Jump to content

கார்டன் வைஸ்சின் Cage – தமிழாக்கமான கூண்டு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கார்டன் வைஸ்சின் Cage – தமிழாக்கமான கூண்டு

 
 • நடேசன்

(Gorden Weiss) கார்டன் வைஸின் தமிழாக்கமான கூண்டு நூல் தற்செயலாக வாசிக்கக் கிடைத்தது. பல இடங்களில் அதன் ஆங்கில மூலத்தை பார்த்திருந்தேன். அதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு நகர்ந்தேன் . ஆனால், கூண்டு என்ற அதன் தமிழாக்கம் பற்றி ஏன் தமிழ்த் தேசியர்கள் பலர் பேசவில்லை என ஆச்சரியப்படுகிறேன்.

Gordon-Weiss2.jpgஅவர்களில் பெரும்பாலானவர்கள் புத்தகங்களை வாசிக்காதவர்கள். அல்லது ஆனந்தவிகடன் , குமுதத்தின் வாசகர்களாக இருந்தாலும் அவர்களில் ஒரு வீதத்தினராவது இது பற்றிப் பேசியிருந்தால் புத்தகத்தைப் பற்றி எனக்கும் தெரிந்திருக்கும். முக்கியமாக தமிழர்கள் மத்தியில் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை. பின் அட்டைக்கு பேராசிரியர் சேரன் போன்ற தமிழ்த் தேசியத்தை உயர்த்திப்பிடிக்கும் முக்கியமான ஒருவர் குறிப்பெழுதியபோதிலும் புத்தகம் குடத்தில் இட்ட விளக்காகிவிட்டது.

தமிழ்த் தேசிய நண்பர்களே, நீங்கள் உங்கள் விவிலியமாகத் தலைமேல் தூக்கிப் பிடிக்க வேண்டிய புத்தகமிது. தமிழ்த் தேசியத்திற்காக யாராவது புதிய மோசஸ் பிறந்தால் அவரது கையில் இதை வைத்து நீங்கள் போராடவேண்டும். போராட்ட அறிவுக்கு நூல் தேவை.

புத்தகத்தில் கதை, மொழி, நோக்கு எல்லாம் இராஜபக்க்ஷ குடும்பத்திற்கு எதிரானது. தமிழகத்தைச் சேர்ந்தவர் மொழி பெயர்த்திருந்ததாக நான் அறிந்த போதிலும், மொழி நமக்குப் பரீச்சியமான ஈழநாதம் போன்றவற்றில் வரும் உணர்வான வயகரா மொழி.

முது கிழவரையும் கையில் ஆயுதத்தை எடுக்கச் சொல்லும். இதை நல்ல மொழியில் சொன்னால் நமது விவிலியம், கீதை, குர் ஆன் முதலான மத நூல்களில் வருமே – இதைச் செய்தால் நரகம் கிடைக்கும், இதுவே சத்தியம் , இதைச் செய்தால் இறைவனை அடைவாய்- என சிறிதளவும் ஐயப்பாட்டை வைக்காத உணர்வு கலந்த மத போதகருக்கான மொழிநடை.

புத்தகம் ஆரம்பத்திலிருந்து, இலங்கையரல்லாதவருக்கு, இந்தப் போருக்கான இலங்கையின் வரலாற்றை சொல்கிறது. அதாவது வெளிநாட்டவருக்கென கார்டன் வைஸால் எழுதப்பட்டது. உண்மைகளுடன் தற்கால எழுத்து முறையான புனைவான மன ஊடலுடனாக செய்தி சொல்கிறது (Creative nonfiction or literary journalism). நடந்த உண்மைகள், எழுதுபவர் மனத்திற்கேற்ப புனைவாகிறது.

இந்தப் புத்தகம் கடைசி நாட்களில் நடந்த விடயங்களை நம்மை மீண்டும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. இலங்கை அரசின் யுத்த மீறல்கள் அரசாங்கத்தின் மீறல்களாக சொல்லப்படும்போது விடுதலைப் புலிகளின் தவறுகள் எதுவும் இதில் தவறவில்லை. ஒரு விதத்தில் கடைசி யுத்தத்தமென்ற அரக்கனின் நாட்குறிப்புபோல் பக்கங்களில் விரிந்து செல்கிறது.

நாட்குறிப்பின் சம்பவங்கள் விவரிக்கப்படும்போது அந்த சம்பவங்களுக்கான காரணங்கள் புத்தகத்தில் விடுபடுகிறது. அந்த ஓட்டைகள் அரச படைகள், தளபதிகள் , அரசின் தவறுகளாக விபரிக்கப்படுகிறது. மேலெழுந்த கண்ணோட்டத்தில் சரியாகவே தோன்றும். அகழ்வாராச்சியில் உண்மை புரியும்.

book-04-742x1024.jpgஉலகத்தில் சம்பவங்கள் தற்செயலாகவோ கடவுளாலோ நடத்தப்படுவதில்லை. தொடர்ச்சியான முடிச்சுக்கள் ஒன்றின்மேல் ஒன்றாக காரண காரியமாக விழுகின்றன. அதனது இறுதி விளைவே போர். விடுதலைப்புலிகளைக் காலம் காலமாக எதிர்த்த எங்களைப்போன்றவர்கள், இலங்கை அரசின் யுத்த மீறல்களைக் காணாமல் செல்லவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததொன்று. ஆனால், இப்படியான ஒரு அழிவான போரைத் திட்டமிட்டு உருவாக்கியதே விடுதலைப்புலிகள் . அதை இந்தப்புத்தகத்தில் காணமுடிகிறது.

போர் புதிதாகத் தோன்றவில்லை. சூரனை அழிக்க முருகன் பிறந்தது போல் ராஜபக்க்ஷ பிறந்து வரவில்லை. கால் நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருந்த எந்த ஒரு போர்க்காட்சியிலும் ராஜபக்க்ஷ இருக்கவில்லை.

அவ்வளவு தூரம் போகவேண்டாம். கார்டன் வைஸ் போன்றவர்கள் வடபகுதியில் முள்ளிவாய்காலை பற்றிப் பேசும்போது, திருகோணமலை சம்பூரில் போருக்கு அத்திவாரக்கல்லை வைத்து உருவாக்கியவர்களைப் பற்றிப் பேசவில்லை . மன்னாரிலிருந்து மக்களை செம்மறிகளாகச் சாய்த்துக் கொண்டு வந்தது நமது நல்லாயன்களல்லவா?

இப்படிஒரு யுத்தம் வரும். எமது ஆயுதங்கள் எம்மை பாதுகாக்க முடியாதபோது, பொது மக்கள் அழிவார்கள். அந்த அழிவைப் பார்த்து, எம்மை அடப்பாவமே, அப்பாவி மக்கள்அழிகிறார்களே என்று யாராவது காப்பாற்றுவார்கள் என்ற கணக்கு, தப்புக்கணக்காகிவிட்டது . இந்தக் கணக்கில் மட்டுமே தவறு நடந்தது.

It was like a child game – whoever blinks first loses.

சுதந்திரபுரத்தை பாதுகாப்பு பிரதேசமாக அரசு பிரகடனப்படுத்தியபின்பு, அங்கு இராணுவத்தால் ஷெல் அடிக்கப்படுகிறது என்கிறார் கார்டன் வைஸ். உண்மை. ஆனால், அங்கிருந்து விடுதலைப் புலிகள் தங்களது வானொலியில் ஒலிபரப்பு செய்ததுடன் இராணுவத்தின் மீது தாக்குகிறார்கள் என்பது புத்தகத்தில் இல்லை. இதை எதிர்த்த அரச உத்தியோகத்தர்கள் இன்னமும் உயிருடன் இருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள், மக்களை தங்கள் துருப்பு சீட்டாக வைத்திருந்ததாக கார்டன் வைஸ் ஒப்புக்கொள்கிறார். ஆனால், அது தொடங்கிப் பல வருடங்கள் என்பதை கார்டன் வைஸ் தவறவிட்டுள்ளார். 1995 ஒக்டோபரில் யாழ்ப்பாண மக்களை வன்னிக்குக் கொண்டு சென்றதில் தொடங்கியது. ஆனால், யாழ்ப்பாணத்தவர்கள் பலவிதமாக விடுதலைப்புலிகளை ஏமாற்றிவிட்டு சாவகச்சேரி கொடிகாமத்தோடு, அரசே தங்களுக்குப் பாதுகாப்பு என உறுதியாக நினைத்து யாழ்ப்பாணத்திற்கு திரும்பி வந்துவிட்டார்கள். அப்படியே சிலர் விமானத்தால் வெளிநாடு வந்து, வெளிநாட்டு புலி ஆதரவாளர்களாகி விட்டார்கள் . பாவம் வன்னி மக்கள். அவர்களுக்கு இந்த சூக்குமம் புரியவில்லை.

இந்தியா , இலங்கை அரசோடு ஒத்துழைத்ததாகவும் ரகசியத்தகவல்களைக் கொடுத்ததாகவும் கார்டன் வைஸ் சொல்கிறார். இந்தியர்களைப் பிழை சொல்ல முடியுமா ?

2,977 மேற்பட்டவர்களை இரட்டைகோபுரத்தாக்குதலில் கொலை செய்ததால் அமெரிக்கா 18 வருடங்களாக ஆஃப்கானியர்களை கொன்று வருகிறது . ஆஸ்திரிய இளவரசன்மீது குண்டு வீசியதால் முதலாவது உலகப்போர் நடந்தது. இந்தியா, இலங்கை விடயத்தில் ஒரு விதத்தில் கையாலாகாத நாடாகவே இருந்ததாக நான் கருதினேன்.

நான் எனது கானல்தேசம் நாவலில் எழுதியது. ஆனால் கற்பனையில்லை . இந்திய உளவு அதிகாரியின் உண்மைக் கூற்று .

“ஆனாலும், எங்கள் நாடு மிகவும் பொறுமையானது. எங்களது ஐயாயிரம் வருட வரலாற்றில் எம்மிடையே உதித்த மதத் தலைவர்களான புத்தர், மகாவீர் மற்றும் குருநானக் என்பவர்கள் தர்மம் எது கர்மம் எது என்பதை உணர்த்தியுள்ளனர். பாவத்தின் சம்பளம் என்ன என்பதை புரிந்த பின்பு விமோசனம் தேட இப்பொழுது சரியான தருணம் வந்துள்ளதால், நாங்கள் உருவாக்கிய ட்ராகுலாவை அழிப்பதற்கு உங்களுக்கு உதவ விரும்புகிறோம். இதுவும் எனது கருத்தில்லை. எங்களது தலைவர்களினது கருத்து என நினைக்கிறேன்” என்றான் பாண்டியன்”

பேர்ள் துறைமுகத்தை தாக்கிய யப்பானியத் தளபதியை அமெரிக்கர்கள் விசாரணையின்றியே கொன்றார்கள். ராஜீவ் காந்தியை கொலை செய்ய திட்டம்போட்டபோது இவைகளைப்பற்றி சிந்தித்திருக்கவேண்டும்

சரணடைந்தவர்களை இலங்கை இராணுவம் கொன்றது உண்மை. அதை ஒரு இராணுவ அதிகாரியே ஒப்புக்கொண்டார். எனக்குத் தெரிந்த யோகி மாஸ்டரை பற்றி அவரிடம் கேட்டபோது எல்லா முட்டைகளும் ஒரு கூடையிலே என்றார். முல்லைத்தீவு இராணுவமுகாம் தாக்குதலின் பின், 800 இற்கும் மேற்பட்ட புலிகளிடம் சரணடைந்த இராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்டது பற்றி எனக்குத் தெரியும் . எப்படி நாம் அறத்தைப் பற்றிப் பேசமுடியும்? மனித உரிமைகளைப் பற்றியோ ஜெனிவா ஒப்பந்தத்தை பற்றியோ எப்படி நினைத்துப் பார்க்க முடியும் ?

அகதிகளாகச் சரணடைந்த பெண்களுக்கு ஆரம்பத்தில் பரிசோதிப்பு குறைவாக இருந்தபோது பெண் ஒருவரைத் தற்கொலைப் போராளியாக்கி, வெடித்து பலர் இறந்தார்கள். ஒரு பிரிகேடியர் ராணுவ ரீதியாக ( Demoted) தண்டிக்கப்பட்டதாக அவரே என்னிடம் கூறினார்.

கார்டன் வைஸின் கூண்டு (Cage) புத்தகம் முக்கியமான ஒரு ஆவணம். இதை யார் படிக்க வேண்டும்? முக்கியமாக நமது தமிழ் அரசியல்வாதிகள் கையில் இந்தப் புத்தகம் தவழவேண்டும் .

 

https://thinakkural.lk/article/95616

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இறையாண்மைக்கு எதிராக யாராவது அதிகாரத்தைப் பயன்படுத்த முயற்சித்தால் அதற்கு எதிராக செயற்படுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்ல." என முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். அதேபோல், அடக்குமுறை, அச்சுறுத்தலுக்குப் பயந்து ஒளிந்தோடும் இனம் நாங்களல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், "நாட்டினதும், மக்களினதும் இறையாண்மைக்கு எதிராக யாராவது தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி, நினைத்த பிரகாரம் சட்டமூலங்களை ஏற்படுத்தத் திட்டமிடுவதாக இருந்தால் அதற்கு எதிராகப் போராடுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. சில சந்தர்ப்பவாத தேரர்கள் பின்வாங்கினாலும் இவ்வாறான அச்சுறுத்தல், அடக்குமுறைகளுக்கு பயந்து, மீகெட்டு வத்தே குணானந்த தேரரின் வம்சத்தில் செயற்படும் எந்தவொரு பிக்குவும் மௌனித்திருக்கப் போவதில்லை. ஒரு சிலர் எம்மை அச்சுறுத்தி, அடக்கி எங்களது வாயை மூடிவிடப் பார்க்கின்றனர். மேலும், மாகாண சபை முறைமைக்கு நாங்கள் எதிர்ப்பு. யார் எதிர்த்தாலும் எவ்வாறு எதிர்த்தாலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தியே ஆகுவோம் எனச் சிலர் தெரிவிக்கின்றனர். அப்படியானால் இது தொடர்பாக யார் எதிர்த்தாலும், யார் அச்சுறுத்தினாலும் மாகாண சபை முறைமைக்கு எதிரான எமது போராட்டத்தை எந்த வித்தியாசமும் இன்றி, நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்வோம் என்பதை இவர்களுக்குத் தெரிவித்து வைக்க விரும்புகின்றோம்" - என்றார்  https://tamilwin.com/article/mahanayaka-theros-to-fight-against-the-government-1618601315
  • ஜனாதிபதியின் மிரட்டல் – மேலதிக பாதுகாப்பு கோரும் விஜயதாச!! அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிரட்டியதாக கூறியதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ மேலதிக பாதுகாப்பை கோரியுள்ளார். இது தொடர்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸ்மா அதிபரிடம் கடிதத்தை கையளித்துள்ளார். நேற்று காலை விஜயதாச ராஜபக்ஷவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி, கடும் தொனியில் பேசியதாக தெரிவித்திருந்தார். கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் உட்பட அரசாங்கத்தின் சில திட்டங்கள் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக குரல் கொடுத்ததால் தான் ஜனாதிபதி மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது, இது போர்ட் சிட்டிக்குள் ஒரு தனி சீன காலனி அமைக்க வழிவகுக்கும் என விஜயதாச ராஜபக்ஷ கூறினார். அரசாங்க தரப்பு உறுப்பினராக இதுபோன்ற ஊழல்களையோ அல்லது நாட்டின் சில பகுதிகளோ விற்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். https://athavannews.com/2021/1210174
  • மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்கான மாமியார் மற்றும் மச்சான்: வவுனியாவில் சம்பவம் வவுனியா- கண்டி வீதிக்கருகிலுள்ள வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக மருமகன் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் அவரது மாமியார் மற்றும் மச்சான் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் தேக்கவத்தை பகுதியை சேர்ந்த அரியதாஸ் திரேஸ் (வயது – 35) மற்றும் அசோகன் வசந்தி (வயது – 52)  ஆகிய இருவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல், வவுனியா, வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக காணப்படுகின்ற மரத்திற்கு பின்னால் மறைந்திருந்த சந்தேகநபர், அவ்விடத்திற்கு வருகை தந்த அவரது மனைவியின் சகோதரனுடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தன் உடமையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது முதுகில்  குத்தியுள்ளார். அதனை தடுக்க முற்பட்ட மாமியார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதன்போது தாக்குதலில் காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் தாக்குதல் நடத்திய சந்தேகநபரான கிளிநொச்சி- திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞனை, மக்கள் தடுத்து வைத்திருந்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் . குடும்ப தகராறு காரணமாகவே குறித்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2021/1210226
  • Kumbh Mela ( AP Photo/Karma Sonam ) கடந்த இரண்டு நாள்களில் மட்டும் கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் 1,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே ஒன்றுகூடுவதால் அதன் மூலம் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று பலரும் எச்சரிக்கின்றனர். கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் நடக்கும் கும்பமேளாவில் பல லட்சம்பேர் பங்கேற்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 14-ம் தேதி ஒருநாள் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பலரையும் கலங்கடித்திருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த 1-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா வரும் 30-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் அங்கே திரள்கின்றனர்.   Kumbh Mela AP Photo/Karma Sonam   கும்பமேளாவுக்கு வருகிறவர்கள் கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழுடன் வர வேண்டும், கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், அதேபோல தனிமனித இடைவெளியையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், லட்சக்கணக்கில் திரளும் மக்களால் அந்தக் கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. கும்பமேளா நடைபெறும் பகுதியில் நாளொன்றுக்கு 50,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் 500 மாதிரிகளுக்கு 20 மாதிரிகளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு நாள்களில் மட்டும் கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் 1,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே ஒன்றுகூடுவதால் அதன் மூலம் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று பலரும் எச்சரிக்கின்றனர். ஆனால், கும்பமேளாவை பாதியிலேயே நிறுத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதை முன்வைத்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன. கடந்த ஆண்டு தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்களால்தான் கொரோனா பரவியது என்று பேசியவர்கள் இப்போது எங்கே போனார்கள்? இதை ஏன் கண்டிக்கவில்லை அல்லது தடுக்கவில்லை என்று சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.   மருத்துவச் செயற்பாட்டாளர் புகழேந்தி   இதுதொடர்பாக சமூகச் செயற்பாட்டாளரும் மருத்துவருமான புகழேந்தியிடம் பேசினோம், ``இதுபோன்ற கூட்டங்களை அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால், அது கொரோனா பரவல் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்று அறிவியல் சொல்கிறது. ஆனால், தனிப்பட்ட லாபங்களுக்காக இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று அரசியல் சொல்கிறது என்ற கோணத்தில்தான் இதைப் பார்க்க வேண்டும். நிலைமை இப்படி மோசமாகிக் கொண்டிருக்கும் சூழலில், கும்பமேளாவில் இத்தனை லட்சம் பேர் கூடுவது முற்றிலும் தவறானது. அதை மறுப்பதற்கில்லை. ஆனால், நாம் கும்பமேளாவை மட்டும் தவறு என்று சொல்லக் கூடாது. தவறு என்றால் எல்லாமே தவறுதான். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இயற்கை பேரழிவுகளின்போது தேர்தலையே தள்ளி வைக்க வழிவகை உள்ளது. ஆனால், இவர்கள் அதைச் செய்தார்களா? தேர்தல் பிரசாரத்தின்போது கொரோனா விதிகளை மீறி அவ்வளவு கூட்டம் கூடினார்களே அவர்கள் யார் மீதாவது நடவடிக்கை எடுத்தார்களா? இல்லவே இல்லை. இன்று ஏராளமான வேட்பாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சட்டம் என்றால் எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்? இந்தக் கேள்வி பிரதமர் மோடியிடமிருந்து கேட்கப்பட வேண்டும்.   Hindu devotees gather to take holy dips in the Ganges River during Kumbh Mela AP Photo/Karma Sonam   அயோத்தியில் நடந்த பூஜையில் கலந்துகொண்ட ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பூஜையின்போது பிரதமர் நரேந்திர மோடிதான் அவரை கைத்தாங்கலாகக் கூட்டிச் சென்றார். ஆனால், மோடி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை, கொரோனா பரிசோதனையும் செய்துகொள்ளவில்லை. விதிகளைப் பிறப்பிப்பதுடன் நின்றுவிடாமல் அவர்களும் விதிகளைப் பின்பற்றினால்தான் மக்களும் பின்பற்றுவார்கள். கொரோனா நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பரவிக் கொண்டிருக்கிறது. ஆகையால், எந்த பேதமும் இல்லாமல் எல்லோரும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனாவை வெல்ல முடியும்" என்றார். https://www.vikatan.com/news/india/govt-should-have-been-restricted-kumbh-mela-2021-gatherings-amidst-pandemic?fbclid=IwAR2ZRWRYk64OUcuzh416WdbHyEKjDBHtHLk9WO8v-2FNnNY-wWSIx9PLL6s?utm_source=Newsleter&utm_medium=email&utm_campaign=17th_apr_2021_Cont6
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.