இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிலைமைகளை அவதானிப்பதற்காக குறிப்பிட்ட இடங்களுக்கு விஜயம் செய்ததுடன் அதற்கான தீர்வுகள் தொடர்பாக மக்களுடனும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடியபோது...

By
nunavilan,
in சமூகவலை உலகம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By விளங்க நினைப்பவன் · Posted
அவர் பொருளாதரத்தில் உச்ச வளர்ச்சி அடைந்த யேர்மன் நாட்டில் வாழ்ந்து கொண்டு இலங்கையை ஒரு கிரிக்கெட் போட்டியாக இரசித்து அனுபவிக்கிறார். -
நீங்கள் குமாரசாமியாராக இருந்தால் அவர்களை எப்படி அழைப்பது என்று சிந்திப்பதிலும் பார்க்க அவர்கள் மண்ணை எப்படி உங்கள் மண்ணாக்குவது என்று திட்டம் போட்டிருப்பீர்கள். நீங்கள் இப்படி குழம்பி இருப்பதே அவர்களுக்கு பாதுகாப்பானது.
-
நிச்சயமாக இந்த இழுபறி போட்டி நடக்க வேண்டும். சொறி சிங்களம் தோற்கவும் வேண்டும். கிந்தியாவின் கைகளை ஓரளவு கட்டுவதற்கு இதுவே இப்போதுள்ள வழி. நிச்சயமாக இந்த இழுபறி போட்டி நடக்க வேண்டும். வேறு திரியில் சொன்னதையும் இணைக்கிறேன். இப்பொது வரும் தீர்மானத்தில் கட்டுரை சொன்ன பூகோள அரசியல் இருந்தாலும், குறிப்பிட்ட எதிர்ப்பு சீனா இடம் இருந்தே தோன்றி இருக்கிறது. ஏனெனில், தீர்மானத்தின் மூலம் சீனாவின் இலை மறை காயான அபிவிருத்தி எனும் போர்வையில், சீன இலங்கைத்தீவில் உள்ள பௌதிக வளங்கள் மற்றும் சேவைகளை கையகப்படுத்துவதை கண்காணிக்கலாம் மற்றும் கட்டுப்படுத்தல்காம் என்று சீன எண்ணுகிறது. சொறி சிங்களத்திற்கு, unhrc நிகழ்ச்சி நிரலில் இருந்து முழுமையாக அகழவேண்டும் என்ற விபு இருந்தாலும், சொறி சிங்களத்தை சீன மிரட்டி வைத்து இருக்கிறது எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்க கூடாது என்று. அதற்காக, அண்மையில் சீனா GNSS spoofing (GNSS, வங்கி, நீர், மின், செல்லிடப் பேசி, தொலைபேசி, இணையம் போன்ற சேவைகளில் நேரத் துல்லியத்திற்கும், ஒருங்குமைக்கும் தேவை) ஊடுருவி தாக்குதல் செய்து, சொறி சிங்களத்தை மிரட்டி உள்ளது. பூசிய வரைவில் இருக்கும், unhrc தடயங்களை சேகரிப்பதும், பாதுகாப்பதும் பிற்கால நீதி தேடலுக்கு என்பது மிகவும் முக்கியமானது. அதாவது, UN, சொறி சிங்களத்தை பற்றி அலட்டாமல், இலங்கைத் தீவினுள் எந்த வழியாகவும் இறங்கலாம் என்பது. இதனால், UNHRC இல் இருந்து சொறி சிங்களம் விலத்தவும் கூடும். முனைய தீர்மானங்களில், , எந்த நகர்வும், நடவடிக்கையும், சொறி சிங்களத்துக்கு தெரியப்படுத்தி, சொறி சிங்களத்தின் ஒப்புமையுடன் தான் செய்ய வேண்டும் என்று, ஹிந்தியா தீர்மானத்தை மாற்றி வைத்து இருந்தது. வெளியில் தமிழர் உரிமை, நிலப்புலப்பிரதேச ஒருமைப்பாடு ஒன்றை விட்டு மற்றொன்று ஆதரிக்க முடியாது என்று கதைக்கும் கிந்தியா என்று கதைக்கும் கிந்தியா, சுளைக்கு வரும் போது என்ன செய்கிறது, இந்த முறை தீர்மானத்தில் தெரியும்.
-
ஜேர்மனி பொருளாதார வளர்ச்சியடைந்த செல்வந்த நாடு. இலங்கை பின்தங்கிய நாடு. செல்வந்த நாட்டில் கிடைக்கும் வசதிகளுக்காக குமாரசாமி ஜேர்மனியில் இருக்கிறார் என்கிறீர்கள். பிறகு இலங்கை மண்ணுக்கும் உரிமை கோருகிறார். இங்கே உள்ளதையும் அனுபவித்துக் கொண்டு அங்கேயும் உரிமை கோருகிறார் இல்லையா? அங்கே இருப்பவர்கள் பாவம்... இவர் அவர்கள் நிலத்தையும் தனதாக்க பார்கிறார். இலங்கையில் சிறிய வேலை செய்பவர்கள் கூட லட்சாதிபதிகளாக இருப்பதால் தான் அவர்களுக்கு வேலை எடுக்க கூடியதாக இருந்திருக்கிறது என்கிறீர்கள். இப்படி அடுத்தவனையெல்லாம் முட்டாள் என்று நினைத்து கதையளப்பதால்தான் உங்கள் கதைகள் எல்லாம் பொய் என்ற முடிவுக்கு உலக நாடுகள் எப்போதோ வந்துவிட்டன. குமாரசாமி அண்ணைதான் பொட்டம்மான் என்று தெரியாமல் எழுதிவிட்டேன். அவருக்கு நிச்சயமாக உயிர் ஆபத்து உண்டுதான். அண்ணை குமாரசாமி, நீங்கள் உயிரை பணயம் வைத்து தமிழ் மக்களுக்கு செய்துள்ள சேவையோடு ஒப்பிடும் போது முள்ளிவாய்க்காலில் மடிந்தவர்கள் செய்ததெல்லாம் தூசுக்கும் நிகராகாது என்பதை அறியாமல் எழுதிவிட்டேன், மன்னிக்கவும்.
-
துஷ்பிரயோகத்தின் சாட்சி – 09 -நவாலியூர் தாமா by vithaiMarch 5, 20210108 நான் சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் துஷ்பிரயோகத்துக்கு சிகிச்சை பெற சென்ற போது தான் 18 வயதுக்குள் நடைபெற்ற எல்லா துஷ்பிரயோகங்களும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என அறிந்தேன். 16 வயதில் நான், எனது வயதுக்கு மீறிய உயரம் கொண்டவளாயிருந்தேன். வயது வந்த நபர் போல் குடும்ப பொறுப்புகள் பலவற்றைச் சுமந்தேன். 1995 ஆம் ஆண்டு யாழ் இடம்பெயர்வில் தம்பியையும் வீட்டுச் சாமான்களையும் பொறுப்புடன் சுமந்து சென்றேன். என்னையும் விட நான்கு வயது கூடிய பெரியம்மா மகளை விட உயரமாகவும் அவருக்கு சமனாகவும் வாழ்ந்தேன். என் 16 வயதில் நடந்த பாலியல் துஷ்பிரயோகமும் சிறுவர் துஷ்பிரயோகம் என்பதை 39 வயதில் அறிந்து கொண்டேன். பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் என்னைக் கட்டிப் பிடித்தபோது நான் அமைதியாக இருந்தேன். நான் தடுத்து நிறுத்தவில்லை. ஆகவே இது துஷ்பிரயோகமா? என்று எனது சிகிச்சை நிபுணரிடம் கேட்டபோது, அவர் “பலர் வன்முறை நடக்கும் போது உறைந்து போகின்றனர். இது சாதாரண விடயம். மௌனம் சம்மதத்துக்கு அடையாளம் இல்லை. அனுமதியின்றி யார் எதை செய்தாலும் குற்றம் தான். பல தடவைகள் பயத்தின் காரணமாக குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்தை அனுமதிக்கிறது. ஆகவே குழந்தை மீது யார் கை வைத்தாலும் அது தண்டனைக்குரிய குற்றம். அதை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது” என்று பதிலளித்தார். என்னைப் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய நபர் என்னை விட 7 வயது கூடிய உறவு முறையானவர். நான் மிகவும் அமைதியானவர். ஒரு முறை எதேச்சையாக அவரது காதலியின் படத்தை கண்டுவிட்டேன். அவர் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றதும் நானும் யாரிடமும் சொல்லவில்லை. அதன் பிறகு அவர் ஒருநாள் மாலைநேரம் நடக்கக் கூப்பிட்டார். எனக்கு மறுப்பு சொல்ல அக்காலத்தில் தெரியாது. அத்துடன் உறவினர்களுடன் நட்பாக பழகியதால் துணிந்து சென்றேன். திடீரென்று அவர் கைகள் என் உடலில். வலைக்குள் சிக்கிய மான் போல் என்ன செய்வதென்று தெரியாது அமைதியாகிவிட்டேன். இன்று Thai massage சிகிச்சையை முறையாக பெற்றிருப்பதால், அன்றைய அனுபவத்தை ஒரு நல்ல மசாஜ் இலவசமாக கிடைத்தது என்று விபரிக்க முடிகிறது. ஆனால் அன்று அதை ஒரு மசாஜ் என்று பெருமையாக எண்ண முடியவில்லை. மாறாக அருவருப்பும், ஆத்திரமும், பயமும் என்னை ஆக்கிரமித்தது. என் உடல் மீது எனக்கு வெறுப்பாக இருந்தது. உறைந்து போன என்னை மனம் திறந்து பேச வைத்தது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானவர்களுக்கான சிகிச்சை. இன்றும் அன்று உடுத்த உடையும், அவர் கைகள் பட்ட இடமும் ஞாபகத்தில் உண்டு. Body keeps the score. என்ற புத்தகத்தைப் படித்தபோது எமது உடல் அதில் ஏற்பட்ட பாதிப்புக்களை எவ்வாறு காலாகாலமாக சேமித்து வைத்துள்ளது என்பதை புரிந்து கொண்டேன். எவ்வாறு அந்தப் பாதிப்புக்கள் ஒரு நோயாக உருவாகிறது என்பதை அறிந்து கொண்டேன். எனது உணர்ச்சிகள் யாவும் எனது உடம்பில் மறைந்து காணப்படுகிறது. சிகிச்சையின் போது அவற்றை இனங்கண்டு ஆரோக்கியமான முறையில் பராமரித்து குணப்படுத்த முடிந்தது. நினைவுகளை ஒருநாளும் அழிக்க முடியாது. ஆனால் அந்த நினைவுகளுடன் ஒன்றித்து வாழப்பழகும் போது நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். அவர் செய்தது பிழை என்று அன்று எனக்கு தெரிந்தாலும் அது பிழை என கூற தைரியம் இருக்கவில்லை. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகள் என குற்றம் சுமத்தும் சமுதாயத்தில் ஓர் ஆணை குற்றம் சுமத்த என்னால் முடியவில்லை. பெண் மீது குற்றம் கண்டுபிடிக்கும் என் சமுதாயத்தின் முன் ஒரு குற்றவாளியாக நிற்கப் பயந்தேன். தப்பைத் தண்டிக்காது ஒர் ஆண் தப்பு செய்வதற்கு காரணம் ஒரு பெண் என பழி சுமத்தும் இச் சமுதாயத்துக்குப் பயந்து வாழ்ந்தேன். பதின்வயதில் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டேன். எனது மனச்சோர்வுக்கு ஈழப் போரும் ஒரு காரணமாக அமைகிறது. என்னை ஆண் தொட்டுவிடுவானா என்ற மனப் பயம் என்றும் எனக்கு இருந்தது. உறவினர்களை ஒதுக்கிவிட்டு வாழ்க்கையை ஆரம்பித்தேன். என்னை அவர்கள் குற்றவாளியாக பார்க்கக்கூடாது என்ற காரணத்துக்காக மௌனத்தைப் பேணினேன். ஒரு காலத்தில் என் வாழ்வை சீர் குலைத்தோர் அழிந்து போகவேணும் என மனமாரப் பிரார்த்தித்தேன். அவர்கள் குழந்தைகள் என்னை மாதிரி கஷ்டப்படணும் எனவும் விரும்பினேன். ஆனால் இன்று பௌத்த தியானங்களில் ஈடுபடும் நான் எதிரியை நேசிக்கப் பழகிக் கொண்டுள்ளேன். அத்துடன் வரலாற்றில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி, வன்முறையையும், துஷ்பிரயோகங்களையும் தொடர்கதையாக வளர்த்துள்ளனர். ஆகவே எனக்கு நிகழ்ந்த துஷ்பிரயோகத்தைக் குணப்படுத்தி, நல்லதை நினைத்து, இளம் சந்ததியினரை விழிப்புணர்வூட்டி பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்கிறேன். அநியாயம் செய்தவர்களின் அடையாளத்தைப் பாதுகாப்பது எனது கடமை இல்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். குடும்பத்தினரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானேன் என்று கூறும்போது குடும்ப மானம் கப்பல் ஏறிப் பறப்பதற்கு பொறுப்பு நான் இல்லை. தப்பு செய்யும்போது தப்பு செய்த நபரால் தான் குடும்பமானம் கப்பல் ஏறிப்பறந்து விட்டது. நிஜத்தை வெளிப்படுத்தும்போது எந்த ஒரு பாதிப்பும் யாருக்கும் இல்லை என்பதில் உறுதியாக உள்ளேன். குடும்பமானத்துக்காக அமைதியாக இருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று பாலியல் துஷ்பிரயோக உண்மையை பகிரங்கமாகப் பேசக்கூடிய ஒரு சமுதாயம் உருவாகிவிட்டது. அதைமதித்து ஏற்றுக் கொள்ளும் சமுதாயமும் உருவாகிறது. மிகுந்த துணிவுடனும் உரிமையுடனும் எனது வாழ்க்கை வரலாற்றையும் அதில் எனக்கு நிகழ்ந்த துஷ்பிரயோகங்களையும் கூறுவதில் பெருமிதம் அடைகிறேன். https://vithaikulumam.com/2021/03/05/20210304/
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.