Jump to content

இராசராசன் ஒரு சாதி வெறியன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இராசராசன் ஒரு சாதி வெறியன்

இராசராசன் ஒரு சாதி வெறியன் போல இங்கு இருக்கிற திராவிட அமைப்புகளும் அதன் முட்டுகளும் கூறிகிட்டு இருக்காங்கள்ள இந்த கோவிலின் வட புற மண்டபத்தை மத்திய தொல்லியல் துறையினர் அடித்தளத்தை பிரித்து மிண்டும் புணரமைத்தர் அப்போது அடித்தளத்தை 8 அடி தோண்டி அதன் கீழே உள்ள முண்டு (முண்டு கற்கள் என்றால் என்ன) கற்களை வெளியில் எடுத்தனர். ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு தனி நபரின் பெயர்கள் கள்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட வரலாறு போற்றும் ஒரு பெரும் திருவிடத்தை நாம் கட்டப்போகிறோம் அது நம் பெயரில் மட்டும் இருந்துவிடக்கூடாது என்று எண்ணி மக்கள் தங்களால் இந்த திருபணிக்கு என்ன இயலுமோ அதை கொடுக்க கோரிக்கை வைத்தார் போலும் எளிய மக்கள் தங்களால் இயன்றதை கொடுத்துள்ளனர் முடியாதவர்கள் முண்டு கற்களை கொடுத்துள்ளனர் இந்த பெரும் கட்டுமானத்தை தாங்கிப்பிடிக்கும் அந்த கற்களில் பேரரசன் தன் பெயரை எழுதி போட்டுக்கொள்ளவில்லை தன் பிள்ளைகள் தன் மனைவியர் பெயரை போட்டுக்கொள்ளவில்லை தன் தேசத்தின் படைவீரர்கள் , எளிமையான வேளாண் குடிமக்கள் அவரவர் கொடுத்த கற்களைல் அவரவர் பெயர்களை பொறித்துதான் போட்டிருக்கிறார்.இது மட்டுமா ?
இந்த பெரும் கோவிலுக்கு தன் பெயரை சூட்டினார் சரி அதை சுற்றி அமைய பெற்ற திருச்சுற்று மண்டபத்திற்கு தன் மகன் பெயரை வைத்திருக்கலாம் இல்லை என்றால் தன் தேவி பெயரை வைத்திருக்கலாம் ஆனால் அவர் அதை செய்யாமல் தன் படைத்தலைவன் கிருடிணன் ராமன் என்கிற மும்முடி சோழ பிரம்மமாராயன் என்பவரை விட்டே அந்த மண்டபத்தை எடுக்க சொல்லி அதை மூன்று இடங்களில் கல்வெட்டிலும் குறிப்பிடுகிறார்.

இந்த பெருங்கோவில் தான் செய்த சாரணையாகவே அவர் காட்டியிருக்கலாம் அல்லவா ஒரு சாதி வெறியர் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும் மிக எளிய மக்கள் கொடையாக கொடுத்த கற்கள் மீதே இந்த பெரும் கோவில் நிற்கிறது இதை மட்டுமா செய்தார் இன்னும் உண்டு

இந்த கோவிலை நிர்மானம் செய்த தலைமை சிற்பி குஞ்சரமள்ளர் அவருக்கு தனது பட்டமான இராசராசன் என்பதை சேர்த்து இராசராச பெரும் தச்சன் என்றும் அங்கு வேலை செய்தவர்களுக்கு சிகை அலங்காரம் செய்தவருக்கு இராசராச பெரும் நாவிதன் என்றும் சலவை பணி செய்து வந்தவர்க்கு ஈரம் கொல்லி என்றும் இன்னும் அங்கு வேலை செய்த ஆடல் நங்கைகள், காவலர்கள்,மெய்க் காவலர்கள், தேவாரம் பாடும் ஓதுவார்கள் என்று ஆயிரத்துக்கும் மேற்படடவர்கள் பெயர் எதற்காக ஒரு சாதிவெறியர் கல்வெட்டுகளில் பதிவு செய்யவேண்டும்.

இவை அத்தனை செய்திகளையும் வாழ் நாள் முழுக்க ஆய்வு செய்து 30 கும் மேற்பட்ட நூற்களையும் எழுதி அரும் பணி செய்த ஐயா.குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் பேச்சுகளிலும் அவர் நூலான “இராசராசேச்சரத்திலும்” யான் உள்வாங்க்கியவையே… ஐயாவின் பணிக்கு இந்த காணொளியனை பரிசாக்குகிறேன். நன்றி ஐயா.

தேடல் மீமிக சுகமானது , தேடுங்கள் !

https://www.facebook.com/arampalagipar/videos/376349486985969/

Link to post
Share on other sites
  • 3 weeks later...

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் சொல்வது சரிதான்.இந்த செய்தியை நானும் படித்தேன்.இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நிலை மாறி எப்படியும் வாழலாம் என்ற எண்ணம் அதிகரித்துவிட்டது.  
    • நன்றாக இருக்கின்றது. சில விடயங்கள் நெருடலாக இருந்தாலும் கதையை நகர்த்தும் விதம் வாசிக்கத் தூண்டுகிறது...பாராட்டுக்கள்
    • விழுந்த  லொத்தர் பணத்துடன்... மிஷேலின் வாழ்க்கை,  ஒரு வருடமாக.. மிக ஆடம்பரத்துடன், சந்தோசமாக போய்க் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த, அவனது  மனைவி... அவ்வப் போது கண்டித்தாலும்,  அவன்... ஒரு காதால் கேட்டு, மறுகாதால் வெளியே விட்டு விடுவான். அவனிடம்  அதிக  பணம் கையில் இருந்ததை கண்டு, பல புதிய நண்பர்கள், சேரத் தொடங்கிய பின்.. அவனது மிகுதிப் பணம் கரையத் தொடங்கியது. மிஷேல்... ஒரு சிறந்த வேலை ஆள் என்றாலும், அவனிடம்... நிர்வாகத் திறமையும், வெளியுலக தொடர்பும் இல்லாததால்... வாடிக்கையாளர் கேட்ட பொருட்களை, குறிப்பிட்ட தவணைக்குள்  அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. ஒரு தொழிற்சாலைக்கு...  பொருட்களை வாங்குபவர்கள் தான் முதலாளி என்ற,  கோட்பாட்டை.. அவன் அறிந்திருக்கவில்லை.  ஒரு வாடிக்கையாளர்... திருப்திப் படவில்லை என்றால், பத்து வாடிக்கையாளரை இழந்ததுக்கு சமன் என்று சொல்வார்கள். ஏனென்றால்... தனது அதிருப்தியை, இரண்டு பேருக்கு சொன்னாலே... பத்துப்  பேருக்கு...  அந்தச் செய்தி போய்ச் சேர்வது இயல்பு. அதன் படி... அவனது தொழிற்சாலையை, இழுத்து மூட வேண்டி வந்து விட்டது.  வாங்கிய புதுக் காரை... புது நண்பன்,  இரண்டு நாள் இரவலாக... கொண்டு போய், திருத்த முடியாத அளவுக்கு,  விபத்துக்குள்ளாகி விட்டதை அறிந்து... மிஷேல்...  மேலும் இடிந்து, போனான். வருமானம்.... சுத்தமாக, நின்று போன நிலையில்... வங்கியில்... கடனாக வாங்கிய வீட்டை, குறிப்பிட்ட தவணையில், கட்டவில்லை என்று... வங்கி  அதனை... திருப்பி எடுத்து, ஏலத்தில்  விற்று விட்டது. இதற்கு மேல்.... இந்த மனிதனுடன், வாழ முடியாது என்று, மனைவி... பிள்ளைகளை கூட்டிக் கொண்டு பிரிந்து போய் விட்டார்.  மிஷேலுக்கு...  🌠  வெள்ளி திசை 🌟  அடித்து,  🌚 ஏழரைச் சனியன் பிடிக்கும் என்று.... எல்லாம் போன பின்தான்... மெல்ல  புரிய ஆரம்பித்தது. 😎 ➡️ தொடரும்.... ✍️
    • ஆண்களும் புடவை கட்டலாமா... ஃபோட்டோஷூட் மூலம் செய்துகாட்டிய ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி! சு.சூர்யா கோமதிசெந்தில் குமார்.கோக.சுபகுணம் சமூகத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும், பெண்களைக் கொச்சைப்படுத்தும் வழக்கம் மட்டும் இன்னும் மாறவில்லை. அதன் வெளிப்பாடுதான் ஒருவரைத் திட்டும்போது பெண்ணுறுப்பைக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது, ஆண்களை அவமதிப்பதாக நினைத்துக்கொண்டு, `பொம்பள மாதிரி சேலையைக் கட்டிக்கோ' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது. பெண்களும், பெண்கள் பயன்படுத்தும் பொருள்களும் குறைந்த மதிப்பு கொண்டவை என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்தச் சீண்டல்களுக்கு காரணம். புடவை என்ன அவ்வளவு மதிப்பு குறைந்த ஆடையா? பெண்கள் பயன்படுத்துவதால் ஓர் ஆடையை எப்படிக் குறைத்து மதிப்பிட முடியும் என்பதே முதல் கேள்வியாக என் மனதில் விழுந்தது. அதற்கான பதிலைத்தான் இந்தப் போட்டோஷூட் மூலம் தந்திருக்கிறார் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி.   ஆண்களும் புடவை கட்டலாமா... ஃபோட்டோஷூட் மூலம் செய்துகாட்டிய ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி! - Men too wore saree in the past says stylist Archana Aarthi - Vikatan
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.