Jump to content

திருச்சிக்கு மகளுடன் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் வந்த கமல் .. உற்சாக வரவேற்பு


Recommended Posts

திருச்சிக்கு மகளுடன் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் வந்த கமல் .. உற்சாக வரவேற்பு

 
 

திருச்சி: திருச்சிக்கு மகளுடன் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் வந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

 
   
  திருச்சிக்கு மகளுடன் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் வந்த கமல் .. உற்சாக வரவேற்பு - வீடியோ

  தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களுடைய தேர்தல் பரப்புரையை துவங்கியது இதனிடையே மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் பிரச்சாரத்தை ஏற்கனவே துவக்கினார். இந்நிலையில் இன்று திருச்சி வந்த அவர், பிரச்சாரக்கூட்டத்தில் பேசினார். நாளையும் திருச்சியில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

  இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் அடுத்துள்ள மொராய் சிட்டி வளாகத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அங்கு கமலஹாசனுக்கு மக்கள் நீதி மைய தொண்டர்களுக்கு கையசைத்து வரவேற்பு அளித்தனர்

   
   
  கமல் பிரச்சாரம்

  கமல் பிரச்சாரம்

  தொடர்ந்து அங்கிருந்து பிரச்சார வேனில் புறப்பட்ட கமலஹாசன் விமான நிலையம், வயர்லெஸ் ரோடு, கே.கே.நகர், சிம்கோ மீட்டர், மன்னார்புரம் நால்ரோடு, டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம் வழியாக காஜாமலை எஸ்ஆர்எம் ஹோட்டல் சென்று அடைந்தார். கமலுடன் 2வது மகள் அக்சராவும் உடன் வந்திருந்தார்.

   
  மரியாதை பேச்சு

  மரியாதை பேச்சு

  திருச்சியில் பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன் கூறுகையில், என் தந்தையிடம் கற்ற மரியாதை காரணமாக தான் இன்றைய கொள்ளையர்களை கூட நான் திட்டியதில்லை. இலவசங்கள் அனைத்தும் மக்கள் பணம். நியாயமாக மக்களுக்கு வந்து சேர வேண்டிய பணம். ஏழ்மையை இந்த அரசு பாதுகாத்து வைத்திருக்கிறது. நாங்கள் சிறந்த திட்டங்கள் வைத்துள்ளோம். ஏழைகள் தான் ஓட்டு போடுகிறார்கள். பணக்காரர்கள் ஓட்டு போட வருவதில்லை. வாக்களிக்க வந்தாலும் அங்கு நிற்பவர்களை பார்த்து திரும்பி விடுகிறார்கள்.

   
  எங்கள் திட்டம்

  எங்கள் திட்டம்

  தமிழ்நாட்டை டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டியது மக்கள் நீதி மையத்தின் திட்டம். அதை செய்ய நேர்மையான அரசு. தேவை. ஓட்டுச்சாவடிகளில் நடக்கும் ஊழலை தடுக்க வேண்டியது நமது கடமை. ஊழலை நீக்குவதற்கான தான் அரசியலுக்கு வந்தேன் தொடர்ந்து செயல்படுவேன்.

   
  பிரதிநிதி இருப்பார்

  பிரதிநிதி இருப்பார்

  அரசியல் பிரசுரங்களில் எதுகை, மோனையுடன் பேசும் அரசு நாங்கள் அல்ல. மக்கள் நீதி மையம் சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளி ஒருவர் பிரதிநிதியாக நிச்சயம் இருப்பார். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை கிடப்பில் இருக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க இந்த நடவடிக்கை உதவும். இது நேர்மையானவர்கள் கூட்டம். நான் நட்சத்திரம் அல்ல. இனி உங்கள் வீட்டில் உள்ள சிறு விளக்கு. ஊழலுக்கு எதிராக இந்த விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். அதை அணையாமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு" என்றார்.

  https://tamil.oneindia.com/news/trichirappalli/kamal-who-came-to-trichy-by-helicopter-for-the-campaign-with-his-daughter/articlecontent-pf510678-407142.html?fbclid=IwAR0ThhRJA2ZoxlQtENst_gFqXXAdGoVqr_lv0g0eKEyXy3e30UIvBbQjQZU

  Link to post
  Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

  சும்மா கடை திறப்புவிழாவுக்கு சின்னத்திரை நடிகர்கள் போனாலே இதை விட கூட்டம் பின்னும். 

  Link to post
  Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
  2 hours ago, குமாரசாமி said:

  சும்மா கடை திறப்புவிழாவுக்கு சின்னத்திரை நடிகர்கள் போனாலே இதை விட கூட்டம் பின்னும். 

  இது தெரிந்துதான் அவர் மகளுடன் வந்திருக்கிறார். இருந்தும்.. ☹️

  Link to post
  Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
  27 minutes ago, Kapithan said:

  இது தெரிந்துதான் அவர் மகளுடன் வந்திருக்கிறார். இருந்தும்.. ☹️

  அப்பாக்களுடன் வரும்போது 
  ஆயிரம் இருந்தாலும் வருங்கால மாமன் என்று 
  நாம் அடக்கிதான் வாசிப்போம். 

  தனியா வர சொல்லுங்க அப்புறம் பாருங்க 
  எங்கள் உத்வேகத்தையும் கூட்டத்தையும் 

  Link to post
  Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

             ---- கமல்----

  memees.php?w=650&img=Z291bmRhbWFuaS9ibGl வலதுக்கும் இடதுக்கும் நடுவால புகுந்து போயிடலாம் நினைச்சன்.👍

  Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  பிழை திருத்தம்
  Link to post
  Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
  9 hours ago, Maruthankerny said:

  தனியா வர சொல்லுங்க அப்புறம் பாருங்க 
  எங்கள் உத்வேகத்தையும் கூட்டத்தையும் 

  அந்த வீடியோவில் சரியாக1.35 லிருந்து கேட்டுப்பாருங்கள்.அங்கேயும் கூட்டம் இருக்கு. 😄

  Link to post
  Share on other sites

  Join the conversation

  You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

  Guest
  Reply to this topic...

  ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

   Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

   • உலகறிந்த இரண்டு பேரை தான் குறிப்பிட்டேன். அந்த பட்டியல் நீளமானது, மோடி, ராஜபக்ஷ உட்பட.  
   • மறைமுகமாக எதோ சொல்ல வருகின்றார்.
   • இந்தியாவின் வெளியுறவு கொள்கை 2009 டன் தோல்வியடைந்துவிட்டது, இப்போது இலங்கையிடம் மண்டியிட்டு பிச்சை எடுக்கின்றார்கள்
   • ஜெனீவா வருடாந்த திருவிழா உங்க, ஜெனீவால வருசா, வருசம் ஒரு கொடி ஏத்தி, திருவிழா நடக்கிறதெல்லே... உந்த முறை, இந்தியன் மேளம் அடிக்க மாட்டினம் எண்டு, காசோடை, டெல்லிக்கு ஆள் போயிருக்கு. இவங்களை தப்ப விட்டால், ஒரு வருசத்திக்கிடையில, சீனாவோட சன்னதம் கொண்டாடுவாங்கள் எண்டு டெல்லி வாலாக்கள் நினைத்தாலும், போனவர், கொடுக்கிற இடத்திலை, கொடுக்க வேண்டியதை கொடுத்தால் நடக்க வேண்டியது, நடக்கும் என்று, சிரிச்சுக் கொண்டு அலுவல் பார்க்கிறாராம். நம்மடை பொறுக்கி, சுப்புரமணிய சுவாமி தான், முதலிலை ஆவெண்டவர் போலை கிடக்குது.  ராஜபக்சேக்களை நம்பலாம். ஆக்கள் தங்கப்பவுன் எண்டு கொண்டு நிக்குதாம் மனிசன். ஜெனீவாவிலை, எல்லா உதவிகளையும் செய்யோணும். மகிந்தா எண்ட மச்சான் எண்டு நிக்கிறாராம். அவையள், நாட்டின் அபிவிருத்தி அலுவல் பார்க்க தான், சீனாவை சுத்துகினம், இந்தியாவை சுத்த இல்லை எண்டுதாம் மனிசன். பாகிஸ்தான் மேளம், அடிக்கும் எண்டு சொல்லிப்போட்டு போய் இறங்கின கையோட, அவர் ஆட்சிக்கே சிக்கலாம். டொனால்டு காலத்திலை எட்டத்திலை வச்சிருந்த, நாட்டினை, பைடேன் காலத்திலை, கிட்ட கொண்டு போகவேணுமெண்டால், சீனா காரன் நிண்டாடுற, இலங்கைப்பக்கம், நிக்கிறது சரிவராது எண்டு ஒரு கதையாம் அங்கை. ஆப்பிரிக்க நாடுகள் எல்லாம், தங்களோடை எண்டு, சிங்களம் நினைக்க, மாலாவி நாட்டினை மடக்கி தங்கட பக்கம் இழுத்து போட்டினம், பிரிட்டிஷ்க்காரர் எண்டு, கொழும்பிலை கொஞ்சம் கொதியாம். இண்டைக்கு, பிரிட்டிஷ் எம்பசிக்கு முன்னாலை, தமிழ், சிங்களம், முஸ்லீம், பொது மக்கள் எண்டு ஒரு 10 -15 பேர், புலிகள் கடத்தின, தங்கட பிள்ளையளை தேடி தாருங்கோ எண்டு போராடி இருக்கினம். எங்க, விமல் அய்யாவை உதுகிலை காணவில்லை எண்டு, கமெண்ட் போட்டு நக்கல் அடிச்சிருக்கினம். அடுத்த இரண்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டி போடலாம் எண்டு, இனவாதம் கக்குறார், ஆனந்த வீரசேகர.... இந்தியா அப்பப்ப 13 பத்தி, கதைக்கும், அதை சீரியஸா எடுக்காமல், மாகாணசபை தேர்தலும் வேணாம், மாகாண சபைகளும் வேணாம். எல்லாத்தையும் கடாசி விடவேணும் எண்டு அந்தாள் சொல்ல, அடோய்.... அடோய்....ஜெனீவா  நிலைமை புரியாம கத்தாத  என்று மகிந்தா மூலக் கொதிக்காரர் மாதிரி கத்திப் போட்டாராம்.  உவருக்கு போட்டியா, சரத் ஆரம்பத்திலை கதைக்க வெளிக்கிட்டவர். ஆனால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில், தனக்கு, அது, தமிழ் பேசும் மக்களின் வாக்குகளுக்கு ஆப்படிக்கும் எண்டு, மனோ கணேசன் சொன்னதை கேட்டு, சஜித் அவரை ஆப் பண்ணிப் போட்டாராம். ஆக, உந்த திருவிழாவுக்கு, புது மேளக்காரர், வருகினமோ, அல்லது இந்தியன் மேளம் போடுற, சுப்பிரமணிய சுவாமி சொல்லுற மாதிரி வந்து, தலைகீலா நின்னு அடிக்கிற அடியிலை, மேளம் தெறிச்சு உடையுமோ, தெரியேல்ல. ஏதாவது தகவல் வந்தா சொல்லி அனுப்புங்கோ. ஆனாலும், கொரோனா போயிடும் எண்டு நினைக்கிறன். அடுத்த வருசம் நேரில போய், திருவிழாவை பார்க்கலாம்.
  ×
  ×
  • Create New...

  Important Information

  By using this site, you agree to our Terms of Use.