Jump to content

கொரோனா வைரஸ் புதிய திரிபு: அதிகரிக்கும் கவலைகளுக்கு ஆறுதல் தரும் நிபுணர்களின் வார்த்தைகள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் புதிய திரிபு: அதிகரிக்கும் கவலைகளுக்கு ஆறுதல் தரும் நிபுணர்களின் வார்த்தைகள்

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், EPA

கொரோனா வைரஸின் புதிய வகை திரிபுகள் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுடனான போக்குவரத்தை இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய நாடுகள் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளன. 

பிரிட்டனில் இருந்து டிசம்பர் 22 முதல் டிசம்பர் 31ஆம் தேதிவரை பயணிகள் வருகைக்கு 40க்கும் அதிகமான நாடுகள் தடை விதித்துள்ளன. இந்த நிலையில், டென்மார்க் நாட்டில் புதிய வகை வைரஸ் திரிபு காணப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அந்நாட்டுடன் ஆன போக்குவரத்தை ஸ்வீடன் நாடு நிறுத்திக் கொண்டுள்ளது. 

இந்த புதிய வகை திரிபு, ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக கருதப்பட்டாலும், அது உயிர்க்கொல்லி ஆகும் அளவுக்கு தீவிரமானது என்பதை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று சர்வதேச சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். 

இந்த நிலையில், புதிய வகை வைரஸ் திரிபுவின் தன்மை குறித்து உலக சுகாதார அமைப்பு பொதுவெளியில் கருத்து வெளியிட்டிருக்கிறது.

அந்த அமைப்பின் அவசரகால விவகாரங்கள் பிரிவு தலைமை அதிகாரி மைக் ரயான், "பெருந்தொற்று காலத்தில் புதி வகை திரிபு கண்டறியப்படுவது வழக்கமானதுதான். நிலைமை இன்னும் கையை மீறிப்போகவில்லை," என்று தெரிவித்தார். 

ஆனால், இரு தினங்களுக்கு முன்பு பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்காக், "புதிய வகை திரிபு தடையின்றி பரவும் தன்மை வாய்ந்தது," என கூறியிருந்தார். 

இதேவேளை, தென்னாப்பிரிக்காவிலும் பிரிட்டனை போலவே வைரஸ் திரிபு தென்படுவதால் அங்கிருந்து வரும் பயணிகளுக்கு சில ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன.

 

ஐரோப்பாவில் என்ன நடக்கிறது?

புதிய வகை வைரஸ் திரிபு பரவலை தடுக்கும் நோக்குடன் பிரிட்டனில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிக தடையை பிரான்ஸ் அரசு விதித்துள்ளது. பிரிட்டனில் இருந்து வரும் சரக்குகளுக்கும் இந்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக செளத் பிரிட்டிஷ் துறைமுகமான டோவரில் ஏராளமான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. 

இதையடுத்து இரு தரப்பிலும் வர்த்தகத்தை சீராக்க பிரான்ஸ் அதிபருடன் பேசி வருவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரத்தில் 48 மணி நேர தற்காலிக தடை நிறைவுபெறும்போது அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை தெளிவுபடுத்தப்படும் என்று பிரான்ஸ் போக்குவரத்துத்துறை அமைச்சர் கிளெமென்ட் தெரிவித்தார். 

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், GETTY IMAGES

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆலோசனை

புதிய வகை கொரோனா திரிபு பரவல் தடுப்பு நடவடிக்கையை ஒருங்கிணைந்து சீரான முறையில் எடுப்பது தொடர்பாக 27 ஐரோப்பிய உறுப்பு நாடுகளும் ஆலோசனை நடத்தி வருகின்றன. கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவில் வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்படும் பயணிகளை மட்டும் தற்போதைக்கு அனுமதிப்பது குறித்து அந்த நாடுகள் பரிசீலித்து வருகின்றன. 

இதற்கிடையே, பயோஎன்டெக், ஃபைசர் தடுப்பு மருந்துக்கு ஐரோப்பிய மருந்து ஒழுங்குமுறை அமைப்பு திங்கட்கிழமை ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸ் தடுப்பூசியை போடுவதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மற்ற நாடுகளில் என்ன நிலைமை?

பிரிட்டனில் புதிய வகை வைரஸ் திரிபு பரவலை தடுக்கும் விதமாக அங்கிருந்து பயணிகள் வருகைக்கு இந்தியா, குவைத், கனடா ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன. இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு புறப்படும் விமானங்களுக்கும் டிசம்பர் 31ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, வைரஸ் பரிசோதனையில் நெகட்டிவ் என்று வரும் பயணிகளை மட்டும் நியூயார்க் நகருக்கு பயணம் மேற்கொள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ், டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அனுமதித்துள்ளன. 

செளதி அரேபியா, குவைத், ஓமன் ஆகிய நாடுகள் அவற்றின் எல்லைகளை வெளிநாட்டுப் பயணிகளுக்கு முற்றிலுமாக மூடியிருக்கின்றன.
 

https://www.bbc.com/tamil/global-55407341

 


 

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • யாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள் 72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில்  துணை தூதுவர் ச. பாலசந்திரன், இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழில்-இந்திய-குடியரசு-த-2/
  • பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஐரோப்பிய ஓன்றியத்திடம் இலங்கை தெரிவிப்பு பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள்ளது. இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் கூட்டு ஆணைக்குழுவின் இருபத்தி மூன்றாவது சந்திப்பை நேற்று காணொளி காட்சி வாயிலாக நடத்தின. இந்த சந்திப்பின்போதே இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அதனை சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ற வகையில் மாற்றவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தில் உரிய மாற்றங்களை மேற்கொள்வதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் குறித்த ஏற்பாடுகளை மீளாய்விற்கு உட்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் இதன்போது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை மக்களுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த விருப்பம் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு, சுகாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளை இலக்காகக் கொண்ட கொவிட் 19 தொற்றுநோயைக் கையாள்வதற்காக இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் டொலர் மானியம் வழங்கியதற்கு இலங்கை இதன்போது நன்றி தெரிவித்தது. http://athavannews.com/பயங்கரவாதத்-தடைச்சட்டத்/
  • இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா இன்று! இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா மக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தேசியக்கொடி ஏற்றி ஆரம்பித்து வைத்ததுடன் அணிவகுப்பையும் ஏற்றுக்கொண்டார். தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா காமராஜர் சாலை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் முப்படை வீரர்கள், பொலிஸார் மற்றும் பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதன்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். http://athavannews.com/தமிழக-ஆளுநர்-தேசியக்கொடி/
  • அது எங்களுக்கும் தெரியும். டக்ளஸ் ஐயா பேசிக்கொண்டிருக்கிறார்.
  • விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி இன்று! வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) ட்ராக்டர் பேரணியை முன்னெடுக்கவுள்ளனர். இதனையொட்டி  டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை இந்தியா முழுவதும் 72-ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகளின் குறித்த பேரணி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனிடையே  மும்பையில் விளம்பரத்துக்காகவே  விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே குற்றம் சாட்டி உள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மும்பையில் ராஜ்பவன் நோக்கி விவசாயிகள் பிரமாண்ட பேரணி நடத்தினர். ஆளுநரை சந்திக்க முடியாததால் ஆவேசம் அடைந்த அவர்கள் கோரிக்கை மனுவை கிழித்தெறிந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/விவசாயிகளின்-ட்ராக்டர்-ப/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.