Jump to content

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாளை இலங்கை வருகை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாளைய தினம் இலங்கைக்கு வருகை தர உள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

பரீட்சார்த்த அடிப்படையில் நாளைய தினம் இருநூறுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மத்தள மகிந்த ராஜபக்ச விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் பிற்பகல் இந்த சுற்றுலாப் பயணிகள் உக்ரேய்னிலிருந்து இலங்கை வருகை தர உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொவிட் தொற்று ஏற்பட்டதனைத் தொடர்ந்து வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பது தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டது.

மேலும் சுற்றுலாப் பயணிகள் பரீட்சார்த்த அடிப்படையில் இலங்கைக்கு வருகை தர உள்ளதாகவும்,இந்த பரீட்சார்த்த முயற்சி வெற்றியளித்தால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/community/01/264978?ref=home-feed

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா பாயா லண்டன் புது வைரஸை  பார்க்க ஆசைப்படுகிறார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலவ்கையூடாக சீனாவிற்கு லண்டனின mutated version வைரசை அனுப்பத் திட்டம் தீட்டிய அமெரிக்கா மற்றும் மேற்கத்தைய நாடுகள் என்று பரபரப்பு  ரிஷி எழுதப் போகிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனிலிருந்து 185 சுற்றுலா பயணிகளுடன் விமானம் ஒன்று மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

ஸ்கைஅப் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றில் குறித்த பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Bild Bild 

Bild Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கா விட்டால் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை சந்திக்க கூடும் என்பதால் தான் கொரோனா காலத்திலும் உள்ளே அனுமதிக்கிறார்கள் ...ஏற்கனவே மாலைதீவு போட்டிக்கு நிக்குது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கா விட்டால் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை சந்திக்க கூடும் என்பதால் தான் கொரோனா காலத்திலும் உள்ளே அனுமதிக்கிறார்கள் ...ஏற்கனவே மாலைதீவு போட்டிக்கு நிக்குது 

திரும்ப திரும்ப பிழை விடுகின்றனர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

திரும்ப திரும்ப பிழை விடுகின்றனர் .

இலங்கை ,மாலைதீவு போன்றன சுற்றுலாத் துறையை நம்பி இருக்குது...சனம் மாலைதீவுக்கோ அல்லது வேறு ஆசிய நாடுகளுக்கோ போக வெளிக்கிட்டால் இலங்கையின் வருமானம் பாரிய வீழ்ச்சியடையும்  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

இலங்கை ,மாலைதீவு போன்றன சுற்றுலாத் துறையை நம்பி இருக்குது...சனம் மாலைதீவுக்கோ அல்லது வேறு ஆசிய நாடுகளுக்கோ போக வெளிக்கிட்டால் இலங்கையின் வருமானம் பாரிய வீழ்ச்சியடையும்  
 
எனக்கு கொரனோ (பேச்சுக்கு) சுகாதார துறை ஓய்வு எடுக்கும்படி கூறியுள்ளது நான்குமாதம் கட்டாய ஓய்வு என்று விட்டார்கள் மீறி வேலைக்கு போனால் வேலை தளத்தில் உள்ளவர்களுக்கும் பரவி உயிருக்கும் உத்திரவாதம் இல்லை என்று விட்டார்கள் நான் என்றால் போகமாட்டேன் .

கோத்தாவின் கொரனோ  தடுப்பு முறை உலகிலே சிறப்பானது என்று நீங்களும் கூட சொன்னது நினைவில் உள்ளது இப்ப கடைசியா என்ன ஆனார் அவரால் முடியவில்லை மக்கள் கொர்னோ உடன் வாழபழகி கொள்ளுங்கள் என்று கையை விரித்து விட்டார் . ஊசி வந்துவிடும் ஜனவரியில் என்கிறார்கள் அதுமட்டும் பொறுக்க முடியாதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணத்தின் முன் மனித உயிர்கள் தூசு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவை  அடக்கின விண்ணர் எண்டு பட்டம் குடுத்தாங்கள்...இப்ப என்ன மாதிரி? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் இணையவழி விசா விண்ணப்ப வலைத்தளத்தைப் (ETA) பயன்படுத்தி தற்போது ரஷ்யா, உக்ரைன் மற்றும் கசகஷ்தான் ஆகிய மூன்று நாடுகளின் பிரஜைகள் மட்டுமே இலங்கை செல்வதற்கு விசா பெற்றுக்கொள்ளமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்க பொறுத்தவர்கள் 
கொஞ்சம் ஆற பொறுத்தால் 
எல்லோருக்கும் நன்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Maruthankerny said:

ஆக்க பொறுத்தவர்கள் 
கொஞ்சம் ஆற பொறுத்தால் 
எல்லோருக்கும் நன்று 

இதைதான் நானும் நினைக்கிறேன்.

இலங்கை போன்ற ஒரு நாட்டில் இரண்டு அலைகள் வந்தும் இறப்பு 200க்குள் என்பது மிக பெரிய சாதனைதான்.

நாம் இலங்கை மீதான கடுப்பில் என்ன வேண்டும் என்றாலும் எழுதலாம். 

கொவிட்டை பொறுத்தவரை யூகே, யு எஸ் சை விட, இதுவரைக்கும் இலங்கை பாதுகாப்பான நாடு என்பது மறுக்க முடியாத உண்மை. 

ஆனால் இப்போ அவசரப்பட்டு திறந்து, யூகே 2020 மார்ச் முதல் வாரத்தில் விட்ட அதே பிழையை விடுகிறார்கள்.

இன்னும் ஒரு வாரத்தில் விலை குறைந்த அஸ்டிரா செனக்கா ஊசி பாவனைக்கு வந்தால், இந்தியாவின் சேரம் இன்ஸ்டிடியூட்டும் இதை தயாரிப்பதால், விரைவில் வழமைக்கு திரும்பலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரிலும் தொற்று வந்து விட்டது ஆனால் மனதால் பல பெரியவர்கள் பயந்துவிட்டார்கள் அம்பாறையில் முஸ்லீம்களை அடக்குவது மிக கஸ்ரமாக உள்ளதாக சுகாதார பிரிவினர் கூறுகின்றனர் ராணுவம் பயன்படுத்தப்படுகிறது . கல்முனையில் ஏதேர்சையாக பரிசோதித்த போது 27 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது . மேலும் பி. சி . ஆர் பரிசோதனை என்றதும் தலை த்றிக்க ஓடுகிரார்கள் முஸ்லிம்கள் தொற்று இருந்து இறந்து போனால் உடலை எரிப்பார்கள் என்ற பயத்தால் இதனால் தொற்று இன்னமும் அதிகரிக்கும் என்பது நிட்சயம். இதனால் மரண பீதி பலரை தொற்றியுள்ளது 

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

 Anti Srilankan..🤪

தேசியகீதம் தமிழில் பாடமுடியாது. வெளிநாட்டுக்காரரை  வரவேற்க/வரவழைக்க மட்டும் தமிழ் பாட்டு கேட்குது.😡

 எல்லா நாடும் எல்லைகளை மூடுகிறார்கள். இவர்கள் வெளிநாட்டுக்காரரை அழைக்கிறார்கள்.😞

சுகாதார அமைச்சர் கசாயமும் குடித்து காட்டுகிறார்.☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கள் ஊரிலும் தொற்று வந்து விட்டது ஆனால் மனதால் பல பெரியவர்கள் பயந்துவிட்டார்கள் அம்பாறையில் முஸ்லீம்களை அடக்குவது மிக கஸ்ரமாக உள்ளதாக சுகாதார பிரிவினர் கூறுகின்றனர் ராணுவம் பயன்படுத்தப்படுகிறது . கல்முனையில் ஏதேர்சையாக பரிசோதித்த போது 27 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது . மேலும் பி. சி . ஆர் பரிசோதனை என்றதும் தலை த்றிக்க ஓடுகிரார்கள் முஸ்லிம்கள் தொற்று இருந்து இறந்து போனால் உடலை எரிப்பார்கள் என்ற பயத்தால் இதனால் தொற்று இன்னமும் அதிகரிக்கும் என்பது நிட்சயம். இதனால் மரண பீதி பலரை தொற்றியுள்ளது 

மோசமான நிலைதான்.

வயது வந்தவரை, வருத்தம் உள்ளவரை, உடற் பருமனாவர்களை தனிமை படுத்த சொல்லுங்கள்.

விட்டமின் டி போதியளவு இருப்பது ஒரு அனுகூலம்தான்.

9 minutes ago, nunavilan said:

சுகாதார அமைச்சர் கசாயமும் குடித்து காட்டுகிறார்.☺️

அவர்களிலும் “அபே முதுன்மிதன் மோடயக் நவேய்” கூட்டம் இருக்கிறது 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதைதான் நானும் நினைக்கிறேன்.

இலங்கை போன்ற ஒரு நாட்டில் இரண்டு அலைகள் வந்தும் இறப்பு 200க்குள் என்பது மிக பெரிய சாதனைதான்.

நாம் இலங்கை மீதான கடுப்பில் என்ன வேண்டும் என்றாலும் எழுதலாம். 

கொவிட்டை பொறுத்தவரை யூகே, யு எஸ் சை விட, இதுவரைக்கும் இலங்கை பாதுகாப்பான நாடு என்பது மறுக்க முடியாத உண்மை. 

ஆனால் இப்போ அவசரப்பட்டு திறந்து, யூகே 2020 மார்ச் முதல் வாரத்தில் விட்ட அதே பிழையை விடுகிறார்கள்.

இன்னும் ஒரு வாரத்தில் விலை குறைந்த அஸ்டிரா செனக்கா ஊசி பாவனைக்கு வந்தால், இந்தியாவின் சேரம் இன்ஸ்டிடியூட்டும் இதை தயாரிப்பதால், விரைவில் வழமைக்கு திரும்பலாம்.

இலங்கை போன்ற தீவு நாடுகளுக்கு 
மிகவும் இலகு 24 நாளுக்குள் முழு கட்டுப்பாட்டுள் 
கொண்டுவர கூடிய சாத்தியம் உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

இலங்கை போன்ற தீவு நாடுகளுக்கு 
மிகவும் இலகு 24 நாளுக்குள் முழு கட்டுப்பாட்டுள் 
கொண்டுவர கூடிய சாத்தியம் உண்டு 

தீவு என்பது மிக பெரிய அனுகூலம்தான் ஆனாலும் தடுமாறாத (dithering) அரசியல் தலைமைதுவமும் அவசியம்.

யூகேயில் நாங்களும் ஒரு தீவு என்றுதான் நம்பி இருந்தோம்🤦‍♂️. நிலையற்ற தடுமாறும் அரசியல் தலைமை எம்மை மிக மோசமாக பாதிபடைந்த நாடுகளில் சேர்த்து விட்டது.

ஆனால் எனைய தீவுகளான அவுஸ், நியூசி, தைவான், ஜப்பான், சிங்கப்பூர், கொரியா (நடைமுறையில் தீவு) இலங்கை போல இதை கையாண்டதால் தப்பித்து கொண்டன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

இலங்கை போன்ற தீவு நாடுகளுக்கு 
மிகவும் இலகு 24 நாளுக்குள் முழு கட்டுப்பாட்டுள் 
கொண்டுவர கூடிய சாத்தியம் உண்டு 

உண்மை தான் செய்து பாத்தார்கள் மக்களின் புரிதல் இண்மையாலும் சமுக அக்கறை இன்மையாலும் முடியாமல் போய் விட்டது.இதில் அரசியலும் இல்லாமல் இல்லை.பாக்கிஸ்த்தான் முற்றாக அழிய வேண்டும் என்று வங்காளிகள் நினைக்கலாம்.ஆனால் எங்கள் நிலமை அப்படியா.கண்னாடி வீத்டுக்குள் இருந்து கல் எறியலாமா.அப்படித்தான் எங்கள் நிலமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

யூகேயில் நாங்களும் ஒரு தீவு என்றுதான் நம்பி இருந்தோம்

கனக்க யோசிக்காதையுங்கோ.....வாற 31 திகதி இரவு 12.00 மணி தொடக்கம் நீங்கள் சுதந்திர பறவைகள். விடுதலையடைந்து விட்டீர்கள்.ஒரு பெரிய தொல்லை துலைஞ்சுது.😂
இனி நீங்களும் தீவார் ஆகி விட்டீர்கள்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

கனக்க யோசிக்காதையுங்கோ.....வாற 31 திகதி இரவு 12.00 மணி தொடக்கம் நீங்கள் சுதந்திர பறவைகள். விடுதலையடைந்து விட்டீர்கள்.ஒரு பெரிய தொல்லை துலைஞ்சுது.😂
இனி நீங்களும் தீவார் ஆகி விட்டீர்கள்.🤣

🤣 ஐயோ எனக்கு உங்களை விட்டு போக மனமே இல்லை.

கடைசி காலத்தில் இலங்கை போக முடியாட்டிலும் சைப்ரசோ, ஸ்பியினோ போய் சிவனே எண்டு காலத்தை முடிக்கலாம் எண்ட நினைப்பில் மண்ணை அள்ளி கொட்டிப் போட்டாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

🤣 ஐயோ எனக்கு உங்களை விட்டு போக மனமே இல்லை.

கடைசி காலத்தில் இலங்கை போக முடியாட்டிலும் சைப்ரசோ, ஸ்பியினோ போய் சிவனே எண்டு காலத்தை முடிக்கலாம் எண்ட நினைப்பில் மண்ணை அள்ளி கொட்டிப் போட்டாங்கள்.

மாலை தீவு இருக்குத்தானே...ஏது கவலை?  🤪

கருவாடு கமகமக்கும் நாடெல்லவா! 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

மாலை தீவு இருக்குத்தானே...ஏது கவலை?  🤪

கருவாடு கமகமக்கும் நாடெல்லவா! 😎

போய் பாத்தனியளே? கொண்டு போற காசெல்லாம் குடி தண்ணி வேண்ட மட்டும்தான் காணும் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

போய் பாத்தனியளே? கொண்டு போற காசெல்லாம் குடி தண்ணி வேண்ட மட்டும்தான் காணும் 🤣

சூரிய அஸ்தமனமே இல்லாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு காசு தண்ணிமாதிரித்தானே......😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.