Jump to content

பருவநிலை மாற்றம்: 2020இல் உலகம் சந்தித்த பேரிழப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பருவநிலை மாற்றம்: 2020இல் உலகம் சந்தித்த பேரிழப்புகள்

  • மாட் மெக்ராத்
  • சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி
29 டிசம்பர் 2020
பருவநிலை மாற்றம்: 2020இல் உலகம் சந்தித்த பேரிழப்புகள்

பட மூலாதாரம், BABU

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஒருபுறமிருக்க, தீவிர வானிலை சார்ந்த பாதிப்புகளின் காரணமாக 2020ஆம் ஆண்டில் பேரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கிறிஸ்டியன் எய்டு என்ற தொண்டு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக கருதப்படும் இந்த ஆண்டின் 10 பேரிழப்புகளை பட்டியலிட்டுள்ள அந்த அமைப்பு, இதன் காரணமாக கோடிக்கணக்கான பணம் மட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கான உயிர்களும் பறிபோயுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், இதில் பட்டியலிடப்பட்டுள்ள பத்து வானிலை சார்ந்த தீவிர பேரிடர்களில் அதிகபட்சமாக ஆறு ஆசிய கண்டத்தில் பதிவாகி உள்ளன. குறிப்பாக, இந்தியா மற்றும் சீனாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் மட்டும் மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அடுத்ததாக, அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் காட்டுத்தீ பாதிப்புகளினால் சுமார் நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு நேர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து உலகம் மீண்டெழுந்து வர போராடி வரும் வேளையில், லட்சக்கணக்கான மக்கள் இதுபோன்ற இயற்கை பேரிடர்களை சந்திக்க வேண்டியிருந்தது. 

ஆசியாவில் பதிவான மிகவும் மோசமான பேரிடர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக பொழிந்த பருவமழையும், அதையொட்டி ஏற்பட்ட புயல்களும் தொடர்புடையதாக இருந்தன. இந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளின் காரணமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், லட்சக்கணக்கானோர் தங்களது வசிப்பிடங்களை விட்டு இடப்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இவற்றின் காப்பீடு செய்யப்பட்ட இழப்புகளின் மதிப்பு மட்டும் 70,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த ஆண்டு இந்தியாவை காட்டிலும் வெள்ளப்பாதிப்புகளினால் பேரிழப்பை சீனாவே சந்தித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் வெள்ளப்பாதிப்புகளினால் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பை அந்த நாடு சந்தித்துள்ளது. ஆனால், உயிரிழப்புகளை பொறுத்தவரை இந்தியாவை விட குறைவாகவே இருந்தது.

பருவநிலை மாற்றம்: 2020இல் உலகம் சந்தித்த பேரிழப்புகள்

பட மூலாதாரம், REUTERS

மேற்குறிப்பிட்டுள்ள மதிப்புகள் நீண்டகாலம் நிலவிய இயற்கை பேரிடர்களின் இழப்புகளாக உள்ள நிலையில், இன்னும் சில பேரிடர்கள் மிகவும் குறுகிய காலத்தில் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தின.

கடந்த மே மாதம் வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயலால், ஒருசில தினங்களில் மட்டும் சுமார் 95,000 கோடிக்கும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டன.

"அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் 30 - 33 செல்சியஸுக்கு இடையே வெப்பநிலை பதிவாகியுள்ளதை நாங்கள் கண்டோம்" என்று புனேவில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் பருவநிலை மாற்ற விஞ்ஞானி டாக்டர் ராக்ஸி மேத்யூ கோல் கூறினார்.

"இந்த உயர் வெப்பநிலைகள் கடல் வெப்ப அலைகளை தூண்டியதே பருவமழைக்காலத்திற்கு முந்தைய புயல்களான ஆம்பன் மற்றும் நிசர்காவின் தீவிரத்தன்மைக்கு காரணமாக இருந்திருக்கக்கூடும்" என்று கிறிஸ்டியன் எய்டு அறிக்கைக்காக ராக்ஸி மேத்யூ தெரிவித்துள்ளார்.

"மழைக்காலத்திற்கு முந்தைய காலங்களில் வங்காள விரிகுடாவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட வலிமையான புயல்களில் ஆம்பனும் ஒன்றாகும்."

புயல் மற்றும் மழையின் காரணமாக ஆசிய நாடுகள் பேரிழப்பை சந்தித்த நிலையில், மறுபுறம் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வெட்டுக்கிளிகளின் படையெடுப்பினால் 60,000 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் ஏற்பட்ட தீவிர புயல் மற்றும் வெள்ளப்பாதிப்பு, மத்திய கிழக்கு நாடுகளில் பதிவான அதீத மழைப்பொழிவு, ஆப்பிரிக்காவில் படையெடுத்த வெட்டுக்கிளிகள் உள்ளிட்டவற்றை ஐக்கிய நாடுகள் சபை பருவநிலைமாற்றத்துடன் தொடர்புபடுத்தியுள்ளது

பருவநிலை மாற்றம்: 2020இல் உலகம் சந்தித்த பேரிழப்புகள்

பட மூலாதாரம், SOUTH SHORE FIRE STATION

கடந்த பிப்ரவரி மாதம் சூறாவளி சியாரா காரணமாக அயர்லாந்து, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பெருத்த சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக 14 பேர் உயிரிழந்ததுடன், 20,000 கோடிக்கும் ரூபாய்க்கும் மேல் இழப்புகள் ஏற்பட்டன.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இழப்புகள் அனைத்தும் காப்பீட்டு மதிப்பை கொண்டு கணக்கிடப்பட்டதால், உண்மையான இழப்பு இதைவிட அதிகமாக இருக்குமென்று கிறிஸ்டியன் எய்டு தெரிவித்துள்ளது.

பணக்கார நாடுகளில் அதிக மதிப்புமிக்க சொத்துகள் உள்ளதால், அவை ஒப்பீட்டளவில் தீவிர பேரிடர்களால் அதிக இழப்புகளை சந்திக்கின்றன.

ஆனால், சூறாவளி மற்றும் காட்டுத்தீ உள்ளிட்டவற்றின் தீவிரத்தை நிதிசார்ந்த இழப்புகளை கொண்டு மட்டும் அளவிட முடியாது. உதாரணமாக, தெற்கு சூடானில் ஏற்பட்ட வெள்ளம் பெரியளவில் நிதிசார்ந்த இழப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும், அது 138 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததுடன், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதித்துவிட்டது.

இந்த நிலையில், பேரிடர்களில் பருவநிலைமாற்றத்தின் பங்கு முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்து வருவதாகவும், இது வருங்காலத்திலும் தொடருமென்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்ற ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த டாக்டர் சாரா பெர்கின்ஸ்-கிர்க்பாட்ரிக், "2019ஆம் ஆண்டை போலவே, 2020ஆம் ஆண்டும் பேரழிவு மிகுந்ததாக உள்ளது" என்று கூறுகிறார்.

"உலகளாவிய சராசரி வெப்பநிலை 1 செல்ஸியஸ் உயர்வுடன் இவை அனைத்தையும் நாங்கள் காண்கிறோம். சராசரி நிலைமைகள் மற்றும் உச்சநிலைகளுக்கு இடையிலான முக்கியமான உறவை இது எடுத்துக்காட்டுகிறது."

பருவநிலை மாற்றம்: 2020இல் உலகம் சந்தித்த பேரிழப்புகள்

பட மூலாதாரம், REUTERS

"பருவநிலை மாற்றத்தின் வெளிப்பாடுகள் பேரிடர்களின் மூலம் வெளிப்படுமே தவிர, சராசரியான மாற்றங்களின் மூலமல்ல. உலகளாவிய சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக 2020ஆம் ஆண்டை போன்று மோசமான ஆண்டுகளை வருங்காலத்தில் எதிர்பார்க்கலாம்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

2021ஆம் ஆண்டிலும் இதேபோன்ற இழப்புகளைப் பற்றிய சம்பவங்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் உயரும் வெப்பநிலையின் மோசமான தாக்கத்தை தவிர்க்க உலகிற்கு உதவக்கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

"அமெரிக்காவின் அடுத்த அதிபராக பைடன் பதவியேற்க உள்ள நிலையில், உடனடி நடவடிக்கைக்கோரி உலகம் முழுவதும் இயக்கங்கள் முழங்கிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், கொரோனாவுக்கு பிறகான காலத்தில் இயற்கைக்கு உகந்த மேம்பாட்டு திட்டங்களில் முதலீடு அதிகரித்து வருவதாலும், பிரிட்டன் தலைமையில் பருவநிலை மாற்ற மாநாடு நடைபெறவுள்ளதையும் பயன்படுத்தி பாதுகாப்பான எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டியது அவசியம்" என்று கிறிஸ்டியன் எய்டை சேர்ந்த டாக்டர் கேட் கிராமர்.

https://www.bbc.com/tamil/global-55466967

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.