Jump to content

கடற்புலி லெப். கேணல் நிலவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடற்புலி லெப். கேணல் நிலவன்

Commander-of-Sea-Tiger-Lieutenant-Colone

என்றும் எம் இனத்திற்கு நிலவாய் இருப்பாய் நிலவா….

‘மனிதர்களின் இருப்பை விட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது’ என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு சிகரம் வதை;தாற்போல் எமது விடுதலைப் போராட்டத்திலும் கடற்புலிகள் அணியில் அலையாக ஆர்ப்பரித்து ஒரு தசாப்தகாலச் சக்கரத்தை தரைச்சமர், கடற்சமர், கனரக ஆயுதச் சூட்டாளன், அரசியல், நிர்வாகம், வழங்கல், கட்டளை அதிகாரி, கட்டளைத் தளபதி எனச்சுழன்று பல பக்கங்களையும் தன்னகத்தே கொண்டு செயல்படுத்திய ஒரு மாவீரனாம் நிலவன்.

ஒரு வீரனின் செயற்பாடுகள், அர்ப்பணிப்புக்கள், சாதனைகள், தியாகங்கள் என்பன எல்லாம் விடுதலையின் வெற்றிக்கான அத்திவாரங்கள். எனவே அந்த வீரர்களின் வரலாற்றை எங்கெல்லாம் பதித்து வைக்கலாமோ அங்கெல்லாம் பதியப்பட வேண்டும் அவ்வாறான ஒரு பதிவாக லெப்.கேணல் நிலவன் அவர்களின் வரலாற்றையும் பார்க்கலாம். ஏனெனில் எமது விடுதலையின் பின் எமது மாவீரர்களின் வரலாற்றை எதிர்கால சந்ததி பார்ப்பதன் ஊடாக எமது விடுதலைப் போராட்டத்தின் பெறுமதியை உணர்ந்து எமது நாட்டையும், மக்களையும் எமது மாவீரர்களின் கனவுலகத்திற்கு செயல்வடிவம் கொடுப்பார்கள்.

மிகவும் இறுக்கமான காலப்பகுதியில் விடுதலைப் போராட்டத்திற்கு வளம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அணியின் கட்டளை அதிகாரி லெப். கேணல் கலாத்தன் (மாவீரன்) அவர்களைச் சந்திக்க சென்ற போது இவர் சாயம் குடிப்பதில்லை. பால்தான் குடிக்கிறவர் என்று பால்க்கோப்பியுடன் வந்த நிலவனை அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து நிலவனது சந்திப்புக்கள் அதிகரிக்க அவருக்கும் எனக்குமான நட்பு இறுக்கமடைந்தது. அதேவேளை எமது அணியில் நிலவனது செயற்பாடுகளும் வேகம் பெறுகின்றது. நான் எதையும் செய்வேன் என்ற தன்னம்பிக்கையும் நிலவனிடம் மேலோங்கி இருந்தது. இதற்கு சான்றாக பின்வரும் சந்தர்ப்பத்தை நான் நேரில் காணக்கூடியதாக இருந்தது. அதாவது எமக்கு வழங்கப்படும் உணவில் சுவையின்மை, நேரம் தவறுதல் போன்ற பல பிரச்சினைகள் காணப்பட்டபோது எமது பொறுப்பாளரிடம் இதனைக் கூறினோம். அதற்கு உணவு சமைப்பது சண்டை பிடிப்பது, நடவடிக்கை செய்வது போன்று இல்லை. இங்கு பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும், சமாளித்துப் போகவேண்டும் என்றார். அப்போது ஏனைய போராளிகள் தரப்படும் பொருட்களை ஒழுங்காக சமைத்துத் தருவதற்கென்ன எனக்கேட்ட போது பொறுப்பாளர் தான் விசேட தளபதியிடம் கேட்டுச் சொல்லுகின்றேன். நீங்கள் யாராவது பொறுப்பெடுங்கள் என்ற போது ஒவ்வொருவரும் மற்றவர்களது முகத்தைப் பார்க்க நிலவன் எழுந்து நான் செய்கிறன் என்று கூறினான். அவன் சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் காட்டி எமக்கான உணவை சுவையாகவும் ஒழுங்காகவும் செய்து தந்தான்.

இவ்வாறாக நிலவனின் செயற்பாட்டை அவதானித்த சிறப்புத்தளபதி எமது படையணியின் வழங்கல் பொறுப்பாளராக நியமித்தார். அதிலும் தனது உச்ச திறமையை வெளிக்காட்டி வந்தான். இக்காலப்பகுதியில் புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் சமாதானம் ஏற்பட சிறப்பு அரசியல் வேலைக்காக மன்னார் மாவட்ட கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக கடமை ஏற்று அங்கு சென்றான். அங்கு ஒரு புதிய சூழலை நிலவன் எதிர்கொள்கின்றான். அதாவது மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை மூவின மக்களின் செயற்பாடுகளும் நிறைந்து காணப்பட்ட ஓர் இடமாகும். எனவே இங்கு அரசியல் என்பது மிகவும் நுணுக்கமாக மேற்கொள்ளவேண்டி இருந்தது. அதற்கும் தன்னைப் பழக்கப்படுத்தி செயற்பட்டுவந்தான். இயல்பாகவே மக்களை நேசிப்பதிலும் அவர்களைத் தன்பக்கம் கவர்வதிலும் அவனுக்கு நிகர் அவனாகவே காணப்பட்டான். எனவேதான் அந்தச் சூழ்நிலையிலும் அவன் அரசியலை மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக அமைந்தது.

நிலவனிடம் இன்னுமொரு சிறப்பம்சம் காணப்பட்டது. கருத்துக்கள், அபிப்பிராயங்கள், ஆலோசனைகள் என்றால் யார் என்று பார்க்காமல் அவற்றைப் பெற்று பின்பு அந்த சூழ்நிலைக்கு ஏற்றதுபோல் முடிவுகளைத் தானே எடுத்து செயல்படுத்தியும் அன்றைய அரசியல் மற்றும் நடவடிக்கைகளுக்கு சிறப்பாக அமைந்திருக்கும். இவ்வாறான சூழலில் சுனாமி அனர்த்தம் நிகழ்ந்தது. இதன்போது இவனது செயற்பாடுகள், நடவடிக்கைகள் போன்றவற்றின் திறமையால் சிறப்புத்தளபதியினால் மன்னாரிலிருந்து வரவழைக்கப்பட்டு வடமராட்சி கிழக்கு அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகின்றார். இயல்பாக நிலவனிடம் இருந்த மக்களை நேசிக்கும் பண்பு, பிறரைக் கவர்கின்ற முகபாவம், எதையும் ஒழிவு மறைவின்றி நேரடியாகக் கதைக்கின்ற தன்மை. இவை எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்ட நிலவனின் ஆளுமையின் வெளிப்பாடே வடமராட்சி கிழக்கிற்கான சுனாமி மீள் கட்டுமானத்தில் துரித மாற்றங்களை ஏற்படுத்தியது. அதற்குச் சான்றாகவே வடமராட்சி கிழக்கில் உள்ள வீதிகள், வீடுகள், கட்டடங்கள், தொழில்சார் நிறுவனங்கள் போன்றன கண்முன்னே கூறி நிற்கின்றன. அத்துடன் மாவீரர் பெற்றோர்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களுடன் உறவாடி அவர்களது பிரச்சனைகளை ஆராய்ந்து அதனைச் சிறப்புத்தளபதியுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதில் மிகவும் அக்கறையாகச் செயற்பட்டான். இவ்வாறான நிலவனிடம் மனது நெகிழ்ச்சிப்போக்கு கொண்டது என்பதையும் ஒரு சந்தர்ப்பத்தில் கண்டேன் அதாவது ஓரு மாவீர்நாளை முன்னிட்டு மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நடைபெற்றது. அதன்போது மாவீரர் சிலரது திருவுருவப்படம் வைக்காமையை கண்ட பெற்றோர் வேதனையில் பேசிவிட்டார்க்ள. அப்போது நானும் அங்கு நின்று இவர்களை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று எண்ணிய வேளை எனக்கு அருகாமையில் விசும்பல் சத்தம் கேட்டது. திரும்பிப்பார்த்தேன் நிலவன் அழுதவண்ணம் இருந்தான். அங்கு ஒரு புதிய சூழல் உருவானது. அதாவது பெற்றோர் நிலவனை சமாதானப்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியது. இது நிலவனின் மனநெகிழ்ச்சிக்கு ஓர் உதாரணமாகும்.

பின் களச்சூழல் மாற்றம் அடைகிறது. தமிழரின் தலைநகரம் நிலவனைக் கடமைக்கு அழைக்கிறது. சிறப்புத்தளபதியின பணிப்பில் நிலவன் திருகோணமலைக்குச் சென்று தன்னுடைய கடமையில் ஈடுபடுகின்றான். பின்பு சூழ்நிலை மாற்றத்தால் சண்டைக்கு தன்னைத் தயார்ப்படுத்தி கடற்சண்டை அணியின் ஒரு தொகுதி வழிநடத்தல் அதிகாரியாக செயற்படுகின்றான். அங்கும் அவன் தனது முத்திரையைப் பதிக்கின்றான். மூதூரில் சண்டை நடைபெற்ற வேளை முதல் நாள் கடல் சண்டையில் எமது அணியின் சில கட்டளை அதிகாரிகளான லெப்.கேணல் தென்றல்மாறன், லெப்.கேணல் சூரியா, லெப்.கேணல் அலைஅழகி வீரச்சாவடைய பல போராளிகள் காயமடைந்து சில படகுகளும் திருத்தவேலை செய்யவேண்டி இருந்தமையாலும் அடுத்தநாள்ச் சண்டையில் கடலில் எமது பங்களிப்பு குறைந்து தரையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு சண்டையில் ஈடுபட்டோம். இந்த நேரத்தில் கடல் உதவி தேவைப்பட்டதால் நாம் உடனடியாக சில படகை தயார்ப்படுத்தினோம். அதில் முதலில் இறங்கிய இரண்டு படகுகளுக்கும் தானே கட்டளை அதிகாரியாக இறங்கி திருகோணமலைத் துறைமுகத்தில் இருந்து மூதூர் இறங்குதுறைக்கு வரும் இராணுவ உதவிகளை நிறுத்துவதற்கு இரண்டு துறைகளுக்கும் இடைப்பட்ட கடல்பகுதியில் நின்று சமராடி எதிரிகளின் நகர்வை பல மணிநேரம் நிறுத்தி அதிலும் ஓர் முத்திரையைப் பதித்தவன். இதில் நிலவன் சிறு விழுப்புண்ணை ஏற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Commander-Lieutenant-Colonel-Nilavan.jpg

பின்னர் இவனது களமுனை வன்னி நோக்கி நகர்கிறது. பிற்பட்ட காலத்தில் வன்னியில் ஏற்பட்ட கடற்சமர்களில் நிலவனின் பங்களிப்பு ஏதோ ஒருவகையில் அமைந்திருக்கும். ‘எங்கடை கடல்லை நேவி திரியிறதை ஒரு காலமும் அனுமதிக்கக்கூடாது. அவனுக்கு அடிக்கவேணும், உடைக்கவேணும், தாக்கவேணும் என்று வெறிபிடித்தவன் போல கதைப்பான். அதைச் செயலிலும் காட்ட முற்படுவான் ஏனெனில் தலைவர் சொல்லைவிட செயலையே விரும்புவார் என்பது நிலவனுக்குத் தெரியும். தலைவரை மிகவும் ஆழமாக நேசித்தான். மாவீரர்களில் அளவு கடந்த பற்றுள்ளவனாக இருந்தான். இதற்கும் அவனே சான்று. ஏனெனில் கார்த்திகை 27 என்றால் தனது பணிக்கு நடுவிலும் அயலில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லம் சென்று தரிசித்துவிட்டு வருவான். இவ்வாறான பண்புகள் கொண்ட நிலவன் 26.12.2007 அன்று நெடுந்தீவுக் கடற்பரப்பில் டோரா மூழ்கடிப்புச் சமரில் வேறுபணி இருந்தபோதும் இச்சமரில் தானும் கலந்துகொள்ள வேண்டும் எனத் தளபதிகளுடன் சண்டையிட்டு அச்சமருக்கு சென்று தன்னுடைய தோழர்களுடன் நெடுந்தீவுக் கடலில் வீரகாவியம் ஆனார்கள்.

நிலவனுடைய அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் எல்லாவற்றையும் இதில் குறிப்பிட்டுவிட முடியாது. ஏனெனில் அவனது விடுதலைக்கான பயணம் என்பது மிகவும் நீண்டது. சில பக்கங்களையே இதில் குறிப்பிட்டுள்ளேன். செயல்வீரனுடைய கனவுகளை நனவாக்குவோம் என்ற நம்பிக்கையுடன் அவனுடைய பயணப்பாதையில் தடம் தொடர்ந்;து செல்கின்றோம்.

‘நிலவா பெயரில் மட்டும் நிலவாக இல்லாமல்
செயலிலும் நிலவாய் வாழ்ந்தவனே.
சிரிப்பின் சிகரமே என்றுடன் எம்முடன்
வாழ்ந்து கொண்டிருப்பாய்.

நினைவுப்பகிர்வு:
கு.இனியவன் (நண்பன்)
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள்.

நன்றி: நீலக்கடலின் நெருப்பு நிலவு.

 

https://thesakkatru.com/commander-of-sea-tiger-lieutenant-colonel-nilavan/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் நிலவனின் இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்த பொழுதான செயற்பாடுகள்

Commander-Nilavans-activities-while-in-t

லெப். கேணல் நிலவன் / மாறனின் இம்ரான் – பாண்டியன் படையணியில் இருந்த பொழுதான செயற்பாடுகள்.

அல்பிரட் தங்கராசா டென்சில் டினஸ்கோ (டென்சில்) யாழ். புனித பத்திரியார் கல்லூரியின் க.பொ.த. சாதாரண தர மாணவன். அதற்கு முன்னர் வெற்றிலைக்கேணி றோமன் கத்தோலிக்க பாடசாலை, மற்றும் வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றிருந்தான்.

இதன் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட ரிவிரெச இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து இரணைப்பாலையில் வசித்து வந்தான். அத்தருணத்தில் தேசம் விடுத்த அழைப்பினை ஏற்று தனது தாய் நாட்டிற்குரிய கடமையைச் செய்வதற்காக 14.02.2007 அன்று எமது விடுதலை அமைப்பில் இணைந்து கொண்டிருக்கின்றான்.

அமைப்பின் சில தேவைகளின் பொருட்டு குறித்த ஒரு கடமைக்கு போராளிகள் உள்வாங்கப்பட்ட பொழுது இவனும் அக்கடமைக்கு தேரந்;தெடுக்கப்பட்டான். இம்ரான் பாண்டியன் படையணிக்கு தெரிவு செய்யப்பட்டான். கௌதமன் -02, இவனது ஆரம்ப பயிற்சி முகாம். ஏறக்குறைய 06 மாதங்கள் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த இவன் மாறன் என்ற பெயருடன் வெளியேறினான்.

அடிப்படைப் பயிற்சி முகாமைப் பொறுத்த வரை எந்தப் போராளிக்கும் அது ஒரு புது அனுபவமாகவே இருக்கும். மாறனும் இதற்கு விதிவிலக்கானவன் அல்ல. இருந்த போதிலும் இவன் நிற்கும் இடத்தில் ஒரு கூட்டமே இருக்கும். கடுமையான பயிற்சிகளைப் பெற்றும் சோர்வடைந்து ஓய்வாக இருக்கின்ற பொழுது இவன் கூறும் பகிடிகள், மற்றும் மற்றவர்களை ஊக்கப்படுத்தும் பேச்சுக்கள் என்பவை போராளிகளுக்கு சோர்வைக் களைந்து புதுத் தென்பை ஊட்டும் சிரிப்பொலிகளால் அந்த இடத்தின் மௌனமே கலையும்.

எந்தப் போராளிக்கும் சுகயீனம் என்றால் தாயாக, தந்தையாக நின்று அப்போராளியை பராமரிப்பான். இவன் இயக்கத்தில் இணைவதற்கு முன், கிபிர் தாக்குதல் ஒன்றில் காலில் காயமடைந்து கொழும்புவரை சென்று சிகிச்சை பெற்று வந்த பொழுதிலும், பயிற்சியில் அதன் விளைவைக் காணமுடியாது. சாதாரண போராளிகள் போலவே பயிற்சியினை சிரித்துச் சிரித்தே செய்து முடிப்பான்.

அடிப்படைப் பயிற்சியினைப் பெற்றுக் கொண்ட இவர் சில இரகசிய கடமைகளை பொறுப்பேற்றுச்செய்தான். அதன் பின்னர் கனரக ஆயுதப் பயிற்சிகளைப் பெறுகின்றான். கனரக ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட இவன் 26.09.2000 அன்று ஓயாத அலைகள் -04 நடவடிக்கையில் இத்தாவில் பகுதியிலும், 30.09.2000 அன்று ஓயாத அலைகள் -04 நடவடிக்கையிலும் கண்டல் பகுதியிலும் 05.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியிலும், 09.10.2000 அன்று கிளாலிப் பகுதியிலும், 19.10.2000 அன்று மீண்டும் நாகர்கோயில் பகுதியிலும் எதிரியின் அரண்களை சிதைத்து தனது ஆயுதத்தால் எதிரியை சிதறடித்து ஓயாத அலைகள் -04 நடவடிக்கைக்கு பலம் சேர்ந்தான். இவன் தொடர்பாக தாக்குதலை வழிநடத்திய தளபதிகள் கூறும்பொழுது ‘சண்டை என்டா அவனுக்கு ஒரு கலை, அவனில் எந்த பதட்டமும் இருக்காது. சிம்பிளா நிப்பான்’ எனக் கூறினார்கள்.

சண்டை முடிவுற்றதும் பின்தள பணி சிலவற்றிற்காக எடுக்கப்பட்ட பொழுது தனது சில விண்ணப்பங்களை போராளிகளுடனும் பொறுப்பாளர்களுடனும் பகிர்ந்து கொண்டான். அதாவது கடற்புலிகள் அணிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையினை தெரியப்படுத்தினார்.

இதற்கு முன்னர் 27.01.2000 அன்று அண்ணைக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் ‘ அண்ணை நான் கடற்புலிகள் அணிக்குப் போக விரும்புறன். நான் கடற்கரை சார்ந்த கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தனான். எங்கட சொந்தங்கள், உறவுகளை எல்லாம் நேவிக்காரன் சுட்டுத்தள்ளுகிறான். அவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும். ஆகவே கடற்புலி படையணியில் எனது பணியைத் தொடர அனுமதியுங்கள்’ என்று கேட்டுக் கொண்டான்.

அதற்கான பதில் வருவதற்கு சிறு தாமதங்கள் ஏற்பட்ட பொழுது அடுத்தடுத்த மூன்று கடிதங்கள் அனுப்பினான். ‘அண்ணை கடற்புலியில் இருந்த எனது சித்தப்பாவான பாக்கி அண்ணையும் (லெப். கேணல் பாக்கி) வீரச்சாவடைந்துவிட்டார். அவரது பணியைத் தொடர என்னை அனுமதியுங்கோ’ இது அவரது மூன்றாவது கடிதம்.

இவனது மூன்றாவது கடிதத்திற்குரிய பதிலானது இவனை பரவசத்தில் ஆழ்த்தியிருந்தது என்றே கூறவேண்டும். மச்சான் நான் கடற்புலிக்கு போறன்டா, அண்ணை ஒம் எண்டுட்டார். இருந்து பாரன், மாறன் ஆமியை ஒரு கை பார்த்துத்தான் திரும்பி வருவன்.’ இது அவனது இறுதி இம்ரான் பாண்டியன் படையணிப் போராளியாகக் கூறியது.

அதன்பின்னர் தலைவரின் பணிப்பிற்கு அமைய, 2001.09ம் மாதம் இவர் கடற்புலி படையணிக்கு அனுப்பப்பட்டார்.

தகவல்: பா.சுடர்வண்ணன்
பெ. மைந்தன்
லெப்.கேணல் ராதா வான் காப்புப் படையணி.
நிதித்துறை.
தமிழீழ விடுதலைப் புலிகள்.

நன்றி: நீலக்கடலின் நெருப்பு நிலவு.

https://thesakkatru.com/commander-nilavans-activities-while-in-the-imran-pandian-brigade/

 

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.