Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2021]


Recommended Posts

நாற்சந்தியில் பதியப்பட்ட மட்டுறுத்தல் தொடர்பான திரி நீக்கப்பட்டுள்ளது. மட்டுறுத்தல் தொடர்பான கருத்து முரன்பாடு இருந்தால் அதனை நேரடியாக மோகனிடமோ அல்லது ஏனைய மட்டுறுத்தினர்களிடமோ தனிமடல் மூலம் அல்லது முறைப்பாடு மூலம் தெரிவிக்கலாம். நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

மெய்யெனப்படுவது பகுதியில் காணொளிகளின் தொகுப்பாக இணைக்கப்பட்ட பதிவு ஒன்று நீக்கப்பட்டுள்ளது. 

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம். பரபரப்பைத் தூண்டும் எதுவித உண்மைத்தன்மையும் இல்லாத சாமியார்களின் வழிபாடுகள் பற்றிய விடயங்களை கருத்துக்களத்தை குப்பைத்தொட்டியாக கருதி இணைக்கவேண்டாம்.

தொடர்புடைய களவிதி: 

  • எதுவித அடிப்படையும், உண்மைத்தன்மையும் அற்ற சாத்திரம், மூட நம்பிக்கைகள், சாமியார்கள் வழிபாடு சம்பந்தமான பதிவுகள் தவிர்க்கப்படல் வேண்டும். தீவிர நம்பிக்கையை ஊக்கப்படுத்தாமல் பொழுதுபோக்காக அமையும் பதிவுகளுக்கு இவ்விதி தளர்த்தப்படுகின்றது.
Link to comment
Share on other sites

செய்தி திரட்டி பகுதியில் அநாகரீகமான தலைப்புடன் இணைக்கப்பட்ட திரி ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

பதிவுகளை இணைப்பவர்கள் கருத்துக்களத்தை குப்பைத்தொட்டியாகக் கருதாமல்  பொறுப்புணர்வுடன் இணைத்தல்வேண்டும்.

Link to comment
Share on other sites

தாயக தமிழ் அரசியல்வாதியின்  குடும்ப உறுப்பினர் ஒருவரது தனிப்பட்ட வாழ்வில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு தொடர்பான திரி நீக்கப்பட்டது.

இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது எனும் ஒரு காரணமே யாழ் களத்தின் அடிப்படையை அதன் பண்பை மீறுவதற்கான காரணமாக அமையாது என்பதை நினைவில் கொள்ளவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.