Jump to content

"2020"மரணித்த உடல்காவி செல்கிறது..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.0-02-0a-f3e5e7d9029fd5c0034689541cefcbc9fff801a02ec34fe3465ee2006ae130a1_1c6d9ffdd068c2.jpg.fa10a752009d3e6fc2123fc7d68ffa44.jpg

"2020"மரணித்த உடல்காவி செல்கிறது..!

********************************

உன்னுக்குள் எமைவைத்து

ஒருவருடம் ஆண்டுவிட்டு

பின்னுக்கு போகுமாண்டே

இதுவரையும் உனைப்போல

உயிர் எடுக்கும் ஆண்டெதுவும்

எம் வாழ்வில் கண்டதில்லை.

 

சங்ககால இலக்கியத்துள்

சரித்திரத்தில் இறப்புக் கண்டோம்

உலக மகா யுத்தத்தில்-கிட்லர்

உயிர் பறித்த கொடுமை கண்டோம்

 

இனத்துவேஷம் காட்டிக் காட்டி 

ஈழத்தில் அழிவு கண்டோம்

மதங்கள் சண்டைபோட்டு-பல

மரணங்கள் நேரில் கண்டோம்

 

வல்லரசு நாடுகளால் வதைத்து

உயிர்கள் பறிக்கக் கண்டோம்

தோல் நிறச் சண்டையாலே

தொடர் மரணம் நாமும் கண்டோம் 

 

இத்தனையும் மனிதநேயம்

இல்லாத ஈனச்செயலாக

எண்ணித்தான் வாழ்ந்தோம்-நாம்

ஆனால்..

இதுவரையும் உனைப்போல

உயிர் எடுக்கும் ஆண்டெதுவும்

எம் வாழ்வில் கண்டதில்லை.

 

காற்றிலே தூவி எங்கும்

கசியவிட்டு கொரோனாவை

மூக்கிலே செலுத்தி-உயிர்

மூச்செடுத்து குவித்தாயே!

 

உலகத்தை உறைய வைத்து

உயிர்ப்பயத்தை எமக்களித்து

வாய் மூக்கை கட்டி-வீட்டுள்

வைத்திருந்து வதைத்தாயே!

 

அன்போடு கேட்கின்றோம்-2021

ஆளவரும் இவ் ஆண்டுக்கும்

உன் கொடுமை சொல்லாமல்

ஓடி விடு நடு இரவே.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி-

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பசுவூர்க்கோபி புத்தாண்டு வாழ்த்துகள், இந்த வருடமும் கஷ்டமே, அடுத்த வருடம் கொஞ்சம் பரவாயில்லாமலிருக்கும் நல்லதொரு தடுப்பூசி கண்டு பிடித்தால், பார்ப்போம். நன்றி கவிதை பகிர்வுக்கு

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டு வாழ்த்துக்களுடன் அருமையான கவிதை பகிர்விற்கு நன்றி தோழர்..👌

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

பசுவூர்க்கோபி புத்தாண்டு வாழ்த்துகள், இந்த வருடமும் கஷ்டமே, அடுத்த வருடம் கொஞ்சம் பரவாயில்லாமலிருக்கும் நல்லதொரு தடுப்பூசி கண்டு பிடித்தால், பார்ப்போம். நன்றி கவிதை பகிர்வுக்கு

நன்றி அன்புடையாரே உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 3/1/2021 at 06:16, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புத்தாண்டு வாழ்த்துக்களுடன் அருமையான கவிதை பகிர்விற்கு நன்றி தோழர்..👌

அன்புடன் நன்றிகள் தோழர் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.