Jump to content

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை அபகரிக்க பௌத்த பிக்கு முயற்சி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை அபகரிக்க பௌத்த பிக்கு முயற்சி

December 29, 2020
1-163-696x392.jpg

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு அபகரிக்க முயற்சித்து வருகின்றார்.

இந்நிலையில்,வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று  குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது.

குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது. இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெயர்வு காரணமாக இராணுவம் அவ் இடத்தில் நிலை கொண்டது. அதன் பின்னர் குறித்த காணி திருக்கேதீச்சர ஆலயத்திடம் மீளவும் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவ்விடத்தில் அமைக்கப்பட் விகாரை ஆலய காணியிலும் தனியார் காணியிலும் அமைக்கப்பட்டிருந்தது.

மிகுதி காணி ஆலய நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து. இந் நிலையில் கடந்த தினங்களாக விகாரையில் பிக்கு மிகுதி காணியை அபகரிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்வில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகம் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து இன்றைய தினம் குறித்த பகுதிக்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர்,குறித்த காணி அபகரிப்பு தொடர்பாக துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

இதன் போது மன்னார் பொலிஸார், ஆலய நிர்வாகத்தினர், ஆலய பிரதம குரு ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/?p=38095

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்டையில் உள்ள இந்துத்துவா அரசு இதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. மாறாக பெளத்தம் செழிக்க பணப்பட்டுவாடா செய்கிறது.. சிங்களத்துக்கு.

கூடவே எட்ட உள்ள சீனனும்.. தானும் புத்தன் தேசம் என்று கொட்டிக்கொடுக்கிறான்.

ஆக தமிழன்.. அவன் இந்து என்றால்.. என்ன.. கிறிஸ்தவன் என்றால்.. என்ன.. பெளத்தன் என்றால் என்ன... அடக்கி ஆளப்படும்.. அடிமை தான் என்பது தெற்காசியாவில் எழுதாத விதி ஆகிவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சியரை கூப்பிடுங்கோ, அவர் பார்த்துக்கொள்வார். அரசை விழுந்து, புகழ்ந்து கொண்டாடினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

சச்சியரை கூப்பிடுங்கோ, அவர் பார்த்துக்கொள்வார். அரசை விழுந்து, புகழ்ந்து கொண்டாடினார்.

 திருக்கேதீச்சர வளைவு அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில  துவக்கோட முன்னுக்கு நிண்டு அடியடா, வெட்டடா, பிடியடா, கட்டிவையடா என முழங்கிய எங்கட யாழ்கள சமயக் காவலர்களில் பலர் இந்தப் பக்கம் எட்டியும் பார்க்கேல்ல.. 😂

உவங்களத் தேடுறதுல சச்சியர எங்க தேடிப் பிடிக்கிறது... 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Kapithan said:

 திருக்கேதீச்சர வளைவு அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில  துவக்கோட முன்னுக்கு நிண்டு அடியடா, வெட்டடா, பிடியடா, கட்டிவையடா என முழங்கிய எங்கட யாழ்கள சமயக் காவலர்களில் பலர் இந்தப் பக்கம் எட்டியும் பார்க்கேல்ல.. 😂

உவங்களத் தேடுறதுல சச்சியர எங்க தேடிப் பிடிக்கிறது... 😂😂

சமயம் இப்ப எங்கை சமயமாய் இருக்குது? எல்லாம் அரசியல் , இனவாதம். ஒழுங்கான அரசியல் வர சமயங்களும் ஒழுங்காய் வரும். 
இன்னொன்றை அழித்து வாழ்ந்தவன் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

 திருக்கேதீச்சர வளைவு அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில  துவக்கோட முன்னுக்கு நிண்டு அடியடா, வெட்டடா, பிடியடா, கட்டிவையடா என முழங்கிய எங்கட யாழ்கள சமயக் காவலர்களில் பலர் இந்தப் பக்கம் எட்டியும் பார்க்கேல்ல.. 😂

உவங்களத் தேடுறதுல சச்சியர எங்க தேடிப் பிடிக்கிறது... 😂😂

சச்சியர் .. 

IMG-20201230-103444.jpg அண்ணை என்ன கதைச்சிட்டு போறார் தெரியுமா.? றோட்டலா எல்லாத்தையும் மூட சொல்லுறார் ..☺️..😊

Link to comment
Share on other sites

8 hours ago, Kapithan said:

 திருக்கேதீச்சர வளைவு அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில  துவக்கோட முன்னுக்கு நிண்டு அடியடா, வெட்டடா, பிடியடா, கட்டிவையடா என முழங்கிய எங்கட யாழ்கள சமயக் காவலர்களில் பலர் இந்தப் பக்கம் எட்டியும் பார்க்கேல்ல.. 😂

உவங்களத் தேடுறதுல சச்சியர எங்க தேடிப் பிடிக்கிறது... 😂😂

20 hours ago, கிருபன் said:

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை அபகரிக்க பௌத்த பிக்கு முயற்சி

December 29, 2020
1-163-696x392.jpg

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு அபகரிக்க முயற்சித்து வருகின்றார்.

இந்நிலையில்,வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று  குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது.

குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது. இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெயர்வு காரணமாக இராணுவம் அவ் இடத்தில் நிலை கொண்டது. அதன் பின்னர் குறித்த காணி திருக்கேதீச்சர ஆலயத்திடம் மீளவும் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவ்விடத்தில் அமைக்கப்பட் விகாரை ஆலய காணியிலும் தனியார் காணியிலும் அமைக்கப்பட்டிருந்தது.

மிகுதி காணி ஆலய நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து. இந் நிலையில் கடந்த தினங்களாக விகாரையில் பிக்கு மிகுதி காணியை அபகரிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்வில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகம் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து இன்றைய தினம் குறித்த பகுதிக்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர்,குறித்த காணி அபகரிப்பு தொடர்பாக துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

இதன் போது மன்னார் பொலிஸார், ஆலய நிர்வாகத்தினர், ஆலய பிரதம குரு ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/?p=38095

இங்கு நான் முன்னரும் எழுதி இருந்தேன். இப்போது அதுவும் நடக்கப்போகிறது. அதாவது இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த காணிகளில் இருந்து பவுத்த சின்னங்கள் வெளிவரப்போகின்றது. அதாவது அங்கு பவுத்தர்கள் வாழ்ந்த இடமாக்கப்போகிறார்கள்.  எனவே என்னதான் சொன்னாலும்,செய்தாலும் அவர்கள் தீர்மானித்தபடியே நடக்கபோகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

சமயம் இப்ப எங்கை சமயமாய் இருக்குது? எல்லாம் அரசியல் , இனவாதம். ஒழுங்கான அரசியல் வர சமயங்களும் ஒழுங்காய் வரும். 
இன்னொன்றை அழித்து வாழ்ந்தவன் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை.

ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை எனும் கதை இது.

நாங்கள் சரியாயிருந்தால் பிறத்தியான் எப்படி உள்ளுக்கு  வர முடியும்... 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை எனும் கதை இது.

நாங்கள் சரியாயிருந்தால் பிறத்தியான் எப்படி உள்ளுக்கு  வர முடியும்... 🤥

நாங்கள் சரியாகத்தான் இருக்கின்றோம். பலம் மட்டுமே ஒடிக்கப்பட்டு விட்டது.மற்றவனுடையதை தட்டிப்பறிக்கும் குணம் தமிழர்களுக்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நாங்கள் சரியாகத்தான் இருக்கின்றோம். பலம் மட்டுமே ஒடிக்கப்பட்டு விட்டது.மற்றவனுடையதை தட்டிப்பறிக்கும் குணம் தமிழர்களுக்கு இல்லை.

தம்ழர்கள் தங்களுக்குள் சாதி சமயம் பிரதேசம் எனப் பிரிந்திருக்காவிட்டால் எங்களிடத்தில் வேறு எவனும் வந்து குந்தியிருக்க முடிந்திராது. 👍

அண்ணை ..குறை நினைக்கப்படாது
JCB விட்டு தேர் இழுத்தத்தை  என்னவென்று சொல்கிறீர்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

தம்ழர்கள் தங்களுக்குள் சாதி சமயம் பிரதேசம் எனப் பிரிந்திருக்காவிட்டால் எங்களிடத்தில் வேறு எவனும் வந்து குந்தியிருக்க முடிந்திராது. 👍

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை ..குறை நினைக்கப்படாது
JCB விட்டு தேர் இழுத்தத்தை  என்னவென்று சொல்கிறீர்கள்  

அதுக்குத்தானே சொல்கிறேன் அந்த பலம் இருந்திருந்தால் உந்த கண்ட களிசறைகள் தலை தூக்கியும் இருக்காது. இன்றைய நாளைய சந்ததிகளோடு ஊத்தைகள் அழிக்கப்பட்டிருக்கும்.

Link to comment
Share on other sites

18 hours ago, குமாரசாமி said:

சமயம் இப்ப எங்கை சமயமாய் இருக்குது? எல்லாம் அரசியல் , இனவாதம். ஒழுங்கான அரசியல் வர சமயங்களும் ஒழுங்காய் வரும். 
இன்னொன்றை அழித்து வாழ்ந்தவன் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை.

மதங்கள் உருவாகியது  மனிதரை நல்வழிபடுத்த என்று புலுடா விடுவார்கள். இப்ப மக்கள் தங்கள் சுய அறிவில் நல்லவர்களாக இருந்தால் மதத்தை காப்பற்றலாம்  கூறுகிறார்கள். அதிகளவு intensive ஆக மதப்பற்று உடையவர்கள்  இனவாதிகளாக தான் இருப்பாரகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை ..குறை நினைக்கப்படாது
JCB விட்டு தேர் இழுத்தத்தை  என்னவென்று சொல்கிறீர்கள்  

அக்னி,

உந்த JCB தேர் இழுத்த கோஸ்ரிக்கு ஒரு மண்ணாங்கட்டி மதப்பற்றும் கிடையாது. தங்கடை ஊத்தையளை மறைக்கிறதுக்காக அப்பிடி காட்டிக்கொள்ளுகினம்(உள்ளதுக்கையே எல்லா குப்பை வேலையையும் இவை தான் செய்வினம் அதுக்கு யாரை தேர் இழுக்க விடேலையோ அவையின்டை உதவியொடை தான் எல்லா வேலையும் செய்வினம்). வெளிப்பார்வையை மட்டும்நம்பாதேங்கோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, வாதவூரான் said:

""பண்டார வெடியள்"" என்கிறீர்..... ம்ம்...ம்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அதுக்குத்தானே சொல்கிறேன் அந்த பலம் இருந்திருந்தால் உந்த கண்ட களிசறைகள் தலை தூக்கியும் இருக்காது. இன்றைய நாளைய சந்ததிகளோடு ஊத்தைகள் அழிக்கப்பட்டிருக்கும்.

நீங்கள் சொல்லும் பலம் இயற்க்கையின் வளியில் இல்லாது போய் இரந்தாலும் அதுக்குப்பிறகும் இந்தக் குப்பைகள் தலை துக்கியிருக்கும்.அது தான் தமிழர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

மதங்கள் உருவாகியது  மனிதரை நல்வழிபடுத்த என்று புலுடா விடுவார்கள்

உண்மை, நீதி உள்ளத்தில்  இருந்தால் எந்த மதமும் தேவையில்லை. அது இல்லையாயின் எந்த மதமும் அதை உருவாக்காது. உள்ளதை, உள்ளத்தை மெருகூட்டவே மதம் பயன்படும் என்பது எனது அனுபவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் சொல்லும் பலம் இயற்க்கையின் வளியில் இல்லாது போய் இரந்தாலும் அதுக்குப்பிறகும் இந்தக் குப்பைகள் தலை துக்கியிருக்கும்.அது தான் தமிழர்.

 குணங்கள் பிறக்கேக்கையே ஒட்டிப்பிறந்தது. இப்ப பாருங்கோ நான் வெளிநாட்டிலை வாழ்ந்தாலும் என்ரை வேலை குசினியர் வேலை. ஆனால் வெளிநாட்டிலை எங்களைப்போலை வாழுற எங்கடை எஞ்சினியர்மார் எக்கவுண்டன்மார் ஆபிஸ்லை வேலை செய்யிறவையள் ரெஸ்ரோரன்னிலை வேலை செய்யிற என்னைப்போல ஆக்களை மதிக்க மாட்டினம்.கோப்பை கழுவுற எண்டொரு நக்கல் பார்வையும் இருக்கு. இவையெல்லாம் ஊரிலை தொழில் ரீதியாய் இருக்கிற சாதிக்காரரை எப்பிடி மதிப்பினம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

செய்யுந்தொழிலே தெய்வம் பாருங்கோ! அதுதான் நமக்கு சோறு போடும் அதில் நிறைவு காணுங்கள். இதுக்கெல்லாம் காதுகொடுத்தால் நீங்கள் ஒரு வேலையும் செய்து தன்மானமாக வாழ முடியாது. தன்னில் குறை உள்ளவனே மற்றவனை கூர்ந்து கவனிப்பான். வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகமிது. இதை நிறைவு செய்ய இறைவனாலும் முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, satan said:

நீங்கள் சிம்பிளாய் சொல்லீட்டியள்.நான் இஞ்சை யாழ்களத்திலை ஹொட்டல்லை வேலையிறன் எண்டு சொல்ல கோப்பை கழுவுறவர் எண்டு சொல்லி  நக்கலடிச்சவையள்..
அது இப்பவும் பழைய யாழ்கள பதிவுகளிலை இருக்கு. அதுக்குப்பிறகுதான் நான் மற்ற ஆக்களை நக்கலடிக்க வெளிக்கிட்டனான்.அதுக்கு பரிசு சிவப்பு புள்ளியும் ஒரு சில தடைகளும்...:(

நக்கலடிக்கிறவைக்கு பதில் சொல்ல வெளிக்கிட்டால், நீங்கள் ஒன்றும் உருப்படியாய் செய்யவோ, முன்னேறவோ  மாட்டீர்கள்.  நாளடைவில் உங்களையறியாமல்  அவர்களாகவே நீங்கள்  மாறிவிடுவீர்கள். இன்னொருவர் உங்களின் நக்கலால் பாதிப்படையக்கூடும். மாறாக தள்ளி நின்று பாருங்கள்:  அந்தக்கூட்டம் அதே இடத்தில் இன்னும்  இருந்து கொண்டு வேறொருவருக்கு நக்கலடித்துக்கொண்டு இருக்கும். அவர்களது தொழிலது. உங்கள் தொழிலில் முன்னேறவேண்டுமானால்: உங்கள் தொழிலை நீங்கள் மதியுங்கள்,  நேசியுங்கள், பிரமாணிக்கமாய்ச் செய்யுங்கள், உங்கள் சந்ததியை முன்னேற்றுங்கள், நீங்கள் கடந்துவந்த பள்ளம் மேடுகளை அவர்களுக்கு சொல்லி  மற்றவரையும் அவர்தம் தொழிலையும் மதிக்க கற்றுக்கொடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2020 at 18:36, குமாரசாமி said:

 குணங்கள் பிறக்கேக்கையே ஒட்டிப்பிறந்தது. இப்ப பாருங்கோ நான் வெளிநாட்டிலை வாழ்ந்தாலும் என்ரை வேலை குசினியர் வேலை. ஆனால் வெளிநாட்டிலை எங்களைப்போலை வாழுற எங்கடை எஞ்சினியர்மார் எக்கவுண்டன்மார் ஆபிஸ்லை வேலை செய்யிறவையள் ரெஸ்ரோரன்னிலை வேலை செய்யிற என்னைப்போல ஆக்களை மதிக்க மாட்டினம்.கோப்பை கழுவுற எண்டொரு நக்கல் பார்வையும் இருக்கு. இவையெல்லாம் ஊரிலை தொழில் ரீதியாய் இருக்கிற சாதிக்காரரை எப்பிடி மதிப்பினம்?

அண்ணை

எல்லார் வீட்டிலும், ரெஸ்ரோரெண்ட்டிலும் யாரோ ஒரு குசினியர் இல்லாட்டில் உலகமே பட்டினி படுக்க வேண்டியதுதான்,வெளி நாட்டில் இருந்து கொண்டுமா இதையும் தூக்கி வைத்துக் கொண்டு திரியினம்..?, மொரட்டுவையில் எஞ்சினியரிங் படித்து விட்டு வெளிநாட்டிற்கு வந்து KFC கோழி பொரித்தவர்களும் உண்டு, தூக்கி கடாசி விட்டு நடையை கட்டுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை

எல்லார் வீட்டிலும், ரெஸ்ரோரெண்ட்டிலும் யாரோ ஒரு குசினியர் இல்லாட்டில் உலகமே பட்டினி படுக்க வேண்டியதுதான்,வெளி நாட்டில் இருந்து கொண்டுமா இதையும் தூக்கி வைத்துக் கொண்டு திரியினம்..?, மொரட்டுவையில் எஞ்சினியரிங் படித்து விட்டு வெளிநாட்டிற்கு வந்து KFC கோழி பொரித்தவர்களும் உண்டு, தூக்கி கடாசி விட்டு நடையை கட்டுங்கள்

நீங்க வேற நம்ம சனம் குத்தி கதைக்காவிட்டால் அன்றைய சோறு இறங்காது  ,இப்பெல்லாம் இங்க சாதி கொஞ்சமாக ஊற்றெடுக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2020 at 21:36, குமாரசாமி said:

கோப்பை கழுவுறவர் எண்டு சொல்லி  நக்கலடிச்சவையள்

கோப்பை கழுவுதல் தொடங்கி இருக்கலாம். குறை ஒன்றும் இல்லை.

ஆனால் இப்போதும் கோப்பை கழுவுதல் மட்டும் வேலையை நீங்கள் செய்யவில்லைத்  தானே?

பணத்தின்  பக்கம் இல்லாவிட்டாலும், ரெஸ்ட்ருண்டில் எந்த நாளுக்கு எந்த உணவுகள், கிழமைக்கு எவ்வளவு உணவுகள் விற்கப்படும் என்பதை உங்களால் சொல்லமுடியும் தானே.

நீங்கள் ஹெட் செஃப் இல்லாவிட்டால், புது cuisine அறிமுகம் அல்லது இருப்பதாய் மாற்றுவதற்கு, உங்களிடம் கருத்து கேட்டு, ருசிக்கவும் அழைப்புக்கு இருக்கும்    என்றால், நீங்கள் சிறப்பு தேர்ச்சி அடைந்து விட்டீர்கள்.  

ஆனால்,restraunt இல் நீங்கள் வருந்தி (suffer) வேலை செய்வதாக காட்ட வேண்டும், இல்லாவிட்டால் நீங்கள் நன்றாக வேலை செய்கிறீர்கள் இல்லை என்று கருதப்படும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2020 at 16:36, குமாரசாமி said:

நீங்கள் சிம்பிளாய் சொல்லீட்டியள்.நான் இஞ்சை யாழ்களத்திலை ஹொட்டல்லை வேலையிறன் எண்டு சொல்ல கோப்பை கழுவுறவர் எண்டு சொல்லி  நக்கலடிச்சவையள்..
அது இப்பவும் பழைய யாழ்கள பதிவுகளிலை இருக்கு. அதுக்குப்பிறகுதான் நான் மற்ற ஆக்களை நக்கலடிக்க வெளிக்கிட்டனான்.அதுக்கு பரிசு சிவப்பு புள்ளியும் ஒரு சில தடைகளும்...:(

நீங்கள் சொல்லீட்டியள், 

இஞ்ச கனபேர் வெளியால சொல்ல விரும்பாயீனம். ஏனெண்டா கெளரவக்  குறைச்சலாம். என்னயும் சேர்த்துத்தான் சொல்லுறன். இஞ்ச வந்த நாலாம் நாள் நான் கோப்ப கழுவப் போட்டன்(😎). உடன நான் செய்த முதல் வேல, அதப் போட்டோ எடுத்து அம்மாவுக்கு அனுப்பினதுதான்

ஏனெண்டா அப்பத்தானே அங்க இருக்கிற ஆக்களுக்கு காசோட அரும தெரியும்(இது எப்பிடி இருக்கு 😂)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது க‌ருத்து க‌ணிப்பு கிடையாது க‌ருத்து தினிப்பு 6.60 கோடி வாக்காள‌ர் இருக்கும் த‌மிழ் நாட்டில் சும்மா ஒரு சில‌ தொகுதியில் போய் ம‌க்க‌ளை ச‌ந்திச்சு விட்டு இவ‌ர்க‌ள் க‌ண்ட‌ மேனிக்கு த‌ந்தி தொலைக் காட்சி அடிச்சு விடும்.......................இந்த‌ க‌ருத்து தினிப்பு யூன் 4ம் திக‌தி தெரியும்  எவ‌ள‌வு பொய்யான‌து என்று ம‌க்க‌ளை குழ‌ப்பி த‌ங்க‌ளுக்கு பிடிச்ச‌ க‌ட்சிக‌ளுக்கு ஆதார‌வாய் போடுவ‌து தான் இவ‌ர்க‌ளின் வேலை வேண்டின‌ காசுக்கு ந‌ல்லா கூவ‌த்தானே வேணும் அதை இவ‌ர்க‌ள் ந‌ல்லா செய்யின‌ம்................... இந்த‌ க‌ருத்து க‌ணிப்பு எல்லா தேர்த‌லும் பொய்த்து போன‌து இதை தெரியாம‌ நீங்க‌ள் ச‌ந்தோஷ‌ ப‌டுவ‌தை பார்க்க‌ சிரிப்பு வ‌ருது😁 இவ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌ தேர்த‌ல்க‌ளில்  வெளியிட்ட‌ க‌ருத்து க‌ணிப்புக‌ளில் ஏதாவ‌து ஒன்று ச‌ரி வ‌ந்த‌தை உங்க‌ளால் காட்ட‌ முடியுமா........................ இள‌ம்த‌லைமுறை பிள்ளைக‌ள் க‌ழுவி க‌ழுவி ஊத்துதுக‌ள் இந்த‌ க‌ருத்து க‌ணிப்பை பார்த்து😂😁🤣....................................
    • இலங்கைக்கு பயணிக்கும் ரிக்கற் விலை அனேகமாக இருமடங்காகிவிட்டது ஆனாலும் மேற்குலக நாட்டு துரைமார்கள் இந்த வருடம் ஓகஸ்ட்டில் சுற்றுலா பயனம் செய்து  இலங்கையை  மேலும் வெற்றியடைய திட்டமிட்டிருக்கின்றார்கள்.
    • ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற   நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.