சீனாவின் கொரோனா தடுப்பு மருந்து பயனளிக்கிறது – துருக்கி
-
Tell a friend
-
Topics
-
Posts
-
அண்ணை, இப்ப பலருக்கு 2009 இற்கு முன்னர் தாங்கள் எப்படி, எதற்காக புலிகளை ஆதரித்தார்கள் என்பது மறந்து போச்சுது. 2009 இல புலிகள் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்று ஊரிலிருந்து தங்களுக்குச் செய்தி கிடைத்ததாம், அதனால தான் தாங்கள் புலிகளை விமர்சிக்கிறம் என்று இப்போது கூறுகிறார்கள். அப்படியானால் 2009 வரை புலிகளை அவர்கள் ஆதரித்தபோது புலிகள் செய்தவை என்று பேசப்பட்ட மனிதவுரிமை மீறல்களை இவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும் அல்லது அதுபற்றி எதுவுமே தமக்குத் தெரியாது என்று கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்ய வேண்டும். 2009 வரை புலிகளை ஆதரிப்பதற்கு இவர்களுக்கு இருந்த அதே காரணங்கள்தாம் இன்றுவரை புலிகளை ஆதரித்து நிற்பவர்களுக்கும் இருக்கிறது என்பதை இவர்கள் புரிந்துகொள்ளப்போவதில்லை. புலிகளின் மனிதவுரிமை மீறல்களுக்காகவே அவர்களை எதிர்க்கிறோம் விமர்சிக்கிறோம் என்று இன்று பேசுபவர்கள் 2009 இற்கு முன்னமே, அதாவது புலிகள் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடுகிறார்கள் என்று பேசப்பட்டபோதே அதைச் செய்திருக்க வேண்டும். அதைவிட்டுட்டு இப்போதுவந்து நடுநிலமை பேசுறம் எண்டுறதும், மனிதவுரிமை வாதிகள் எண்டுறதும் சகித்துக்கொள்ள முடியாமல் கிடக்கு. மக்களைப் புலிகள் தான் வழிநடத்தினார்கள். இதில் மாற்றுக்கருத்தில்லை. இன்று மனிதவுரிமை வாதிகள் போலவும், நடுநிலைமைவாதிகள் போலவும் பேசும் எல்லோருமே அவர்களின் தலைமைத்துவத்தையே தமிழர்களின் தலைமைத்துவமாக ஏற்றுக்கொண்டே சென்றார்கள். ஏனென்றால், அன்று புலிகளை விட்டால் மக்களுக்கு வேறு எவரும் இருக்கவில்லை. தமது அரசியலை, தமது இருப்பை, தாயகத்தை புலிகள் காப்பார்கள் என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. அதனாலேயே அவர்கள் எடுத்த முடிவுகள் அனைத்தையும் மக்கள் ஆதரித்தார்கள். புலிகள் காட்டிய கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டு அமோக வெற்றியை ஈட்டிக் கொடுத்தார்கள். ஆகவே, புலிகள் மக்களை வழிநடத்தவில்லை, தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக இருக்கவில்லையென்று இன்று கூறுவோர் செய்வது தாம் 12 வருடங்களுக்கு முன்னர் நம்பியவற்றையும், நம்பிச் செயற்பட்டவற்றையும் இல்லையென்றும், பொய்யென்றும் மறுப்பதுதான். இவர்களை எம்மால் மாற்றவியலாது. கடந்து செல்லுங்கள். உங்களுக்குத் தெரியும் நீங்கள் செய்வது. அது உங்களுக்குச் சரியாகத் தென்படும் பட்சத்தில் நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை.
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
அடிச்சார் பார் யு டர்ன் எல்லாம் சின்னம்மா மாயம்..☺️..😊 -
யூட்டர், சும்மா சிரிப்பு காட்டாதீங்கோப்பூ. நீங்கள் சொன்ன பகிடிக்கதைக்கு, நானும் ஒரு மறுத்தான் பகிடிதானப்பு. இதுக்கு போய், ரா.... கீ எண்டு கொண்டு.... சொல்லுறது தான், சொல்லுறியள், ஒரு CIA ஆள் எண்டு சொன்னியல் எண்டால், உங்க, யாழ் தளத்தில் ஒரு கெத்தா திரியலாம் எல்லோ... 😜
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
இலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை – பதில் இன்று.! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கான பதிலை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தேசிய தமிழ் ஊடகமொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அந்த அமைச்சின் செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே இதன்போது குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் காணப்படும் தரவுகள், குறைபாடுகள், பிழைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தற்போது தனித்தனியாக ஆராயப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மிக ஆழமாக ஆராய்ந்ததன் பின்னர் அந்த அறிக்கைக்கான பதிலை இன்று மாலை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜயனாத் கொலம்பகே கூறியுள்ளார். இலங்கை அரசினால் சமர்ப்பிக்கப்படும் பதில் அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் ஏற்றுக்கொள்வார் என தாம் நம்புவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். மேலும் அதனை பேரவை கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பார் எனவும் வௌிவிவகார அமைச்சின் செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். 46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையில், இலங்கை குறித்த விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பதன் மூலம், உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் விசாரணைகள் மற்றும் வழக்குகளை நிறுவுதல் மற்றும் சர்வதேச குற்றங்களில் சிக்கியுள்ள இலங்கை அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தல் உள்ளிட்ட காட்டமான தீர்மானங்கள் மற்றும் முடிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://vanakkamlondon.com/world/srilanka/2021/01/99949/
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.