன்,

இதோ – மெலிந்த உடலும் குழிந்த கண்களுமாய் என்றாவது ஒருநாள் தன் ஒரேயொரு மகன் தன்னிடம் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையோடு தன் தள்ளாத முதுமைப் பருவத்தைத் தனியே கழித்துக் கொண்டிருக்கும் அந்த ஏழைத் தாய்க்கு முன்னால் வாரத்தைகளேதும் அற்றவனாய் பரிதவிக்கும் உள்ளத்துடன் உட்கார்ந்திருக்கிறான். விடுதலையை நேசித்து, அதனால் மரணத்தை யாசித்தவன் அவன்.

விடை பெறும் நேரம்.. எதுவுமறியாத அன்னை, அன்போடு அவன் தோள் தடவி, “கவனமாய் போட்டு வா ராசா…” சொன்ன போது,

“நிச்சயம்  வருவனம்மா… விடுதலை பெற்ற எமது மண்ணில் வேற்றுருவில்.. வேற்றுயிரில்..” அவனது உள்மனம் சொல்லிக் கொண்டது.

இவன் எங்கள் தேசத்தின் ஒரு மாவீரன். கரும்புலி வீரன்.

களமாட இருந்த வீரர்களின் அணியில் அவளும் ஒருத்தி

இலக்குத் தீர்மானிக்கப்பட்டு விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் களம் நோக்கிய நகர்வு தொடங்க இருந்தது. களமாட இருந்த வீரர்களின் அணியில் அவளும் ஒருத்தி. தாக்குதலின் முடிவு வெற்றியா, தோல்வியா என்பதற்கப்பால், வீரர்களின் களப்பலி தவிர்க்க முடியாத ஒன்று என்பது யதார்த்தம். அவள் வீட்டுக்குப் போய்க் குடும்பத்தினரைப் பார்த்து நீண்ட காலமாகி விட்டதால், புறப்படுமுன் ஒருதரம் வீட்டிற்குப் போய்வர நினைக்கிறாள்.

பேத்தியின் வரவால் மகிழ்ந்த பாட்டியின் பூரிப்பு,.. அக்காவைக் கண்ட தம்பி தங்கையரின் ஆனந்த ஆரவாரம்… பிள்ளைக்கு முருங்கை இலை பிடுங்கி வந்து வறை சமைத்த அம்மாவின் பாசம்… மகளைக் கண்ட மகிழ்ச்சியோடு கூடவே, வராதவள் திடீரென வந்திருப்பதில் தோன்றிய சந்தேகம் இழையோடிய அப்பாவின் பார்வை…

அவளுடைய வரவினால் ஒரு சில மணிப்பொழுதுக்குள் வீடு கலகலப்பாகியது. வந்தவள் ஒருநாள் கூடத் தங்காமல் திரும்புகிறாளே என்ற அனைவரினதும் ஆதங்கத்துடன் கூடிய விடை பெறுதலின் போது – விழியோரங்களில் திரண்டு வந்த நீர்த்துளிகளை எவரும் அறியாமல் துடைத்தெறிந்து, அவள் சிரித்தபடி கையசைத்து புறப்படுகிறாள்.

“மீண்டும் வருவேனோ மாட்டேனோ” என்று அவளது உள்மனம் நினைத்துக் கொண்டது.

சில நாட்கள் கழிய – அந்தத் தாக்குதல் வெற்றி பெறுகிறது. “தமிழீழம்  என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தபடி பிறந்த நிலத்தின் வித்தாக வீழ்ந்த ஐந்து வீரர்களில் அவளும் ஒருத்தி.

இவள் எங்கள் தேசத்தின் ஒரு மாவீராங்கனை

இதுபோல ஒன்றல்ல.. இரண்டல்ல, எங்கள் தேசத்தின் பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள், விடுதலை வேண்டித் தம் உயிர்ப்பூவைக் கிள்ளி எறிந்திருக்கிறார்கள். ஒவ்வொரு மாவீரன்/ மாவீராங்கனையின் வாழ்க்கைப் பின்னணியிலும் ஆயிரமாயிரம் நெகிழ்ச்சியும் – உயிர் உருக்கும் – கதைகள் பொதிந்து கிடக்கின்றன.

வாழ்க்கை தரக்கூடிய எல்லா இன்பங்களையும் துச்சமென நினைத்துத் தூக்கியெறிந்து, தேச விடுதலை ஒன்றே ஒரு இனத்தின் அதி முக்கிய தேவை என்பதையும், அதுவே உயிரினும் மேலானது என்ற உண்மையையும் மனங்களில் இருத்தி – அதன் வழி நடந்து தம் உயிர்களை ஆகுதியாக்கியவர்கள் எங்கள் மாவீரர்கள்.

களமாடுதலில் என்றைக்காவது ஒருநாள் சாவு நிச்சயம் என்பது தெரிந்தும், தேசம் வாழ உயிர்விலை கொடுத்த உத்தமர்கள்..

இன்னும் மேலே போய் தங்கள் சாவுக்குத் தாங்களே நாள் குறித்து, உடலில் வெடி மருந்தேற்றி எதிரி நிலைகளில் வெடித்துச் சிதறிய கரும்புலிக் கண்மணிகள்…

விடுதலை பெறும்வரை முகவரி மறைக்கும் பெருவிதி சமைத்துப் பெயரின்றிப் போனவர்கள். இவர்கள் – தமிழனுடைய தனி அடையாளமாய்த் தமிழீழம் மலரும் என்ற பெரு நம்பிக்கையோடு உயிர் விலை கொடுத்துக் கண்மூடிக் கிடக்கிறார்கள்.

அந்தப் புனிதர்கள் பயணித்த தேச விடுதலை என்ற உன்னத வீதியில் எங்கள் அடிகளும் தொடர்கின்றனவா? உரிமை என்ற உயரிய தத்துவத்தை எங்கள் கைகள் இறுகப் பற்றியிருக்கின்றனவா? இது போன்ற ஐயப்பாடுகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

எங்களுடைய போராயுதங்கள் உறைநிலையடைந்து பதினொரு ஆண்டுகள் கடந்து விட்டன. எங்கள் உணர்வுகளும்கூட உறைநிலையடைந்து விட்டனவா? விடுதலை மீது மாவீரர்கள் கொண்டிருந்த நம்பிக்கை செயல் வடிவம் பெறுவதற்கான ஏதாவதொரு நடைமுறை சமிக்ஞை இதுவரை கிடைத்ததா எனில், அதுவும் கூட இல்லையென்றே சொல்ல வேண்டும். அவர்களிடம் நாம் செய்த சத்தியம் என்னவாயிற்று?

தமிழினம் சிந்திய குருதி முள்ளிவாய்க்காலில் உறைந்துபோய்க் கிடக்கிறது. இன்றும் தமிழின அழிப்பை நோக்கிய எதரியின் நகர்வு மேலும் பல மடங்காக முனைப்புப் பெற்றிருக்கிறது. இதற்குச் சில தமிழர்களும் துணை போகிறார்கள் என்பது எமக்கான வரலாற்றுத் துன்பம்.

நெஞ்சம் வலிக்கிறது. உயிர் துடிக்கிறது.

புலம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரை வருடா வருடம் மாவீரர் நாளன்று ஏதோ ஒரு இடத்தில் (அல்லது வேறு வேறு இடங்களில்…? ! ) கூடி, கண்ணீர்த் துளிகளுடன் கார்த்திகைப் பூக்களால் அஞ்சலித்து, நினைவுச் சுடரேற்றி.. இவற்றுடன் எமது கடமை முடிந்ததென்ற நினைப்போடு வாளாதிருக்கின்றோம்.

அன்பானவர்களே! இனிய தமிழ் மக்களே!

பிரிந்தும், பிளவுபட்டும் நின்று இதுவரை காலமும் நாம் சாதித்தது என்ன? தொடர்ந்தும் இதேபோல இருந்தால், இனியும் எதைச் சாதிக்கப் போகிறோம்? வேற்றுமை களைந்து ஒற்றுமை என்ற உயரிய ஆயுதத்தைக் கையிலெடுத்து, ‘தமிழன் சாதித்தான்’ என்ற வரலாற்றுப் பெருமையை நமதாக்கிக் கொள்வோமா?

உணர்வுக் கரங்களைத் தாருங்கள். கை கோர்த்து ஒன்றிணைவோம். மாவீரச் செல்வங்களின் தாயகக் கனவை நிறைவேற்றி இந்த வையத்தில் நிலை பெறுவோம்!

 

https://www.ilakku.org/காணிக்கை-என்னகண்ணீரும்/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • விடுதலை அரசியலின் பாதை  - இதயச்சந்திரன் இராஜபக்சக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் இருக்கிறது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோத்தபாயாவிடம் இருக்கிறது. ஆனால் இப்பாரிய இயந்திரத்தின் அடக்குமுறையை எதிர்கொள்ளும் தமிழ்த்தேசிய அரசியலிடம் என்ன இருக்கிறது?. இதுவே சமகால அரசியலில் பேசுபொருளாகும் விடயம். கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை நிறைவேற்ற, தொல்லியல் திணைக்களம் முதல் காணித்திணைக்களம் வரையான சகல அரச நிர்வாக இயந்திரங்களையும் சிங்கள தேசம் வைத்திருக்கிறது. எமது தமிழ்த்தேசத்திடம் தேர்தல் கட்சிகளைத்தவிர வேறு என்ன இருக்கிறது?. வெகுசன மக்கள் திரள் அரசியலிற்குரிய கட்டமைப்புகள் இருக்கின்றனவா?. ஒடுக்குமுறையாளர் எம்மீது திணிக்கும் அழுத்தங்களை எதிர்கொள்ள நாடாளுமன்ற மேடை மட்டும் போதுமா?என்கிற கேள்வியும் எழுகிறது. தூபி தகர்ப்பிற்கு எதிரான தன்னெழுச்சிப் போராட்டம் ஏன் மக்கள் போராட்டமாக விரிவடையவில்லை?. தாயகத்தில் ஆங்காங்கே நிகழும் பல்வேறுவகைப்பட்ட போராட்டங்கள் ஏன் ஒருங்கிணைக்கப்படவில்லை?. தமிழ்த்தேசிய அரசியல் தளத்தில் கட்சி மோதல்கள் குறித்து பேசப்படும் அளவிற்கு, பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்த மக்கள் திரள் கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது பற்றி ஏன் விவாதிக்கப்படுவதில்லை?. விடுதலை அரசியலிற்குரிய உள்ளார்ந்த பண்புகளை கட்சிகள் புரிந்து கொள்ளவில்லையா?. அல்லது இலக்கினை அடையும் பாதையில் தெளிவில்லையா?. ‘எதிரியே நாம் தேர்ந்தெடுக்கும் பாதையைத் தீர்மானிக்கிறான்’ என்பது விடுதலை அரசியலின் நடைமுறைத் தத்துவம். நாடாளுமன்றத்திலோ அல்லது அரசியல் யாப்பினைத் தூக்கிப் பிடிக்கும் நீதிமன்றத்திலோ, அரச அடக்குமுறையை எம்மால் எதிர்கொள்ள முடியாவிட்டால் நாம் என்ன செய்வது?. தீர்வினை எங்கே தேடுவது?. கட்சிகளுக்கு அப்பாலுள்ள மக்கள் திரள் கட்டமைப்புகளே அதனைச் சாத்தியமாக்கும் என்பதே வரலாற்று உண்மை. இக்கட்டமைப்புகளை தேசவிடுதலைக் கோட்பாட்டில் உறுதியாக நிற்கும் கட்சிகளும் உருவாக்கலாம். ஆனால் அவை வெகுசன அமைப்புகளோடு இணைந்து பொதுத்தளத்தில் செயலாற்ற வேண்டும். ஏனெனில் எதிரி பலமானவன். சகல அரச நிர்வாக இயந்திரங்களையும் தன்னகத்தே கொண்டவன். நாட்டின் இறைமை, தனது அரச உயர்பீடத்திடமே உள்ளதென உலகமகா சபையிலும் சொல்பவன். அச்சபையின் தீர்மானங்களுக்கு அடங்காதவன். தேசிய இனங்களை சிறுபான்மை மக்களென ‘ஜனநாயக’ அரசியல் பேசுபவன். இத்தகைய அரச அதிகார வல்லானை எதிர்த்து நிற்க நாடாளுமன்றக் கட்சிகள் மட்டும்போதாது. அதற்குள் எமது விடுதலைக்கான அரசியலை மட்டுப்படுத்தவும் கூடாது. எமது அரசியல் போராட்ட வெளி விரிவடைய வேண்டும். சகல முற்போக்குச் சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். 2009 இற்குப் பின்னான அரசியல் பாதை இதுதான். -இதயச்சந்திரன். https://vanakkamlondon.com/stories/2021/01/99690/
  • விடுங்க நெடுக்  இந்த அம்மாவை பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை கூகிளில் கூட பெரிதாக இல்லை ஆனால் தனக்கு தானே மனித உரிமை ஆர்வலர் என்று பெயர் போட்டு விளம்பரம் தேடும் ஒருவர் காலி பெருங்காய டப்பாக்களை பற்றி கதைப்பது அவர்களை  தலையில் தூக்கி வைத்து ஆடும் புதிய வேடதாரிகளுக்கு உவப்பாக இருக்கும் .
  • சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.! சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 'உதயன்' - 'சுடர் ஒளி' ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு ஊடகவியலாளர் மையத்தில் நடைபெற்றது. கடந்த 2006 இல் உயர்தரக் கல்வியை முடித்த பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் வைத்து ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட மாணவர்களை சுகிர்தராஜன் புகைப்படம் எடுத்து செய்தி வெளியிட்டிருந்தார். மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே காரணம் என்று விசாரணையை திசைதிருப்ப அரசு முயற்சித்தபோது, இவர் எடுத்த புகைப்படங்கள் தலையில் சுடப்பட்டு இறந்ததை தெளிவாக எடுத்துக்காட்டியதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட அழுத்தங்களை இலங்கை அரசு சந்தித்தது என்று இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவித்திருந்தன. சுகிர்தராஜன் போர்ச்சூழலிலும் துணிச்சலுடன் ஊடகப் பணியாற்றியபோதே 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்துக்கு அருகாமையில் வைத்து ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார். மட்டக்களப்பு - குருமண்வெளியைப் பிறப்பிடமாகக்கொண்ட சுகிர்தராஜன் அம்பாறை, வீரமுனையில் வசித்துவந்த நிலையில் திருகோணமையில் பணி நிமித்தம் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் உள்ளிட்ட அரசியல்வாதிகள், ஊடகத்துறை சமூகத்தினர் உட்படப் பலரும் கலந்துகொண்டனர். http://aruvi.com/article/tam/2021/01/24/21914/ டிஸ்கி கண்ணீர் அஞ்சலிகள்..
  • எனது அறிவுறுத்தலை மீறியதாலேயே பவித்ராவுக்குக் கொரோனாத் தொற்று- தம்மிக்க பண்டார.! சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதையடுத்து கேகாலையைச் சேர்ந்த நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் கொரோனாத் தடுப்புப் பாணி தொடர்பில் சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது. எனினும், தமது அறிவுறுத்தல்களை மீறியதன் காரணமாகவே அவர் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்று தம்மிக்க பண்டார சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார். இதேவேளை, சுகாதார அமைச்சர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானமைக்கு தம்மால் பொறுப்பேற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த கொரோனாத் தடுப்புப் பாணி வழங்கப்பட்டபோது புகைப்பிடித்தல், மதுபான பாவனை, மாமிசம் உட்கொள்ளுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் எனத் தம்மால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன எனவும் அவர் கூறியுள்ளார். எனினும், அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தாம் தவிர்க்கும்படி கூறிய இரண்டு விடயங்களைச் செய்ததன் காரணமாகவே இப்போது கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அன்மையில், தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனாத் தடுப்புப் பாணியை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி உட்கொண்டார். இது இலங்கையில் பேசு பொருளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2021/01/24/21909/ டிஸ்கி வாய்ல வாஸ்து சரியில்ல .. எங்கயோ வாங்கி கட்ட போறார்.👌
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.