Jump to content

எனது பார்வையில் 2020ஆம் ஆண்டு

Recommended Posts

2020; இந்த ஆண்டைப் பலர் சாபமான ஓர் ஆண்டாகவே நினைக்கிறோம். உலகளாவிய ரீதியில் சிறந்த ஆண்டாக இது அமையாவிட்டாலும், பலருக்கு இவ்வாண்டு ஓர் restart / reset / pause buttonகளாகவே அமைந்திருக்கிறது எனக் கூறலாம்; எதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறோம் எனத் தெரியாமல் ஓடியவர்களை நின்று நிதானமாகச் சிந்திக்கவும், ஓடும் நோக்கத்தை, பாதைகளை தமக்குகந்தவாறு  மாற்றியமைக்கவும் உகந்த ஆண்டாக இந்த 2020அமைந்திருக்கிறது. 

இன்னும் பலருக்கு மறந்துபோன நம் கலை, கலாசார விழுமியங்களை, வாழ்க்கை முறைகளைத் தூசி தட்டி மீண்டும் அதிசய உணர்வோடும், ஆர்வத்தோடும் அனுபவித்தும், செயற்படுத்தியும் பார்க்கும் ஆண்டாக இது அமைந்திருக்கிறது; தாய்மண்ணை விட்டுப் பிரிந்த ஒருவர் மீண்டும் வந்து தாய்மண்ணின் வாசனையை குதூகலத்துடன் நுகரும் அனுபவம் போன்றது இது; அந்த மகிழ்ச்சிக்கு ஈடேது!

இன்னும், பொருட்களை நுகரும் இன்பத்திலும் மனித உறவுகளுடனான ஆரோக்கியமான தொடர்பு தரும் இன்பமே பேரின்பம் என மீண்டும் பல வருடங்களுக்குப் பின்னர் உணர்த்திய ஆண்டும் இதுவே. எனினும், இன்னோர் விதத்தில் பொருள்சார் உலகின் நிலையற்ற தன்மையையும் பல்வேறு நிகழ்வுகள் மூலம் மீண்டும் வலியுறுத்திய ஆண்டும் இதுவே! 

இவ்வாறான நிலையற்ற உலகையும், எல்லா உயிர்களையும் தன் பேராற்றலால் ஆட்டுவிக்கும் நிலையான ஓர் மாபெரும் சக்தியையே இறைவன் எனக் கூறுகிறோம் என்பதையும், அந்த சக்தியையே நம் கலாசாரம், வாழ்க்கை முறை, பக்குவநிலை போன்ற அம்சங்களைப் பொறுத்து பல்வேறு மதக் கூறுகளாகத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம் என்பதையும் மீண்டும் பலமாக இடித்துரைத்த ஆண்டும் இந்த 2020ஏ. 

எம்மை நேர்வழிப்படுத்த முன்னோர்கள் அமைத்த பல்வேறு பாதைகளே இந்த மதங்கள் என்பதையும், நம் உன்னத இலக்கை நோக்கி ரசனையுடன் அவரவர் பாதைகளில் பயணிக்காமல் அதில் குப்பைகளை வீசியும், சாலை விதிகளை மீறியும், பிற பாதைகள் பற்றி விமர்சித்தலுமே சாலை விபத்துக்கள் போலாம் மதச்சண்டைகளாம் என்பதையும் உணர்த்தியது இவ்வாண்டு. 

எனினும், இப்பாதைகளில் பயணம் செய்து பழகிய பின்னர் ஒரு கட்டத்தில் இறைவனை உணர இப்பாதைகளில் மட்டும் பயணம் செய்ய வேண்டியதில்லை என்றும், நீ இருக்கும் இடத்திலேயே, ஏன் உனக்குள்ளேயே அந்த இறைவன் இருக்கிறான் என்பதை மீண்டும் தெளிவாக உணர வைத்ததும் இந்த 2020ஏ. கூடவே மதம் எனும் பாதை இல்லாமலேயே பல ஞானியர் நம் கற்பனைக்கெட்டாத வேறு பல மார்க்கங்கள் மூலம் அந்தப் பேராற்றலை உணர்ந்தும், அடைந்தும் இருப்பரோ எனவும் சிந்திக்க வைத்தது இவ்வாண்டு. 

இறுதியாக, ஆன்மீகமும் நம் வாழ்வை நெறிப்படுத்த நமக்கு அவசியமான ஓர் அறிவியலே என்றும், நம் வாழ்க்கைப் படிநிலைகளுக்கும், பக்குவத்துக்கும் ஏற்ப அந்த அறிவை வளர்க்கவும், அதன் மூலம் பயன் பெறவும் முடியும் என்றும் உணர்த்தியது இந்த 2020. அந்த அறிவியலில் முதிர்ச்சி பெற்றவன் ஆசை துறந்து உலகை வெல்லும் ஞானியாகிறான் என்பதையும், அதில் குழந்தை போலப் பாடம் பயில்பவன் இங்கே யாழில் எழுதிக்கொண்டிருக்கிறான் என்பதையும், இடைப்பட்ட நிலையில் பலர் ஆன்மீக வழியில் இவ்வுலக வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர் என்பதையும் இந்த ஆண்டு எனக்கு உணர்த்தியது. 

மொத்தத்தில் என் பார்வையில் 2020ஆம் ஆண்டு ஓர் சாபமல்ல; வரமே! வரமே!! வரமே!!! 😊

நன்றி 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மல்லிகை வாசம் said:

மொத்தத்தில் என் பார்வையில் 2020ஆம் ஆண்டு ஓர் சாபமல்ல; வரமே! வரமே!! வரமே!!! 😊

மரணங்களும் கெடுபிடிகளும் இருந்தாலும் இயற்கை இந்த உலகை கொரோனா மூலம் சீரமைக்கின்றது என்றே நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.
உங்கள் கட்டுரைக்கு நன்றி மல்லைகைவாசம்.👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலர் வீடுகளில் “சும்மா” இருக்கினம் போலுள்ளது. 2020 இல்தான் நான் அதிகநேரம் ஓய்வொழிச்சல் இல்லாமல் வேலை செய்திருக்கின்றேன்.  

லொக்டவுன் வந்தபோது வீட்டிலிருந்து வேலை என்பதால் மூன்று மணிநேரம் மிச்சப்படும் என்பதால் நிறையப் படிக்கலாம், புதிய skills பழகலாம், மத்தியானம் ஒரு மணித்தியாலம் நடை பயிலலாம் என்று எல்லாம் கணக்குப்போட்டிருந்தேன். ஆனால் 10 நிமிஷம் சாப்பிடவே நேரம் கிடைக்காத வேலையாகப் போய், weekend இலும் சில தடவைகள் வேலை செய்யவேண்டியாகிவிட்டது. Work-life balance தொலைந்த வருடம் இதுதான். லீவு எடுத்துத்தான் வேலையில் இருந்து விடுபட முடிந்தது. இப்ப லீவில் நின்றாலும் வாட்ஸப்புக்களாலும் உதவிகேட்டு வரும்போது செய்யவேண்டியதாக உள்ளது!

புது வருஷம் வக்சீன் போட்டு, புதுவேலை தேடுவதுதான் நோக்கம். 

Link to comment
Share on other sites

14 hours ago, குமாரசாமி said:

மரணங்களும் கெடுபிடிகளும் இருந்தாலும் இயற்கை இந்த உலகை கொரோனா மூலம் சீரமைக்கின்றது என்றே நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.
உங்கள் கட்டுரைக்கு நன்றி மல்லைகைவாசம்.👍🏽

உண்மை தான் அண்ணை. அந்த இயற்கை தான் கடவுள் என்பது சரி தான் போலும். நன்றி அண்ணை. 😊

Link to comment
Share on other sites

12 hours ago, கிருபன் said:

2020 இல்தான் நான் அதிகநேரம் ஓய்வொழிச்சல் இல்லாமல் வேலை செய்திருக்கின்றேன்.  

லொக்டவுன் வந்தபோது வீட்டிலிருந்து வேலை என்பதால் மூன்று மணிநேரம் மிச்சப்படும் என்பதால் நிறையப் படிக்கலாம், புதிய skills பழகலாம், மத்தியானம் ஒரு மணித்தியாலம் நடை பயிலலாம் என்று எல்லாம் கணக்குப்போட்டிருந்தேன். ஆனால் 10 நிமிஷம் சாப்பிடவே நேரம் கிடைக்காத வேலையாகப் போய், weekend இலும் சில தடவைகள் வேலை செய்யவேண்டியாகிவிட்டது. Work-life balance தொலைந்த வருடம் இதுதான்.

IT துறையில் இருக்கும் எனது சில நண்பர்கள் நீங்கள் எழுதியது போலவே சொன்னார்கள். அலுவலகத்தில் போய் வேலை செய்த காலங்கள் இதைவிடப் பரவாயில்லை என்கிறார்கள். திடீர் மாற்றத்துக்கு ஈடுகொடுக்க முடியாத சூழ்நிலை தான் இவ்வாறான அழுத்தங்களுக்குக் காரணமோ தெரியவில்லை. 

நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லி வேல இல்லை.....மிகச்சிறப்பான கட்டுரை மல்லிகை......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/12/2020 at 12:37, மல்லிகை வாசம் said:

2020; இந்த ஆண்டைப் பலர் சாபமான ஓர் ஆண்டாகவே நினைக்கிறோம். உலகளாவிய ரீதியில் சிறந்த ஆண்டாக இது அமையாவிட்டாலும், பலருக்கு இவ்வாண்டு ஓர் restart / reset / pause buttonகளாகவே அமைந்திருக்கிறது எனக் கூறலாம்; எதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறோம் எனத் தெரியாமல் ஓடியவர்களை நின்று நிதானமாகச் சிந்திக்கவும், ஓடும் நோக்கத்தை, பாதைகளை தமக்குகந்தவாறு  மாற்றியமைக்கவும் உகந்த ஆண்டாக இந்த 2020அமைந்திருக்கிறது. 

இன்னும் பலருக்கு மறந்துபோன நம் கலை, கலாசார விழுமியங்களை, வாழ்க்கை முறைகளைத் தூசி தட்டி மீண்டும் அதிசய உணர்வோடும், ஆர்வத்தோடும் அனுபவித்தும், செயற்படுத்தியும் பார்க்கும் ஆண்டாக இது அமைந்திருக்கிறது; தாய்மண்ணை விட்டுப் பிரிந்த ஒருவர் மீண்டும் வந்து தாய்மண்ணின் வாசனையை குதூகலத்துடன் நுகரும் அனுபவம் போன்றது இது; அந்த மகிழ்ச்சிக்கு ஈடேது!

இன்னும், பொருட்களை நுகரும் இன்பத்திலும் மனித உறவுகளுடனான ஆரோக்கியமான தொடர்பு தரும் இன்பமே பேரின்பம் என மீண்டும் பல வருடங்களுக்குப் பின்னர் உணர்த்திய ஆண்டும் இதுவே. எனினும், இன்னோர் விதத்தில் பொருள்சார் உலகின் நிலையற்ற தன்மையையும் பல்வேறு நிகழ்வுகள் மூலம் மீண்டும் வலியுறுத்திய ஆண்டும் இதுவே! 

இவ்வாறான நிலையற்ற உலகையும், எல்லா உயிர்களையும் தன் பேராற்றலால் ஆட்டுவிக்கும் நிலையான ஓர் மாபெரும் சக்தியையே இறைவன் எனக் கூறுகிறோம் என்பதையும், அந்த சக்தியையே நம் கலாசாரம், வாழ்க்கை முறை, பக்குவநிலை போன்ற அம்சங்களைப் பொறுத்து பல்வேறு மதக் கூறுகளாகத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம் என்பதையும் மீண்டும் பலமாக இடித்துரைத்த ஆண்டும் இந்த 2020ஏ. 

எம்மை நேர்வழிப்படுத்த முன்னோர்கள் அமைத்த பல்வேறு பாதைகளே இந்த மதங்கள் என்பதையும், நம் உன்னத இலக்கை நோக்கி ரசனையுடன் அவரவர் பாதைகளில் பயணிக்காமல் அதில் குப்பைகளை வீசியும், சாலை விதிகளை மீறியும், பிற பாதைகள் பற்றி விமர்சித்தலுமே சாலை விபத்துக்கள் போலாம் மதச்சண்டைகளாம் என்பதையும் உணர்த்தியது இவ்வாண்டு. 

எனினும், இப்பாதைகளில் பயணம் செய்து பழகிய பின்னர் ஒரு கட்டத்தில் இறைவனை உணர இப்பாதைகளில் மட்டும் பயணம் செய்ய வேண்டியதில்லை என்றும், நீ இருக்கும் இடத்திலேயே, ஏன் உனக்குள்ளேயே அந்த இறைவன் இருக்கிறான் என்பதை மீண்டும் தெளிவாக உணர வைத்ததும் இந்த 2020ஏ. கூடவே மதம் எனும் பாதை இல்லாமலேயே பல ஞானியர் நம் கற்பனைக்கெட்டாத வேறு பல மார்க்கங்கள் மூலம் அந்தப் பேராற்றலை உணர்ந்தும், அடைந்தும் இருப்பரோ எனவும் சிந்திக்க வைத்தது இவ்வாண்டு. 

இறுதியாக, ஆன்மீகமும் நம் வாழ்வை நெறிப்படுத்த நமக்கு அவசியமான ஓர் அறிவியலே என்றும், நம் வாழ்க்கைப் படிநிலைகளுக்கும், பக்குவத்துக்கும் ஏற்ப அந்த அறிவை வளர்க்கவும், அதன் மூலம் பயன் பெறவும் முடியும் என்றும் உணர்த்தியது இந்த 2020. அந்த அறிவியலில் முதிர்ச்சி பெற்றவன் ஆசை துறந்து உலகை வெல்லும் ஞானியாகிறான் என்பதையும், அதில் குழந்தை போலப் பாடம் பயில்பவன் இங்கே யாழில் எழுதிக்கொண்டிருக்கிறான் என்பதையும், இடைப்பட்ட நிலையில் பலர் ஆன்மீக வழியில் இவ்வுலக வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர் என்பதையும் இந்த ஆண்டு எனக்கு உணர்த்தியது. 

மொத்தத்தில் என் பார்வையில் 2020ஆம் ஆண்டு ஓர் சாபமல்ல; வரமே! வரமே!! வரமே!!! 😊

நன்றி 😊

நல்ல கட்டுரை. 

நீங்கள் சொன்னதை போல்தான் நானும் உணர்கிறேன்.  எனக்கு தெரிந்த ஒருவரையும் கொவிட்டுக்கு பலி கொடுக்கவில்லை என்பதால். நீங்களும் என்னை போல் அதிகம் பாதிப்பில்லாமல் தப்பிய ஆள் என நினைக்கிறேன்.

ஆனால் என்னுடன் வேலை செய்யும் ஒருத்தி 5 உறவுகளை 3 மாதத்தில் இழந்துள்ளார். அப்படியானவர்கள் இந்த ஆண்டை வரமாக பார்க்க மாட்டார்கள். 

ஒரே விடயம் அனுபவத்தின் அடிப்படையில் எப்படி எதிர் எதிர் முடிவுகளை தருகிறது என்பது ஆச்சரியமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2020 என்னைப்பொறுத்தவரையில் வேலையில் அதிகவேலைப்பளூவினால் அவதி, ஆகையால் 2020 நல்லதொரு ஆண்டாக ஏற்கமுடியவில்லை. அதேநேரம் எனக்கு தெரிந்தவர்கள், செய்திகளின் படி அதிகரித்த வீட்டுவன்முறை சம்பவங்கள், இரத்த உறவுகளின் மரணத்தில் பங்கேற்கமுடியாத நிலை, மன உளைச்சல்,
வருமான இழப்பு என பட்டியல் நீள்கிறது. 
ஆகையால் அவரவருக்கு கிடைத்த அனுபவங்களின் படியே சாபமா வரமா எனக்கூறலாம்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற ஆண்டு... தினமும் கொரொனாவுக்கு, பயந்து கொண்டே வாழ்ந்ததால்... மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கவில்லை.

Link to comment
Share on other sites

16 hours ago, suvy said:

சொல்லி வேல இல்லை.....மிகச்சிறப்பான கட்டுரை மல்லிகை......!   👍

நன்றி சுவி அண்ணா. எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 😊💐

Link to comment
Share on other sites

13 hours ago, goshan_che said:

நீங்கள் சொன்னதை போல்தான் நானும் உணர்கிறேன்.  எனக்கு தெரிந்த ஒருவரையும் கொவிட்டுக்கு பலி கொடுக்கவில்லை என்பதால். நீங்களும் என்னை போல் அதிகம் பாதிப்பில்லாமல் தப்பிய ஆள் என நினைக்கிறேன்.

கோஷன்,

உண்மை தான். கொறோனா நோய்த் தாக்கத்திலிருந்து தப்பிய அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன் தான். ஆனாலும் 2020இன் ஆரம்பத்திலிருந்தே என் வாழ்க்கையில் ஏற்பட்ட சில மாற்றங்கள் மிகக் கடினமான அனுபவங்களைத் தந்தன. என் இதுவரை கால வாழ்க்கையிலும் கற்காத பல பாடங்களை அந்த அனுபவங்கள் தந்தன. அந்தக் கடினமான சூழலை, lockdownஆல் ஏற்பட்ட விளைவுகள் மேலும் பாதித்தன. என் நிம்மதியை மிகவும் பாதித்த ஆண்டு 2020தான். எனினும் அந்தக் கசப்பான அனுபவங்கள் தந்த பாடங்கள் தான் என்னை முன்னரிலும் சிறந்த ஆளாக்கியது என்றே கூறவேண்டும்!

13 hours ago, goshan_che said:

ஆனால் என்னுடன் வேலை செய்யும் ஒருத்தி 5 உறவுகளை 3 மாதத்தில் இழந்துள்ளார். அப்படியானவர்கள் இந்த ஆண்டை வரமாக பார்க்க மாட்டார்கள். 

நிச்சயமாக கோஷன். இன்னும் சொல்லப்போனால், தற்போது லண்டன் நகரில் வசிப்பவர்கள் இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு என்னை மனதுக்குள் திட்டித் தீர்த்துச் சாபமிட்டிருப்பார்களோ என்னமோ!

Link to comment
Share on other sites

14 hours ago, goshan_che said:

ஒரே விடயம் அனுபவத்தின் அடிப்படையில் எப்படி எதிர் எதிர் முடிவுகளை தருகிறது என்பது ஆச்சரியமே.

அதேபோல எனது இந்தக் கண்ணோட்டத்தை நான் கடந்த சில வருடங்களாகக் கொண்டிருக்கும் எனது ஆன்மீகப் பார்வை ஆக்கிரமித்தது என்று தான் சொல்லவேண்டும்.

அதுவே பொருளாதார, சமூக, சுகாதார, உளவியல் என்று பல்வேறு lens ஊடாகப் பார்ப்பவர்கள் கூறும் முடிவு இன்னும் பல்வேறு வகைப்பட்டனவாக இருக்கலாம்!

கருத்துக்கு நன்றி கோஷன். ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 😊💐

Link to comment
Share on other sites

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

2020 என்னைப்பொறுத்தவரையில் வேலையில் அதிகவேலைப்பளூவினால் அவதி, ஆகையால் 2020 நல்லதொரு ஆண்டாக ஏற்கமுடியவில்லை. அதேநேரம் எனக்கு தெரிந்தவர்கள், செய்திகளின் படி அதிகரித்த வீட்டுவன்முறை சம்பவங்கள், இரத்த உறவுகளின் மரணத்தில் பங்கேற்கமுடியாத நிலை, மன உளைச்சல்,
வருமான இழப்பு என பட்டியல் நீள்கிறது. 
ஆகையால் அவரவருக்கு கிடைத்த அனுபவங்களின் படியே சாபமா வரமா எனக்கூறலாம்.. 

பிரபா, 

நீங்கள் கூறியதுபோல கொறானா, lockdown இவற்றால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மிக அதிகம் தான். பலரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கும் ஆண்டு தான் 2020.

எனினும் அவற்றின் பாதிப்பின் அளவு, அதனை ஒருவரால் தாங்கிக் கொள்ளும் தன்மை, அதிலிருந்து கற்ற பாடங்கள் மற்றும் பாதிப்பாக இருந்தாலும் அதனால் ஏற்பட்ட நீண்ட கால நன்மை (அல்லது தீமை) போன்றனவே ஒவ்வொருவரும் வரமா, சாபமா எனத் தீர்மானிக்கும் என்பது என் கருத்து.

கருத்துக்கு நன்றிகளும், இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களும் பிரபா! 😊💐

41 minutes ago, தமிழ் சிறி said:

சென்ற ஆண்டு... தினமும் கொரொனாவுக்கு, பயந்து கொண்டே வாழ்ந்ததால்... மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கவில்லை.

சிறி அண்ணா,

பலருக்கு இது மகிழ்ச்சியான ஆண்டு அல்லத் தான். வலிகளும், இழப்புக்களும் அதிகமாக இருந்திருக்கும். ஆனால் அவற்றால் கற்ற பாடங்களும், சில எதிர்பாராத நன்மைகளுமே இந்தப் புத்தாண்டையும், இனி வரும் ஆண்டுகளையும் நிம்மதியாகவாவது கடக்க உதவும் என்பது என் எண்ணம்.

கருத்துக்கு நன்றிகளும், இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களும் சிறி அண்ணா! 😊💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மல்லிகை வாசம் said:

அதேபோல எனது இந்தக் கண்ணோட்டத்தை நான் கடந்த சில வருடங்களாகக் கொண்டிருக்கும் எனது ஆன்மீகப் பார்வை ஆக்கிரமித்தது என்று தான் சொல்லவேண்டும்.

அதுவே பொருளாதார, சமூக, சுகாதார, உளவியல் என்று பல்வேறு lens ஊடாகப் பார்ப்பவர்கள் கூறும் முடிவு இன்னும் பல்வேறு வகைப்பட்டனவாக இருக்கலாம்!

கருத்துக்கு நன்றி கோஷன். ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 😊💐

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்துகள்.

நிச்சயமாக உங்கள் ஆன்மீக ஈடுபாடு இதில் தாக்கம் செலுத்தியுள்ளது என்பது மறுகவியலாலது.

நாம் முன்பே அலசியதுதான், எனக்கு மதங்கள் மீது அறவே பிடிப்பில்லை, இறை மீது சந்தேகம். ஆயினும் வளர்ந்த சூழல் காரணமாக பலத்த ஆன்மீக பரிச்சயம், குறிப்பாக நிலையாமை தத்துவம் மீது ஆழ்ந்த பிடிப்பு உண்டு.

கடவுள் நம்பிக்கையற்ற ஆன்மீகம் என்பது ஒரு முரண்பதமாக இருக்கும்.  விதியியல் (நடப்பதுதான் நடக்கும் -fatalism) எனலாம் என நினக்கிறேன்.

நிச்சயமாக இந்த fatalistic outlook இந்த ஆண்டை கடந்து போக உதவியது என்பதும், இதன் சில கூறுகளை வரமாக பார்க்க வைத்தது என்பது என்னளவிலும் உண்மையே.

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

என் எண்ணக்கருவின்படி, மதம் = ஆன்மீகம் + கலாசாரம் (+ கிரியைகள், பழக்கவழக்கங்கள், மற்றும் உலகியல் சார்ந்த பிற அம்சங்கள்).

மேலுள்ள சமன்பாட்டில் ஆன்மீகம் என்பது உலகிலுள்ள எல்லா மனிதரிலும் உள்ள ஆன்மாவின் உணர்வு என்பது இன்றளவில் நான் கொண்டிருக்கும் நம்பிக்கை/ புரிதல். கலாசாரம் போன்ற மற்றய அம்சங்கள் இடம், காலம் போன்றவற்றுக்கேற்ப மாறுபட்டதன் விளைவுகளே பல்வேறு மதங்கள் என்பது என் புரிதல். 

இவ்வுலகத்தோடு ஒட்டி வாழ்வதற்கு கலாச்சாரம் போன்றவை கலந்த ஆன்மீகம், அதாவது மதம் அவசியமானது என்பதே என்போன்றவர்களின் பார்வை. இதற்குக் காரணம் சிறு வயதில் நம்மை நம் சமூகம் பழக்கப்படுத்திய (conditioning)விதம், சமயக் கல்வி போன்றவையாகும். நம்மில் அனேகருக்கு ஆன்மீகத்தை உணர்த்த முதற் படி மதங்களாகவே இருந்திருக்கும். வளர்ந்து நம் பகுத்தறிவு மூலம் கலாச்சாரம் போன்ற அம்சங்களைத் தவிர்த்து முழுக்க முழுக்க ஆன்மீகத்தில் மூழ்க நினைக்கும்போது இல்வாழ்க்கை, வேலை மற்றும் பல உலகியல் விடயங்கள் அந்த எண்ணத்துக்குத் தடை போடுகின்றன. (இவற்றை எல்லாம் வென்றவர்களே நமது யோகர், ரமணர் போன்ற உண்மையான ஞானிகள். அவர்கள் மதங்களைக் கடந்த ஓரளவு தூய ஆன்மீகவாதிகள் என்பது என் எண்ணம்.) 

ஆகவே, எம் வயது, அனுபவம் போன்றவை அதிகரிக்க அதிகரிக்க எம் எல்லோருக்கும் மேலான ஒரு பேராற்றலைத் (இறைவனை?) தேடிப் பயணிக்கும்போது, மறுபக்கத்தில் உலகியல் விடயங்களையும் புறக்கணிக்க இயலாத சூழலிலும், தற்போதய மும்முரமான வாழ்க்கைமுறையிலும் ஓர் ஊன்றுகோலாக மதங்கள் என் போன்றவர்களுக்குத் துணை புரிவதாக நான் எண்ணுகிறேன். அதிகம் பக்குவப்பட்ட நிலையில் எல்லா மதங்களிலும் உள்ள அடிப்படை ஒற்றுமையை உணர்தலும், உலகியலைத் துறக்கும் அதியுச்ச நிலையில் மதங்களாகிய ஊன்றுகோலைத் தூக்கி எறிந்துவிட்டுத் துறவிகளாவதும் அவரவர் பக்குவநிலையைப் பொறுத்தது என நினைக்கிறேன். 

அப்படியான உச்ச நிலையை அடையத் தயாராகாத என் போன்றவர்கள் எந்த மதங்களிலும் உள்ள நல்ல அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது என நினைக்கிறோம். அரிசியில் தேவையற்ற கல்லையும், நெல்லையும் நூறு வீதம் பொறுக்க நேரமின்மையால் ஓரளவுக்கு பெரிய கற்களை, நெல்லுகளைப் பொறுக்கிவிட்டு களையப்படாத சிறு கற்கள், நெல்லுகள் இன்னும் இருக்கும் தான் என்ற தெளிவுடன் அந்த அரிசியைச் சமைப்பதுபோல. மதங்களின் நல்ல அம்சங்களில் மட்டும் அதீத கவனத்தைச் செலுத்த, குறைகள் தானாகவே புறக்கணிக்கப்பட்டுவிடும். நாமாகக் களைவதும் இலகுவாகிவிடும். இந்த processஇல் தூய ஆன்மீகத்தை நோக்கிப் பயணிப்பது இலகு என்பது என் எண்ணம். 😊

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

விதியியல் (நடப்பதுதான் நடக்கும் -fatalism) எனலாம் என நினக்கிறேன்.

நிச்சயமாக இந்த fatalistic outlook இந்த ஆண்டை கடந்து போக உதவியது என்பதும், இதன் சில கூறுகளை வரமாக பார்க்க வைத்தது என்பது என்னளவிலும் உண்மையே.

விதி பற்றிய எனது சமீபத்தைய எண்ணக்கரு, இதில் fixed மற்றும் variable பகுதிகள் இருக்கலாம் என்பதாகும். Will power கூடக் கூட விதியை மாற்றுவது இலகு எனினும், மாற்ற முடியாத சில பகுதிகளும் உண்டு என்பது இன்றளவில் என் எண்ணம். புது அனுபவங்கள், தகவல்கள் இந்த எண்ணத்தை எதிர்காலத்தில் மாற்றலாம். தவிரவும் பல்வேறு துறை சார்ந்த விடயங்கள அலசி ஆராய்ந்தால் தான் இது பற்றிய தெளிவு கூடும். அதனால் முயச்சி பலித்தால் மதி, இல்லையேல் விதி என்பதே தற்போதய என் நம்பிக்கை! 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, மல்லிகை வாசம் said:

என் எண்ணக்கருவின்படி, மதம் = ஆன்மீகம் + கலாசாரம் (+ கிரியைகள், பழக்கவழக்கங்கள், மற்றும் உலகியல் சார்ந்த பிற அம்சங்கள்).

மேலுள்ள சமன்பாட்டில் ஆன்மீகம் என்பது உலகிலுள்ள எல்லா மனிதரிலும் உள்ள ஆன்மாவின் உணர்வு என்பது இன்றளவில் நான் கொண்டிருக்கும் நம்பிக்கை/ புரிதல். கலாசாரம் போன்ற மற்றய அம்சங்கள் இடம், காலம் போன்றவற்றுக்கேற்ப மாறுபட்டதன் விளைவுகளே பல்வேறு மதங்கள் என்பது என் புரிதல். 

இவ்வுலகத்தோடு ஒட்டி வாழ்வதற்கு கலாச்சாரம் போன்றவை கலந்த ஆன்மீகம், அதாவது மதம் அவசியமானது என்பதே என்போன்றவர்களின் பார்வை. இதற்குக் காரணம் சிறு வயதில் நம்மை நம் சமூகம் பழக்கப்படுத்திய (conditioning)விதம், சமயக் கல்வி போன்றவையாகும். நம்மில் அனேகருக்கு ஆன்மீகத்தை உணர்த்த முதற் படி மதங்களாகவே இருந்திருக்கும். வளர்ந்து நம் பகுத்தறிவு மூலம் கலாச்சாரம் போன்ற அம்சங்களைத் தவிர்த்து முழுக்க முழுக்க ஆன்மீகத்தில் மூழ்க நினைக்கும்போது இல்வாழ்க்கை, வேலை மற்றும் பல உலகியல் விடயங்கள் அந்த எண்ணத்துக்குத் தடை போடுகின்றன. (இவற்றை எல்லாம் வென்றவர்களே நமது யோகர், ரமணர் போன்ற உண்மையான ஞானிகள். அவர்கள் மதங்களைக் கடந்த ஓரளவு தூய ஆன்மீகவாதிகள் என்பது என் எண்ணம்.) 

ஆகவே, எம் வயது, அனுபவம் போன்றவை அதிகரிக்க அதிகரிக்க எம் எல்லோருக்கும் மேலான ஒரு பேராற்றலைத் (இறைவனை?) தேடிப் பயணிக்கும்போது, மறுபக்கத்தில் உலகியல் விடயங்களையும் புறக்கணிக்க இயலாத சூழலிலும், தற்போதய மும்முரமான வாழ்க்கைமுறையிலும் ஓர் ஊன்றுகோலாக மதங்கள் என் போன்றவர்களுக்குத் துணை புரிவதாக நான் எண்ணுகிறேன். அதிகம் பக்குவப்பட்ட நிலையில் எல்லா மதங்களிலும் உள்ள அடிப்படை ஒற்றுமையை உணர்தலும், உலகியலைத் துறக்கும் அதியுச்ச நிலையில் மதங்களாகிய ஊன்றுகோலைத் தூக்கி எறிந்துவிட்டுத் துறவிகளாவதும் அவரவர் பக்குவநிலையைப் பொறுத்தது என நினைக்கிறேன். 

அப்படியான உச்ச நிலையை அடையத் தயாராகாத என் போன்றவர்கள் எந்த மதங்களிலும் உள்ள நல்ல அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது என நினைக்கிறோம். அரிசியில் தேவையற்ற கல்லையும், நெல்லையும் நூறு வீதம் பொறுக்க நேரமின்மையால் ஓரளவுக்கு பெரிய கற்களை, நெல்லுகளைப் பொறுக்கிவிட்டு களையப்படாத சிறு கற்கள், நெல்லுகள் இன்னும் இருக்கும் தான் என்ற தெளிவுடன் அந்த அரிசியைச் சமைப்பதுபோல. மதங்களின் நல்ல அம்சங்களில் மட்டும் அதீத கவனத்தைச் செலுத்த, குறைகள் தானாகவே புறக்கணிக்கப்பட்டுவிடும். நாமாகக் களைவதும் இலகுவாகிவிடும். இந்த processஇல் தூய ஆன்மீகத்தை நோக்கிப் பயணிப்பது இலகு என்பது என் எண்ணம். 😊

புத்தாண்டில் நல்ல புத்தெழுச்சியான கருத்துக்கள் மல்லிகை.

எனது அனுபவத்தில், மதத்தில் நான் அரிசிகளை பொறுக்கி கொண்டாலும் அது கல்லு மூட்டையில் அரிசி தேடுவதை போன்றதாகவே அமைந்தது.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்  
பற்றுக பற்று விடற்கு

அதாவது பற்றை அறுக்கும் ஒரே காரணத்துக்காக மட்டும் பற்றற இறவனை பற்றுங்கள் என்கிறது குறள்.

எமது குடும்பத்தின் குருவாக அமைந்தவர் சொல்லுவார் - ஆன்மீகத்தின் உச்சம், பற்றற்ற இறைவன் மீதான பற்றையும் இழந்து பூரண பற்றற்ற நிலையை எய்துவது என்று.

அப்போ ஆன்மீகத்தின் அதி உச்சம் கடவுள் நம்பிக்கை அற்று போதல் என்றும் கொள்ளலாம் என நான் நம்புகிறேன்.

இதைதான் முக்தி என்பதோ?

படி படியாக பற்றினை அழிக்கும் ஒரு வாழ்கையாகத்தான் என் வாழ்க்கை நகர்வதாக உணர்கிறேன்.

பற்றற்றானை பற்றாமலே பற்றறுக்க முடியுமா? பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

திருக்குறளையோ, ஞானியர் வார்த்தைகளுக்கு அர்த்தம் கற்பிக்கும் தகுதி எனக்கில்லை. எனினும் அவர்கள் சொன்னதன் உள்ளார்ந்த அர்த்தம் 'இறையாற்றலை உணர்ந்து கொள்வதற்கு மனிதரே உருவாக்கிய மதம் எனும் பாதை மீதான பற்றை, வெறுங் குறியீடாக மட்டும் நினைக்கும் இறைவன் என்ற பொருளின் மீதான பற்றை அழித்துவிட வேண்டும்' என்பதாக இருக்கலாம் என்பது என் ஊகம். காலி வீதி எனும் மதத்திலோ, அதனூடாக நாம் பயணிக்கும் பேருந்து எனும் இறைவன் மீதோ தீவிர பற்றை வைத்தால் கோல் fஏஸ் எனும் பிரபஞ்ச சக்தியை/பேராற்றலை உணரவோ, அடையவோ முடியாது என்ற அர்த்தமாக இருக்கலாம். அந்தப் பேராற்றல் தான் உண்மையான இறைவன் என்பதும், அந்தப் பேராற்றல் தான் உங்களுள், என்னுள், ஏன் வேற்று மதத்தவர், சாதியர் என்றோ, துரோகி, எதிரி என்றோ புறந்தள்ளும் மனிதர், அனைத்து உயிரினம், சடப்பொருள் எனச் சர்வத்திலும் வியாபித்திருக்கும் இறையாற்றல் என்றும் பல ஞானியர் சொல்லிச் சென்றுள்ளனர். ஆகவே குறியீடுகளில் பற்று வைப்பதை ஒழித்து எம்முள் உறைந்திருக்கும் பேராற்றலை உணர்தலும், அதுவே பிரபஞ்சம் முழுக்க வியாபித்திருக்கிறது என்பதை அனுபவத்தால் உணர்ந்து அதனுடன் நம் ஆன்மா இரண்டறக் கலத்தலே ஆன்மாவின் அதியுச்ச குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும் ஞானியர் சொல்வர். அதுவே பேரின்பநிலை என்றும், பிறப்பற்ற நிலை என்றும் சொல்வர்.

ஆனால் நான் இதை தத்துவார்த்தமாக மட்டுமே உணர்கிறேன். ருசியும், மணமும் மிக்க சிக்கன் பிரியாணியைக் கண்டதும் அந்தத் தத்துவார்த்த அறிவு கூட மாயமாய் மறைந்துவிடுகிறது. இப்படி மில்லியன் கணக்கில் ஆசைகள். இந்த லட்சணத்தில் வாழ்நாள் முழுவதும் பற்றற்று, இறையாற்றலை உணர்தல் என்பது என்போன்றோருக்குச் சாத்தியமல்ல. அது சாத்தியமானால் நானும் இறைவனே. ஆனால் எனது கர்ம வினையால் விளைந்த தேகத்துடன், உலகியல் மாயையுடன் பெரும் போராட்டம் செய்தே இதைச் சாதிக்கலாம். சாத்தியமில்லா இலக்கு அது.

ஆகவே, தற்போதைக்கு 'செய்யும் தொழிலே தெய்வம்' என்பதை ஓரளவுக்குச் செயற்படுத்தி, பற்றற்று ஆத்மார்த்தமாக எம் கடமைகளைச் செய்வது தான் இறைவனை உணர ஓரளவுக்குச் சாத்தியமான வழி என நினைக்கிறேன். இது கூட சவால்கள் நிறைந்தது தான். ஆகவே இங்கும் முடிந்தவரை மதியைப் பயன்படுத்திச் செய்வது; முடியாவிடில் விதியென நினைத்து அமைதி கொள்வது தான் வழி! 

Computerஆல் அதை உருவாக்கிய மனிதனை முழுவதுமாப் புரிந்து கொள்ள முடியுமா? மனிதன் பிரபஞ்சப் பேராற்றலை (இறைவனை?) புரிய முயல்வது அதைவிடக் கடினமானது என்பது என் எண்ணம். 🙂

நம் வாழ்வில் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் தான் இதைப் படிப்படியாகச் செய்கின்றன என நினைக்கிறேன். கண்ணதாசன் 'அந்த அனுபவம் தான் கடவுள்' என்று கூறியதன் பொருள் இது தானோ தெரியவில்லை.

நான் நம்பும் பிரபஞ்சப் பேராற்றல் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற உதவும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள் கோஷன்! 😊 அருமையான கருத்தாடலுக்கு மிக்க நன்றி. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2020.. பலருக்கு துன்பம்...

எனக்கு..

ஆண்டின் ஆரம்பத்திலேயே விடுமுறைக்கு கிளம்பும் பழக்கம் என்பதால்.. ஈழம் சென்று வந்தது.

பின்னர் சுவிஸ்லாந்து போய் வந்தது.

அப்புறம் உள்ளூரிலும் இயற்கையோடு அதிக காலம் கழிக்கக் கூடிய ஆண்டாக அமைந்தது.

ஆக கொலிடே விடயத்தில் குறை வைக்காத ஆண்டு.

வேலையில்.. பதவி உயர்வும்.. உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் தந்த ஆண்டு.

மத்திய லண்டனுக்கு கூட காரில் வேலைக்கு போய்வரக் கூடிய சலுகைகள் தந்த ஆண்டு. வழமையாக.. சத்தமும் சனக்கூட்டமும் நிறைந்த நிலக்கீழ் தொடரூந்து தான் தஞ்சம்... கடந்த ஆண்டில்... அது மாறியது.

சமூகத்துக்கான சேவையில்..

சமூகத்திற்கு மனம் திருப்திப்பட சேவை ஆற்றக் கூடிய வாய்ப்பை தந்த ஆண்டு. 

மேலும்.. ஆண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் ஓய்வின்றிய உழைப்பு என்றாலும்.. ஆண்டின் முதல் பாதியில்.. நிறைய ஓய்வு.. குறிப்பாக கொவிட்-19 முதல் அலையின் போது.

சொந்தங்கள் பந்தங்களுக்கு உதவக் கூடிய ஆண்டாகவும் அமைந்தது.

நிதியியல் நிலையில் முன்னேற்றம் தந்த ஆண்டு.

எவருக்கு எப்படியோ.. நமக்கு முன்னேற்ற கரமான ஆண்டு. கொவிட் 19 பீதி ஒன்றைத் தவிர. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, மல்லிகை வாசம் said:

கோஷன்,

திருக்குறளையோ, ஞானியர் வார்த்தைகளுக்கு அர்த்தம் கற்பிக்கும் தகுதி எனக்கில்லை. எனினும் அவர்கள் சொன்னதன் உள்ளார்ந்த அர்த்தம் 'இறையாற்றலை உணர்ந்து கொள்வதற்கு மனிதரே உருவாக்கிய மதம் எனும் பாதை மீதான பற்றை, வெறுங் குறியீடாக மட்டும் நினைக்கும் இறைவன் என்ற பொருளின் மீதான பற்றை அழித்துவிட வேண்டும்' என்பதாக இருக்கலாம் என்பது என் ஊகம். காலி வீதி எனும் மதத்திலோ, அதனூடாக நாம் பயணிக்கும் பேருந்து எனும் இறைவன் மீதோ தீவிர பற்றை வைத்தால் கோல் fஏஸ் எனும் பிரபஞ்ச சக்தியை/பேராற்றலை உணரவோ, அடையவோ முடியாது என்ற அர்த்தமாக இருக்கலாம். அந்தப் பேராற்றல் தான் உண்மையான இறைவன் என்பதும், அந்தப் பேராற்றல் தான் உங்களுள், என்னுள், ஏன் வேற்று மதத்தவர், சாதியர் என்றோ, துரோகி, எதிரி என்றோ புறந்தள்ளும் மனிதர், அனைத்து உயிரினம், சடப்பொருள் எனச் சர்வத்திலும் வியாபித்திருக்கும் இறையாற்றல் என்றும் பல ஞானியர் சொல்லிச் சென்றுள்ளனர். ஆகவே குறியீடுகளில் பற்று வைப்பதை ஒழித்து எம்முள் உறைந்திருக்கும் பேராற்றலை உணர்தலும், அதுவே பிரபஞ்சம் முழுக்க வியாபித்திருக்கிறது என்பதை அனுபவத்தால் உணர்ந்து அதனுடன் நம் ஆன்மா இரண்டறக் கலத்தலே ஆன்மாவின் அதியுச்ச குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும் ஞானியர் சொல்வர். அதுவே பேரின்பநிலை என்றும், பிறப்பற்ற நிலை என்றும் சொல்வர்.

ஆனால் நான் இதை தத்துவார்த்தமாக மட்டுமே உணர்கிறேன். ருசியும், மணமும் மிக்க சிக்கன் பிரியாணியைக் கண்டதும் அந்தத் தத்துவார்த்த அறிவு கூட மாயமாய் மறைந்துவிடுகிறது. இப்படி மில்லியன் கணக்கில் ஆசைகள். இந்த லட்சணத்தில் வாழ்நாள் முழுவதும் பற்றற்று, இறையாற்றலை உணர்தல் என்பது என்போன்றோருக்குச் சாத்தியமல்ல. அது சாத்தியமானால் நானும் இறைவனே. ஆனால் எனது கர்ம வினையால் விளைந்த தேகத்துடன், உலகியல் மாயையுடன் பெரும் போராட்டம் செய்தே இதைச் சாதிக்கலாம். சாத்தியமில்லா இலக்கு அது.

ஆகவே, தற்போதைக்கு 'செய்யும் தொழிலே தெய்வம்' என்பதை ஓரளவுக்குச் செயற்படுத்தி, பற்றற்று ஆத்மார்த்தமாக எம் கடமைகளைச் செய்வது தான் இறைவனை உணர ஓரளவுக்குச் சாத்தியமான வழி என நினைக்கிறேன். இது கூட சவால்கள் நிறைந்தது தான். ஆகவே இங்கும் முடிந்தவரை மதியைப் பயன்படுத்திச் செய்வது; முடியாவிடில் விதியென நினைத்து அமைதி கொள்வது தான் வழி! 

Computerஆல் அதை உருவாக்கிய மனிதனை முழுவதுமாப் புரிந்து கொள்ள முடியுமா? மனிதன் பிரபஞ்சப் பேராற்றலை (இறைவனை?) புரிய முயல்வது அதைவிடக் கடினமானது என்பது என் எண்ணம். 🙂

சிந்திக்க வைத்த கருத்து பகிர்வுக்கு நன்றி மல்லிகை.

நான் மேலே கோடிட்ட உங்கள் கருத்தில் உள்ள தர்க்க நியாயத்தை நான் முழுமையாக ஏற்கிறேன்.

இதனால்தான் கடவுள் நம்பிக்கையை ஒரேயடியாக மறுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

நீங்கள் சொல்வது போல் உலகியல் இன்பங்கள் சிலதை கண்டதும் குரங்கு மனம் அலைபாய்ந்தாலும், காலப்போக்கில் அவற்றின் மீதானா ஈர்ப்பு குறைவதாகவே உணர்கிறேன்.

ஆனால் பாச வலைதான் மோசமான பற்றாக இருக்கிறது😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு 2019க்கும் 2020க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை ...2019யில் பெரிய ஹொலிடே போக முடிந்தது ..2020யில் இல்லை ....வீட்டில் இருந்து வேலை செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு யாழில் 24 மணி நேரம் குந்தியிருப்பவர்களை பார்க்க எரிச்சல் ,எரிச்சலாய் இருக்குது ☺️
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

அப்பிடி ஆர் நிக்கினம் எண்டதிலை இரண்டு பெயரை இழுத்து விடுங்கோ தங்கச்சி....:cool:
நீங்கள் தான்யாழ்கள தைரிய லட்சுமி ஆச்சே 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அப்பிடி ஆர் நிக்கினம் எண்டதிலை இரண்டு பெயரை இழுத்து விடுங்கோ தங்கச்சி....:cool:
நீங்கள் தான்யாழ்கள தைரிய லட்சுமி ஆச்சே 😁

நீங்கள் ,கோசான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

நீங்கள் ,கோசான் 

நான் ஓகே.....ஆனால் கோசான் அப்பிடி இல்லையே.....சும்மா  அவரை வம்புக்கு இழுக்காட்டில் பத்தியப்படாதோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.