Jump to content

எழு எல்லாம் இயலும்..!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என் "யாழ்"அன்பு இதயங்களுக்கு!

பறந்து வந்த குருவிகள் சொன்ன பாசக் கதையிது..

எழு எல்லாம் இயலும்

*************************

large.0-02-0a-9fdde9b01bbdf77deb0be809c15a95d2dd3c68d631f3791b7c9372d7b3a06cc1_1c6da29b9be8ba.jpg.8e9b1505039a1d083e86c0dd83f92a19.jpgஇயற்கை தந்த அழகிய வாழ்வு

ஏன் தான் புரியவில்லை- மனிதா

எம்மினம் போல வானில் பறக்க

ஏன் தான் முடியவில்லை.

துக்க சுமையை சுமந்து சுமந்து

சோர்ந்துகிடக்காதே!

தூத்துவார் கதையை கேட்டு கேட்டு

துணிவை இழக்காதே!

பக்கத்துவீட்டைப் பார்த்து பார்த்து

பரிதவிக்காதே!

படித்த வேலை இல்லை இலையென

படுத்துறங்காதே!

உண்ண உணவு தேடித் தேடியே

ஊரிடம் கெஞ்சாதே!

உலகமெல்லாம் கடன் கடனென்று

உயிரை மாய்க்காதே!

இயற்கை தந்த அழகிய வாழ்வு

ஏன் தான் புரியவில்லை- உனக்கு

எம்மினம் போல வானில் பறக்க

ஏன் தான் முடியவில்லை. 

மண்ணில் பிறந்த உயிரினம் போல

மகிழ்வாய் வாழ்ந்திடலாம்-மனிதா

மனதில் உள்ள கறைகளை போக்கு

மானுடம் வெண்றிடலாம்.

அன்புடன் -பசுவூர்க்கோபி-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பசுவூர்கோபி ஒரு நல்லதொரு தன்னம்பிகை கவிதைக்கு, சோர்வுகள் வரும்போது இப்படிப்பட்ட நல்ல கவிதைகளை வாசித்தால் போதும் மனது புது தெம்புடன் இயங்க தொடங்கிவிடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, உடையார் said:

நன்றி பசுவூர்கோபி ஒரு நல்லதொரு தன்னம்பிகை கவிதைக்கு, சோர்வுகள் வரும்போது இப்படிப்பட்ட நல்ல கவிதைகளை வாசித்தால் போதும் மனது புது தெம்புடன் இயங்க தொடங்கிவிடும்

என்னை எழுத தூண்டும் உங்கள் வார்த்தைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அன்பு உடையார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைக்கு நன்றி தோழர் ..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைக்கு நன்றி தோழர் ..👍

உங்களுக்கும் உளமார்ந்த நன்றிகள் தோழர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்ன உணவு தேடுவதும், ஊரெல்லாம் கடன் வாங்குவதும் தப்பு என்று சொல்லும் கவிதை.....ஆனால் யார் கேட்கிறார்கள்.....மிக நல்ல கவிதை கோபி.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையாய் மனிதன் இருந்திருந்தால் குழப்பம் கலக்கம் ஏதுமில்லை ஆனால் நாம் வளர்ந்ததோடு ஆசைகளையுமல்லவா வளர்த்துக்கொண்டோம் அதுதான் பிரச்சனைகளுக்கே காரணம். நல்லதொரு கவிதை பாராட்டுக்கள் பசுவூர்க் கோபி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

உன்ன உணவு தேடுவதும், ஊரெல்லாம் கடன் வாங்குவதும் தப்பு என்று சொல்லும் கவிதை.....ஆனால் யார் கேட்கிறார்கள்.....மிக நல்ல கவிதை கோபி.....!   👍

நீங்கள் தரும் ஊக்கம் எனது ஆக்கத்துக்கு பெரிதும் உதவுகிறது  நன்றிகள் சுவி 

15 hours ago, Kavallur Kanmani said:

குழந்தையாய் மனிதன் இருந்திருந்தால் குழப்பம் கலக்கம் ஏதுமில்லை ஆனால் நாம் வளர்ந்ததோடு ஆசைகளையுமல்லவா வளர்த்துக்கொண்டோம் அதுதான் பிரச்சனைகளுக்கே காரணம். நல்லதொரு கவிதை பாராட்டுக்கள் பசுவூர்க் கோபி.

உங்களின் பாராட்டு என்னை மென் மேலும் மேம்படுத்த செய்யும். அன்புடன் நன்றிகள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.