Jump to content

புயல்களும்,உழவனும்..!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 புயல்களும், உழவனும்..!
******************large.625_500_560_350_160_300_053_800_900_160_90.jpg.863432995204d21f47ba99c45f925a38.jpg
உழுதவன் விதைக்கும் காலம்
உணர்விலே மகிழ்ச்சி பொங்கும்
அழுதவன் வறுமையெல்லாம்
அடங்குமே என நினைத்தான்.

வரம்பு நீர் உயற்ச்சி கண்டு
வளர்கின்ற நெற்பயிரின் 
அருகிலே..
அதிகாலை தொட்டு
ஆதவன் மறையும் மட்டும்
உடலது உயிராயெண்ணி
ஒன்றியே வாழ்ந்தான் வயலில்.

கடலலை அடித்தாற் போல
காற்றிலே பயிர்கள் ஆட
உளமது நிறைந்துழவன் 
உச்சத்தில் மகிழ்ச்சி கண்டான்.

நிறைமாத கெற்பனி போல்
நெற்பயிர் குடலை தள்ள
வறுமையும் கடனும் நீங்கி-நல்
வாழ்கையை கனவில் கண்டான்.

மனைவிக்கு சாறியோடு
மகளுக்கு வரனும்தேடி
மகனுக்கு  கல்வியூட்ட
மனதினில் எண்னி வாழ்ந்தான்.

அடை மழை கட்டி வானம்-புரவி
அடித்தது புயலாய் நாட்டில்
பெரு வெள்ளம் உட்புகுந்து
பிரளையம் ஆச்சே வீட்டில்.

வயலெல்லாம் குளமாய் போச்சு
வருமானம் அழிந்தே போச்சே
கனவெல்லாம் கலைந்து போச்சு
கண்ணீரும் மழை நீராச்சே.

எனியென்ன செய்வான் உழவன்
ஏங்கியே உயிரை மாய்க்க..
எடுக்கின்ற முயர்சிதன்னை-“அரசே”
இடையிலே நிறுத்த வேண்டும்.

அவன்பட்ட கடனை நீக்கு-பென்சன்
அவனுக்கும் கொடுத்துப் பாரு
உலகுக்கே உணவழிக்கும்-அந்த
உழவனின் வாழ்வை உயர்த்து.

அன்புடன் -பசுவூர்க்கோபி-
06.12.2020.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயலெல்லாம் குளமாய் போச்சு
வருமானம் அழிந்தே போச்சே
கனவெல்லாம் கலைந்து போச்சு
கண்ணீரும் மழை நீராச்சே.

மழை அதிகம் பெய்தும் கெடுக்கும்.  மழையில்லாமலும் கெடுக்கும். விவசாயி என்ன செய்வான் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பசுவூர்க்கோபி said:

அவன்பட்ட கடனை நீக்கு-பென்சன்
அவனுக்கும் கொடுத்துப் பாரு
உலகுக்கே உணவழிக்கும்-அந்த
உழவனின் வாழ்வை உயர்த்து.

விவசாயி பற்றிய கவிதை அருமை தோழர் ..👌பகிர்விற்கு நன்றி.. இப்போது பெய்த மழைக்கு பயிர் காப்பீடு செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிலாமதி said:

வயலெல்லாம் குளமாய் போச்சு
வருமானம் அழிந்தே போச்சே
கனவெல்லாம் கலைந்து போச்சு
கண்ணீரும் மழை நீராச்சே.

மழை அதிகம் பெய்தும் கெடுக்கும்.  மழையில்லாமலும் கெடுக்கும். விவசாயி என்ன செய்வான் ? 

நெஞ்சார்ந்த நன்றிகள்

23 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விவசாயி பற்றிய கவிதை அருமை தோழர் ..👌பகிர்விற்கு நன்றி.. இப்போது பெய்த மழைக்கு பயிர் காப்பீடு செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது..😢

என்றும் உக்கம் தரும் தோழருக்கு உளமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பசுவூர்க்கோபி said:

அவன்பட்ட கடனை நீக்கு-பென்சன்
அவனுக்கும் கொடுத்துப் பாரு
உலகுக்கே உணவழிக்கும்-அந்த
உழவனின் வாழ்வை உயர்த்து.

விவசாயிக்கு பென்ஷன் கொடுப்பது மிகவும் நல்ல விடயம். இது எங்காவது கடைப்பிடிக்கப்படுகின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

விவசாயிக்கு பென்ஷன் கொடுப்பது மிகவும் நல்ல விடயம். இது எங்காவது கடைப்பிடிக்கப்படுகின்றதா?

நன்றிகள் கிருபன் அண்னா.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நண்பரே 

நாங்கள் வயல் செய்து பல ஆண்டுகள் ஆகிறது நாங்கள் ( ஏழைகள் ) வயல் செய்ய இறங்கினால் கழுத்தளவு வெள்ளம் வரும் இல்லையா காஞ்சி போற அளவுக்கு வெயில் வரும் இதுதான் விவசாயிகள் நிலமை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

வாழ்த்துக்கள் நண்பரே 

நாங்கள் வயல் செய்து பல ஆண்டுகள் ஆகிறது நாங்கள் ( ஏழைகள் ) வயல் செய்ய இறங்கினால் கழுத்தளவு வெள்ளம் வரும் இல்லையா காஞ்சி போற அளவுக்கு வெயில் வரும் இதுதான் விவசாயிகள் நிலமை .

கவிதை பார்த்து எழுதியதிற்கு உளமார்ந்த நன்றிகள் நண்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகளின் நிலையை, நல்ல விதமாக கவிதையில் கொண்டுவந்துள்ளீர்கள். 🙏

ஈழம் மலர்ந்திருந்தால், விவசாயிகளுக்கு பென்சன் கிடைத்திருக்கும்.

விவசாயிகளுக்குதான் இனிவரும் காலங்கள் நல்ல மவுசு.

மழை அதிகம் பெய்தாலும், அது வழிந்தோட சேமித்து வைக்க நல்ல கட்டமைப்பு இருக்கனும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, உடையார் said:

விவசாயிகளின் நிலையை, நல்ல விதமாக கவிதையில் கொண்டுவந்துள்ளீர்கள். 🙏

ஈழம் மலர்ந்திருந்தால், விவசாயிகளுக்கு பென்சன் கிடைத்திருக்கும்.

விவசாயிகளுக்குதான் இனிவரும் காலங்கள் நல்ல மவுசு.

மழை அதிகம் பெய்தாலும், அது வழிந்தோட சேமித்து வைக்க நல்ல கட்டமைப்பு இருக்கனும்

உண்மைதான் ஐரோப்பிய நாடுகள்போல் ஈழத்திலும் வந்திருக்கும் என்னசெயவது.

எனக்கு ஊக்கம்தரும் உடையார் அவர்களுக்கு  உளமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.