Jump to content

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!"


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி - திரைப்படம்

20070616155727sivaji_film_rajni.jpg

சிவாஜி திரைப்பட சுவரொட்டி

தமிழகத்தில் ரஜினிகாந்த் நடித்து நேற்று வெளியான சிவாஜி திரைப்படம் பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது.

சென்னையில் மட்டுமே 17 திரையரங்குகளில், நாள் ஒன்றுக்கு நான்கு காட்சிகள் என நாள் ஒன்றுக்கு 68 காட்சிகள். மாநிலமெங்கும் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் இதே நிலை தான்.

ஆங்கில தொலைக்காட்சி சானல்கள் மணிக்கணக்கில் சிவாஜியைப்பற்றி ஏதாவது பேசிகொண்டிருக்கின்றன. எம்.ஜி.ஆருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள மஞ்சுளா, முன்னணி இயக்குநர் லிங்குசாமி போன்றோர் திரைப்படம் மிகச்சிறப்பாக இருப்பதாகக் கூறினர்.

குறிப்பிடத்தகுந்த எழுத்தாளருமான சமூகவியலாளருமான சாருநிவேதிதா ரஜினியின் சில பிரத்தியேக அம்சங்கள், பாவனைகள் தான் அவரது செல்வாக்கிற்கு காரணங்கள் என்கிறார்.

அனுபவமிக்க சினிமா நோக்கர் ஸ்ரீதர்பிள்ளை ஆசியாவிலேயே இரண்டாவது அதிகபட்ச சம்பளம் பெறும் நடிகர் ரஜினி என்றும், அவர் இயக்குநர் சங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருடன் கூட்டணியில் உருவான திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெறும் என்கிறார்.

சினிமா வினியோகஸ்தர் அபிராமி ராமநாதன் ரஜினியினால் எவருக்கும் எப்போதும் நஷ்டமேற்படுவதேயில்லை, எம்ஜிஆருக்கு பிறகு அப்படி ஓரு நட்சத்திர அந்தஸ்தை எட்டியிருப்பவர் அவர்தான் என்கிறார்.

- BBC

ரொம்ப முக்கியம். ரஜனியை வைத்து செவ்வாயில் படம் எடுக்க NASA கால்சீட் கேட்டுருக்கிறதாம். போய் உருப்படும் வழியை பாருங்கள்

Link to post
Share on other sites
 • Replies 217
 • Created
 • Last Reply

நீங்களாகவே தொப்பி உங்களுக்கு அளவாக இருந்து மாட்டினால் நான் என்ன செய்வது?? :lol::)

நீங்கள் என்னைக் குறித்து இக்கருத்தை வெளியிட்டிருந்தால் ... என்று நான் எழுதியதை வாசிக்க முடியவில்லை போலும். நான் எழுதியது என்ன? நீங்கள் சொல்வதென்ன? :blink:

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் ரஜினி ஒரு நடிகன். அவருக்கு தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஏனைய பல மாநிலங்களிலும் இரசிகர்களுண்டு. ஏன் இன்று யப்பானியர்களே அவரைப் பார்த்து வியக்கவில்லையா?? அதனால் யப்பானியர்கள் முட்டாள்கள் என்று சொல்லப் போகின்றீர்களர்?? இங்கு ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த நம் குழைந்தைகள்கூட ரஜினி என்றவுடன் குதூகலிக்கின்றார்களே. அது ஏன்?? அவர்களையும் பைத்தியங்கள் என்று சொல்ல வருகின்றீர்களா??

மற்ற மாநிலத்தவனுக்கோ ஜப்பானியனுக்கோ தமிழன் இருந்தா என்ன செத்தா என்ன? ஆனால் நாங்களும் அப்படி இருக்கலாமோ?? :o

இந்த நிலையை ரஜினி ஏதோ திடீரென எட்டிவிடவில்லை. தனது கடின உழைப்பினால்த்தான் பெற்றுள்ளார். அந்த உழைப்பை இரசிப்பதில் எதுவிதத்திலும் தப்பில்லை.

உழைப்பை மதியுங்கள்.. யார் வேண்டாமென்றது..

இந்நிலையில் அவரால் எந்த மாநிலத்தவரையும் எதிர்த்துக் கருத்துக்கள் சொல்லிவிட முடியாது. அவரின் படங்கள் பல கோடியில் விலை போவதும் இதனால்த்தான். அவரை நம்பி கோடிக்கணக்கில் முதல் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை பாதிக்கும் வகையில் அவரால் நடந்து கொள்ளவும் முடியாது. இதனைத் தமிழ்நாட்டு மக்களே புரிந்து கொண்டுள்ளபோது. நமக்கேன் முதலைக் கண்ணீர். :):huh:

இதென்ன வாதம்.. வியாபாரத்துக்காக எதையும் செய்யலாம் என்கிறீர்கள். :blink:

ஆக, தமிழ்நாட்டு மக்கள் ரஜினியின் சர்வதேசப் புகழை முன்னிட்டு அவரின் தமிழ்விரோதப் போக்கை விட்டுவைத்திருக்கிறார்கள். ஆகா... விளங்கிவிட்டது..!

இது முதலைக் கண்ணீரல்ல. தமிழ்நாட்டில்உள்ளவர்களும் தமிழர் என்பதால் வரும் உணர்வு. உங்கள் கதையைப் பார்த்தால், வைகோ, ராமதாஸ், நெடுமாறன் ஆகியோரின் ஈழப்பாசமும் முதலைக் கண்ணீராக இருக்குமோ?! :blink:

முதலில் எனது எதிர்ப்பு ரஜினி என்கிற நடிகனைக் குறித்தல்ல. ரஜினி என்கிற தனிமனிதனின் தமிழ் விரோதப்போக்கையே நான் எதிர்க்கிறேன். :lol: விளங்கிக் கொள்ளுங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஐயா டங்குவார் (நல்ல பெயர்)

அரங்கன் என்ற முகமூடியை சிலர் தமது விருப்பத்திற்காக இங்கே பாவித்துள்ளார்கள். இன்று தாயகத்திலுள்ள நிலைமையில் அங்கிருக்கும் ஒருவருக்கு ரஜினியின் திரைப்படம் பற்றிச் சிந்திக்க நேரம் வருமா?? அடுத்தவனை முட்டாளாக்கி அதில் சுகமனுபவிக்க நினைக்கின்றார்கள். அதில் உம்போன்றோர் விட்டில்பூச்சிகள் போல் இலகுவில் விழுந்துவிடுகின்றீர்கள். ரஜினி என்கிற தனிமனிதனின் தமிழ் விரோதப்போக்கென்று உம்மால் குறிப்பிடப்படுகின்றவை கட்டுரையில் இடம்பெற்றவை தானென்றால் உம்மை நினைக்க சிரிப்பாகத்தான் வருகின்றன. 1992 இல் வெளியிட்டதாகச் சொல்லப்படும (எந்தவித ஆதாரமுமில்லாது) விடயங்கள் தொடர்பாக சிலருக்கு 2007 இல் தான் ரோசம் பொத்துக் கொண்டு வருகின்றது. அதில் சொல்லப்பட்ட விடயங்கள் உண்மையானவையாக இருந்திருந்தால் தமிழ்நாட்டு தமிழர்கள் சும்மா இருந்திருப்பார்கள் என்று நம்புகின்றீரா?? அல்லது அவர்கள் சூடு சொரணையில்லாதவர்கள் என்று சொல்ல வருகின்றீர்களா?? இலங்கையிலிருக்கும் மலையகத் தமிழ்மக்களுக்கு நடக்கும் அநியாயங்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நாம் தமிழ்நாட்டுத் தமிழ்மக்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்ற உமது வாதத்தை கேட்டுச் சிரித்து எனது வயிறு புண்ணாகிப் போனது தான் மிச்சம். ..ம்.... ம்.... தொடருங்கள் உங்கள் நகைச்சுவையை. :lol::huh::):lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் இப்படத்தைப் பார்க்கினமோ இல்லையோ, ஆனால் இப்படத்தை நான் திரை அரங்கில் சென்று பார்க்க மாட்டேன். முன்பு நான் புறக்கணித்த திரைப்படம் - மும்பாய் எக்ஸ்பிரஸ். மருத்துவர் தமிழ் குடிதாங்கி, திரு.திருமாவளவன் அவர்கள் தமிழ்ப் பெயர் சூடாத தமிழ்ப் படங்களைப் புறக்கணிக்கச் சொல்லி இருந்தார்கள். இதனால் சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தமிழ்ப் பெயர்களில் அல்லாத பெயர்கள் உள்ள படங்களின் பெயர்களை தமிழ்ப் பெயருக்கு மாற்றினார்கள். ஆனால் கமலகாசன் நடித்து தயாரித்த மும்பாய் எக்ஸ்பிரஸ் என்ற பெயரை மாற்றவில்லை. இதனால் இப்படத்தினை புறக்கணிக்குமாறு தமிழ் மீது பற்றுள்ள அமைப்புக்கள் அறிவித்தன. சிட்னியில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. நண்பர்கள் எனக்கு இப்படம் பார்க்க கட்டணம் எடுப்பதாகக் கூறி இருந்தாலும், நான் இப்படத்தை திரை அரங்கில் சென்று பார்க்காது புறக்கணித்தேன். இப்பொழுதும் எனக்குத் தெரிந்தவர்கள் சிவாஜி படம் நல்ல படம் . திரைஅரங்கில் சென்று பார்க்க வேண்டிய படம் என்று சொன்னார்கள். அப்படம் என்ன நல்லபடமாக இருந்தாலும் நான் திரை அரங்கில் சென்று பார்க்க மாட்டேன். இப்படம் சிட்னியில் நன்றாக ஒடினாலும் எனக்கு அக்கறை இல்லை. மற்றவர்கள் புறக்கணிக்காது விட்டாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால் நான் போய்ப் பார்க்க மாட்டேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இந்த திரைபடத்தை பார்க்க மாட்டேன்

Link to post
Share on other sites

கன்னட ரஜனி என்ற அழுத்தமும் அவரின் கன்னட சார்பான நடவடிக்கைகளும் கட்டுரையில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளத

Link to post
Share on other sites

நானும் இந்த திரைபடத்தை பார்க்க மாட்டேன்

சா நீங்க பார்கவில்லை என்று ரஜனி அழபோறார்

:lol::) :P :angry:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யார் இப்படத்தைப் பார்க்கினமோ இல்லையோ, ஆனால் இப்படத்தை நான் திரை அரங்கில் சென்று பார்க்க மாட்டேன். முன்பு நான் புறக்கணித்த திரைப்படம் - மும்பாய் எக்ஸ்பிரஸ். மருத்துவர் தமிழ் குடிதாங்கி, திரு.திருமாவளவன் அவர்கள் தமிழ்ப் பெயர் சூடாத தமிழ்ப் படங்களைப் புறக்கணிக்கச் சொல்லி இருந்தார்கள். இதனால் சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தமிழ்ப் பெயர்களில் அல்லாத பெயர்கள் உள்ள படங்களின் பெயர்களை தமிழ்ப் பெயருக்கு மாற்றினார்கள். ஆனால் கமலகாசன் நடித்து தயாரித்த மும்பாய் எக்ஸ்பிரஸ் என்ற பெயரை மாற்றவில்லை. இதனால் இப்படத்தினை புறக்கணிக்குமாறு தமிழ் மீது பற்றுள்ள அமைப்புக்கள் அறிவித்தன. சிட்னியில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. நண்பர்கள் எனக்கு இப்படம் பார்க்க கட்டணம் எடுப்பதாகக் கூறி இருந்தாலும், நான் இப்படத்தை திரை அரங்கில் சென்று பார்க்காது புறக்கணித்தேன். இப்பொழுதும் எனக்குத் தெரிந்தவர்கள் சிவாஜி படம் நல்ல படம் . திரைஅரங்கில் சென்று பார்க்க வேண்டிய படம் என்று சொன்னார்கள். அப்படம் என்ன நல்லபடமாக இருந்தாலும் நான் திரை அரங்கில் சென்று பார்க்க மாட்டேன். இப்படம் சிட்னியில் நன்றாக ஒடினாலும் எனக்கு அக்கறை இல்லை. மற்றவர்கள் புறக்கணிக்காது விட்டாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால் நான் போய்ப் பார்க்க மாட்டேன்.

கந்தப்பு

நீங்கள் திரைப்படத்தை புறக்கணித்தால் ரஜனி இனிமேல் தான் நடிப்பதில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டாராம். :lol::)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் புறக்கணித்தால் ரஜனி அந்த முடிவுக்குத்தான் வர வேண்டி வரும்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வெகுவிரைவில் இணையத்தில் தரவிறக்கம் செய்து www.putfile.com , http://www.dailymotion.com, http://www.veoh.com க்கு தரவேற்றம் செய்யுங்கள்!

http://www.tamiltorrents.net/forums/showthread.php?t=26109

Link to post
Share on other sites

புறக்கணிப்பது, புறக்கணிக்காமல் விடுவது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் நண்பர் ஒருவர் சொன்னது போன்று, எதை எடுத்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு சீண்டி முடிச்சு அதை அசிங்கப்படுத்தாதீர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் ரஜனியை நம்பியா போராடிக் கொண்டிருக்கின்றது?

இப்படியான விடயங்களுக்கு விடுதலைப் போரடாட்டத்தை இழுத்து அசிங்கம் செய்பவர்கள் கருத்துக்களை முதலில் புறக்கணிக்க வேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் புறக்கணித்தால் ரஜனி அந்த முடிவுக்குத்தான் வர வேண்டி வரும்!

அட...அட... நிறைய பகலில் நித்திரை செய்கின்றீர்கள் போலுள்ளது. :rolleyes::rolleyes:

Link to post
Share on other sites

அட...அட... நிறைய பகலில் நித்திரை செய்கின்றீர்கள் போலுள்ளது. :rolleyes::rolleyes:

ஓ!

அந்தப் பகல் கனவினைப் பார்த்தா பக்கம் பக்கமாக எதிர் கருத்து எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓ!

அந்தப் பகல் கனவினைப் பார்த்தா பக்கம் பக்கமாக எதிர் கருத்து எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள்.

சிலரின் சுயவிளம்பரங்களுக்காக இங்கு இன்னும் சிலர் விட்டில்பூச்சிகளாகிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தெளிவு பெற வேண்டாமா?? :rolleyes::rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவர் அதை மட்டுமே செய்யும் போது அது சரி ஆனால் அரசியல் கருத்துக்களை அவர் கூறுவதுஏன்? அவரின் படங்களை பார்த்துவிட்டு தமிழர்கள் அப்படியே விட்டுவிடுவதில்லையே அவர்பின் அணிதிரள ஆளாய் பரக்கிறார்களே அதை தடுக்க தடுக்க வேறு என்ன தான் வழி! மறுப்பு கருத்துக்களை வெளியிடும் முன் மாற்று கருத்துக்களை முன் வைக்கலாமே! இவர்களால் இந்த ரஜினி, செயலலிதா என்று தமிழக தமிழர்கள் சிக்கியிருக்கும் வரை உங்களுக்கு தார்மீக பங்களிப்பை கூட செய்யவியலாது. இது போன்ற சிறு சிறு சமாதனங்கள்தான் பெரிய பின் விளைவுகளை ஏற்ப்படுத்துகின்றன. தமிழ் நாட்டில் காவிரி பிரச்சனையில் அனைவரும் ஒன்றினைந்த போதும் அவர் மட்டும் தனி ஆவர்தனம் வாசித்து ஒரு கோடி கொடுப்பதாக ஒப்பாரி வைத்துவிட்டு தமிழர்களின் உணர்வில் சிறு சலனத்தை ஏற்படுத்தி தமிழர்களின் ஒற்றுமைக்கும் உலைவத்து தன் கன்னட பற்றை நிறுபித்து விட்டார்! அவரைஎப்படி சமாளிப்பது என்று சங்கடத்தில் நாங்கள் இருக்கும் போது நீங்கள் வேறு அவரை தலைமேல் வைக்கிறீர்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவர் அதை மட்டுமே செய்யும் போது அது சரி ஆனால் அரசியல் கருத்துக்களை அவர் கூறுவதுஏன்? அவரின் படங்களை பார்த்துவிட்டு தமிழர்கள் அப்படியே விட்டுவிடுவதில்லையே அவர்பின் அணிதிரள ஆளாய் பரக்கிறார்களே அதை தடுக்க தடுக்க வேறு என்ன தான் வழி! மறுப்பு கருத்துக்களை வெளியிடும் முன் மாற்று கருத்துக்களை முன் வைக்கலாமே! இவர்களால் இந்த ரஜினி, செயலலிதா என்று தமிழக தமிழர்கள் சிக்கியிருக்கும் வரை உங்களுக்கு தார்மீக பங்களிப்பை கூட செய்யவியலாது. இது போன்ற சிறு சிறு சமாதனங்கள்தான் பெரிய பின் விளைவுகளை ஏற்ப்படுத்துகின்றன. தமிழ் நாட்டில் காவிரி பிரச்சனையில் அனைவரும் ஒன்றினைந்த போதும் அவர் மட்டும் தனி ஆவர்தனம் வாசித்து ஒரு கோடி கொடுப்பதாக ஒப்பாரி வைத்துவிட்டு தமிழர்களின் உணர்வில் சிறு சலனத்தை ஏற்படுத்தி தமிழர்களின் ஒற்றுமைக்கும் உலைவத்து தன் கன்னட பற்றை நிறுபித்து விட்டார்! அவரைஎப்படி சமாளிப்பது என்று சங்கடத்தில் நாங்கள் இருக்கும் போது நீங்கள் வேறு அவரை தலைமேல் வைக்கிறீர்கள்

இங்கு எவரும் ரஜினியை தலைமேல் வைக்கவில்லை. ரஜினி தமிழ்நாட்டு மக்களுக்குத் தவறு செய்கின்றார் என்று உங்களுக்குத் தோன்றினால்; தமிழ்நாட்டு மக்களை விழிப்படையச் செய்யுங்கள். அதற்காக அங்கு பாடுபடுங்கள். புலம்பெயர் தமிழரிடத்தில் பாடுபட்டு எவ்வித பிரையோசனமும் இல்லை. நோய் எவருக்குள்ளதோ அவருக்குத்தான் வைத்தியம் செய்ய வேண்டும். அடுத்தவருக்கு வைத்தியம் செய்வதால் என்ன பலன்?? :rolleyes::rolleyes:

Link to post
Share on other sites

சிவராஜா

உங்களின் வருத்தம் நியாயமானது தான். சிவாஜி புறக்கணிப்பு என்பது ஒவ்வொரு மக்களின் அடிநாதத்தில் இருந்தும் வருகின்ற குரலாகவே நம்புகின்றேன்.

ஆனால் மறுபக்கம் இங்கே சிவாஜியை எதிர்ப்பவர்கள் குறித்த அமைப்புக் குறித்து தவறான கண்ணோட்டத்தைச் சமூகத்திற்கு வழங்கிடக் கூடாது என்பதே சொல்ல விரும்புவது.

எந்தக் கன்னடனும் தமிழின் தோளில் இருந்து சவாரி செய்வதை நான் என்றைக்குமே ஆதரிக்கவே மாட்டேன்

Link to post
Share on other sites

இங்கு எவரும் ரஜினியை தலைமேல் வைக்கவில்லை. ரஜினி தமிழ்நாட்டு மக்களுக்குத் தவறு செய்கின்றார் என்று உங்களுக்குத் தோன்றினால்; தமிழ்நாட்டு மக்களை விழிப்படையச் செய்யுங்கள். அதற்காக அங்கு பாடுபடுங்கள். புலம்பெயர் தமிழரிடத்தில் பாடுபட்டு எவ்வித பிரையோசனமும் இல்லை. நோய் எவருக்குள்ளதோ அவருக்குத்தான் வைத்தியம் செய்ய வேண்டும். அடுத்தவருக்கு வைத்தியம் செய்வதால் என்ன பலன்?? :rolleyes::rolleyes:

இந்தக் கருத்தும் ஏற்கக் கூடியதல்ல. சிவாராஜா இங்கு கதைப்பதற்கான உரிமையைத் தடுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை உண்டு. இது ஒரு பல்நாட்டு ஊடகம். தமிழ்நாட்டவர்கள் மட்டுமல்ல, தமிழர்கள் கூட ஒரு கன்னடனை ஒதுக்க வேண்டும் என்று உரையாடுவதில் எவ்வித தப்புமே இல்லை.

தமிழ்நாட்டில் மக்களுக்கிடையே கதைப்பதற்கு இங்கே தெளிவான கருத்துக்களைப் பெறுவதற்கான விவாதத்தைச் செய்வதில் என்ன தவறுண்டு. ஒருவர் எங்கு போய்க் கதைக்க வேண்டும் என்ற முடிவினை எடுக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இங்கு எவரும் ரஜினியை தலைமேல் வைக்கவில்லை. ரஜினி தமிழ்நாட்டு மக்களுக்குத் தவறு செய்கின்றார் என்று உங்களுக்குத் தோன்றினால்; தமிழ்நாட்டு மக்களை விழிப்படையச் செய்யுங்கள். அதற்காக அங்கு பாடுபடுங்கள். புலம்பெயர் தமிழரிடத்தில் பாடுபட்டு எவ்வித பிரையோசனமும் இல்லை. நோய் எவருக்குள்ளதோ அவருக்குத்தான் வைத்தியம் செய்ய வேண்டும். அடுத்தவருக்கு வைத்தியம் செய்வதால் என்ன பலன்?? :rolleyes::rolleyes:

சிவராஜா ஈழத்தமிழருக்காக தமிழகத்தில் போராடுபவர்களில் ஒருவர். அவருக்கு உங்களது பதில் கருத்து வேதனையளிக்கிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிவராஜா ஈழத்தமிழருக்காக தமிழகத்தில் போராடுபவர்களில் ஒருவர். அவருக்கு உங்களது பதில் கருத்து வேதனையளிக்கிறது.

நான்எழுதிய கருத்தை நீங்கள் முற்றாக விளங்கிக் கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன். எமது போராட்டத்திற்கு அவர் குரல் கொடுப்பதையும் ரஜினியை எதிர்ப்பதையும் ஒன்றாகப் போட்டுக் குளப்பாதீர்கள். ரஜினி உண்மையில் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு துரோகம் செய்கின்றாரென்றால் அதனை தமிழ்நாட்டுத் தமிழர்கள் தான் மாற்றியமைக்க வேண்டும்: இங்கு நாங்கள் ரஜினியின் திரைப்படத்தை புறக்கணிப்பதால் அந்த மாற்றம் நிகழ்ந்து விடுமா?? அப்புறக்கணிப்பு தோல்வியைத் தழுவும் போது யாருக்கு அவமானம் ??

புரிய முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

QUOTE(Vasampu @ Jun 18 2007, 06:22 PM)

இங்கு எவரும் ரஜினியை தலைமேல் வைக்கவில்லை. ரஜினி தமிழ்நாட்டு மக்களுக்குத் தவறு செய்கின்றார் என்று உங்களுக்குத் தோன்றினால்; தமிழ்நாட்டு மக்களை விழிப்படையச் செய்யுங்கள். அதற்காக அங்கு பாடுபடுங்கள். புலம்பெயர் தமிழரிடத்தில் பாடுபட்டு எவ்வித பிரையோசனமும் இல்லை. நோய் எவருக்குள்ளதோ அவருக்குத்தான் வைத்தியம் செய்ய வேண்டும். அடுத்தவருக்கு வைத்தியம் செய்வதால் என்ன பலன்?? :rolleyes::rolleyes:

இந்தக் கருத்தும் ஏற்கக் கூடியதல்ல. சிவாராஜா இங்கு கதைப்பதற்கான உரிமையைத் தடுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை உண்டு. இது ஒரு பல்நாட்டு ஊடகம். தமிழ்நாட்டவர்கள் மட்டுமல்ல, தமிழர்கள் கூட ஒரு கன்னடனை ஒதுக்க வேண்டும் என்று உரையாடுவதில் எவ்வித தப்புமே இல்லை.

தமிழ்நாட்டில் மக்களுக்கிடையே கதைப்பதற்கு இங்கே தெளிவான கருத்துக்களைப் பெறுவதற்கான விவாதத்தைச் செய்வதில் என்ன தவறுண்டு. ஒருவர் எங்கு போய்க் கதைக்க வேண்டும் என்ற முடிவினை எடுக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு

தூயவன்

நீங்களும் எனது கருத்தை தவறாகவே புரிந்துள்ளீர்கள். சிவராஜாவை இங்கு கருத்து வைக்க வேண்டாமென நான் எழுதவில்லை புலம்பெயர் தமிழரிடம் ரஜினி படத்தை புறக்கணிக்கச் சொல்வதில் எவ்வித பிரையோசனமுமில்லை என்பதையே எழுதினேன். லிசானுக்கு எழுதிய பதிலை பாருங்கள். நீங்களும் புரிந்து கொள்வீர்களென நம்புகின்றேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

...

புரிய முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்.

புரிய வைத்ததற்கு நன்றிகள்.

ஆனால் இன்னும் ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. நீங்கள் சிவாஜி-ரஜனியைப் புறக்கணிக்கிறீர்களா இல்லையா ?

ஏனென்றால் இத் திரியில் உங்களது ஏனைய கருத்துக்களின் பொருள் எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புரிய வைத்ததற்கு நன்றிகள்.

ஆனால் இன்னும் ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. நீங்கள் சிவாஜி-ரஜனியைப் புறக்கணிக்கிறீர்களா இல்லையா ?

ஏனென்றால் இத் திரியில் உங்களது ஏனைய கருத்துக்களின் பொருள் எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.

இங்கு சிவாஜி திரைப்படத்தை புறக்கணிப்பது தவறு என்று சுட்டிக்காட்டியே எனது கருத்துக்களைப் பகிர்ந்திருக்கின்றேன். அதனை வைத்தே நான் என்ன சொல்கின்றேன் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையென்றால் நான் என்ன சொல்லியும் உங்களால் புரிந்து கொள்ள முடியயாது.

அதுமட்டுமல்ல இன்னும் நான் சிவாஜி திரைப்படத்தைப் பார்கவில்லை. காரணம் புறக்கணிப்பல்ல நேரம் கிடைக்கவில்லை. இப்போதாவது புரிந்ததா??

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.

ரஜனியின் ரசிகர்கள் இங்கு இருப்பது தெரியாமல் பேசிவிட்டேன். மன்னிக்கவும்.

:rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.

ரஜனியின் ரசிகர்கள் இங்கு இருப்பது தெரியாமல் பேசிவிட்டேன். மன்னிக்கவும்.

:D

ஒரு திரைப்படத்தை பார்பதற்கு அப்படநாயகனின் இரசிகராகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. :rolleyes: அதுசரி இவையெல்லாம் எங்கே உங்களுக்குப் புரியப் போகின்றது. :rolleyes::(

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அது சரி... அவர்களால் இங்கு கொரோனா கொண்டுவரப் பட்டிருந்தால் அதனை அழிக்க எத்தனை மில்லியன் வேண்டும்.??????????? இந்தப் பணத்தைப் பெறுவதற்கு சிறீலங்கா, சீனாவுக்குப் படுக்கை போடுமா? அத்துடன் இந்தியாவுக்கும் பாய் விரிக்குமா.?? 🤔🤔🤔🤔😂🤣    10 இலட்சத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் காணப்படுகின்ற நாடாக உக்ரேன் காணப்படுகிறது. வீரகேசரி.
  • அந்தரங்க கட்டிலுக்கு அதிகம் ஆசைப்படுபவன் ...ஆஸ்பத்திரி கட்டிலுக்கு ...அனுமதி கேட்கிறான் ....!!! மத மாற்றங்கள் பிரச்சனையை ....தீர்க்காது ....!!!மன மாற்றங்களே பிரச்சனையைதீர்க்கும் ....!!! காகித கப்பலை பார்த்தபின்... தான் உண்மை கப்பலை... பார்க்கிறோம் -ஆரம்பம்.... சிறிதாகவே இருக்கும் ....முடிவு சாதனையாக .....இருக்கும் ....!!!   கரு சிதைவை காட்டிலும் ....எண்ண சிதைவே கொடூரமானது ....வளர்ந்த மனிதனையே ....கொல்கிறது.....!!! நேற்றைய பிரச்சனைகளை....நேற்றே மறந்திடுங்கள்....நாளைய பிரச்சனைகளை....இன்றே மறந்திடுங்கள்....இன்றைய பிரச்சனைக்கு ....இன்றே தீர்வு காணுங்கள்......! இன்று.... நீ எடுத்து வைக்கும்.... ஒவ்வொரு அடியிலும்.... முற்கள் போல் ஆபத்துக்களும்... பூக்கள் போல் இன்பமும் .... காத்திருக்கிறது.....!இவை உன் செயலால்... வருவதில்லை.... உன் எண்ணத்தால் வரும்.... எண்ணமே செயலாகும்....! வாளால் வெட்டும் கொடுமையை ....காட்டிலும்  கொடுமையானது ....வாயால் கொட்டும் ....வார்த்தைகள் .....!!!
  • ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான்: ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் ஏவி உலக சாதனை ஜொனாதன் அமோஸ், அறிவியல் செய்தியாளர், பிபிசி   பட மூலாதாரம், GETTY IMAGES ஒரே ஏவூர்தி (ராக்கெட்) மூலம் அதிக எண்ணிக்கையில் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியதில் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.  இதற்கு முந்திய இந்தியாவின் உலக சாதனையை இப்போது ஓர் அமெரிக்க நிறுவனம் முறியடித்துள்ளது.  அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் ஏவூர்தியிலிருந்து வேறுபட்ட வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட மொத்தம் 143 செயற்கைக்கோள்கள் நேற்று (ஜனவரி 24) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தன்னுடைய பி.எஸ்.எல்.வி. சி-37 ஏவூர்தி மூலம் 2017ம் ஆண்டு 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய உலக சாதனை இதன் மூலம், முறியடிக்கப்பட்டுள்ளது. விண்வெளித்துறையில் நிகழ்ந்து வரும் மாற்றங்களுக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது. இது ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் கோலோச்சும் என்பதற்கான அறிகுறியாக இருக்கிறது.  மிகப் பெரிய ஆய்வுக்கூடங்களில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளை கொண்டு மட்டுமே விண்வெளித்துறை சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட முடியும் என்ற காலம் மாறி, திறன்பேசி உள்ளிட்ட மின்னணு பொருட்களின் பாகங்களை கொண்டே அதிவேகமாக, சிறிய அளவில், குறைந்த செலவில், திறன் படைத்த செயற்கைக்கோள்களை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதே இந்தப் புரட்சிக்கு காரணமாக உள்ளது. அதுமட்டுமின்றி, இவ்வாறு தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள்களை புவி வலப் பாதைக்கு ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்கள் 7.2 கோடி ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் எடுத்து செல்வதால் இதற்கான வணிக வாய்ப்புகள் கூடிக்கொண்டே வருகின்றன. பட மூலாதாரம், PLANET LABS INC   படக்குறிப்பு, சூப்பர்டோவ் திட்டம் இதில் முக்கியமானது என்னவென்றால், இந்த உலக சாதனை மூலம் செலுத்தப்பட்டவற்றில் 10 செயற்கைக்கோள்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானவை. உலகம் முழுவதும் நேரடியாக செயற்கைக்கோள்களிலிருந்து அதிவேக இணைய சேவை வழங்கும் நோக்கம் கொண்டவை ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற நிறுவனங்கள். இவற்றின் தலைமை செயல் அதிகாரியான ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் என்ற லட்சிய திட்டத்தின் ஒருபகுதியாக இந்த 10 செயற்கைக்கோள்களும் விண்ணில் சீறிபாய்ந்துள்ளன. இப்போது ஃபால்கான் ஏவூர்தி செலுத்தியதில் அதிகபட்சமாக 48 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த பிளானட் என்ற ஒரே நிறுவனம் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. புவிப் பரப்பை வெகு அருகில் இருப்பதை போன்று விண்ணில் இருந்தவாறே கண்காணிக்கும் நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை கொண்ட கூட்டு திட்டத்தின் ஒருபகுதியாக இவை விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. சூப்பர்டோவ் என்றழைக்கப்படும் இந்த திட்டத்திற்காக இதுவரை 200க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் புவி வலப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த சூப்பர்டோவ் செயற்கைக்கோள்கள் ஒரு காலணி பெட்டியின் அளவிலேயே இருக்கும். மேலும், ஃபால்கான் ஏவூர்தியில் அனுப்பப்பட்டுள்ள பெரும்பாலான செயற்கைக்கோள்கள் காபி கோப்பைகளைவிட சற்றே பெரிய அளவிலும், சிலது அதைவிட சிறிதாகவும் கூட உள்ளன. ஸ்வர்ம் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்பேஸ்பீஸ் என்ற செயற்கைக்கோளும் இதில் அடக்கம். இதன் அளவு 10 செ.மீ. X 10 செ.மீ. X 2.5 செ.மீ. அளவே ஆகும். இடம் பெயரும் விலங்குகள் முதல் கப்பல் கொள்கலன்கள் வரை தரையில் உள்ள எல்லா வகை பொருள்கள், உயிரிகளிலும் பொருத்தப்பட்டுள்ள சாதனங்களை இணைக்க அவை தொலைத்தொடர்பு முனைகளாக செயல்படும். இந்த முறை ஃபால்கான் ஏவூர்தி மூலம் செலுத்தப்பட்ட மிகப் பெரிய செயற்கைக்கோள்களே ஒரு துணிப்பெட்டி (சூட்கேஸ்) அளவுக்குத்தான் இருக்கும். அவற்றில் பெரும்பாலும் ரேடார் தொழில்நுட்பத்தை மேம்படுவதற்காக ஏவப்பட்ட செயற்கைக்கோள்களே இருந்தன. பட மூலாதாரம், SWARM மிகப் பெரியதாக, ஆயிரக்கணக்கான கிலோ எடை கொண்டதாக, விண்ணில் செலுத்த நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவு பிடிப்பதாக இருந்த ரேடார் செயற்கைக்கோள்கள் தற்போது தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி காரணமாக மிகச் சிறிய அளவில், குறைந்த எடையில், குறைந்த விலையில் விண்ணுக்கு செல்வது சாத்தியமாகி உள்ளது. ஃபால்கான் ஏவூர்தி போல ஒரே நேரத்தில் ஏகப்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டத்தில் பங்கேற்பது, செயற்கைக்கோள் தயாரிப்பாளர்களுக்கு பொறுமையை சோதிக்கும், நேரம் பிடிக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது.  அதாவது, இதுபோன்ற பெரிய திட்டங்களில் பங்கேற்கும் செயற்கைக்கோள்கள் தாங்கள் நிலைநிறுத்தப்பட வேண்டிய இடத்துக்கு நேரடியாக செல்ல முடியாமல் ஏவூர்தி எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் சென்று தனக்கான நேரம் வரும்போதே தொகுப்பில் இருந்து பிரிய வேண்டிய நிலை உள்ளது. இந்த செயல்முறைக்கு வாரக்கணக்கில் ஆகக்கூடும். ஆனால், இந்த பிரச்சனையின் தீவிரத்தை குறைப்பதற்கு ஒரு மாற்று வழியும் உள்ளது. அதாவது, விண்வெளியின் ஒரு குறிப்பிட்ட சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட வேண்டிய செயற்கைக்கோள்களை ஒரு தொகுப்பதாக வைத்து அவற்றை தக்க நேரத்தில் தனியே பிரித்தனுப்பி நிலைநிறுத்த முடியும். இதற்கு 'ஸ்பேஸ் டக்ஸ்' என்று பெயர். அந்த வகையில், இந்த ஃபால்கான் ஏவூர்தியில் செயற்கைக்கோள்கள் இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. எனினும், சில விண்வெளி திட்டங்களில் செயற்கைக்கோள்களை தனியாக விண்ணில் செலுத்துவதே நோக்கமாகவும் அல்லது அவசர தேவையாகவும் கூட இருக்கும்.   பட மூலாதாரம், SPACEX   படக்குறிப்பு, ஃபால்கான் ஏவூர்தியில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையிலேயே, சிறிய ரக ஏவூர்திகளை கொண்டு விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் முறை மெல்ல பிரபலமடைந்து வருகிறது. இதுபோன்ற திட்டங்கள் பெரிய ரக ஏவூர்தியின் செலவுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தாலும், உடனடி தேவை உள்ளவர்களுக்கு தடையற்ற வழிமுறையாக உள்ளது.  இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய சிறியரக ஏவூர்தி தயாரிப்பு நிறுவனமான விர்ஜின் ஆர்பிட்டின் தலைமை செயலதிகாரி டான் ஹார்ட், தங்கள் சிறியரக ஏவூர்தியை போயிங் 747 விமானத்தின் இறக்கையிலிருந்து கூட ஏவிவிட முடியும் என்கிறார். "சம்பந்தமில்லாத பாதையில் பயணித்து, தாமதமாக செயற்கைக்கோளை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் பாரம்பரிய முறைக்கு மாற்று வேகமாக உருப்பெற்று வருகிறது. பெரிய திட்டங்களின் ஒரு பகுதியாக இருந்து தாமதமாக இலக்கை அடைவதை விட, சற்றே அதிகம் செலவழித்து செயற்கைக்கோளை குறுகிய காலத்தில் விண்ணில் விருப்பத்துக்குரிய இடத்தில் நிலைநிறுத்த விரும்புவோர் எண்ணிக்கை இனிவரும் காலங்களில் அதிகரிக்கும்" என்று அவர் கூறுகிறார். எனினும், ஒட்டுமொத்த விண்வெளித்துறையையும் அச்சுறுத்தும் பிரச்சனை ஒன்று நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. ஆம், இதுபோன்று அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருவதால் விண்வெளியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதில் முக்கிய பிரச்சனையே 'விண்வெளி குப்பை' எனப்படும் பயன்படுத்தப்படாத அல்லது செயல்பாட்டில் இல்லாத செயற்கைக்கோள்கள்தான். விண்வெளியில் செயற்கைக்கோள்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும் நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நிகழ்கின்றன என்றாலும், இதுபோன்ற விரும்பத்தகாத பிரச்சனைகளை தவிர்ப்பதற்கான சிறந்த வழிகளை கண்டறிவது என்பது காலத்தின் கட்டாயம்.   https://www.bbc.com/tamil/science-55792052  
  • எரித்தால் ஒரு பிடி சாம்பல் பிடித்தால் ஒருபிடி இதயம் இடையில் ஆயிரம் ஆயிரம் சுமைகள் ....! தெளிவான அறிவோடு பேசுங்கள்........இல்லையேல் தெரியாது என்ற அறிவோடு.....இருங்கள்......... பெண்ணின் அழுகை வலிமையானது ஆணின் அழுகை கொடூரமானது ஆண் அழுதால் அந்த குடும்பமே அழும் ....!
  • சிறப்புக் கட்டுரை: முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் வரலாற்று நாயகர்கள்! மின்னம்பலம் ராஜன் குறை மக்களாட்சி முறையில் முதலமைச்சராகப் பதவியேற்க ஒருவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்: 1) அவர் இந்திய குடிநபராக இருக்க வேண்டும்; 2) அவருக்கு 25 வயதாகி இருக்க வேண்டும்; 3) அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்; அப்படி இல்லாவிட்டால் பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் உறுப்பினராகி விடவேண்டும். இந்த தகுதிகள் உள்ள யாரும் பெரும்பான்மை சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரித்தால் முதல்வராகிவிடலாம். அவர் மக்கள் பணி, கட்சிப்பணி ஆற்றியிருக்க வேண்டும் என்றோ, தலைவராக மக்களால் அங்கீகரிப்பட்டிருக்க வேண்டும் என்றோ அவசியம் எதுவும் கிடையாது. உதாரணமாக l997ஆம் ஆண்டு பிகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டபோது, அவர் யாரும் எதிர்பாராதபடி அதுவரை அரசியல் பக்கமே வராத குடும்பத் தலைவியான தன் மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார். கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதை ஆதரித்ததால் ராப்ரி தேவி முதல்வராகப் பணிபுரியத் தொடங்கினார். அதன் பிறகு நடந்த 2000ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் அவர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியதால் மேலும் ஐந்து ஆண்டுகள் முதல்வராக இருந்தார். அடுப்படியிலிருந்த பெண் ஆட்சி செய்ய முடியுமா என முதலில் அனைவரும் கேட்டார்கள். ஆனால் பிரச்சினை எதுவும் எழவில்லை. ஆலோசனை கூற சகோதரர்கள்; ஆட்சி செய்ய அமைச்சர் குழு; நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்ள அதிகாரிகள்; அரசியலை வழிநடத்த கணவர் லாலு பிரசாத் யாதவ் என அவர் முதல்வர் பதவியை அலங்கரித்தார். வீட்டை நிர்வாகம் செய்பவரால், நாட்டை நிர்வாகம் செய்ய முடியாதா என்று கேட்டார். ராப்ரி தேவி முதலமைச்சர் ஆனாரே தவிர, அவரை ஓர் அரசியல் தலைவர் என்று கூற முடியாது. அவரது கணவர் லாலு பிரசாத் யாதவ், ஜெயபிரகாஷ் நாராயணனுடைய இயக்கத்தில் மாணவர் தலைவராக இணைந்தவர். நெருக்கடி நிலைக்குப் பிறகு 1977ஆம் ஆண்டு ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக 29 வயதில் தேர்ந்தெடுக்கப் பட்டவர். ஜனதா கட்சி பிளவுண்டபோது ஜனதா தளம் என்ற கட்சியின் தலைவரானவர். அந்தக் கட்சி ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதா தளம் என்று பிளவுபட்டபோது ராஷ்டிரீய ஜனதா தளத்தின் தலைவராகி அந்தக் கட்சியை பிகார் மாநிலத்தின் முக்கிய கட்சியாக வேர் மட்டத்தில் நிறுவியவர். இன்றும் அவர் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் இயங்கும் அந்தக் கட்சியே அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கிறது. அதற்கு எதிராக நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பாரதீய ஜனதா கட்சியும் இணைந்துதான் கூட்டணி அரசு கண்டுள்ளன. நிச்சயம் லாலு பிரசாத் யாதவ் அரசியல் தலைவர் என்ற ஆகிருதி கொண்டவர் என்பதை அவர் பிகார் அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியதிலிருந்து கூற முடியும். லாலு பிரசாத் யாதவ் பிகார் அரசியலில், சமூகத்தில் மேலோங்கியிருந்த ஆதிக்க சாதியினரின் செல்வாக்கைப் பெருமளவு தகர்த்து, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் நலனை, அவர்களது அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்தியவர். 1990ஆம் ஆண்டு அயோத்திக்கு ரத யாத்திரை சென்ற அத்வானியை கைது செய்து தன் அரசியல் ஆளுமையை நிறுவியவர். அதிலிருந்து சிறுபான்மையினர் நலனை பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றியவர். மத்திய அரசில் ரயில்வே அமைச்சராக இருந்தபோது நட்டத்தில் இருந்த இந்திய ரயில் துறையை, லாபம் ஈட்டும் துறையாக மாற்றிக் காட்டியதில் உலக அளவில் வர்த்தக நிர்வாகக் கல்வியாளர்களின் கவனத்தை ஈர்த்தவர். அவருக்கு எதிரான பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டு அவர் சிறையில் இருந்தாலும், எதிர்காலத்தில் பிகார் மாநிலம் அவரை வரலாற்று நாயகர் என்று கூறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது; இப்போதே பலர் கூறத்தான் செய்கிறார்கள். ஏனெனில் சமூகத்திலிருந்த ஏற்றத்தாழ்வை, அதிகாரக் கட்டமைப்பை சமூக நீதி அரசியலால் மாற்றியமைத்தார் என்பது அவரது புகழுக்குக் காரணம். எழுபத்திரண்டு வயதாகும் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை தற்போது சீர்கெட்டுள்ளது. இன்றைய தினம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். பிகார் உதாரணத்திலிருந்து நாம் என்ன கூற முடியும் என்றால் ராப்ரி தேவி எட்டாண்டுகள் பிகார் முதல்வராக இருந்தாலும் அவர் கட்சி அமைப்பைக் கட்டி எழுப்பியவர் என்றோ, கட்சியை வழிநடத்தியவர் என்றோ, அரசியலைத் தீர்மானித்தவர் என்றோ கூற முடியாது. அதனால் அவரை ஓர் அரசியல் தலைவராகவும் கருத முடியாது. லாலு யாதவுக்குப் பிறகு ராஷ்டிரீய ஜனதா தளத்தின் அரசியல் தலைவராகப் பொறுப்பேற்று இருப்பவர் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் என்பதை கடந்த தேர்தல் நிரூபித்துள்ளது. அறுபத்தைந்து வயதான ராப்ரி தேவி தன் மகனுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை நியமித்த பல தலையாட்டி பொம்மைகள் முதலமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள் (பொம்மை என்ற பெயரிலேயே ஒரு முதல்வர் கர்நாடக மாநிலத்தில் இருந்தார்; ஆனால் அவர் மத்திய அரசின் அதிகாரத்தை கேள்வி கேட்டவர்). முதல்வர் பதவியை வகித்ததைத் தவிர பலருக்கு அரசியல் வரலாற்றில் எந்த முக்கியத்துவமும் இருந்ததில்லை. மாநில அரசின் நிர்வாக இயந்திரத்தை தலைமைச் செயலர் வழிநடத்துவது போல, அரசியல் மேற்பார்வையாளர்களாக காங்கிரஸ் மேலிடத்தின் பிரதிநிதிகளாக பலர் ஆட்சி செய்தார்கள். எனவே முதலமைச்சர் பதவி என்பதே யார் ஒருவருக்கும் அரசியல் தலைவர் என்ற அங்கீகாரத்தையோ, வரலாற்று முக்கியத்துவத்தையோ வழங்கி விடாது. தாடிகளெல்லாம் தாகூரா என்ற பாடலைப்போல முதல்வர்கள் எல்லாம் தலைவர்களா என்றும் கேட்கலாம். தமிழகத்தின் அரசியல் வரலாறு: நிஜங்களும், நிழல்களும்   தமிழக வரலாற்றில் காற்றில் பறந்த சருகு கோபுரத்தின் மேல் ஒட்டிக்கொண்டதைப் போல முதலமைச்சர் பதவிக்கு வந்தவர் தற்போதைய முதல்வர் பழனிசாமி. கூவாத்தூர் என்ற இடத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இவர் பெயர் முதல்வராக அறிவிக்கப்பட்டபோது உணர்ச்சிவசப்பட்ட மனிதர் தவழ்ந்தே சென்று சசிகலா தாள் பணிந்து ஏற்றுக்கொண்டது காணொலியாகப் பதிவாகி சமூக ஊடகங்களில் பரவிவிட்டது. பின்னர் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இவருக்கு வாக்களித்தார்கள் என்றாலும், அந்த நம்பிக்கை இவராக ஈட்டியது அல்ல. இவர் தாள் பணிந்த அன்றைய கட்சி பொதுச்செயலாளர் சசிகலா அம்மையார் ‘வாங்கி’ தந்த நம்பிக்கை என்பது நாடே அறிந்தது. சசிகலாவின் பினாமியாகப் பதவியேற்றவர், அவருக்குத் துரோகமிழைத்து, மத்திய பாஜக அரசின் பினாமியாக நான்காண்டுகள் முதலமைச்சராக இருந்துவிட்டார். பழனிசாமிக்கு இந்தப் பதவியை வழங்கிய சசிகலாவும் ஓர் அரசியல் தலைவர் அல்லர். அவர் செல்வி ஜெயலலிதாவின் நிழல் போல அவருடன் வாழ்ந்தவர்; உடன்பிறவா சகோதரி என்று ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டவர். இருவரும் சேர்ந்து முறையற்று ஊழல் சொத்துகளை குவித்த வழக்கில்கூட ஜெயலலிதாதான் முதல் குற்றவாளி; சசிகலா இரண்டாம் குற்றவாளி. முதல் குற்றவாளி இறந்துவிட்டதால் தண்டனையிலிருந்து தப்பிவிட, இரண்டாம் குற்றவாளி சிறை சென்றார். அப்போதுதான் பழனிசாமியை முதல்வராக்கிவிட்டுச் சென்றார். அதாவது பழனிசாமி தன் பதவியை தாள் பணிந்து பெற்றதே ஓர் அரசியல் தலைவரிடமிருந்து கிடையாது. அவருடைய நிழலிடமிருந்து; பின்கட்டு அரசியல் (Backroom Politics) செய்த ஒட்டுண்ணியிடமிருந்து. அடுத்த வாரம் சிறையிலிருந்து விடுதலையாகும் சசிகலாவை அரசியலில் எதிர்த்து நிற்கும் வலிமை எடப்பாடிக்கு உண்டா என்பதே இனிமேல்தான் தெளிவாகும். ஏனெனில் இருவருமே அரசியல் தலைவர்களாக மக்களால் ஏற்கப்பட்டவர்கள் கிடையாது. ஒருவர் நிழல் அரசியல் செய்தவர்; இன்னொருவர் அந்த நிழலின் பாதை மாறிய பினாமி. சசிகலாவுக்கு இந்தச் செல்வாக்கை ஏற்படுத்திய செல்வி ஜெயலலிதாவும் கட்சிப் பணியோ, மக்கள் பணியோ செய்து உருவானவர் கிடையாது. அவரும் ஒரு நிழல்தான். திரையில் தோன்றிய நிழல். நிழல் நிஜமாகிறது என்ற பட தலைப்புக்கேற்ப நிஜமாக மாறிய நிழல். எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற நடிகருடன் கதாநாயகியாக நடித்தவர்; அவரால் கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டவர். அவரை புரட்சி தலைவி என்று அழைப்பார்கள். அவர் எந்த கொள்கையைப் பரப்பினார், என்ன புரட்சி செய்தார் என்பதை கூறுவது கடினம். ஆனால் எம்.ஜி.ஆருக்கு மக்களிடையே இருந்த செல்வாக்குக்கு அவரால் வாரிசாக முடிந்தது. காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியின் ஆதரவு உதவியது என்றால், தேர்தல் களத்தில் ராஜீவின் அகால மரணம் ஆட்சி அதிகாரத்தை பெற்றுத் தந்தது. அவரும் தி.மு.க எதிர்ப்பு என்ற எதிர்ப்புரட்சி அரசியலுக்கு வடிவம் கொடுத்து மேலும் மூன்று முறை தேர்தல்களில் வென்றார். ஆனால் தன்னுடைய கட்சியை சசிகலா துணையுடன் சர்வாதிகாரியாக இருந்து நடத்தியதிலும், அகில இந்திய அரசியலிலும் பேரங்களை நிகழ்த்தியதிலும் ஒரு கட்சித் தலைவராக தன்னை நிறுவிக்கொண்டார். ஆனால் அடிப்படையில் அவர் கட்டிய வீட்டில் குடியேறியவர்தான். எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் என்பதே அவர் அரசியல் வாழ்வின் நிழல் மூலாதாரம். அப்படி செல்வி ஜெயலலிதாவுக்கு அரசியலில் இடம் பெற்றுத் தந்த எம்.ஜி.ராமச்சந்திரனும் திரையில் தோன்றிய நிழல்தான். அரசியலில் நிழல் நிஜமான கதைதான். தமிழக வரலாற்றை நிர்ணயித்த மாமனிதர் பெரியாரிடமிருந்து பிரிந்து 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றத்தைக் கழகத்தைக் தொடங்கினார் மற்றொரு வரலாற்று நாயகரான அறிஞர் அண்ணா. அந்தக் கட்சியில் சில ஆண்டுகளுக்குப் பிறகு தன்னை இணைத்துக்கொண்ட எம்.ஜி.ஆர், கட்சியின் வளர்ச்சியை தன்னுடைய திரையுலக வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டார். திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகம் எங்கும் கிளைகளை அமைத்து, படிப்பகங்களை உருவாக்கி, பார்ப்பனரல்லாதோரான சாமானியர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தமிழர்களின் உரிமைகளுக்காக, இந்தி ஆதிக்கத்துக்கு, வடவர் ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல் புரிதலை வளர்த்தெடுத்து, பல போராட்டக் களங்கள் கண்டு, தொண்டர்கள் அளப்பரிய தியாகங்கள் செய்து, தன்னை பெரும் வரலாற்று சக்தியாக மாற்றிக்கொண்டது. அந்த இயக்கத்தின் மக்களாட்சி விழுமியங்களை, சமத்துவ சிந்தனைகளை தன் திரைப்படக் கதைகளில் வசனங்களாகவும், பாடல்களாகவும் மாற்றிக்கொண்டு கட்சி வளர்ந்தபோது தானும் வளர்ந்தார் எம்.ஜி.ஆர். அதன் காரணமாக புரட்சி நடிகர் என்று அழைக்கப்பட்ட அவர் பின்னாளில் தி.மு.கவைப் பிளந்து அதன் வெகுஜன ஆதரவு தளத்தில் பாதியை தன் வசமாக்கிக் கொண்டபோது புரட்சி தலைவர் என்று அழைக்கப்பட்டார். அவர் நிஜத்தில் செய்தது மாநில சுயாட்சி கோரிக்கையை மழுங்கடித்த எதிர்ப்புரட்சிதான். கட்சியின் பெயரிலேயே திராவிடத்தை, அகில இந்தியத்திடம் அடகு வைத்தார்.   அப்படிப்பட்ட எம். ஜி. ராமச்சந்திரன் என்ற நிழலுக்கு வரலாற்று தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தது திராவிட இயக்கத்தின் மூன்றாவது வரலாற்று நாயகரான கலைஞர் கருணாநிதி. பெரியாரும் அண்ணாவும் உருவாக்கிய திராவிட கருத்தியலை பள்ளி வயதிலிருந்தே தன் கடும் உழைப்பாலும், அரசியல் ஆற்றலாலும் வளர்த்தெடுத்து சுதந்திர இந்திய வரலாற்றில் மாநில சுயாட்சிக் குரலை அழுத்தமாகப் பதிவு செய்த அந்த வரலாற்று நாயகரின் வசனங்களைப் பேசித்தான் கதாநாயக நடிகராக வெற்றி கண்டார் எம்.ஜி.ஆர். உதாரணமாக 1950ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த மந்திரி குமாரி திரைப்படம் வெற்றியடைய காரணம் கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை, வசனம். அந்தத் திரைப்படத்தை நீங்கள் யூடியூபில் பார்த்தால் ஒன்றைக் கவனிக்கலாம். படத்தின் தொடக்கத்தில் டைட்டில் கார்டுகளை போடும்போது நடிகர்கள் என்ற தலைப்பில் எட்டு பேர்களில் ஒன்றாக எம்.ஜி.ராமசந்தர் என்ற பெயரும் இருக்கும். ஆனால் இறுதியாக கதை,வசனம் என்ற தலைப்பில் பெரிய எழுத்துகளில் மு.கருணாநிதி என்ற பெயர் இருக்கும். அந்தப் படத்தின் கதையை மட்டுமல்ல; தமிழக வரலாறு என்ற கதையை எழுதியவரும் கலைஞர் கருணாநிதி என்பதை தி.மு.க என்ற கட்சியின் எழுபத்திரண்டு ஆண்டுக்கால வரலாற்றை ஆழமாகப் படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். கட்சி பிறந்ததிலிருந்து அதன் வளர்ச்சியின் அனைத்து கூறுகளிலும் கலைஞரின் முதன்மை பங்களிப்பு நீக்கமற நிறைந்திருப்பதைக் காண்பார்கள். எம்.ஜி.ஆர் கதாநாயக நடிகர்தான்; கலைஞர் அவரை உருவாக்கிய வரலாற்று நாயகர். இன்றைய தமிழக தேர்தல் களத்தை வரலாற்று நிஜங்களும், அதன் நிழல்கள் உருவாக்கிய நிழல்களும் மோதும் களம் என கூறினால் மிகையாகாது கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி   https://minnambalam.com/politics/2021/01/25/33/tamilnadu-chifministers-political-leaders-historical-heros
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.