Jump to content

தாயகம் சார்ந்த விவசாய மற்றும் பொருளாதார தகவல்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நெல் வயலில் அசோலாவின் பங்களிப்பு..!
நெல் வயலில் அசோலாவின் பங்களிப்பு..! சாதாரணமாக இந்த அசோலா பற்றி நம்மில் பல விவசாயிகளுக்கு தெரிவதில்லை. இது பெரணி வகை தாவரம். நீரில் மட்டுமே வளரக்கூடியது. ஆசிய நாடுகள் அனைத்திலும் வளரும் தாவரமாகும். அதாவது வேளாண் ஆராய்ச்சி நிலையம் மூலமாக இதன் நன்மைகள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது
இவை வளர முதலில் பாஸ்பேட் சத்து அவசியம். அதிக வெப்பம் உடைய காலங்களில் இவற்றின் வளர்ச்சி தடைபடும். இவை பிரிதல் மூலம் வேகமாக வயலில் பத்து நாட்களில் வயல் முழுவதும் பரவிவிடும். வயலில் தண்ணீர் தேங்கினால் மட்டுமே இவை அடர்ந்து வளர முடியும். தொடர்ந்து மூன்று போகம் நெல் பயிரிடும் வயல்களில் ஒரு தடவை தூவி விட்டால் போதும். தொடர்ந்து ஸ்போர்கள் மூலம் வயல் அறுவடை முடிந்து நாற்று நட்ட பத்து நாட்களில் தானாக முளைத்து விடும்.
 இவை இவ்வளவு வேகமாக வளர முக்கிய காரணம் காற்றில் உள்ள நைட்ரஜனை உறிஞ்சும் தன்மை உடையதால், நெல் வயல் முழுவதும் பல டன்கள் பெருகிவிடும். அதேபோல் கிட்டத்தட்ட பதினைந்து சதவீதம் தழைச்சத்து நெல் சாகுபடியில் இதனால் சேமிக்கப்படுகிறது. இவற்றின் முக்கியமான பலன் காற்றில் உள்ள தழைச்சத்தை உறிஞ்சி நெல் பயிருக்கு கொடுப்பதோடு சில வளர்ச்சி ஊக்கிகளான அமினோ அமிலங்களை சேர்த்து பயிருக்கு அளிக்கிறது. அடுத்த படியாக இவை வயலின் மேற்பரப்பை போர்வை போன்று மூடி விடுவதால் களைகள் வெகுவாக கட்டுப்படுத்தப்படுகின்றன. சூரிய ஒளியில் இருந்து இவை உணவை தயாரித்து கொள்கின்றன. 
நீர் ஆவியாதல் தடுக்கப்படுகிறது. நெல் வயலில் பயிர்களுக்கு இடையே கோனோவீடர் கொண்டு இழுக்கும் போது அசோலா சேற்றில் அமிழ்ந்து உரமாகின்றன. விளைச்சல் 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு. கொசுக்கள் தண்ணீர் மேல் பரப்பில் முட்டை இடுவது முற்றிலும் தடுக்க படுகிறது. இதனால் அவற்றின் பெருக்கம் கட்டுப்படுகிறது. இவற்றின் இலைகள் மேல் பரப்பில் மெழுகு பூச்சு உள்ளதால் எவ்வளவு மழை பெய்தாலும் இவற்றின் மீது மழை துளிகள் ஒட்டாது. இதனால் இவை பாதிப்பு இல்லாமல் மிதந்து கொண்டு இருக்கும். அசோலாவின் அடுத்த பயன்பாடு என்று பார்த்தால் கால்நடைகளுக்கு மிகச்சிறந்த புரதச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த இயற்கை உணவு. இதனால் அவற்றின் சினை சுழற்சி சரியாக நடைபெறுகிறது. முதலில் பழகாத கால்நடைகள் சாப்பிட மறுக்கும். அப்போது இவற்றின் மேல் வெல்லம் கலந்த தண்ணீரை தெளித்து இரண்டு மூன்று நாள் தொடர்ந்து கொடுத்தால் பழகி விடும். கோழிகளுக்கும் இதே போன்றுதான். அசோலாவை உண்ணும் கோழிகள் இடும் முட்டைகள் மிக சுவை உள்ளவையாக இருக்கும். குஞ்சு பொறிக்கும் தன்மை சற்று அதிகரிக்கும். குளங்களில் மீன் வளர்ப்பவர்களுக்கு நல்ல தீவனமாக பயன்படும்.
 இதை சாப்பிட்டு வளரும் மீன்கள் சுவையாக இருக்கும். அவைகளின் வளர்ச்சி சீராக இருக்கும். அசோலாவால் ஏற்படும் பிரச்சனை என்று பார்த்தால் மழைக் காலங்களில் மேல் வயல்களில் இருந்து அசோலாவை சுமந்து கொண்டு வரும் தண்ணீர் இளம் நெல் வயல்களில் வரும் போது அந்த பயிர்களை வளைத்து தண்ணீரில் அமிழ்த்து விடும். இதனால் நெல் பயிருக்கு பாதிப்பு ஏற்படும். தனியாக தொட்டிகளில் வளர்ப்பவர்கள் அசோலாவிற்கு உரமாக மண்புழு உரத்தை தண்ணீரில் கரைத்து விட்டு அதில் வளர்க்கும் போது நன்கு வளரும். சாணம் நாற்றத்தால் கால்நடைகள் சாப்பிட மறுப்பதை தவிர்க்கலாம். ஆடுகள், முயல்கள், காடைகள், வான்கோழிகள் போன்றவற்றிற்கும் தீவனமாக தரலாம். நாமும் சமைத்து சாப்பிடலாம். அசோலா என்பது இயற்கை நமக்கு அளித்த கொடை என்றே சொல்லலாம்.

 

via-face book

 

 

#####################################################################

Weedy rice (பன்றி நெல்)


நெற் செய்கையில் களை நெல்லின் பரவலினைக் கட்டுப்படுத்தல்
களை நெல்லானது பொதுவாக விவசாயிகளினால் பன்றி நெல் என அழைக்கப்படும். இது ஓராண்டு அல்லது ஈராண்டு களையாகும். இது உருவவியல் உடற்றொழிலியல் என்பனவற்றில் பெரும்பாலும் நெற்பயிரை ஒத்ததாகும். இதில் 30 – 40 வரையான இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை சூழல் காரணிகளில் ஏற்படும் பரந்த அளவிலான மாற்றத்தினை சகித்து வளரக்கூடியன. இயற்கையான தெரிவின் மூலம் அதிகளவில் போட்டியிட்டு வளர்வதற்கு இவ் இனங்கள் இசைவாக்கம் அடைந்துள்ளமையால் நெற்தாவரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதனால் விளைச்சலில் அதிகளவு பாதிப்பு ஏற்படும்.
இக் களை நெல் தற்போது புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மருதமடு பெரிய நீர்ப்பாசனக்குளத்தின் கீழ் செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்களில் பரவலாக காணப்படுகின்றது.
களை நெல் மிக விரைவாக முதிர்ச்சி அடைந்து செய்கை பண்ணப்படும் நெல்லினை அறுவடை செய்வதற்கு முன்பாக அனைத்து விதைகளையும் நிலத்தில் உதிர்பபதால் அடுத்துவரும் போகங்களில் இதன் பெருக்கம் அதிகரித்துச் செல்ல வாய்ப்பு ஏற்படும். களை நெல் சிலவேளைகளில் பெரிய பற்றையாக காணப்படும். பொதுவாக தனித் தாவரமாக நெல்லிற்கு மேல் வளர்ந்து காணப்படும். தண்டின் அடிப்பாகம் பெரும்பாலும் இளம் ஊதா நிறமாகவும் கரடு முரடாகவும் காணப்படும். கணுக்களில் வேர்கள் உருவாகி மீண்டும் முளைக்கும். இதன் இலை மடலானது செய்கை பண்ணப்படும் நெல்லின் இலை மடல்களின் உருவத்தினை ஒத்திருக்கும். சிலவேளைகளில் இளம் பச்சை நிறமாக காணப்படுவதுடன் இலைகள் தொங்கிக்கொண்டிருப்பது போன்று தோற்றமளிக்கும். அத்தோடு இலைகள் சொரசொரப்பாக காணப்படும். இதன் பூந்துணர் ஒரு அச்சிலான கூட்டுப்பூந்துணர் ஆகும். இது 10-20 செ.மீ வரை நீளமானது. பூந்துணர் பல நிறங்களில் காணப்படும்.இவை எந்த வர்க்கத்துடன் இனக்கலப்பு அடைகின்றதோ அதற்கேற்ப பூந்துணரின் நிறம் வேறுபடும். இது வைக்கோல் நிறம் முதல் கறுப்பு கபிலம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படலாம் இதற்கமைய மேற்கூரின் நிறமும் வேறுபடலாம். இதன் நீளம் 1-6 செ.மீ வரை காணப்படும். சில வேளைகளில் மேற்கூர் இல்லாதிருக்கலாம். இக் களை நெல்லின் பூந்துணர் ஒரே தடவையில் முதிர்ச்சி அடைவதில்லை. கீழேயுள்ள பூக்கள் மலரும் போது மேலேயுள்ள விதைகள் முதிர்ச்சியடைந்து கீழே விழும். இப் பண்பும் இனக்கலப்படையும் இனத்திற்கு ஏற்ப வேறுபடும். விதைகளின் எதிர்ப்பு தன்மை வாழ்தகவு என்பனவும் பெருமளவில் வேறுபடும். சில வேளைகளில் இதன் வாழ்தகவு 3-4 வருடங்களாகவும் காணப்படும். இவ் இயல்பு காரணமாக இதனை ஒரு குறிக்கப்பட்ட காலத்தினுள் கட்டுப்படுத்தல் அல்லது முற்றாக இல்லாது ஒழித்தல் என்பது சற்று கடிமான ஒன்றாகும். இதன் இனப்பெருக்கமானது விதைகள் மற்றும் கணுக்களில் உருவாகும் வேர்கள் மூலம் இடம்பெறும். இவை நீர், விலங்குகள், விவசாய உபகரணங்கள், காற்று என்பவற்றின் மூலம் இலகுவாக பரவல் அடையும்.
கட்டுப்படுத்தல் 
01.களை நெல் வயலில் உள்ளதா என இனங்கண்டு அவற்றை பிடுங்கி அழித்தல்
02.வயலிலுள்ள களை நெல் விதைகளை இயலுமான வரை முளைக்கச்செய்து அதன் பின்னர் நிலத்தினை உழவு செய்தல்
03.விதைப்பதற்கு முன்னர் நிலத்தினை நன்றாக பண்படுத்தல்.
04.சுத்திகரிக்கப்பட்ட விதை நெல்லினை விதைத்தல்
05.நெல்லினை விதைப்பதற்கு பதிலாக நாற்றுக்களை வரிசைகளில் நடல் அல்லது விதையிடும் கருவிகளை பயன்படுத்தி விதைகளை இடல். இதன் மூலம் வரிசைகளிற்கு இடையில் முளைக்கும் களை நெல்லினை இலகுவாக பிடுங்கி அழிக்க முடியும்.
06.காலபோகத்தினை தொடர்ந்து வரும் சிறுபோகத்தில் நெற்பயிர் தவிர்ந்த ஏனைய பயிர்களை செய்கை பண்ணல் (உப உணவுப்பயிர்கள்)
போன்ற விடயங்களை முன்னெடுப்பதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம்.
ஆக்கம் –
எஸ்.லக்ஸ்மிதரன்
விவசாயப் போதனாசிரியர்
பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகம்
முல்லைத்தீவு.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் அருகில் அமையவிருக்கும் நஞ்சற்ற மரவள்ளி மா பதப்படுத்தல் ஆலை.
🏭🥔🏭🥔🏭🥔🏭🥔🏭
சுவீடனின் விவசாய, மருந்து நிறுவனமான ஸ்டார்ச் இண்டஸ்ட்ரீஸ் (பிரைவேட்) லிமிடெட், வெலிக்கந்தையில் தனது நஞ்சற்ற மரவள்ளி சுத்திகரிப்பு ஆலையை நிறுவவிருக்கிறது.
நஞ்சற்ற இயற்கை மரவள்ளி மாவிற்கான சந்தை உலக அளவில் வளர்ந்து வருகிறது. எமது நாட்டில் மரவள்ளி செய்கைக்கு நீண்ட பாரம்பரியம் இருப்பதால் ஸ்வீடனை தளமாகக் கொண்ட மரவள்ளி மா உற்பத்தியாளர்கள் இலங்கையையும் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
எனவே, ஸ்டார்ச் இண்டஸ்ட்ரீஸ் ஒரு பெரிய அளவிலான தொழில்துறை வளாகத்தை வெலிகந்தையில் அமைத்து, மரவள்ளி கிழங்குகளை பதப்படுத்தி அவற்றை மரவள்ளிக்கிழங்கு மாவாக சுத்திகரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் நாடளாவிய ரீதியாக 6 ஆலைகளை நிறுவத் திட்டமிட்டுள்ளது.
அதே போல் இங்கு மரவள்ளி இலைகளும் பதப்படுத்தப்படப்போகின்றது.
ஸ்டார்ச் இண்டஸ்ட்ரீஸ் (பிரைவேட்) லிமிடெட் தற்போது இலங்கையில் நஞ்சற்ற இயற்கை மரவள்ளிக்கிழங்கை வளர்ப்பது, பதப்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல், மற்றும் சீனா மற்றும் மத்திய கிழக்கிற்கு மரவள்ளி மாவினை ஏற்றுமதி செய்தல் மட்டுமன்றி ஐரோப்பா, அமெரிக்கா, சீனா மற்றும் மத்திய கிழக்கு, பிற ஆசிய சந்தைகளுக்கு மரவள்ளி இலைகளையும் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.
இம் மரவள்ளி இலைகள் ஊட்டச்சத்து நிரப்பியாகவும், புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்தாகவும் பயன்படுத்தபடுவது மட்டுமல்லாது விலங்கு தீவனமாக கூட வெளிநாடுகளில் விற்கப்படுகிறது.
வரவிருக்கும் 10-15 ஆண்டுகளில் இத்திட்டம் 20,000-100,000 விவசாயிகளிடமிருந்து இலங்கை முழுவதும் 100,000 ஏக்கர் விவசாய நிலங்களில் இயற்கை மரவள்ளி செய்கையை நிறுவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுடன் இணைந்து இலங்கையும் உலகின் மிக வளர்ந்து வரும் மரவள்ளி சந்தைகளில் ஒன்றாகும். மரவள்ளி செய்கை விருத்தியடைய இலங்கை ஒரு சிறந்த இடம். "நிலையான அரசியல் நிலைமைகள் மற்றும் சாதகமான நிதி ஊக்குவிப்பு, மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு ஆகியவற்றின் காரணமாக வெளிநாட்டு நேரடி முதலீடுகளை இயக்குவதற்கு இலங்கை ஒரு சாதகமான இடமாகும்" என்றும் இந்நிறுவனம் கூறுகிறது.
 
via-fb
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
முல்லைத்தீவில் பாரம்பரிய விதை வங்கி
🥜🌰🥔🥜🥜🌰🥜🥔🌰🥔🥔🥜🌰🥜🥜
இன்று மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான் எல்லா இடங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் எங்கள் பாரம்பரிய விதைகள் அழிவின் விளிம்புக்கே சென்றுள்ளன. பாரம்பரிய விதைகளை பாதுகாத்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் நேசன் தம்பதியினர் விதைகள் காப்பகமொன்றைத் தங்கள் பண்ணையில் ஆரம்பித்துள்ளனர்.
எமது பிரதேசங்களில் பல்வேறு வகையான மரக்கறி, மூலிகை இனங்களின் விதைகள் பாரம்பரியமாகவே இருந்து வருகின்றன. அவற்றை காலம்காலமாக எம் விவசாயிகள் பாதுகாத்து வந்துள்ளனர். இன்று பல பாரம்பரிய விதைகள் இல்லாமல் செல்லும் நிலைக்கு சென்றுள்ளன. இவற்றை பாதுகாத்து பரவச் செய்யும் நேசன் தம்பதிகளின் முயற்சியை வரவேற்போம்.
 
via
fb
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
* உலகில் நூற்றுக்கும் மேலான தனித்துவமான ஆட்டு இனங்கள் உள்ளன. ஆடுகளில் இனத்தைப் பொறுத்து உடல் எடை வேறுபடுகிறது.
சிறிய ஆடுகள் 20Kg முதல் 27kg வரை எடையில் இருந்து
பெரிய ஆடுகளான போயர் ஆடு போன்ற 120Kg எடை வரை வளருகின்றன. ஆடுகள் பொதுவாக 15 முதல் 18 வரை ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன.
* ஆடு இலை, தழை உண்ணும் பாலூட்டி விலங்கு. ஆடு இனங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்த பொது வகைகளாகும். அவை பொதுவாக ( பால், நார், இறைச்சி, தோல். ) மற்றும் துணை விலங்குகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. சில இனங்கள் ( Pack goat ) என்றும் குறிப்பிடப்படுகின்றன.
* ( Pack goat ) என்பது சரக்குகளை பொதி சுமப்பதற்கு பயன்படுத்தப்படும் ஆடுகளாகும். சிறியதாக ஓரளவு குறைவான சரக்குகளை எடுத்துச் செல்லக்கூடியதாக இருந்தாலும் அந்த ஆடுகள் புதிய பாலையும் வழங்குகின்றன. பல நேரம் அவை இறைச்சியாக பொதி செய்யப்படலாம்.
* எமது நாட்டில் கோழியிறைச்சிக்குப் பிறகு ஆட்டு இறைச்சி பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் நாட்டின் பொருளாதார வளத்திற்கும் கால்நடைகள் வளர்ப்பது பெரிய பங்களிப்பை செய்து வருகின்றன.
 
* உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 440 மில்லியன் ஆடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன.
கரீபியனின் ஆங்கிலம் பேசும் தீவுகளிலும், ஆசியாவின் சில பகுதிகளிலும் குறிப்பாக பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில்.
வெள்ளாட்டு இறைச்சி, செம்மறியாட்டு இறைச்சி இரண்டையும், ( மட்டன் ) என்று அழைக்கின்றார்கள். ஆட்டின் வயது மற்றும் நிலையைப் பொறுத்து இறைச்சியின் சுவையை ஒப்பிடுகிறார்கள். ஆட்டு இறைச்சியின் சுவைக்கு அதில் சுவை ( அமிலம் 4-methyloctanoic, 4-methylnonanoic acid ) இருப்பதாகக் கூறப்படுகிறது.
* 1990 களின் முற்பகுதியில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட ( தென்னாப்பிரிக்க போயர், South African Boer) மற்றும் நியூசிலாந்து ஆடுகளில் ஒன்றான கிகோ இறைச்சி பிரபலமான இனமாகவும் கருதப்படுகிறது. ஆட்டு இறைச்சியை ( சுண்டவைத்தல், பேக்கிங், கிரில்லிங், பார்பிக்யூயிங், பதப்படுத்தல். ) உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சமைக்கப்படுகின்றது
 
* உலகின் மொத்த ஆண்டு பால் விநியோகத்தில் 2% ஆடுகள் உற்பத்தி செய்கின்றன. சில ஆடுகள் பாலுக்காக வளர்க்கப்படுகின்றன. ( strong - smelling buck ) பிரிக்கப்படாவிட்டால் ஆட்டின் வாசனை பாலை பாதிக்கும்.
* ஆட்டின் பால் பொதுவாக ( சீஸ், வெண்ணெய், ஐஸ்கிரீம், தயிர், கஜெட்டா Cajeta ) மற்றும் பிற தயாரிப்புகளில் பதப்படுத்தப்படுகிறது. ஆட்டின் பால் சீஸ் பிரான்சில் ( fromage de chèvre ஆடு சீஸ் ) என அழைக்கப்படுகிறது. சில வகைகளில் ( Rocamadour ) மற்றும் ( Montrachet ) ஆகியவை அடங்கும்.
* ஆட்டின் வெண்ணெய் வெண்மையானது ஏனெனில். ஆடுகள் மஞ்சள் பீட்டா கரோட்டின்( beta-carotene ) மூலம் வைட்டமின் ஏ நிறமற்ற வடிவமாக மாற்றப்படுகின்றன. ஆட்டின் பாலில் குறைந்த கொழுப்பு உள்ளது. தாய்ப்பாலுக்கு மிகவும் நிகரான புரதங்கள் நோய்எதிர்ப்பு சக்தி போன்றவை பசுவின் பாலை விட ஆட்டுப்பாலில் அதிகம் உள்ளன.
 
* பல நூற்றாண்டுகளாக தேவையற்ற தாவரங்களை அழிக்க ஆடுகளை பயன்படுத்துகின்றனர். மனிதர்களால் எளிதில் அகற்றப்படாத ஆக்கிரமிப்பு தாவர இனங்களை அகற்ற பயன்படுகிறது. அவை ( உண்ணும் இயந்திரங்கள் eating machines ) மற்றும் ( உயிரியல் கட்டுப்பாட்டு முகவர்கள் biological control agents ) என்று விவரிக்கப்பட்டுள்ளன. இந்த வடிவம் பாதுகாப்பு மேய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.
 
* ஆடு வளர்ப்பு நல்ல லாபம் தரும் தொழிலாக இருப்பதனால். படித்த இளைஞர்கள் தற்போது இந்த தொழிலில் இறங்கி வருவது அதிகரித்துள்ளது. நவீன முறை கால்நடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள் பிரபலமாக உள்ளது.
* போதிய இடவசதி இல்லாதவர்கள் கூட சிறிய இடத்தில் ஆடுகளை வளர்க்கும் வகையில் பரண் மேல் ஆடு வளர்ப்பு முறை இப்பொழுது பிரபலம் ஆக உள்ளது. விவசாயம் செய்ய போதிய நிலமில்லாத இஸ்ரேல் நாடு இதே போல் வீட்டு அலமாரி போன்ற அமைப்பில் பயிர்களை விளைவித்து அறுவடை செய்து வருகிறார்கள்.
 
#ஆடுகளை எப்படி வளர்க்கலாம்.
 
( ஆட்டுத் கொட்டில் )
* ஆடுகளின் பாதுகாப்புக்கு தொழுவம் அமைக்க வேண்டும். மேய்ச்சலுக்கு நிலம் அல்லது மேய்ச்சலுக்கு இடவசதி இருக்க வேண்டும். ஆடு வளர்ப்பில் அனுபவம் வேண்டும். வெயில் காலங்களில் நிழலும், குளிர்ந்த நீரும் சரியான அளவில் கொடுக்க வேண்டும்.
 
( கொட்டில் அமைப்பு )
* வளர்ந்த ஒரு ஆட்டுக்குட்டிக்கு பதினைந்து சதுர அடி இடம் தேவைப்படும். எல்லா ஆடுகளுக்கும் போதுமான அளவு இடம் ஒதுக்கித் கொடுக்க வேண்டும். நாம் வளர்க்க விரும்பும் ஆடுகளுக்கேற்ற அளவில் பட்டி அமைத்துக் கொள்ளலாம். செம்மறி ஆடாக இருந்தால், நைலான் வலையிலேயே பட்டி அமைக்கலாம். வெள்ளாடுகளுக்கு கம்பி வலை அல்லது சுவர் மூலமாகத்தான் வேலி அமைக்க முடியும்.
 
* பண்ணைக்குள் ( கிடாய் ஆடுகள், குட்டி ஆடுகள், சினை ஆடுகள், வளரும் ஆடுகள், தாய் ஆடுகள். ) என தனித்தனியாகப் பிரித்து அடைத்து வைப்பதற்காக தனித்தனிக் கொட்டகைகள் அமைக்க வேண்டும். ஆண் ஆடுகளை தனியாகக் கொட்டிலில் வைக்க வேண்டும்.
 
பெட்டை ஆடுகளை குழுவாக ஒரு கொட்டிலில் 60 என்ற அளவில் வைக்கலாம். அதிகப்படியான ஆடுகளை ஒரு கொட்டிலில் அடைக்கக் கூடாது. காலை 10.00am மணிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி விட்டு, கொட்டகைகளை சுத்தம் செய்து விட வேண்டும். ஆட்டுப் புழுக்கை மற்றும் சிறு நீரை சரியானபடி அகற்ற வேண்டும்.
 
* கொட்டிலானது நிலத்தில் இருந்து 5 அடி உயரத்தில் மற்றும் நல்ல காற்றோட்ட வசதி கொண்டதாக இருக்க வேண்டும். கொட்டில் அமைக்கப்படும். நீர் தேங்காத சொத சொதப்பான பகதிகளைத் தவிர்க்க வேண்டும். தாழ்வான மற்றும் அதிக மழை பொழியும் பகுதிகளில் தரைப் பகுதி சற்றே உயர்வாக இருக்க வேண்டும். குளிர்வான ஹிமாலாய பகுதிகளில் கொட்டிலின் தரைப்பகுதி மரத்தினால் அமைப்பது நல்லது.
 
( வெள்ளாட்டு இனங்கள் தேர்வு செய்தல் )
* நல்ல ஆரோக்கியத்துடன் உடற்கட்டுள்ள இனவிருத்தி செய்ய தயார் நிலையில் உள்ள. வெள்ளாடுகளை கால்நடை மருத்துவர் ஆலோசனை பெற்று நல்ல ஆடுகளை வாங்க வேண்டும். புதிதாக வாங்கிய ஆடுகளை அடையாளக் குறியிட்டு நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போட்டு 15 நாட்கள் தனியே கண்காணிப்பில் வைத்திருந்து. பின் கொட்டிலில் அடைக்க வேண்டும்.
( பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு )
 
* வெள்ளாடுகளை தரையில் வளர்க்காமல் தரையிலிருந்து 5 அடி உயரத்தில் கிடைமட்டமாக. (Horizontally) மரச்சட்டங்களை 2 க்கு 1.5 அடி இஞ்ச் அளவில் 1 விரல் இடைவெளியில் வரிசையாக அடுக்கி கட்டி அமைப்பது தான் பரண் அமைப்பு. இதன் இடைவெளி அதிகமாகவோ அல்லது குறைக்கவோ கூடாது. ஏனெனில் ஆடுகள் நடப்பதில் சிரமம் ஏற்படும். கால்களில் காயங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
* இந்த பரண் மேல் அமைப்பு முறையில் 100 ஆடுகள் வளர்க்க 50 அடிநீளம், 45 அடி அகலம் உடைய ஒரு கொட்டகை (Shed) அமைக்க வேண்டும். வெள்ளாடு வளர்ப்பு முறை வெற்றிகரமாக இருக்க, பசுந்தீவனம் (Green fodder) முக்கிய பங்களிப்பாக இருக்கும்.
 
( நன்மைகள் )
* வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு மூலம் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு. இனப்பெருக்கத்தில் குட்டிகளின் இறப்பு விகிதம் குறைவு. குறைந்தபட்சம் 100 தாய் ஆடுகள் நல்ல முறையில் வளர்த்தால் 2 குட்டி வீதம். 1 ஆண்டுக்கு 300 குட்டிகள் வரை கிடைக்க வாய்ப்புண்டு.
 
( வளரியல்பு )
* 8 மாதத்தில் இருந்து 1 வருடத்திற்குள் பெட்டை ஆடு பருவத்திற்கு வந்து விடும். அந்த சமயத்தில் நல்ல தரமான 1வருடம் கழிந்த கிடாய்களோடு சேர்த்து விட வேண்டும். ஆட்டுக்கு சினைப் பருவம் 5 மாதங்கள் குட்டி போட்ட 2 - 3 மாதங்களில் மீண்டும் அடுத்த சினை பருவத்திற்குத் தயாராகி விடும். 3 மாதங்கள் கழித்து இனப்பெருக்கம் செய்வது நல்லது.
 
* 8 மாதத்திற்கு ஒரு முறை குட்டி ஈனுவதால் சராசரியாக 2 வருடத்தில் 3 முறை குட்டி ஈனும். ஒரு ஈற்றுக்கு 2 குட்டிகள் ஈனும். 40 நாட்கள் வரை குட்டிகளை தாய் ஆட்டிடம் பால் குடிக்க விட்டு பிறகு பிரித்து விட வேண்டும். அப்போதுதான் தாய் ஆடு சீக்கிரம் பருவத்திற்கு வரும். வெயில் மற்றும் குளிர் காலங்களில் குட்டியிடுவதை தவிர்க்க வேண்டும்.
 
( ஆட்டுத் தீவனம் )
* ஆடுகளுக்கான தீவனமாக ( தீவன சோளம், மக்காச் சோளம், வேலி மசால், சீமைப் புல், மா இலை, பிலா இலை, வேப்ப இலை, அகத்தி, இத்தி, முல் முருங்கை, திப்பிலி, மல்பெறி கொலசிறி. ) போன்றவற்றை கொடுக்கலாம். நார்த்தீவனம் மூலம் 2/3 பகுதி என்ற அளவில் ஆடுகளுக்கு அளிக்க வேண்டும். நார்த்தீவனத்தின் பகுதி பயிறுவகையைச் சேர்ந்த பசும்தீவனமாகவும், பகுதி புற்கள்,இளம் பசும் இலைகளாகவும் அளிக்கலாம். எல்லா நேரங்களிலும் உப்பு கலந்த நீரை குட்டிகளுக்குத் தரலாம்.
 
* 11 மணி அளவில் ஆடுகளுக்கு அடர் தீவனம் கொடுக்க வேண்டும். பின் கடலைப் பிண்ணாக்கு ஊற வைத்த தண்ணீர் கொடுக்க வேண்டும். தோட்டங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரைக் குடிக்க விட்டால், நோய்கள் தொற்ற வாய்ப்பு இருக்கிறது. அதனால் தண்ணீர் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
 
* வெயில் அதிகமாக அடிக்கும் மதிய நேரத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடும் போது சோர்ந்து விடும். அந்த நேரங்களில் பண்ணையில் அடைத்து விட்டு வேலி மசால், முயல் மசால், கோ – 4 ஆகிய பசுந்தீவனங்களை நறுக்கி போட வேண்டும்.
தினமும் வேறு வேறு தீவனங்களை மாற்றி மாற்றிக் கொடுப்பது நல்லது. பகல் 3 மணிக்குப் பிறகு 5 மணி வரை மேய்ச்சலுக்கு அனுப்பலாம்.
 
( தீவன பராமரிப்பு )
* பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு முறை வெற்றிகரமாக இருக்க பசுந்தீவனம் தான் முக்கிய பங்களிக்கிறது. பெரும்பாலான விவசாயிகள் தீவனப்பற்றாக்குறையால் தான் வெள்ளாடு வளர்ப்பை சிறந்த முறையில் செய்ய இயலவில்லை. எனவே 100 ஆடுகளை இந்த முறையில் வளர்க்க குறைந்த பட்சம் 4 ஏக்கர் பசுந்தீவனத்திற்கு என ஒதுக்க வேண்டும். வாரம் 2 முறை தண்ணீர் பாய்ச்சக்கூடிய விவசாய நிலமாக இருத்தல் வேண்டும். தென்னையில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க அதன் இடைவெளிக்கு ஏற்ப 6 முதல் 8 ஏக்கர் நிலம் அவசியம்.
 
( பசுந்தீவன வகைகள் )
* கோ-3, கோ-4, வேலிமசால், குதிரை மசால் வகைகள், தீவன சோள புல்வகைகள், அகத்தி, சித்தகத்தி, சவுண்டல் ரக பசுந்தீவனங்களை வளர்க்கலாம். இதனை 50 சென்ட் நிலத்தில் ஒவ்வொன்றையும் வளர்க்கலாம்.
* பசுந்தீவனங்களை பண்ணை (Farm) அமைப்பதற்கு முன் பயிரிட்டு விட வேண்டும். ஏனென்றால் முதல் அறுவடை 60 முதல் 70 வரை நாட்கள் குறைந்த பட்சமும். 80 முதல் 90 வரை நாட்கள் அதிகபட்சமாகவும் தேவைப்படும். இந்த இடைவெளியில் கொட்டகை அமைத்தல் வேண்டும். இதற்கு பின்பே ஆடுகளை வாங்கி கொண்டு வர வேண்டும்.
 
( அடர் தீவனம் )
* வெள்ளாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு அதன் வயதிற்கேற்ப அடர்தீவனம் அளிக்க வேண்டும். 3 மாதம் முதல் 6 மாத குட்டிகளுக்கு 25 கிராம் முதல் 35 கிராம் தீவனமும், 6 மாதம் முதல் 12 மாதம் வரையில் 50 கிராம் முதல் 100 கிராம் வரையிலும், சினைப்பருவத்தில் 175 கிராம், ஈன்ற ஆடுகளுக்கு 200 முதல் 250 கிராம், கிடாக்களுக்கு 300 கிராம் என்ற அளவிலும் அளிக்க வேண்டும்.
* அடர்தீவனம் என்ற தீவனத்தின் கலவை 100kg மிற்கு வீதம் கீழ்கண்ட அளவில் இருக்க வேண்டும். மக்காச்சோளம் மற்றும் கம்பு 35kg, முதல் 40kg, ராகி மற்றும் இதர தானியங்கள் 10kg, கடலைப்புண்ணாக்கு 20kg, கோதுமை தவிடு மற்றும் அரிசி தவிடு 10kg, துவரம் பொட்டு மற்றும் பாசிப் பொட்டு 17kg, தாதுஉப்பு 2kg, சாதாரண உப்பு 1kg என்ற அளவில் 100kg அடர்தீவனத்தின் பகுதிகளாக இருக்க வேண்டும்.
 
( நன்மைகள் )
* வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு மூலம் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு. இனப்பெருக்கத்தில் குட்டிகளின் இறப்பு விகிதம் குறைவு.
 
( நோய் பராமரிப்பு )
* மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பருவத்துக்கும் போட வேண்டிய தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டு வர வேண்டும். நான்கு தடுப்பூசி மருத்துவ பராமரிப்பு - கால்நடை மருத்துவரின் (Veterinary Doctor) ஆலோசனைப்படி ஆண்டுக்கு 4 முறை தடுப்பூசிகள் (Vaccines) ஆடுகளுக்கு அளிக்க வேண்டும்.
 
* குறிப்பாக, மார்ச் ஏப்ரல் மாதங்களில் கால் வாய் நோய்க்கான தடுப்பூசி, ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பி பி ஆர் தடுப்பூசி, ஆகஸ்ட் மாதத்தில் கால் வாய் நோய் தடுப்பூசி, அக்டோபர் மாதத்தில் துள்ளுமாரி தடுப்பூசி ஆகியவற்றை போட வேண்டும். குடற்புழு மருந்துகளை பிறந்த 30 வது நாள், 2,3,4,6,9 வது மாதங்களில் கொடுக்க வேண்டும்.
 
* குறிப்பு
அனைத்து ஆடுகளுக்கும் காப்பீடு செய்யப்பட வேண்டும். மருத்துவ வசதி
உள்ளூரில் அல்லது அருகில் கால்நடை மருத்துவ வசதி இருக்க வேண்டும்.
 
via fb
Edited by அபராஜிதன்
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, அபராஜிதன் said:
முல்லைத்தீவில் பாரம்பரிய விதை வங்கி
🥜🌰🥔🥜🥜🌰🥜🥔🌰🥔🥔🥜🌰🥜🥜
இன்று மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான் எல்லா இடங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் எங்கள் பாரம்பரிய விதைகள் அழிவின் விளிம்புக்கே சென்றுள்ளன. பாரம்பரிய விதைகளை பாதுகாத்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் நேசன் தம்பதியினர் விதைகள் காப்பகமொன்றைத் தங்கள் பண்ணையில் ஆரம்பித்துள்ளனர்.
எமது பிரதேசங்களில் பல்வேறு வகையான மரக்கறி, மூலிகை இனங்களின் விதைகள் பாரம்பரியமாகவே இருந்து வருகின்றன. அவற்றை காலம்காலமாக எம் விவசாயிகள் பாதுகாத்து வந்துள்ளனர். இன்று பல பாரம்பரிய விதைகள் இல்லாமல் செல்லும் நிலைக்கு சென்றுள்ளன. இவற்றை பாதுகாத்து பரவச் செய்யும் நேசன் தம்பதிகளின் முயற்சியை வரவேற்போம்.
 
 
via fb

நல்ல பதிவு தொடருங்கள்

 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புடலங்காய் பயிரிடும் முறை.
**********

* பயன்கள்
புடலங்காய் கொடிவகையான காய்கறி வகையைச் சேர்ந்த ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். வீட்டுத் தோட்டங்களில் நாம் பயிரிலாம் தொங்கும் புடலங்காயின் சிறப்பு. 
* புடலங்காயில் உள்ள சத்துக்கள்.
உயர்நிலை ( புரதம். விட்டமின் ஏ. சுண்ணாம்புச் சத்து. கந்தகச் சத்து ) ஆகியவை. இது சற்று நீரோட்டமுள்ள காய் என்பதால், இது சூட்டு உடம்புக்கும் ஏற்றதாகும்
புடலங்காயில் நன்கு முற்றியதை உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள காயை பயன்படுத்த வேண்டும். புடலங்காயில் ( கொத்துப்புடல. நாய்ப்புடல. பன்றிப்புடல. பேய்ப்புடல. ) என பலவகை உள்ளது. பேய்புடல மிகவும் கசப்பானது. அதனால் இதனை சமையலுக்கு பயன்படுத்த மாட்டார்கள்.
* புடலங்காய் பயிரிடுவது எப்படி…?
ரகம் (கோ 1. கோ 2. பி.கே.எம். 1. எம்.டி.யூ. 1. பி.எல்.ஆர். எஸ்.ஜி.1. பி.எஸ்.எஸ். 694. மைக்கோ குட்டை .) ஆகிய ரகங்கள் உள்ளன.
( மண் )
****
புடலங்காய் ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இதன் சாகுபடிக்கு 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படும். இருமண் பாங்கான மண் வகைகள் குறிப்பாக மணற்சாரி வண்டல் மண் சாகுபடிக்கு ஏற்றது. மேலும் மித வெப்ப மண்டலப் பகுதிகளிலும்  பயிரிலாம்.
( பருவம் )
*****
ஜூன் ஜூலை மாதங்களும். டிசம்பர் ஜனவரி மாதங்களும் சாகுபடி செய்ய ஏற்ற மாதமாகும்.
( நிலம் தயாரித்தல் )
********
நிலத்தை நன்றாக 3 அல்லது 4 முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது 20 டன் மக்கிய எரு உரத்தை இட்டு 2m இடைவெளியில் 60Cm அகலத்தில் வாய்க்கால் எடுத்து நிலம் தயாரிக்க வேண்டும். அந்த வாய்க்காலில் 1.5 M இடைவெளியில் 45 Cm நீளம், ஆழம், அகலம் கொண்ட குழிகளை எடுத்து எரு உரத்துடன். மேல் மண் கலந்து நிரப்பி வைக்க வேண்டும்.
( விதை )
****
ஒரு ஏக்கருக்கு 1.5Kg முதல் 2Kg விதையளவு தேவைப்படும்.
( விதைத்தல்)
*****
ஒரு குழிக்கு 5 விதைகள் வீதம் இட வேண்டும். விதை நட்ட 8 முதல் 10 நாட்களில் முளைக்கத் தொடங்கிவிடும்.
( நீர் பாய்ச்சல் ) 
*******
விதை விதைத்தவுடன் குடம் அல்லது பூவாளி வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். நன்கு வளர்ந்தவுடன் வாரம் ஒரு முறை வாய்க்கால் மூலமாக தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும்.
( உரம் )
****
ஒரு ஏக்கருக்கு அடி உரமாக 20Kg முதல் 30Kg வரை தழைச்சத்து, 30 முதல் 50 கிலோ மணிச்சத்து. 30Kg முதல் 40 Kg சாம்பல் சத்தை இட வேண்டும். மேல் உரமாக 20Kg முதல் 30Kg தழைச்சத்தை பூ பூக்கும் பருவத்தில் இட வேண்டும்.
( வளர்ச்சின் ஊக்கம் )
********
இரண்டு இலைப் பருவத்தில் எத்ரல் 250 பி.பி.எம் என்ற வளர்ச்சி நாசினியை தெளித்தால் வேண்டும். அப்போதுதான் பெண் பூக்கள் அதிகளவில் உற்பத்தியாகும். இதே வளர்ச்சி நாசினியை ஒரு வாரத்துக்கு 3 முறை தெளிக்க வேண்டும். செடிகளை 18 லிருந்து 20 நாட்களுக்குள் களை செய்து 2 நாள் பூமியை உலர வைக்க வேண்டும். ஜீவாமிர்தம் தயார் செய்து அதனுடன் 20Kg புண்ணாக்கு நீர் கலந்து செடிகளுக்கு ஊற்ற வேண்டும். 70வது நாளில் குழிக்குள் மக்கிய எரு உரம் 1Kg போட வேண்டும். இதனால் மண்ணில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
( பாதுகாப்பு. களை முறைகள் )
***********
செடி நன்கு வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். ஒரு குழியில் நன்கு வளர்ந்த 3 செடிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற நாற்றுகளை பிடுங்கி விட வேண்டும். புடலைக் கொடி வளர்ந்து படருவதற்கு இரும்புக் கம்பிகளை வைத்து பந்தல் போடுவது அவசியமாகும். விதை முளைத்து கொடி வரும்போது, கொடியை மூங்கில் குச்சியோ அல்லது மற்ற குச்சிகளை வைத்தோ ஊன்று கொடுத்து பந்தலில் படர விட வேண்டும்.
( பயிர் பாதுகாப்பு )
********
15 முதல் 20 நாட்கள் இடைவெளியில் பஞ்சகாவ்யா தெளிக்க வேண்டும். வேப்ப எண்ணெய் புங்க எண்ணெய் உடன் சோப்பு கரைசல் கலந்து 20 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். அதிக வெப்பமும், குளிர் காற்றும் மாறி மாறி வந்தால் புளித்த மோரும், நடுப்பதம் உள்ள இளநீர் கலந்து தெளிக்க வேண்டும். விளக்கு பொறி, இனக்கவர்ச்சியினால் தாய் பூச்சிகள் அழிந்துவிடும். ( KNOX Bio மருந்து) 60 நாள் வரை 8-10 ml 10 L தண்ணீரில் கலந்து 12 முதல் 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
( பூசணி வன்டுகளின் தாக்குதல் )
************
இதைக் கட்டுப்படுத்த 2g செவின் அல்லது கார்பரில் மருந்தை 1L தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
( பழ ஈ தாக்குதல் )
********
பழ ஈயின் தாக்குதலைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 1 சதவீதம் தெளிக்க வேண்டும்.
( சாம்பல் நோய் )
****:**
சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த 1L நீருக்கு 1ml டினோகாப். அல்லது 1g கார்பன்டாசிம் மருந்துகளில் ஒன்றை தெளிக்கலாம்.
( அடிச்சாம்பல் நோய் )
********
அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த 1L நீருக்கு 2g மாங்கோசெப். அல்லது குளோரோதலானில் மருந்துகளில் ஒன்றை 10 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
( அறுவடை )
******
விதைத்த நாள் முதல் 80 நாட்கள் கழித்து. முதல் அறுவடை தொடங்கும். பின்னர் ஒரு வார இடை வெளியில் 6 முதல் 8 அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 டன் பெறலாம்.
* மேலும் பெடலங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் சிலவற்றை பார்க்கலாம்.
1. ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. காமத்தன்மையை பெருக்கும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு.
2.தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி. புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், தேகம் பருமன் அடையும்.
3. புடலங்காய் அஜீரண தொல்லையை போக்குவதோடு, உணவை எளிதில் சீரணமாக்கி நல்ல பசியை உண்டாக்கும்.
4. குடல் புண்ணை ஆற்றும் சக்தி இதற்கு உண்டு. வயிற்று புண் தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால். மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்.
5. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால். மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையதாக இருக்கிறது.
6. மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது.
7. நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
8. பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளைப்படுதலையும். கருப்பைக் கோளாறையும் குணப்படுத்தும். கண்பார்வையை அதிகரிக்க செய்யும்.
9. இதில் அதிகம் நீர்ச்சத்து இருப்பதனால். உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை. சிறுநீர் மூலம் வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு.
10. பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களையும் போக்கும். இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள. தேவையற்ற உப்புநீரை வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும் தன்மை கொண்டது. உப்பு நீரை வெளியேற்றி வாதம் பித்தம் போக்கும் புடலங்காய்.
* குறிப்பு
புடலங்காய் இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு என்பதால், கிடைக்கும் போதெல்லாம் வாங்கி சாப்பிடுவது நல்லது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பீட்ரூட்_பயிரிடும்_முறை  
🍀🍁🍃🍂🌳🍀🍁🍃🍂🌳🍀🍁🍃🍂🌳
பீட்ரூட்கிழங்குகள் ஐரோப்பியர்களால் பெரிதும் உண்ணப்பட்டு வந்தது.
முதலில் இதன் இலைகளை மட்டும் சமைத்து சாப்பிட்டனர். அப்போது பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் பீட்ரூட் கிழங்கை தலைவலிக்கும்இ பல்வலிக்கும் மருந்தாகப் பயன்படுத்தினார்கள்.
நியூசிலாந்தில் வேரை மட்டும் சாப்பிட்டார்கள். 
200 ஆண்டுகள் கழித்துத்தான் இது பிரபலமாகியது.
பீட்ரூட்டின் விசேஷம் அதன் இனிப்பு சுவைதான். மற்ற காய்கறிகளை விட அதிக சர்க்கரை இதில் உள்ளது.
கரும்பை விட பீட்ரூட் கிழங்கில் தான் அதிகளவில் சீனி உற்பத்தி செய்யப்படுகின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.
குளிர்ந்த மிதமான தட்பவெப்பமுடைய பிரதேசங்கள் பீட்ரூட் பயிரிடுவதற்கு ஏற்றது.
அனைத்தும் மாதங்களிலும் பீட்ரூட்டை சுழற்சி முறையில் தொடர்ச்சியாக பயிரிடுகின்றனர் இருப்பினும்
ஜீலை – ஆகஸ்ட் மாதங்கள் பீட்ரூட் நடுகைக்கு ஏற்றவையாகும்.
கற்கள் இல்லாத செம்மண்இ கரிசல் மண்ணில் வளரும் தன்மையுடையது.
பீட்ரூட் கிழங்கின் வடிவம் சிதறாமல் இருக்க நிலத்தினை 15 - 20 செ.மீ ஆழத்திற்கு நான்கைந்து முறை உழுதுவிட வேண்டும். நில மேற்பரப்பில் கட்டிகள் இல்லாதபடி கவனித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு. நன்கு மக்கிய கோழி உரம் 3 டன் வரை இட்டு நிலத்துடன் கலக்கும்படி உழுதுவிட வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 2.5 கிலோ விதைகள் தேவைப்படும்.
நிலத்தில் 1 - 1.5 அடி இடைவெளியில் பார் பாத்தி அமைத்து பாத்தியின் இருபுறமும் 4 அங்குல இடைவெளியில் விதையினை நட வேண்டும். 
சாதாரண மாதங்களில் ஒரு விதையே போதுமானது. ஆனால் கடும் கோடையில் விதை பழுதில்லாமல் முளைக்க இரண்டு விதைகள் நடவேண்டும். 
பொதுவாக பீட்ரூட் பயிரில் விதை முளைப்பு பிரச்னைகள் ஏதும் கிடையாது.
விதை நட்ட பின் முதல் 25 நாட்களுக்குஇ மூன்று நாட்களுக்கு ஒரு முறை நீர் ஊற்ற வேண்டும். பிறகு மண்ணின் தன்மைக்கேற்ப நீர் ஊற்ற வேண்டும்.
விதை நட்ட 20-ம் நாள் களை எடுக்க வேண்டும். களை எடுக்கும் போது இரண்டு செடிகளில். வளமான செடி ஒன்றைவிட்டு ஏனைய செடியை பிடுங்கி எறிந்து விட வேண்டும்.
வண்டுகள் மற்றும் இலைச்சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
இயற்கை முறையில் கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால் அக்கினி அஸ்திரஇ கற்பூரகரைசல்இ போன்ற இயற்கை கரைசலை பயன்படுத்தலாம்.
நாட்டிய 60 நாட்களில் கிழங்குகள் அறுவடைக்குத் தயாராகிவிடும். கிழங்குகளில் வட்டமான வெண்மை நிறக்கோடுகள் முழுவதும் பரவுவதற்கு முன்பாக அறுவடை செய்யவேண்டும்.
ஏக்கருக்கு 7 - 10 டன்கள் வரை விளைச்சல்
கிடைக்கும்.
மேலும் உங்களுக்கு தேவையான வேறு கட்டுரையின் தலைப்பினை அல்லது உங்கள் அபிப்பிராயத்தை இப்பதிவில் கமெண்டில் பதிவிடுங்கள்
அதற்கேற்றாற்போல் கட்டுரைகளை நாங்களும் பதிவிடுவோம்.
மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.


FB -விவசாய_தகவல்கள் 
Ph: 0772984757

Edited by அபராஜிதன்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
வெள்ளரிக்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள்
🥒🥒🥒🥒🥒🥒🥒🥒🥒🥒🥒🥒🥒🥒🥒🥒
வெள்ளரிக்காய் ஒரு கொடிவகை தாவர வகைகளில் ஒன்று.
வெள்ளரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.
இது உடலுக்கு குளிர்ச்சியை தருவதால் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு காயாகும்.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
கோ.1, ஜப்பானி லாங் கிரின், ஸ்ரோயிட் எய்ட், பாயின்செட்டி ஆகிய இரகங்கள் உள்ளன.
பருவம்
கோடைக்காலத்தில், பிப்ரவரி – மார்ச் மாதத்திலும் மழைக்காலத்தில் ஜீலை மாதத்திலும் பயிர் செய்யலாம்.
மண்
வெள்ளரிக்காயை களிமண்ணிலிருந்து மணல் கலந்த வண்டல் மண் வரை அனைத்து வகையான நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். மிதமான வெப்பமும், காற்றில் அதிக ஈரப்பதமும் இதன் வளர்ச்சிக்கு ஏற்றது. சிறந்த மகசூலுக்கு கார அமிலத்தன்மை 6.5-7.5 இருக்க வேண்டும்.
நிலம் தயாரித்தல்
விதைகளை நடவு செய்வதற்கு, நிலத்தை குறுக்கு – நெடுக்காக நான்கு முதல் ஐந்து உழவு செய்ய வேண்டும். பின்பு, எட்டுக்கு எட்டு அடி இடைவெளி கொடுத்து, நீளம், அகலம், ஆழம் அனைத்தும் ஒரு அடி இருக்கும் வகையில் குழி எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 550 முதல் 600 குழிகள் வரை கிடைக்கும். ஒவ்வொரு குழிக்கும் 2 கிலோ எருவைப் போட்டு, மேல்மண் கொண்டு மூடிவிட வேண்டும்.
விதைநேர்த்தி
வடித்தக் கஞ்சியில் 100 கிராம் அசோஸ்பைரில்லம், 100 கிராம் டிரைக்கோடர்மா விரிடி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். விதைகளை இந்தக் கரைசலில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
விதைத்தல்
விதைநேர்த்தி செய்த விதைகளை அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி, குழிக்கு ஜந்து விதைகள் வீதம் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைகள் விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் விடவேண்டும். நன்கு முளைத்தவுடன் ஒரு தண்ணீரும், அதன் பின் வாரம் ஒரு முறையும் வாய்க்கால்களின் வழியாக தண்ணீர் பாய்ச்சவேண்டும். கூடவே, ஏக்கருக்கு 10 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலையும் தண்ணீரோடு கலந்துவிட்டால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
உரங்கள்
விதைத்த 30 ஆம் நாளில் செடிகளை கொத்திவிட்டு மேல் உரமாக 50 கிராம் யூரியாவை ஒவ்வொரு குழிக்கும் இட்டு நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
அல்லது 30 – ம் நாளில் இருந்து தொடர்ந்து பத்து நாள் இடைவெளியில் பத்து லிட்டர் டேங்குக்கு அரை லிட்டர் பஞ்சகாவ்யாவை கலந்து தெளித்தால், செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
வளர்ச்சி ஊக்கி
செடிகளில் பெண் பூக்களின் எண்ணிக்கையை அதிகரித்து விளைச்சலை அதிகரிக்க எத்ரல் என்ற வளர்ச்சி ஊக்கியை 10 லிட்டர் நீரில் 2.5 மில்லி என்ற அளவில் கலந்து விதைத்த 15ம் நாளிலிருந்து வாரம் ஒரு முறை நான்கு முறை தெளிக்கவேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
விதைத்த 20-25 ஆம் நாளும், பின்னர் ஒரு மாத இடைவெளியிலும் களை எடுக்கவேண்டும்.
பயிர் பாதுகாப்பு
பழ ஈக்கள் மற்றும் வண்டுகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த மாலத்தியான் மருந்தை ஒரு லிட்டர் நீரில் இரண்டு மில்லி என்ற அளவில் தெளிக்கவேண்டும்.
சாம்பல் நோய்
இதை கட்டுப்படுத்த கார்பென்டாசிம் 0.1 சதம் என்ற அளவில் தெளிக்கவேண்டும். டிடிடீ, பிஎச்சி, தாமிரம் மற்றும் கந்தகப்பவுடர் போன்ற மருந்துகளை உபயோகப்படுத்தக்கூடாது.
அறுவடை
விதைத்த 45 நாட்கள் கழித்து காய்களை அறுவடை செய்யலாம். மொத்தம் 8 முதல் 10 முறை அறுவடை செய்யலாம்.
மகசூல்
எக்டருக்கு 90 நாட்களில் 8 முதல் 10 டன்கள் வரை பிஞ்சுக் காய்கள் கிடைக்கும்.
பயன்கள்
95 சதவீத நீர் சத்துடன், சாதாரண நீரை விட சத்து மிகுந்த நீரைக் கொண்டிருப்பதால் உடல் வெப்ப நிலையையும், நீர்ச்சத்தையும் சீராகப் பராமரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
வெள்ளரியில் உள்ள வைட்டமின்களும், மாங்கனீசு, பொட்டாசியம், சிலிக்கான் ஆகிய தாதுக்கள், தோல் பாதுகாப்புக்கு உதவுகின்றன.
வெள்ளரிச் சாற்றில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து ஆகியன ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன.
வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், பல், ஈறுகளைப் பாதுகாக்கவும் வெள்ளரி உதவுகிறது. சீரண மண்டலத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், குடல்புண் ஆகியவற்றைக் குணமாக்கி ஜீரணத்திற்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது.
வெள்ளரி விதைகள் நாடாப்புழுக்களை வெளியேற்ற உதவுகிறது.
இதில் உள்ள சிலிகான், மூட்டுத் தசைகளுக்கு வலு அளிப்பதாலும், வைட்டமின்கள் ஏ, பி6, சி, போலேட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியன யூரிக் அமில அளவைக் குறைப்பதாலும், மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.
இன்சுலினைச் சுரக்கும் கணைய செல்களுக்கு தேவைப்படும் வளர்ச்சி ஊக்கி (ஹார்மோன்) வெள்ளரியில் உள்ளது. இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் வெள்ளரி இனியது.
 
FB
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
வளம் தரும் வாத்து தொழில்
*******************************
* வாத்து வளர்ப்பில் கிராமப்புற விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மொத்த கோழியினங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் வாத்துகள் உள்ளன. மொத்த முட்டை உற்பத்தியில் 6 முதல் 7 சதவீதம் வரை வாத்துகள் பங்களிக்கின்றன. தற்பொழுது பரவலாக நாட்டு வகை வாத்துகள் வளர்க்கப்படுகின்றன. இவை ஆண்டுக்கு 100 முதல் 150 முட்டைகள் வரை மட்டுமே உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
* அறுவடை நிலங்களில் மேய்த்து வளர்ப்பதால் போதுமான தீவனம் கிடைக்காததும் குறைந்த முட்டை உற்பத்திக்கு காரணம். இது தவிர சில சமயங்களில் வாத்துகளைத் தாக்கக்கூடிய நோய்களுக்கு தடுப்பூசி போடவில்லை என்றாலும் முட்டை உற்பத்தி குறைவதோடு வாத்துகள் இறப்பும் நேரிடும். ஆகவே, இத்தகைய சூழலில் முறையாக வாத்து வளர்ப்பை அறிந்து, அதை கடைபிடிப்பது அவசியம்.
* வாத்து வளர்ப்பின் நன்மைகள்
கோழி முட்டை எடையுடன் ஒப்பிடும்போது வாத்து முட்டை கூடுதல் எடை உடையது.
மூன்று ஆண்டுகள் வரை முட்டையிடக்கூடுயது. குறைந்த அளவு தீவனம் இருந்தால் கூட வாத்து வளர்க்க இயலும். வாத்துகளை தாக்கும் நோய்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
வாத்து வளர்க்க தேவையான தொடர்செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் கோழியினங்களை ஒப்பிடும் போது மிகவும் குறைவு.
* வாத்து இனங்கள் ( காக்கி, கேம்பல், இண்டியன், ரன்னர். ) இந்த வகையான வாத்துகள். ஒரு சில பகுதிகளில் பரவலாக முட்டைக்காக வளர்க்கப்படுகின்றன. இவை ஆண்டுக்கு 250 முதல் 300 முட்டைகள் வரை இடும். இது தவிர ( செர்ரி,வெல்லி ) என்னும் வீரிய கலப்பின வாத்துகள் உள்ளன. இவற்றை வளர்க்க மேய்ச்சல் நிலம் மட்டும் போதாது. இவ்வகையான வாத்துகளுக்கு அடர் தீவனமும், போதிய பாதுகாப்பான பண்ணை வீடுகளும் அவசியம். இவ்வகை வாத்துகள் 20 முதல் 22 வாரத்தில் முட்டையிட துவங்கும்.
* இனப்பெருக்கத்திற்காக வளர்க்கும்போது 8 பெண் வாத்திற்கு 1 ஆண் வாத்து சேர்க்கப்பட வேண்டும். ( மஸ்கவி, வெள்ளை பெக்கின்,ரூவன் ) இவை இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை. கொட்டில் முறையில் வாத்து வளர்ப்பு தேவையான இடவசதி.
3 வாரத்திற்கு 0.85 சதுர அடி
15 வாரத்திற்கு 1.75 சதுர அடி
25 வாரத்திற்கு 3.00 சதுர அடி
30 வாரத்திற்கு மேல் 4.00 சதுர அடி
 
 
SOURCE- FB 
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
 
 
 
முருங்கை வறட்சியை தாங்கும் பயிராகும்.
ஆகையால் அதிகளவான நீர் தேவை ஏற்படாது.
செலவில்லாமல் முற்றுமுழுதாக இயற்கையான முறையில் உற்பத்தி செய்து
அதிக லாபம் ஈட்ட முடியும்.
பல வீடுகளில் தென்னை மற்றும் வாழைக்கு அடுத்தபடியாக முருங்கை மரம் உள்ளது இருப்பினும் தமது வீட்டுத் தேவைக்காக மட்டுமே பயன் படுத்துகின்றார்கள். வியாபார நோக்கத்திற்காக சந்தைப்படுத்தும் நண்பர்கள் மிகக் குறைவு.
அதிக லாபம் ஈட்டும் தொழில்களில் முருங்கை பயிற்செய்கையும் ஒன்று என்பதனை நம் மக்கள் புரிந்து கொள்வதில்லை.
ஏக்கருக்கு இரண்டு டன் தொழுவுரம் இட்டு இரு முறை உழவு செய்ய வேண்டும.
ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை தேவைப்படும்.
விதை நடவு செய்வதற்கு முன்பு தண்ணீரில் ஊறவைத்து பிறகு நடவு செய்தால் முளைப்புத்திறன் நன்றாக இருக்கும்.
முருங்கை கன்றுகளை யாரிடமாவது வாங்கி நட விரும்பினால்
பதியம் வைத்து குறைந்தது ஒரு அடி வரை வளர்ச்சி அடைந்த கன்றுகளை வாங்கி நடவேண்டும்.
கன்றுகளை நடும் பொழுது 1×1×1.5 குழி எடுத்து ஒவ்வொரு குழிக்குழ் ஒரு கிலோ எருவுடன் 50g சாம்பல் கலந்து இட்டு 20 X 20 அடி இடைவெளியில் முருங்கை கன்றுகளை நடவு செய்து சொட்டுநீர் பாசனமுறையை பயன்படுத்தலாம்.
ஏக்கருக்கு 100 கன்றுகள் வீதம் நடவு செய்யலாம்
கன்றுகளின் வளர்ச்சியை அதிகரிக்க அமிர்த கரைசலோடு வேப்பெண்ணெய் கலந்து பயன்படுத்தலாம்
கன்றுகள் வளர்ந்து வரும்போது குறித்து நுனி பகுதியை கிள்ளி விட வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் கந்துகள் நன்றாக படர்ந்து அதிக பக்கக்கந்துகளுடன் இருக்கும்.
உயரமாகவும் வளராது.
சொட்டு நீர் பாசனம் செய்திருந்தாலும் அடிக்கடி நீர் பாய்ச்ச வேண்டிய அவசியமில்லை.
6 மாதத்திலேயே காய் வந்துவிடும். தொடர்ந்து 5 வருடங்கள் வரை காய்வரும்.
பூச்சி, புழு தென்பட்டால் இயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சகாவியா மற்றும் கற்பூர கரைசலை பயன்படுத்தலாம்.
முருங்கை பூ பூக்கும் சமையத்தில் தண்ணீர் பாய்ச்சுவதை குறைக்க வேண்டும்.
காலை வேளையில் எந்தவொரு வளர்ச்சி ஊக்கியையும் தெளிக்கக் கூடாது அவ்வாறு தெளித்தால் அயல்மகரந்த சேர்க்கை பாதிக்கப்பட்டு விளைச்சல் குறையும்.
முருங்கை பூ பூக்கும் சமையத்தில் ஒரு லிட்டர் தயிரையும் ஒரு லிட்டர் தேங்காய் பாலையும் கலந்து 7 நாட்கள் நிழலான இடத்தில் வைத்திருந்து. எட்டாவது நாள் வடிகட்டி எடுத்து. 14 லிட்டர் தண்ணீரை இவற்றுடன் கலந்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் பூக்கள் உதிர்வது குறைந்து அதிகமான பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்.
முதல் அறுவடையில் விளைச்சல் சற்று மந்தமாக இருக்கும்.
இரண்டாவது அறுவடையில் இருந்து 5 - 7 டன் வரை விளைச்சல் இருக்கும்.
முருங்கை நட்டவர் வெறுங்கையோடு போவார் என்பது பழமொழி.
இதன் அர்த்தம் ஒரு சிலருக்கு புரிவதில்லை.
(முருங்கை நட்டவர் வயது முதிர்ந்த காலத்தில் பொல்லூன்றாமல் தனியாக நடந்து செல்வார் என்பதே நம் முன்னோர்களின் கருத்தாகும்)
🌹முருங்கை விதையின் அற்புத நன்மைகள்🌹
1. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது
2. நீரிழிவு காலத்தில் உதவுகிறது
3. எடை குறைப்பில் உதவுகிறது
4. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
5. தலை முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
இந்த நன்மைகள் குறித்து விளக்கமாகக் காண்போம்.
1.உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க
இன்றைய நாட்களில் பலரும் பாதிக்கப்படக்கூடிய ஒரு கோளாறுகளில் ஒன்று, உயர் இரத்த அழுத்தம். வாழ்வின் ஒரு கட்டத்தில் எல்லா நபரும் இந்த உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளை அனுபவிக்க நேரலாம். உயர் இரத்த அழுத்தம் ஏற்பட பல்வேறு காரணிகள் உண்டு, அவற்றுள் சீரற்ற உணவுப் பழக்கம், மனஅழுத்தம், ஒழுங்கற்ற உடற்பயிற்சி, பாரம்பரிய பிரச்சனை போன்றவை சில. இருப்பினும், உயர் இரத்த அழுத்தத்தின் வெளிப்பாடுகள் மிகவும் அபாயகரமானவை, சில நேரம் இறப்பைக் குறி வைக்கும் நோய்களையும் ஏற்படுத்துகிறது.
2.இதய நோய்
இதய நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உயர் இரத்த அழுத்த நிலை பரிந்துரைக்கப்படுகிறது என்று சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஆகவே சரியான தீர்வுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து எளிதாக விடுபட முடியும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மைக் கொண்ட முருங்கை விதைகள் இந்த பிரச்சனைக்கு சிறந்த ஒரு தீர்வாக அறியப்படுகிறது. இதனால் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.
3.நீரிழிவு காலத்தில்
உயர் இரத்த அழுத்தம் போலவே பலபேரை பாதிக்கும் மற்றொரு உடல் நிலை கோளாறு, நீரிழிவு. உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகையே அச்சுறுத்தும் ஒரு மோசமான நோயாக இந்த நோய் வளர்ச்சி கண்டு வருகிறது. நீரிழிவு நோய்க்கு பல்வேறு செயற்கை மருந்துகள் கண்டுபிடிக்கபட்டாலும், உடலின் சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில் வைக்க உதவும் சில இயற்கை தீர்வுகள் அவசியம் தேவை.
இரத்தத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் ஒரு பொருளைத் தேர்ந்தெடுப்பதால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க முடியும். முருங்கை விதைகள் இந்த தேவையை பூர்த்தி செய்ய உதவுகின்றன. இவற்றில் மிக அதிக அளவு ஜின்க் இருப்பதால் இன்சுலின் ஹார்மோன் இரத்தத்தில் சுரக்க இந்த விதைகள் சிறந்த முறையில் உதவுகின்றன.
4.எடை குறைப்பு
உடல் எடை குறைப்பில் முருங்கை விதைகள் நல்ல பலன் அளிப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எனவே, தங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், முருங்கை விதைகளை தவறாமல் எடுத்துக் கொள்ளலாம். இதற்குக் காரணம், இந்த விதைகளில் இருக்கும் நார்ச்சத்து சாப்பிடும் போது ஒரு வித திருப்தியைத் தருவதால் மீண்டும் பசி எடுக்கும் உணர்வு கட்டுப்படுகிறது, மேலும் செரிமானத்திற்கும் இது சிறந்த முறையில் உதவுகிறது. கூடுதலாக, முருங்கை விதைகளில் காணப்படும் ஓலிக் அமிலம், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை எரிக்க உதவுகின்றன. இதய நோய் தாக்கத்திற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது
5.நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
இறப்பைக் குறி வைக்கும் பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடும் அளவிற்கு மனிதனின் நோயெதிர்ப்பு மண்டலம் சக்தி மிகுந்து, சிறந்த செயல்பாட்டுடன் இருப்பது அவசியம். ஒருவேளை ஒரு நபரின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருந்தால், எளிதில் அவன் உடல் கிருமிகளின் தாக்கத்திற்கு பலியாக நேரலாம். முருங்கை விதைகளில் அதிக அளவு வைட்டமின் சி சத்து உள்ளது. உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கூறுகளுடன் போராடி அவற்றை வெளியில் தள்ளும் குணம், வைடமின் சி சத்துக்கு உண்டு
6.தலைமுடி ஆரோக்கியம்
முருங்கை விதைகளில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் பண்புகள், தலை முடியை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. மேலும் பல்வேறு நன்மைகளை இவை கூந்தல் வளர்ச்சிக்கு அளிக்கின்றன.
 
FB
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
வெண்டி
இலங்கையின் ஈரமான இடைநிலை மற்றும் உலர் மண்டலத்தில் வளர்க்கப்படும் காய்கறிகளில் வெண்டியும் ஒன்றாகும். தற்போது ஹம்பாந்தோட்டாஇ குருநாகலாஇ ரத்னபுரா மற்றும் மாதலே மாவட்டங்களில் வெண்டி வெற்றிகரமாக பயிரிடப்படுகிறது. மேலும் இது அனுராதபுரம்இ புட்டலம்இ மாதாராஇ பதுல்லா மற்றும் மொனராகலா போன்ற மாவட்டங்களில் விரிவடைந்து வருகிறது.
வெண்டி செய்கை மொத்த பரப்பளவு 7066 ஹெக்டேர் சராசரி விளைச்சல் 5.3 மெட்ரிக் டன் இதனால் இலங்கையில் மொத்த வருடாந்திர வெண்டி உற்பத்தி 37330 மெட் டன் ஆகும்
பரிந்துரைக்கப்பட்ட வகைகள்
MI-5
MI-7
Haritha
காலநிலை தேவைகள்
உலர், இடைநிலை மற்றும் ஈரமான மண்டலத்தில் உள்ள அனைத்து காலநிலை பகுதிகளிலும் வெண்டிக்கு ஏற்றது. சுமார் 1300 மீ உயரத்திற்கு அதிகமான பகுதிகளில் நன்கு வளரும். ஈரமான மண்டலத்தில் காலபோக மழை தாவர வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் விளைச்சலை மோசமாக பாதிக்கும்.
மண்
நடுநிலை PH கொண்ட நன்கு வடிகட்டிய மண் மிகவும் பொருத்தமானது.
நிலம் தயாரித்தல்
a. களைகளின் வயலை சுத்தம் செய்யுங்கள்
b. நடவு துளைகளை 30 x 30 செ.மீ செய்து, நான்கு துளைகளுக்கு ஒரு கூடை என்ற விகிதத்தில் சேதன உரத்தை சேர்க்கவும்
c. நீர்ப்பாசன வசதிகள் இருந்தால் உயர் தாழ் பாத்தி முறையைப் பயன்படுத்துங்கள்
விதை வீதம்- எக்டருக்கு 4.5 கிலோ விதை
நடவு நேரம்
வெண்டிபொதுவாக செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து அக்டோபர் தொடக்கத்தில் (maha season), ஏப்ரல் முதல் நடப்படுகிறது.(yala) பலத்த மழையின் போது நடவு செய்வதைத் தவிர்க்கவும்.
செலவு
உள்ளீடுகளின் செலவு
• நில தயாரிப் பு 5000.00
• விதை 4.5 கிலோ 5000.00
• சேதன பொருட்கள் 5000.00
• உரம் 6000.00
• நீர்ப்பாசன எரிபொருள் 8000.00
மொத்தம் 29,000.00
ஒரு தொழிலாளர் நாட்கள் ரூ .200.00
உழைப்பு செலவு 150 x 200=30,000.00
மொத்தம் 59,000.00
எக்டருக்கு 10 டன் மகசூல்
ஒரு கிலோவிற்கு கேட் விலை- ரூ 10.00
மொத்த வருமானம் 10,000 x 10- ரூ .100.00
நிகர லாபம்
- 100,000 - 59,000 = ரூ 41,000
பயிர் மேலாண்மை
உர பயன்பாடு
அடிக்கட்டுப்பசளை -பின்வரும் உருவாக்கம் மற்றும் விகிதங்களைப் பயன்படுத்துங்கள்
UREA - எக்டருக்கு 150 கிலோ
TDP - எக்டருக்கு 200 கிலோ
MOP - எக்டருக்கு 75 கிலோ
நடவு செய்த 4 வாரங்களுக்குப் பிறகு
UREA-150 கிலோ / எக்டர்
MOP எக்டருக்கு 75 கிலோ
நீர்ப்பாசனம்
முளைப்பு நிறைவடையும் வரை 3-4 நாட்கள் இடைவெளியில் தினமும்
களைக் கட்டுப்பாடு
களை தோன்றிய 2 மற்றும் 4 வாரங்கள் மற்றும் ஆரம்ப பூக்கும் போதும். நடவு செய்த 4 வாரங்களுக்குப் பிறகும் களையெடுத்தல் வேண்டும். இதன் போது உரப்பாவணையை உறுதி செய்து கொள்ள முடியும்
 
Document by
Ravinathan Rajeevan
Bsc in Agriculture
ravirajeevan@gmail.com
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை.
********************************************
* பெரும்பாலும் வடமேல் வட மத்தியமாகாண பிரதேசங்களிலும் பயிரிடப்படுகின்றது. எனினும் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு பிரதேசங்களில் இப்பொழுது பயிரிடப்படுகின்றது. வடமாகாணத்தில் பெரும்பாலும் பயிரடப்படும் இனங்கள்.
( றெட்லாசோடா அனோமா சசி பிறாடா )
* உருளைக்கிழங்கு பயிரானது பயிரிடப்படும் காலங்கள். ( ஜனவரி – பிப்ரவரி, மார்ச் – ஏப்ரல், ஆகஸ்ட் – செப்டம்பர் ) ஆகிய பருவங்களில் பயிர் செய்யலாம். இந்தப் பயிருக்கு மணல் கலந்த வண்டல் மண் சிறந்ததாகும். ஒரு ஏக்கருக்கு 1500 Kg வரை விதைகிழங்கு தேவைப்படும்.
( விதை நேர்த்தி )
* விதைக் கிழங்குகளை நோய் தாக்காத நிலங்களில் இருந்து தேர்வு செய்ய வேண்டும். சிறியத் துண்டுகளாக வெட்டிய விதை கிழங்கை உபயோகப்படுத்தும்போது. அதை 10 - 15 செல்சியஸ் வெப்ப நிலையிலும், 85 முதல் 90 சதவீத ஈரப்பதத்திலும், 4 முதல் 6 நாள்கள் வரை வைக்க வேண்டும்.
* இவ்வாறு வைப்பதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர் கிருமிகள் கிழங்கில் நுழைவதைத் தடுக்கலாம். விதை முளைப்பை அதிகப்படுத்த 25 பி.பி.எம் ஜிபராலிக் அமிலத்தில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் நிழலில் உலர்த்த வேண்டும்.
* இவற்றை 10 நாள்கள் ஒரு சாக்கு பேக்கில் நிரப்பி காற்றோட்டமுள்ள இருட்டு அறையில் வைக்க வேண்டும். 4 அடி அகலமுள்ள உயரப் பாத்தியில் 30 செ.மீ. இடைவெளியில் 4 வரிசை வருமாறு நட வேண்டும்.
( நீர் வழி உரமிடல் )
* சொட்டு நீர்ப் பாசன முறையில் தினமும் ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
தேவையான அளவு நீரில் கரையும் உரத்தை சொட்டு நீர்ப் பாசனத்துடன் இணைக்கப்பட்டுள்ள உரத் தொட்டியின் மூலம் இட வேண்டு.
* நடவு செய்த 25 நாள்களுக்குப் பிறகு விதைக் கிழங்கின் இடைக்கணுப் பகுதியில் இருந்து தண்டு முளைத்து மண்ணை நோக்கி வளரும். பின்னர் அதன் நுனியில் இருந்து கிழங்கு உருவாகத் தொடங்கும் இந்த நிலையில் மண் அணைத்தல் மிகவும் அவசியம்.
( அறுவடை )
* அறுவடை செய்ய கிழங்குகளைத் தோண்டி எடுத்து சுத்தம் செய்து பேக்கில் சேகரிக்கலாம். விதைக்காக கிழங்குகளை அறுவடைக்கு 15-இல் இருந்து 20 நாள்களுக்கு முன்பிருந்து நீர்ப் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும். இதன் மூலம் கிழங்குகளின் தோல் தடிமனாகி அதன் சேமிப்புக் காலத்தை அதிகப்படுத்தும்.
மேலும் வைரஸ் நோய்களை மற்றச் செடிகளுக்கு பரப்பும் பூச்சிகளின் பெருக்கத்தைத் தடுக்கிறது.
இதை சிறந்த முறையில் விதைக்காகப் பயன்படுத்தலாம்.
* அறுவடை செய்த கிழங்குகளை ஓரிடத்தில் குவியலாக வைப்பதன் மூலம் அவற்றை சுத்தம் செய்வது எளிதாகிறது.
பின்னர் பெரிய, சிறிய, நடுத்தர அளவுள்ள கிழங்குகளைப் பிரித்தெடுக்க வேண்டும். நோய், பூச்சித் தாக்கிய கிழங்குகளை தனியே எடுத்துவிட வேண்டும்.
இந்த முறையில் விவசாயிகள் உருளைக் கிழங்கைப் பயிரிட்டால் அதிக விளச்சலைப்பெறமுடியும்.
 
 
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கால்நடைகள் வாழிடம் அமைக்கும் அளவுத்திட்டங்கள்...
++++++++++++++++++++++++++++++

கோழி வளர்ப்பு:கோழி

வகைகள்:
நாட்டுக்கோழி 
கடக்நாத் கோழி
வான்கோழி
கினி கோழி 
குளத்தில் மேல் பகுதில் 10 அடி X 10 அடிX 10 அடி அளவில் கோழிகள் அடைக்கும் கொட்டகை.
வெப்பம் அதிகம் தாக்காத வகையில் கூரை தென்னை கீற்றுகள் கொண்டு அமைத்து கொள்ள வேண்டும் 

கோழி கொட்டகையின் உள்பகுதியில் மரக்குச்சிகளை கொண்டு ஏற்படுத்தினால் குறைந்த இடத்தில நிறைய கோழிகளை இரவில் தங்க வைக்க முடியும் .
கோழி கழிவுகள் கீழ்வரிசையில் இருக்கும் கோழி மேல் விழாமல் இருக்குமாறு சரிவை சரியான அளவில் அமைக்கவேண்டும் .
ஒரு மின்சார விளக்கு பொருத்தவேண்டும்.கோழிகள் முட்டையிட,அடைகாக்க பாதுகாப்பான தனியாக ஒரு பகுதியும் வாயிலும் இருக்க வேண்டும்.
இங்கு இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் அல்லது உடைந்த மண் பானைகளை பயன்படுத்தலாம்.

வாத்து வளர்ப்பு:

வாத்து வகைகள் :
பங்களாவாத்து,
மாஸ்கோவி வாத்து
காக்கி காம்பெல் வாத்து
கொட்டகை 10 அடி X 10அடிX 10 அடி அளவில் குளத்தின் மேல் பகுதியில் கூரை அமைக்க வேண்டும். 
கூரை அமைப்பில் மேல் பகுதியில் இருக்கும் காடை கழிவுகள் வாத்து கொட்டகையில் விழாமல் இருக்க வேண்டும் .
ஓரங்களில் சுற்றிலும் கம்பி வலை அடித்து அதில் 100% Shade net கொண்டு கட்டி விடலாம் .

காடை வளர்ப்பு :

காடைகளுக்கான இரும்பில் செய்த பெட்டிகளும் அதற்கு நிழல் தரும் வகையிலும், ஈரம் படாமலும், நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் இருக்கும் வகையில் அமைக்கவேண்டும்.கடைகளுக்கு வெப்பம் தேவை எனவே மின்சார விளக்கு பொருத்தும் அமைப்புகள் தேவை.கழிவுகளை எளிதாக சுத்தம் செய்யும் படி இருக்க வேண்டும்.கோழிகளுக்கு மண் குளியல் ( 3 அடி X 3 அடி X 1அடி ) தொட்டியை ஈரம் படாதவாறு பந்தல்அமைப்பு 5 அடி X 5 அடி X 3 அடி அளவில் அமைக்கவேண்டும்.பந்தலில் தண்ணிர் முனை அமைப்பு,தீவனம் வைக்க வேண்டும்.கோழிகளின் மேய்ச்சல் நிலத்தில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் புழு /பூச்சிகள் உற்பத்தி செய்யும் வகையில் தோட்ட கழிவுகள்,சமையலறை கழிவுகள் கொட்டி சிறிது பசுவின் சாணமும் ( சமையல் எரிவாயு கலனில் இருந்து வெளியேறும் கழிவு சாணம் இந்த பகுதில் வெளியேறுமாறு வைத்து விட்டால் இன்னும் சிறப்பு ) கலந்து விட்டால் கோழிகளுக்கு அருமையான இயற்கையான உணவு உற்பத்தியாகும்.இதிலிருந்து நமக்கு தேவையான இயற்கை உரமும் கிடைக்க பெறலாம் .கோழி மண் குளியல் தொட்டி அமைப்பை வெட்ட வெளியிலும் அமைக்க வேண்டும்.100 சதுர அடியில் கோழி குஞ்சுகளுக்கான 75% shade net + கம்பி வலை அமைப்பு மர நிழலில் அமைப்பது சிறந்தது .

ஆடு வளர்ப்பு:

ஆடுகளுக்கு தேவையான பட்டி முறையை சிறிது மேடான (ஆடுகளுக்கு ஈரம் இல்லாத தரை பகுதி எல்லா காலங்களிலும் இருக்க வேண்டும் ) பகுதியில் அமைத்து,தென்னை நார் கழிவுகள் பரப்பி வைக்கலாம்,ஆடுகள் மழை அல்லது பனியில்இருந்து பாதுகாப்பாக இருக்க இதன் ஒரு பகுதியில் சிறிய கூரை ( 10அடி X 5 அடி ) போன்ற அமைப்பை ஏற்படுத்தல் வேண்டும்.இந்த பட்டி அளவு 10 அடி X 10 அடி இருக்கலாம் .

பசு வளர்ப்பு:

பசுக்கள் சிறு பந்தல் : 10 அடி X 20 அடி மேடான பகுதியாக இருக்க வேண்டும் தரை செம்மண் + சட்டு மண் அல்லது சிமெண்ட் கலந்து இரும்பு போல 1 இன்ச் அளவு சரிவாக அமைக்க வேண்டும். சிறு பந்தல் அமைப்பை சுற்றிலும், தடுப்புக்கு கிடைப்பதை கொண்டு அமைக்கவேண்டும்.அருகில் அகன்று வளர்த்து நிழல்தரும் மரம் வைத்து பராமரிக்கலாம் ( வேம்பு, புங்கன்) தீவனம் இடும் தொட்டியை தண்ணிர் படாத இடத்திலும்,தண்ணிர் தொட்டியில் Flush Valvu அமைத்து எப்பொழுதும் புதிய தண்ணிர் கிடைக்கும் வகையில் மேல்நிலை தொட்டியுடன் இணைப்பு இருக்கும் வகையில் அமைக்கவேண்டும். கோ-மூத்திரம் சேமிப்பு தொட்டியில் குறைந்த அளவு 500 லிட்டர் வரை சேமிக்கும் அளவு இருக்க வேண்டும் .

 

 

https://www.facebook.com/hashtag/விவசாய_தகவல்கள்?

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • 234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம் 234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்     தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்களும் சென்னையில் இன்று ஒரேமேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திவைத்தார். 234 வேட்பாளர்களின் பெயரை அழைத்து, அவர்களின் கல்வித்தகுதியையும் குறிப்பிட்டு சீமான் அறிமுகப்படுத்தினார்.   சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சிஏ.திடலில் நடந்த நிகழ்ச்சியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஒவ்வொரு தேர்தலிலும் பெண்களுக்கு சரிசமமாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வரும் சீமான், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் 117 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். வழக்கம்போல இத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 2010ல் ஆரம்பித்த பயணம் நாம் தமிழர் கட்சி 2010-ல் தொடங்கப்பட்டது. அப்போதிருந்தே மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது. ஆணும், பெண்ணும் சமம் என்ற முழங்கி வரும் இக்கட்சி, 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் பெண்களையும், 20 தொகுதிகளில் ஆண்களையும் களமிறக்கியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பேசிய சீமான், "அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டனர். கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டனர். மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது" எனக் கூறினார். வேட்பாளர்கள் பட்டியல்:   https://www.hindutamil.in/news/tamilnadu/642509-seeman-introduces-234-candidates-2.html    
  • நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காதவரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான் -அருட்தந்தை மா.சத்திவேல்    20 Views நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காத வரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான்  என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் கைதிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக ‘இலக்கு’ மின்னிதழுக்கு கருத்து தெரிவித்த அவர்,  “அரசியல் கைதிகள் இன்று அரசியல் அநாதையாக்கப்பட்டிருக்கின்றார்கள். இதற்கான காரணம் ஒட்டுமொத்த அரசியல் தமிழ்த் தலைமைகளுமே. சிவில் சமூகங்கள்  பொறுப்பேற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அதாவது அரசியல் கைதிகளின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. குறிப்பாக கடந்த ஆட்சிக்காலத்தில் தீர்த்திருக்கலாம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலில் இதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. தமிழ் அரசியல் தலைமைகளால் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த அரசியல் தலைமைகள் கொரோனாவினைக் காரணம் காட்டுகிறார்களே தவிர, அரசியல் கைதிகளைப் பார்ப்பதனையோ, அன்றாட தேவைகளையோ  கவனிப்பதும் இல்லை. அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்தப்படுபவர்கள் தான் முன்னொரு காலத்தில் அரசியலை முன் நகர்த்தியவர்கள். இவர்கள் பலமாக இருந்ததனால் தான் பேச்சுவார்த்தை முன்னர் நடந்திருந்தது. இவ்வாறு பலமாக இருந்ததனால் வெவ்வேறு நாடுகளில் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள். அந்தளவு ஒரு பலமான சக்தியாக இருந்த அரசியல் கைதிகளை இன்று யாரும் கண்டுகொள்ளாத  நிலையில்தான் அவர்கள் அகதிகளாக இருக்கிறார்கள். தற்போது இருக்கும் அரசாங்கம் அரசியல் கைதிகளே இல்லை என கூறுகின்றார்கள் என்றால், அவர்களுக்கான விடுதலையே இனி இல்லை. இந்த அரசியல் கைதிகள் இருக்கும் வரைக்கும் இந்த பயமுறுத்தல்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். அண்மையில் பெருந்தோட்டத்துறையில் இடம்பெற்ற ஒரு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவரைக்கூட பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள். அப்படியானால் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இனிமேல் நீக்கப்படப்போவதும் இல்லை. அரசியல்  கைதிகளுக்கான விடுதலை நடைபெறப்போவதுமில்லை, அரசியல் கைதிகளோ அவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவோ நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காத வரைக்கும் அவர்கள் – அரசியல் கைதிகள் – அகதிகள் தான்.  அவர்களுக்கு வீடுமில்லை, அரசியல் கட்சிகளும் இல்லை,  உதவி கேட்க நபர்களும் இல்லை. வெளிநாட்டில் உள்ள சில அமைப்புக்கள் இவர்களின் வழக்கிற்கு உதவி செய்வதாகக் கூறுகிறார்கள். ஆனால் உதவி செய்யலாம். இது வழக்குடன் சம்பந்தப்பட்டதல்ல. இது அரசியலோடு சம்பந்தப்பட்ட விடயம். அந்தவகையில் அரசியல் ரீதியாக இவர்களுக்கு விடுதலை இல்லை என கூறினால், இவர்கள் அரசியல் அகதிகள் தான். நாடற்ற மக்கள்  வேறு நாடுகளில் தங்கியிருப்பதுபோல் இவர்களும் எந்தவொரு அங்கீகாரம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அரசியல் கைதிகள் தமது கோரிக்கையை, அரசாங்கத்திடம் வைப்பதா? அரசியல் தலைமைகளிடம் வைப்பதா? சிவில் சமூகத்திடம் வைப்பதா? பொதுமக்களிடம் வைப்பதா? என தெரியாது அரசியல் அகதியாகவும், அரசியல் அநாதைகளாகவும் இருக்கின்றார்கள்” என்றார்.   https://www.ilakku.org/?p=43960
  • சிறீலங்கா தொடர்பான UNHERC அறிக்கை குறித்து #P2P இயக்கம் அறிக்கை Vote General Assembly Seventy-fourth session 28th plenary meeting Necessity of ending the economic, commercial and financial embargo imposed by the United States of America against Cuba – Item 39 – A/74/91/Rev.1, A/74/L.6  69 Views ‘2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட இலங்கை மீதான பூச்சிய வரைவுத் தீர்மானம் தொடர்பில் இணைஅனுசரணை நாடுகளின் உறுப்பினர்களுக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளுக்கும் தமிழர்களின் மேன்முறையீடு’ என்ற தொனிப்பொருளில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “கீழே ஒப்பமிட்டுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பினர் மற்றும் வடக்கு கிழக்கு சிவில் சமூக மற்றும் சமய அமைப்புக்களைச் சேர்ந்தோருமாகிய நாங்கள் மனித உரிமைகள் சபையின் 2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட இலங்கை மீதான பூச்சிய வரைவுத் தீர்மானமானது குறிப்பாக தமிழ்ச் சமூகத்தினுடைய அடிப்படை எதிர்பார்ப்புக்களையேனும், விசேடமாக தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றமை மற்றும் தமிழப் பெண்களை வன்புணர்ந்தமை அடங்கலான இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் புரியப்பட்ட கொடூரமான குற்றங்களின் பொருட்டான சர்வதேசத்தின் பொறுப்புக்கூறலைப் பூர்த்திசெய்யவில்லை எனக் கருதுகிறோம். இணை அனுசரணை நாடுகளின் உறுப்பினர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளுக்கும் போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரியப்பட்டுள்ள இனப்படுகொலை ஆகியவற்றிற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை பூச்சிய வரைவுத் தீர்மானத்தில் உள்ளடக்குவதற்கான மேன்முறையீட்டின் பொருட்டு நாம் இதனை வரைகிறோம். நிலவரத்தின் தீவிரத்தன்மையின் காரணமாக, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கு முன்னர் 2021ம் ஆண்டு தை மாதம் 15ம் திகதியன்று தமிழர்கள் ஒன்றிணைந்து தங்களுக்கு ஓர் கடிதத்தை அனுப்பியிருந்தோம். இந்த அழைப்பானது அண்மையில் வடக்கு-கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களினால் ஒழுங்குசெய்யப்பட்டு ஆயிரக் கணக்கான பொதுமக்களின் பங்குபற்றிய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை (P2P) என்ற பேரணியின் மூலமாக வலுச்சேர்க்கப்பட்டிருந்தது. போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரியப்பட்டுள்ள இனப்படுகொலை ஆகியவற்றின் பொருட்டு நீதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் எந்தவொரு நம்பிக்கையையும் நாம் இழந்துள்ளமையினாலேயே இவ் வேண்டுகோளை நாம் விசேடமாக தங்களிடம் வலியுறுத்திக் கோரியிருந்தோம். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்தாமல் விடுதலானது கொடூரமான குற்றங்களைப் புரிந்தோர் நீதியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு வழிகோலுவதுடன் மாத்திரமல்லாது, அது இலங்கையின் அரசியற் தலைவர்களும் பாதுகாப்புப் படைப் பிரதானிகளும் தாம் நீதிக்கு முகங்கொடுக்கத் தேவையில்லை என்பதை நன்கறிந்து மேலும், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் தற்போதய உயர் ஆணையாளராகிய மிச்சேல் பச்சலெட் அவர்கள் 2021ம் ஆண்டு தை மாதம் 27ம் திகதியிடப்பட்ட தனது அறிக்கையில், இலங்கையிலுள்ள நிலவரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை நோக்காகக் கொண்டு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்தியுள்ளார். மேற்கொண்டு, எதுவிதத் தயக்கமும் இல்லாமல் தமிழ் மக்களிற்கு எதிரான சர்வதேசக் குற்றங்களைப் புரிவதற்கான துணிச்சலையும் ஏற்படுத்திவிடும். எனவே இலங்கையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்தாமல் விடப்படின் தமிழ் மக்கள் எதிர்கொள்ளவல்ல இந்த அபாயத்தைத் தீவிரமாகக் கவனத்திற் கொள்ளுமாறு நாம் தங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், ஐ.நா. மனித உரிமைகளுக்கான நான்கு முன்னாள் உயர் ஆணையாளர்கள், ஒன்பது சுயாதீன ஐ.நா. நிபுணர்கள் மற்றும் இலங்கை சம்பந்தமான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் வல்லுநர்கள் குழுவின் சகல உறுப்பினர்களும் அடங்கலாக இருபது முன்னாள் ஐ.நா. அதிகாரிகள் “யுத்த விதைகளை விதைத்தல்” எனத் தலைப்பிடப்பட்டு 2021ம் ஆண்டு மாசி மாதம் 18ம் திகதி வழங்கிய தமது அறிக்கையில் இலங்கையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.  “இலங்கையானது தனது நீதித்துறை நிறுவனங்களை அதனுடைய பாதிப்புற்றோரிற்காகச் செயற்பட முடியாதவையாக ஆக்கியுள்ளது என்பதே கருத்திற் கொளள்ளப்பட வேண்டிய விடயமாகும். எனவே, சர்வதேச அல்லது வெளிப்புற நியாயாதிக்கத்தினூடாக நீதியை நிலைநாட்டுவதன் பொருட்டு பாதிப்புற்றோருக்கும் அவர்களுடைய பிரதிநிதிகளுக்குமாகப் பணியாற்றுவதற்காக உயர் ஆணையாளரின் பரிந்துரைகளை நாம் மீள வலியுறுத்துகிறோம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) போன்ற பொறுப்புக்கூறலுக்கான வர்வதேச வழிவகைகள் கருத்திற் கொள்ளப்படுதல் வேண்டும்” எனக் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களிற்கு எதிராகப் புரியப்பட்டுள்ள சர்வதேசக் குற்றங்களின் சில உதாரணங்கள் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் பொறுப்புக்கூறுதலுக்கான நிபுணர்கள் குழுவினுடைய 2011ம் ஆண்டு பங்குனி மாத அறிக்கையின் பிரகாரம், இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான ஆயுதந் தாங்கிய யுத்தத்தின் இறுதி நிலைகளின் போது போர்க் குற்றங்களும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களும் புரியப்பட்டுள்ளதாகவும் 40,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் மரணித்துள்ளதாகவும் நம்பத்தகு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கை மீதான நடவடிக்கை தொடர்பான ஐ.நா செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக் குழுவின் 2012 கார்த்திகை மாத அறிக்கையின் பிரகாரம் 2009 ம் ஆண்டின் இறுதிக் கட்ட யுதத்தத்தின் போது 70,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காணாமற் போயுள்ளனர். அரசாங்கத்தால் யுத்த சூனிய வலயங்கள் (பாதுகாப்பு வலயங்கள்) எனக் குறித்தொதுக்கப்பட்ட பிரதேசங்களில் இலங்கைப் படையினர் அடுத்தடுத்து குண்டுத்தாக்குதல்களையும் எறிகணை வீச்சுக்களையும் மேற்கொண்ட போது பலர் கொல்லப்பட்டனர். வைத்தியசாலைகள் மற்றும் உணவு விநியோக நிலையங்களின் மீது கூடக் குண்டுகள் வீசப்பட்டன. பலர் பட்டினியின் காரணமாக இறந்ததுடன் மருத்துவ சிகிச்சையின்மையால் குருதிப்பெருக்கேற்பட்டும் மரணித்தனர். 2017ம் ஆண்டு மாசி மாதம் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசக் கருத்திட்டமானது (ITJP), தமிழ்ப் பெண்கள் பாலியல் அடிமைகளாக கையாளப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட பாலியல் வல்லுறவு முகாங்கள் பற்றிய விபரங்களை ஐ.நா விடம் கையளித்தது. ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் 2013 சித்திரை மாதத்திற்குரிய அறிக்கைக்கு அமைவாக, இலங்கையில் 90,000 க்கும் மேற்படட யுத்தமூல விதவைகள் உள்ளனர். குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அடங்கலாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமற்போயுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐநாவின் பணிக்குழுவானது உலகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கை இலங்கையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. சர்வதேசக் குற்றங்களுக்குரிய பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பொய்யான வாக்குறுதிகளின் வரலாறு அடுத்துவந்த இலங்கை அரசாங்கங்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை அறிமுகப்படுத்த தவறியுள்ளமையையும் தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வர நாம் விரும்புகின்றோம். முன்னைய அரசாங்கமானது ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கத்தவறியது மாத்திரமல்லாது, முரணாக சனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களும் தாம் தாம் (UNHERC)  தீர்மானத்தை அறிமுகப்படுத்த மாட்டோம் எனத் தெரிவித்திருப்பதாகவும் ஆணித்தரமாகவும் தெரிவித்துள்ளார். தற்போது புதிய அரசாங்கமானது ஒரு படி கூடுதலாகச் சென்று தீர்மானங்கள் 30-1,34-1 மற்றும் 40-1 களுக்குரிய இணையனுசரணையிலிருந்து விலகியுள்ளதுடன் UNHERC பொறுப்புக்கூறல் செயற்பாட்டிலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளது. மேலும் UNHERC இனை இழிவுபடுத்தும் விதமாக, சிறுவர்கள் அடங்கலாக பொதுமக்களை கொலை செய்தமைக்காக தண்டிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த ஒரேயொரு படைச்சிப்பாயும் தற்போதைய சனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் போர்க் குற்றங்கள் புரிந்தமைக்காக நம்பத்தகு முறையில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பல்வேறு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வுகள் வழங்கப்பட்டிருப்பதுடன் யுத்த நாயகர்களாக ஆகவும் மதிப்பளிக்கப்படுகின்றார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் யுத்தக்குற்றவாளியாக சந்தேகப்படுகின்ற ஓர் உத்தியோகத்தகர் நான்கு நட்சத்திர அதிபதியாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார். எமது மேன்முறையீட்டைத் தீவிரதன்மையுடன் கருத்திற் கொள்வதன் பொருட்டும் இலங்கையைச்  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ( ICC ) பாரப்படுத்தப்பட வேண்டியமையை உள்ளடக்குவதன் பொருட்டும் மேன்முறையீட்டை நாம் மேற்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.     https://www.ilakku.org/?p=43932
  • தூங்கி எழுந்தது போன்ற உணர்வுடன் அவன் கண்ணை விழித்து,  தான் எங்கிருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்த முயன்ற போது தான், மிருதுவான, ஆனால் மென்மையான வெட்பத்துடன் ஒரு சோடிக்   கைகள் அவனது கைகளைப் பிடித்திருந்ததை உணர்ந்தான்.  தலையைத் திருப்பிப் பார்க்கக்  கூடிய ஒரு நிலைக்குத் தன்னை சுதாகரித்துக் கொண்டவனுக்கு,  அந்தக் கைகளிலில்   பச்சை குத்தியிருந்த  ரோஜாப்பூக்களின் அழகு, அவனுக்கான நினைவுகளை மீட்டெடுக்கப் பிரயத்தனம் செய்தன. இந்தக் கைகளை எங்கோ பார்த்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன்! ரோஜாப் பூக்கள் போன்ற அந்தக் கைகளிலும் ரோஜாப்பூக்களா என வியந்தும் இருக்கிறேன் என்பதும் நினைவுகளின் சுழற்சியில் அவனுக்கு வந்து போனது. அந்தக் கைகளின் சொந்தக்காரியையோ அவளது முகத்தையோ அவன் முன்னெப்போதும் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை என்பது மட்டும் திடமாக அவனுக்குத் தெரிந்தது.  ஆனால் அவள் எப்படி இங்கே என்பது தான் புரியாத புதிராய்... தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவனுக்கு புரிந்தது.   அவனுக்கு முதுகைக் காட்டியபடி வைத்தியருடன் அவள் பேசுவதும் பல மைல் தூரத்திற்கப்பால் கேட்பது போலிருந்தது. அவள் முகம் தெரியவில்லை, பாதி மயக்கத்திலும் அவள் முகம் தேடி அவன் கண்கள்  அலைந்தன.  இன்று மட்டுமல்ல அவளைப் பார்க்கவென பரிதவித்த கடந்த பல மாதங்களும்  மனக்கண்ணில் வந்து போயின.முதன் முதலாய் ஒரு பெண்ணின் நெருக்கத்தை தேடி அலைந்த அந்த  உணர்வு அவனுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.   பாறாங்கல் ஒன்றைத் தலையில் தூக்கி வைத்திருப்பது போன்ற வலியோடு, அப்போது தான் அவனுக்கு தனக்கு என்ன நடந்திருக்கும் என்பதான கேள்வி ஒன்று எட்டிப் பார்த்தது.  முழுவதும் ஞாபகம் வரவில்லை. இருந்தாலும் அவன் மிகப்பிரயத்தனப்பட்டு சில நினைவுகளை சுழியோடிப் பிடித்துக் கொண்டான்.  ****************************************************************************** வழமை போலவே அன்றும் விடிகாலை ஐந்தரை மணிக்கு சொல்லி வைத்தாற் போல்  கீழே கதவை திறக்கும் சத்தமும் அதைத் தொடர்ந்து சில வினாடிகளில் மீண்டும் கதவை அறைந்து சாத்தும் சத்தமும் கேட்டது.  தினசரி வேலைக்குப் போக முன்னே வீட்டுக்கழிவுகளைக் கட்டி வெளியேயுள்ள கழிவுப்பெட்டிக்குள் எறிந்து விட்டுப்போகும் அந்தப் பெண்ணின் முகத்தை அவன் தன் மூன்றாவது மாடியிலிருந்த அறையின் சாளரத்தினூடே மறைந்து நின்று பார்க்கும் போதெல்லாம், அவனுக்குத் தெரிந்தது அவள் கைகள் மட்டுமே. கழிவுப்பையை எறியும் போது கூட மிக நிதானமாகவும், நேர்த்தியாகவும் அவள் அதை சிரத்தையுடன் செய்வது போலிருக்கும்.  குளிருக்காக தன் தலையை குளிர் அங்கியால் மூடியபடி, ஒரு ரோஜாப்பூ பறந்து போவது போல மெதுவாக அவள் அந்த மென்பனியில் இன்றும்  மறைந்து போனாள். கடந்த சில மாதங்களாகவே முகம் தெரியாத அந்த ரோஜாப்பூவிற்காக அவன் மனதில் இனம் புரியாத ஒரு தேடல் பரிதவிப்பாய் மாறிக்கொண்டிருந்தது.   இப்போதைக்கு மூன்று பேரில் ஒருவர் வீட்டிலிருந்து வெளியே போய் விட்டது உறுதியாகியது அவனுக்கு. அடுத்த இரண்டு கதவுச் சத்தங்கள் வரும் வரை அவன் கட்டிலை விட்டு இறங்க மாட்டான். இதுவே கடந்த பல மாதங்களாக, முக்கியமாக தொற்றுப் பரவத் தொடங்கிய  பேரிடர் காலத்திலிருந்து நடை பெற்று வருகிறது.  மாதங்கள் கடந்ததில், ஊரடங்கிய நிலைமை வழமையானதாய் போக,  தனிமையாய் இருப்பது,    வழக்கமாகிப் பழக்கப்பட்டுப் போயிற்று. அது ஒரு வகையில் அவனுக்கு ஆறுதலாகவும் இருந்தது. யாரையும் முகம் பார்த்துக் கதைக்க வேண்டிய அவசியம் இல்லாமற் போயிற்று. மனிதர்களை அதுவும் புதிய மனிதர்களைச் சந்திப்பதென்பது மனதின் ஆழத்தில் ஒரு பயத்தை, ஒரு பதற்றத்தை  அல்லது ஒரு இனம் தெரியாத படபடப்பை அவனுக்குத் தோற்றுவித்திருந்தது. இந்த நாட்டில் அவனுக்கென்று கைவிட்டு எண்ணக்கூடிய நண்பர்களே இன்றுவரை இருக்கிறார்கள். வேறு யாருக்கும் அவன் சக பணியாளர்களைத் தவிர அவனது இருப்பிடமோ வேறு தனிப்பட்ட விபரங்களோ தெரியாது. தெரிய வரக்கூடாது என்பதில் அவன் தன்னால் முடிந்தவரை சிரத்தை எடுத்துக் கொண்டான்.    அவனது அறைக்கும் வெளியே இருந்த வீதிக்குமிடையே ஒரு பத்து யார் தூரம் தான் என்றாலும், வாகனங்களின் இரைச்சல், வீதி ஓரமாக நடந்து போகும் பாதசாரிகளின் காலடிச் சத்தங்கள், சில வேளைகளில் அவர்கள் தொலைபேசியில் சத்தமாக கதைக்கும் உரையாடல்கள்  என எல்லாமும் அவனுக்கு துல்லியமாக கேட்கத் தொடங்கியிருந்தன.  இதற்கு முன் இவையெல்லாம் காதுக்குக்  கேட்காமல் இல்லை. வழமையான சத்தங்கள் தாம், ஆனால் இப்போதெல்லாம் ஒவ்வொரு சின்னஞ்சிறு ஒலியும் வழமையை விட பிரமாண்டமாகக் கேட்பது போல் ஒரு உணர்வு. அது பிரமையாய் இருக்குமோ என்று பல தடவை யோசித்தும் பார்த்தான். எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.   அவனது அறையோடு ஒட்டிய வீதியின் ஓரமாக ஓங்கி வளர்ந்திருந்த மரங்களில் இருந்த மரக்கிளைகளின் உறவினர்கள் விடி காலையிலேயே இதமாகப் பாடத் தொடங்கி விட்டனர்.  கீச்சுக் கீச்சென்ற பாடல்கள் அவனுக்கு பிடித்திருந்தாலும் அவர்களின் பாடல்களின் ஒலி ஒவ்வொரு நாளும் வர வர அதிகமாகி வருவது போலவே அவனுக்கு நினைக்கத் தோன்றியது.  அவர்களின் ரீங்காரமும் சுரமும் சுருதியுமாக மிகத் தெளிவாகக் கேட்பதை அவன் ரசிக்கத் தொடங்கி ஒரு சில நிமிடங்கள் கடந்த  போது மீண்டும் அவன் அறைக்கு வெளியே, கீழ்த் தட்டிலிருந்து இரண்டாவது தடவையாக கதவு திறக்கும் ஓசையும் பின் அதை அறைந்து சாத்தும் ஓசையும் கேட்டு அடங்கியது.   அவன் கடிகாரத்தைப் பார்க்காமலே இப்போது மணி ஐந்தே முக்கால் என நினைத்துக் கொண்டான்.  ஆடாமல் அசையாமல் படுத்திருந்தால் இயற்கை உபாதைகளை வராமல் தடுக்கலாம் என்ற மனப்பக்குவமும் நாளடைவில் வந்து விட்டிருந்தது.  இன்னும் ஒரேயொரு கதவுச் சத்தம் தான் மிச்சமிருந்தது.  அதை ஆவலோடு எதிர்பார்த்திருந்தான்.  இன்னும் ஒரு பத்து நிமிடங்களுக்குள் அதுவும் கேட்டு விடும் என்ற நம்பிக்கை வீண் போகவில்லை.  இரண்டாவது தட்டிலிருந்த அறைக்கதவு திறக்கப்படும் ஓசையும் அதைத் தொடர்ந்து இதோ தட தடவென்ற காலடிச் சத்தம் வீட்டின் பிரதான வெளிக் கதவை  நோக்கி நகர்ந்து போவது அவன் காதுகளுக்கு மிகத்  தெளிவாகக் கேட்டது .  வர வர அவன் காதுகள் இரண்டும் மிகவும் தீவிரமாக வேலை பார்ப்பது போல இருப்பதை அவனால் புறம் தள்ள முடியவில்லை.   அப்பாடி வீட்டிலிருந்த மூன்று மனிதர்களும் வேலைக்குப் புறப்பட்டு விட்டார்கள், இனி மதியம் தாண்டி, மாலை ஐந்து, ஆறு மணி வரையில், அவர்கள் வருவதற்கிடையில் அவனுக்குச் செய்ய வேண்டிய வேலைகள்  எத்தனையோ இருந்தன.  அவற்றுக்கான சிறிய நேர அட்டவணை ஒன்று அவன் அலுவலக மேசையின் சுவரில்,  நிறங்கள், வேலைகளின் முக்கியத்துவம் குறித்த வித்தியாசங்களைக் காட்டி நிற்க, ஓட்டப் பட்டிருந்தது.     வீட்டிலிருந்து வேலை பார்க்கத் தொடங்கிய புதிதில் எதுவுமே பிடிக்காமல்,   மனதில் ஒட்டாமல் செயற்கைத் தனமாய் இருந்தது என்னவோ உண்மை தான்.  இருந்தாலும்  எல்லாம் நாளடைவில் மாறத் தொடங்கியதற்கு வலுவான காரணம் என்ன என எதையும் அவனால்ச் சுட்டிக் காட்ட முடியவில்லை.   ஆனால் அவனோடு மிக நெருங்கிய உறவுகள் இரண்டு திடீரெனத் தொற்று ஏற்பட்டு இறந்து போனதும், அவன் இருந்த நாட்டில் அவசர காலச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டு, எல்லோரும் வீடு அடங்கி இருக்க வேண்டி வந்ததோடும் தான் எல்லாமுமே அவனுக்குள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்ற கணிப்பீடு ஒன்றும் அவனுக்குள் இல்லாமல் இல்லை.    முக்கியமாக அவனுடைய வேலை தொழில் நுட்பம் சார்ந்திருந்த படியினால் அவனுக்கு அவன் பணி சார்ந்த அனைத்து பட்டறிவையும் அனுபவத்தையும்  ஒரு விரல் நுனியில் வைத்திருக்க முடிந்தது. எப்போதாவது சந்தேகங்கள் வந்த போது அவனுடைய குழுவில் உள்ளவர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்பினால் அவர்களில் ஒருவர் எப்படியாவது ஒரு பத்தே நிமிடத்தில் அந்தப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண்பதென்பதை 'மாதிரிக் காணொளி வாயிலாக'  (demo video)  அல்லது அது குறித்த ஆவணத்தில் போய் (Google document) தேவையான மாற்றங்களைச் செய்து அனுப்பி விட்டு, தொலைபேசியில் வந்து அவனுக்கு விளக்கமும் தந்து விடுகிறார். அதைப் பற்றி நினைத்து, அதற்காக அலட்டிக் கொள்ளும் மன நிலையில் அவன் இப்போது இல்லை என்பது தான் நிஜமாகிப் போனது.  இன்று அவனுக்கிருந்த வழமையான வேலைகளுடன் இன்னுமொரு புதிய அதிகப்படியான கடமை ஒன்றும் ஒட்டியிருந்தது.  அம்மாவுக்கு தொலைபேச வேண்டும், அவனது குரலுக்காக ஏங்கிப் பார்த்துக் கொண்டிருப்பாள். இன்று அவனது பிறந்த நாள், ஏதோ அவளுக்குத் தான் பிறந்த நாள் போல கடந்த முறை கதைத்த போதே சொல்லி வைத்திருந்தாள்.  உலகில் உள்ள அம்மாக்கள் அனைவருக்கும் இது போல இருக்குமா அல்லது இவளுக்கு மட்டும் தான் அநியாயத்துக்கு  இப்படி   ஒரு ஏக்கமா?  அம்மாவை நினைத்த போது கண்களில் இயல்பாக ஈரம் தோன்றியதை அவன் கைகள் பட்டெனத் துடைத்து விட்டன.  அவள் நினைவுகள் அந்தக் குளிரின் கடுமையைக் குறைத்து தற்காலிகமாக ஒருவித வெப்பத்தை அந்த அறையில் கொண்டு வந்ததைப் போல உணர்ந்தான். அவனுக்கு அம்மா மீதிருந்த பாசத்தையும் மீறி அன்றைய பொழுதில் முடிக்க வேண்டிய வேலைகளுக்குள், இதுவும் ஒரு வேலையாக, வேலைப்பளுவை அதிகரித்த மனோநிலையானது  சாதுவான எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது.  நேர அட்டவணையில் மிகவும் நெருக்கமான இரண்டு மதிய வேளை அலுவலகக் கூட்டங்களுக்கிடையே தொலை பேச வேண்டியதையும் சிவப்பில் அடிக்கோடிட்டிருந்தான்.  அவனுடைய போதாத காலம், அவனுடைய பிறந்த நாள் புதன் கிழமையில் வந்து தொலைத்திருந்தது.  புதன் கிழமைகளில் வழமையாக இருக்கும் அவன் சார்ந்த குழுவின் கூட்டத்தோடு அலுவலகப் பணியாளார்கள் அனைவரும் சேர்ந்து பங்கு பற்ற வேண்டிய வழமையான கூட்டமும் ஒன்று இருந்தது. பரவாயில்லை, முதலாவது கூட்டத்திற்கும் இரண்டாவது கூட்டத்திற்குமிடையே இருபத்தியைந்து நிமிட இடைவெளி இருந்தது.  அந்த இடைவெளிக்குள் எப்படியும் அம்மாவுக்கு தொலைபேசி விடவேண்டும் என முடிவெடுத்துக் கொண்டான். முதல் நாள் இரவு வேலைப்பளுவினால் மின் அஞ்சல்களுக்குப் பதில் எழுவதை சற்றே ஒதுக்கி வைத்திருந்தான். அதன் விளைவு இன்று தெரிகிறது, பல்வேறு விதமான மனிதர்களின் தேவைகளும் கேள்விகளும் அவனைச் சற்றே களைப்படைய வைத்தது.  பதில் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்களுக்கு ஏற்றாற்போல் பதில்களை அனுப்பினான்.  சில மின் அஞ்சல்களுக்கு ஆவணங்கள் இணைத்து அனுப்ப வேண்டிய கட்டாயமிருந்தது.  ஒவ்வொன்றையும் மிகக் கவனமாகக் கையாண்டவன், மேசைக்கு எதிரே தினசரி நேர அட்டவணையைக்குப் பக்கத்தில் இருந்த சுவர் மணிக்கூட்டைப் பார்த்ததும் ஒரு வினாடி அதிர்ந்து போனான். முதலாவது கூட்டம் தொடங்குவதற்கு இன்னும் ஐந்தே நிமிடங்கள் இருந்தன. உடனடியாக, தற்சமயம் செய்து கொண்டிருந்த மின் அஞ்சல் தொடர்பான ஆவணங்களை சேமித்து வைத்துவிட்டு, மின்னம்பல வழி (zoom meeting) கூட்டத்திற்கு தன்னை தயார்படுத்தி, அதில் அமர்ந்து கொண்ட அந்த நிமிடத்தில் கூட்டம் ஆரம்பமானது.  அவன் எப்போதுமே கூட்டங்களுக்கு இணையவழியிலோ அல்லது இப்பேரிடர் காலத்தின் முன்னே நேரடி வருகைகளுக்கோ பிந்திப் போனதில்லை. அவனுக்கு அலுவலக ஊழியர்கள் மத்தியில் இதற்கென நல்லதொரு பெயர் எப்போதுமே இருந்து வருகிறது. அதைப் பேணிப் பாதுகாப்பதில் அவனுக்கொரு அலாதியான மகிழ்ச்சி மனதின் ஆழத்தில் இருப்பது அவனுக்கு மட்டுமே தெரியும். கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஒரு வித ஆர்வத்துடனும் அதே சமயம் புன்னகையுடனும் இருந்தது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் அனைவருமே அவனுடன் ஒரு அலுவலகத்தின் பணி சார்ந்து வேலை பார்ப்பவர்கள். எதிர்வரும் வாரத்தில் செய்ய வேண்டிய வேலைகளைத் திட்டமிட்டு, அவற்றை அவன் உட்பட தமது கடமைக்கான பங்கை அனுப்பியிருந்ததால் அதை எல்லோருக்கும் சமர்ப்பித்து, அதில் எதாவது மாற்றங்கள் அல்லது மேற்கொண்டு அத்துடன் இணைக்க வேண்டிய கடமைகள் ஏதாவது உண்டா எனப்பார்ப்பதே அக்கூட்டத்தின் பிரதான நோக்கமாயிருந்தது. இருந்தாலும் கூட்டம் அதிகாரபூர்வமாக ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் கை அசைத்தோ, புன்னகைத்தோ அல்லது வணக்கம் சொல்லியோ கொண்டது அவனுக்கு பெரியதொரு ஆறுதலைத் தந்தது.  அவர்கள்  அவனுக்குத் தெரிந்தவர்கள், அவர்களுடன் பழகுவது பாதுகாப்பானது, அவர்கள் அவனுக்கு பல வழிகளிலும் அவன் பணி  சார்ந்த தொழில் நுட்பங்களை அவனுக்கு  அறிமுகம் செய்து, அது தொடர்பான சிக்கல்களைக் கூட தீர்ப்பவர்கள். வாரத்தில் ஒரு முறை இப்படியாவது அவர்களைச் சந்திப்பது அவனுக்கு மனத்திருப்தி தந்தது. கூட்டம் அவனுடைய சில கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டதுடன் அது தொடர்பாக சில மாற்றங்களையும் ஏற்படுத்திக்கொண்டது. அவனும் வணக்கம் சொல்லி  விடை பெற்றுக் கொண்டான். நேர அட்டவணையை நிமிர்ந்து பார்த்ததில் அவன் தன்னுடைய தனிப்பட்ட மின் அஞ்சல்களை வாசிக்காதது தெரிய வந்தது.  அவசரம் அவசரமாக அந்தப் பக்கத்தை திறந்து, முக்கியமான மின் அஞ்சல் ஏதாவது வந்துள்ளதா என ஆராய்ந்தான். வீட்டின் சொந்தக்காரர் ஒரு மின் அஞ்சல் அனுப்பியிருந்தார், அதை அவசரமாகப் பிரித்தான்.  வழமையாக அவரிடமிருந்து வாடகைக்கான நன்றி சொல்லி ஒரு வரியில் ஒரு அஞ்சல் வரும். இது என்னவோ வித்தியாசமாக இருந்ததில் அவன் வாசிப்பதை ஆறப்போடாமல் கண்ணால் மேயத் தொடங்கினான். அன்புள்ள என்று தொடங்கி, அவனுக்கு ஒரு விடயத்தை தெரிவிப்பது நல்லது என்ற ரீதியில் கடிதம் தொடர்ந்தது. இந்த வீட்டில் சில திருத்த வேலைகள் இருப்பதால், அந்த வீட்டில் இருக்கும் மற்றைய அறைகளில் இருப்பவர்களை வீட்டை விட்டு எழுப்புவதற்கு அறிவித்தல் கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவனது அறை நல்ல நிலையில் இருப்பதால் அவன் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை எனவும் அடிக்கோடிட்டு எழுதியிருந்தார். இவ்வீட்டில் இருக்கும் மற்றவர்கள் அனைவரும் அவனுக்குப் பின்னர் தான் அவ்வீட்டிற்கு குடி புகுந்திருந்தனர். அவர்களும் அவனும் எப்போதுமே சந்தித்ததில்லை. அவர்களுக்கு அவன் இந்த அறையில் இருப்பது தெரிந்திருந்தும் அவரவர் வேலையும் வீடுமாய் இருந்த இந்த பேரிடர் காலம் அவனை முற்றாக இவ்வுலகத்தில் இருந்து வெகு தூரத்தில் வைத்திருந்தது. அவன் ஒருவன் தான் அந்த வீட்டில் நம்பிக்கைக்குப் பாத்திரமான நீண்ட கால வாடகைக்காரனாயிருப்பதால் வீட்டின் உரிமையாளருக்கும் அவனுக்கும் இடையில் ஒரு நல்ல உறவு நிலவியது.   அவரைப் பற்றி ஒரு சில நிமிடங்கள் சிந்தித்தவன் திடீரென ஞாபகம் வந்தவனாய், நேரத்தைப் பார்த்த போது அவனுக்குத்   தூக்கி வாரிப் போட்டது! அடுத்த அலுவலக கூட்டத்திற்கு இன்னும் பதினைந்தே நிமிடங்கள் இருக்க, அந்த இடைவெளியில் அம்மாவுடன் பேசவும் சாப்பிடவும் வேண்டும் என்பதை மூளையும் வயிறும் ஞாபகப்படுத்தின. அலுவலக மேசையிலிருந்து அவசரமாய் எழுந்து, தன் அறைக் கதவில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்கண்ணாடியூடாக வெளியே யாராவது நடமாடும் அசைவுகள் இல்லை என்பதை உறுதி செய்த அதே வேளை அவன் காதுகளும்  துல்லியமாக எந்த அரவமும் இல்லை என்பதை அடித்துக் கூறின. அவன் அப்படியிருந்தும் சத்தமின்றி கதவைத் திறந்து, இரண்டாவது தளத்தில் இருந்த சமையலறையை இரண்டே நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் எட்டி, கைகளை நன்றாகக் கழுவி, குளிர் சாதனப்பெட்டியில் பதப்படுத்தி வைத்திருந்த தன் உணவை மின்கதிர் சூடாக்கியில் மூன்று நிமிடங்களில் சூடாக்கி பழையபடி தன் அறைக்குத் திரும்பிய போது கூட்டம் ஆரம்பிப்பதற்கு,  இன்னும் ஐந்தே நிமிடங்கள் தான் இருந்தன.   அவசர அவசரமாக உணவு வயிற்றினுள்ளே போய் பசியை அடக்கியது, ஏற்கனவே மேசையில் வைத்திருந்த தண்ணீரையும் அருந்திக் கொண்டான். இனி மாலை ஆறு மணிவரை வயிறும் மனதும் சொல்வழி கேட்டு நடக்கும் என்பது உறுதியாயிற்று அவனுக்கு.   ஊரில் இப்போதே ஆறு மணிக்கு மேலாகி விட்டது, இதற்குப் பின் தொலைபேசினால் அம்மா சோர்ந்து போவாள், கவலைப்படுவாள், அழுதபடியே தூங்கி விடுவாள், அவளுக்கு அவன் தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள, இப்பேரிடர் காலத்தில் படும்பாடுகளை புரிய வைக்க முடியாது. அப்படி அவன் முயன்றதும் கிடையாது.   அவன் அம்மாவிற்கு தொலைபேசி அழைப்பை தொடர்ந்து கொடுத்தும் இணைப்பை ஏற்படுத்த முடியாது தவித்த வேளை அவனுடைய அலுவலகக் கூட்டமும் ஆரம்பித்தது. அவன் ஒரு நாளும் இல்லாதவாறு தன் காணொளி, ஒலி வாங்கி இரண்டையும் மறைத்தவாறே அம்மாவுக்கு அழைப்பை அனுப்பியவாறே இருந்தான்.  ஏன் அம்மா தொலைபேசி அழைப்பை இணைக்கிறாள் இல்லை என்ற யோசனை பலமாகத் தாக்கியதில் அவனுக்கு கூட்டத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அம்மாவின் இணைப்புக் கிடைத்த போது அவனுக்கு சரியாகப் பேசக்கூட முடியவில்லை.  அம்மாவும்  அவன் அலுவலகத்தில் பலரோடு இருப்பதாகத் தெரிந்த போது, அவசர அவசரமாக  அவனை வாழ்த்தி விடை பெற்றது, அவனுக்கு ஒரு விதத்தில்  நிம்மதியாக இருந்தது. அலுவலகக் கூட்டம் முடிந்த கையோடு அவனுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தும் அவன் கேட்டபடியே ஒரு பல்பொருள் அங்காடியொன்றிலிருந்து வீட்டுக்கு வெளியே வந்திறங்கியிருந்தன.  யாரும் பார்க்க முதலே அவற்றை எடுத்து வந்துவிட வேண்டும் என்ற துடிப்பில் சாளரத்தின் வாயிலாக, பனி படர்ந்திருந்த முன் முற்றத்தை நோட்டம் விட்டு, யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின் மெதுவாக கீழ்த் தளத்திற்கு விரைந்தான். இப்படியெல்லாம் பிந்தியதற்கு அந்த ஒரு தொலைபேசி தான் காரணம் எனத் தோன்றியதில் தேவையில்லாமல் அம்மா மீது கோபம் வந்தது. முன் கதவைத் திறந்து முற்றத்திற்கு வந்து உணவுப் பெட்டிகளைத் தூக்கிய போது அவனது வலது கால் பனியில்ச் சறுக்கி அவனை நிலை குலையப் பண்ணியது மாத்திரமில்லாமல், சரிவான ஒற்றையடிப் பாதையில் அவனை வழுக்கி இழுத்துச் சென்று மதிலைக் கடந்து வெளியே தள்ளியது. மதிலின் முனையில் தலையடிபட்ட ஞாபகம் இருந்தது.  அவன் தன் கைகளை அந்தப் பனிப்பாறைகளில் ஊன்றி எழும்ப எத்தனித்ததும் ஞாபகம் வந்தது, அவ்வளவு தான், அதற்கு மேல் எதுவும் நினைவில் இல்லை. ****************************************************************************** அந்த ரோஜாப்பூ இப்போது தன் முதுகை அவனுக்கு காட்டியபடியே, வைத்தியருக்கு தன் அழகான ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டிருந்தது எல்லாம் மிகத் தெளிவாக அவனுக்கு கேட்கத் தொடங்கியது.   "இவர் நான் இருந்த வீட்டில் தான் ஒரு அறையில் இருந்தார் என்பது எமக்கு ஒருவருக்குமே தெரிந்திருக்கவில்லை.  பனியில் சறுக்கி விழுந்து, தலையில் பலமாக அடிபட்டதில் மயங்கியிருக்க வேண்டும் என்பதால் அவரது காற்சட்டைப் பையைச் சோதனை போட்டதில் தான் அவர் முகவரியைக் கண்டு பிடித்தோம். நல்ல வேளையாக சரியான நேரத்தில் அம்புலன்சில் வைத்தியசாலை வரை கொண்டு வந்து சேர்த்தாயிற்று.  என்னுடைய கடமை முடிந்தது. நான் இன்றுடன் வீடு மாறிப் போகிறேன்.'   அந்த ரோஜாப்பூ முகம் காட்டாமலே அவனிருந்த வைத்தியசாலை அறையிலிருந்து மிக மெல்லிய துள்ளலுடன் மறைந்து போனது. அவனால் பேச எத்தனித்தும் பேச முடியவில்லை, ஆனால் அவள் பேசுவது யாவும் தெளிவாகக் கேட்டது. அவன் கண்களில் கண்ணீருடன் அவள் காலடிச் சத்தத்தை நீண்ட நேரத்திற்கும் , பின் நீண்ட  காலத்துக்கும்  மிகத் துல்லியமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். -    
  • ஆறு படை வீடுகளின் அழகோவியம்  உனக்கும் எனக்கும்  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.