Jump to content

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை கொண்டுவரப்படும் – பிரித்தானிய தூதுவர் சுமந்திரனிடம் உறுதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை கொண்டுவரப்படும் – பிரித்தானிய தூதுவர் சுமந்திரனிடம் உறுதி

sarah-hulton.jpgஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை ஒன்று கொண்டுவரப்படும் என்றும், அதன் உள்ளடக்கம் மற்றும் அதற்கான ஆதரவுத் தளம் என்பன தொடர்பில் ஜனவரி மாதம் தீர்மானிக்கப்படும் என்றும் இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் இன்று வாக்குறுதி வழங்கியுள்ளார்.

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் மற்றும் ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி ஆகியோருடன் இன்று நேரில் நடத்திய சந்திப்புகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. மேற்படி விடயத்தைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இன்று காலை இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டனை, கொழும்பிலுள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினேன். இரண்டு மணி நேரம் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கை மீது புதிய பிரேரணை கொண்டுவருவதில் பிரிட்டன் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது எனவும், எதிர்வரும் ஜனவரி மாதமே அந்தப் பிரேரணையின் உள்ளடக்கம் மற்றும் ஆதரவுத்தளம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் எனவும் தூதுவர் தெரிவித்தார்.

sumanthiran_tna_thinakkural.jpgபுதிய பிரேரணையானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும், இலங்கை அரசு பொறுப்புக்கூறலிருந்து தப்பிப்பிழைக்க முடியாத வகையிலும் அமையவேண்டும் எனவும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே பரிந்துரைகள் இருக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது என்று அவரிடம் சுட்டிக்காட்டினேன்.

அதேவேளை, குறித்த சந்திப்பின் பின்னர் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகராலயத்துக்குச் சென்று ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரை நேரில் சந்தித்து ஒரு மணி நேரம் கலந்துரையாடினேன். அவருடனும் புதிய ஜெனிவாப் பிரேரணை உட்பட சமகால விடயங்கள் தொடர்பில் விரிவாகப்பேசினேன்” என்றார்.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை கொண்டுவரப்படும் – பிரித்தானிய தூதுவர் சுமந்திரனிடம் உறுதி – Thinakkural

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி புளுகுவார் கடைசியில் பெட்டி  கை  மாற இதையே தலைகீழாய் சொல்லுவார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, பெருமாள் said:

இப்படி புளுகுவார் கடைசியில் பெட்டி  கை  மாற இதையே தலைகீழாய் சொல்லுவார் .

  அங்கை போய் சந்தர்ப்பம் குடுத்து பாப்பம் என்பார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

  அங்கை போய் சந்தர்ப்பம் குடுத்து பாப்பம் என்பார்

இந்தாள் பொய் சொல்லுதோ இல்லையோ உவங்கள் அமெரிக்கனையும் ஐரோப்பியனையும் நம்பேலாது.. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா புதிய பிரேரணை குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் சுமந்திரன் தெரிவித்துள்ளது என்ன?

(ஆர்.ராம்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படுவது உறுதியானது என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

துமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுப் புதன்கிழமை கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்றிருந்தது.

இந்தச் சந்தப்பின்போதே பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அச்சந்திப்பு தொடர்பில் மேலும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இம்முறை இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை வலியுறுத்தி இணை அணுசரணை நாடுகள் பிரேணையொன்றைக் கொண்டு வரவுள்ளன. அதனை அந்தச் செயற்பாட்டில் பிரித்தானியாவே பிரதான வகிபாகத்தினை கொண்டிருக்கப்போகின்றது.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/141521/31.jpg

அந்த அடிப்படையில் புதிதாக கொண்டுவரப்படும் பிரேரணையானது இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலிலிருந்து விலகாதவாறும் அதனை நடைமுறைச்சாத்தியமான வகையிலும் வலுவான உள்ளடக்கங்களையும் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக,பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்குவதாக அது அமைந்திருக்க வேண்டும் என்பதோடு காலத்தினை வீணடிக்கின்றதாக இருக்ககூடாது. மேலும் சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையிலிருந்து விடுபடாதவாறும் அமைய வேண்டும். அதன் ஊடான அழுத்தம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் உயர்ஸ்தானிகரிடத்தில் கேட்டுக்கொண்டேன்.

அத்துடன், சிரியா, மியன்மார் போன்ற நாடுகளில் இடம்பெற்ற மனித குலத்துக்கு எதிரான விடயங்களில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு அப்பால் சென்று நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. அவ்விதமான பொறிமுறைகள் இலங்கை விடயத்தில் கையாளமுடியுமா என்பது பற்றி பிரித்தானியா சிந்திக்க வேண்டும். அவ்வாறு சாத்தியமாகும் பட்சத்தில் அதனை முன்னெடுப்பதற்கு பிரித்தானியா பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.

இச்சமயத்தில், எமது கருத்துக்களை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் புதிய பிரேணையொன்றே கொண்டுவரப்படும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஆனால் அந்த பிரேணையானது பொறுப்புக்கூறலை வலுவாக வலியுறுத்தும் அதேநேரம், நடைமுறைச்சத்தியமானதாகவும், இலங்கையை தொடர்ச்சியாக அப்பிரேணையில் முன்மொழியப்படும் செயன்முறைக்குள் வைத்திருப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதில் கரிசனை கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் பிரித்தானியான முழுமையாக தனது ஈடுபாட்டைச் செய்யும் அதேநேரம், ஜெனீவாவில் இந்தப் பிரேரணையை கொண்டுவரவதற்கு ஒத்துழைப்புக்களைச் செய்யவுள்ள ஏனைய இணை அணுசரணை நாடுகளுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய சூழலில் பல்வேறு விடயங்கள் தொடாபில் பிரித்தானியா கரிசனை கொண்டிருக்கும் அதேநேரம், இலங்கை தொடர்பான ஜெனீவா பிரேரணை அதிபட்சமாக ஜனவரி மாதமளவிலேயே இறுதி செய்யப்படும் என்றும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார் என்று சுமந்திரன் கூறினார்.

ஜெனீவா புதிய பிரேரணை குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் சுமந்திரன் தெரிவித்துள்ளது என்ன? | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரிமார் எனக்கு 76 வயது வரை என்டு கணித்து உள்ளார்கள் . அதற்குள் குறைந்தபட்ச அரசியல் தீர்வு  கொடுத்து விடுங்கப்பா..

crispy-vadai.jpg

கொள்ளு பேரன் வரை தாங்க ஏலாது .. பார்த்து செய்யுங்கப்பா .. 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பிழம்பு said:

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் பிரித்தானியான முழுமையாக தனது ஈடுபாட்டைச் செய்யும் அதேநேரம், ஜெனீவாவில் இந்தப் பிரேரணையை கொண்டுவரவதற்கு ஒத்துழைப்புக்களைச் செய்யவுள்ள ஏனைய இணை அணுசரணை நாடுகளுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறினார்.

போர் முடிந்த காலத்திலிருந்து கூடுகினம், கலந்துரையாடுகினம், பிரேரணை கொண்டு வருகினம், கால அவகாசம் கொடுக்கினம். அவனோ, யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என சவால் விடுகிறான். உண்மையும் அதுதான். ஏதாவது செய்வதாக இருந்தால், செய்ய வைக்க முடியுமாக இருந்தால் இவ்வளவு கால அவகாசம் தேவையற்றது. காலப்போக்கில் மறந்தோ, களைத்தோ கைவிடப்படலாம். இழப்புகளை சந்தித்தவர்களே சலுகைகளுக்கு விலை போகிறார்கள். இது எதிரியின் திறமையா? எம்மவரின் ஏமாளித்தனமா? எதைக்குறை கூறுவது? 

Link to comment
Share on other sites

20 minutes ago, satan said:

போர் முடிந்த காலத்திலிருந்து கூடுகினம், கலந்துரையாடுகினம், பிரேரணை கொண்டு வருகினம், கால அவகாசம் கொடுக்கினம். அவனோ, யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என சவால் விடுகிறான். உண்மையும் அதுதான். ஏதாவது செய்வதாக இருந்தால், செய்ய வைக்க முடியுமாக இருந்தால் இவ்வளவு கால அவகாசம் தேவையற்றது. காலப்போக்கில் மறந்தோ, களைத்தோ கைவிடப்படலாம். இழப்புகளை சந்தித்தவர்களே சலுகைகளுக்கு விலை போகிறார்கள். இது எதிரியின் திறமையா? எம்மவரின் ஏமாளித்தனமா? எதைக்குறை கூறுவது

இன்னமும் எதைக்குறைகூறுவது என்று தெரியவில்லையா? 30 வருட மாயைக்கு மக்களை மயங்கவைத்த தலைமையை தான் குறை கூற வேண்டும், ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருடத்துக்கு முன்பு இருந்தவர்களின் கையாலாகத்தன்மை இளையோர்மேல் சுமத்தினார்கள். அவர்கள் உயிரைக்கொடுத்து தமிழருக்குள்ள பிரச்சனையை உலகறியைச் செய்து பாதையை திறந்து விடடார்கள். அந்தப் பாதையில் போகக் கூடத் தெரியாமல் தடுமாறி பாதை காட்டியவர்களையே குறை கூறிக்கொண்டு, மாயமானுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த மாயமானில் மயங்கி அதோடு குடும்பம் நடத்துவதுதான்  சந்தோசம் என்று அடம்பிடிக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

7 hours ago, satan said:

முப்பது வருடத்துக்கு முன்பு இருந்தவர்களின் கையாலாகத்தன்மை இளையோர்மேல் சுமத்தினார்கள். அவர்கள் உயிரைக்கொடுத்து தமிழருக்குள்ள பிரச்சனையை உலகறியைச் செய்து பாதையை திறந்து விடடார்கள்.

முள்ளிவாய்க்காலுக்கு போகும் பாதை வேண்டாம் என்று மக்கள் அதை கைவிட்டு விட்டார்கள். “இளையோர்” தொடங்கிய சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேரவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறு பிள்ளைகள் முயற்சித்த அளவுக்கு கூட முதிர்ச்சி அடைந்தோர் என்றும் உழைக்கவில்லை. அதனாலேயே சிறுபிள்ளைகள் களமாட இறங்கினார்கள். சிறுபிள்ளைகள் தலையில் சுமத்தியது யார்?  என்றும் சுகபோகம் அனுபவிப்பவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். நாட்டில் தமிழருக்கு பிரச்சனை உண்டென்பதை உலகறியைச் செய்தவர்களே சிறுபிள்ளைகள்தான். மக்கள் அந்தச் சிறுபிள்ளைகளை அன்றும் நேசித்தார்கள், இன்றும் நேசிக்கிறார்கள். அதற்கு ஒவ்வொரு கார்த்திகைமாதமும்  சாட்சி. 

Link to comment
Share on other sites

9 hours ago, satan said:

சிறு பிள்ளைகள் முயற்சித்த அளவுக்கு கூட முதிர்ச்சி அடைந்தோர் என்றும் உழைக்கவில்லை. அதனாலேயே சிறுபிள்ளைகள் களமாட இறங்கினார்கள்.

உண்மையல்ல. செல்வநாயகம் தலைமையில் பல முயற்சிகள் தொடர்ந்தன. அதனாலேயே அவர் தந்தை செல்வா என்று அழைக்கப்பட்டார். இளைஞர்கள் ஆயுதம் ஏந்த காரணமாக இருந்தது அரச பயங்கவாதமும், அதனை இந்திய நலனுக்கு பயன்படுத்த றோ விரும்பிய போது அதனுடன் ஒத்துழைத்த அமிர்தலிங்கம் தம்பதிகளும். அவர்களின் தூண்டுதல், ஏற்பாடுகள் காரணமாகவே றோ இவர்களை ஆயுததாரிகளாக்கி பிரச்சனையை பயங்கரவாதமாக மாற்றியது. பஞ்சாப்பில் பிந்தரன்வாலேயை கொண்டு செய்த பயங்கரவாத குழப்பங்களை “அன்னை” இந்திரா இலங்கையிலும் ஆரம்புத்த போது அதற்கு பலிகொடுக்க அமிர்தலிங்கம் தம்பதிகள் இளையோரை திரட்டியதன் விளைவே இந்த பேரழிவு.

 

9 hours ago, satan said:

. நாட்டில் தமிழருக்கு பிரச்சனை உண்டென்பதை உலகறியைச் செய்தவர்களே சிறுபிள்ளைகள்தான். 

இதுவும் உண்மையல்ல. தனது புவிசார் அரசியல் ஆதிக்க நலன் கருதி இந்திய அரசே இலங்கை தமிழர் பிரச்சினையை உலகறிய செய்தது. 

9 hours ago, satan said:

மக்கள் அந்தச் சிறுபிள்ளைகளை அன்றும் நேசித்தார்கள், இன்றும் நேசிக்கிறார்கள். அதற்கு ஒவ்வொரு கார்த்திகைமாதமும்  சாட்சி. 

இது உண்மையானது. ஆனால் மக்களின் துன்பத்துக்கு இது தீர்வல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலர் எழுதும் கருத்துக்களை வாசிக்கும் போது இன்னும் இவர்கள் சிறீலங்காவில் இருந்து எதையோ பெறலாம் அவர்கள் கையில் வைத்து கொண்டு கால் வலிக்க காத்திருக்கிறார்கள் நாம் தான்????

Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

இங்கே சிலர் எழுதும் கருத்துக்களை வாசிக்கும் போது இன்னும் இவர்கள் சிறீலங்காவில் இருந்து எதையோ பெறலாம் அவர்கள் கையில் வைத்து கொண்டு கால் வலிக்க காத்திருக்கிறார்கள் நாம் தான்????

அப்படி யாரும் எழுதியதாக உங்களை தவிர வேறு எவருக்கும் தெரியவில்லை. ஆனால் சிறிலங்காவில் தீர்வை எப்படி உருவாக்குவது என்று உங்களுக்கு தெரியவில்லை என்பது தெளிவானது. ஆகவே மற்றவர்கள் எழுதுவதை ஆழமாக படியுங்கள். விளங்காவிட்டால், பணிவுடன் விளக்கம் கேட்டு புரிந்து கொள்ளப்பாருங்கள்.

Link to comment
Share on other sites

On 25/12/2020 at 02:25, கற்பகதரு said:

இன்னமும் எதைக்குறைகூறுவது என்று தெரியவில்லையா? 30 வருட மாயைக்கு மக்களை மயங்கவைத்த தலைமையை தான் குறை கூற வேண்டும், ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. 

நீங்களும் இந்த 30 வருடத்துக்கள் வாழந்த ஓராள் என நம்புகிறேன்.  மாயை என்று எதை கூறுகிறீர்கள்??
2009 க்கு பின் அல்லது புலிகளுக்கு முன் மக்கள் தெளிவாக இருந்தார்களா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கற்பகதரு said:

அப்படி யாரும் எழுதியதாக உங்களை தவிர வேறு எவருக்கும் தெரியவில்லை. ஆனால் சிறிலங்காவில் தீர்வை எப்படி உருவாக்குவது என்று உங்களுக்கு தெரியவில்லை என்பது தெளிவானது. ஆகவே மற்றவர்கள் எழுதுவதை ஆழமாக படியுங்கள். விளங்காவிட்டால், பணிவுடன் விளக்கம் கேட்டு புரிந்து கொள்ளப்பாருங்கள்.

நான் செயலை மட்டுமே பார்ப்பவன். அல்லது செய்பவர்களோடு இருந்தவன். செயலற்ற அல்லது பரிசோதனை அற்ற எதுவும் பூச்சியமே. அதற்கு எனது பொன்னான நேரத்தில் ஒரு செக்கனை தானும் செலவழிக்க மாட்டேன். புத்தக படிப்பு கறிக்குதவாது சிறுவர் பள்ளியில் படித்தது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

நான் செயலை மட்டுமே பார்ப்பவன். அல்லது செய்பவர்களோடு இருந்தவன். செயலற்ற அல்லது பரிசோதனை அற்ற எதுவும் பூச்சியமே. அதற்கு எனது பொன்னான நேரத்தில் ஒரு செக்கனை தானும் செலவழிக்க மாட்டேன். புத்தக படிப்பு கறிக்குதவாது சிறுவர் பள்ளியில் படித்தது.

 

யோசிப்பு, வாசிப்பு, கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள்: இவை போன்ற எதுவும் முன்னணியில் இல்லாமல் நடந்த தமிழர் போராட்டம் எப்படி முடிந்தது என்று நாம் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை! 

அப்படியொன்று மீள நடக்காமல் இருக்க இந்த உரையாடல் அவசியம் என்று நினைக்கிறேன். இல்லை "எடு பொல்லை, போடு மண்டையில" என்று செயல் வடிவமாகவே இருந்தால் எல்லாத் தரப்பினரும் எப்பவும் ஹெல்மற் போட்டுக் கொண்டு பதுங்கித் தான் திரிய வேண்டியிருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, விசுகு said:

நான் செயலை மட்டுமே பார்ப்பவன். அல்லது செய்பவர்களோடு இருந்தவன். செயலற்ற அல்லது பரிசோதனை அற்ற எதுவும் பூச்சியமே. அதற்கு எனது பொன்னான நேரத்தில் ஒரு செக்கனை தானும் செலவழிக்க மாட்டேன். புத்தக படிப்பு கறிக்குதவாது சிறுவர் பள்ளியில் படித்தது.

 

செயலை மட்டும் பார்க்கவேண்டும் என்பதற்காக மடியில் பூனையை வைத்து சிரைப்பதும் பிரயோசனமானதா?😁

பூச்சியமாக முடிந்த செயல்கள் பல உண்டு. அதில் வணங்காமண் கப்பல்  விட்டதும் ஒன்று!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

செயலை மட்டும் பார்க்கவேண்டும் என்பதற்காக மடியில் பூனையை வைத்து சிரைப்பதும் பிரயோசனமானதா?😁

பூச்சியமாக முடிந்த செயல்கள் பல உண்டு. அதில் வணங்காமண் கப்பல்  விட்டதும் ஒன்று!

 

உண்மை தான் வேடிக்கை பார்த்தவர்களுக்கு வணங்காமண்ணின் உழைப்புக்கள் புரியவே முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நான் செயலை மட்டுமே பார்ப்பவன். அல்லது செய்பவர்களோடு இருந்தவன். செயலற்ற அல்லது பரிசோதனை அற்ற எதுவும் பூச்சியமே. அதற்கு எனது பொன்னான நேரத்தில் ஒரு செக்கனை தானும் செலவழிக்க மாட்டேன். புத்தக படிப்பு கறிக்குதவாது சிறுவர் பள்ளியில் படித்தது.

 

அண்ணா,

ஒரு இராணுவத்தில் வரும் கட்டளைக்கு பணித்து மறு யோசனையின்றி பாய்ந்து தாக்க கூடிய 5 லட்சம் பேர் இருப்பார்கள்.

ஆனால் யுத்த நகர்வுகளை கற்று, திட்டமிட்டு, வரலாற்றை வாசித்து அதில் பாடம் படித்து, வளங்களை கணக்கிட்டு அதை சரியே பகிர்ந்து, யோசனைகளை முன் வைத்து அதை விவாதிப்பதன் மூலம் தக்க முடிவுகளை ஒரு கற்ற, வாசிக்கும், யோசிக்கும், விவாதிக்கும் இடைவெளி உள்ள தலைமை உள்ள இராணுவமே 5 லட்சம் செயல் வீரர்களின் செயலால் பெறபட்ட நல்விழைவுகளை நீண்ட கால நோக்கில் தக்கவைக்ககூடியதாக இருக்கும்.

ஹிட்லர் போல் செயல், வினைதிறனான அமைப்பை கட்டி எழுப்பியவர்கள் அரிது. ஆனால் விவாததுக்கு இடம் இல்லாமையால், ஒரே நேரத்தில் பிரிட்டனுடனும், சோவியத்துடனும் மோதும் மோசமான முடிவை எடுத்து, அழிந்து போனார்.

 

Link to comment
Share on other sites

2 hours ago, nunavilan said:

நீங்களும் இந்த 30 வருடத்துக்கள் வாழந்த ஓராள் என நம்புகிறேன்.  மாயை என்று எதை கூறுகிறீர்கள்??

  1. மாயை 1: ஈழத்தமிழருக்கு இலங்கைக்குள் நிரந்தரமான ஒரு தனிநாடு சாத்தியம்.
  2. மாயை 2: அந்த தனிநாட்டை ஆயுதப்போர் மூலம் பெற்று நிலையாக வைத்திருக்க முடியும்.
  3. மாயை 3: இவ்வாறான தனிநாட்டை பெற இந்தியா ஆதரவளிக்கும்.
     
2 hours ago, nunavilan said:

2009 க்கு பின் அல்லது புலிகளுக்கு முன் மக்கள் தெளிவாக இருந்தார்களா??

மக்கள் என்றுமே தெளிவாக இருக்கவில்லை, இருக்கும் சந்தர்ப்பமும் இல்லை. இந்த துறையில் முதன்முதலாக ஆய்வு செய்து கலாநிதிப்பட்டம் பெற்ற திருநாவுக்கரசு போன்றவர்களுக்கே   இலங்கைத்தமிழர் பிரச்சினை  இன்னமும் தெளிவில்லாமல் இருக்கும் போது, பெரும்பாலான சாதாரண மக்களுக்கு எப்படி தெளிவாக இருக்கும்? 

1 hour ago, விசுகு said:

உண்மை தான் வேடிக்கை பார்த்தவர்களுக்கு வணங்காமண்ணின் உழைப்புக்கள் புரியவே முடியாது

 

1 hour ago, கிருபன் said:

பூச்சியமாக முடிந்த செயல்கள் பல உண்டு. அதில் வணங்காமண் கப்பல்  விட்டதும் ஒன்று!

தோல்வியில் முடிந்த உழைப்பும், வளங்களும்,   உயிர்களும் ... எத்தனை ஆயிரங்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

அண்ணா,

ஒரு இராணுவத்தில் வரும் கட்டளைக்கு பணித்து மறு யோசனையின்றி பாய்ந்து தாக்க கூடிய 5 லட்சம் பேர் இருப்பார்கள்.

ஆனால் யுத்த நகர்வுகளை கற்று, திட்டமிட்டு, வரலாற்றை வாசித்து அதில் பாடம் படித்து, வளங்களை கணக்கிட்டு அதை சரியே பகிர்ந்து, யோசனைகளை முன் வைத்து அதை விவாதிப்பதன் மூலம் தக்க முடிவுகளை ஒரு கற்ற, வாசிக்கும், யோசிக்கும், விவாதிக்கும் இடைவெளி உள்ள தலைமை உள்ள இராணுவமே 5 லட்சம் செயல் வீரர்களின் செயலால் பெறபட்ட நல்விழைவுகளை நீண்ட கால நோக்கில் தக்கவைக்ககூடியதாக இருக்கும்.

ஹிட்லர் போல் செயல், வினைதிறனான அமைப்பை கட்டி எழுப்பியவர்கள் அரிது. ஆனால் விவாததுக்கு இடம் இல்லாமையால், ஒரே நேரத்தில் பிரிட்டனுடனும், சோவியத்துடனும் மோதும் மோசமான முடிவை எடுத்து, அழிந்து போனார்.

சகோ 

அப்படி என்றால் அமைப்பின்

நூற்றுக்கணக்கான கட்டுமானங்களில் இருந்தவர்கள் பற்றி நாம் அறியவில்லை என்று தான் அர்த்தம் சகோ. இனிமேல் அப்படி ஒரு அமைப்பை உருவாக்க எவராலும் முடியாதபோது அவர்கள் பற்றி விமர்சனம் செய்ய கல் மனம் வேண்டும். அது வேண்டுமானால் என்னிடம் இல்லாமல் இருக்கலாம். அப்படி இருக்க கடவது. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, satan said:

சிறு பிள்ளைகள் முயற்சித்த அளவுக்கு கூட முதிர்ச்சி அடைந்தோர் என்றும் உழைக்கவில்லை. அதனாலேயே சிறுபிள்ளைகள் களமாட இறங்கினார்கள். சிறுபிள்ளைகள் தலையில் சுமத்தியது யார்?  என்றும் சுகபோகம் அனுபவிப்பவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். நாட்டில் தமிழருக்கு பிரச்சனை உண்டென்பதை உலகறியைச் செய்தவர்களே சிறுபிள்ளைகள்தான். மக்கள் அந்தச் சிறுபிள்ளைகளை அன்றும் நேசித்தார்கள், இன்றும் நேசிக்கிறார்கள். அதற்கு ஒவ்வொரு கார்த்திகைமாதமும்  சாட்சி. 

Satan , தயவுசெய்து விளக்கமுள்ளவர்களுடன்மட்டும் கருத்தாடுங்கள். நேரம் பொன்னானது!! மேலுள்ள கவி அருணாசலத்தின் சித்திரம் இங்குள்ள சிலருக்கும் கச்சிதமாக பொருந்துகிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் போராட்டம் தோல்வி என்பதைஎற்றுக்கொள்கிறேன். ஆனால் பிழையான போராட்டமில்லை. போராட்டம் ஆரம்பித்து -நடந்துகொண்டிருந்தது சிங்களயரசுடன்தான்..2008...2009...இல் இலங்கையின்.  வேண்டுகோளுக்குகிணங்க பலநாடுகள் போரில் பங்குபற்றின .ஆகையால்தான் போரில்தோற்றேம் இது தமிழர்தரப்பு எதிர்பாரத நிகழ்வு  இலங்கையில் சிங்களவன் ஆட்சி செய்ய ஒரே காரணம் சனத்தொகை...தமழர். முன்பு  இலங்கையையண்டவர்கள்.  எதிர்காலத்திலும் ஆட்சி செய்யக்கூடிய வாய்ப்புயுண்டு..போராட்டம்முடியவில்லை  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.😜👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.