Jump to content

ஆங்கிலமும் தமிழரும்

Recommended Posts

பெரு நில ஐரோப்பாவில் மட்டுமல்ல, ஆங்கிலம் பேசும் நாடுகளிலும் பெற்றோருக்கு உள்ளூர் மொழியில் பரிச்சயம் அதிகம் இல்லாத போது அவர்களின் பிள்ளைகள் தமிழை இலகுவாகக் கற்றுக் கொள்கின்றனர் என்பது என் அவதானம்.  நானும் என் மாநிலத்தின் தமிழ் பாடசாலையில் தமிழ் கற்பிக்கிறேன், இந்த வித்தியாசத்தைக் காண்கிறேன். 

இப்படி உள்ளூர் மொழி தெரியாமை அவமானம், தரந்தாழ்தல் என்று நினைப்போருக்கு இந்த எளிமையான விளக்கம் கோபத்தை ஏற்படுத்தும்.  

Link to comment
Share on other sites

 • Replies 66
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

மெசொபொத்தேமியா சுமேரியர்

இன்று zoom இல் ஒரு நூல் விமர்சனம் நடைபெற்றபோது எமது அடுத்த தலைமுறையினர் பற்றிய பேச்சு எழுந்தது. பலர் இன்னமும் தமிழ் கதைத்தாலும் எழுதவோ வாசிக்கவோ தெரியாத நிலையிலேயே இருக்கின்றனர். இலக்கியம் புலம்பெயர்

goshan_che

அன்ரி, யூகே, அமெரிக்கா, கனடாவில் பிள்ளைகள் தமிழில் உரையாடுகிறார்கள் ஆனால் எழுத வாசிக்க முடிவதில்லை என்று ஆரம்பிக்கும் கட்டுரை(?), பெற்றார் பிள்ளைகளுடன் தமிழில் உரையாடுவதில்லை என முடிகிறது! ம

nige

அது என்னவோ உண்மைதான் கோசன்... எங்கள் வீட்டிலும் அம்மா , அப்பா தான் . எனக்கு மம்மி, டாடி இந்த இரண்டு சொல்லையும் தமிழ் குழந்தைகள் சொல்லும்போது கோவம்தான் வரும். இதுதான் காலம் என்று நகரவேண்டியதுதான். யார்

 • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, வாலி said:

மம்மி, டாடி என்று சொல்லுவதில் தவறில்லை என்று நினைக்கின்றேன். அதற்காக எனது பிள்ளைகள் அப்படித்தான் சொல்கிறார்கள் என்று நினைக்கவேண்டாம். அம்மா அப்பா என்பது தமிழ்ச் சொற்களே இல்லை. திருக்குறளில் கூட இல்லை. (திருக்குறளில் அம்மா என்ற சொல் வேறு பொருளில் உண்டு). அம்மா அப்பா என்ற பதங்கள் செமிட்டிக் மொழியின் திரிபடைந்த பதங்கள். அரமேயம், எபிரேயம், அரபு போன்றன செமிட்டிக் மொழிகளில் சில. 

அன்னை தந்தை என்று விளிப்பதே சாலப் பொருத்தமானது

அம்மை, அப்பன் அன்னை, பிதா என்பவை காலப்போக்கில் அம்மா அப்பா என்று ஆகியிருக்கலாம். 

Link to comment
Share on other sites

14 hours ago, goshan_che said:

இதில் ஆக கூடிய பகிடி என்னவென்றால், புலம்பெயர்ந்த பிள்ளைகள் பெரும்பாலும் அம்மா, அப்பா என்றே அழைக்கின்றனர்.

ஆனால் ஊரில் இவர்களை பல வீடுகளிற்கு (வட கிழக்கிலும்) கூட்டி போகும் போது அங்கே பிள்ளைகள் டாடி மம்மி என்கிறன.

அதே போல் இங்கிலீஸ் மீடியம், இண்டர் நேசனல் ஸ்கூல் என்று தமிழ் வாசிக்க தெரியாத ஒரு சமூகம் ஊரிலேயேயும் உருவாகிறது. இங்கேயாவது நாம் வார இறுதியில் தமிழை படிபிக்கின்றோம்.

நீங்கள் சொல்வது உன்மைதான் அது நகர்புறங்களில் மட்டும் ஆனால் கிராமங்களில் தமிழே தவழ்கிறது  மம்பி , டாடி என்ற சொல்லுக்கு உயிர்ப்பு வெள்ளைக்காரனுக்கு இருக்கலாம் ஆனால் அம்மா ,அப்பா என்ற சொல்லுக்கு  தமிழில் உயிர்ப்பு இருக்கிறது என நான் உணர்கிறேன் என்னை என் மகள் அப்பா என அழைக்கும் போது .

இங்கே ஆங்கிலம் பிள்ளைகள் பேசும் போது பெற்றோர்கள் சந்தோசமடைகின்றனர் நம் மொழி மெதுவாக அழிவது தெரியாமல் இருந்தாலும் தமிழர்களுக்கென நாடு இல்லாத போது , கலை கலாச்சாரமெல்லாம் சொல்லும் அளவுக்கு நின்று கொண்டிருக்கும் அறுக்கப்பட்டமரம் தள்ளாடுவது போன்று .

இந்த புலம் பெயர்ந்தவர்கள் இணையத்தில் அதிகம் மெனக்கெடுகிறார்கள் பிள்ளைகளை ஊருக்கு அழைப்பை ஏற்படுத்தி ஆச்சி , அப்பச்சி , அம்மம்மா, அப்பம்மா, அம்மப்பா, அப்பப்பா ஆகீயோரிடம் பேச வைத்தாலே தமிழ் அவர்கள் வாயில் நுழைந்துவிடும் .

 • Like 4
Link to comment
Share on other sites

1 hour ago, nige said:

நான் நிறைய பேரை சந்தித்திருக்கிறேன் என்பதை  விட நான் சந்தித்த எல்லோரும் அப்படித்தான் இருந்தார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. என் மகள் எங்கு சென்றாலும் தமிழில் மட்டுமே கதைப்பாள். அது எம் ஆசையும் கூட. ஆனால் இங்குள்ளவரகள் அவளை ஏதோ ஆங்கிலமே தெரியாதுபோல என்பதுபோல் பார்ப்பார்கள். அந்த பார்வையில் அவ்வளவு ஏளனம் இருக்கும். தங்கள் குழந்தைகளிற்கு தமிழ் தெரியாது என்பதை மிக பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். இப்போது நிலமை கொஞ்சம் மாறத் தொடங்கி இருக்கிறது. பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். ஆங்கிலம் பேசுவது பெருமை என எண்ணும் பெற்றோர் இருக்கும் வரை இந்த நிலை தொடரும்..

ம்..மிகுந்த அதிசயமாக இருக்கிறது! நீங்கள் வாழும் மாநிலத்தில் பல வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். அனேகமான தமிழர்களை நிகழ்வுகளில் சந்தித்திருக்கிறேன். தமிழை இளக்காரமாக நோக்கும் தமிழர்களைச் சந்திக்கவில்லை!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, வாலி said:

மம்மி, டாடி என்று சொல்லுவதில் தவறில்லை என்று நினைக்கின்றேன். அதற்காக எனது பிள்ளைகள் அப்படித்தான் சொல்கிறார்கள் என்று நினைக்கவேண்டாம். அம்மா அப்பா என்பது தமிழ்ச் சொற்களே இல்லை. திருக்குறளில் கூட இல்லை. (திருக்குறளில் அம்மா என்ற சொல் வேறு பொருளில் உண்டு). அம்மா அப்பா என்ற பதங்கள் செமிட்டிக் மொழியின் திரிபடைந்த பதங்கள். அரமேயம், எபிரேயம், அரபு போன்றன செமிட்டிக் மொழிகளில் சில. 

அன்னை தந்தை என்று விளிப்பதே சாலப் பொருத்தமானது

நன்றி வாலி,

வங்காளிகள், உருது பேசும் முஸ்லிம்கள் அப்பா (Abba) என்பதை கேட்டுள்ளேன். மா - இந்திய மொழிகள் எங்கும் உண்டுதானே.

மாமாவும் இப்படித்தான். ஆப்கானி பஹ்தோவிலும், பஞ்சாபியிலும் மாமாதான் ஆனா தாய் மாமன் மட்டுமே மாமா.

இவை தமிழ் சொற்கள் இல்லை என்பது தெரியாது.

அன்னை தந்தை என்பது சரிவருமா?

Link to comment
Share on other sites

57 minutes ago, வாலி said:

மம்மி, டாடி என்று சொல்லுவதில் தவறில்லை என்று நினைக்கின்றேன். அதற்காக எனது பிள்ளைகள் அப்படித்தான் சொல்கிறார்கள் என்று நினைக்கவேண்டாம். அம்மா அப்பா என்பது தமிழ்ச் சொற்களே இல்லை. திருக்குறளில் கூட இல்லை. (திருக்குறளில் அம்மா என்ற சொல் வேறு பொருளில் உண்டு). அம்மா அப்பா என்ற பதங்கள் செமிட்டிக் மொழியின் திரிபடைந்த பதங்கள். அரமேயம், எபிரேயம், அரபு போன்றன செமிட்டிக் மொழிகளில் சில. 

அன்னை தந்தை என்று விளிப்பதே சாலப் பொருத்தமானது

சுமே எழுதிய "வரலாற்றை மறந்த தமிழர்" வாசிக்கவில்லைப் போல!😊

தமிழில் இருந்து தான் எபிரேயத்திற்கு அப்பா, அம்மா எல்லாம் போனது என்று தமிழ் ஆர்வலர்கள் வாதிடுகின்றனர். இவர்கள் அனேகமாக ஆர்வலர்கள் மட்டுமே!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

ம்..மிகுந்த அதிசயமாக இருக்கிறது! நீங்கள் வாழும் மாநிலத்தில் பல வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். அனேகமான தமிழர்களை நிகழ்வுகளில் சந்தித்திருக்கிறேன். தமிழை இளக்காரமாக நோக்கும் தமிழர்களைச் சந்திக்கவில்லை!

இப்போது அது குறையத் தொடங்கி இருக்கிறது.ஆனால் சில வருடங்களிற்கு முன் இதுதான் நிலமை. தமிழர் நிகழச்சிகள் கூட ஆங்கிலத்தில்தான் தொகுத்து வழங்கப்படுவதுண்டு. ஒரு சில வருடங்களாகத்தான் தமிழில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்படுகிறது.பல தமிழ் குழந்தைகளிற்கு இங்கு தமிழ் தெரியாது என்பது உண்மையில் வேதனை. தமிழை நேசிக்கும் மனிதர்களை நீங்கள் இங்கு சந்தித்திருக்கிறீரகள் என்பது உண்மையில் சந்தோசமே...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nige said:

அம்மை, அப்பன் அன்னை, பிதா என்பவை காலப்போக்கில் அம்மா அப்பா என்று ஆகியிருக்கலாம். 

இருக்கலாம்.

ஆனால் ப்திர் (முன்னோர்) என்ற சமஸ்கிரத சொல்லில் இருந்தே பிதா வந்ததாக நான் எங்கோ வாசித்தேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

இருக்கலாம்.

ஆனால் ப்திர் (முன்னோர்) என்ற சமஸ்கிரத சொல்லில் இருந்தே பிதா வந்ததாக நான் எங்கோ வாசித்தேன்.

இருக்கலாம். 😳😇

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் சொல்வது உன்மைதான் அது நகர்புறங்களில் மட்டும் ஆனால் கிராமங்களில் தமிழே தவழ்கிறது  மம்பி , டாடி என்ற சொல்லுக்கு உயிர்ப்பு வெள்ளைக்காரனுக்கு இருக்கலாம் ஆனால் அம்மா ,அப்பா என்ற சொல்லுக்கு  தமிழில் உயிர்ப்பு இருக்கிறது என நான் உணர்கிறேன் என்னை என் மகள் அப்பா என அழைக்கும் போது .

இங்கே ஆங்கிலம் பிள்ளைகள் பேசும் போது பெற்றோர்கள் சந்தோசமடைகின்றனர் நம் மொழி மெதுவாக அழிவது தெரியாமல் இருந்தாலும் தமிழர்களுக்கென நாடு இல்லாத போது , கலை கலாச்சாரமெல்லாம் சொல்லும் அளவுக்கு நின்று கொண்டிருக்கும் அறுக்கப்பட்டமரம் தள்ளாடுவது போன்று .

இந்த புலம் பெயர்ந்தவர்கள் இணையத்தில் அதிகம் மெனக்கெடுகிறார்கள் பிள்ளைகளை ஊருக்கு அழைப்பை ஏற்படுத்தி ஆச்சி , அப்பச்சி , அம்மம்மா, அப்பம்மா, அம்மப்பா, அப்பப்பா ஆகீயோரிடம் பேச வைத்தாலே தமிழ் அவர்கள் வாயில் நுழைந்துவிடும் .

நாடில்லாத போது மொழியும், கலையும், பண்பாடும் அறுக்கப்பட்டமரம் தள்ளாடுவது போன்று நிற்கும் என்பது மிக சரியான பார்வை. நாடு கூட தேவையில்லை ஒரு அங்கீகரிக்க பட்ட பாரம்பரிய வாழிடமே போதுமாயிருக்கும். Welsh, Scottish Gaelic ஐ அந்த அந்த நாட்டு அரசுகள் செய்வதை போல நிலை நிறுத்த முடியும்.

எனக்கு மட்டில் நகரமும் இல்லை, கிராமமும் இல்லை என்ற இடத்தில் ஏற்பட்ட அனுபவம் - மிக வாழ்வாதாரம் குறைந்த குடும்பத்தில் ஒரு பிள்ளையை மிகவும் கஸ்டபட்டு ஆங்கில மூலம் படிபிக்கிறார்கள். ஆங்கிலத்தில் “கதைத்து பழக” என நாம் போய் நின்ற சமயம் அந்த பிள்ளையும் வந்து போகும்.

அந்த பிள்ளை ஆங்கிலத்தில் கதைக்கும் போது அந்த பெற்றாரின் முகத்தில் எழுந்த பெருமிதத்தை பார்த்த பின், எனது எதிர் மறையான கருத்தை சொல்ல கூட திராணியற்று அப்படியே விட்டு விட்டேன்.

இப்பொதும் பெரும்பாலானோர் தமிழ் மீடியத்தில்தான் படிக்கிறார்கள்.

ஆனால் எமது காலம் போலல்லாது இப்போ ஆங்கிலத்திலும், இண்டர் நேசனல் ஸ்கூலிலும் கூட படிக்கலாம்.  இந்த பள்ளிகளின் பெருக்கம் மிக விரைவாக பட்டினசபை உள்ள ஊர்களுக்கும் பரவுகிறது. யாழ் நகரத்தில் இருந்து 10 கிமிகுள் உள்ள ஒரு பட்டினசபை உள்ள ஊரில் 2 சர்வதேச பள்ளிகளை கண்டேன்.

நாம் படிக்கும் போது ஷேக்ஸ்பியரின் மகன் என்றாலும் தமிழ் அல்லது சிங்களத்தில்தான் படிக்க முடியும். கொழும்பில் மட்டும் விச்செளி, ரோயல் இன்ஸ்டிடுயூட், இப்படி சில இருந்தன.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

எல்லாரது குடும்ப சூழலும் ஒரு மாதிரி இல்லை. சிலர் ஒரு 3 பெட் ரூம் வீட்டில் 3 குடும்பமாக வாழ்கிறனர். பெற்றாருக்கு ஆங்கிலம் தெரியாது. பிள்ளைகள் வீட்டில் தமிழும் பள்ளியில் ஆங்கிலமும் கதைத்து, 9 வயது பிள்ளை தாய் தந்தைக்கு form நிரப்பி கொடுக்கும் நிலை. ஆகவே எம்மை போல எல்லாருக்கும் ஞாயிற்று கிழமைகள் மொழி வளர்சிக்கு என ஒதுக்கபட்ட நாளாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.

You gain some, you lose some. இதுதான் யதார்தம். இல்லை என்றால் ஊருக்கு ரிட்டர்ன் ஆவதை தவிர வேறு வழியில்லை.

பொது இடங்களில் பேசும் போது பிள்ளைக்கு தமிழ் தெரியாது, நாம் படிபிக்கவில்லை என வெட்கி தலைகுனிந்த பலரை நான் சந்திதுள்ளேன்.

தமிழை அவமதித்து தமிழ் எல்லாம் நாங்கள் படிபிக்கமாட்டோம் என்று சொன்ன தமிழர்களை நான் இன்னும் சந்திக்கவில்லை. இப்படியான அற்பர்கள் எனது வட்டதில் வருவதில்லையோ தெரியாது.

ஆனால் இதை பற்றி அலட்டி கொள்ளாமல் அல்லது படிபித்திருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை என regret பண்ணுபவர்களை கண்டுளேன்.

பேராசையில் கவுன்சில் கொடுக்கும் வீடுகளிலேயே அறைகளை வாடகைக்கு விட்டு நிரப்பி பணம் ஈட்டுபவர்கள் பற்றிக் கதைத்தும் பயனில்லைத்தான்.

ஆனாலும் நீங்கள் பார்க்கும் வட்டத்தில் நல்லவர்களே இருக்கிறார்கள் என்பது உங்கள் அதிட்டம்தான்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, வாலி said:

மம்மி, டாடி என்று சொல்லுவதில் தவறில்லை என்று நினைக்கின்றேன். அதற்காக எனது பிள்ளைகள் அப்படித்தான் சொல்கிறார்கள் என்று நினைக்கவேண்டாம். அம்மா அப்பா என்பது தமிழ்ச் சொற்களே இல்லை. திருக்குறளில் கூட இல்லை. (திருக்குறளில் அம்மா என்ற சொல் வேறு பொருளில் உண்டு). அம்மா அப்பா என்ற பதங்கள் செமிட்டிக் மொழியின் திரிபடைந்த பதங்கள். அரமேயம், எபிரேயம், அரபு போன்றன செமிட்டிக் மொழிகளில் சில. 

அன்னை தந்தை என்று விளிப்பதே சாலப் பொருத்தமானது

சுமேரியர்கள் கெமிட்டிக் இனத்தவர் என்பதும் அவர்களே எழுத்து மொழியை முதலில் உருவாக்கியவர்கள் என்பதும் உலக அறிஞர்கள் ஒத்துக்கொண்ட உண்மை. அங்கிருந்து தான் கீப்ரூ மொழியும் உருவானதாக Samual Noah Kremer என்ற ஆய்வாளர் கூறுகிறார். அயலில் வாழ்ந்தவர்கள் உட்பட மொழி வளர்ச்சி அங்கிருந்துதான் பரவியது. சுமேரிய மொழியில் அம்மா அப்பா என்ற சொற்கள் மட்டுமல்ல இன்னும் பல நாம் பயன்படுத்தும் தமிழ் சொற்கள் இருக்கின்றன. எமக்கும் சுமேரியருக்கும் உள்ள தொடர்பினால் எம்மிடமும் அவை உள்ளன. தமிழ் கெமிற்றிக் மொழியைச் சேர்ந்ததன்றி செமிற்றிக் அல்ல. அவர்கள் சிறிது மாற்றி உம்மா உப்பா வாப்பா என்றெல்லாம் அழைப்பது கண்கூடு. திருக்குறளில் பயன்படுத்தவில்லை என்பதனால் அவை தமிழ்ச் சொற்கள் இல்லையா ??? ஒரு பொருட்பலமொழி நிறையவே உண்டு. உங்கள் பிள்ளைகள் மம்மி டாடி சொல்வது உங்களுக்கு விருப்பமாக இருந்தால் அது உங்கள் புரிதல். தமிழ் அடிச் சொற்களிலிருந்தே மற்றைய மொழிகள் தோன்றின என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்து.

17 hours ago, Justin said:

பெரு நில ஐரோப்பாவில் மட்டுமல்ல, ஆங்கிலம் பேசும் நாடுகளிலும் பெற்றோருக்கு உள்ளூர் மொழியில் பரிச்சயம் அதிகம் இல்லாத போது அவர்களின் பிள்ளைகள் தமிழை இலகுவாகக் கற்றுக் கொள்கின்றனர் என்பது என் அவதானம்.  நானும் என் மாநிலத்தின் தமிழ் பாடசாலையில் தமிழ் கற்பிக்கிறேன், இந்த வித்தியாசத்தைக் காண்கிறேன். 

இப்படி உள்ளூர் மொழி தெரியாமை அவமானம், தரந்தாழ்தல் என்று நினைப்போருக்கு இந்த எளிமையான விளக்கம் கோபத்தை ஏற்படுத்தும்.  

நீங்கள் கூறுவது ஒருவிதத்தில் சரியானதாக இருந்தாலும் உண்மையாகப் பார்த்தால் தான் பிறந்த நாள்முதலாய் கதைத்து வளர்ந்த ஒருவர் தன் பிள்ளையுடன் ஆங்கிலத்தில் உரையாடுகிறார் என்றால் அவருக்கு எதோ உளவியல் சிக்கல் கூடக் காரணமாக இருக்கலாம். பிறந்த சிறிய பிள்ளையுடன் ஏன் அவர்கள் வேறு மொழியில் உரையாடவேண்டும் என்பதே எனக்குப் புரியாத புதிர். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nige said:

அம்மை, அப்பன் அன்னை, பிதா என்பவை காலப்போக்கில் அம்மா அப்பா என்று ஆகியிருக்கலாம். 

அம்மை அப்பன்  நாயன்மார் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்களாக இருக்கலாம். மாதா பிதா என்பன வடசொல். தமிழ் அல்ல.

17 hours ago, Justin said:

சுமே எழுதிய "வரலாற்றை மறந்த தமிழர்" வாசிக்கவில்லைப் போல!😊

தமிழில் இருந்து தான் எபிரேயத்திற்கு அப்பா, அம்மா எல்லாம் போனது என்று தமிழ் ஆர்வலர்கள் வாதிடுகின்றனர். இவர்கள் அனேகமாக ஆர்வலர்கள் மட்டுமே!

இத்தனை காலம் ஒத்துக்கொள்ளாதவர்கள் கூட சுமேரியர்களுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஐந்தாம் கட்ட கீழடி ஆய்வு முடிவடைந்தபின் கூறியிருக்கின்றனரே. சில விடயங்கள் நிரூபணமாக்க காலம் எடுக்கலாம். ஆனால்  ஒட்டுமொத்தமாக அதை மூடி மறைக்க முடியாது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

நாடில்லாத போது மொழியும், கலையும், பண்பாடும் அறுக்கப்பட்டமரம் தள்ளாடுவது போன்று நிற்கும் என்பது மிக சரியான பார்வை. நாடு கூட தேவையில்லை ஒரு அங்கீகரிக்க பட்ட பாரம்பரிய வாழிடமே போதுமாயிருக்கும். Welsh, Scottish Gaelic ஐ அந்த அந்த நாட்டு அரசுகள் செய்வதை போல நிலை நிறுத்த முடியும்.

எனக்கு மட்டில் நகரமும் இல்லை, கிராமமும் இல்லை என்ற இடத்தில் ஏற்பட்ட அனுபவம் - மிக வாழ்வாதாரம் குறைந்த குடும்பத்தில் ஒரு பிள்ளையை மிகவும் கஸ்டபட்டு ஆங்கில மூலம் படிபிக்கிறார்கள். ஆங்கிலத்தில் “கதைத்து பழக” என நாம் போய் நின்ற சமயம் அந்த பிள்ளையும் வந்து போகும்.

அந்த பிள்ளை ஆங்கிலத்தில் கதைக்கும் போது அந்த பெற்றாரின் முகத்தில் எழுந்த பெருமிதத்தை பார்த்த பின், எனது எதிர் மறையான கருத்தை சொல்ல கூட திராணியற்று அப்படியே விட்டு விட்டேன்.

இப்பொதும் பெரும்பாலானோர் தமிழ் மீடியத்தில்தான் படிக்கிறார்கள்.

ஆனால் எமது காலம் போலல்லாது இப்போ ஆங்கிலத்திலும், இண்டர் நேசனல் ஸ்கூலிலும் கூட படிக்கலாம்.  இந்த பள்ளிகளின் பெருக்கம் மிக விரைவாக பட்டினசபை உள்ள ஊர்களுக்கும் பரவுகிறது. யாழ் நகரத்தில் இருந்து 10 கிமிகுள் உள்ள ஒரு பட்டினசபை உள்ள ஊரில் 2 சர்வதேச பள்ளிகளை கண்டேன்.

நாம் படிக்கும் போது ஷேக்ஸ்பியரின் மகன் என்றாலும் தமிழ் அல்லது சிங்களத்தில்தான் படிக்க முடியும். கொழும்பில் மட்டும் விச்செளி, ரோயல் இன்ஸ்டிடுயூட், இப்படி சில இருந்தன.

யாழ்ப்பாணத்தில் கூட பலர் நான்கு வயதிலிருந்தே பிள்ளைகளை ஆங்கிலக் கல்விக்காக பணம்செலவளித்து அனுப்புகின்றனர்.அவர்கள் ஆங்கிலம் கற்பது தவறேயல்ல. ஆனால் தமிழைக் கற்காது ஆங்கிலத்தை மட்டும் கற்பது தவறானதே. வருங் காலங்களில் தமிழ்நாட்டுத்தமிழர் போல் எம்மினத்தவர் நிலையம் ஆகப்போகின்றது.
எனக்கு ஒன்று புரியவில்லை அந்தப் பிள்ளை ஆங்கிலம் கதைத்ததும் பெற்றோர் முகத்தில் பூரிப்பு ஏற்பட்டதும் தவறல்ல. ஆனால் அதன்பின் தமிழ் தெரிவது எத்தனை அவசியமானது என்று நீங்கள் ஏன் கூறவில்லை????? அல்லது கூறவிடாது தடுத்தது உங்களை அவர்கள் குறைவாக மதிப்பிட்டுவிடுவார்கள் என்பதா ???? 

17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் சொல்வது உன்மைதான் அது நகர்புறங்களில் மட்டும் ஆனால் கிராமங்களில் தமிழே தவழ்கிறது  மம்பி , டாடி என்ற சொல்லுக்கு உயிர்ப்பு வெள்ளைக்காரனுக்கு இருக்கலாம் ஆனால் அம்மா ,அப்பா என்ற சொல்லுக்கு  தமிழில் உயிர்ப்பு இருக்கிறது என நான் உணர்கிறேன் என்னை என் மகள் அப்பா என அழைக்கும் போது .

இங்கே ஆங்கிலம் பிள்ளைகள் பேசும் போது பெற்றோர்கள் சந்தோசமடைகின்றனர் நம் மொழி மெதுவாக அழிவது தெரியாமல் இருந்தாலும் தமிழர்களுக்கென நாடு இல்லாத போது , கலை கலாச்சாரமெல்லாம் சொல்லும் அளவுக்கு நின்று கொண்டிருக்கும் அறுக்கப்பட்டமரம் தள்ளாடுவது போன்று .

இந்த புலம் பெயர்ந்தவர்கள் இணையத்தில் அதிகம் மெனக்கெடுகிறார்கள் பிள்ளைகளை ஊருக்கு அழைப்பை ஏற்படுத்தி ஆச்சி , அப்பச்சி , அம்மம்மா, அப்பம்மா, அம்மப்பா, அப்பப்பா ஆகீயோரிடம் பேச வைத்தாலே தமிழ் அவர்கள் வாயில் நுழைந்துவிடும் .

எமக்கென்றொரு நாடு இல்லை என்பதும் ஒரு முக்கியமான காரணமாகத்தான் இருக்கின்றது

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யாழ்ப்பாணத்தில் கூட பலர் நான்கு வயதிலிருந்தே பிள்ளைகளை ஆங்கிலக் கல்விக்காக பணம்செலவளித்து அனுப்புகின்றனர்.அவர்கள் ஆங்கிலம் கற்பது தவறேயல்ல. ஆனால் தமிழைக் கற்காது ஆங்கிலத்தை மட்டும் கற்பது தவறானதே. வருங் காலங்களில் தமிழ்நாட்டுத்தமிழர் போல் எம்மினத்தவர் நிலையம் ஆகப்போகின்றது.
எனக்கு ஒன்று புரியவில்லை அந்தப் பிள்ளை ஆங்கிலம் கதைத்ததும் பெற்றோர் முகத்தில் பூரிப்பு ஏற்பட்டதும் தவறல்ல. ஆனால் அதன்பின் தமிழ் தெரிவது எத்தனை அவசியமானது என்று நீங்கள் ஏன் கூறவில்லை????? அல்லது கூறவிடாது தடுத்தது உங்களை அவர்கள் குறைவாக மதிப்பிட்டுவிடுவார்கள் என்பதா ???? 

ஆங்கிலம் கற்பதை நான் சொல்லவில்லை. ஆங்கில மொழி மூலம் கற்பதை, medium of instruction ஆக ஆங்கிலம் இருப்பதை சொன்னேன்.

அவர்கள் குறைவாக மதிப்பிட்டால் எனது மாத சம்பளத்தில் 10% இழந்து விடுவேன் அல்லவா அதனால்🤦‍♂️.

எனது பிள்ளை ஆங்கில மொழி மூலம் கற்கும் போது அதையே செய்யும் இன்னொரு பெற்றாரை அதை செய்யாதே என சொல்லும் தார்மீக உரிமை இல்லை என்பதால். 

அந்த பிள்ளைக்கு தமிழ் தெரியும். ஆனால் பள்ளி படிப்பை ஆங்கிலம் மூலம் படிக்கிறது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

பிரித்தானியாவில் வாழும் பிள்ளை ஆங்கிலத்தில் பயில்வது தவிர்க்க முடியாதது. ஆனால் ஆங்கிலக் கல்விமூலம் தான் அங்கிருப்பவர் வாழ்வை வளப்படுத்த முடியும் என்னும் கருத்தை நீங்களும் ஒத்துக்கொள்கிறீர்கள் போலல்லவா உங்கள் கருத்து இருக்கிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிரித்தானியாவில் வாழும் பிள்ளை ஆங்கிலத்தில் பயில்வது தவிர்க்க முடியாதது. ஆனால் ஆங்கிலக் கல்விமூலம் தான் அங்கிருப்பவர் வாழ்வை வளப்படுத்த முடியும் என்னும் கருத்தை நீங்களும் ஒத்துக்கொள்கிறீர்கள் போலல்லவா உங்கள் கருத்து இருக்கிறது.

இல்லை நான் அதை ஒத்து கொள்ளவில்லை.

ஆனால் நானும் நாடு திரும்பி எனது பிள்ளையையும் தமிழ் மொழி மூலம் கற்பிக்கலாம் இல்லையா? என்னை யாரும் பிரித்தானியாவில் கட்டி வைக்கவில்லைதானே?

அப்போ என்னை பிரித்தானியாவில் வாழ நிர்பந்திப்பது என்ன? எனதும், எனது பிள்ளையினதும் மேம்பட்ட எதிர்கால பொருளாதாரம்தானே?

அப்படி ஒரு மேம்பட்ட பொருளாதார வாழ்வை தமது பிள்ளைக்கும் கொடுக்க அவர்கள் விளைகிறார்கள் இலலையா?

“நீங்கள் எப்போது நாடு திரும்பி உங்கள் பிள்ளையையும் தமிழ் மொழி மூலம் படிபிக்க போகிறீகள்?” என்று அந்த பெற்றார் என்னை மறு கேள்வி கேட்டால்?

ஆகவேதான் இதை சொல்லும் தார்மீக உரிமை எனக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

இது கிட்டதட்ட ஊரில் இருக்கும் மக்கள் போராடி தமிழ் ஈழம் எடுத்து தரவேண்டும் என்ற மனநிலைக்கு ஒப்பானது.

நாம் நாடு திரும்ப மாட்டோம். எமது பிள்ளைகள் மேற்குலகின் பிரபல பாடசாலைகளில், பலகலைகளில் படிப்பதை தம்பட்டம் அடிப்போம் ஆனால் ஊரில் உள்ளவன் பிள்ளை தமிழில் படித்து எமது மொழியை கட்டி காக்க வேண்டும்.

இப்படி do as I say but not as I do என்று நான் ஒரு போதும் நடப்பதில்லை.

 • Thanks 1

super!

33 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிரித்தானியாவில் வாழும் பிள்ளை ஆங்கிலத்தில் பயில்வது தவிர்க்க முடியாதது. ஆனால் ஆங்கிலக் கல்விமூலம் தான் அங்கிருப்பவர் வாழ்வை வளப்படுத்த முடியும் என்னும் கருத்தை நீங்களும் ஒத்துக்கொள்கிறீர்கள் போலல்லவா உங்கள் கருத்து இருக்கிறது.

நிச்சயமாக ஆங்கில கல்வி முலம்தான் இலங்கையில் வாழ்க்கையை வளப்ப்டுத்தலாம் அனுபவத்தில் சொல்கின்றேன். 

Link to comment
Share on other sites

4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அம்மை அப்பன்  நாயன்மார் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்களாக இருக்கலாம். மாதா பிதா என்பன வடசொல். தமிழ் அல்ல.

இத்தனை காலம் ஒத்துக்கொள்ளாதவர்கள் கூட சுமேரியர்களுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஐந்தாம் கட்ட கீழடி ஆய்வு முடிவடைந்தபின் கூறியிருக்கின்றனரே. சில விடயங்கள் நிரூபணமாக்க காலம் எடுக்கலாம். ஆனால்  ஒட்டுமொத்தமாக அதை மூடி மறைக்க முடியாது.

இது ஆர்வலர்கள் கூறியதா ஆய்வாளர்கள் கூறியதா? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Justin said:

இது ஆர்வலர்கள் கூறியதா ஆய்வாளர்கள் கூறியதா? 

https://www.tamilnet.com/art.html?catid=79&artid=38813

Sathasivam papers on Sumerian-Tamil connections see the light of day

[TamilNet, Wednesday, 20 September 2017, 23:37 GMT]
Four pioneering research papers on the Dravidian connections between ancient Sumerian and Tamil, written between 1964 and 1987 by Eezham Tamil scholar, the late Prof A Sathasivam, are now available as a book. Writing a note to one of those papers in 1965, renowned linguist Prof T. Burrow said that Sathasivam breaks new ground in seeking to relate Dravidian with Sumerian, and added that if it were to be accepted the theory would be of considerable importance for the prehistory of both Dravidian and Sumerian. Brought out by the efforts of Mrs T Sathasivam and edited by Dr. Siva Thiagarajah, the book titled “Proto Sumero Dravidian: The Common Origin of Sumerian and Dravidian Languages,” has been published this year by the History and Heritage Unit of the Tamil Information Centre in the UK.
 
Proto Sumero Dravidian: Papers by Prof Sathasivam
 
Proto Sumero Dravidian: Papers by Prof Sathasivam
 
The papers are only a small but valuable fraction of the quarter a century research undertaken by Prof Sathasivam. He was working on a magnum opus, an etymological dictionary of Sumero Dravidian.

Commenting on his research, another renowned linguist Prof M. B. Emeneau wrote in 1965 that the analysis he had begun would be waited for with great interest, because of the most interesting historical and prehistorical implications of this hypothesis.

Sathasivam’s research gains new significance today because of the current advancements in coupling linguistics with DNA studies.

Unfortunately, his untimely demise in 1988 halted the completion of the work, but he has left behind volumes of manuscripts. Mrs Sathasivam should be given moral support and encouragement to bring them out in print for the great benefit of world scholarship.

The book that has been published now includes a monograph he prepared at the universities of Pennsylvania and California in 1964-1965, two papers he later read at the International Conference Seminar of Tamil Studies in 1966 and 1987, and another paper he read at the Seminar on Dravidian Linguistics, Annamalainagar in 1969.
 
* * *Sumerian civilization was one of the earliest of world humanity. 6000 years ago, it was flourishing in the cities, Ur, Uruk, Eridu, Larsa, Lagesh, Nippur etc., in lower Mesopotamia, which is roughly modern Iraq.

The authors of the Sumerian civilization were different from the later Babylonians and the present day Semitic populations. The Sumerians themselves were immigrants to Sumeria.

Unlike the Indus writing, the Cuneiform writings of the Sumerians became possible for decipherment with phonetic and semantic values, because of the availability of Semitic Akkadian inscriptions of later times using the same script and trilingual inscriptions in Akkadian, Elamite and old Persian.

Ever since the decipherment of Sumerian, seeing it different from Aryan or Semitic, theories were postulated as early as in 1912, linking Sumerian with Dravidian and Indus Valley.

Sathasivam found the Sumerian language as described in Sumerian grammars possessing almost identical characteristics with those of his reconstruction of prehistoric Tamil.

In his monograph he has brought in 501 cognate sets to compare Sumerian with various Dravidian languages.

Noting Sumerian and Dravidian as agglutinative languages, Sathasivam says that both have genetic relationship.

“The Sumerian language of the Archaic (3500-3000 BC) and Ur dynastic (3000-2400 BC) periods had preserved well its Proto-Dravidian elements,” Sathasivam observes.

“Both Sumerians and Dravidians spoke the same language and probably lived in some mountainous region for a long time before they separated from each other,” he further observes.

He concludes that Sumerian language fits in neatly as a member of the Dravidian family.

Pointing out Sumer meaning cultivated land, and citing the S/ K interchange, Sathasivam compares it with Kumari meaning cultivation in hills in Tamil, a piece of ground in a jungle in Kannada and Kumeru meaning a waste land cleared for cultivation in Tulu. It is interesting to note that the Dravidian strain is preserved in Sinhala too, in which Kumburu means paddy field.
 
* * *

Professor A Sathasivam
Professor A Sathasivam (1926 - 1988 )
 
Born in 1926 in Vaddukkoaddai, Jaffna, Sathasivam had a brilliant and interesting academic career.

He became a traditional Tamil Pandit first, before going from Jaffna College to the then University of Ceylon in Colombo to do Tamil honours and Master’s degrees, and then to proceed to Oxford to do doctoral research under Prof Burrow. His research on Tamil verbs was a source used in the Dravidian Etymological Dictionary.

At the University of Ceylon in the early 1950s he was a student of Prof K. Kanapathippillai, who is even today highly admired for his farsightedness in training and preparing his students in various branches of Tamil studies. Sathasivam was chosen for linguistics.

Sathasivam served as Professor in the University of Ceylon and in the University of California. Apart from his scholarship in linguistics, he is also remembered for the anthology of Eezham Tamil poetry he compiled, covering a period of nearly 2000 years.

Dr. Siva Thiagarajah, the editor of Sathasivam’s papers, is a multi-disciplinary academic. He is a medical doctor-turned Ph.D. holder in Medical Genetics, specialized in prehistoric DNA studies. He has authored two voluminous books on peoples and cultures of early Ilangkai and on the Kantharodai civilization of Jaffna. He has a special taking on Sumeria. One of his early publications was the Tamil translation of the Epic of Gilkamesh, a Sumerian epic, said to be the earliest of that genre of literature.

The 1964 - monograph of Prof Sathasivam was spotted by social anthropologist Mr. S. Visahan, while he was working at the British Library and an interest generated in the UK to bring it out in print. Mrs. Sathasivam who did the original typing of the manuscript 53 years ago, came forward to resurrect the research into a publication.

The book deserves attention of all in the field of world linguistics, Sumerian studies and Dravidian studies.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

. ஆனால் ஆங்கிலக் கல்விமூலம் தான் அங்கிருப்பவர் வாழ்வை வளப்படுத்த முடியும் என்னும் கருத்தை நீங்களும் ஒத்துக்கொள்கிறீர்கள் போலல்லவா உங்கள் கருத்து இருக்கிறது.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை, சித்தாந்தங்கள், கொள்கைகளை  கடந்து, இது சாத்தியமா என்றால், இல்லை என்பதே யதார்த்த நிலை.

உ.ம். ஆக புலத்தில் இருப்பவர்கள் பெரும்பகுதி தமது பெரும்பகுதி பொருளாதார வளத்துடன் அங்கெ திரும்பி சென்றாலும் இது சாத்தியமா?

பொருளாதாரத்தை வெளிநாடுகளுக்கு மூடிவிட்டு, 25 - 30 % பொருளாதாரம் இழந்தும்,  உளநாட்டில் மட்டும் பொருளாதாரத்தை நடத்தும் நிலையில், அதி உச்ச பொருளாதார பாதுகாப்பில் இதுவரையில் இருப்பது அமெரிக்கா மாத்திரமே.  

1.4 பில்லியன் சீனர்கள், இப்பொது வாங்கும்திறன் சமநிலையில் அமெரிக்காவை விஞ்சியும், ஆங்கிலம் இல்லாமல் மண்டரினை மட்டும் கொண்டு  முன்னேற முடியாமல் இருக்கிறது. 

ஆனால், ஜப்பான் இல் ஓரளவு இது சாத்தியம், அதாவது ஜாப்பனீஸ் மொழியை மட்டும் கொண்டு முன்னேறுவது. ஏனெனில், ஜப்பான் அப்படியான ஓர் பொருளாதார கட்டமைப்பை ஆக்கி வைத்து இருக்கிறது. ஆனால், முன்பு இருந்த (1990 இல்  , ஜப்பான் இன் மத்திய வங்கியால் மறைமுகமாக உருவாக்கப்பட்ட பெருளாதார   மந்த நிலை)  முடியும் என்ற உறுதியான நிலை இல்லை.

இதன் அடிப்படை, வளங்களை கையகப்படுத்துவதில் உள்ள திறனும் (பொதுவாக மேற்கு வன்முறை மூலமாகவும் , ஆனால் சீன இப்பொது  சமநிலை போட்டியாளர் இப்பொது),  உற்பத்தி திறனும் (இப்போது சீனா மற்றவர்களின் அறிவு, உழைப்பு  மூலதனத்தை எந்தவித்தமாக பெற்றேனும், அமெரிக்காவும் இதற்கு சளைத்தது அல்ல), சந்தை உருவாக்குதல் மற்றும் படுத்துதல் திறனும்.   

எமது சொந்த தேசமும், அரசும் இருந்தாலும் இதுவே இப்போதைய யதார்த்தம். ஆனால், ஒப்பீட்டளவில் முன்னேறுவது இலகுவாகவும் (மற்ற எந்தவொரு சமூக தடைகளை கருத்தில் எடுக்காமல், உ.ம். சாதி), ஒரு சிறு பகுதி  தமிழை மட்டும் கொண்டு வளம் பெறும் முயற்சிக்கான பொருளாதார இடம் உருவாக்க முனையலாம்.

Link to comment
Share on other sites

23 hours ago, goshan_che said:

இப்பொதும் பெரும்பாலானோர் தமிழ் மீடியத்தில்தான் படிக்கிறார்கள்.

ஆனால் எமது காலம் போலல்லாது இப்போ ஆங்கிலத்திலும், இண்டர் நேசனல் ஸ்கூலிலும் கூட படிக்கலாம்.  இந்த பள்ளிகளின் பெருக்கம் மிக விரைவாக பட்டினசபை உள்ள ஊர்களுக்கும் பரவுகிறது. யாழ் நகரத்தில் இருந்து 10 கிமிகுள் உள்ள ஒரு பட்டினசபை உள்ள ஊரில் 2 சர்வதேச பள்ளிகளை கண்டேன்.

நாம் படிக்கும் போது ஷேக்ஸ்பியரின் மகன் என்றாலும் தமிழ் அல்லது சிங்களத்தில்தான் படிக்க முடியும். கொழும்பில் மட்டும் விச்செளி, ரோயல் இன்ஸ்டிடுயூட், இப்படி சில

இலங்கையை பொறுத்தவரையில் ஆங்கிலக்கல்வியே சிறந்தது வெளிநாடு சென்றாவது தொழில் புரிய,/ அங்கு வாழ பிறருடன் உரையாட தமிழ் இனத்தவர் அல்லாதவர்களுடன் கொழும்பில் இருக்கும் தமிழர்களே தமிழில் பெரிதாக பேசமாட்டார்கள் நான் கண்டது 

6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எமக்கென்றொரு நாடு இல்லை என்பதும் ஒரு முக்கியமான காரணமாகத்தான் இருக்கின்றது

இதுவே முக்கிய காரணம் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையை பொறுத்தவரையில் ஆங்கிலக்கல்வியே சிறந்தது வெளிநாடு சென்றாவது தொழில் புரிய,/ அங்கு வாழ பிறருடன் உரையாட தமிழ் இனத்தவர் அல்லாதவர்களுடன் கொழும்பில் இருக்கும் தமிழர்களே தமிழில் பெரிதாக பேசமாட்டார்கள் நான் கண்டது 

ஆங்கிலமொழியில் கற்றால் மட்டும்தான் அது சாத்தியமா??? ஆங்கிலத்தைத் தனியாக வெளியே படித்தால்  போதாதா???

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுவிற்சர்லாந்தில் மூன்றாவது தலைமுறை பிள்ளைகள் கூட தமிழ் வகுப்பிற்கு செல்வதை காண்பது மகிழ்வு. பிள்ளைகள் தமிழை கற்பதற்கான தூண்டுதலை கொடுக்க வேண்டியவர்கள் தமிழ் ஆர்வலர்களும் தமிழ் மொழி அறிஞர்களும் தான். 

அடுத்த தலைமுறை தமிழை மறந்துவிடுமோ என்று அளவுக்கு மிஞ்சி கவலைப்படுவது முகநூல்களில் தமிழ் மொழியின் பெருமைகளை அள்ளி வீசுவதிலும், இருக்கும் ஆர்வத்தில் சிறு பகுதிகூட தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய வருடாவருடம்  செய்யவேண்டிய இலக்கண சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் இல்லை. இதை செய்ய வேண்டியவர்கள் தமிழ் மொழி அறிஞர்களே. ஐரோப்பிய மொழிகளில் வருடாவருடம் மொழியியில் அறிஞர்களின் சிபார்சின் பெயரில் புதிய rechtschreibung (Orthography) உள்ளடங்கலான புதிய Duden வெளியிடப்படும். 

பெரியாரின் எழுத்து சீர்திருத்த‍த்திற்கு பிறகு தமிழில் இப்படியான இலக்கண சீர்திருத்தங்கள் செய்யபட்டதாக நான் அறியவில்லை.  தமிழில் உள்ள எழுத்துருக்களை ஒரே தட்டச்சு வடிவமைப்பில் தட்டச்சு செய்ய இன்னமும் முடியவில்லை.  Word, Excel ஆகியவற்றில் தமிழை பயன்படுத்தும் போது ஏற்படும் சொல்திருத்தி,இலக்கண திருத்தி போன்ற வசதிகளை பயன்படுத்த தமிழ் மொழியில் ஏற்படுத்தப்டவேண்டிய பல இலக்கண சீர்திருத்தங்கள் மேற்கொள்ளாமல் தமிழ் அடுத்த தலைமுறைக்கு சிறப்பாக கடத்த முடியாது. புள்ளிவிபர திணைக்களம் புள்ளிவிபரங்களை தமிழில் வைத்திருப்பதை விட ஆங்கிலத்தில் மிக இலகுவாக பேணி பாதுகாக்க முடியும். 

ஆகவே என்னைப்பொறுத்த வரை உடனடியாக செய்யப்படவேண்டியது தமிழ் மொழி இலக்கண சீர்திருத்தங்களை துரித கதியில் மேற்கொள்ளுவதே. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை, சித்தாந்தங்கள், கொள்கைகளை  கடந்து, இது சாத்தியமா என்றால், இல்லை என்பதே யதார்த்த நிலை.

உ.ம். ஆக புலத்தில் இருப்பவர்கள் பெரும்பகுதி தமது பெரும்பகுதி பொருளாதார வளத்துடன் அங்கெ திரும்பி சென்றாலும் இது சாத்தியமா?

பொருளாதாரத்தை வெளிநாடுகளுக்கு மூடிவிட்டு, 25 - 30 % பொருளாதாரம் இழந்தும்,  உளநாட்டில் மட்டும் பொருளாதாரத்தை நடத்தும் நிலையில், அதி உச்ச பொருளாதார பாதுகாப்பில் இதுவரையில் இருப்பது அமெரிக்கா மாத்திரமே.  

1.4 பில்லியன் சீனர்கள், இப்பொது வாங்கும்திறன் சமநிலையில் அமெரிக்காவை விஞ்சியும், ஆங்கிலம் இல்லாமல் மண்டரினை மட்டும் கொண்டு  முன்னேற முடியாமல் இருக்கிறது. 

ஆனால், ஜப்பான் இல் ஓரளவு இது சாத்தியம், அதாவது ஜாப்பனீஸ் மொழியை மட்டும் கொண்டு முன்னேறுவது. ஏனெனில், ஜப்பான் அப்படியான ஓர் பொருளாதார கட்டமைப்பை ஆக்கி வைத்து இருக்கிறது. ஆனால், முன்பு இருந்த (1990 இல்  , ஜப்பான் இன் மத்திய வங்கியால் மறைமுகமாக உருவாக்கப்பட்ட பெருளாதார   மந்த நிலை)  முடியும் என்ற உறுதியான நிலை இல்லை.

இதன் அடிப்படை, வளங்களை கையகப்படுத்துவதில் உள்ள திறனும் (பொதுவாக மேற்கு வன்முறை மூலமாகவும் , ஆனால் சீன இப்பொது  சமநிலை போட்டியாளர் இப்பொது),  உற்பத்தி திறனும் (இப்போது சீனா மற்றவர்களின் அறிவு, உழைப்பு  மூலதனத்தை எந்தவித்தமாக பெற்றேனும், அமெரிக்காவும் இதற்கு சளைத்தது அல்ல), சந்தை உருவாக்குதல் மற்றும் படுத்துதல் திறனும்.   

எமது சொந்த தேசமும், அரசும் இருந்தாலும் இதுவே இப்போதைய யதார்த்தம். ஆனால், ஒப்பீட்டளவில் முன்னேறுவது இலகுவாகவும் (மற்ற எந்தவொரு சமூக தடைகளை கருத்தில் எடுக்காமல், உ.ம். சாதி), ஒரு சிறு பகுதி  தமிழை மட்டும் கொண்டு வளம் பெறும் முயற்சிக்கான பொருளாதார இடம் உருவாக்க முனையலாம்.

சீனர்கள் தம் நாட்டுக்கு பார்சல் அனுப்பப் கொண்டுவருவார்கள். அதில் ஒரு ஆங்கிலச் சொல் கூட இருப்பதில்லை. இதில் எந்த நாடு என்று இல்லையே என்றால் நீ அனுப்பு. அது போகும் என்பர். அவர்களுக்கு விளங்கும் என்பர். நான் ஆங்கிலத்தில் அவர்கள் நாட்டின் பெயரை எழுதிவிட்டு பையில் போடுவேன். அத்தனை நம்பிக்கை தம் மொழிமேல்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.