Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மார்கழி மாதமடி மழை சிந்தும் நேரமடி கண்ணம்மா பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா துன்பமும் கடந்து போய் இனிதே மலர்க இனி வரம் ஆண்டு.அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.Happy New Year .🙏


மார்கழி மாதமடி மழை சிந்தும் நேரமடி கண்ணம்மா  பா.உதயன்
———————————————————————————
மார்கழி மாதமடி கண்ணம்மா 
மழை சிந்தும் நேரமடி 
பொழுது புலர்ந்ததடி 
பூத்திருக்கு காலையடி கண்ணம்மா 
பாவை  இன்னும் துயிலுவியோ 
பரம்தாமன் புகழ் பாடல்லையோ 

மார்கழி மாதமடி மலரவன் மேனியிலே 
மழை சிந்தும்  நேரமடி 
மங்கை உன் கூந்தலை போல் 
கங்கை அணிந்தவனை 
காதல் செய்யல்லையோ கண்ணம்மா 
கன்னி நீயும் துயிலுவியோ 

கடும் குளிர் காலையடி 
காலைக் கதிரவனும் 
கண் விழிக்கும் நேரமடி 
காலைப் பூ சூடலையோ கண்ணம்மா 
கண் இமைகள் பாடல்லையோ  
காலை இன்னும் புலரலையோ கண்ணம்மா 

மார்கழி பனி துளியும் 
மல்லிகை பூ வாசனையும் 
கோயில் மணி ஓசையிலும் 
குயிலின் இசை பாடலிலும்  
கன்னி இன்னும் துயிலுவியோ 
கண்ணன் மடி தேடலையோ கண்ணம்மா 

இமய மலை தலையில்  நின்று
பரமசிவன் திருநடனம் 
இவன் பாதம் பட்ட பனி மலையில் 
கடல் அலை போல் கங்கையடி 
கங்கை நதி பார்த்திருக்க 
கண்ணே உன் காலடியை கண்ணம்மா 

காலை நேர கனவு வந்து 
காதல் செய்யும் நேரமோடி 
கண்ணே உன் கனவுகளை கண்ணம்மா 
கங்கையிலே உயிர்ப்பிப்போம்  
மகா நதியில் சிலை வடித்து 
வரம் பெறுவோம் வாடி பெண்ணே  

நீண்ட சடை முடியான் 
நீராட அழைகின்றான் 
நிலவில் என்ன உறக்கமடி 
நீல வானம் பாடுதடி 
கூடி வாடி பெண்ணே பாடி நாமும் 
அந்த பரம் பொருளை 
தேடி செல்வோம் .

பா.உதயன்✍️ 


 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்கழி  மாதம் என்பதே... பக்தி பரவசமூட்டும் மாதம் என்பது, என் எண்ணம்.
அந்தக் குளிரில்... "திரு வெம்பா" பாடலை  பாடிக் கொண்டு,
பல அடியார்களும், கல்லூரி மாணவர்களும்... 
நல்லூர் கோவிலை நோக்கி செல்லும் காட்சி  இனிமையானது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்கழிப் பணியில் நனைந்த உடல் சிலிர்த்து எழுவதுபோல் கவிதை படிக்கும்போதே தேகம் சிலிர்க்கின்றது நண்பரே......நல்ல கவிதை.....!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், குளிர் நீரில் குளித்து திருவெண்பா பெண் பிள்ளைகளுடன் பாடிய அனுபவம் இன்றும் பசுமையாக இருக்கு😊

 நன்றி நல்லதொரு கவிதைக்கும் பழைய நினைவுகளை மீண்டியதிற்கும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2021 at 13:58, தமிழ் சிறி said:

மார்கழி  மாதம் என்பதே... பக்தி பரவசமூட்டும் மாதம் என்பது, என் எண்ணம்.

 

20 hours ago, suvy said:

மார்கழிப் பணியில் நனைந்த உடல் சிலிர்த்து எழுவதுபோல் கவிதை படிக்கும்போதே தேகம் சிலிர்க்கின்றது நண்பரே......நல்ல கவிதை.....!  👍

 

19 hours ago, உடையார் said:

புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், குளிர் நீரில் குளித்து திருவெண்பா பெண் பிள்ளைகளுடன் பாடிய அனுபவம் இன்றும் பசுமையாக இருக்கு😊

 நன்றி நல்லதொரு கவிதை

தமிழ் சிறி,சுவே,உடையார் உங்கள் அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.