Jump to content

`கட்சி தொடங்கவில்லை; கூட வருபவர்களைப் பலிகடாவாக்க விரும்பவில்லை!’ - ரஜினி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை நோக்கி எழுப்பப்பட்டு வந்த கேள்விக்கு கடந்த டிசம்பர் 3-ம் தேதி பதில் சொல்லியிருந்தார் ரஜினி. டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பு, 2021 ஜனவரியில் புதிய கட்சி என ட்விட்டரில் அறிவித்திருந்தார் ரஜினி. தொடர்ந்து தனது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தியையும் நியமித்திருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ` அரசியலில் மாற்றம் வேண்டும். இப்போ இல்லைன்னா... எப்பவும் இல்லை' என்றும் முழங்கினார். இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. 

ஆனால், அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் கட்சி ஆரம்பித்து தேர்தல் அரசியலில் ஈடுபட நினைத்த ரஜினியை, அந்த முடிவிலிருந்து பின்வாங்க வைத்துவிட்டது என்கிறார்கள். கட்சி அறிவிப்புக்கு முன்பாக `அண்ணாத்த’ ஷூட்டிங்கை முடித்துக் கொடுக்க வேண்டியது கடமை என்று சொல்லியிருந்த ரஜினி, சொன்னபடியே தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டார். கொரோனா விதிமுறைகளுடன் ஷூட்டிங் தொடர்ந்த நிலையில், படக்குழுவினர் சிலருக்குக் கடந்த 24-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஹோட்டலில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார் ரஜினி. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியானாலும், ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தது.

இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினி கடந்த 25-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு இரண்டு நாள்கள் சிகிச்சையிலிருந்த ரஜினி, சிகிச்சை முடிந்து 27-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர், தனி விமானம் மூலம் உடனடியாக அவர் சென்னை திரும்பினார். டிசம்பர் 31-ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பு என்று கூறியிருந்தநிலையில், ஒருவாரம் அவருக்கு முழுமையாக ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். மேலும், ஏற்கெனவே உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் சூழலுக்கு ஆளாக வேண்டாம் எனவும் மருத்துவர்கள் ரஜினிக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

இந்தநிலையில்தான், கட்சி தொடங்கி அரசியலுக்கு வரவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதாக ரஜினி அறிக்கை விட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம். `ஜனவரியில் கட்சி தொடங்குவேன்’ என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதராபாத் சென்றேன். கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி முகக்கவசம் அணிவித்து மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பு நடத்தி வந்தோம்.

இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது .உடனே இயக்குநர் படப்பிடிப்பை நிறுத்தி, நான் உட்பட அனைவருக்கும் பரிசோதனை செய்வித்தார். எனக்கு கொரோனா நெகட்டிவ் என வந்தது. ஆனால், எனக்கு ரத்தக்கொதிப்பில் அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தை கொண்டும் எனக்கு ரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வும் இருக்கக் கூடாது. அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தைத் கடுமையாக பாதிக்கும். ஆகையால், மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாள்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது. என் உடல் லை கருதி தயாரிப்பாளர் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார். இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம். இவை அனைத்துக்கும் காரணம் என் உடல் நிலை.

இதை ஆண்டவன் எனக்குக் கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன். நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலமாக மட்டும் பிரசாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி, தேர்தலில் பெரிய வெற்றியைப்பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்கமாட்டார்கள். நான் மக்களைச் சந்தித்து கூட்டங்களைக் கூட்டி பிரசாரத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான, ஏன் லட்சக்கணக்கான மக்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். 120 பேர் கொண்ட குழுவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் மூன்று நாள்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது. இப்போது இந்த உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது.

தடுப்பூசி வந்தால்கூட நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகளைச் சாப்பிடும் நான் இந்த காலத்தில் மக்களைச் சந்தித்து பிரசாரத்தின்போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால், என்னை நம்பி என் கூட வந்து, என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும். இல்லை, நான் கொடுத்த வாக்கைத் தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி, இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமா என்னைப் பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால், நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி, எனக்கு மட்டும்தான் தெரியும்.

இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள். மக்கள் மன்றத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் கொரோனா காலத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கிறீர்கள். அது வீண் போகாது. அந்தப் புண்ணியம் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும். கடந்த நவம்பர் 30-ஆம் தேதி நான் உங்களைச் சந்தித்தபோது நீங்கள் எல்லோரும் ஒருமனதாக, `உங்கள் உடல் நலம்தான் எங்களுக்கு முக்கியம். நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே’ என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.

நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்புக்கும் பாசத்துக்கும் தலைவணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும்போல் செயல்படும். மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், தொடர்ந்து என்னை ஆதரித்து, `முதலில் உங்கள் உடல் நலத்தைக் கவனியுங்கள். அதுதான் எங்களுக்கு முக்கியம்’ என்று அன்புடன் கூடிய மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியில் இருந்து விலகி என்கூட வந்து பணியாற்ற சம்மதித்த மரியாதைக்குரிய அர்ஜுனமூர்த்தி அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப் பட்டுள்ளேன்.

மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ, அதை நான் செய்வேன். உண்மையைப் பேச என்றுமே தயங்கியதில்லை. உண்மையும் வெளிப்படைத்தன்மையும் விரும்பும் என் நலத்தில் அக்கறை உள்ள என் மேல் அன்புகொண்ட என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களும் தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று ரஜினி தெரிவித்திருக்கிறார்.

https://www.vikatan.com/news/politics/rajinis-new-announcement

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201229-124739.jpg

உடல் நிலை , மூப்பு காரணம் காட்டுவதால் தயவு செய்து மீம்ஸ் போடாமல் , கலாய்க்காமல் விடுவம்.. 😢..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தேக ஆரோக்கியத்தோடு 
இன்னும் பல வருடங்கள் உங்கள் குடும்பத்தாரோடு சந்தோசமாக இருக்க இறைவன் அருள் கிடைக்கட்டும். 
உங்கள் அயராத கடின உழைப்பு; யாரும் அடையாத ஜனரஞ்சகம்;
யாரும் தொடாத நட்சத்திர அந்தஸ்து; இவையாவும் இன்றைய அரசியல் சாக்கடைக்குள் சிக்காமல்; நீங்கள் நீங்களாக இருங்கள். 
🙏🙏🙏🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்: "கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை"

ரஜினிகாந்த்

பட மூலாதாரம், GETTY IMAGES

தான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

தனது உடல்நலன் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் மட்டுமின்றி தன்னுடன் பயணிப்பவர்களை பலிகடா ஆக்க விரும்பாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி வெளியிட்ட முழு அறிக்கை

"என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம்.

ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன்.

கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, முகக் கவசம் அணிவித்து, மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம்.

ரஜினிகாந்த்

பட மூலாதாரம், GETTY IMAGES

இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே இயக்குநர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வித்தார். எனக்கு கொரோனா நெகடிவ் வந்தது. ஆனால் எனக்கு ரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு இரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது, அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும். ஆகையால் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது.

என் உடல்நிலை கருதி தயாரிப்பாளர் திரு. கலாநிதி மாறன் அவர்கள் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார் இதனால் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு பல கோடி ரூபாய் நஷ்டம், இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல் நிலை.

இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த ஓர் எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன்.

நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரசாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்த்த யாரும் மறுக்கமாட்டார்கள்.

நான் மக்களை சந்தித்து கட்டங்களை கூட்டி பிரச்சாரத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும். 120 பேர் கொண்ட குழுவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் மூன்று நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது. இப்போது இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது.

தடுப்பூசி வந்தால்கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் Immuno Suppressant மருந்துகளை சாப்பிடும் நான், இந்த கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரச்சாரத்தின் போது என் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என்கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.

என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் - கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

ரஜினிகாந்த்

பட மூலாதாரம், GETTY IMAGES

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும்.

இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்.

மக்கள் மன்றத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் கொரோனா காலத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கின்றீர்கள், அது வீண் போகாது.

அந்த புண்ணியம் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும், கடந்த நவம்பர் 30-ம் தேதி நான் உங்களை சந்தித்த போது, நீங்கள் எல்லோரும் ஒரு மனதாக 'உங்கள் உடல் நலம் தான் எங்களுக்கு முக்கியம், நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன், நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பிற்கும், பாசத்திற்கும் தலை வணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும்.

மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்க உடல் நலத்தை கவனியுங்க, அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியிலிருந்து விலகி என் வந்து பணியாற்ற சம்மதித்த மரியாதைக்குரிய அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்யமுடியுமோ அதை நான் செய்வேன்.

நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை.

உண்மையையும், வெளிப்படை தன்மையையும் விரும்பும், என் நலத்தில் அக்கறையுள்ள என்மேல் அன்பு கொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க தமிழ் மக்கள். வளர்க தமிழ்நாடு. ஜெய் ஹிந்த்" என்று தனது அறிக்கையில் நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/india-55472676

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மை என்றால்.. இன்னுமொரு... சினிமாக் கூத்தாடியிடம் சிக்கி தமிழகம் சின்னாபின்னமாவதில் இருந்து தப்பிச்சு என்று சொல்லலாம்.

ஆனால்.. திராவிடக் கும்பல்கள் உள்ளவரை தமிழகத்துக்கு மீட்சி இல்லை.. என்பது தான் அடுத்துள்ள பிரச்சனை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலபத்ர ஓணாண்டி சொன்னது தான் நடந்திருக்கிறது

On 26/12/2020 at 01:27, பாலபத்ர ஓணாண்டி said:

வயசு போன நேரத்துல உன்னிய மாட்டிவிட பாத்தான் பிஜேபி.. நீ நேரா போய் ஆஸ்பிட்டல்ல படுத்திகிட்டு பிஜேபிக்கு வச்சுருக்கா டிவிட்டு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

``அன்புக்கு முன் தோற்றுப்போன அரசியல்” - கடைசி நேரத்தில் ரஜினி எடுத்த கடினமான முடிவு!

ரஜினி

ரஜினி

ரஜினியின் உடல்நிலை குறித்து இரண்டு மகள்களுமே மிகவும் கவலையடைந்துள்ளார்கள். 28-ம் தேதி காலை தமிழருவி மணியனை தொடர்பு கொண்டு கட்சி துவங்கும் பணிகள் குறித்து கேட்டுள்ளார்.

'நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்” என அறிக்கை வெளியிட்டு, 25 ஆண்டுகாலமாக 'ரஜினியின் அரசியல் வருகை எப்போது?' என்கிற வினாவுக்கு முடிவுரை எழுதியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

ரஜினி அறிக்கை
 
ரஜினி அறிக்கை

"இப்போ இல்லைனா எப்பவுமே இல்ல” என்கிற ஹேஷ்டாக்கோடு தனது அரசியல் என்ட்ரி குறித்த அறிவிப்பை டிசம்பர் 3-ம் தேதி ட்விட்டரில் வெளியிட்டார் ரஜினி. டிசம்பர் 31-ம் தேதியன்று தனது அரசியல் கட்சி துவக்கம் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடுவன் என்று ரஜினி அறிவித்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக ஐம்பது ஆண்டு காலம் தமிழக அரசியல் களம் தி.மு.க, அ.தி.மு.க என்கிற இரண்டு கட்சியை சுற்றியே வந்துக்கொண்டுள்ளது. இதற்கு மாற்றாக ரஜினியின் அரசியல் என்ட்ரி அமையும், பல கட்சிகள் ரஜினியுடன் கூட்டணி வைக்கும் என்றெல்லாம் தொடர்ந்து தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்தது. இந்நிலையில் தான் நடித்து வந்த 'அண்ணாத்த' படத்தின் ஷூட்டிங்கை முடித்துக்கொடுக்க, தனி விமானத்தில் ஹைதராபாத் சென்றார் ரஜினி.பத்து நாட்களை கடந்து ஷூட்டிங் சென்றுகொண்டிருந்த நிலையில், அங்கிருந்த சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ரஜினிக்கு கொரோனா தொற்று இல்லாவிட்டாலும், அவரது ரத்த அழுத்ததில் சில மாறுபாடுகள் ஏற்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது.

பத்து நாட்கள் ஓய்வு கட்டாயம்!

இதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்புக்கு பிறகு கடந்த 27-ம் தேதி மாலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார் ரஜினி.

ரஜினி - ஐஸ்வர்யா தனுஷ்
 
ரஜினி - ஐஸ்வர்யா தனுஷ்

மருத்துவர்கள் தொடர்ந்து பத்து நாட்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என்றும், மன அழுத்தம் ஏற்படும்படி எந்த செயலையும் மேற்கொள்ளவேண்டாம் என்றும் சொல்லியுள்ளார்கள். தேவையேற்பட்டால் சென்னை அப்போலோ மருத்துமவனையில் சிகிச்சையை தொடர்ந்துகொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனால், வீட்டிலேயே தான் ஒய்வு எடுத்துக்கொள்வதாக ரஜினி சொல்லியிருக்கிறார். அதற்கு காரணம் 31-ம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடவேண்டிய நெருக்கடி ரஜினிக்கு இருந்தது.

இந்த சமயத்தில், ரஜினி தனது குடும்பத்தினரிடம் மனம்விட்டு பேசியிருக்கிறார். குறிப்பாக அவரது இரண்டு மகள்களுமே ரஜினி உடல்நிலை குறித்து மிகவும் கவலையடைந்துள்ளார்கள். 28-ம் தேதி காலை தமிழருவி மணியனைத் தொடர்பு கொண்டு கட்சி துவங்கும் பணிகள் எந்த நிலையில் இருக்கிறது என்று வழக்கம்போலவே கேட்டுள்ளார். பூத் கமிட்டி அமைப்பது, மாநாடு உள்ளிட்ட விவரங்களை எல்லாம் பேசியிருக்கிறார்.`

`90 நாள்களில் சாத்தியமா?’

அதன்பிறகு தமிழகத்தின் பிரதானக் கட்சிக்கு ஏற்கனவே தேர்தல் வேலைகள் செய்த ஒரு நிறுவனத்தினை ரஜினி தொடர்பு கொண்டுள்ளார். 90 நாட்களில் கட்சி துவங்கி தேர்தலை சந்திப்பதற்கான வழிமுறைகள் உங்களிடம் உ்ள்ளதா? சமூக வலைத்தளங்களின் மூலம் பிரசாரம் செய்வது எந்த அளவுக்கு சாத்தியம் என்றெல்லாம் பேசியிருக்கிறார். அந்த நிறுவனத்தின் தரப்பிலும் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. அதோடு, முழு பிரசாரத்தையும் சமூகவலைத்தளங்களில் மூலம் மட்டுமே நடத்தினால் அது அனைத்து தரப்பு மக்களிடமும் உங்கள் கருத்துகளை கொண்டு சேர்க்க முடியாது என்று சொல்லியுள்ளார்கள்.

ரஜினி
 
ரஜினி

அன்புக்கு முன் தோற்றுப்போன அரசியல்!

ஆனால், ரஜினியுடன் ஹைதராபாத் சென்ற அவருடைய மகள் ஐஸ்வர்யா “அப்பாவின் உடல்நிலைக்கு கூட்டத்தை கூட்டினாலே சிக்கல் வந்துவிடும். உடல்நலன்தான் இப்போது மிக முக்கியம்” என்று லதா ரஜினியிடமும், சௌந்தர்யாவிடமும் திடமாகச் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு சிறிய மகள் சௌந்தர்யாவும் “இனி எந்த யோசனையும் வேண்டாம். அரசியலுக்கு நோ சொல்லிவிடுங்கள். நீங்கள் நீண்ட காலம் இருந்தாலே எங்களுக்கு போதும்” என்று சொல்லியிருக்கிறார். ஒட்டுமொத்த குடும்பத்தினரும் இதை அழுத்தமாகக் கூறவேதான், அரசியல் வேண்டாம் என்கிற கடினமான முடிவை எடுக்கும் மனநிலைக்கு ரஜினி வந்துள்ளார். இந்த முடிவை அவர் எடுத்தபிறகு தனக்கு நெருக்கமான சோர்ஸ்கள் மூலம் நட்புரீதியாக பிரதமர் மற்றும் அமித் ஷா ஆகியோரின் காதுகளுக்கு விசயத்தை கொண்டு சென்றுவிட்டார். நேற்று இரவே டெல்லி பி.ஜே.பி தரப்புக்கு ரஜினியின் இந்த முடிவு தெரிந்துவிட்டது. அதன்பிறகே அரசியல் கட்சி இல்லை என்கிற மூன்று பக்க அறிக்கை தயாராகியுள்ளது. அந்த அறிக்கை தயாரான விஷயம் 29-ம் தேதி காலை வரை தமிழருவி மணியனுக்கும், அர்ஜுன மூர்த்திக்கும் தெரியவில்லை. வெளியிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாகத்தான் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார் ரஜினி.

ரஜினியின் முடிவு: யாருக்கு நிம்மதி?

அரசியல் என்ட்ரி இல்லை என்று அறிவிப்பு அ.தி.மு.க-வுக்கு ஓருபுறம் நிம்மதியை கொடுத்துள்ளது. தி.மு.க-வுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. காரணம், தி.மு.கவிற்காக தேர்தல் யுக்திகளை செய்துவரும் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் கொடுத்த ரிப்போர்ட் ஒன்றில் “ரஜினி கட்சி துவங்கினால் ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வாக்குகளை நாம் இழக்க நேரலாம்” என்று சொல்லியிருந்தார். இப்போது ரஜினி அரசியலிருந்து ஒதுங்கிவிட்டதால், தங்கள் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தி.மு.க நினைக்கிறது. மற்றொருபுறம் அ.தி.மு.க தரப்பு பா.ஜ.கவுடன் கூட்டணி என்று அறிவித்த பிறகும் பா.ஜ.க வினர் எடப்பாடி முதல்வர் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தனர். அதற்கு காரணம் ரஜினி அரசியல் கட்சி துவக்கினால், அ.தி.மு.க விலிருந்து பலரையும் ரஜினியுடன் இணையவைத்து ரஜினி கட்சியுடன் இணைந்து மெகா கூட்டணி அமைக்க பா.ஜ.க திட்டமிட்டிருந்தது. இதனால் தனது முதல்வர் கனவுக்கு பங்கம் வந்துவிடும் என எடப்பாடி அச்சப்பட்டு வந்தார். இதற்கு இப்போது வாய்ப்பில்லாமல் போனதால் அ.தி.மு.க தரப்பு நிம்மதியுடன் உள்ளது. ஆனால், ரஜினியின் அறிவிப்பினால் நேரடியாக பாதிக்கப்பட்ட கட்சி என்றால் அது பா.ஜ.க மட்டுமே.

ரஜினி - மோடி
 
ரஜினி - மோடி

ஆம்! தமிழகத்தில் வலுவாக பா.ஜ.க காலூன்ற ரஜினி தங்களுக்கு அச்சாரமாக இருப்பார் என்று கணக்குப் போட்டுவந்தார்கள். குறிப்பாக ரஜினி தேர்தலில் வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவியைக்கூட பா.ஜ.க- வுக்கு வாங்கும் எண்ணம் இருந்தது. இப்போது ரஜினியின் அரசியல் கதவு அடைக்கபட்டுவிட்டதால், அ.தி.மு.க அணியிலேயே அவர்கள் தொடரவேண்டிய நெருக்கடி உள்ளது. மேலும் அ.தி.மு.க கொடுக்கும் தொகுதிகளை மட்டுமே பா.ஜ.க வாங்கிக் கொள்ளவேண்டிய நிலை இருக்கிறது. இதனால் கடும் அப்செட்டில் பா.ஜ.க உள்ளது.

ஆனால், ரஜினி ஒரு விதத்தில் நல்லது செய்துள்ளார். அவர் அரசியல் என்ட்ரி அறிவிப்பை வெளியிட்ட பிறகு பல கட்சிகளிலிருந்தும் மூத்த நிர்வாகிகள் ரஜினியுடன் இணைய விருப்பம் தெரிவித்து வந்தனர். அவர்களுக்கு எல்லாம் 31-ம் தேதி வரை காத்திருக்கச் சொல்லி ரஜினி தரப்பிலிருந்து பதில் சென்றது. ஒருவேளை பலரும் ரஜினியுடன் கைகோத்திருந்தால் ரஜினியின் இந்த அறிவிப்பினால் அவர்களது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கும். அந்த வகையில் இந்த அறிவிப்பை மகிழ்வுடனே பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ரஜினியின் அறிவிப்பு வெளியான பிறகு அவருக்கு தி.மு.க தரப்பிலிருந்து ஒரு போன் கால் சென்றுள்ளது. “உங்கள் முடிவுக்கு வாழ்த்துக்கள். உடல்நிலையை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். வருங்காலத்தில் எங்கள் ஆட்சி அமைந்தாலும் உங்கள் ஆலோசனையையும் நாங்கள் கேட்டு செயல்பட தயங்கமாட்டோம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

கொரோனாவின் ஆதிக்கம் கால் நுாற்றாண்டுகால ரஜினியின் அரசியல் காத்திருப்புக்கு முடிவரை எழுதியுள்ளது!

https://www.vikatan.com/government-and-politics/politics/tough-decision-taken-by-rajini-in-last-time

`என்னை எந்த மிரட்டலும் பணியவைக்க முடியாது’ , `இந்திய அரசியலமைப்பை மாற்றணும்’ - ரஜினிகாந்த்

ரஜினி

ரஜினி

கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார்.

தேர்தல் அரசியலுக்கு ரஜினி வருகிறாரா என்பது தொடர்பாக பல்வேறு கட்டுரைகளை விகடன் 80-களிலிருந்து தந்திருக்கிறது. அண்மையில்கூட 1987-களில் வெளியான ஜூனியர் விகடனின் அட்டைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.

ரஜினி
 
ரஜினி

ஜூனியர் விகடனுக்கு ரஜினி அளித்த பேட்டி அது.

அதில் எனக்கு, “என்னை எந்த பிரஷரும் மிரட்டலும் பணியவைக்க முடியாது. நான் யார் பின்னாலும் போகவும் மாட்டேன்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

அந்தப் பேட்டியை விரிவாகப் படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.https://cinema.vikatan.com/tamil-cinema/rajinikanth-has-spoken-about-his-political-entry-in-1987-vikatan-vintage-interview

அரசியலமைப்பை மாற்றணும்!

அதுபோல மற்றொரு பேட்டியில், ``இப்போ அரசியல் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கு. இதுக்கு மருந்து மாத்திரையெல்லாம் பத்தாது. அறுவை சிகிச்சைதான் ஒரே வழி" என கூறியிருக்கிறார்.

ரஜினி
 
ரஜினி

அந்தக் பேட்டியை விரிவாகப் படிக்க: https://www.vikatan.com/tamil-cinema/vikatan-pokkisham-rajinikanth-exclusive-interview

``பெரியாரின் கொள்கைகளில் எனக்கு பிடித்தது...’’

`பெரியாரை ரஜினிகாந்த் விமர்சித்துவிட்டார்' என அண்மையில் ஒரு சர்ச்சை உண்டானது அல்லவா... பெரியாரை ரஜினி பாராட்டிய நிகழ்வுகளும், பெரியாருக்காக மன்னிப்புக் கேட்ட சம்பவமும் வரலாற்றில் உண்டு. அந்த ஃப்ளாஷ்பேக் என்ன?

ரஜினி
 
ரஜினி

``பெரியார் ஒரு விருந்து மாதிரி. அந்த விருந்தில் பலவிதமான பண்டங்கள் இருக்கும். அவரிடம் கடவுள் எதிர்ப்பு கொள்கை மட்டுமா இருக்கிறது...” என ஒரு நிகழ்வில் ரஜினி பேசியிருக்கிறார்.

விரிவாகப் படிக்க: https://www.vikatan.com/news/politics/rajinikanths-affection-on-periyar-a-flashback

`அரசியலுக்கு வர மாட்டார்’ - ஆரூடம் சொன்ன ஆஸ்திரேலிய ஜோதிடர்

ஆன்மிக ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என ஆஸ்திரேலியா ஜோதிடர் ஒருவர் 2011-ம் ஆண்டு ஆரூடம் சொன்னார்.

ஜோதிடர்
 
ஜோதிடர்

அது குறித்து விரிவாகப் படிக்க இன்கே க்ளிக் செய்யுங்கள்

https://www.vikatan.com/oddities/miscellaneous/11536--2

உங்களை மகிழவைப்பதுதான் என்னுடைய லட்சியம்

2011-ம் ஆண்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களுக்கு ஆடியோ மூலம் செய்தி வெளியிட்டுவிட்டு, மேல் சிகிச்சைக்கு சிங்கப்பூர் சென்றார்.

பின்னர் ரசிகர்களுக்கு தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்ர்.

கடிதம்
 
கடிதம்

அந்தக் கடிதத்தை விரிவாகப் படிக்க:

https://www.vikatan.com/news/politics/rajinikanths-political-interviews-a-vintage-collection

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பாலபத்ர ஓணாண்டி சொன்னது தான் நடந்திருக்கிறது

ஓணாண்டி ஒரு தீர்கதரிசி எண்டு எனக்கு அப்பவே தெரியும் 😀

46 minutes ago, உடையார் said:

காலாகாலத்துக்கு தமிழ்நாடும் உலக தமிழ் இனமும் ஐஸ்வர்யா, செளந்தர்யாவுக்கு கடமை பட்டுள்ளது 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா said:

கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார்.

விளக்கமாக மனிசன் அப்பவே சொல்லீட்டார்..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

விளக்கமாக மனிசன் அப்பவே சொல்லீட்டார்..😁

நாஞ்சில் “சம்பத்” தெலுங்கர் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

நாஞ்சில் “சம்பத்” தெலுங்கர் அல்லவா?

ஓம் இருக்கட்டும்...இதாலை என்ன பிரச்சனை?

Link to comment
Share on other sites

ரஜனி அரசியலுக்கு வர மாட்டேன் என அறிவித்து இருப்பது மகிழ்ச்சி.

சினிமாவில் டூப் போட்டு வில்லன்களை பந்தாடுவது போன்று, ஒரே பாட்டில் அம்பானியாகுவது போன்று, சிகரட்டை ஸ்ரைலா தூக்கிப் போட்டு வாயில் கவ்வுவது போன்று அரசியல் ஒன்றும் இலகுவான விசயம் இல்லை என்று இப்பவாவது புரிந்து கொண்டமையிட்டு சந்தோசம்.

வெற்று கதாநாயக பிம்பம் ஒன்றே அரசியலுக்கான தகுதி அல்ல என்று மிகவும் லேட்டாகவாவது உணர்ந்து கொண்டமையிட்டு நன்றி.

ஆனாலும் ஒரே ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது...அரசியலுக்கு வந்து வரும் தேர்தலில் எல்லா இடங்களிலும் டெபாசிட்டும் இழந்து இருந்தால் தான் அவரை தலீவர் என்று நம்பும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு கொஞ்சமாவது யதார்த்தம் உறைத்து இருந்திருக்கும்... இப்ப அதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது எனும் கவலை மட்டும் இருக்கத்தான் செய்கிறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

ஓம் இருக்கட்டும்...இதாலை என்ன பிரச்சனை?

இல்லை ஒரு தமிழர் அல்லாதார், இன்னொருவரை பார்த்து நீ தமிழனா என கேட்பது எனக்கு கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. அவ்வளவுதான்.

31 minutes ago, நிழலி said:

ஆனாலும் ஒரே ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது...அரசியலுக்கு வந்து வரும் தேர்தலில் எல்லா இடங்களிலும் டெபாசிட்டும் இழந்து இருந்தால் தான் அவரை தலீவர் என்று நம்பும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு கொஞ்சமாவது யதார்த்தம் உறைத்து இருந்திருக்கும்... இப்ப அதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது எனும் கவலை மட்டும் இருக்கத்தான் செய்கிறது..

கவலை வேண்டாம் நிழலி,

ரஜனி வராவிட்டால் என்ன, உங்கள் ஆசையை ஒரு முன்னாள் தோல்வி பட இயக்குனரும், ஒரு இன்நாள் வெற்றிப்பட கதாநாயகனும் பூர்த்தி செய்வார்கள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலோ அஜித் சார் ஆ.. நான் தா தமிழருவி மணியன் பேசுரேன்.. கட்சி ஆரம்பிக்கலாமா சார்..?

வெளக்குமாரு பிஞ்சிரும்...

எனக்கே எண்டு காட்டா.. விஜய் சாருக்கு போனை போடுடா... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா கமராவுக்கு  முன் நடிப்பதை  விட கொஸ்பிட்டலில் உண்மையாவே நடிச்ச்சு தல சுத்தி விட்டது ----ரஜனியின் மைண்ட் வாய்ஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

இல்லை ஒரு தமிழர் அல்லாதார், இன்னொருவரை பார்த்து நீ தமிழனா என கேட்பது எனக்கு கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. அவ்வளவுதான்.

ஓம்.....வேடிக்கையான மனிதரும் கூட....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினியின் வீடு முன்பு ரசிகர்கள் தர்ணா!

spacer.png

ரஜினியின் போயஸ் கார்டன் இல்லம் முன்பு அவர் அரசியலுக்கு வரக்கோரி ரசிகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வர வேண்டுமென அழைத்துக் கொண்டு இருந்தனர். ஆனால், அப்போதெல்லாம் அரசியலுக்கு வரும் நிலைப்பாட்டை எடுக்காத ரஜினிகாந்த் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கட்சி ஆரம்பிக்கிறேன் என அறிவித்தார். ஆனால், கடந்த மூன்று வருடங்களாக அதுதொடர்பான பணிகள் நடைபெறவில்லை.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ததால் கொரோனா பாதிப்பு கருதி அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால், மக்களுக்காக உயிரே போனாலும் பரவாயில்லை என அரசியல் கட்சி ஆரம்பிப்பதாகத் தெரிவித்தார் ரஜினி. சமீபத்தில் சீரற்ற ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை கொரோனா தாக்கும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாதென மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்த ரஜினிகாந்த், மக்கள் மன்றம் செயல்படும் எனவும் கூறினார்.

இது தமிழகம் முழுவதும் அவர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தை முற்றுகையிட்ட அவரது ரசிகர்கள், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், அதற்கு ஒத்துழைக்காத ரசிகர்கள், ரஜினிகாந்த் நேரில் வந்து சொல்ல வேண்டும். அப்போதுதான் கலைந்து செல்வோம் என்று கூறி முழக்கம் எழுப்பினர்.

இதேபோல ரஜினியின் அரசியல் முடிவில் அதிருப்தியடைந்த திருச்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பரமசிவம் ஆண்டாள் வீதியிலுள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே ரஜினியின் பேனர்களை எரித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார் தக்கலை நீதிமன்றம் எதிரே டீக்கடை நடத்தி வரும் ரஜினி ரசிகரான நாகராஜன், இன்று கறுப்பு தினம் என வீடியோ வெளியிட்டுள்ளார். தன் கடைக்கு முன்பு ஒட்டப்பட்டிருந்த ரஜினிகாந்தின் பேனரையும் அகற்றி அங்கிருந்து தூரமாக வீசிச் சென்றார்.

https://minnambalam.com/politics/2020/12/29/48/rajini-decision-fans-protest-poes-house

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

ஆனாலும் ஒரே ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது...அரசியலுக்கு வந்து வரும் தேர்தலில் எல்லா இடங்களிலும் டெபாசிட்டும் இழந்து இருந்தால் தான் அவரை தலீவர் என்று நம்பும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு கொஞ்சமாவது யதார்த்தம் உறைத்து இருந்திருக்கும்... இப்ப அதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது எனும் கவலை மட்டும் இருக்கத்தான் செய்கிறது..

எனக்கும் அந்தக் கவலையுடன்....

சேர்த்த காசை.... அரசியலில் தொலைத்து, விட்டு ஒட்டாண்டியாய் நிற்பதை பார்க்க முடியவில்லையே என்ற கவலையும் உள்ளது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

எனக்கும் அந்தக் கவலையுடன்....

சேர்த்த காசை.... அரசியலில் தொலைத்து, விட்டு ஒட்டாண்டியாய் நிற்பதை பார்க்க முடியவில்லையே என்ற கவலையும் உள்ளது. 😁

யாரு? ரஜனி? காசை? தொலைத்துவிட்டு?🤣

ஹெலிஹாப்டர் வாடகை இன்னும் வரலியாம்🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

யாரு? ரஜனி? காசை? தொலைத்துவிட்டு?🤣

ஹெலிஹாப்டர் வாடகை இன்னும் வரலியாம்🤪

ஒரு வரியில்.... நாலு கேள்விக்குறி வந்ததைப் பார்த்து....

ரஜனியா... கொக்கா... என்று எனக்கே  சந்தேகம் வந்திட்டுது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:
spacer.png

ரஜினியின் போயஸ் கார்டன் இல்லம் முன்பு அவர் அரசியலுக்கு வரக்கோரி ரசிகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

என்னப்பா  ஒட்டுமொத்த தமிழ் நாடே திரண்டு பிரண்டு வந்து நிக்குது? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

1 hour ago, கிருபன் said:

இவர்களை பார்த்தால் உண்மையான ரசிகர்கள் மாதிரி தெரியவில்லை 
அவரை வேண்டுமென்றே இழுத்து வீதியில் விட்டு பகிடி பார்க்க வந்த 
கூட்டம் போல தான் இருக்கிறது .. அவர்கள் பேசும் பேச்சு உண்மையாக 
தெரியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மாண்புமிகு ரஜனிகாந்த் தன் உடல்நலம் கருதி முதல்வராக  வாராவிட்டாலும் பரவாயில்லை. தனது வாரிசையாகவது முதல்வராக நியமிக்க கூடாதா என அடியார்கள் ஏங்கிய வண்ணம் உள்ளனர்.😎

சும்மா  சிரிக்க...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலு படம் ஓடியவுடன் முதல்வர் கனவில் திரியும் சைத்தான்களுக்கு  இவரின் முடிவு நல்ல அடி .

இவர் அரசியலுக்கு வேணுமென்றால் கருணாநிதி இருந்த காலத்தில் வந்திருந்தால் ஒன்னிரண்டு  ஸீட் ஆவது கிடைத்து இருக்கும் இது சீமான் காலம் வந்தால் கழு ஏற்றம்தான் .

Link to comment
Share on other sites

13 hours ago, goshan_che said:

இல்லை ஒரு தமிழர் அல்லாதார், இன்னொருவரை பார்த்து நீ தமிழனா என கேட்பது எனக்கு கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. அவ்வளவுதான்.

கவலை வேண்டாம் நிழலி,

ரஜனி வராவிட்டால் என்ன, உங்கள் ஆசையை ஒரு முன்னாள் தோல்வி பட இயக்குனரும், ஒரு இன்நாள் வெற்றிப்பட கதாநாயகனும் பூர்த்தி செய்வார்கள் 🤣

நாங்கள் எல்லோரும் தமிழர் இல்லை என எங்கோ  ஆய்வு செய்தது (தாங்கள்) தெரியாதோ??  50 வீதம் பெண்களை வேட்பாளர்களை நிறுத்தியதே உலக வெற்றி தான். வெற்றியை பற்றி பிறகு யோசிக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.