Jump to content

ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

ஆட்சிக்கு வந்தால்  இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்-  கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

சென்னை,
 
காஞ்சீபுரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்  தான் நிறைவேற்ற இருக்கும் 7 அம்ச திட்டத்தை  மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் அறிவித்தார்.
 
அதன் விவரம் வருமாறு:-
 
1. இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம்:
 
வீடுகளில் இல்லத்தரசிகள் செய்யும் பணிகள் மதிப்பிடவே முடியாதவை. எனவே அவர்களை கணக்கெடுத்து வேலை இல்லாமல் இருக்கும் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் அரசு ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
 
2. நவீன தற்சார்பு கிராமங்களை உருவாக்குதல்:
 
தமிழக மக்கள் சாக்கடையோரங்களிலும், நதிக்கரையோரங்களிலும் அவதிப்பட்டுக்கொண்டு வசிப்பதை தடுக்கும் வகையில் தற்சார்பு கிராமங்கள் உருவாக்கப்படும். சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பேணிக்காக்கும் வகையில் நவீனமாக அக்கிராமங்கள் அமையும்.
 
3. துரித நிர்வாகம்:
 
சாதாரண பஞ்சாயத்து அலுவலகம் முதல் முதல்வர் அலுவலகம் வரை காகிதங்களே இல்லாமல் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு உடனுக்குடன் அரசுக் கோப்புகள் நகரும் வகையில் துரித நிர்வாகம் அமைக்கப்படும். லஞ்ச ஒழிப்புத் துறையை மேம்படுத்தி லஞ்சமே இல்லாமல் இருக்கும் வகையில் கண்காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
 
4. சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்:
 
மக்கள் எதற்கும் வரிசையில் நிற்காமல் அவர்களது உரிமைகளை அவர்களாகவே பெறுவதற்காக மக்களைத் தேடி அரசுத் திட்டங்கள் சென்றடையும் வகையில் சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்.
 
5. மின்னணு இல்லங்களாக மாற்றுதல்:
 
குடிசை வீடுகள் முதல் அனைத்து வீடுகளுக்கும் மிக அதிவேக இண்டர்நெட் இணைப்புடன் கூடிய கணினி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் திறமையையும் தகுதியையும் கண்டறிந்து அவர்களை கல்வி, பொருளாதாரம் உள்பட அனைத்திலும் முன்னேற்றமடைய செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
 
6. இயற்கை வேளாண்மையுடன் கூடிய பசுமைப்புரட்சியை உருவாக்குதல்:
 
இயற்கை வேளாண்மைக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் நோக்கிலும் பசுமைப் புரட்சி ஏற்படுத்தப்படும். இதற்கென தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
 
7. தொழில்களை அதிகளவில் உருவாக்கி பொருளாதாரத்தில் புரட்சி ஏற்படுத்துதல்:
 
பெரு தொழிற்சாலைகள் பலவற்றை உருவாக்குவதை விட ஒவ்வொரு வட்டாரம் வாரியாக 5லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு தொழில்களை உருவாக்கி இளைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி அவர்களது பொருளாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களை முதலாளிகளாக மாற்ற முழு முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் கமலஹாசன் தெரிவித்தார்
 
Link to comment
Share on other sites

எப்படியும் ஒரு போதும் ஆட்சிக்கு வரமாட்டேன் என்ற நம்பிக்கைய்யில் சும்மா அடிச்சு விடவேண்டியது தான். காசா பணமா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லத்தரசிகளின்.... வாக்குகள் எல்லாம் கமலுக்கு விழுகுது. 😁

அடுத்த முதலமைச்சர் ஆகிறார். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே அவ்வை சண்முகியில் இல்லத்தரசி போல் நடித்த அனுபவம் இருக்குத் தானே பாவம் அதை வைச்சாவது ஊதியம் கொடுக்கலாம்.😀யாரும் திட்டாதீங்கோ இது தான் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இல்லத்தரசிகளின்.... வாக்குகள் எல்லாம் கமலுக்கு விழுகுது. 😁

அடுத்த முதலமைச்சர் ஆகிறார். 🤣

தமிழ் நாட்டில்  இல்லத்தரசிகளின் வாக்கு மட்டும் போதுமா முதலமைச்சரைதெரிவுசெய்ய....😁👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, உடையார் said:

ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

மூண்டு,நாலு பொண்டாட்டிக்காரன் எண்டது நல்லவடிவாய் தெரியுது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

131977125_1314088652300603_1888462325868

நீங்க உள் வீட்டுக் காறியாச்சே ஊதியம் எல்லாம் எதிரபார்க் கூடாது..முடிஞ்சால் உங்கள் வாக்கும் எண்ணிக்கையில் சேரட்டும்..😁

Link to comment
Share on other sites

3 minutes ago, யாயினி said:

நீங்க உள் வீட்டுக் காறியாச்சே ஊதியம் எல்லாம் எதிரபார்க் கூடாது..முடிஞ்சால் உங்கள் வாக்கும் எண்ணிக்கையில் சேரட்டும்..😁

இப்போ அவர் கமலோடு இல்லை. அது தான் எனது, உனது என பிரிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, உடையார் said:
ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு
 
1. இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம்:
 
வீடுகளில் இல்லத்தரசிகள் செய்யும் பணிகள் மதிப்பிடவே முடியாதவை. எனவே அவர்களை கணக்கெடுத்து வேலை இல்லாமல் இருக்கும் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் அரசு ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

இது நல்லதொரு திட்டம். மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹான் திருமணம் முடித்தும் முடிக்காமலும் நான்கு அல்லது அய்ந்து பெண்களுடன் வாழ்ந்தவர் அல்லது வாழ்ந்துகொண்டிருப்பவர். எனவே அவருக்கு தமிழக இல்லத்தரசிகளின் பணிச்சுமை நன்கு தெரியும். எனவே இத்திட்டத்துக்கு இல்லத்தரசிகளிடம் பெரு வரவேற்பு இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

தமிழ் நாட்டில்  இல்லத்தரசிகளின் வாக்கு மட்டும் போதுமா முதலமைச்சரைதெரிவுசெய்ய....😁👍

சட்டசபை தேர்தல் முதல்கட்ட பிரசாரம் - கமல்ஹாசன் மதுரையில் இன்று தொடக்கம் ||  Tamil News Kamal to launch MNM poll campaign from Madurai today

கமலஹாசனின்  இந்த அபாரமான திட்டத்துக்கு... 
தமிழகத்தில் உள்ள அனைத்து இலத்தரசிகளுமே,
ஓரணியில் திரண்டு... கமலுக்கு வாக்களிப்பார்கள். 👍

அத்துடன்... அவரின் சினிமா ரசிகர்களின் வாக்கும்,
அவர் நடத்தும்....
"பிக் பாஸ்" நிகழ்ச்சி ரசிகர்களின்  வாக்கும்...
கொத்தாக.. கமலுக்கு விழும்.

பிறகென்ன...  அவர்  முதலமைச்சர் தானே....   :grin: 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது EU Parliament  இல், EU இல் உள்ள வறுமை கோட்டை களைவதற்கான கொள்கையின் அங்கமாக   Universal Basic Income பற்றிய கொள்கை கலந்துரையாடலில் முதலில் முன்மொழியப்பட்டது.

சில அரசாங்ககங்கள் Universal Basic Income  என்பதை குறிப்பிட்ட பிரதேசத்தில் பரீட்சித்தமாக நடைமுறைப்படுத்தின.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

இது EU Parliament  இல், EU இல் உள்ள வறுமை கோட்டை களைவதற்கான கொள்கையின் அங்கமாக   Universal Basic Income பற்றிய கொள்கை கலந்துரையாடலில் முதலில் முன்மொழியப்பட்டது.

சில அரசாங்ககங்கள் Universal Basic Income  என்பதை குறிப்பிட்ட பிரதேசத்தில் பரீட்சித்தமாக நடைமுறைப்படுத்தின.  

இந்தமாதிரியான கொடுப்பனவு ஓரளவிற்கு வறுமைக்கோட்டை களைவதற்கு உதவியாக இருந்தாலும், இதற்கு ஒதுக்கப்படும் பணத்தினை பெறுவதற்காக மற்றைய சேவைகளை( உதாரனத்திற்கு மின்சாரம், கல்வி, சுகாதார சேவைகளை) தனியாருக்கு கொடுத்துவிடலாம் இல்லையா?  பின்பு எப்படி இது வறுமைகோட்டை குறைக்கும்?

இங்கேயும் இதைப்பற்றி ஒரு ஆய்வு நடைபெற்றது, ஆனால் முடிவு தெரியவில்லை.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்தமாதிரியான கொடுப்பனவு ஓரளவிற்கு வறுமைக்கோட்டை களைவதற்கு உதவியாக இருந்தாலும், இதற்கு ஒதுக்கப்படும் பணத்தினை பெறுவதற்காக மற்றைய சேவைகளை( உதாரனத்திற்கு மின்சாரம், கல்வி, சுகாதார சேவைகளை) தனியாருக்கு கொடுத்துவிடலாம் இல்லையா?  பின்பு எப்படி இது வறுமைகோட்டை குறைக்கும்?

இங்கேயும் இதைப்பற்றி ஒரு ஆய்வு நடைபெற்றது, ஆனால் முடிவு தெரியவில்லை.. 

அவுஸ்திரேலியா போன்ற தீவு நாடுகளுக்கு அது சாரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன் 
அரசு திட்டம் வகுத்து இறக்குமதி பொருள்களுக்கு வரியை கூட்டினால் .. உள்ளூர் உற்பத்தி 
பெருகும் ஏனெனில் கொள்வனவு கூடும். பொருளாதாரம் இஸ்திரம் அடையும்.
சரியான கணக்கீடு இல்லாமல் போனால் inflation  வழி வகுக்கும் 
சரியாக கணக்கு எடுத்து எத்தனை பேர் பெறுநர்? எவ்வளவு கொடுத்தால் 
அடிப்படை தேவைக்கு போதுமானது போன்ற கணிப்பீடு அவசியம். 

ஆடம்பரத்துக்கு $1 கூட மிஞ்சாது பார்த்துக்கொண்டால் 
வேலைசெய்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே 
இருக்கும் ஆதலால் மக்களை சோம்பேறி ஆக்கும் எனும் வாதம் மீது 
எனக்கு நம்பிக்கை இல்லை 

சுவிஸில் இப்படி ஒரு திட்டம் வகுத்து 
அங்கு நேரடி மக்கள் தீர்ப்பு ஜனநாயக அரசியல் முறைமை இருப்பதால் 
தேத்தல் வைத்தார்கள் மக்கள் நிராகரித்து வாக்களித்தார்கள். 
காரணம் மக்களுக்கு பொருளாதாரம் விளங்காது மற்றும் அடுத்தவன் 
சும்மா இருந்து பணம் பெறுவதா? எனும் பொறாமை எண்ணங்கள் ஆகும் 
சுவிஸை பொறுத்தவரை அது தேவையான ஒன்று. மக்கள் அன்றாட பொருட்களையே 
சுற்றி இருக்கும் ஜேர்மன் பிரான்ஸ் இத்தாலி ஆஸ்திரியா போன்ற நாடுகளில் சென்று 
மலிவாக வாங்கி வருகிறார்கள். அதனால் தரத்தில் கூடிய சுவிஸ் உற்பத்தி பொருளுக்கு 
உள்ளூரிலேயே சந்தை வாய்ப்பு குறைவு ..... சுவிஸ் நாட்டு பொருளாதாரம் கடந்த 15 வருடமாக மந்தமாக 
இருக்கிறது  முச்சுவல் பண்ட்ஸ் எல்லாம் நெகடீவ் வருமானம் தருபவையாக இருக்கும்போது 
புதிய முதலீடுகள் அருகி கொண்டு வருகின்றன. 
சுவிஸ் வங்கியான யுபிஸ்  எந்த லாபமும் இன்றி செல்கிறது  கடந்தமாதம் 50 கிளைகளை மூட போவதாக எங்கோ வாசித்தேன். சுவிஸில் இல்லாத எம்மை போன்றவர்கள் அந்த வங்கியில் 5லட்ஷம் சுவிஸ் பிராங் வைப்பில்  வைத்திருப்பதுக்கு எங்களிடம் மாதம் 300 சுவிஸ் பிராங்குகள் வசூலிக்கிறார்கள். 
அருனாச்சலம் படத்தில் வருவதுபோல யாருக்காவது காசை செல்வழித்தே ஆகவேண்டும் என்று ஒரு இக்கட்டு நிலை இருந்தால் மட்டுமே அங்கு சென்று வைப்பில் இட முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Automation அதிகரிக்க, அதிகரிக்க Universal Basic Income மேலை நாடுகளில் தவிர்கமுடியாத அம்சமாகிவிடும் என்றே படுகிறது.

24 minutes ago, Maruthankerny said:

சுவிஸ் தமிழர் கழுத்து கை எல்லாம் தங்கமாய் ஜொலிப்பதும் இதனால்தான்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

எந்த வேலைக்கு?
 
எந்த வேலைக்கு?
இவன் ஒரு கிறுக்கன் எதுக்கும் கேட்டு வைக்கிறது நன்று 
ஒரு வீடை பிக்பாஸ்சாக வைத்திருக்காமல் எல்லா வீட்டையும் 
பிக்பாக்ஸ் ஆக்கும் எண்ணம் கூட இந்த தலைக்குள் இருக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிசில்...வைக்கப்பட்டதேர்தல் ...எல்லாருக்கும்  ஊதியமென்பதற்க்கு...மக்கள்

விரும்பவில்லை...காலம்செல்ல..சுவிஸ் அரசு..தங்களிடம் பணமில்லையெனக்கூறி

கூடுதல்.  வரியையறவிடலாம்...என்ற பயம்...

கமல்...கூறியது...தனிய..இல்லத்துயரசிகளுக்குமட்டும்...😁🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குள்ள கேள்வி..

தமிழ்நாட்டிற்கு வேலை தேடிவரும் பிற மாநிலங்களைச் சேர்ந்தோர், 6 (?) மாதங்கள் தமிழ்நாட்டில் குடியிருந்தால் குடும்ப அட்டை வழங்கப்படும் நிலையில், முதலமைச்சர் கமலஹாசன் எந்த அடிப்படையில் யார் யாருக்கெல்லாம் எப்படி மேற்கூறிய திட்டத்தின் அடிப்படையில் சம்பளம்(?) வழங்குவார்...?

🤔

இதெல்லாம் நடக்கிற காடியமாப்பா..... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

🤣 கமல்ஹாசன் திட்டபடி வேலையே செய்யாமல் இல்லத்து அரசர்களை (அடிமைகளை) வேலை வாங்கும் அரசிகளுக்கும் ஊதியம் உண்டா என்றும் கேட்டு சொல்லுங்கோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

எனக்குள்ள கேள்வி..

தமிழ்நாட்டிற்கு வேலை தேடிவரும் பிற மாநிலங்களைச் சேர்ந்தோர், 6 (?) மாதங்கள் தமிழ்நாட்டில் குடியிருந்தால் குடும்ப அட்டை வழங்கப்படும் நிலையில், முதலமைச்சர் கமலஹாசன் எந்த அடிப்படையில் யார் யாருக்கெல்லாம் எப்படி மேற்கூறிய திட்டத்தின் அடிப்படையில் சம்பளம்(?) வழங்குவார்...?

🤔

இதெல்லாம் நடக்கிற காடியமாப்பா..... 😂

முதலில்..நிங்கள்..இந்த.கேள்விக்கு பதிலாளிக்கவும்...நடிகர் கமலஹாசனை..எப்படி..முதலமைச்சர் கமலஹாசன் என எழுதினீகள்.?😜👍

யார் அவரை முதலமைச்சராக தெரிவு செய்தர்கள்?😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kandiah57 said:

முதலில்..நிங்கள்..இந்த.கேள்விக்கு பதிலாளிக்கவும்...நடிகர் கமலஹாசனை..எப்படி..முதலமைச்சர் கமலஹாசன் என எழுதினீகள்.?😜👍

யார் அவரை முதலமைச்சராக தெரிவு செய்தர்கள்?😇

இதெல்லாம் ஒரு கேள்வியா கந்தையர்..😂

முதலமைச்சர் என்று போடும்போதே உங்களுக்கு விளங்கியிருக்க வேண்டும்..😂

உங்களுக்கு புரியாவிட்டால் யான் என் செயும்... 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  கபிதன்...நான்..தவறுதலாய் ..எழுதிவிட்டிர்களென..நினைந்தேன்.

ஆகவே..சுட்டிக்காட்டினேன்..உங்களுக்கு..நடிகர்..முதலமைச்சர்..இரண்டும்

ஒரேமாதிரியிருந்தல்...எனக்கு..எதுவித. பிரச்சனையுமில்லை..😁🤝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Maruthankerny said:

அவுஸ்திரேலியா போன்ற தீவு நாடுகளுக்கு அது சாரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன் 
அரசு திட்டம் வகுத்து இறக்குமதி பொருள்களுக்கு வரியை கூட்டினால் .. உள்ளூர் உற்பத்தி 
பெருகும் ஏனெனில் கொள்வனவு கூடும். பொருளாதாரம் இஸ்திரம் அடையும்.

அவுஸ்ரேலியாவில் கூட நிரந்தரமாக இதை வழங்குமாறு ஆய்வில் கூறவில்லை.. இந்த கொடுப்பனவு நீங்கள் வேலை தொடங்கி உங்களது வருமானம் $180k(வருடாந்த) அடையும் பட்ச்சத்தில் நிறுத்தப்படும்.. 

மேலும் நீங்கள் கூறியபடி இறக்குமதி வரியை அதிகரித்து உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்கு உள்ளூரில் உள்ள வளங்கள்( மனித வலு உட்பட) சரியாகப்பயன்ப்படுத்தப்படவேண்டும்..

உதாரணத்திற்கு இங்கே தோட்டங்களில், பண்ணைகளில் வேலை செய்யவதற்கு மனிதவளம் பற்றாக்குறை, வழமையாக வரும் seasonal workers இம்முறை வரமுடியவில்லை, உள்ளூரில் இருப்பவர்களுக்கு பண்ணைகளில் வேலைசெய்ய முடியாதாம்.. அரச உதவிப்பணத்துடன் வாழ்கிறார்கள்.. இந்த மாதிரியான சூழ்நிலையில் ABI வந்தால் சோம்பல்தான் கூடுமே தவிர கேள்வி/வழங்கல் சமநிலை அடையாது.. 

இரண்டாவது வரி அதிகரிப்பை இலகுவில் எந்த அரசியல்கட்சியுமே விரும்பாது.. 

கையில் பணம் இலகுவில் கிடைத்தால் செலவழிக்கவிரும்புவார்கள் ஆனால் எங்கே அதை செலவழிக்கிறார்கள் என்பதில்தான் இதன் பலனும் உள்ளது.. 

போதாக்குறைக்கு இவர்களது ஏற்றுமதிப்பொருட்களான நிலக்கரி, பார்லி, வைன், மாட்டிறைச்சிக்கு அதிகமாக வாங்கும் சீனா, தலையிடியை கொடுக்கத்தொடங்கிவிட்டார்கள்.. 

Link to comment
Share on other sites

கமலை கண்டாலே இல்லத்தரசிகள் தலைதெறிக்க ஓடுவினம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, இசைக்கலைஞன் said:

கமலை கண்டாலே இல்லத்தரசிகள் தலைதெறிக்க ஓடுவினம் 😁

மீண்டும், கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.