Jump to content

குளங்களை_காத்து_புனரமைக்காதுவிடின் யாழ்_நீருள்_மூழ்கும்

Recommended Posts

129483124_206700487651853_91358692122723
👌இரண்டு ஆண்டுக்குமுன்னரே எச்சரித்தார்
எந்திரி ராமதாசன்👇
குடாநாட்டில் எதிர்கொள்ளப்படும் நீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள குளங்கள் அனைத்தையும் பராமரிக்கவேண்டிய தேவையேற்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்ததாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.ஆனால் அவற்றில் 300 குளங்கள் வரை இருந்த இடமே தெரியாது போயிருப்பதாக சிரேஸ்ட பொறியியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான மா.இராமதாசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இரண்டு ஆண்டுகளுக்குமுதல்(ஒக்டோபர், 2018) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர் கடந்த காலங்களில் குளங்கள் மக்களால் அல்லது இயற்கையான பள்ளங்களினாலேயே தோற்றம் பெற்றிருந்தது.பின்னரே அவை அரச உடமையாக்கப்பட்டன.குடாநாட்டில் மக்களிற்கு நிலத்தின் மேலான நீரை தரக்கூடிய குளங்கள் கவனிக்கப்படாமால் கைவிடப்பட்டமை வேதனைக்குரியது.
அதிலும் மாகாணசபை வசமிருந்த குளங்கள் மத்திய அரசின் வசம் சென்ற பின்னர் அத்தகைய குளங்களை புனரமைப்பது அரசின் வேலையென்றே மக்கள் கருதுகின்றனர்.அத்துடன் தமது நகரங்களிலும் கிராமங்களிலுமுள்ள குளங்கள் பற்றி எமது மக்களிடையே அக்கறையற்ற நிலையே காணப்படுகின்றது.
குளங்களினை புனரமைப்பது தொடர்பில் நாம் அக்கறை கொண்டு செயற்பட தொடங்கியுள்ளோம்.எமது சொந்த நிதியிலும் வெளிநாட்டிலுள்ள நண்பர்கள் சிலரது பங்களிப்புடனும் குறைந்த செலவில் இரண்டு வருடங்களில் 8குளங்களை புனரமைத்துள்ளோம்.
மக்கள் விழிப்புணர்ச்சியுடன் முன்வருவார்களானால் அடுத்து வருகின்ற ஜந்து வருடங்களுள் ஆகக்குறைந்தது 500குளங்களையாவது புனரமைக்க முடியுமெனவும் தெரிவித்தார்.
எம்மால் புனரமைக்கப்பட்ட குளங்களிற்கு தலா இரண்டு இலட்சம் வரையிலே செலவாகியுள்ளதால் குறைந்த செலவில் குளங்களை புனரமைக்க முடியுமென தெரிவித்த ம.இராமதாசன் மக்கள் தாமாக முன்வந்து இப்பணியில் இணைந்து கொள்ளவும் அழைப்புவிடுத்துள்ளார்.
தற்போது யாழ்.மாவட்டத்தில் உள்ள குளங்களில் 27 பில்லியன் லீற்றர் நீர் தேக்கி வைக்க இயலும். இதில் 40 வீதமான நீர் ஆவியாதல் மற்றும் தாவரங்களுக்கு பயன்பட மீதமாக உள்ள 60 வீதமான நீர் 16 பில்லியன் லீற்றர் நீர் மக்களுக்கு பயன்படும்.
அதன் மூலம் யாழ்.மாவட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 63 லீற்றர் நீரை வழங்கலாம். இதனை மேலும் 20 வீதத்தால் உயர்த்தினால் யாழ்.மாவட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 72 லீற்றர் நீரை வழங்கலாம்.
இதேவேளை மழை காலத்தில் வெள்ளம் கடலுக்குள் செல்ல முடியாத போது வெள்ளம் தேங்கும் இடமே பொம்மைவெளி பிரதேசம். அது தெரியாமல் அங்கு குடியேற்றங்களை அரசியல்வாதிகள் மேற்கொண்டதால் இன்று அப்பகுதியை மேடாக்கி குடியேறிய மக்கள் மாத்திரம் பாதிக்கப்படவில்லை. யாழில் பெரும் மழை பெய்தால் யாழ்ப்பாணமே வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதெனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை யாழ்.வீரசிங்கம் மண்டபம் மற்றும் வின்சர் திரையரங்குக்கு அருகில் இருந்த குளங்களை பற்றி தற்போது தகவல்களோ தடையங்களோ இல்லாதுள்ளது. அக்குளங்களில் ஒன்றின் பெயர் தாரா குளமெனவும் அவர் தெரிவித்தார்.
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பராமரிப்புக் கலாச்சாரம் எங்கள் தாயக சமூகத்தில் இன்னும் முன்னேற வேண்டும் என்பதைச் சொல்லும் ஒரு தகவல் இது.

பல்வேறு அனுபவங்களின் அடிப்படையில் எதையாவது உருவாக்கிக் கொடுப்பவரே அதைப் பராமரிக்கவும் வேண்டுமென்று ஆணித்தரமாகக் கேட்கும் மனநிலை காணப்படுகிறது. மாட்டைக் கொடுத்தால் தீவனமும் தர வேண்டும், கணணி கொடுத்தால் அதற்கு சேர்விஸ் ஒப்பந்தமும் தர வேண்டும் போன்ற உரையாடல்களை இப்போது கேட்கக் கிடைக்கிறது!

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பெரிய மதில் வீடுகள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ தெரிந்த நகர மக்களுக்கு கால்வாய்களை துப்பரவாகவும் வைத்திருக்க தெரிவதில்லை ஏனென்றால் அது பொதுவான இடம் அது எந்த நிலையில் இருந்தாலும் பறவாயில்லை குப்பைகளையும் , பிளாஸ்த்திக் போத்தல்களை இட்டு நிறைப்போம் நமக்கான அழிவுகள் நாமே ஏற்படுத்திக்கொள்கிறோம் போல எண்ணத்தோன்றுகிறது ( நியுட்டனின் விதி போல இருக்கிறது ) 

கடற்கரைகளில் வந்து ஒதுங்கும் கழிவுகளை பார்க்கும் போது 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சூழல் பாதுகாப்புப் பழக்கங்களை மிக இளம் வயதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பாடசாலைகளில் மீள்சுழற்சி, குப்பை, உக்கல் உரம் என்று பிரித்துப் போடும் பழக்கத்தை அரிவரியில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

18 வயது தாண்டி விட்டால், ஆசிய மூளையை மாற்றுவது மிகவும் கடினம் என்பது என் கருத்து!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 6/12/2020 at 22:30, nunavilan said:

ஒரு காலத்தில் குளங்கள் தூர்வார்வது எல்லாம் ஒழுங்காய்த்தான் நடந்தது. நானே நண்பர்களுடனும் பெரியவர்களுடனும் சேர்ந்து சிரமதான பணிமூலம் பல குளங்களை தூர்வாரியுள்ளோம்..புலிகளின் காலத்திலும் பல இடங்களில் பணிகள் நடந்ததாக கேள்விப்பட்டுள்ளேன்.

கேடுகெட்ட அரசியலாலும் அபரீத விஞ்ஞான வளர்ச்சியாலும்  நாகரீக போக்காலும் எல்லாம் அழிந்து விட்டது.

இதை தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியினர் திறம்பட செய்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் பனைமரம் மற்றும் மரம் நாட்டுதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 7/12/2020 at 22:53, Justin said:

சூழல் பாதுகாப்புப் பழக்கங்களை மிக இளம் வயதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பாடசாலைகளில் மீள்சுழற்சி, குப்பை, உக்கல் உரம் என்று பிரித்துப் போடும் பழக்கத்தை அரிவரியில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

18 வயது தாண்டி விட்டால், ஆசிய மூளையை மாற்றுவது மிகவும் கடினம் என்பது என் கருத்து!

இன்று வரைக்கும் ஒரு சாக்லெட் தாளை வீசியதில்லை வீதியில் நான் ஏனென்றால் வெளி நாடுகளில் அதை எடுப்பதும் வேலையாக செய்கிறார்கள். ஆனால் இலங்கையில் தமிழர்கள் நடைமுறைகளை பின்பற்றுவது குறைவு நகரசபைகள் , பிரதேச சபைகள் குப்பைகளை தரம் பிரித்து , உக்கக்கூடியது, பிளாஸ்திக்கு , கண்ணாடிகள் என்பவற்றை வீட்டிலிருந்து தரம்பிரித்து கொடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தல் கொடுக்கிறது அப்படி செய்யாதவர்கள் குப்பைகளை அவர்கள் எடுப்பதில்லை ஆனால் மக்களோ அந்த எடுக்காத குப்பைகளை தூரம் எடுத்து சென்று நடு வீதிகளில் வீசி விட்டு செல்கிறார்கள் இதில் தமிழர்கள் முதலிடம் , ஆனால் சிங்கள பகுதிகள் சில வேலைத்தளங்கள் என்பவற்றில் சாப்பாட்டு இலை முதல் கடதாசி வரைக்கும் பிரித்து போடுகிறார்கள்.

பழக்க வழக்கம் என்பது முடிந்தால் யாழ்ப்பாணத்தில் ஒரு சந்தியில் சிக்னல் இல்லாததில் நின்று மாறி பாருங்கள் அப்ப தெரியும் சட்ட திட்ட நடைமுறைகளை பின்பற்றுகிறார்களா என ???

 • Like 6

எல்லாரும் இதை ஒருதரம் செய்து பாருங்கள்.

உங்கள் ஊரில் எத்தனை கோவில் கேணிகள், ஊர் குளங்கள் கடந்த 10 வருடத்தில் காணாமல் போய் விட்டன? அல்லது பாவனையின்றி கிடக்கிறன?

மிக வேகமாக தமிழ்நாட்டை போல் இலங்கையின் வடக்கு கிழக்கை நாமே ஆக்க போகிறோம். 

ஒப்பீட்டளவில் கொழும்பு தவிர் ஏனைய சிங்கள பகுதிகளில் இந்த பிரச்சனை குறைவு.

முஸ்லீம்களும் தமிழர்களும்தான் இந்த விடயத்தில் மோசம் - என் தனிபட்ட அனுபவம்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 7/12/2020 at 06:51, Justin said:

பராமரிப்புக் கலாச்சாரம் எங்கள் தாயக சமூகத்தில் இன்னும் முன்னேற வேண்டும் என்பதைச் சொல்லும் ஒரு தகவல் இது.

பல்வேறு அனுபவங்களின் அடிப்படையில் எதையாவது உருவாக்கிக் கொடுப்பவரே அதைப் பராமரிக்கவும் வேண்டுமென்று ஆணித்தரமாகக் கேட்கும் மனநிலை காணப்படுகிறது. மாட்டைக் கொடுத்தால் தீவனமும் தர வேண்டும், கணணி கொடுத்தால் அதற்கு சேர்விஸ் ஒப்பந்தமும் தர வேண்டும் போன்ற உரையாடல்களை இப்போது கேட்கக் கிடைக்கிறது!

வடஅமெரிக்க வணிக உலகில் இவ்வாறான எதிர்பார்ப்பை total solution என்று சொல்வார்கள். இவ்வாறாக total solution கொடுக்கும் வணிகங்கள் பெரும் வெற்றி கண்டுள்ளன. Apple நிறுவனம் ஒரு உதாரணம். தொலைபேசியுடன், அதில் கணணி, கணணிக்கான மென்பொருள், ஒளிப்படக்கருவி, மேலும் திசையறிகாட்டி இப்படி அனைத்தையும் உள்ளடக்கிய iPhone யை அறிமுகப்படுத்தி வளம் சேர்த்தது Apple.

On 7/12/2020 at 08:13, தனிக்காட்டு ராஜா said:

பெரிய மதில் வீடுகள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ தெரிந்த நகர மக்களுக்கு கால்வாய்களை துப்பரவாகவும் வைத்திருக்க தெரிவதில்லை ஏனென்றால் அது பொதுவான இடம் அது எந்த நிலையில் இருந்தாலும் பறவாயில்லை குப்பைகளையும் , பிளாஸ்த்திக் போத்தல்களை இட்டு நிறைப்போம் நமக்கான அழிவுகள் நாமே ஏற்படுத்திக்கொள்கிறோம் போல எண்ணத்தோன்றுகிறது ( நியுட்டனின் விதி போல இருக்கிறது ) 

கடற்கரைகளில் வந்து ஒதுங்கும் கழிவுகளை பார்க்கும் போது 

இவ்வாறாக அசுத்தப்படுத்துபவர்களுக்கு தண்டப்பணம் விதிப்பதன் மூலம் இதை தடுக்கலாம். துரையப்பா யாழ். நகரமுதல்வராக இருந்த காலத்தில் எங்கள் வீட்டுக்கு முன் கால்வாய் அசுத்தநீர் பெருக்கெடுத்து வீதியில் இறங்கியது. சில வீடுகள் தள்ளி ஒரு வீட்டுக்கு முன் கால்வாய் அடைக்கப்பட்டு இருந்தது. துப்பரவாக்கும் நகர ஊழியர்கள் வேலை முடித்து இரெண்டு நாட்களில் மீண்டும் அடைப்பு. நகரசபை அவர்களின் வீட்டுக்கு வந்து அடைபட்டிருக்கும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா தண்டம் என்று அறிவித்து சுவரிலும் ஒட்டிவிட்டு போனார்கள். இன்றுவரை கால்வாய் அடைபடுவதில்லை. 😃

On 7/12/2020 at 09:23, Justin said:

சூழல் பாதுகாப்புப் பழக்கங்களை மிக இளம் வயதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பாடசாலைகளில் மீள்சுழற்சி, குப்பை, உக்கல் உரம் என்று பிரித்துப் போடும் பழக்கத்தை அரிவரியில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

18 வயது தாண்டி விட்டால், ஆசிய மூளையை மாற்றுவது மிகவும் கடினம் என்பது என் கருத்து!

நல்ல ஆலோசனை. ஆனால் சிங்கப்பூர் முறையே சிறந்தது. குப்பை போட்டால்  பகிரங்க பிரம்படி என்று ஆரம்பித்து, மக்கள் நாகரிகம் அடைந்தபின், பிரம்படிக்கு பதிலாக ஒரு வாரம் குப்பை அகற்றும் வேலை கொடுத்து அவரது செலவிலேயே பிரபல பத்திரிகையில் படத்துடன் அவரது வேலை பற்றிய விளம்பரம் முதல் பக்கத்தில். சிங்கப்பூர் சிறந்து விளங்க இது முக்கியமான காரணம்.

Edited by கற்பகதரு
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கற்பகதரு said:

இவ்வாறாக அசுத்தப்படுத்துபவர்களுக்கு தண்டப்பணம் விதிப்பதன் மூலம் இதை தடுக்கலாம். துரையப்பா யாழ். நகரமுதல்வராக இருந்த காலத்தில் எங்கள் வீட்டுக்கு முன் கால்வாய் அசுத்தநீர் பெருக்கெடுத்து வீதியில் இறங்கியது. சில வீடுகள் தள்ளி ஒரு வீட்டுக்கு முன் கால்வாய் அடைக்கப்பட்டு இருந்தது. துப்பரவாக்கும் நகர ஊழியர்கள் வேலை முடித்து இரெண்டு நாட்களில் மீண்டும் அடைப்பு. நகரசபை அவர்களின் வீட்டுக்கு வந்து அடைபட்டிருக்கும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா தண்டம் என்று அறிவித்து சுவரிலும் ஒட்டிவிட்டு போனார்கள். இன்றுவரை கால்வாய் அடைபடுவதில்லை. 😃

குப்பைகளை கொட்டுபவர்களுக்கு தண்டப்பணம் என அறிவித்தாலும் நம்மவர்கள் எரியும் நெருப்புக்குள் பெற்றோல்  கடத்துபவர்கள் ஆச்சே  யூட் சின்ன உதாரணம் அறுகம்பை பொத்துவில் பகுதி பல ஆயிரக்கணக்கில் வெள்ளைகள் உல்லாசம் அனுபவிக்க வரும் பகுதி அங்கு கடல் குளிக்க வரும் எம்மவர்கள் , முஸ்லீம்களும் அடக்கம் சாப்பாடு கட்டி வந்து கூடி இருந்து சாப்பிட்ட பின்னர் கழிவுகளை அந்த இடத்திலே வீசியெறிந்து விட்டு சென்றார்கள் . ஆனால் மீண்டும் அதே இடத்துக்கு வந்த சிங்கள குடும்பம் ஒன்று அவர்களும் சாப்பிட்டுவிட்டு அத்தனை கழிவுகளை தொட்டியில் இட்டு போனார்கள் இது என் கண் முன்னர் நடந்த சம்பவம் . தமிழர்களை சொல்லி திருத்தலாம் ஆனால் முஸ்லீம்களை திருத்துவதென்பது மலையில் மாடு ஏற்றுவது போல மிக கஸ்ரம் 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.