Jump to content

யாழ்ப்பாணம் மாநகர முதல்வராக மணிவண்ணன் வெற்றி!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

இன்று (30) சற்றுமுன்னர் மாநகர முதல்வர் தெரிவுக்காக யாழ் மாநகரசபையில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், ஈபிடிபி உறுப்பினர்களின் ஆதரவுடன் மணிவண்ணன் முதல்வரானார்.

வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட்டுக்கு 20 வாக்குகளும் மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நால்வர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அமர்வில் பங்குகொண்டு வாக்கெடுப்பில் பங்குகொள்ளாதவர்களில் ஒருவர் தமிழரசுக்கட்சி உறுப்பினர், மூவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/

Link to comment
Share on other sites

1 hour ago, பிரபா said:

இவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதில் தவறில்லை. இருந்தாலும் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றுவதில்தான் சிக்கல் நிலை தோன்றும். அது இலகுவாக இருக்கப்போவதில்லை. இருந்தாலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவர் அதனை ஒரு தடவை  நிறைவேற்றலாம்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் மணிவண்ணனுக்கு, அவரிடம் இருந்து  மக்கள் சேவை எதிர்பாக்கப்படுகின்றது.
கடைசிவரை ஆனோல்ட்டை வேட்பாளராக வைத்திருந்தமை, கூட்ட்டமைப்பை பாராட்டக்கூடியதே.

Link to comment
Share on other sites

யாழ்ப்பாண நகரின் இரண்டாவது  “மக்கள் மேயர்“ என்று மக்களால் பாராட்டப்படும் அளவுக்கு  சிறந்த நகரத்திட்டமிடலுடன் கூடிய சேவையை யாழ்நகர் இவரிடம் இருந்து எதிர்பார்க்கிறது. நிறைவேற்றுவாரா? அவ்வாறு நிறைவேற்ற வாழ்த்துக்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் எவ்வளவு விசித்திரமானது,

அன்று யாழில் ஈபிடிபி என்ற பெயரை கேட்டாலே அருவெருப்பும், காறி துப்பும் அளவிற்கு மரியாதை கொடுத்த யாழ் சமூகம்  இன்று அவர்களின் பெரும்பான்மையுடன் யாழ் நகரை அதிகாரம் செய்ய கையறு நிலையில் நின்று வேடிக்கை பார்க்கிறது.

வரலாறுகள் ஒட்டு மொத்தமா நம் பக்கம் இப்போ இல்லை என்பதன் யதார்த்ததை எம் புலம் பெயர் தட்டச்சு போராளிகள் உணர்வது எப்போ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் அணி கூட்டமைப்பின் கழுத்தறுத்தது: ஈ.பி.டி.பியின் துணையுடன் யாழ் மாநகரசபை தேர்தலில் வென்றார் மணிவண்ணன்!

By admin -

யாழ மாநகரசபை தேர்தலில் வி.மணிவண்ணன் வெற்றிபெற்றார்.

இன்று காலை 9.30 மணிக்கு கூடிய யாழ் மாநகரசபையில், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் புதிய முதல்வர் தெரிவு இடம்பெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இம்மானுவேல் ஆனால்ட் போட்டியிட்டார். திடீர் போட்டியாளராக களமிறங்குவதாக மணிவண்ணன் நேற்றிரவு அறிவித்தார்.

தொடர்ந்து வாக்கெடுப்பு பகிரங்கமைக நடைபெறுவதா அல்லது இரகசியமாக நடைபெறுவதா என உறுப்பினர்களிடத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

சபை உறுப்பினர் அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பு கோரியதால், முதல்வர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் இ.ஆனல்ட்டுக்கு 20 வாக்குகளும், வி.மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும் கிடைத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என 20 உறுப்பினர்கள் இ.ஆனல்ட்டுக்கு ஆதரவாக வாக்களியுள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள், சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினர் என 21 உறுப்பிர்கள் வி.மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், யாழ் மாநகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள எம்.ஏ.சுமந்திரன் அணியை சேர்ந்தவர் என கூறப்படும் ஒருவர் என 4 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.

இதனால் யாழ் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் அறிவித்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவயாகவும் சமர்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டதால் மாநக முதல்வர் இ.அஆனல்ட் தனது பதவியை இழந்திருந்தார்.

இதனால் புதிய முதல்வரை தேர்வு செய்யும் விசேட அமர்பு இன்று இடம்பெற்ற போதே வி.மணிவண்ணன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.pagetamil.com/165194/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

யாழ்ப்பாண நகரின் இரண்டாவது  “மக்கள் மேயர்“ என்று மக்களால் பாராட்டப்படும் அளவுக்கு  சிறந்த நகரத்திட்டமிடலுடன் கூடிய சேவையை யாழ்நகர் இவரிடம் இருந்து எதிர்பார்க்கிறது. நிறைவேற்றுவாரா? அவ்வாறு நிறைவேற்ற வாழ்த்துக்கள்.  

சாத்தியமானதைப் பற்றிக் கதையுங்கோ துல்பன்.. 😀

Link to comment
Share on other sites

தோழர் டக்ளசுடன் இணைந்த யாழ். மாநகர மேயர் மணிவண்ணன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந் நீக்கம்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 
 
Link to comment
Share on other sites

யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ் மாநகர சபை முதல்வராக முதல் தடவையாக ஊடகங்கள் முன்னிலையில்..

https://www.facebook.com/VishnuTNPF/videos/398254821410338

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

சுமந்திரன் அணி கூட்டமைப்பின் கழுத்தறுத்தது: ஈ.பி.டி.பியின் துணையுடன் யாழ் மாநகரசபை தேர்தலில் வென்றார் மணிவண்ணன்!

By admin -

யாழ மாநகரசபை தேர்தலில் வி.மணிவண்ணன் வெற்றிபெற்றார்.

இன்று காலை 9.30 மணிக்கு கூடிய யாழ் மாநகரசபையில், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் புதிய முதல்வர் தெரிவு இடம்பெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இம்மானுவேல் ஆனால்ட் போட்டியிட்டார். திடீர் போட்டியாளராக களமிறங்குவதாக மணிவண்ணன் நேற்றிரவு அறிவித்தார்.

தொடர்ந்து வாக்கெடுப்பு பகிரங்கமைக நடைபெறுவதா அல்லது இரகசியமாக நடைபெறுவதா என உறுப்பினர்களிடத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

சபை உறுப்பினர் அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பு கோரியதால், முதல்வர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் இ.ஆனல்ட்டுக்கு 20 வாக்குகளும், வி.மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும் கிடைத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என 20 உறுப்பினர்கள் இ.ஆனல்ட்டுக்கு ஆதரவாக வாக்களியுள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள், சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினர் என 21 உறுப்பிர்கள் வி.மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், யாழ் மாநகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள எம்.ஏ.சுமந்திரன் அணியை சேர்ந்தவர் என கூறப்படும் ஒருவர் என 4 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.

இதனால் யாழ் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் அறிவித்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவயாகவும் சமர்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டதால் மாநக முதல்வர் இ.அஆனல்ட் தனது பதவியை இழந்திருந்தார்.

இதனால் புதிய முதல்வரை தேர்வு செய்யும் விசேட அமர்பு இன்று இடம்பெற்ற போதே வி.மணிவண்ணன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.pagetamil.com/165194/

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி டக்கிளசுடன் சேர்ந்து மணிவண்ணனை வெற்றிபெற வைத்தது என்பது தான் செய்தி. ஆனால் தலைப்பில் இருப்பது சுமந்திரனின் பெயர். அப்படி இருந்திராவிடின் பெருமாளும் இங்கு வந்து இதனை இணைத்து இருக்க மாட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

தோழர் டக்ளசுடன் இணைந்த யாழ். மாநகர மேயர் மணிவண்ணன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந் நீக்கம்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 
 
😂😂😂😂

தமிழீழம் கிடைச்சமாதிரித்தான்... 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன அவையள் ஒண்டுக்க ஒண்டாயிட்டினம்! 😎

இதைத்தான் அப்பவே சொன்னன். 😂

Link to comment
Share on other sites

24 minutes ago, பிழம்பு said:

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி டக்கிளசுடன் சேர்ந்து மணிவண்ணனை வெற்றிபெற வைத்தது என்பது தான் செய்தி. ஆனால் தலைப்பில் இருப்பது சுமந்திரனின் பெயர். அப்படி இருந்திராவிடின் பெருமாளும் இங்கு வந்து இதனை இணைத்து இருக்க மாட்டார்.

உதைத்தான் ஊரிலே சொல்லுகின்றது, ஆட்டுகிக்கை மாட்டை விடுகின்றது என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாநகரை அபிவிருந்தியடைந்த மாநகராக மாற்றியமைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பேன் - வி.மணிவண்ணன்

( எம்.நியூட்டன்)

யாழ்.மாநகரை அபிவிருந்தியடைந்த மாநகராக  மாற்றியமைப்பதற்கான போராட்டத்தை முடிந்தளவிற்கு முன்னெடுப்பேன் என யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

பதவி ஏற்பின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

spacer.png

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் கால வாக்குறுதியாக தன்னால் முன்வைக்கப்பட்ட யாழ்.நகர அபிவிருத்தித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக்கூடிய சூழல் தற்போது இல்லை என்றாலும், அதற்கான முயற்சிகளைத் தான் முன்னெடுக்கவுள்ளதாகவும் இன்றைய தெரிவில் என்னை தெரிவு செய்த உறுப்புனர்களுக்கும் முன்னாள் முதல்வர் மற்றும்  எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

இதேவேளை, என்னை யாரும் போட்டியிடவேண்டாம் என்று வலியுறுத்தவில்லை என்று தெரிவித்த அவர், ஆர்னோல்ட் மீண்டும் போட்டியிட்டால் அவரைத் தோற்கடிப்போம் என்று தமிழ் காங்கிரஸ்  கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களில் தெரிவித்ததாகவும் அதன் அடிப்படையில் அவரைத் தோற்கடிக்கும் நடவடிக்கையினையே தான் முன்னெடுத்ததாகவும் தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பிழம்பு said:

ஆக பதவிதான் முக்கியம்.. 😂😂

😏

Link to comment
Share on other sites

த.தே.கூ உறுப்பினர் அருட்குமரன் எவருக்கும் வாக்களிக்கவில்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் (கஜேந்திரகுமார் அணி) வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இபிடிபியின் அனைவரும் மணிவண்ணனுக்கு வாக்களித்திருந்தனர்.

ஐ.தே.கட்சி, சிறிலங்கா.சு.கட்சி, த.வி.கூட்டணி ஆகியவற்றைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் ஆர்னோல்ட்டுக்கு வாக்களித்திருந்தனர்.

த.தே.ம.முன்னணியின் 10 , இபிடிபி 10 , சிறிலங்கா சு.கட்சி 1 ..ஆக மொத்தம் 21.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் (கஜேந்திரகுமார் அணி) வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை..

த.தே.ம.முன்னணியின் 10
 
அப்படியென்றால் கஜேந்திரகுமாரின் அணியில் வெறும் 3 பேர் மட்டும்தான் இருக்கின்றார்களா? அப்படியெனில் பெரும்பான்மை உறுப்பினர்கள் கஜேந்திரகுமாரிற்கு எதிராக உள்ளனரா?

Link to comment
Share on other sites

1 hour ago, பிழம்பு said:

அப்படியென்றால் கஜேந்திரகுமாரின் அணியில் வெறும் 3 பேர் மட்டும்தான் இருக்கின்றார்களா? அப்படியெனில் பெரும்பான்மை உறுப்பினர்கள் கஜேந்திரகுமாரிற்கு எதிராக உள்ளனரா?

மணிவண்ணன் ஆதரவு த.தே.ம.முன்னணி உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்!
யாழ். மாநகரசபை முதல்வர் வேட்பாளரை தெரிவு செய்யும் இன்றை வாக்கெடுப்பில் மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
"தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து இருந்து நீக்கப்பட்ட வி.மணிவண்ணன் யாழ். மாநகர சபையின் மேயராகத் தெரிவாக ஆதரவு வழங்கி கட்சியின் கொள்கைக்குத் துரோகம் செய்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் 10 உறுப்பினர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்"
- இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்தார்.
 
Link to comment
Share on other sites

43 minutes ago, வாலி said:

பிறகென்ன அவையள் ஒண்டுக்க ஒண்டாயிட்டினம்! 😎

இதைத்தான் அப்பவே சொன்னன். 😂

ஈ.பி.டி.பியும் கூட்டமைப்பும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’

Editorial   / 2020 ஜூலை 12 , பி.ப. 04:53 - 0      - 52

-எஸ்.நிதர்ஷன்

யாழ். மாநகர சபையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளைக் கோரியமையாலேயே, தன் மீது சுமந்திரன் உறுப்புரிமை தொடர்பில் வழக்காடிவருகின்றாதெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், ஈ.பி.டி.பியினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் எனவும் சாடினார்.

யாழ்ப்பாணம் – நாவாந்துறையில், நேற்று (11) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஈ.பி.டி.பி கட்சியினரைக் கடுமையாகச் சாடி, தேர்தல் முடிவடைந்தப் பின்னர் யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்காக ஈ.பி.டி.பியிடம் சரணாகதி அடைந்தனரெனக் குற்றஞ்சாட்டினார்.

இப்போது தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் ஈ.பி.டி.பியினர் கூட்டமைப்பினையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஈ.பி.டிபியினரையும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனரென, மணிவண்ணன் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/85614?fbclid=IwAR3x3Rj-jCtFhF8hfV04oNiPc_ygaIZH1I8c2E1dZs3xmbgjme0nL-639V8

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nunavilan said:

ஈ.பி.டி.பியும் கூட்டமைப்பும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’

5 hours ago, பெருமாள் said:

சுமந்திரன் அணி கூட்டமைப்பின் கழுத்தறுத்தது: ஈ.பி.டி.பியின் துணையுடன் யாழ் மாநகரசபை தேர்தலில் வென்றார் மணிவண்ணன்!

இதை புலம்பெயர் கூட்டமைப்பு விசுவாசிகள் மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடுகின்றார்கள்.

சைக்கிள் அலர்ஜி கூட்டங்கள்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி டக்கிளசுடன் சேர்ந்து மணிவண்ணனை வெற்றிபெற வைத்தது என்பது தான் செய்தி. ஆனால் தலைப்பில் இருப்பது சுமந்திரனின் பெயர். அப்படி இருந்திராவிடின் பெருமாளும் இங்கு வந்து இதனை இணைத்து இருக்க மாட்டார்.

இதெல்லாம் கொமடி அரசியல் ஆகி விட்டது முக்கியமானது இல்லை என்றபடியால்தான் இந்த திரியில் இணைத்தேன் முக்கியம் என்றால் தனி திரியாய் இணைத்து இருப்பன்  இன்னும் கொள்ளுபாடு முடியவில்லை மாவையும் சும்மும் ஆளாளுக்கு  அறிக்கை போர் செய்கினம் இங்கு இணைக்கவா ? பகிடியாய் இருக்கும் .

தோல்விக்கு மாவையே பொறுப்பேற்க வேண்டுமாம்: சுமந்திரன் திடீர் அறிக்கை!

By admin -

யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விக்கு எம்.ஏ.சுமந்திரன் அணியின் இரகசிய நடவடிக்கையே காரணம் என கூறப்படும் நிலையில், அந்த தோல்விக்கு மாவை சேனாதிராசாவை பொறுப்பேற்க வேண்டுமென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று கட்சி தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத்தேர்தல முடிந்ததும் கட்சி தலைவருக்கு எதிராக அறிக்கை விட்டிருநத சுமந்திரன், தற்போது மீண்டும் கட்சி தலைமைக்கு எதிராக கடிதம் அனுப்பியுள்ளார். அத்துடன் அந்த கடிதத்தை உடனடியாக வெளியிட்டுள்ளார்.

இன்றைய மாநகரசபை தேர்தல் வாக்கெடுப்பில் எம்.ஏ.சுமந்திரன் அணியை சேர்ந்தவரென கருதப்படுபவரே நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடிதத்தின் விபரம் வருமாறு-

30.12.2020

திரு. மாவை சேனாதிராசா தலைவர் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 30, மார்டின் வீதி யாழ்ப்பாணம்

ஐயா,

யாழ்ப்பாண மாநகர சபை

இன்று யாழ் மாநகர சபை மேயர் தேர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோல்வியடைந்துள்ளது.

வரவு-செலவு திட்ட முன்மொழிவில் இரண்டு தடவைகள் தோல்வியுற்ற காரணத்தால் எமது மேயர் பதவி இழந்ததை அடுத்து நடந்த நிகழ்வுகளை இங்கே வரிசைப்படுத்த விரும்புகிறேன்:

19/12/20 அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவின் இல்லத்தில் சந்தித்ததை அடுத்து, வீட்டுவாசலில் வைத்து யாழ்மாநகரசபைக்கு புதிய மேயர் வேட்பாளராக வேறொருவரை நியமிப்பதே உசிதம் என்றும் அதற்குப் பொருத்தமானவர் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சொலமன் சிறில் என்பது என்னுடைய கருத்து என்பதையும் கூறினேன்.

21/12/20 அன்று நீங்கள் எனக்குத் தொலைபேசி அழைப்பு எடுத்து, நான் சொன்ன கருத்தோடு நீங்கள்உடன்படுவதாகவும் இது சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் சிறிதரனின் கருத்தும் திரு. சொலமன் சிறில் என்பதே என்றும் சொன்னீர்கள். நீங்கள் யாழ்ப்பாணம் செல்வதாகவும் அங்கே உறுப்பினர்களோடு நடாத்தும் கூட்டத்திற்கு என்னை வரமுடியுமா என்றும் கேட்டீர்கள். கட்சியின் அரசியல் அமைப்பு யோசனைகள் நிறைவு செய்யும் வரை என்னால் வரமுடியாது என்றும் திருசொலமன் சிறில் வேட்பாளராக வருவதில் எனக்கு உடன்பாடு உள்ளது என்றும் கூறினேன். எப்படியாயினும் இறுதிமுடிவு எடுப்பதற்கு முன்பதாக என்னோடு திரும்பவும் பேசுவதாக கூறியிருந்தீர்கள்.

எட்டு நாட்களுக்குப்பிறகு நேற்றைய தினம் 29/12/2020 காலையில் நீங்கள் எனக்குத்தொலைபேசிஅழைப்பெடுத்து மாநகரசபை உறுப்பினர்களில் அநேகமானவர்கள் திரு ஆர்னோல்டையே திரும்பவும்வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்று விரும்புவதாகவும், இறுதித்தீர்மானம் எடுப்பதற்காக காலை 10.30 மணிக்கு கூட்டம் ஒன்று நடத்தப்போவதாகவும் சொன்னீர்கள்.

நான் கொழும்பில் இருந்து பிரயாணமாகி வந்துகொண்டிருக்கின்றேன் என்றும் மதியம் 1 மணிக்குப்பின்னரே யாழ்ப்பாணத்திற்கு வந்தடைவேன் என்றும் அதற்குப்பின்னர் கூட்டத்தை நடாத்தினால் நான் கலந்து கொள்வேன் என்றும் உங்களுக்கு நான் அறியத்தந்தேன்.

அதே தொலைபேசி உரையாடலில், புதிய மேயர் வேட்பாளர் சம்பந்தமாக எனது நிலைப்பாட்டைத் தெளிவாக திரும்பவும் கூறினேன்:

வரவு செலவுத்திட்டம் தோல்வியுற்றால் இராஜிணாமா செய்ய வேண்டியது ஒரு ஜனநாயக விழுமியம் மட்டும்அல்ல, அது ஒரு ஜனநாயக மரபாகவும் இருந்திருக்கின்றது. இந்த மரபு பின்பற்றப்படாத காரணத்தால்தான் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு “இராஜிணாமா செய்தவராக கருத வேண்டும்” என்று அது ஒருசட்டத்தின் தேவைப்பாடாகவும் ஏற்படுத்தப்பட்டது.

சட்டத்தின் செயற்பாட்டினால் இராஜினாமா செய்தவர் ஆனவர் மீண்டும் அப்பதவிக்குப்போட்டியிடுவது சட்டத்திற்கு முரணானது மட்டும் அல்லாமல் ஜனநாயக விழுமியங்களையும் மீறுகின்ற செயலாகும்.

ஆகையால் இராஜினாமா செய்தவரான ஆர்னோல்ட்டைத்தவிர வேறொருவரைத்தான் எமது வேட்பாளராகதெரிவு செய்ய வேண்டும் என்பதை திட்டவட்டமாக சொன்னேன்.

வரவுசெலவுத்திட்டத்தின் தோல்வியின் காரணமாக இராஜினாமா செய்தவர்களை மீளவும் வேட்பாளர்களாக நிறுத்தினால் தமது கட்சி அதை எதிர்க்கும் என்றும், அப்படி அல்லாது வேறு எவரையேனும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நிறுத்தினால், தாம் ஆரதவு கொடுப்போம் என்றும் சில நாட்களுக்கு முன்னர்தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனித்தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இவ் அறிவிப்பு எமது கட்சி வேட்பாளரை வேறு கட்சியினர் தெரிவு செய்யும் செயற்பாடு அல்ல. நான் மேற்சொன்ன ஜனநாயக விழுமியத்தின் அடிப்படையிலான அறிவிப்பே அது.

இலங்கைத்தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரினதும் கருத்துக்கு மாறாகவும், நீங்கள் எனக்குச் சொன்ன தங்களது சொந்தக்கருத்துக்கே மாறாகவும், தன்னிச்சையாக நேற்று காலை 10.30 மணிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யாழ் மாநகர சபை மேயர் பதவிக்கு, ஏற்கனவே இராஜனாமா செய்தவரான திரு ஆர்னோல்ட்டையே வேட்பாளராக அறிவித்திருந்தீர்கள்.

உங்களுடைய மேற்சொன்ன, தன்னிச்சையான, ஜனநாயக விரோத, சட்டவிரோத செயற்பாட்டினால் போட்டியின்றி வென்றிருக்க வேண்டிய யாழ் மாநகர சபை முதல்வர் பதவியை நாம் இழந்திருக்கின்றோம்.

தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் மிக முக்கிய அடையாளமான யாழ் மாநகர சபை தலைமையை எமது கட்சி இழந்தமைக்கு மேற்சொல்லப்பட்ட தங்களது நடவடிக்கைகளே காரணமாகும் என்பதையும், இதனால் ஏற்படும் கட்சியின் பின்னடைவுக்கும் தாங்களே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதையும் இத்தால் பதிவு செய்கின்றேன்.

இப்படிக்கு,

M.A.சுமந்திரன் பா. உ. யாழ் மாவட்டம் பிரதி பொதுச்செயலாளர் இலங்கை தமிழ் அரசுக் கட்சி

பிரதிகள்:

வைத்தியர் ப. சத்தியலிங்கம் பதில் பொதுச் செயலாளர் இலங்கை தமிழ் அரசுக் கட்சி

கொளரவ. சிவஞனம் சிறிதரன் பா. உ. யாழ் மாவட்டம்

https://www.pagetamil.com/165330/

சுமந்திரனின் கடிதம் கிடைத்தது; ஆனால் நாம் பொறுப்பான அரசியல்வாதிகள்: மாவை சூடு!

By admin -

கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களை தொடர்ந்து சுமந்திரன் பகிரங்கமாக பேசி வருகிறார். இரண்டாவது முறை கட்சி தலைமைக்கு எதிராக அவர் பகிரங்க அறிக்கை விடுத்துள்ளார். இது மிக பிழையானது. சுமந்திரனின் கடிதம் தொடர்பில் நாளை பதில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் குழுவொன்றின் சதி முயற்சியின் மூலம் யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார்.

இதையடுத்து, தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கட்சி தலைமைக்கு எதிராக கடிதம் ஒன்றை அனுப்பியதுடன், அதை அவரது தரப்பினர் பகிரங்கப்படுத்தினர்.

இது தொடர்பில், மாவை சேனாதிராசாவை தொடர்பு கொண்ட தமிழ்பக்கம், எம்.ஏ.சுமந்திரன் அனுப்பிய கடிதம் கிடைத்ததா என வினவியது.

“எம்.ஏ.சுமந்திரனிடமிருந்து மின்னஞ்சலில் கடிதமொன்று வந்துள்ளதாக எனக்கு சொல்லப்பட்டுள்ளது. இன்னும் அதை நான் படிக்கவில்லை. ஊடகங்கள் தரப்பிலிருந்து விசாரித்ததில் சில உள்ளடக்கங்களை அறிந்துள்ளேன்.

கட்சியின் உள்ளக விடயங்கள், உள்ளுக்குள்ளேயே பேசப்பட வேண்டியவை. அந்த ஒழுக்கத்தை நான் பின்பற்றுகிறேன். ஆனால் சுமந்திரன் கட்சி தலைமைக்கு எதிராக இரண்டாவது முறையாக பகிரங்கமாக அறிக்கை விடுத்துள்ளார். அது தவறானது. கட்சி நடவடிக்கைக்குரியது.

நாமும் பேசுவதெனில் பலதை பேசலாம். ஆனால், நாம் பொறுப்பான அரசியல்வாதிகள். அதனால் நாளை காலை கட்சிக்குள் இது பற்றி ஆலோசித்து, பதிலளிக்கத்தக்க விடயம் என்றால் பதிலளிப்பேன்“ என்றார்.

https://www.pagetamil.com/165334/

1 hour ago, zuma said:

உதைத்தான் ஊரிலே சொல்லுகின்றது, ஆட்டுகிக்கை மாட்டை விடுகின்றது என்று.

நீங்கள்  ஆடும் மாடும் இல்லை எல்லாம் குப்பை கூட்டம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது பொருத்தம் ஆக இருக்கும் என்று நினைக்கிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

இதை புலம்பெயர் கூட்டமைப்பு விசுவாசிகள் மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடுகின்றார்கள்.

சைக்கிள் அலர்ஜி கூட்டங்கள்

இன்று நடக்கும் கொள்ளுபாடு நிக்காது தொடரும் போல் இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

யாழ்.மாநகரை அபிவிருந்தியடைந்த மாநகராக  மாற்றியமைப்பதற்கான போராட்டத்தை முடிந்தளவிற்கு முன்னெடுப்பேன் என யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

Screenshot-2020-12-30-23-04-49-109-org-m

விடுங்கப்பா சிட்னி , சட்னி என்டு அளக்காமல் உள்ளது உள்ளபடி சொன்னமைக்கு வாழ்த்தி விடுவம்.. 💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ஈ.பி.டி.பியும் கூட்டமைப்பும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’

Editorial   / 2020 ஜூலை 12 , பி.ப. 04:53 - 0      - 52

-எஸ்.நிதர்ஷன்

யாழ். மாநகர சபையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளைக் கோரியமையாலேயே, தன் மீது சுமந்திரன் உறுப்புரிமை தொடர்பில் வழக்காடிவருகின்றாதெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், ஈ.பி.டி.பியினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் எனவும் சாடினார்.

யாழ்ப்பாணம் – நாவாந்துறையில், நேற்று (11) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஈ.பி.டி.பி கட்சியினரைக் கடுமையாகச் சாடி, தேர்தல் முடிவடைந்தப் பின்னர் யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்காக ஈ.பி.டி.பியிடம் சரணாகதி அடைந்தனரெனக் குற்றஞ்சாட்டினார்.

இப்போது தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் ஈ.பி.டி.பியினர் கூட்டமைப்பினையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஈ.பி.டிபியினரையும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனரென, மணிவண்ணன் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/85614?fbclid=IwAR3x3Rj-jCtFhF8hfV04oNiPc_ygaIZH1I8c2E1dZs3xmbgjme0nL-639V8

இப்ப தமிழ்த் தேசிய முன்னணியினருக்கு அந்த ஊறிய குட்டையிலிருந்து ஈபிடிபியினர் வெளியில வந்திவிட்டிருப்பினமே! 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.