Jump to content

மன்னாரில் காற்றாலை மின்நிலையம்: நாளை திறப்பு விழா!!!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
vikatan_2019-05_85fdff07-9ad0-45bb-bb8b-

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் நாளை 8 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின்பால் இலங்கை கவனம் செலுத்தியிருப்பது வெற்றியென இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், காற்றாலை மின் உற்பத்தியானது சுற்றாடல் நேயமிக்கதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மன்னாரில் காற்றாலை மின்நிலையம்: நாளை திறப்பு விழா!!! | NewUthayan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காற்றாலை படம் எடுக்க  உதயனுக்கு சோம்பேறித்தனம் ஆக்கும் கேரளா தேக்கடி காற்றாலை படத்தை நெட்ல சுட்டு போடுகிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊழியர்களுக்கு ஒழுங்கா சம்பளம் கொடுத்தால் படம் உடன வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

காற்றாலை படம் எடுக்க  உதயனுக்கு சோம்பேறித்தனம் ஆக்கும் கேரளா தேக்கடி காற்றாலை படத்தை நெட்ல சுட்டு போடுகிறார்கள் .

யாழ்ப்பாணம் போகேக்க கொஞ்ச காற்றாடிகள் தெரிந்தது  ஆனையிறவு கடந்தா அல்லது அதற்கு கீழ் உள்ள பகுதியா ?? என தெரியவில்லை 

யாழ்ப்பாணத்தில் சந்திக்கு சந்தி திரும்பினால் ஒவ்வொரு ஊரா கிடக்கு 

மன்னார் மக்கள் பயனடைவார்கள் போல் இனி ( வாழ்த்துக்கள் வங்காலையன் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

யாழ்ப்பாணம் போகேக்க கொஞ்ச காற்றாடிகள் தெரிந்தது  ஆனையிறவு கடந்தா அல்லது அதற்கு கீழ் உள்ள பகுதியா ?? என தெரியவில்லை 

யாழ்ப்பாணத்தில் சந்திக்கு சந்தி திரும்பினால் ஒவ்வொரு ஊரா கிடக்கு 

மன்னார் மக்கள் பயனடைவார்கள் போல் இனி ( வாழ்த்துக்கள் வங்காலையன் )

பூநகரிக்கு அண்மையாக என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

காற்றாலை படம் எடுக்க  உதயனுக்கு சோம்பேறித்தனம் ஆக்கும் கேரளா தேக்கடி காற்றாலை படத்தை நெட்ல சுட்டு போடுகிறார்கள் .

அப்ப அங்கையும் வெட்டி ஒட்டுத்தான் போல....:grin:

Link to comment
Share on other sites

8 hours ago, ஏராளன் said:

பூநகரிக்கு அண்மையாக என்று நினைக்கிறேன்.

பூநகரிக்கு அண்மையாக இல்லை. இது மன்னர் தீவுக்கு போகும் முன்னர் வங்காலை சந்தியிலிருந்து இதனை காணலாம். ஒரு நேர் கோட்டில் அமைத்திருக்கிறார்கள். இங்கு போடப்பட்டுள்ள படம் எங்கேயோ இருந்து வெட்டி ஒடடபட்டுள்ளது. இதேவெண்ணமாக மன்னர் சிலவத்துறையிலும் ஒரு தொகுதி அமைக்கிறார்கள். பார்ப்பதட்கு அழகாக இருக்கின்றது.

இது தேசிய மின் வலைப்பின்னலுடன் இணைக்கப்படுவதால் மன்னர் மக்களுக்கு நன்மை என்று சொல்ல முடியாது. இருந்தாலும் மன்னர் மாவட்த்தில் 90 % இட்கும் அதிகமான பகுதிகளுக்கு மின் இணைப்பு முன்னரே வழங்கப்பட்டு விட்ட்து. வங்காலை சரணாலயத்தூடாக இது அமைக்கப்பட்டுள்ளதுடன் பார்ப்பதட்கு அழகாகவும் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.. எனது தம்பியும் எலெக்ரிக்கல் இன்ஜினியரிங் படிச்சிட்டு இப்படி ஒரு காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் அண்மையில் பயிற்சி பொறியியளாலராக சேர்ந்திருக்கிரான்.. நிறைய உள்ளூர் மக்கள் பயனடைவார்கள்.. தமிழ் அரசியல்வாதிகள் வடக்குகிழக்கிற்கு இப்படி வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை கொண்டுவரலாம் பாளிமன்றில் போய் படங்காட்டுவதை விட்டிட்டு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடையம்.மேலும் இது மாதிரி திட்டங்கள் வர வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Robinson cruso said:

பூநகரிக்கு அண்மையாக இல்லை. இது மன்னர் தீவுக்கு போகும் முன்னர் வங்காலை சந்தியிலிருந்து இதனை காணலாம். ஒரு நேர் கோட்டில் அமைத்திருக்கிறார்கள். இங்கு போடப்பட்டுள்ள படம் எங்கேயோ இருந்து வெட்டி ஒடடபட்டுள்ளது. இதேவெண்ணமாக மன்னர் சிலவத்துறையிலும் ஒரு தொகுதி அமைக்கிறார்கள். பார்ப்பதட்கு அழகாக இருக்கின்றது.

இது தேசிய மின் வலைப்பின்னலுடன் இணைக்கப்படுவதால் மன்னர் மக்களுக்கு நன்மை என்று சொல்ல முடியாது. இருந்தாலும் மன்னர் மாவட்த்தில் 90 % இட்கும் அதிகமான பகுதிகளுக்கு மின் இணைப்பு முன்னரே வழங்கப்பட்டு விட்ட்து. வங்காலை சரணாலயத்தூடாக இது அமைக்கப்பட்டுள்ளதுடன் பார்ப்பதட்கு அழகாகவும் இருக்கிறது.

தனியின் கேள்விக்கான பதிலாக தான் எழுதினேன், மன்னாரில் புதிய காற்றாலை திறப்பு விழாவைப்பற்றி செய்தியில் வாசித்து அறிந்திருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழ் அரசியல்வாதிகள் வடக்குகிழக்கிற்கு இப்படி வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை கொண்டுவரலாம் பாளிமன்றில் போய் படங்காட்டுவதை விட்டிட்டு..

அதென்ன இப்ப புதிசாய் கனபேர் பாளிமன்றத்தில பிலிம் காட்டுறப்பற்றி அலசுகிறியள்....?

இவ்வளவுகாலமும் சம்பந்தன் சுமந்திரன் மாவை  ஆக்கள் பாளிமன்டிலை வெடி கொளுத்தி வயிறு வளர்க்கேக்கை எங்கை போனனீங்கள் ராசாமாரே....?

உங்களுக்கெண்டால் அம்மா  மற்றவனுக்கெண்டால் சும்மா...:cool:

Link to comment
Share on other sites

57 minutes ago, ஏராளன் said:

தனியின் கேள்விக்கான பதிலாக தான் எழுதினேன், மன்னாரில் புதிய காற்றாலை திறப்பு விழாவைப்பற்றி செய்தியில் வாசித்து அறிந்திருந்தேன்.

மன்னிக்கவும். நீங்கள் சொன்னது சரி. தனியின் கருத்துக்கு எழுதவேண்டியதை உங்கள் பதிவிட்கு எழுதிவிடடேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் விசாலமான முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் திறந்து வைப்பு..!

விசாலமான காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் மன்னாரில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் இன்று(08.12.2020)முற்பகல் 10.30மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கலந்துக் கொண்டுள்ளார்.

spacer.png

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் இந்த மின்னுற்பத்தி மையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி வழங்கலில், 141 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்த காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமையப்பெற்றுள்ளமையும் குறிப்பிடதக்கது.

மன்னாரில் விசாலமான முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் திறந்து வைப்பு..! | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு

December 8, 2020

3-1024x621.jpg

நாட்டின் தேசிய மின் கட்டமைப்பில் 103.5 மெகாவொட் திறனை இணைக்கும் மன்னார் தம்பபவனி இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் இன்று (2020.12.08) பிரதமர் மகிந்த ராஜபக்ஸவினால் திறந்து வைக்கப்பட்டது.

சர்வ மதத் தலைவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்ட பிரதமர் நினைவு பலகையை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையமான தம்பபவனி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் வகையில் காற்றாடிகள் செயற்படுத்தப்பட்டன.

மன்னார் முதல் நடுகுடா வரையான 30 கிலோமீற்றர் அடி சக்தி பரிமாற்ற அமைப்புடனான இந்த மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக நடுகுடா முதல் அநுராதபுரம் வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட முழு மின் கட்டமைப்பிற்கும் 103.5 மெகாவொட் திறன் இணைக்கப்படவுள்ளது.

மன்னார் கடற்கரையில் 13 கிலோமீற்றர் தூரத்திற்கு, 150 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இந்த மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு 400 மில்லியன் மின் அலகுகளை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கும் வகையிலான இந்த தம்பபவனி காற்றாலை மின் உற்பத்தி நிலையமானது, இதுவரை அமைக்கப்பட்ட மிகப்பாரிய புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையமாகும் என்பது குறிப்பிடத்தக்கது #மன்னார் #தம்பபவனி #காற்றாலைமின்உற்பத்திநிலையம் #திறந்துவைப்பு

Mannar-Windplant-Opening_PMO_Tamil_News_2-1-1024x775.jpg3-1024x621.jpg4-1024x610.jpg5-682x1024.jpg

https://globaltamilnews.net/2020/154093/

மன்னாரில் உருவாக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மன்னாரில் உருவாக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.தற்போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் ஊடகா வருடாந்தம் சுமார் 400 மில்லியன் மின் அலகுகளை உற்பத்தி செய்ய முடியும். குறித்த உற்பத்தியின் மூலம் சுமார் 10 நாட்களுக்கு தங்குதடையின்றி நாடு முழுதும் மின்சாரம் வழங்க முடியும்.

கடந்த காலங்களில் நீர் மற்றும் எரிபொருள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டுவந்த நிலையில், தற்போது சுற்றாடல் பாதிப்புக்கள் அற்ற குறைந்த செலவிலான காற்றாலை மின் உற்பத்தியில் அரசாங்கம் ஆர்வம் செலத்தி வருகின்றது. இதன்படியே மன்னாரில் குறித்த காற்றாலை உருவாக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுவதன் ஊடாக பிரதேச அபிவிருத்தி விரைவுபடுத்தப்படுவதுடன் உட்கட்டமைப்பு வசதிகளும் விருத்தி செய்வதற்கான சூழுல் ஏற்படுகின்றது.இதேபோன்று, மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்கின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு காணப்படும். அரசாங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் மற்றும் கு.திலீபன் ஆகியோரின் ஊடாக குறித்த வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

அத்துடன், வீதிகள் புனரமைப்பு மற்றும் குழாய் கிணறுகளை அமைத்துக் கொள்ளுதல் போன்ற வாய்ப்புகளும் மன்னார் மக்களுக்கு கிடைத்திருப்பதாக மன்னாரில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)

http://www.samakalam.com/செய்திகள்/மன்னாரில்-உருவாக்கப்பட்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

அதென்ன இப்ப புதிசாய் கனபேர் பாளிமன்றத்தில பிலிம் காட்டுறப்பற்றி அலசுகிறியள்....?

இவ்வளவுகாலமும் சம்பந்தன் சுமந்திரன் மாவை  ஆக்கள் பாளிமன்டிலை வெடி கொளுத்தி வயிறு வளர்க்கேக்கை எங்கை போனனீங்கள் ராசாமாரே....?

உங்களுக்கெண்டால் அம்மா  மற்றவனுக்கெண்டால் சும்மா...:cool:

என்ர புள்ளையள் சண்டை சோலி இல்லாத பணக்கார நாட்டில நல்ல உத்தியோகத்தில செட்டில் ஆகிட்டுதுவள்.. என்னப்பொறுத்தளவில நல்ல பரபரப்பா ஏதும் நியூஸ் வேணும் ஊரில இருந்து என்ர பொழுது போக. அதுக்கு எங்கட எம்பிமார் பாளிமெண்டில போய் நாங்க ஆர்தெரியுமோ அழிச்சுடுவம் எல்லாரையும் எண்டு உசுப்பேத்துரது நல்லது.. நான் இப்பிடி தமிழர்களை உசுப்பேத்தி கொதிநிலையில் ரவுண்டப்பு மண்டைல வெடி எண்டு ஊரே அமளிதுமளி படுரதுக்கு எப்பயும் ஆதரவுதான்.. என் நிலைப்பாடு ஊரில சனம் இஞ்ச நான் வாழ்ரமாரி அமைதியான வாழ்க்கை வாழக்குடாது.. கஸ்ரத்திலையே கிடந்து சாகோனும்.. தட்ஸ் ஆல்.அங்க உள்ளவங்கள் வேலை வாய்ப்பு காசு நல்ல லைப்பு எண்டு இஞ்ச என்ரை பிளையளை போல செட்டில் ஆயிட்டா நான் இங்க வேலையால வந்து ரைம்பாஸ் நியூஸ் படிக்க என்ன செய்யுரது😡😡..நல்ல கதையா இருக்கு இது.. எவனும் செட்இல் ஆவக்குடாது அங்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாலபத்திர ஓணாண்டி மத்தியில கூட்டாட்சி மாநிலத்தில சுயாட்சி என்கிற பஜனைக் கோஸ்ரியோ.. 😫😫

காச அனுப்பு !!

ஆனா எப்பிடிச் செலவழிக்கவேண்டுமெண்டு வாய் திறக்கக் கூடாது.. சரியே.. 

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்னைப்போன்ற புலம்பெயர் தமிழர்களுக்கு ஈழத்தமிழ் அரசியல் பரபரப்பாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. எதிர்பார்ப்புகளும் இல்லை. உங்களைப்போன்று மற்றவர் துயரத்தில் குளிர் காய்பவர்களல்ல நாங்கள். நீங்கள் குறிப்பிடுபவர்களும் புலம்பெயர் தேசத்தில் இருக்கின்றார்கள் தான். அவர்கள் ரகம் உங்கள் ரகம். அதாவது ஒற்றுமையில்லாதவர்கள்.😡

உங்கள் எம்பிமார் சுணக்க அரசியல் செய்து பைகளை நிரப்புவதை விடுத்து அபிவிருத்திகளை செய்யச்சொல்லுங்கள். இன உரிமைகளை பெற ஏனையவர்கள் உரிய இடத்திற்கு வந்துவிட்டார்கள்.

நீங்கள் சொல்லும் ரைம்பாஸ் பண்ண ஆயிரம் வழிகள் இங்கே இருக்க நீங்கள் நினைக்கும் துரோக ரைம் பாஸ் உங்கள் ஸ்டைல்.😡

ஓணான் அவர்களே!

 என்னைப்போன்றவர்களை விட அல்லது பல புலம்பெயர் தமிழர்களை விட ஈழத்தில் இருக்கும் அநேகமானோர் நல்ல வசதியாகவே வாழ்கின்றார்கள்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

"என்னைப்போன்ற புலம்பெயர் தமிழர்களுக்கு ஈழத்தமிழ் அரசியல் பரபரப்பாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. எதிர்பார்ப்புகளும் இல்லை."

உங்களை பற்றி நீங்கள் முடிவெடுக்க முடியாது ...அந்த உரிமை உங்களுக்கு கிடையாது 
அத்தனை உரிமைகளும் எமக்குத்தான் உண்டு ஏனெனில் நாம்தான் .... கடந்த காலத்திலும் வெட்டி 
புடுங்கினோம் ..... இப்பவும் மக்களுக்காக வெட்டி புடுங்குகிறோம். 

கேள்வி இவளவு காலமும் பாராளுமன்றத்திலே வெடி கொளுத்தும்போது 
ஒவ்வரு தீவாளிக்கும் விடியல் வந்த போதும் எங்கிருந்தீர்கள் என்பது.

Link to comment
Share on other sites

11 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ர புள்ளையள் சண்டை சோலி இல்லாத பணக்கார நாட்டில நல்ல உத்தியோகத்தில செட்டில் ஆகிட்டுதுவள்.. என்னப்பொறுத்தளவில நல்ல பரபரப்பா ஏதும் நியூஸ் வேணும் ஊரில இருந்து என்ர பொழுது போக. அதுக்கு எங்கட எம்பிமார் பாளிமெண்டில போய் நாங்க ஆர்தெரியுமோ அழிச்சுடுவம் எல்லாரையும் எண்டு உசுப்பேத்துரது நல்லது.. நான் இப்பிடி தமிழர்களை உசுப்பேத்தி கொதிநிலையில் ரவுண்டப்பு மண்டைல வெடி எண்டு ஊரே அமளிதுமளி படுரதுக்கு எப்பயும் ஆதரவுதான்.. என் நிலைப்பாடு ஊரில சனம் இஞ்ச நான் வாழ்ரமாரி அமைதியான வாழ்க்கை வாழக்குடாது.. கஸ்ரத்திலையே கிடந்து சாகோனும்.. தட்ஸ் ஆல்.அங்க உள்ளவங்கள் வேலை வாய்ப்பு காசு நல்ல லைப்பு எண்டு இஞ்ச என்ரை பிளையளை போல செட்டில் ஆயிட்டா நான் இங்க வேலையால வந்து ரைம்பாஸ் நியூஸ் படிக்க என்ன செய்யுரது😡😡..நல்ல கதையா இருக்கு இது.. எவனும் செட்இல் ஆவக்குடாது அங்க..

இவ்வளவும் நாங்கள் எழுத அங்கை நடக்குது என்றால் நாங்கள் தெய்வ பிறவிகள் அல்லவா.🙃🙃

Link to comment
Share on other sites

4 hours ago, nunavilan said:

இவ்வளவும் நாங்கள் எழுத அங்கை நடக்குது என்றால் நாங்கள் தெய்வ பிறவிகள் அல்லவா.🙃🙃

ஐயா நீங்கள் தெய்வ பிறவிகள் எண்டால் நாங்கள் மறுபிறவிகள்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kapithan said:

பாலபத்திர ஓணாண்டி மத்தியில கூட்டாட்சி மாநிலத்தில சுயாட்சி என்கிற பஜனைக் கோஸ்ரியோ.. 😫😫

காச அனுப்பு !!

ஆனா எப்பிடிச் செலவழிக்கவேண்டுமெண்டு வாய் திறக்கக் கூடாது.. சரியே.. 

😏

வாங்கோ அண்ணர் துரோகிப்பட்டம் வழங்குர கோஸ்ரிபோல..

15 hours ago, குமாரசாமி said:

என்னைப்போன்ற புலம்பெயர் தமிழர்களுக்கு ஈழத்தமிழ் அரசியல் பரபரப்பாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. எதிர்பார்ப்புகளும் இல்லை. உங்களைப்போன்று மற்றவர் துயரத்தில் குளிர் காய்பவர்களல்ல நாங்கள். நீங்கள் குறிப்பிடுபவர்களும் புலம்பெயர் தேசத்தில் இருக்கின்றார்கள் தான். அவர்கள் ரகம் உங்கள் ரகம். அதாவது ஒற்றுமையில்லாதவர்கள்.😡

உங்கள் எம்பிமார் சுணக்க அரசியல் செய்து பைகளை நிரப்புவதை விடுத்து அபிவிருத்திகளை செய்யச்சொல்லுங்கள். இன உரிமைகளை பெற ஏனையவர்கள் உரிய இடத்திற்கு வந்துவிட்டார்கள்.

நீங்கள் சொல்லும் ரைம்பாஸ் பண்ண ஆயிரம் வழிகள் இங்கே இருக்க நீங்கள் நினைக்கும் துரோக ரைம் பாஸ் உங்கள் ஸ்டைல்.😡

ஓணான் அவர்களே!

 என்னைப்போன்றவர்களை விட அல்லது பல புலம்பெயர் தமிழர்களை விட ஈழத்தில் இருக்கும் அநேகமானோர் நல்ல வசதியாகவே வாழ்கின்றார்கள்.:cool:

முதலைக்கண்ணீர், முயல் கொம்பு, யானை முட்டை, காகப்பால்...😂

14 hours ago, nunavilan said:

இவ்வளவும் நாங்கள் எழுத அங்கை நடக்குது என்றால் நாங்கள் தெய்வ பிறவிகள் அல்லவா.🙃🙃

நடக்குதோ நடக்கேல்லையோ எண்ட எதிர்பார்ப்பு அதுதான்.. நான் சேவ் ஆ இருக்குரன்.. செட்டில் ஆயிட்டன்.. அங்க முழங்கவேனும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

முதலைக்கண்ணீர், முயல் கொம்பு, யானை முட்டை, காகப்பால்...😂

இவை இனவாத சிங்கள கடைகளில் கிடைக்கும் என்பது அதன் வாடிக்கையாளர் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கப்ரன்,

முதல் விடயம்: ***

இரண்டாவது: ஓணாண்டி போன்றோர் (நானும் தான்) புலம்பெயர் தமிழரின் அபிவிருத்தி மீதான பார்வையை விமர்சித்தால் அவர்கள் தமிழ் அடையாளத்தைக் களைந்து விட வேணுமென்ற வாதம் சிறுபிள்ளைத்தனமான சில்லறைத் தனமான சிந்தனை! 

ஒரு கணம் யோசித்துப் பார்த்தீர்களானால் இங்கே இது போன்ற பிரிவினைகளை ஊக்குவிப்போர் தான் சிங்களவருக்கு மறைமுகமாக உதவி செய்கின்றனர். அந்த உதவியை தெரிந்து செய்கிறார்களா அல்லது தெரியாமலே செய்கிறார்களா என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்! உங்களுக்கு கிட்னி இருக்கிறதல்லவா? 

Link to comment
Share on other sites

19 hours ago, குமாரசாமி said:

ஓணான் அவர்களே!

 என்னைப்போன்றவர்களை விட அல்லது பல புலம்பெயர் தமிழர்களை விட ஈழத்தில் இருக்கும் அநேகமானோர் நல்ல வசதியாகவே வாழ்கின்றார்கள்.:cool:

அப்படியா? உங்கள் பரிதாபநிலையை நீக்க அங்கே இருப்பவர்களிடம் உதவுமாறு கேட்கலாமா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.