Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஆங்கிலமும் தமிழரும்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இன்று zoom இல் ஒரு நூல் விமர்சனம் நடைபெற்றபோது எமது அடுத்த தலைமுறையினர் பற்றிய பேச்சு எழுந்தது. பலர் இன்னமும் தமிழ் கதைத்தாலும் எழுதவோ வாசிக்கவோ தெரியாத நிலையிலேயே இருக்கின்றனர். இலக்கியம் புலம்பெயர் அடுத்த தலைமுறையில் எப்படி இருக்கப்போகின்றது என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆங்கில மொழி பேசப்படுகின்ற நாடுகளில் வாழுகின்ற பிள்ளைகள் தமிழை வளமாகப் பேசவோ எழுதவோ தெரியாமல் இருப்பதற்கு அவர்கள் பெற்றோரே காரணமன்றி பிள்ளைகள் அல்ல என்றேன் நான். மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்குச்சென்ற பெற்றோர்களுக்கு அந்த நாட்டு மொழிகள் தெரியவில்லை. அதனால் அவர்கள் தமிழை வீட்டில் கதைக்கவேண்டிய நிர்ப்பந்தம் என்கிறார் ஒரு பெண். அது ஒரு வகையில் சரியானதாக இருப்பினும் முற்றுமுழுதாக அதுவே காரணம் அல்ல.

நான் கேட்கிறேன் பலர் ஆங்கிலம் பேசத் தெரிந்து கொண்டேதான் பிரித்தானியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்றீர்கள். அங்கு ஆங்கிலத்தைக் கற்பதோ அன்றி அம்மொழிகளின் வேலைவாய்ப்பைப் பெறுவதோ உங்களுக்கு எல்லாம் கடினமாக இருந்திருக்காது. அப்படியிருக்க உங்கள் பிள்ளைகளுடன் தமிழில் நீங்கள் உரையாடாது போனது ஏன் ???? அது ஆங்கில மொழியின் மேல் உங்களுக்கிருந்த தீராத வேட்கையும் தமிழில் நீங்கள் உரையாடுவதை கேவலமாக எண்ணியதனாலும் எம்மொழியின் சிறப்பை அறியாததாலும் தானே ???

அதை ஒத்துக்கொள்ள மனமின்றி மற்றைய ஐரோப்பிய நாடுகளில் வாழ்பவர்களை உங்களிலும் குறைவான தகுதியுடையவர்களாக நீங்கள் எடைபோட்டு உங்களை நீங்கள் பெரிதாக ஆக்கிக்கொள்கின்றீர்கள். ஒவ்வொரு மொழிக்கும் சிறப்புண்டுதான் எனினும் தமிழ் காலத்தால் முந்தியது என்பதும் அதன் இலக்கண வளம் வேறு எந்த மொழிக்கும் இல்லை என்பதும் கூட பலருக்குத் தெரிவதில்லை. மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றவர்கள் அம்மொழிகளைக் கற்று அவர்கள் பிள்ளைகளும் அங்கு உயர்கல்வி கற்றுச் சிறப்புற வாழ்ந்துகொண்டுதானே இருக்கின்றனர்.

ஆகவே உங்கள் பிள்ளைகள் தமிழ் மொழி தெரியாதவர்களாக இருப்பது சிறப்பு என்று நினைத்துக்கொண்டிருக்கும் தமிழர்களே! நீங்கள் உங்கள் சந்ததிக்கு உங்கள் மொழியைக் கூடக் கடத்த முடியவில்லை என்றால் நீங்கள் எல்லாம் இருந்தும் அடையாளம் எதுவுமற்ற அனாதை இனங்களாகவே அடையாளங் காணப்படுவீர்கள். ஏனெனில் உங்கள் பிள்ளைகளின் பெயர்களை வைத்துக்கூட அடையாளம் காண முடியாது அவர்கள் எந்த இனத்தவர் என்று.

 • Like 5
 • Sad 1
Link to comment
Share on other sites

 • Replies 66
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

மெசொபொத்தேமியா சுமேரியர்

இன்று zoom இல் ஒரு நூல் விமர்சனம் நடைபெற்றபோது எமது அடுத்த தலைமுறையினர் பற்றிய பேச்சு எழுந்தது. பலர் இன்னமும் தமிழ் கதைத்தாலும் எழுதவோ வாசிக்கவோ தெரியாத நிலையிலேயே இருக்கின்றனர். இலக்கியம் புலம்பெயர்

goshan_che

அன்ரி, யூகே, அமெரிக்கா, கனடாவில் பிள்ளைகள் தமிழில் உரையாடுகிறார்கள் ஆனால் எழுத வாசிக்க முடிவதில்லை என்று ஆரம்பிக்கும் கட்டுரை(?), பெற்றார் பிள்ளைகளுடன் தமிழில் உரையாடுவதில்லை என முடிகிறது! ம

nige

அது என்னவோ உண்மைதான் கோசன்... எங்கள் வீட்டிலும் அம்மா , அப்பா தான் . எனக்கு மம்மி, டாடி இந்த இரண்டு சொல்லையும் தமிழ் குழந்தைகள் சொல்லும்போது கோவம்தான் வரும். இதுதான் காலம் என்று நகரவேண்டியதுதான். யார்

 • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கேட்கிறேன் பலர் ஆங்கிலம் பேசத் தெரிந்து கொண்டேதான் பிரித்தானியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்றீர்கள். அங்கு ஆங்கிலத்தைக் கற்பதோ அன்றி அம்மொழிகளின் வேலைவாய்ப்பைப் பெறுவதோ உங்களுக்கு எல்லாம் கடினமாக இருந்திருக்காது. அப்படியிருக்க உங்கள் பிள்ளைகளுடன் தமிழில் நீங்கள் உரையாடாது போனது ஏன் ???? அது ஆங்கில மொழியின் மேல் உங்களுக்கிருந்த தீராத வேட்கையும் தமிழில் நீங்கள் உரையாடுவதை கேவலமாக எண்ணியதனாலும் எம்மொழியின் சிறப்பை அறியாததாலும் தானே ???

தரமான கருத்துக்கள்.👍🏽👍🏽👍🏽

தமிழை கேவலமாக கருதும் கூட்டம் அதிகரித்து விட்டது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இல்லை. அநேகருக்கு வெளிநாடுகளுக்கு வரும்போது ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்திருப்பதில்லை. ஆங்கிலத்தில் எழுத வாசிக்க, ஆங்கில இலக்கண இலக்கியங்களை அறிந்திருந்தாலும் ஏன் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றிருந்தாலும் பலரால் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடிவதில்லை. எனவே தாங்கள் ஆங்கிலம் பேசிப் பழகுவதற்கு உகந்த ஓர் ஊடகமாக வீட்டில் உள்ள பிள்ளைகளுடன் (அரைகுறை) ஆங்கிலத்தில் பேசி பயிற்சி செய்ததன் விளைவே இது. 

 • Like 1

இன்னமும் தமிழ் கதைத்தாலும் எழுதவோ வாசிக்கவோ தெரியாத நிலையிலேயே இருக்கின்றனர்.

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்படியிருக்க உங்கள் பிள்ளைகளுடன் தமிழில் நீங்கள் உரையாடாது போனது ஏன் ????

அன்ரி,

யூகே, அமெரிக்கா, கனடாவில் பிள்ளைகள் தமிழில் உரையாடுகிறார்கள் ஆனால் எழுத வாசிக்க முடிவதில்லை என்று ஆரம்பிக்கும் கட்டுரை(?), பெற்றார் பிள்ளைகளுடன் தமிழில் உரையாடுவதில்லை என முடிகிறது!

முதலில் உங்கள் பிரச்சனை என்ன? இந்த பிள்ளைகள் தமிழில் உரையாடுகிறார்கள் ஆனா எழுத வாசிக்க முடிவதில்லை என்பதா?

அல்லது தமிழில் உரையாடவே முடிவதில்லை என்பதா?

2வது எனில் அப்படியான பிள்ளைகள் மிக குறைவாகவே உள்ளனர். தக்கி தயங்கினாலும் தமிழ் பிள்ளைகள் பலர் தமிழில் உரையாட கூடியவரே. 

வாசிப்பது, எழுதுவது என்றால் கடினம்தான்.  மற்றைய ஐரோப்பிய நாடுகள் போலன்றி யூகேயில் இரெண்டு பெற்றாரும் முழு நேர வேலைக்கு போவது, கடுகதி வாழ்கை என பல காரணங்கள் உள்ளன.

அப்படி இருந்தும் ஏனைய நாடுகளை விட தமிழ் பள்ளிகள், படிக்கும் பிள்ளைகள் அதிகம் உள்ள நாடு யூகே என நினைகிறேன்.

யார் கண்டது சிலவேளை இந்த பள்ளிகளில் படிப்பிக்கும் ஆசிரியர்கள் சரிவர சொல்லி கொடுப்பதில்லையோ?🤪

கடைசியாக, அடுத்த, அடுத்த தலைமுறைகள் தமிழில் இலக்கியம் படைக்கும் என்ற எதிர்பார்பெல்லாம் ரொம்ப ஓவர். ஓரிருவர் செய்யலாம் ஆனால் புலம்பெயர் நாடுகள் எதிலும் இது பெரிய அளவில் சாத்தியபடப்போவதில்லை.

சிலசமயம் மலேசியா போல் கனடாவில் மட்டும் சாத்தியமாகலாம்.

கட்டுநாயக்காவில் விமானம் ஏறும் போதே உங்கள் சுயத்தில் பாதியை தொலைத்தாகிவிட்டது. மீதியை தக்க வைக்க, அடுத்த தலைமுறைகள் தமிழில் பேசவே பெரும் முயற்சி தேவை இதில் அடுத்த தலைமுறை புலம்பெயர் இலக்கியம் எல்லாம்......

 • Like 6
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் என்று சொல்லும் உரிமை நமக்கு இருக்கின்றது. காரணம் நமது மொழியை எழுதவும் வாசிக்கவும் கூடவே பேசவும் எமக்கு தெரிந்திருக்கின்றது. ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நம் குழந்தைகளுக்கு ......?
ஒரு மொழியை பேசுவதால் மட்டும் அது என் தாய் மொழி என்று சொல்லிவிட முடியாது. மொழி என்பது ஒரு தொடர்பாடலுக்கான சாதனம் எனினும் அதன் செயற்பாடு அதனுடன் முடிந்து விடுவதில்லை. ஒரு மொழி அந்த சமூகத்தின் பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் பெரும் பங்கை ஆற்றிக் கொண்டிருக்கின்றது. எந்த ஒரு குழந்தையும் தன் தாய் மொழியில் சிந்தித்து செயற்படும் போதுதான் அதன் வெளிப்பாடு சிறப்பாக அமையும் என்பது மொழியியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது. 

ஐரோப்பிய நாடுகளில் வாழும் நம் குழந்தைகள் ஒரளவிற்கு தமிழை எழுதவும் வாசிக்கவும் தெரிந்திருக்கின்றார்கள். தமிழர்களை சந்திக்கும் போது “ வணக்கம் “ என்று நமது அடுத்த தலைமுறை சொல்லும்போது உண்மையில் பெருமையாக இருந்தது.ஆனால் அமெரிக்காவில் வாழும் நம் குழந்தைகளிற்குத்தான் நமது மொழி பற்றிய அறிவு மிகவும் குறைவாக இருக்கின்றது. அது இந்த நாட்டின் வாழ்க்கை அமைப்பு முறையா அல்லது தமிழை படித்து எதை சாதிப்பது என்ற நம் அசமந்த போக்கா என்பது புரியவில்லை . 

ஏதோ பிள்ளைகளுக்கு தமிழில் கதைக்க தெரிந்தால் மட்டும் போதும் என்றுதான் நானும் இதுவரை எண்ணுவதுண்டு. ஆனால் அது எவ்வளவு முட்டாள்தனம் என்று இப்போது புரிகிறது. 

திருக்குறளில் தொடங்கி ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் நமது பக்தி இலக்கியங்கள் , நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறுகள் இவை எல்லாம் நாம் எப்படி ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை நமக்கு கற்றுத் தந்தன. ஆனால் நாம் எதை நம் குழந்தைகளிற்கு கற்றுக் கொடுத்தோம். மொழி,கலாச்சாரம் ,பண்பாடு , தனி மனித ஒழுக்கம் என எதையுமே அவர்களுக்கு கற்றுக்கொடுக்காமல் அவர்களிடமிருந்து இவற்றை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்.

ஒரு குழந்தை எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் ஆனால் தாய் மொழியை தெரிந்து இருப்பது என்பது அத்திய அவசியமானது. அம்மா எப்போது நாகரீகம் என்ற போர்வையில் மம்மி ஆனதோ அப்போதே நம் அடுத்த தலை முறையிடம் தமிழ் அழியத் தொடங்கி விட்டது. இந்நிலை தொடர்ந்தால் என்னும் இரு தலைமுறைகள் கடந்தபின் தன் தாய் மொழி பற்றி அறிய குழந்தைகள் google இல் தேடுவது மட்டும்தான் ஒரே வழியாக இருக்க முடியும். 😭😭😭😭😭

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலர் தமிழை விரும்பி படிக்கின்றார்கள் சுமே,

எனது பிள்ளைகளும் அவர்களாகவே விரும்பி தமிழை 12ம் வகுப்பில் ஒரு பாடமாக எடுக்கின்றார்கள்,

வீட்டில் முழு நேரமும் தமிழில்தான் கதைப்பது வழக்கம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, உடையார் said:

இங்கு பலர் தமிழை விரும்பி படிக்கின்றார்கள் சுமே,

எனது பிள்ளைகளும் அவர்களாகவே விரும்பி தமிழை 12ம் வகுப்பில் ஒரு பாடமாக எடுக்கின்றார்கள்,

வீட்டில் முழு நேரமும் தமிழில்தான் கதைப்பது வழக்கம்

ஆனால் இது எல்லா வீடுகளிலும் நடப்பதில்லை என்பதுதான் உண்மை...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nige said:

அம்மா எப்போது நாகரீகம் என்ற போர்வையில் மம்மி ஆனதோ அப்போதே நம் அடுத்த தலை முறையிடம் தமிழ் அழியத் தொடங்கி விட்டது. இந்நிலை தொடர்ந்தால் என்னும் இரு தலைமுறைகள் கடந்தபின் தன் தாய் மொழி பற்றி அறிய குழந்தைகள் google இல் தேடுவது மட்டும்தான் ஒரே வழியாக இருக்க முடியும். 😭😭😭😭😭

இதில் ஆக கூடிய பகிடி என்னவென்றால், புலம்பெயர்ந்த பிள்ளைகள் பெரும்பாலும் அம்மா, அப்பா என்றே அழைக்கின்றனர்.

ஆனால் ஊரில் இவர்களை பல வீடுகளிற்கு (வட கிழக்கிலும்) கூட்டி போகும் போது அங்கே பிள்ளைகள் டாடி மம்மி என்கிறன.

அதே போல் இங்கிலீஸ் மீடியம், இண்டர் நேசனல் ஸ்கூல் என்று தமிழ் வாசிக்க தெரியாத ஒரு சமூகம் ஊரிலேயேயும் உருவாகிறது. இங்கேயாவது நாம் வார இறுதியில் தமிழை படிபிக்கின்றோம்.

20 minutes ago, உடையார் said:

இங்கு பலர் தமிழை விரும்பி படிக்கின்றார்கள் சுமே,

எனது பிள்ளைகளும் அவர்களாகவே விரும்பி தமிழை 12ம் வகுப்பில் ஒரு பாடமாக எடுக்கின்றார்கள்,

வீட்டில் முழு நேரமும் தமிழில்தான் கதைப்பது வழக்கம்

வாழ்துக்கள் உடையார்.

எங்கடாயாளும் வாய்ப்பாட்டும், தமிழும் கற்று வருகிறார். கொவிட் காலத்திலும் சூம் மூலம் தொடர்கிறது.

உங்கள் நகரத்தில் இயங்கும் இரு தமிழ் பள்ளிகளும் மிக வினைத்திறனுடன் இயங்குவதாய் அறிந்தேன். நகர விழாவில் பறை அடித்து போன வீடியோவையும் பார்த்தேன்.

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நம்மடை குடும்பத்தில் அம்மாவின் நான்கு சகோதரங்கள் வெளிய 
அவர்களது பிள்ளைகளின் துணைகள்  ஒன்று வெள்ளை, ஒன்று குஜராத்தி, அடுத்தது ஆபிரிக்க வம்சாவளி 
மற்றயது ஹர்பஜன் சிங், கடைசி ஒன்று இன்னும் கலியாணவயசு வரவில்லை ஆனால்  அநேகமாக வெள்ளையாக தான் இருக்கும், ஒன்றுக்கும் தமிழ் ஒழுங்காக வராது(ஒழுங்காக என்றால் சொல்ல வாறதை தெளிவாக சொல்லுவது ) ,மூத்தது 10 வயசு வரைக்கும் இலங்கையில் தான் இருந்தது, தமிழ் என்ற பெயரில் பாகுபலி கிலுக்கி மொழி பேசும், குஜராத்தி கல்யாணத்தில் மெஹந்தி வைத்து சங்கீத் நடத்தி பாங்க்ரா ஆடி ரசித்துவிட்டு வந்திச்சினம் நம் தமிழ் மஹாஜனங்கள், அவர்களுடைய கலாச்சாரத்தில் இருக்கும் பற்றை பற்றி உச்சுக்கொட்டி சிலாகிச்சு கூறிச்சினம் தங்களுடைய அடையாளத்தையே துலைத்துவிட்ட நம்மடை சனங்கள்.
புலத்தையும் புறத்தையும் பிடித்துவைத்திருக்கும் கடைசி தலைமுறை விழுந்ததும், இலங்கை அவர்களுக்கு  சுற்றுலா போகும் இடமாக மாறி (இப்பவே பாதி அப்படித்தான்) அவர்களுடைய வேர் என்பதையே இழந்துவிட்டிருப்பர், அவர்களது பேரப்பிள்ளைகளில்,பூட்டப்பிள்ளைகளில் எதாவது ஒன்று நம்மடை ஆக்கள் எல்லாம் செம்பட்டை முடியுடன் இருக்க எனக்கு மட்டும் இந்த கறுத்த முடி எங்கயிருந்து வந்தது என்று முழுசிக்கொண்டு இருக்கும் 

 • Like 1
 • Haha 1
 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இங்கு வளர வில்லை என்று சொல்ல முடியாது பரதநாட்டியம் வாய்ப்பாடு பாட்டுப் போட்டி என கலைகள் வளர்கின்றன. தமிழ் கடைகளும் தமிழ் சாப்பாடும் வளருகின்றது . கோடையில் கொண்டாடட    காலங்களில் தமிழ் புடவைக்கடைகளும்  பல முளைத்து இருக்கின்றன. ஆனால் நல்ல தமிழ் பேச தான் முடிவதில்லை   நம் சிறார்களுக்கு. அப்பா இரண்டு வேலை என ஒடடம். அம்மா ஆபீஸ் என ஒடடம். பையன் பள்ளி என ஒடடம்.  சிறுமி டே கேர் என ஒடடம்.  எங்கு உடகார்ந்து தமிழ் படிப்பது ? . தமிழ் பள்ளிக்கூட வகுப்பிலும் வாரம் இரு மணித்தியாலம் கற்றால் எப்படி ?  பாடடன் பாட்டிகளுடன் நேரம் செலவிடும்போது  ஆங்கிலம் தெரிந்த வரிடம்  ரைஸ் (rice  )அண்ட் சிக்கின் என்றும்  ஆங்கிலத்திலும்  தெரியாத பாட்டியிடம்  சோச்சி (சோறு ) சிக்கின் என   தமிழிலும் கேட்க தெரிகிறது .தான் படித்ததை  தெரியாத பாட்டிக்கு   சொல்லிக் கொடுத்து பாடம் எடுக்கிறது குழந்தை  .தமிழ்  கடையில்  டோசா (தோசை ) மோதரம் (மோதகம்)   என்று கேட்கவும் தெரிகிறது. மாற்று மொழி மணப் பெண், மணமகனுக்கு  சாரியில் உம்  வேஷ்ட்டி சால்வையிலும்  திருமணத்தின் போது வேடிக்கை காடட தெரிகிறது  ஆனால்  ஒரு சாப்பாட்டு  மேசையில் ஒன்றாக இருந்து உண்ண முடிவதில்லை. ஒரே ஒடடம் ..எங்கு போய் நிற்குமோ ?  .தமிழ்  எவ்வாறு வாழும் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நகைசுவையாக எழுதினாலும் நீங்கள் பல யதார்தங்களை தொட்டே செல்கிறீர்கள்.

ஆனால் நீங்கள் விபரிக்கும் போக்கு 83 க்கு முன்னாக வந்தவர்களிடம் அதிகமாகவும்  பின்னர் வந்தவர்கள் மொழியை இறுக பிடித்திருப்பதையும் காண முடியும்.

எனது வயதை ஒத்த பலர் தமிழ் கதைக்காமல் இருந்தாலும் என்னைவிட 15 வயது குறைந்த பிள்ளைகள் மத்தியில் தமிழ் பேசுவது அதிகமாக இருப்பதை நான் கண்டுள்ளேன்.

ஆகவே இப்போதைக்கு புலத்தில் தமிழ் மொழி, கலாச்சாரம் ஏறு முகம்தான். லண்டனில் தடக்கி விழும் இடமெல்லாம் தமிழ் பள்ளி, கோவில், மாசம் ஒரு பழைய மாணவர் சங்க கலாச்சார நிகழ்வு, அடுத்து அரங்கேற்றம் ( இது நடத்தாட்டி நீங்கள் சமூக அந்தஸ்து குறைந்ததாகவே கணிக்கப்படும் 🤣) இப்படி 90 களின் ஆரம்பத்தில் கொழும்பில் தமிழ் வளர இருந்த ஏது நிலையை விட அதிக ஏது நிலையே இருப்பதாக எனக்கு படுகிறது.

இப்போ அதிகம் வீட்டில் இருந்து சம்பாதிப்பவர்கள் (வரியும் கட்டுவதில்லை) பாட்டு, நடன, மிருதங்க ஆசிரியர்களே.

ஆனால் ஊரில் இருந்து வந்த பரம்பரை அழிய, இது தொடருமா என்பது கேள்விகுறியே.

ஆனால் சமய பக்தி பல பிள்ளைகளுக்கு உண்டு. அது தொடரும் என்றே படுகிறது.

ஆனால் நீங்கள் சொல்வது போல் இனம் மாறிய திருமணங்கள் இங்கே சர்வசாதாரணமும் தவிர்கவியலாததும்.

இதை ஏற்று கொள்ள முடியாவிட்டால் வெளிநாடு வந்திருக்க கூடாது. 

என்னை பொறுத்தவரை வைத்த பெயரில் இருந்து எமது இனத்தின் நெடிய வரலாற்றை, மொழியின் சிறப்பை, எமது வலிகளை, மொழியை சொல்லியே வளர்க முயல்கிறேன். ஆனால் நாங்கள் 10,000 முன்பு மொழி கண்டவர்கள், அணு விஞ்ஞானிகள் எங்கள் சித்தர்கள் போன்ற கதைகளை சொல்லுவதில்லை, அது உண்மையான வரலாறு மீதும் அவநம்பிக்கையை விதைத்து விடும் என்பதால்.

ஆனால் அதற்கு அப்பால் எதுவும் நடக்கலாம், சொன்னதை போல கட்டுநாயக்கவில் விமானம் ஏறும் போதே இதற்கு தயார் என்றால்தான் விமானம் ஏறி இருக்க வேண்டும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

UK இ பொறுத்தவரை பல மட்டங்கள் உள்ளது. ஒரேயடியாக, தமிழை ஒதுக்குவார்கள் ன்பதில்  இருந்து, தமிழை உணர்வாக படிப்பிக்க முனைபவர்கள்.

அதே போலவே, UK இல் வந்தவுடன் படிப்பு வாய்ப்புகள் இருப்பதால், ஆங்கிலம் முதலில் படித்து இருந்து நாப்பழக்கம் இல்லாவிட்டாலும், ஆங்கிலச் சூழலில் பெற்றோருக்கு ஆங்கிலம்  இலாவகப்படுகிறது. 

ஆனால், தமிழ் பாடசாலையில் பொறுப்பான  ஒருவரின் பகிரங்க உரையில் சொல்லியது, அவர்களது கணீப்பீட்டின் படி ஏறத்தாழ 10% மாணவரே தமிழை முறையாக, பாடசாலை மூலமாக படிக்க (எனவே பெற்றோரும் 10 % படிப்பிக்க)  முயல் கிறார்கள்.

தமிழை மொழியாக படிப்பிக்கலாம். ஆனால் உணர்வாக, இரசனையாக பொதுவாக  மாற்ற முடியாது. சொந்த அனுபவம்.

ஆனாலும், 2ம் தலைமுறை தமது சந்ததிக்கு தமிழ் பேச அல்லது புரிய வேண்டும் என்ற விருப்பத்தில், பிள்ளைககை தமிழ் பாடசாலையில் குறிப்பிட்ட அளவு சேர்க்கிறது.

எல்லாவற்றிற்கும் அடிப்படை, இந்த மேற்குலகின் எவ்வளவு பெறுமதி, என்ன நன்மை எனக்கு கிடைக்கிறது என்ற எண்ணவோட்டம். 

மற்றது, இயற்கையான அடையாள சீரழிவு (assimilation), தவிர்க்க முடியாதது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழில் வாசிக்க, எழுத தாயகத்தில் பல ஆண்டுகள் பிறந்து வளர்ந்தவர்களாலேயே முடியாது. இன்னும் இரண்டு தலைமுறையின் பின்னர் AI மூலம் தமிழ் படிப்பிக்கலாம், ஆனால் ஆர்வம் இருந்தால்தான் எதையும் பிள்ளைகள் கற்கும். அந்த ஆர்வத்தைக் கொண்டு வருவதுதான் பெற்றோர், ஆசிரியர் முன்னுள்ள சவால்.

ஒரு கட்டுரை இணைத்திருந்தேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

தரமான கருத்துக்கள்.👍🏽👍🏽👍🏽

தமிழை கேவலமாக கருதும் கூட்டம் அதிகரித்து விட்டது.

அதுதான் உண்மை

7 hours ago, வாலி said:

இல்லை. அநேகருக்கு வெளிநாடுகளுக்கு வரும்போது ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்திருப்பதில்லை. ஆங்கிலத்தில் எழுத வாசிக்க, ஆங்கில இலக்கண இலக்கியங்களை அறிந்திருந்தாலும் ஏன் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றிருந்தாலும் பலரால் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடிவதில்லை. எனவே தாங்கள் ஆங்கிலம் பேசிப் பழகுவதற்கு உகந்த ஓர் ஊடகமாக வீட்டில் உள்ள பிள்ளைகளுடன் (அரைகுறை) ஆங்கிலத்தில் பேசி பயிற்சி செய்ததன் விளைவே இது. 

ஆனால் அவர்கள் கூறுவது தாம் கல்விக்காக மட்டுமே தான் வெளிநாடு வந்தோம். ஆகவே தமது தரம் உயர்ந்தது என்பதாகத்தான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

அன்ரி,

யூகே, அமெரிக்கா, கனடாவில் பிள்ளைகள் தமிழில் உரையாடுகிறார்கள் ஆனால் எழுத வாசிக்க முடிவதில்லை என்று ஆரம்பிக்கும் கட்டுரை(?), பெற்றார் பிள்ளைகளுடன் தமிழில் உரையாடுவதில்லை என முடிகிறது!

முதலில் உங்கள் பிரச்சனை என்ன? இந்த பிள்ளைகள் தமிழில் உரையாடுகிறார்கள் ஆனா எழுத வாசிக்க முடிவதில்லை என்பதா?

அல்லது தமிழில் உரையாடவே முடிவதில்லை என்பதா?

2வது எனில் அப்படியான பிள்ளைகள் மிக குறைவாகவே உள்ளனர். தக்கி தயங்கினாலும் தமிழ் பிள்ளைகள் பலர் தமிழில் உரையாட கூடியவரே. 

வாசிப்பது, எழுதுவது என்றால் கடினம்தான்.  மற்றைய ஐரோப்பிய நாடுகள் போலன்றி யூகேயில் இரெண்டு பெற்றாரும் முழு நேர வேலைக்கு போவது, கடுகதி வாழ்கை என பல காரணங்கள் உள்ளன.

அப்படி இருந்தும் ஏனைய நாடுகளை விட தமிழ் பள்ளிகள், படிக்கும் பிள்ளைகள் அதிகம் உள்ள நாடு யூகே என நினைகிறேன்.

யார் கண்டது சிலவேளை இந்த பள்ளிகளில் படிப்பிக்கும் ஆசிரியர்கள் சரிவர சொல்லி கொடுப்பதில்லையோ?🤪

கடைசியாக, அடுத்த, அடுத்த தலைமுறைகள் தமிழில் இலக்கியம் படைக்கும் என்ற எதிர்பார்பெல்லாம் ரொம்ப ஓவர். ஓரிருவர் செய்யலாம் ஆனால் புலம்பெயர் நாடுகள் எதிலும் இது பெரிய அளவில் சாத்தியபடப்போவதில்லை.

சிலசமயம் மலேசியா போல் கனடாவில் மட்டும் சாத்தியமாகலாம்.

கட்டுநாயக்காவில் விமானம் ஏறும் போதே உங்கள் சுயத்தில் பாதியை தொலைத்தாகிவிட்டது. மீதியை தக்க வைக்க, அடுத்த தலைமுறைகள் தமிழில் பேசவே பெரும் முயற்சி தேவை இதில் அடுத்த தலைமுறை புலம்பெயர் இலக்கியம் எல்லாம்......

எதில் தொடங்கி எதில் முடிந்தால் என்ன. ஒரு தாய்மொழியை தக்கித்  தயங்கியாவது அரைகுறையாக உரையாடினால் போதும் என்கிறீர்களா??? அடுத்து புலம்பெயர் நாடுகளில் தமிழை அதிகமாகக் கற்கும் பிள்ளைகள் உள்ளது பிரான்சில். இரண்டாவது இடத்தில்தான் பிரித்தானியா. நாம் புலம்பெயர்ந்து வந்ததனால் மற்றவை பற்றிக் கவலை கொள்ளவே கூடாது போலல்லா உங்கள் கருத்து இருக்கு கோசான்.
எமது அடுத்த தலைமுறை தமிழில் இலக்கியம் படைக்காவிட்டாலும் அந்தந்த மொழியில் படைப்பார்கள். அது பின்னர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படும்.

7 hours ago, nige said:

நாம் தமிழர் என்று சொல்லும் உரிமை நமக்கு இருக்கின்றது. காரணம் நமது மொழியை எழுதவும் வாசிக்கவும் கூடவே பேசவும் எமக்கு தெரிந்திருக்கின்றது. ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நம் குழந்தைகளுக்கு ......?
ஒரு மொழியை பேசுவதால் மட்டும் அது என் தாய் மொழி என்று சொல்லிவிட முடியாது. மொழி என்பது ஒரு தொடர்பாடலுக்கான சாதனம் எனினும் அதன் செயற்பாடு அதனுடன் முடிந்து விடுவதில்லை. ஒரு மொழி அந்த சமூகத்தின் பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் பெரும் பங்கை ஆற்றிக் கொண்டிருக்கின்றது. எந்த ஒரு குழந்தையும் தன் தாய் மொழியில் சிந்தித்து செயற்படும் போதுதான் அதன் வெளிப்பாடு சிறப்பாக அமையும் என்பது மொழியியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது. 

ஐரோப்பிய நாடுகளில் வாழும் நம் குழந்தைகள் ஒரளவிற்கு தமிழை எழுதவும் வாசிக்கவும் தெரிந்திருக்கின்றார்கள். தமிழர்களை சந்திக்கும் போது “ வணக்கம் “ என்று நமது அடுத்த தலைமுறை சொல்லும்போது உண்மையில் பெருமையாக இருந்தது.ஆனால் அமெரிக்காவில் வாழும் நம் குழந்தைகளிற்குத்தான் நமது மொழி பற்றிய அறிவு மிகவும் குறைவாக இருக்கின்றது. அது இந்த நாட்டின் வாழ்க்கை அமைப்பு முறையா அல்லது தமிழை படித்து எதை சாதிப்பது என்ற நம் அசமந்த போக்கா என்பது புரியவில்லை . 

ஏதோ பிள்ளைகளுக்கு தமிழில் கதைக்க தெரிந்தால் மட்டும் போதும் என்றுதான் நானும் இதுவரை எண்ணுவதுண்டு. ஆனால் அது எவ்வளவு முட்டாள்தனம் என்று இப்போது புரிகிறது. 

திருக்குறளில் தொடங்கி ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் நமது பக்தி இலக்கியங்கள் , நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறுகள் இவை எல்லாம் நாம் எப்படி ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை நமக்கு கற்றுத் தந்தன. ஆனால் நாம் எதை நம் குழந்தைகளிற்கு கற்றுக் கொடுத்தோம். மொழி,கலாச்சாரம் ,பண்பாடு , தனி மனித ஒழுக்கம் என எதையுமே அவர்களுக்கு கற்றுக்கொடுக்காமல் அவர்களிடமிருந்து இவற்றை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்.

ஒரு குழந்தை எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் ஆனால் தாய் மொழியை தெரிந்து இருப்பது என்பது அத்திய அவசியமானது. அம்மா எப்போது நாகரீகம் என்ற போர்வையில் மம்மி ஆனதோ அப்போதே நம் அடுத்த தலை முறையிடம் தமிழ் அழியத் தொடங்கி விட்டது. இந்நிலை தொடர்ந்தால் என்னும் இரு தலைமுறைகள் கடந்தபின் தன் தாய் மொழி பற்றி அறிய குழந்தைகள் google இல் தேடுவது மட்டும்தான் ஒரே வழியாக இருக்க முடியும். 😭😭😭😭😭

பலரின் அறியாமை தம் பிள்ளைகள் அரைகுறையாகத் தமிழைக் கதைத்தால் போதும் என்பதுதான். பலர் அதை பெருமையாகச் சொல்வதையும் கேட்டிருக்கிறேன். அதைவிடக் கொடுமை மொழி தெரியாவிட்டாலும் அவர்களுக்கு இசைகள் பற்றி அறிந்திருந்தால் போதும் என்றும் நினைக்கின்றனர்.

7 hours ago, உடையார் said:

இங்கு பலர் தமிழை விரும்பி படிக்கின்றார்கள் சுமே,

எனது பிள்ளைகளும் அவர்களாகவே விரும்பி தமிழை 12ம் வகுப்பில் ஒரு பாடமாக எடுக்கின்றார்கள்,

வீட்டில் முழு நேரமும் தமிழில்தான் கதைப்பது வழக்கம்

உங்களை போல் தமிழ் உணர்வோடு எல்லோரும் இல்லை உடையார். மற்றைய இனத்தவருக்கு உள்ள மொழிபற்று எம்மவர்க்கு மிகமிக்க குறைவே.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

நம்மடை குடும்பத்தில் அம்மாவின் நான்கு சகோதரங்கள் வெளிய 
அவர்களது பிள்ளைகளின் துணைகள்  ஒன்று வெள்ளை, ஒன்று குஜராத்தி, அடுத்தது ஆபிரிக்க வம்சாவளி 
மற்றயது ஹர்பஜன் சிங், கடைசி ஒன்று இன்னும் கலியாணவயசு வரவில்லை ஆனால்  அநேகமாக வெள்ளையாக தான் இருக்கும், ஒன்றுக்கும் தமிழ் ஒழுங்காக வராது(ஒழுங்காக என்றால் சொல்ல வாறதை தெளிவாக சொல்லுவது ) ,மூத்தது 10 வயசு வரைக்கும் இலங்கையில் தான் இருந்தது, தமிழ் என்ற பெயரில் பாகுபலி கிலுக்கி மொழி பேசும், குஜராத்தி கல்யாணத்தில் மெஹந்தி வைத்து சங்கீத் நடத்தி பாங்க்ரா ஆடி ரசித்துவிட்டு வந்திச்சினம் நம் தமிழ் மஹாஜனங்கள், அவர்களுடைய கலாச்சாரத்தில் இருக்கும் பற்றை பற்றி உச்சுக்கொட்டி சிலாகிச்சு கூறிச்சினம் தங்களுடைய அடையாளத்தையே துலைத்துவிட்ட நம்மடை சனங்கள்.
புலத்தையும் புறத்தையும் பிடித்துவைத்திருக்கும் கடைசி தலைமுறை விழுந்ததும், இலங்கை அவர்களுக்கு  சுற்றுலா போகும் இடமாக மாறி (இப்பவே பாதி அப்படித்தான்) அவர்களுடைய வேர் என்பதையே இழந்துவிட்டிருப்பர், அவர்களது பேரப்பிள்ளைகளில்,பூட்டப்பிள்ளைகளில் எதாவது ஒன்று நம்மடை ஆக்கள் எல்லாம் செம்பட்டை முடியுடன் இருக்க எனக்கு மட்டும் இந்த கறுத்த முடி எங்கயிருந்து வந்தது என்று முழுசிக்கொண்டு இருக்கும் 

தவிர்க்கவோ தலையிடவே முடியாத ஒரு பிரச்சனையாக இந்தக் கலப்புத் திருமணங்கள் தற்போது மாறிவருகின்றன என்பதும் வேர்களை இழந்துவிடுவோம் என்பதும் யதார்த்தம். 

7 hours ago, நிலாமதி said:

தமிழ் இங்கு வளர வில்லை என்று சொல்ல முடியாது பரதநாட்டியம் வாய்ப்பாடு பாட்டுப் போட்டி என கலைகள் வளர்கின்றன. தமிழ் கடைகளும் தமிழ் சாப்பாடும் வளருகின்றது . கோடையில் கொண்டாடட    காலங்களில் தமிழ் புடவைக்கடைகளும்  பல முளைத்து இருக்கின்றன. ஆனால் நல்ல தமிழ் பேச தான் முடிவதில்லை   நம் சிறார்களுக்கு. அப்பா இரண்டு வேலை என ஒடடம். அம்மா ஆபீஸ் என ஒடடம். பையன் பள்ளி என ஒடடம்.  சிறுமி டே கேர் என ஒடடம்.  எங்கு உடகார்ந்து தமிழ் படிப்பது ? . தமிழ் பள்ளிக்கூட வகுப்பிலும் வாரம் இரு மணித்தியாலம் கற்றால் எப்படி ?  பாடடன் பாட்டிகளுடன் நேரம் செலவிடும்போது  ஆங்கிலம் தெரிந்த வரிடம்  ரைஸ் (rice  )அண்ட் சிக்கின் என்றும்  ஆங்கிலத்திலும்  தெரியாத பாட்டியிடம்  சோச்சி (சோறு ) சிக்கின் என   தமிழிலும் கேட்க தெரிகிறது .தான் படித்ததை  தெரியாத பாட்டிக்கு   சொல்லிக் கொடுத்து பாடம் எடுக்கிறது குழந்தை  .தமிழ்  கடையில்  டோசா (தோசை ) மோதரம் (மோதகம்)   என்று கேட்கவும் தெரிகிறது. மாற்று மொழி மணப் பெண், மணமகனுக்கு  சாரியில் உம்  வேஷ்ட்டி சால்வையிலும்  திருமணத்தின் போது வேடிக்கை காடட தெரிகிறது  ஆனால்  ஒரு சாப்பாட்டு  மேசையில் ஒன்றாக இருந்து உண்ண முடிவதில்லை. ஒரே ஒடடம் ..எங்கு போய் நிற்குமோ ?  .தமிழ்  எவ்வாறு வாழும் .

கலைகள் வளர்ந்தால் தமிழும் வளரும் என்பது இல்லை அக்கா. எம்மவர்கள் இனிமேல் ஓடுவதை நிறுத்தப்போவதில்லை.

7 hours ago, goshan_che said:

 கட்டுநாயக்கவில் விமானம் ஏறும் போதே இதற்கு தயார் என்றால்தான் விமானம் ஏறி இருக்க வேண்டும்.

ஆனால் யூத இனத்தவர்களும் இன்னும் சில இனங்களும் எத்தனை நூற்றாண்டு தாண்டியும் தமது என்று பழத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளார்கள். தமிழர்களால் மட்டும் ஏன் அது முடியாமற் போனது?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

தமிழில் வாசிக்க, எழுத தாயகத்தில் பல ஆண்டுகள் பிறந்து வளர்ந்தவர்களாலேயே முடியாது. இன்னும் இரண்டு தலைமுறையின் பின்னர் AI மூலம் தமிழ் படிப்பிக்கலாம், ஆனால் ஆர்வம் இருந்தால்தான் எதையும் பிள்ளைகள் கற்கும். அந்த ஆர்வத்தைக் கொண்டு வருவதுதான் பெற்றோர், ஆசிரியர் முன்னுள்ள சவால்.

ஒரு கட்டுரை இணைத்திருந்தேன்.

நானும் இதை வாசித்தேன். இந்தக் கட்டுரைக்கு நான் பதில் எழுதுவது என்றால் பத்துப் பக்கம் வேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆனால் யூத இனத்தவர்களும் இன்னும் சில இனங்களும் எத்தனை நூற்றாண்டு தாண்டியும் தமது என்று பழத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளார்கள். தமிழர்களால் மட்டும் ஏன் அது முடியாமற் போனது?

உலகத்திலையே தமிழினம் மட்டும்  தான் தன்ரை அடையாளங்களை துலைச்சுப்போட்டு நிக்கிது.

மூட நம்பிக்கை எண்டு சொல்லியே அரைவாசி கலாச்சாரம்,நடைமுறைகளை தூக்கி எறிஞ்சாச்சு...

ஆங்கில வருசத்துக்கு ரெலிபோன் அடிச்சு வாழ்த்து சொல்லுறவன் தமிழ் வருசத்துக்கு மறந்தும் ரெலிபோன் எடுக்க மாட்டான்...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆனால் யூத இனத்தவர்களும் இன்னும் சில இனங்களும் எத்தனை நூற்றாண்டு தாண்டியும் தமது என்று பழத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளார்கள். தமிழர்களால் மட்டும் ஏன் அது முடியாமற் போனது?

யூதரை பற்றிய பூரண விளக்கம் இன்றி, யூதரை பாருங்கள் என சொல்லுவது எமது மக்கள் மத்தியில் ஒரு பேஷனாக போய்விட்டது.

யூத அடையாளம் இரு பரிமாணம் கொண்டது, யூத இன அடையாளம், யூத மத அடையாளம்.

எங்களை போலவே கலாசார மத பரிமாணங்களை அவர்களும் பின் பற்றுகிறார்கள்.

புலம்பெயர் வாழிடங்களில் எங்களை விட மோசமாக அவரகளுக்கும் மொழி அடையாளத்தை தக்க வைக்க பிரயத்தன பட வேண்டியே உள்ளது.

யிட்டிஷ் என்ற ஒரு வகை ஜேர்மானிய-சீமட்டிக் மொழியே பெரும்பாலன யூதர்கள் பேசுவது, இன்னும் பலர் ஆங்கிலம், ஜேர்மன், ரஸ்யன் போன்றவறை மட்டுமே பேசுபவர்கள்.

இதை தவிர பிரான்சின் ரொமான்ஸ் மொழிகளை இணைத்து பேசப்படும் மொழிகளும் உள்ளன.

யூதரகள் புலம்பெயர்வினால், புலம் பெயர்ந்த நாடுகளில் சில குறை-மொழிகளை உருவாக்கி கொண்டார்கள். இங்கே சில பிள்ளைகள் கதைக்கும் தங்கிலீஸ் போல.

ஹீபிரு என்று பார்த்தால் இஸ்ரேலுக்கு வெளியே வெறும் 1 மில்லியன் மட்டுமே ஹிபிரு பேசுகிறது (இஸ்ரேலுக்கு வெளியான யூதர்களின் அளவு 9 மில்லியன்). 

தனியே தொப்பி போட்ட orthodox யூதர்களை மட்டும் பார்த்து புலத்தில் அவர்கள் அடையாளம் அப்படியே இருப்பதாக நினைப்பது மிகத்தவறு.

இவர்களை விட பல மடங்கு யூதரகள் பெயர்களை கூட மாற்றி வெளிப்பார்வைக்கு முழுக்க முழுக்க ஆங்கிலேயராக மாறி விட்டார்கள். பெயர்களை கூட ஆங்கிலமயப்படுத்தி விட்டார்கள்.

இங்கிலாந்தின் பிரதமராக இருந்த பென்சமீன் டிஸ்ரேலி, கோல்ட் ஸ்மித் (ச்ஷிமிட்) இப்படி பலர். அவர்களாக சொன்னாலே அன்றி நீங்கள் அவர்களை ஆங்கிலேயர் என்றே காண்பீர்கள்.

ஆகவே உண்மையில் ஒப்பீட்டளவில் கலாசார, மத அடையாளத்தை தக்க வைப்பது இலகு, மொழி அடையாளத்தை தக்க வைப்பது கடினம் என்பதற்கே யூதர்கள் ஒரு நல்ல உதரணம்.

என்னை கேட்டால் புலம்பெயர் தேசத்தில் மொழியை தக்க வைப்பதில் யூதரை காட்டிலும் நாம் பரவாயில்லை.

இஸ்ரேலில் கூட 49% மட்டுமே ஹீபிரு பேசுகிறதாம். 18% அரபிக், 13% ரஷ்யன், 2% யிட்டிஷ், ஏனையவை மிகுதி.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

இதில் ஆக கூடிய பகிடி என்னவென்றால், புலம்பெயர்ந்த பிள்ளைகள் பெரும்பாலும் அம்மா, அப்பா என்றே அழைக்கின்றனர்.

ஆனால் ஊரில் இவர்களை பல வீடுகளிற்கு (வட கிழக்கிலும்) கூட்டி போகும் போது அங்கே பிள்ளைகள் டாடி மம்மி என்கிறன.

அதே போல் இங்கிலீஸ் மீடியம், இண்டர் நேசனல் ஸ்கூல் என்று தமிழ் வாசிக்க தெரியாத ஒரு சமூகம் ஊரிலேயேயும் உருவாகிறது. இங்கேயாவது நாம் வார இறுதியில் தமிழை படிபிக்கின்றோம்.

வாழ்துக்கள் உடையார்.

எங்கடாயாளும் வாய்ப்பாட்டும், தமிழும் கற்று வருகிறார். கொவிட் காலத்திலும் சூம் மூலம் தொடர்கிறது.

உங்கள் நகரத்தில் இயங்கும் இரு தமிழ் பள்ளிகளும் மிக வினைத்திறனுடன் இயங்குவதாய் அறிந்தேன். நகர விழாவில் பறை அடித்து போன வீடியோவையும் பார்த்தேன்.

அது என்னவோ உண்மைதான் கோசன்... எங்கள் வீட்டிலும் அம்மா , அப்பா தான் . எனக்கு மம்மி, டாடி இந்த இரண்டு சொல்லையும் தமிழ் குழந்தைகள் சொல்லும்போது கோவம்தான் வரும். இதுதான் காலம் என்று நகரவேண்டியதுதான். யார் குழந்தைகளிற்காவது தமிழ் கற்பிக்க ஆசை இருந்தும் அதற்கான இடம் இல்லை என்றால் சொல்லுங்கள். நான் free ஆகசொல்லிக் கொடுக்க தயாராய் இருக்கிறேன். நான் ஒரு தமிழ் பட்டதாரிதான். யாருடைய குழந்தைகளிற்காவது தேவைப்பட்டால் கேட்கலாம்...

Edited by nige
 • Like 3
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எதில் தொடங்கி எதில் முடிந்தால் என்ன. ஒரு தாய்மொழியை தக்கித்  தயங்கியாவது அரைகுறையாக உரையாடினால் போதும் என்கிறீர்களா??? அடுத்து புலம்பெயர் நாடுகளில் தமிழை அதிகமாகக் கற்கும் பிள்ளைகள் உள்ளது பிரான்சில். இரண்டாவது இடத்தில்தான் பிரித்தானியா. நாம் புலம்பெயர்ந்து வந்ததனால் மற்றவை பற்றிக் கவலை கொள்ளவே கூடாது போலல்லா உங்கள் கருத்து இருக்கு கோசான்.
எமது அடுத்த தலைமுறை தமிழில் இலக்கியம் படைக்காவிட்டாலும் அந்தந்த மொழியில் படைப்பார்கள். அது பின்னர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படும்.

சரி பிரான்சில் இருந்துவிட்டு போகட்டும் சந்தோசம்தான் ஆனால் இங்கேயும் தமிழ் பள்ளிகள், இணைந்த பரீட்சைகள், புலம் பெயர் பாடசாலைகள் இணந்த அமைபுகள் எல்லாம் உள்ளனவே? என்னை விட உங்களுக்கு இது தெரியும்.

எதோ எமக்கு மட்டும்தான் மொழி பற்று இருப்பதாக நாம் கற்பனை செய்துகொள்ள முடியாது. 

சொந்த வாழிடத்தை விட்டு நகரும் போதே சிலதை அங்கே செய்ததை போல் 100% மடங்கு செய்ய முடியாது என்ற உண்மையையையும் ஏற்று கொண்டா ஆக வேண்டும்.

நாங்கள் என்னதான் குத்தி முறிந்தாலும் இங்கே வாழும் பிள்ளைகளுக்கு 1st language ஆங்கிலம்தான். 

நீங்கள் சொன்னது மொழிமாற்று இலக்கியம். நான் சொன்னது போல் அடுத்த தலைமுறைகளில் புலம் பெயர் இலக்கியம் வர வாய்ப்பு மிக குறைவு.

எல்லாரது குடும்ப சூழலும் ஒரு மாதிரி இல்லை. சிலர் ஒரு 3 பெட் ரூம் வீட்டில் 3 குடும்பமாக வாழ்கிறனர். பெற்றாருக்கு ஆங்கிலம் தெரியாது. பிள்ளைகள் வீட்டில் தமிழும் பள்ளியில் ஆங்கிலமும் கதைத்து, 9 வயது பிள்ளை தாய் தந்தைக்கு form நிரப்பி கொடுக்கும் நிலை. ஆகவே எம்மை போல எல்லாருக்கும் ஞாயிற்று கிழமைகள் மொழி வளர்சிக்கு என ஒதுக்கபட்ட நாளாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.

You gain some, you lose some. இதுதான் யதார்தம். இல்லை என்றால் ஊருக்கு ரிட்டர்ன் ஆவதை தவிர வேறு வழியில்லை.

பொது இடங்களில் பேசும் போது பிள்ளைக்கு தமிழ் தெரியாது, நாம் படிபிக்கவில்லை என வெட்கி தலைகுனிந்த பலரை நான் சந்திதுள்ளேன்.

தமிழை அவமதித்து தமிழ் எல்லாம் நாங்கள் படிபிக்கமாட்டோம் என்று சொன்ன தமிழர்களை நான் இன்னும் சந்திக்கவில்லை. இப்படியான அற்பர்கள் எனது வட்டதில் வருவதில்லையோ தெரியாது.

ஆனால் இதை பற்றி அலட்டி கொள்ளாமல் அல்லது படிபித்திருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை என regret பண்ணுபவர்களை கண்டுளேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

நான் நிறைய பேரை சந்தித்திருக்கிறேன் என்பதை  விட நான் சந்தித்த எல்லோரும் அப்படித்தான் இருந்தார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. என் மகள் எங்கு சென்றாலும் தமிழில் மட்டுமே கதைப்பாள். அது எம் ஆசையும் கூட. ஆனால் இங்குள்ளவரகள் அவளை ஏதோ ஆங்கிலமே தெரியாதுபோல என்பதுபோல் பார்ப்பார்கள். அந்த பார்வையில் அவ்வளவு ஏளனம் இருக்கும். தங்கள் குழந்தைகளிற்கு தமிழ் தெரியாது என்பதை மிக பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். இப்போது நிலமை கொஞ்சம் மாறத் தொடங்கி இருக்கிறது. பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். ஆங்கிலம் பேசுவது பெருமை என எண்ணும் பெற்றோர் இருக்கும் வரை இந்த நிலை தொடரும்..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nige said:

கொடுமையான அனுபவம்தான்.

நான் முன்பே கூறியது போல இங்கேயும் 83 க்கு பின் வந்தவர்களிடம் மொழி பற்று அதிகமாக இருக்கும் (ஆனா அதன் முன்பே பள்ளிகளும் தொடங்க பட்டு, கோவில்களும் கட்டி உள்ளார்கள்).

அமெரிக்காவில் “அடைக்கலம்” தேடி வந்த மக்கள் குறைவு என்பதால் இந்த நிலையோ?

பொதுவாக இந்திய தமிழர் இப்படி இருக்க மாட்டார்கள். அவர்களுமா? அல்லது இலங்கையர்கள் மட்டுமா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நிட்சயமாய் இந்தியத் தமிழர்கள் இல்லை. நம்மவர்கள்தான். நான் ஒரு தமிழ் ஆசிரியர் என்பதை வைத்தே என்னை ஏளனமாய் பார்த்தவர்கள் பலர். தமிழை படித்திட்டு அமெரிக்காவில் என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்டவர்கள் சிலர். தமிழ் படித்தால் ஆங்கிலம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது இவர்கள் எண்ணம். நாம் ஆங்கிலத்தை எப்படி பிழையாய் கதைத்தாலும் அமெரிக்கர்கள் அதை கேலி செய்ய மாட்டார்கள். இன்னொரு நாட்டில் இருந்து வந்து தம் மொழியை பேசுவதை பெருமையாய் பார்ப்பார்கள். ஆனால் நம்மவர்கள் குற்றம் கண்டுபிடித்து ஏளனம் செய்வதில் மிக கெட்டிக்காரர்கள்...

Edited by nige
 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, nige said:

அது என்னவோ உண்மைதான் கோசன்... எங்கள் வீட்டிலும் அம்மா , அப்பா தான் . எனக்கு மம்மி, டாடி இந்த இரண்டு சொல்லையும் தமிழ் குழந்தைகள் சொல்லும்போது கோவம்தான் வரும். இதுதான் காலம் என்று நகரவேண்டியதுதான். யார் குழந்தைகளிற்காவது தமிழ் கற்பிக்க ஆசை இருந்தும் அதற்கான இடம் இல்லை என்றால் சொல்லுங்கள். நான் free ஆகசொல்லிக் கொடுக்க தயாராய் இருக்கிறேன். நான் ஒரு தமிழ் பட்டதாரிதான். யாருடைய குழந்தைகளிற்காவது தேவைப்பட்டால் கேட்கலாம்...

மம்மி, டாடி என்று சொல்லுவதில் தவறில்லை என்று நினைக்கின்றேன். அதற்காக எனது பிள்ளைகள் அப்படித்தான் சொல்கிறார்கள் என்று நினைக்கவேண்டாம். அம்மா அப்பா என்பது தமிழ்ச் சொற்களே இல்லை. திருக்குறளில் கூட இல்லை. (திருக்குறளில் அம்மா என்ற சொல் வேறு பொருளில் உண்டு). அம்மா அப்பா என்ற பதங்கள் செமிட்டிக் மொழியின் திரிபடைந்த பதங்கள். அரமேயம், எபிரேயம், அரபு போன்றன செமிட்டிக் மொழிகளில் சில. 

அன்னை தந்தை என்று விளிப்பதே சாலப் பொருத்தமானது

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.