Jump to content

இவனிடம் எதோ இருக்கிறது - ஆர்.வி. லோஷன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவனிடம் எதோ இருக்கிறது - ஆர்.வி. லோஷன்

image-19.png

எல்பிஎல் போட்டியில் வியாஸ்காந்தின் பங்களிப்பு பற்றி, இலங்கையின் சிரேஷ்ட வானொலிக் கலைஞர் ஆர்.வி.லோஷன் முகநூலில் எழுதிய குறிப்பை வாசகர்களுக்காக தருகிறது வணக்கம் லண்டன்.. உண்மையில் இவரிடம் ஏதோ இருக்கிறது…

“எம்மில் அநேகருக்கு எமக்கு பிடித்த விடயங்களை மட்டுமே வாசிக்க, கேட்கப் பிடிக்கும்

கற்பனை உலகத்தில் எமக்குப் பிடித்தவை பிறகு பொய்யாகிவிடும் எனத் தெரிந்தும் அவற்றுள் வாழ்வதில் இப்போதைக்கு சுகம் காணலாம், பிறகு நடப்பதை பிறகு பார்க்கலாம் என்றிருந்துவிடுவோம்.

விஜயகாந்த் வியாஸ்காந்த் – ஒரு போட்டியாவது வாய்ப்புக் கிடைக்குமா என்று காத்திருந்து மூன்று போட்டிகளில் விளையாடிவிட்டான் இந்த இளம் சுழல்.

கிடைத்த வாய்ப்புக்களில் பலரையும் ஈர்த்திருக்கிறான்.

திறமை இருக்கிறது, ஆற்றலும் இன்னும் கற்றுக்கொண்டால் அனுபவத்தின் மூலமாக மெருக்கூட்டிக்கொள்வான் என்று அனைவருக்குமே நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் அந்த மூன்றாவது போட்டி தான் வியாஸ்காந்த் இந்தப் பருவகாலத்தில்

Jaffna Stallions க்காக ஆடிய கடைசிப் போட்டி என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். (என்னுடைய Jinx வாயினால் இது மாறினால் மகிழ்ச்சியடையப்போகின்ற முதலாமவன் நானே )

காரணம் Knock outsக்குத் தேவையான அணியின் பலமான சமநிலையைப் பேண சரியான combinationஐ தேடுவதற்கு முதல் நான்கு போட்டிகளை வென்ற பிறகு ஒவ்வொரு போட்டியையும் JS பயன்படுத்திக்கொண்டது.

முக்கியமான, முன்னணி வீரர்கள் அனைவரும் பூரண உடற்தகுதியோடு இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டால், இன்றைய அரையிறுதிக்குத் தமது மிகச்சசிறந்த பதினொருவரையே அவர்கள் தெரிவு செய்துகொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

திசர, அவிஷ்க, வனிது, தனஞ்சய டீ சில்வா, லக்மல், அசலங்க ஆகிய உறுதியான வீரர்களோடு, Shoaib Malik, Duanne Olivier, Usman Shinwari, Charles (or Moores) ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் உறுதியான நிலையில், அந்தப் பதினோராவது இடம் எங்களுக்கு கொஞ்சம் ஆசையைக் காட்டினாலும், அதில் மினோத் பானுக அல்லது சத்துரங்க டீ சில்வாவைப் பயன்படுத்துவார்கள் என்பது உறுதி.

வியாஸ்காந்துக்கு இந்த மூன்று போட்டி அனுபவமும், இந்த ஒரு மாத கால பயிற்சிகளும் அறிமுகமும் புதிய வழியைக் காட்டியிருப்பதோடு, தொடர்ந்து வரும் காலங்களில் டினோஷன், கபில்ராஜ், விஜயராஜ், தேனுரதன் மட்டுமில்லாமல் வேறு மாவட்டங்களில் இருந்தும் நம்மவர்களை அடையாளம் காட்டும் என்று நம்பலாம்.

காரணம் வியாஸ்காந்த் தான் விளையாடிய போட்டிகளில் காட்டிய அந்தப் பெறுபேறு இவனிடம் எதோ இருக்கிறது..

இவனைப் போன்றே இவனோடு வந்த மற்றவர்களிடமும் நிச்சயம் சர்வதேச மட்டத்துக்குக் கொண்டுவரக்கூடிய ஆற்றல்கள் ஒளிந்திருக்கின்றன என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன.

Teen age, பாடசாலை கிரிக்கெட், matting cricketஇலிருந்து வந்தவன், பதினோராம் இலக்கக்கத்தில் துடுப்பு பிடிக்கத் தெரியுமா என்ற பார்வைகளை எல்லாம் உடைத்தெறிந்தான், கிடைத்த சொற்ப வாய்ப்புக்களில்.

என்ன இன்னும் கொஞ்சம் களத்தடுப்பிலும் கலக்கியிருந்தால் முதல் தெரிவுகளில் ஒருவனாக எப்போதுமே இருக்கக்கூடியவன் தான்.

ஆனால் இது way too early. Just first introduction season.

இந்த LPL season இப்போதைக்கு அவனுக்கான visiting card.

அடுத்த #LPL 2021 ஜூலை – ஓகஸ்ட்டில் திரும்பும்போது இன்னும் புதிய Spin variation ஆயுதங்களோடும், துடுப்பாட்டத்தில் புதிய நேர்த்தியோடும், தான் இன்னும் செப்பனிடவேண்டிய களத்தடுப்போடும் ஒரு மேம்பட்ட சகலதுறை வீரனாக வியாஸ்காந்த் திரும்புவான் என்று நம்புகிறேன்.

இலங்கை அணிக்கு எதிர்காலத்தில் இன்னொரு match winning leg spinner தேவை என்பதை அழுத்தமாக VV உள்வாங்கிக்கொள்வான் என்பது எனது மிகப்பெரிய நம்பிக்கை

வனிது மட்டுமில்லை வியாஸும் இருக்கிறான் என்று திசரவும் கண்டம்பியும் பேட்டி கொடுக்கும் அளவுக்கு அவனது முன்னேற்றம் இருக்கவேண்டும்.

அத்துடன் இந்த Jaffna Stallions, Lanka Premier League ஓடு வியாஸ்காந்த் நின்றுவிடப்போவதில்லை.

(டெஸ்ட் கிரிக்கெட்டில் வியாஸ்காந்த் விளையாடவேண்டும் என்பதே எனது மிகப்பெரும் அவா. அதற்கான முழுமையான ஆற்றலைப் பார்க்கிறேன்.)

தேசிய அணியில் ஒரு நிரந்தர இடத்தைக் குறிவைக்க இந்த ஏழெட்டு மாதங்களுக்கு அவன் சரியான அடித்தளத்தை இந்த அனுபவத்தையும் அறிமுகங்களையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

தனது வளர்ச்சியையும் இருப்பையும் தக்கவைக்கும் கழகம் ஒன்று தேவை. #JaffnaStallions நிர்வாகம் இதற்கான அடித்தளத்தை முன்னெடுக்கும், முன்னெடுக்கவேண்டும்.

மற்ற நால்வருக்கும் கூட இந்த வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பாடசாலை காலத்துக்குப் பின்னதான கிரிக்கெட்டைத் தொழில்முறையாக முன்னெடுக்கும் நம்பிக்கையை எதிர்காலத் தலைமுறைக்கு ஊட்டலாம்.

" களமும் காலமும் அமைந்திருக்கிறது.

காத்திருக்கிறேன்..

என்னாலான, எம்மாலான உதவி, ஒத்துழைப்புக்கள் எப்போதும் போல கேட்காமலே கிடைக்கும்.”

https://vanakkamlondon.com/stories/2020/12/94715/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.