Jump to content

தமிழ் இறைமைச் சிந்தனைப் பள்ளியே தேசியத் தலைவரின் வழிகாட்டி – தமிழ்நெற் நிறுவக ஆசிரியர் ஜெயா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இறைமைச் சிந்தனைப் பள்ளியே தேசியத் தலைவரின் வழிகாட்டி – தமிழ்நெற் நிறுவக ஆசிரியர் ஜெயா

National_Leader_Prabakaran-696x522.jpg National Leader Hon. V.Pirabaharan
 62 Views

மாமனிதர் சிவராம், தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் இராணுவ-அரசியல் நடவடிக்கைகளைத் தனது போராட்ட, தென்னிலங்கை சார் பட்டறிவோடும் உலகளாவிய புவிசார் அரசியலின் சர்வதேச வியூகங்களோடும் பார்க்கத் தலைப்பட்டபோது, தலைவர் பிரபாகரனுக்கென்றோர் அரசியற் சிந்தனைப் பள்ளி இருக்கிறது என்பதை அடையாளங் கண்டுகொண்டார்.

தலைவர் பிரபாகரனின் ஐம்பதாவது பிறந்தநாளைக் குறியீடாக வைத்து தென்னிலங்கையையும் சர்வதேசத்தையும் நோக்கிச் சிவராம் வரைந்த கட்டுரை ஒன்று டெய்லி மிரர் என்கிற கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளேட்டில் 26 நவம்பர் 2004 இல் Velupillai Pirapaharan turns fifty today என்ற தலைப்பில் வெளியாகியது.

கடந்தகாலத் தமிழ்த் தேசியச் சிந்தனைப் பள்ளிகளைப் பற்றியும் அவற்றில் தலைவரின் தனித்துவம் எத்தகையது என்பதைப் பற்றியும் அறியவிரும்பும் அனைவரும் வாசிக்கவேண்டிய ஒரு அறிமுகக் கட்டுரை அது. அந்தக் கட்டுரையை இங்கு PDF இணைப்பாகத் தந்துள்ளேன். (https://www.tamilnet.com/img/publish/2020/12/Veluppillai_Pirapaharan_turns_fifty_today.pdf)

அந்தக் கட்டுரையில் தனக்கேயுரிய எழுத்துமிடுக்கோடு சிவராம் எழுதிய இரண்டு வரிகளே அவரின் சிந்தனை எவ்வாறு இருந்தது என்பதை வெளிக்காட்டுவதற்குப் போதுமானவை.

“Pirapaharan has emerged today as the chief political strategist of the Tamils. Whether they like it or not, it is a fact that the Sinhala polity and the world are dealing with him primarily as a political phenomenon,” என்று 2004 இல் எழுதினார் ‘தராக்கி’ (தாரகை) சிவராம்.

குறித்த ஓர் அரசியற் சிந்தனைப் பள்ளியை, பிரபாகரன் என்ற இளைஞனாக, விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரான இளம் வயதிலேயே அவர் தழுவிக்கொண்டுவிட்டார் என்பதை மட்டுமல்ல, அதை ஓர் அரசியல்-இராணுவப் பள்ளியாகக் கூர்ப்படையச் செய்ததன் மூலம் அதன் தத்துவாசிரியனாகவும் அவரே திகழ்கிறார் என்பதையும் சிவராம் உய்த்துணர்ந்து கொண்டதன் வெளிப்பாடே அந்தக் கட்டுரை.

தலைவரின் அரசியற் சிந்தனைப் பள்ளியின் உள்ளார்ந்த மூலமும் அதன் அடிப்படைகளும் மிகவும் கெட்டியானவை. அரசியற் பள்ளியைத் தழுவிய பின்னரே பிரபாகரன் அதற்கேற்ற இராணுவப் பள்ளியைக் கட்டியெழுப்புகிறார். அதன் இராணுவ, உளவியற் பக்கம் இன்றும் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கான அண்மைய ஓர் எடுத்துக்காட்டு ‘பிரபாகரன் சட்டகம்’ எனும் நூல். (www.eelambooks.com)

விடுதலைப் புலிகளின் கோட்பாட்டாளர், தலைமைப் பேச்சாளர் அல்லது தத்துவாசிரியர் என்று வெளியுலகுக்கு அடையாளம் காட்டப்பட்ட தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் போன்றோரின் போராட்ட வருகைக்கும் தலைவர் பிரபாகரனுடான அவரின் அறிமுகத்துக்கும் மிகவும் முற்பட்டது தலைவரின் அரசியற் சிந்தனைப் பள்ளி.

அந்தப் பள்ளியின் பிறப்பு 1969 இலேயே நடந்தேறிவிட்டது.

“The only point that needs to be emphasised here is that the ‘Navaratnam School’ put its thoughts into action for the first time by attempting to start an independent Tamil state postal service and a mock Tamil Police station,” எனக் குறிப்பிடுகிறார் தலைவரின் ஐம்பதாம் பிறந்தநாட் கட்டுரையில் சிவராம்.

அரும்புவிடும் விடுதலைத் தீப்பொறியாய், ஆனால் சிறுவனாயிருந்த பிரபாகரனுக்கு, 1969 இல் வயது பதினைந்து.

அந்த அரும்பே, ‘வாராது வந்த மாமணியாய்’ பின்னாளில் வளர்ந்து தமிழ் இறைமைக்கான சிந்தனைப் பள்ளியை தமிழர் நாகரிக வரலாற்றிலேயே பெரும் தேசிய விடுதலைப் போராட்டமாக மாற்றியதென்பது நாம் கண்கூடாய்க் கண்ட வரலாறு.

எழுபதுகளின் ஆரம்பத்தில் வ. நவரட்ணத்தின் வலது கையாயிருந்த வேணுகோபால் மாஸ்ரர் என்பவர் ஊடாக இளம் வயதுப் பிரபாகரனுக்கு தமிழ் இறைமைச் சிந்தனை கடத்தப்படுகிறது.

“In Valvettithurai and Pt. Pedro, the politics of the Navaratnam School was propagated by Venugopal Master, a school teacher. He was the Suyadchi Kazhakam’s candidate for Pt. Pedro at the 1977 elections. He is Pirapaharan’s political mentor, the man who shaped the political outlook of the young rebel when he set out to wage an armed struggle against the Sri Lankan state,” என்று குறிப்பிடுகிறார் சிவராம்.

“Pirapaharan has come a long way politically since he was one of Venugopal Master’s nocturnal students. At fifty, his biggest political achievement is the confluence of the Chelvanayagam and Navaratnam Schools of the Tamil movement,” என்று எழுதிச் செல்லும் அவர், அடைப்புக்குறிக்குள் ஒரு முக்கிய குறிப்பை வெளியிடுகிறார்.

“If anyone wants to understand the Tamil mindset epitomised by Pirapaharan and men and women of his generation, I suggest that he or she should read Navaratnam’s ‘Fall and Rise of the Tamil Nation’,” என்பதே அந்தக் குறிப்பு.

1969 இல் தோன்றிய இந்தச் சிந்தனைப் பள்ளிக்கான மூல நூல் பின்னாளிலேயே அதன் மூலகர்த்தாவான நாட்டுப்பற்றாளர் நவரட்ணம் அவர்களால் வெளியிடப்பட்டது.

விவிலியப் பாணியில் சொல்வதானால், எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் பழைய-ஏற்பாடு (Old Testament) அது.

அந்த நூல்தான் நவரட்ணம் அவர்கள் 1989 இல் எழுதி 1995 இல் வெளியிட்ட The Fall And Rise of The Tamil Nation.

முள்ளிவாய்க்கால் போன்றதோர் நிலை ஏற்படும்போது எவ்வாறு தமிழ்ப் போராட்டத் தலைமையும் தளபதிகளும் நடக்கவேண்டும் என்பதைக் கூட பல வருடங்களுக்கு முற்கூட்டியே விபரிக்கிறது நவரட்ணத்தின் பழைய-ஏற்பாட்டின் அறிமுகப் பாகத்தின் இறுதிப் பந்தி.

தமிழ் இறைமையை எந்த நிலைவரினும் சரணாகதியாக்க மாட்டோம் என்பதை எந்தச் சக்திக்கும் நிறுவக்கூடியதாக போராட்டத்தின் கட்டளைத் தலைமையும் அவர் தம் தளபதிகளும் செயற்படவேண்டும் என்கிறது அந்தப் பந்தி.

நவரட்ணம்-பிரபாகரன் அரசியற் சிந்தனைப் பள்ளியின் மெருகூட்டிய மூலநூலைத் தற்போது இரண்டாம் பதிப்பாக வெளியீட்டு உரிமையுடன் தமிழ்நெற் வெளிக்கொணர்ந்துள்ளது. இந்த நூலை அமேசனில் (அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், இத்தாலி, ஜப்பான்) அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும் (URL: https://www.amazon.com/dp/8293531037/ விலை: USD 18).

Namil-nation-194x300.jpgஇந்த இரண்டாம் பதிப்பில், நவரட்ணம் தொடர்பான, அவர் 97 ஆம் வயதில் 2006 ஆம் ஆண்டு மறையும் வரை வெளிவந்த முக்கியமான சில கட்டுரைகளும் பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, 1957 இல் ஈழத்தமிழர்களால் முதன்முதலாக சர்வதேசத்தை நோக்கி எழுதப்பட்ட சிறு நூலான Ceylon Faces Crisis என்பது பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது.

சிந்தனைப்பள்ளியின் மூலநூலில் எதிர்காலக் கேள்விகளுக்கான விடைகளும் இருக்கும் என்ற வகையில், நவரட்ணம் அவர்களின் நூல் எமது போராட்ட வரலாற்றில் தலையான நூலாகும். அதற்குரிய தரத்துடன் அதைத் தமிழ்நெற் மீளவெளியிட்டிருக்கிறது (இதன் தமிழ்ப் பதிப்பை வெளிக்கொணரவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்குத் தகுந்த ஒத்துழைப்பை சிந்தனைப் பள்ளியைச் சார்ந்த அனைவரிடமும் தமிழ்நெற் வேண்டிநிற்கிறது).

நவரட்ணத்தின் நூல் பழைய-ஏற்பாடென்றால், 2003 வரையான அரசியல் வரலாற்றைத் தரும் புதிய-ஏற்பாடாக தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் எழுதிய போரும் சமாதானமும் என்ற நூலைக் கொள்ளலாம்.

இவற்றின் தொடர்ச்சியாக 2009 வரையான இராணுவ, அரசியல் வரலாற்றை எழுதக்கூடிய தரத்தையும் தகைமையையும் இதுவரை எவரும் நிறுவவில்லை என்பது கவலைக்குரியது.

அடிப்படைகளில் தளர்ச்சியின்றித் தெளிவாய்ச் செயற்படல் என்ற அறத்தைத் திருவள்ளுவர் தனது பாணியில், “கற்க கசடற, கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்று எழுதினார். இதைக் கடைப்பிடித்தவர்களில் தமிழர் நாகரிகத்திலேயே முதன்மை உதாரணம் தலைவர் பிரபாகரன்.

தான் சிறுவயதிலேயே அடையாளம் கண்ட தமிழ் இறைமைச் சிந்தனைப் பள்ளியின் அடிப்படைகளுக்குத் தகவாகவே அவர் என்றும் நின்றார் என்பதே அந்தச் செய்தி. அவர் தகவாக நின்ற தன்மையின் ஆழத்தை எழுத்துகளால் வருணிக்க என்னால் இயலாது. ஆனால் சிந்தனைப் பள்ளியூடாகப் புரிந்துகொள்ள முடியும்.

அதேவேளை, “என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என் ஐ முன் நின்று கல் நின்றவர்” என்ற மறத்தை உரைக்கும் குறளின் மனப்பாங்குடன் போராடி, தம் உயிரையும் உடலையும் உடற்கூறுகளையும் ஆகுதியாக்கியோர் தலைவர் பிரபாகரனை ஈழத் தமிழ் இறைமையின் வடிவமாகப் பார்த்த போராளிகளும் மாவீரர்களும்.

navaratnum.jpgஅவர்களிற் பலர் நவரட்ணம் – பிரபாகரன் சிந்தனைப் பள்ளியை ஆழமாக அறிந்திருக்காவிட்டாலும் தாங்கள் போராடிய காலத்தில் தங்கள் தலைவர் ஊடாக அவர்கள் நடைமுறையில் தழுவியிருந்தது ஈழத் தமிழ் இறைமைச் சிந்தனைப் பள்ளி என்று பொதுவான பெயரில் அழைக்கப்படக்கூடிய அந்த அரசியற் சிந்தனைப் பள்ளியையே.

இன்று, 2009 இன் பின்னர், பதினொரு வருடம் கடந்த நிலையில் இந்தச் சிந்தனைப் பள்ளியை மீண்டும் முன்னாள் போராளிகளிற் சிலருக்கு நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.

மீண்டும் மீண்டும் எமது சிந்தனைப் பள்ளி தொடர்பான மீட்டற் பயிற்சிகளை மேற்கொண்டால் மாத்திரமே எமது ஊடகவியலாளர்களைச் சரியான செல்நெறியில் தொடர்ந்தும் பேணமுடியும் என்று சிவராம் அடிக்கடி சொல்வதுண்டு. அதைப் போன்ற ஒரு பயிற்சியே தற்போது முன்னாள் போராளிகள் சிலருக்கும் தேவைப்படுகிறது. இந்த இரண்டு வகைக்கும் சேர்ப்புடையவனாக உரிமையுடன் இதை நான் எடுத்துரைக்க முடியும்.

தலைவர் தனது சிந்தனைப் பள்ளியின் அடிப்படைகளில் எவ்வளவு ஆழமாகக் கருத்துரீதியாகவும் செயற்பாட்டிலும் உறுதியாக இருக்கிறார் என்பதையும், அவருக்கும் அவரது சிந்தனைப் பள்ளிக்கும் பலம் சேர்க்கவே தன் போன்ற ஆளுமைகளால் முடியும் என்பதையும், அந்தச் சிந்தனைப் பள்ளியின் போக்கைத் தீர்மானிக்கும் வகையிலான மதியுரைகளைப் பிரபாகரனுக்கே சொல்லத்தக்க எவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உள்ளோ வெளியிலோ இல்லை என்பதும் சிவராமின் கருத்தாக இருந்ததை நான் நன்கறிவேன்.

இந்தப் புரிதலே எமது நட்பின் ஆழத்துக்கும் அடிகோலியது. இதுவே இன்றுவரை தொடர்ச்சியாக நிரூபணமாகிக்கொண்டிருக்கும் திண்மையான உண்மையும் கூட.

ஒரு சந்தர்ப்பத்தில் தலைவர் தனது கைகள் இரண்டாலும் சிவராமின் கைகளை இறுகப் பற்றி கொழும்பில் இருக்காது வேறெங்கும் பாதுகாப்பாக இருக்குமாறு கண் பனிக்க வேண்டிக்கொண்டார். அதுவே தனது வாழ்வில் தான் அதீதமாக நெகிழ்ந்துபோன தருணம் என்று சிவராம் எனக்கு அடிக்கடி சொல்லுவார். “தலைவர் என்ர கையப் பிடிச்சு கேட்டிட்டார், எனக்கு அதுவே போதும், இனி எதுவுமே தேவை இல்லை” என்று அழகாக மட்டக்களப்புத் தமிழில் ஒரு போராளியாக அவர் சொன்னது இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

சிவராம் பட்டங்களுக்கு அப்பாற்பட்டவர். தான் செய்கின்ற பணிக்குரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டிய இடத்தில் கிடைத்ததைப் பெரும் பேறாக எண்ணினார். தனித்து நின்று கருமமாற்றினார்.

தனது போராட்டத்தைச் சிங்கத்தின் குகைக்குள் இருந்தே முன்னெடுத்தவர் சிவராம்.

அவர் தனது வாழ்வின் இறுதி வருடங்களில் நினைத்தது, செயலாற்றியது எல்லாம் ஒரு முனைப்பிலேயே இருந்தது.

தலைவரின் சிந்தனைப் பள்ளியை நன்கு உணர்ந்த நிலையில், அதைத் தமிழ் ஊடகப்பரப்பிலும், தென்னிலங்கை மற்றும் சர்வதேசப் பரப்பிலான சவால்களைக் கையாள்வதற்குரிய தகவற்போரிலும் எடுத்தாளவேண்டும் என்ற முனைப்பே அது. அதை அவர் சரிவரச் செய்தார்.

சிவராமின் இலட்சிய வாழ்க்கையின் இறுதி ஏழரை வருடங்களை நான் நன்கு அறிவேன்.

செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் கொள்கைகளுக்கும் அப்பால் பல சம்பவங்கள் அவர் யார் என்பதை எங்களுக்குத் தெளிவாகவே அடையாளம் காட்டியிருந்தன. தேசியத் தலைவர் அதை ஆழமாக அறிந்திருந்தார். தமிழ்ச்செல்வனும் பொட்டம்மானும் அதை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தனர்.

உண்மை இப்படியிருக்க, ஏதோ சிவராமின் சொல்லைக் கேட்டு பிரபாகரன் செயற்பட்டாராம், பாலசிங்கத்தின் சொல்லைக் கேட்கவில்லையாம், அதற்கு வரலாறு பதில் சொல்லுமாம் என்று நான் அறிந்த முன்னாள் போராளிக்குரல் ஒன்று தேசத்தின் குரலின் நினைவுநாளன்று முகம் காட்டி ஒலித்திருப்பதாக எனக்குச் சில நண்பர்கள் கூறி அதை ஒரு முறை பார்த்துவிடுமாறும் வலியுறுத்தினார்கள்.

இந்த மாதிரியான பதிவுகளுக்கெல்லாம் எதிர்வினைகள் செய்வதும் பின்னூட்டங்கள் செய்வதுமான நடவடிக்கைகளில் நான் பொதுவாக ஈடுபடுவதில்லை. அது எமது சிந்தனைப் பள்ளியின் மரபும் அல்ல.

இருப்பினும், தலைவருக்கும் மாமனிதர் சிவராமுக்கும் ஒருசேரக் களங்கம் கற்பிக்க விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வந்த எவரேனும் நேரடியாகவோ மறைமுகமாகவோ முயன்றாலும், அவருக்குப் பின்னால் எந்தத் அர்ப்பணிப்பு இருந்தாலும் அதைப் பார்த்து விட்டு சாதாரணமாக நாம் கடந்து போய்விடமுடியாது.

சொல்ல வேண்டியது தக்க தருணத்தில் சொல்லப்பட வேண்டும், பதியவேண்டியது பதியப்படவேண்டும். அதைச் செய்வதற்குரிய தருணம் வந்திருக்கிறது போலும். எனவே, அதை அடுத்தொரு பதிவில் பார்ப்போம்.

அதுவரை, நூலை அமேசனில் வாங்குங்கள், படியுங்கள், பதிவிடுங்கள்.

‘வாழ்க, வளர்க’ என்று சிவராம் நகைப்புடன் விடைபெறும் பாங்குடன்.

-ஜெயா

 

https://www.ilakku.org/?p=38185

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.