Jump to content

ஈழத்து பாரம்பரிய பலகாரமான வாய்ப்பன் முறையான செய்முறை விளக்கங்களுடன்

Recommended Posts

 • Replies 115
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

போளி யாழ்ப்பாணத்திலும் பிரபலமாக இருந்தது.....மாலயன் கபே அதுக்கு பிரபல்யம். மற்றும் தாமோதர விலாஸ், லக்சுமி விலாஸ், பரிசித்து விலாஸ் போன்ற எல்லா இடங்களிலும் கிடைக்கும்......! முன்பு போண்டா என்றால்

https://youtu.be/rpLuCD1KVq4

1. அரிசிமா பிட்டும் கீரையும் (மாமங்க திருவிழாவில் வரிசைக்கு இருந்து விற்பார்கள்). டவுனிலும் முன்பு விற்பார்கள். இப்போ இல்லை. 2. முட்டித் தயிர் ( அட எங்கட ஊரில இல்லாத தயிரே எண்டு கேக்கபடாது, நான்

 • கருத்துக்கள உறவுகள்

எனக்குள்ள கேள்வி...

வாய்ப்பன் உண்மையிலேயே எங்கள் பாரம்பரிய உணவு வகைக்குள் வருமா.. 🤔

(விரும்பிச் சாப்பிடுவேன் என்பது வேறு விடயம். நன்றி ஞ்சி😆)

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

எனக்குள்ள கேள்வி...

வாய்ப்பன் உண்மையிலேயே எங்கள் பாரம்பரிய உணவு வகைக்குள் வருமா.. 🤔

(விரும்பிச் சாப்பிடுவேன் என்பது வேறு விடயம். நன்றி ஞ்சி😆)

நிட்சயமாக.. எண்பது வயதில் இருப்பவர்களை உங்களிற்கு என்ன பலகாரம் பிடிக்கும் என்று கேட்டால் பெரும்பாலானவர்களின் பதில் வாய்ப்பனாகத்தான் இருக்க முடியும்..நன்றி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாய்ப்பன்  =  வாழைப்பழ  bun   (மா  சீனி  வாழைப்பழம்)😀

 • Like 2
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nige said:

ஈழத்து பலகாரங்கள் வித்தியாசமாக உள்ளது. பகிர்விற்கு நன்றி ..👍

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் திராட்சை வத்தல் எல்லாம் மேலதிகமாய் சேர்த்திருக்கின்ரீர்கள்.....சுவையும் சூப்பராய்தான் இருக்கும்.....நன்றி சகோதரி.....!   👍

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nige said:

நிட்சயமாக.. எண்பது வயதில் இருப்பவர்களை உங்களிற்கு என்ன பலகாரம் பிடிக்கும் என்று கேட்டால் பெரும்பாலானவர்களின் பதில் வாய்ப்பனாகத்தான் இருக்க முடியும்..நன்றி

பல்லு கில்லு ஒண்டும் இல்லாட்டில் வாய்ப்பன் தானே தஞ்சம்...?
நமக்கு மிக்சர் பக்கோடா எல்லாம் ஒகே.....
இப்பதானே 65...

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

எனக்குள்ள கேள்வி...

வாய்ப்பன் உண்மையிலேயே எங்கள் பாரம்பரிய உணவு வகைக்குள் வருமா.. 🤔

(விரும்பிச் சாப்பிடுவேன் என்பது வேறு விடயம். நன்றி ஞ்சி😆)

ஆராயக்கூடாது, அனுபவிக்க வேணும் என்னைப் போல.😄

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஈழத்து பலகாரங்கள் வித்தியாசமாக உள்ளது. பகிர்விற்கு நன்றி ..👍

சில பலகாரங்களில் வித்தியாசம் உண்டுதான்..நன்றி தமிழ்தேசியன்

Link to post
Share on other sites

வாய்ப்பன் எப்பவும் எனக்கு பிடித்த பலகாரம். நினைவு தெரிந்த நாளிலிருந்து சாப்பிட்டு வருகின்றேன். ஊரில் இருக்கும் போது  வளவில் விளைந்த நல்லா பழுத்த கதலியில் வாய்ப்பன் செய்து அம்மா தந்ததில் இருந்து இன்றுவரைக்கும் என்னை தொடருகின்றது.

நான் கடவுள் நம்பிக்கை இருந்த காலப்பகுதியில் ஊருக்கு போகும் போது தவறாமல் போகும் கோவில் நயினாதீவு. நயினாதீவில் நாகம்மன் கோயிலுக்கு அருகில் கிடுகுகளால் ஆன சின்ன கடை இருந்தது (இப்பவும் இருக்கின்றதா எனத் தெரியவில்லை). இக் கோயிலுக்கு போகும் போது காலையில் இருந்து பச்சைத் தண்ணீர் கூட குடிக்காமல் போய் கோவிலில் கிடைக்கும் தீர்த்தத்தினைத் தான் முதன் முதலில் குடிப்பது. அதன் பின் இந்த சின்னக் கடைக்கு போய் அங்கு விற்கும் வாய்ப்பனை வாங்கி உண்பது உண்டு. வேறு எங்கும் கிடைக்காத ஒரு சுவை இந்த கடையில் கிடைக்கும்.

வாய்ப்பன் என்றதும் எப்பவும் நினைவில் வருவது நயினாதீவு வாய்ப்பன் தான். 

நினைவுகளை மீட்டிப் பார்க்க சந்தர்ப்பம் தந்த nige இற்கு நன்றி.

 • Like 1
Link to post
Share on other sites

கிழக்கில் இது இல்லை  ஆனால் வோளை என்று சொல்வார்கள் அது வெறு மா வோளையாக இருக்கும் சீனி சேர்த்து இருப்பார்கள் யாழ்ப்பாணத்து இனிப்பு பணியாரங்களும் பெயரும் வித்தியாசம்தான் 

இதே போல வழைப்பழம் இட்டு தட்டையாக செய்வதை வாரப்பம் என்பார்கள் இங்கு  ஒரு வேளை வாய்ப்பன் தான் வாரப்பமானதாக மாறி இருக்குமோ தெரியல நாளைக்கு அம்மம்மா கிழவியை கேட்டு தெரிஞ்சிக்கணும் 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

பல்லு கில்லு ஒண்டும் இல்லாட்டில் வாய்ப்பன் தானே தஞ்சம்...?
நமக்கு மிக்சர் பக்கோடா எல்லாம் ஒகே.....
இப்பதானே 65...

ஒரு இலக்கம் தலைகீழாய் வந்திருக்கு. ஒருக்கா திருத்திவிடுங்கோ.. 

😎

5 hours ago, theeya said:

ஆராயக்கூடாது, அனுபவிக்க வேணும் என்னைப் போல.😄

குழம்பு ருசியாயிருந்தால் சரிதான் என்கிறீர்.. ம்ம்ம்ம்ம். 😉

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

ஒரு இலக்கம் தலைகீழாய் வந்திருக்கு. ஒருக்கா திருத்திவிடுங்கோ.. 

😎

இல்லை...  அது முடியாது.
நான் உண்மை பேசி உத்தமனாக வாழ்பவன். :cool:

 • Like 1
Link to post
Share on other sites
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கில் இது இல்லை  ஆனால் வோளை என்று சொல்வார்கள் அது வெறு மா வோளையாக இருக்கும் சீனி சேர்த்து இருப்பார்கள் யாழ்ப்பாணத்து இனிப்பு பணியாரங்களும் பெயரும் வித்தியாசம்தான் 

இதே போல வழைப்பழம் இட்டு தட்டையாக செய்வதை வாரப்பம் என்பார்கள் இங்கு  ஒரு வேளை வாய்ப்பன் தான் வாரப்பமானதாக மாறி இருக்குமோ தெரியல நாளைக்கு அம்மம்மா கிழவியை கேட்டு தெரிஞ்சிக்கணும் 

யாழ்பாணத்திலும் போளை உண்டு. 

கிழக்கில் போலன்றி யாழில் வாழை தோட்டங்கள் அதிகம். அதனால் விற்பனையாகாமல் மிஞ்சும் நன்கு பழுத்த பழங்களை உணவாகும் ஒரு உத்திதான் இதுவாம்.

Ball போல இருப்பதால் போளை.

வாழப்பழ bun -வாழைபண் - வாய்ப்பன்.

உண்மை பொய் தெரியா -கேள்வி ஞானம். 

22 hours ago, Kapithan said:

எனக்குள்ள கேள்வி...

வாய்ப்பன் உண்மையிலேயே எங்கள் பாரம்பரிய உணவு வகைக்குள் வருமா.. 🤔

(விரும்பிச் சாப்பிடுவேன் என்பது வேறு விடயம். நன்றி ஞ்சி😆)

வரும் ஆனால் 300 வருடங்களில் வந்த உணவு என்றே நினக்கிறேன்.

சொல்ல முடியாது நாளைக்கே புறநானூறில் “வாய்பன் நிர்கர்த வழவழ வாயன்” என்று ஒரு வரி வருகிறது என்று யாரும் சொல்ல கூடும்.

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

நீங்கள் திராட்சை வத்தல் எல்லாம் மேலதிகமாய் சேர்த்திருக்கின்ரீர்கள்.....சுவையும் சூப்பராய்தான் இருக்கும்.....நன்றி சகோதரி.....!   👍

நன்றி Suvy

13 hours ago, நிழலி said:

வாய்ப்பன் எப்பவும் எனக்கு பிடித்த பலகாரம். நினைவு தெரிந்த நாளிலிருந்து சாப்பிட்டு வருகின்றேன். ஊரில் இருக்கும் போது  வளவில் விளைந்த நல்லா பழுத்த கதலியில் வாய்ப்பன் செய்து அம்மா தந்ததில் இருந்து இன்றுவரைக்கும் என்னை தொடருகின்றது.

நான் கடவுள் நம்பிக்கை இருந்த காலப்பகுதியில் ஊருக்கு போகும் போது தவறாமல் போகும் கோவில் நயினாதீவு. நயினாதீவில் நாகம்மன் கோயிலுக்கு அருகில் கிடுகுகளால் ஆன சின்ன கடை இருந்தது (இப்பவும் இருக்கின்றதா எனத் தெரியவில்லை). இக் கோயிலுக்கு போகும் போது காலையில் இருந்து பச்சைத் தண்ணீர் கூட குடிக்காமல் போய் கோவிலில் கிடைக்கும் தீர்த்தத்தினைத் தான் முதன் முதலில் குடிப்பது. அதன் பின் இந்த சின்னக் கடைக்கு போய் அங்கு விற்கும் வாய்ப்பனை வாங்கி உண்பது உண்டு. வேறு எங்கும் கிடைக்காத ஒரு சுவை இந்த கடையில் கிடைக்கும்.

வாய்ப்பன் என்றதும் எப்பவும் நினைவில் வருவது நயினாதீவு வாய்ப்பன் தான். 

நினைவுகளை மீட்டிப் பார்க்க சந்தர்ப்பம் தந்த nige இற்கு நன்றி.

ஒரு குட்டிக் கதை வாசித்த உணர்வு..நன்றி நிழலி . என்ர வாய்ப்பனை விட உங்கள் கதை super 

13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கில் இது இல்லை  ஆனால் வோளை என்று சொல்வார்கள் அது வெறு மா வோளையாக இருக்கும் சீனி சேர்த்து இருப்பார்கள் யாழ்ப்பாணத்து இனிப்பு பணியாரங்களும் பெயரும் வித்தியாசம்தான் 

இதே போல வழைப்பழம் இட்டு தட்டையாக செய்வதை வாரப்பம் என்பார்கள் இங்கு  ஒரு வேளை வாய்ப்பன் தான் வாரப்பமானதாக மாறி இருக்குமோ தெரியல நாளைக்கு அம்மம்மா கிழவியை கேட்டு தெரிஞ்சிக்கணும் 

பிரதேசத்திற்கு பிரதேசம் பெயர்கள் வேறுபடலாம். எதுக்கும் அம்மம்மாவை கேட்டுப் பாருங்கோ..கருத்து பகிர்வுக்கு நன்றி..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2020 at 01:36, Kapithan said:

வாய்ப்பன் உண்மையிலேயே எங்கள் பாரம்பரிய உணவு வகைக்குள் வருமா.. 🤔

Kapithan, கோதுமை மா எங்கள் நாட்டுக்கு வந்ததற்குப் பின்னாலேதானே வாய்ப்பன் செய்ய  வாய்ப்பிருந்திருக்கும்.

முன்னர், நெல்லியடிக்குப் படம் பார்ககப் போகும் போது படம் ஆரம்பிக்குமுன்னர் வாய்ப்பன், கடலைப் பருப்பு வடை ஆகியவற்றுடன் ஒரு பிளேன் ரீயும் குடிப்பது எனது வழமை. வாழைப்பழம், கோதுமை மா, சீனி என்பவைதான் வாய்ப்பனில் உள்ளடக்கமாக அன்று இருந்தன.உலார்ந்த திராட்சை போன்றவை இடைச் செருகல்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, theeya said:

ஆராயக்கூடாது, அனுபவிக்க வேணும் என்னைப் போல.😄

திருப்பி கதைக்காதவர்.🤐

 • Haha 2
Link to post
Share on other sites
11 hours ago, nige said:

பெயர்கள் வேறுபடலாம். எதுக்கும் அம்மம்மாவை கேட்டுப் பாருங்கோ..கருத்து பகிர்வுக்கு நன்றி..

கிழக்கில் வாய்ப்பன் என்று கேள்விப்பட்டதில்லையாம் என சொன்னார்கள்

17 hours ago, goshan_che said:

யாழ்பாணத்திலும் போளை உண்டு. 

கிழக்கில் போலன்றி யாழில் வாழை தோட்டங்கள் அதிகம். அதனால் விற்பனையாகாமல் மிஞ்சும் நன்கு பழுத்த பழங்களை உணவாகும் ஒரு உத்திதான் இதுவாம்.

Ball போல இருப்பதால் போளை.

வாழப்பழ bun -வாழைபண் - வாய்ப்பன்.

உண்மை பொய் தெரியா -கேள்வி ஞானம். 

ம் ஆனா கிழக்கில் பயற்றம் வோளை மிக நன்றாக இருக்கும் அதாவது பயறை நன்றாக அவித்து அதை நன்றாக மசித்து சீனி , தேங்காய்ப்பூ போடு பிரட்டி அதை உருண்டையாக எடுத்து மாவு கொஞ்சம் கரைத்து எடுத்து அதனுள் உருண்டையாக்கிய இந்த பயற்றம் வேளையை போட்டு மீண்டும்  எண்ணெயில் போட்டு எடுப்பது மிக நன்றாக இருக்கும் பயற்றம் வோளை 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கில் வாய்ப்பன் என்று கேள்விப்பட்டதில்லையாம் என சொன்னார்கள்

ம் ஆனா கிழக்கில் பயற்றம் வோளை மிக நன்றாக இருக்கும் அதாவது பயறை நன்றாக அவித்து அதை நன்றாக மசித்து சீனி , தேங்காய்ப்பூ போடு பிரட்டி அதை உருண்டையாக எடுத்து மாவு கொஞ்சம் கரைத்து எடுத்து அதனுள் உருண்டையாக்கிய இந்த பயற்றம் வேளையை போட்டு மீண்டும்  எண்ணெயில் போட்டு எடுப்பது மிக நன்றாக இருக்கும் பயற்றம் வோளை 

இதை நாங்கள் சூசியம் எண்டு சொல்றனாங்கள்.  

யாழ் இந்துவின் கண்டின் நடா அண்ணை தந்த வாய்ப்பன் டேஸ்டுக்கு இதுவரை எவரும் செய்து தரேல்ல. 😍

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் செய்வது போல் நாங்களும் பயற்றில் செய்வோம் ஆனால் அதன் பெயர் சூசியம்.

12 hours ago, குமாரசாமி said:

திருப்பி கதைக்காதவர்.🤐

நல்ல மனிதர்

 • Like 1
Link to post
Share on other sites
21 hours ago, வாலி said:

இதை நாங்கள் சூசியம் எண்டு சொல்றனாங்கள்.  

யாழ் இந்துவின் கண்டின் நடா அண்ணை தந்த வாய்ப்பன் டேஸ்டுக்கு இதுவரை எவரும் செய்து தரேல்ல. 😍

15 hours ago, nige said:

நீங்கள் செய்வது போல் நாங்களும் பயற்றில் செய்வோம் ஆனால் அதன் பெயர் சூசியம்.

ரோல்ஸையே மிதிவெடி என்று சொல்லுற ஆட்கள் நீங்கள் சூசியம் சூனியம் எண்டுகிட்டு நல்ல பெயர வையுங்கப்பா😜

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கில் பயற்றம் வோளை மிக நன்றாக இருக்கும் அதாவது பயறை நன்றாக அவித்து அதை நன்றாக மசித்து சீனி , தேங்காய்ப்பூ போடு பிரட்டி அதை உருண்டையாக எடுத்து மாவு கொஞ்சம் கரைத்து எடுத்து அதனுள் உருண்டையாக்கிய இந்த பயற்றம் வேளையை போட்டு மீண்டும்  எண்ணெயில் போட்டு எடுப்பது மிக நன்றாக இருக்கும் பயற்றம் வோளை 

பயிற்றம் பணியாரம் என்று எங்கட பக்கம் சொல்லுவாங்கள்.
விசேட தினங்களில் இந்த பலகாரமும் செய்வாங்க.

21 hours ago, வாலி said:

இதை நாங்கள் சூசியம் எண்டு சொல்றனாங்கள்.  

யாழ் இந்துவின் கண்டின் நடா அண்ணை தந்த வாய்ப்பன் டேஸ்டுக்கு இதுவரை எவரும் செய்து தரேல்ல. 😍

சூசியம் பெரிதாக இருப்பது மென்மையானது, பயிற்றம் பணியாரம் வெளிப்பகுதி கடுமையாக இருக்கும.

நடாண்ணையின் வாடிக்கையாளரா? நானும் ஓராண்டு அவரின் வாடிக்கையாளராக இருந்துள்ளேன்.

23 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ரோல்ஸையே மிதிவெடி என்று சொல்லுற ஆட்கள் நீங்கள் சூசியம் சூனியம் எண்டுகிட்டு நல்ல பெயர வையுங்கப்பா😜

உருண்டையாக நீளமாக இருந்தால் றோல்ஸ், அதே சப்பையா அரைவட்டமாக இருந்தால் மிதிவெடி.

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பயற்றம் உருண்டை

இதன் செய் முறை வித்தியாசம்.
news_26-01-2016_15PP.jpg
 
சுசியம் 

1573647966-2273.jpgஇதற்குள் தான் பயறு அவித்து வைத்து இருப்பார்கள்

Edited by யாயினி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த நொறுக்குத் தீனிகள்: வாய்ப்பன் (வாழைப்பழ பணியாரம்), பயத்தம் பணியாரம், சிப்பி, சூசியம், போண்டா😋

சுகர் பிரச்சினை இருப்பவர்கள் வீடியோவைப் பார்க்காமல் சாப்பிடவும்😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உந்த வாய்ப்பன் பிரச்சனையாலை நான் கனநாளாய் வாழைப்பழம் வாங்குறதையே விட்டுட்டன்.  வீட்டிலை வாழைப்பழம் மிஞ்சினால் நான் தான் பலிக்கடா....😡

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • 1991ம் ஆண்டு விடுதலைப் புலிகளால் மேற்கொள்ப்பட்ட ஆகாய கடல் வெளிச் சமருக்குப் பின் பல படையணிகள் மற்றும் துறைசார் அணிகள் உருவாக்கப்பட்டன .அதில் ஒன்று தான் கடற்புறாவாக இருந்த அணி கடற்புலிகளாக மாற்றம் பெற்றது.கடற்புலிகள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டின் (1991) பிற்பகுதியில் கிளாலிக் கடல்நீரேரியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நீருந்துவிசைப்படகு மீது தாக்குதல் நடாத்தத் திட்டமிடப்பட்டது . அக்காலப்பகுதியில்தான் கடற்புலிகள் வளர்ந்துகொண்டிருந்தநேரம்.அந்த நேரத்தில் கடற்புலிகளிடம் ஆயுதபலமோ ஆட்பலமோ படகுகளின் பலமோ போதியளவு இருக்கவில்லை. இருந்தாலும் பிருந்தன்மாஸ்ரின் ராடர்மூலமான வேவுத்தகவல்களின் அடிப்படையில் மேஐர் மூர்த்திமாஸ்ரரின் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கடற்கண்ணிவெடிகளைப் பயண்படுத்தி ஒருதாக்குதல் முயற்சி எடுக்கப்பட்டது.இம்முயற்சியில் கடற்புலிகளின் கடற்தாக்குதற் தளபதி லெப்.கேணல் சாள்ஸ் அவர்களும் தளபதி லெப் கேணல் கங்கைஅமரன் அவர்களும் மேஐர் வசந்தன் அவர்கள் உள்ளிட்டவர்கள் கண்ணிவெடிகளைக் படகுகள் மூலம் எடுத்துச் சென்று பிருந்தன்மாஸ்ரரின் ராடர்மூலக்கண்காணிப்பில் வைத்தனர்.1991ம் ஆண்டு கடைசிப்பகுதியில் அக்கடற்கண்ணிவெடிகளில் சிக்கி நீருந்துவிசைப்படகு வெடித்து சிதறிமூழ்கியது .ஆனால் மூழ்கிய அப்படகிலிருந்து ஆயுதங்கள் மற்றும் பொருட்களை எவ்வாறு எடுப்பது.தலைவர் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனையின் இந்தியாவில் ஆறாம் பயிற்சிமுகாமில் பயிற்சி எடுத்தவர்களில் ஒருதொகுதியினர் கடற்பயிற்சிக்கு உள்வாங்கப்பட்டனர். இன்னும் சிலபோராளிகள் நீரடிநீச்சல் பயிற்சிக்காக உள்வாங்கப்பட்டனர். அதில் ஒருவர்தான் தளபதி கங்கைஅமரன் அவர்கள்.இவரும் நீரடிநீச்சல் பயிற்சி எடுத்தபடியால் மூழ்கிய நீருந்துவிசைப்படகிலிருந்த ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்களும் சகபோராளிகளின் துணையுடன் மீட்கப்பட்டு கடற்புலிகளின் அடுத்தகட்டவளர்ச்சிக்கு இட்டுச்சென்றது. இத் தாக்குதலில் தான் முதன்முதலாக சீனா தயாரிப்பான இலகுவாக பயண்படுத்த மற்றும் எடுத்துச் செல்லக்கூடிய பதினெட்டுக்கிலோக்கிராம் நிறையுடைய ஐம்பது கலிபர்( 50 cal ரக) துப்பாக்கிகள் உட்பட பெருமளவான புதிய கனரக மற்றும் இலகுரக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கைகளி்ல் மூர்த்திமாஸ்ரருக்கு உதவியாக கப்டன் மைக்கல் அவர்களும் பிருந்தன்மாஸ்ராருக்கு உதவியாக மேஐர் தீபன் அவர்கள் உள்ளிட்ட போராளிகளின் பங்கும் மிகவும் அளப்பரியது. இந்த நேரத்தில் தான் தலைவர் அவர்களால் நீரடிநீச்சல் பிரிவின் முக்கியத்துவம் பற்றி துணைத் தளபதி பிருந்தன்மாஸ்ரர் தளபதி கங்கைஅமரன் அவர்களுடனும் சிறப்புத்தளபதி சூசை அவர்களுக்கும் எடுத்துரைத்த தலைவர் அவர்கள் தளபதி கங்கைஅமரன் அவர்களை மேலதிகமாக நீரடிநீச்சல் பிரிவை உருவாக்கும்படி கூறினார்.அதற்கமைவாக தளபதி கங்கைஅமரன் அவர்களுடன் இந்தியாவில் நீரடிநீச்சல் பயிற்சி பெற்று 30.10.1986 அன்று காரைநகர் கடற்படைத்தளத்தில் தரித்து நின்ற கடற்படைகலங்கள்மீதான நீரடித் தாக்குதல் முயற்சியின்போது வீரச்சாவடைந்த சுலோஐன் அவர்கள் நினைவாக சுலோஐன் நீரடிநீச்சல் பிரிவு உருவாக்கப்பட்டது. சுலோஐன் நீரடிநீச்சல் பிரிவானது இரண்டாம் கட்டஈழப்போரில் பெரும் பங்காற்றியது மட்டுமல்லாமல் சுலோஐன் நீரடிநீச்சல்பிரிவில் செயற்பட்ட மகளீரனி 16.08.1994 அன்று காங்கேசன்துறை துறைமுக கடற்பரப்பில் கடற்படைக்கலங்களை மூழ்கடித்து வீரச்சாவடைந்த கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணியின் நினைவாக மகளீரனி அங்கையற்கண்ணி நீரடிச்நீச்சல்பிரிவாக மாற்றம்பெற்றது. மூன்றாம் கட்ட ஈழப்போரின் முதலாவது தாக்குதலைச் செய்ததும் இப்படையணியே. இந்தவகையில் இவர்களைப் போல அளவிலும் ஆற்றலிலும் , இராணுவ வளங்கள் குறைவாகவே உள்ள நிலையிலும் கூட , கடற்புலிகளின் சிறப்பு பிரிவான ” சிலோஜன் நீரடி நீச்சல் படையணியும் ” – ” அங்க்கையற்க்கண்ணி நீரடி நீச்சல் படையணியும் ” தமது எதிரிக் கடற்படையான சிறீலங்காக் கடற்படைக்கு முகம் கொடுத்து , இன்று வெற்றிவாகை சூடியுள்ளன. சிறீலங்காக் கடற்படையிலும் சூழியோடிகள் பிரிவொன்று நிறுவப்பட்டு , இந்தியாவில் உள்ள கொச்சின் , வெந்துருகி ஆகிய இடங்களில் பயிற்சி பெற்ற , 75 பேருக்குக் குறையாத ஆள்தொகையைக் கொண்டுள்ளபோதும் , கடற்புலிகளின் விசேட பிரிவுகளிடமிருந்து தப்புதல் என்பது அதிர்ஷ்டத்துக்குரிய ஒன்றாகும். தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றின் சுவடுகளோடு "ராஜ் ஈழம்" "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"   --> Source: FB
  • பாவம் பிரபாகரனும் அவன் பிள்ளைகளும். இந்த நன்றியில்லாத  தமிழனைவிட சிங்களவன் எவ்வளவோ மேல்.  😡
  • என்னாது   ?தொடருமா?இன்னும். தொடங்கவில்லை...முருக்கு சுட்டாரோ  யார் கண்டார்..சும்மா திரியைக் கொழுத்தி  போட்டுள்ளார்  நாங்கள்  செலவு செய்து  எண்ணை உத்துகிறோம். அது தன் பட்டில் எரிகிறது.  படங்களும்  இணைக்கவில்லை. முத்திச்சுட்ட முருக்குப்படத்தை என்றாலுமிணைத்திருக்கலாம்..😍😍😍
  • பரவாயில்லை விடுங்கோ.ஈஸ்டர் 🥚🥚🥚  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.