Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

உலகில் முதலாவதாக பிரித்தானியப் பாட்டிக்கு கொவிட்-19 தடுப்புமருந்து


Recommended Posts

உலகில் முதலாவதாக பிரித்தானியப் பாட்டிக்கு கொவிட்-19 தடுப்புமருந்து

 

Shanmugan Murugavel  

 

சோதனையொன்றுக்கு வெளியே பைஸர் கொவிட்-19 தடுப்புமருந்தைப் பெற்ற முதலாவது நபராக, வட அயர்லாந்தைச் சேர்ந்த 90 வயதான மார்கரெட் கீனன் இன்று மாறியுள்ளார்.

பிரித்தானியாவானது தனது குடித்தொகைக்கு தடுப்புமருந்தை ஏற்ற ஆரம்பித்துள்ள நிலையிலேயே கீனன் உலகில் முதலாமவராக கொவிட்-19 தடுப்பு மருந்தொன்றைப் பெற்றுள்ளார்.

அதிகாலையில் எழும்புகின்ற கீனன், மத்திய இங்கிலாந்தின் கொவென்றியீலுள்ள தனது உள்ளூர் வைத்தியசாலையில், தனது 91ஆவது வயதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 12.01 மணிக்கு தடுப்புமருந்தை அவர் பெற்றிருந்தார்.

இந்நிலையில், கீனன் விடுதியொன்றிலிருந்து சக்கரக் கதிரையில் வெளியில் தள்ளி வரப்படும்போது பாதுகாப்பு அங்கிகளை அணிந்திருந்த தாதியர் நடைபாதையில் வரிசையாக நின்று அவருக்கு உற்சாகமளித்திருந்தனர்.

கொவிட்-19-க்கெதிராக தடுப்புமருந்தைப் பெறுவதில் முதலாவது நபராக தான் மிகவும் சலுகையுடையரவாக உணருவதாகத் தெரிவித்த கீனன், இது தனக்கு முற்கூட்டிய பிறந்தநாள் பரிசென்று கூறியுள்ளார்.

தனது பொதுசன குடித்தொகைக்கு தடுப்புமருந்தையேற்ற ஆரம்பித்த முதலாவது நாடு பிரித்தானியா ஆகும்.

இதுவரையில் கொவிட்-19-ஆல் 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilmirror Online || உலகில் முதலாவதாக பிரித்தானியப் பாட்டிக்கு கொவிட்-19 தடுப்புமருந்து

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nunavilan said:

உலகில் முதலாவதாக பிரித்தானியப் பாட்டிக்கு கொவிட்-19 தடுப்புமருந்து

பிரித்தானிய பாட்டி என்று இருக்க.... எலிசெபத் மகாராணி என்று நினைத்து விட்டேன். 😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த பாட்டிக்கு ஓகே எண்டால்த்தான் ராணி பாட்டிக்கு  ஊசி ஏத்துவினம்.🤣

 

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தடுப்பு மருந்தை ஏற்றிய இளம் வயதினர் பலருக்கு ஒவ்வாமை என்று செய்தி

Link to comment
Share on other sites

21 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தடுப்பு மருந்தை ஏற்றிய இளம் வயதினர் பலருக்கு ஒவ்வாமை என்று செய்தி

Flu   க்கு தடுப்பு மருந்து ஏற்றும் போது ஏற்படும் ஒவ்வாமை போல இதற்கும் ஒவ்வாமை வந்து போகும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஒவ்வாமை இருப்பது தெரிந்து கொண்டால் இந்த ஸ்புட்னிக் எடுத்துக் கொள்வதை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடப்படுள்ளதாக அறியக் கூடிதாக இருக்கிறது.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பல தவறான செய்திகள் சோசியல் மீடியாக்களில் வலம் வருகின்றன போல இருக்கு, இங்கே உரையாடலைப் பார்க்க விளங்குது:

1. தடுப்பூசி போட்டவுடன் (அது எந்தத் தடுப்பூசியாக இருந்தாலும்) சிலரில் ஒரு காய்ச்சல் நிலை 24 மணி நேரத்தினுள் வரலாம். இது சாதாரணமானது: இதன் பெயர் ஒவ்வாமை அல்ல!

2. இங்கே தடுப்பூசியைத் தவிர்க்கச் சொல்லும் ஒவ்வாமை என்பது anaphylaxis என்ற சடுதியான ஒவ்வாமை நிலை. இது ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருக்கும் ஆட்கள் தான் தடுப்பூசியைத் தவிர்க்க வேண்டும். 

3. சாதாரண பீனிசம், hay fever போன்ற ஒவ்வாமை உடையோர் தவிர்க்கும் படி ஆலோசனைகள் இல்லை! அப்படிப் பார்த்தால் சில நாடுகளில் அரைவாசிப் பேருக்கு தடுப்பூசி கொடுக்க முடியாத நிலை வரலாம், ஏனெனில் அரைவாசிப் பேருக்கு, பெரும்பாலும் இளைஞர்களுக்கு பீனிசம் இருக்கின்றது.   

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் இளையவர்களுக்கு £1500 தருகிறோம் ஊசி போடுங்கள் என்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். பணத்துக்கு ஆசைப்பட்டுப் போட்ட சிலருக்கு வடிவங்கள், உருவங்கள்  பல முன்னால் தெரிவதாகக் கூறியுள்ளாராம்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிரித்தானியாவில் இளையவர்களுக்கு £1500 தருகிறோம் ஊசி போடுங்கள் என்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். பணத்துக்கு ஆசைப்பட்டுப் போட்ட சிலருக்கு வடிவங்கள், உருவங்கள்  பல முன்னால் தெரிவதாகக் கூறியுள்ளாராம்.

இந்த மருந்துகள் எதுவுமே மந்திர மாஜாயாலங்கள் செய்பவை அல்ல.

இந்த லொக்டவுண் வாற வருசம் பங்குனி மாதம் வரைக்கும் உத்தரவாதமாம்.சில நேரம் கொஞ்ச தளர்வுகள் வரலாமாம்.

இப்ப நான் என்ன சொல்ல வாறன் எண்டால்  கோரோனா தானாய் போனால் உண்டு. :cool:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிரித்தானியாவில் இளையவர்களுக்கு £1500 தருகிறோம் ஊசி போடுங்கள் என்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். பணத்துக்கு ஆசைப்பட்டுப் போட்ட சிலருக்கு வடிவங்கள், உருவங்கள்  பல முன்னால் தெரிவதாகக் கூறியுள்ளாராம்.

சுமே, 
சமூக ஊடகங்களில் பரவும் பொய்ச்செய்திகளை நம்பி இங்கே பரப்புகிறீர்கள் என நினைக்கிறேன். இப்படியான மின்னஞ்சல் பற்றிய செய்திகளை ஏதாவது ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றனவா? 

பிரிட்டன் முதன்மைப் பட்டியல் படி இளைஞர்களுக்கு இப்போது கோவிட் தடுப்பூசி கிடைக்காதே? பின்னர் யார் பணம் கொடுத்து தடுப்பூசியைத் திணிப்பது? 
👉 https://www.gov.uk/government/publications/covid-19-vaccination-why-you-are-being-asked-to-wait/why-you-have-to-wait-for-your-covid-19-vaccine 

Edited by Justin
கீழ் பகுதி சேர்க்கப் பட்டது
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிரித்தானியாவில் இளையவர்களுக்கு £1500 தருகிறோம் ஊசி போடுங்கள் என்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். பணத்துக்கு ஆசைப்பட்டுப் போட்ட சிலருக்கு வடிவங்கள், உருவங்கள்  பல முன்னால் தெரிவதாகக் கூறியுள்ளாராம்.

நீங்களே இப்படி செய்திகள் சொல்லலாமா 😟

Link to comment
Share on other sites

இங்கிலாந்தின் சில பகுதிகளில் கொரோனா வேகமாகப் பரவ அதன் புதிய உருமாற்றம் காரணமா? 
 
இங்கிலாந்தின் சில பகுதிகளில், கொரோனா வைரஸின் புதிய உரு மாறுபாடு அடையாம் காணப்பட்டது!
கொரோனா வைரஸின் புதிய உரு மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது இங்கிலாந்தின் சில பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது எனவும் பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
“இந்தப் புதிய மாறுபாட்டால் ஏற்படும் கோவிட் தொற்று நோய்கள், குறைந்தது 60 அளவிலான வெவ்வேறு உள்ளூர் அதிகாரப் பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.. இது குறித்து உலக சுகாதார அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இங்கிலாந்து விஞ்ஞானிகள் விரிவான ஆய்வுகளை செய்து வருகின்றனர்,” என பிரித்தானியாவின் சுகாதார செயலாளர் மாற் ஹான்கொக் (Health Secretary Matt Hancock) தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது மோசமான நோய்ப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றோ அல்லது தடுப்பூசிகள் இனி இயங்காது என்றோ “பரிந்துரைக்க எதுவும் இல்லை” எனவும் சுகாதார செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட்டின் புதிய மாறுபாடு தென்கிழக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில்,நோய்கள் பரவுவதை துரிதப்படுத்தக்கூடும் என ஊடகங்களின் தலைப்புச் செய்திகள் அமைந்துள்ளதாக தெரிவித்த மாட் ஹான்கொக், கடந்த வாரத்தில், லண்டன், கென்ற், எசெக்ஸ் மற்றும் ஹெர்ட்ஃபோர்ட்ஷையரின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களில் கூர்மையான, அதிவேக உயர்வு ஏற்பட்டுள்ளது என்றும் ஹவுஸ் ஒவ் கொமன்ஸ் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
“இங்கிலாந்தின் தெற்கில் இந்த முக்கியமான மாறுபாட்டுடன் 1,000 க்கும் மேற்பட்ட தொற்றாளர்களை நாங்கள் தற்போது அடையாளம் கண்டுள்ளோம், அத்துடன் கிட்டத்தட்ட 60 வெவ்வேறு உள்ளூர் அதிகாரப் பகுதிகளில் தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.”
“புதிய மாறுபாட்டின் காரணமாக இது எந்த அளவிற்கு இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் அதன் காரணத்தை பொருட்படுத்தாமல் நாம் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும், தடுப்பூசியை பயன்படுத்தும்போது துரதிர்ஷ்டவசமான இந்த கொடிய நோயைக் கட்டுப்படுத்த முற்றிலும் அவசியம்.”.
தற்போதைய கொரோனா வைரஸ் ஸ்வாப் சோதனைகள் புதிய மாறுபாட்டைக் கண்டறியும் என இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி (England’s Chief Medical Officer Prof Chris Whitty) குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட இந்த புதிய மாறுபாட்டை இங்கிலாந்து சோதனை ஆய்வகங்கள் பரிசீலனைக்கு எடுத்துள்ளன என பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் நிபுணர் பேராசிரியர் ஆலன் மெக்னலி (Prof Alan McNally, an expert at the University of Birmingham ) தெரிவித்துள்ளார். குறிப்பாக “இது குறித்து நாம் கடுமையாக இருக்கத் தேவையில்லை, அத்துடன் இது மிகவும் பரவும் என்றோ அதிக தொற்றை ஏற்படுத்தும் அல்லது ஆபத்தானது என்றோ அர்த்தமல்ல. ” ஒரு கண் வைத்திருக்க வேண்டிய ஒன்று இது”.
இதே வேளை “மாறுபாட்டை வகைப்படுத்துவதற்கும் அதன் தோற்றத்தை புரிந்து கொள்வதற்கும் பெரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இது சாதாரண வைரஸ் பரிணாமம் என்பதால் திரிபு குறித்து அமைதியான மற்றும் பகுத்தறிவு முன்னோக்கை வைத்திருப்பது முக்கியம், மேலும் புதிய மாறுபாடுகள் வந்து காலப்போக்கில் வெளிப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் நிபுணர் பேராசிரியர் ஆலன் மெக்னலி விளக்கி உள்ளார்.
“இது மிகவும் தீவிரமானது , கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் தொடரப்பட வேண்டும், மேலும் வைரஸை விட வேகமாக முன் செல்லத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டும்.” என வெல்கம் இயக்குனர் டொக்டர் ஜெர்மி ஃபர்ரர் (Director of Wellcome Dr Jeremy Farrar) குறிப்பிட்டுள்ளார்.
எல்லா “புதிய திரிபு” அல்லது “புதிய மாறுபாடுகளையும்” புரிந்து கொள்ள ஒரு எளிய விதி உள்ளது: வைரஸின் நடத்தை மாறிவிட்டதா என கேளுங்கள் ஏனெனில் எல்லா “புதிய திரிபு” அல்லது “புதிய மாறுபாடுகளையும்” புரிந்து கொள்ள ஒரு எளிய விதி உள்ளது என BBCயின் சுகாதார மற்றும் விஞ்ஞான செய்தியாளர் analysis james gallagher
வைரஸ்கள் எல்லா நேரத்திலும் உருமாறும் என்பதால் அவை என்ன செய்கின்றன என்பது மிகவும் முக்கியமானது,. இதுவரை எங்களுக்கு “பயம்” ஏற்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் “பதில்” அல்ல.
கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு இங்கிலாந்தின் தென்கிழக்கில் வேகமாக பரவுவதோடு “தொடர்புடையதாக இருக்கலாம்” என மாட் ஹான்கொக் கூறியுள்ளார்.
ஆனால் இது “உயர்வுக்கு காரணமாகிறது” என்று சொல்வதற்கு சமமானதல்ல, மேலும் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றயவருக்கு மிக எளிதாக பரவுவதாக உருவாகியுள்ளது எனவும் ஹான்கொக் கூறவில்லை. வைரஸுடன் எந்த தொடர்பும் இல்லாத காரணங்களுக்காக புதிய விகாரங்கள் மிகவும் பொதுவானதாகிவிடும்.
கோடையில் “ஸ்பானிஷ் திரிபு” தோன்றுவதற்கான ஒரு காரணம் சுற்றுலா. இந்த நிலையில் தற்போது எல்லா இடங்களிலும் முக்கியமான தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளன. ஆனால் இது எவ்வளவு முக்கியமானது என்பதை அறிய இன்னும் விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் இல்லை என james Gallagher கூறியுள்ளார்.
“பல வைரஸ்களில் உள்ள மரபணு தகவல்கள் மிக விரைவாக மாறக்கூடும், சில சமயங்களில் இந்த மாற்றங்கள் வைரஸுக்கு பயனளிக்கும் – இது மிகவும் திறமையாக கடத்த அனுமதிப்பதன் ஊடாகவும், அல்லது தடுப்பூசிகள் மூலம் அல்லது சிகிச்சையிலிருந்து தப்பிக்க அனுமதிப்பதன் மூலம் ஏற்படலாம். – ஆனால் இவ்வாறு ஏற்படும் பல மாற்றங்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. என நொட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு வைராலஜி பேராசிரியர் ஜொனாதன் போல் (Prof Jonathan Ball, Professor of Molecular Virology at Nottingham University) தெரிவித்துள்ளார்.
குறிப்பாக “வைரஸின் புதிய மரபணு மாறுபாடு உருவாகி, இங்கிலாந்தின் பல பகுதிகளிலும், உலகெங்கிலும் பரவி வருகின்ற போதிலும், இது முற்றிலும் தற்செயலாக நிகழலாம். “ஆகையால், எந்தவொரு மரபணு மாற்றங்களும் நிகழும்போது அவற்றைப் படிப்பது முக்கியம், அவை வைரஸ் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பாதிக்கிறதா என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். - நடராஜா குருபரன்...
131138367_451825612886734_71311080118600
 
 
131406162_451825702886725_51229397984875
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nunavilan said:

“இங்கிலாந்தின் தெற்கில் இந்த முக்கியமான மாறுபாட்டுடன் 1,000 க்கும் மேற்பட்ட தொற்றாளர்களை நாங்கள் தற்போது அடையாளம் கண்டுள்ளோம், அத்துடன் கிட்டத்தட்ட 60 வெவ்வேறு உள்ளூர் அதிகாரப் பகுதிகளில் தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.”

அங்கைதான் நிக்கிறான் இறைவன்.
கொரோனா நாட்டு நாடு வித்தியாசம்.
ஊருக்கு ஊர் வித்தியாசம்.

பண்ணியில் பண்ணிப்பாருங்கள் மனிதப்புளுக்களே!
 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.