Jump to content

இராசராசன் ஒரு சாதி வெறியன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இராசராசன் ஒரு சாதி வெறியன்

இராசராசன் ஒரு சாதி வெறியன் போல இங்கு இருக்கிற திராவிட அமைப்புகளும் அதன் முட்டுகளும் கூறிகிட்டு இருக்காங்கள்ள இந்த கோவிலின் வட புற மண்டபத்தை மத்திய தொல்லியல் துறையினர் அடித்தளத்தை பிரித்து மிண்டும் புணரமைத்தர் அப்போது அடித்தளத்தை 8 அடி தோண்டி அதன் கீழே உள்ள முண்டு (முண்டு கற்கள் என்றால் என்ன) கற்களை வெளியில் எடுத்தனர். ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு தனி நபரின் பெயர்கள் கள்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட வரலாறு போற்றும் ஒரு பெரும் திருவிடத்தை நாம் கட்டப்போகிறோம் அது நம் பெயரில் மட்டும் இருந்துவிடக்கூடாது என்று எண்ணி மக்கள் தங்களால் இந்த திருபணிக்கு என்ன இயலுமோ அதை கொடுக்க கோரிக்கை வைத்தார் போலும் எளிய மக்கள் தங்களால் இயன்றதை கொடுத்துள்ளனர் முடியாதவர்கள் முண்டு கற்களை கொடுத்துள்ளனர் இந்த பெரும் கட்டுமானத்தை தாங்கிப்பிடிக்கும் அந்த கற்களில் பேரரசன் தன் பெயரை எழுதி போட்டுக்கொள்ளவில்லை தன் பிள்ளைகள் தன் மனைவியர் பெயரை போட்டுக்கொள்ளவில்லை தன் தேசத்தின் படைவீரர்கள் , எளிமையான வேளாண் குடிமக்கள் அவரவர் கொடுத்த கற்களைல் அவரவர் பெயர்களை பொறித்துதான் போட்டிருக்கிறார்.இது மட்டுமா ?
இந்த பெரும் கோவிலுக்கு தன் பெயரை சூட்டினார் சரி அதை சுற்றி அமைய பெற்ற திருச்சுற்று மண்டபத்திற்கு தன் மகன் பெயரை வைத்திருக்கலாம் இல்லை என்றால் தன் தேவி பெயரை வைத்திருக்கலாம் ஆனால் அவர் அதை செய்யாமல் தன் படைத்தலைவன் கிருடிணன் ராமன் என்கிற மும்முடி சோழ பிரம்மமாராயன் என்பவரை விட்டே அந்த மண்டபத்தை எடுக்க சொல்லி அதை மூன்று இடங்களில் கல்வெட்டிலும் குறிப்பிடுகிறார்.

இந்த பெருங்கோவில் தான் செய்த சாரணையாகவே அவர் காட்டியிருக்கலாம் அல்லவா ஒரு சாதி வெறியர் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும் மிக எளிய மக்கள் கொடையாக கொடுத்த கற்கள் மீதே இந்த பெரும் கோவில் நிற்கிறது இதை மட்டுமா செய்தார் இன்னும் உண்டு

இந்த கோவிலை நிர்மானம் செய்த தலைமை சிற்பி குஞ்சரமள்ளர் அவருக்கு தனது பட்டமான இராசராசன் என்பதை சேர்த்து இராசராச பெரும் தச்சன் என்றும் அங்கு வேலை செய்தவர்களுக்கு சிகை அலங்காரம் செய்தவருக்கு இராசராச பெரும் நாவிதன் என்றும் சலவை பணி செய்து வந்தவர்க்கு ஈரம் கொல்லி என்றும் இன்னும் அங்கு வேலை செய்த ஆடல் நங்கைகள், காவலர்கள்,மெய்க் காவலர்கள், தேவாரம் பாடும் ஓதுவார்கள் என்று ஆயிரத்துக்கும் மேற்படடவர்கள் பெயர் எதற்காக ஒரு சாதிவெறியர் கல்வெட்டுகளில் பதிவு செய்யவேண்டும்.

இவை அத்தனை செய்திகளையும் வாழ் நாள் முழுக்க ஆய்வு செய்து 30 கும் மேற்பட்ட நூற்களையும் எழுதி அரும் பணி செய்த ஐயா.குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் பேச்சுகளிலும் அவர் நூலான “இராசராசேச்சரத்திலும்” யான் உள்வாங்க்கியவையே… ஐயாவின் பணிக்கு இந்த காணொளியனை பரிசாக்குகிறேன். நன்றி ஐயா.

தேடல் மீமிக சுகமானது , தேடுங்கள் !

https://www.facebook.com/arampalagipar/videos/376349486985969/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.