Jump to content

🌱கள உறவுகளின் சிந்தையில் உதித்த நற்சிந்தனைகள், வாழ்க்கைத் தத்துவங்கள்🌳

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

சும்மா இருப்பதே சுகம்

8 hours ago, goshan_che said:

இங்கே சும்மா இருப்பது என்பது சோம்பேறியாக இருப்பதல்ல.

தேவைக்கு ஏற்ற உழைப்பை இட்டபடியே, உழைப்பு இடும் முறையை, உழைப்பின் பலனை பற்றி அலட்டி கொள்ளாமல் இருக்கும் மனநிலை.

8 hours ago, goshan_che said:

ஒரேவேலைக்கு ஏன் இந்த இருவேறுபட்ட மனப்பிரதிபலிப்புகள்?

8 hours ago, goshan_che said:

ஒன்றை சும்மா செய்கிறோம், இன்னொன்றை மனதில் சுமந்து செய்கிறோம். அவ்வளவுதான்.

இரெண்டு சந்தர்பத்தையும் சும்மா செய்யும் மனப்பக்குவம் கைவரப் பெற்றால். அந்த வேலை சும்மா செய்யும் இலகுவான, ஏன் இன்புற கூடிய வேலையாக மாறிவிடும்.

கோஷன்,

'சும்மா இரு' என்ற ஞானியர் கூற்றுக்கு உங்கள் விளக்கம் சுவாரசியமானதாகவும், நியாயமானதாகவும் உள்ளது.

முற்றும் துறந்தோர்க்கு இறைவனை அடைவதே குறிக்கோளாக இருக்கும்போது,  அவர்கள் செய்யும் தவத்தின்போது மனம் அலைபாயாதிருக்க மனதை நோக்கிச் சொல்லப்பட்ட கட்டளை/அறிவுறுத்தலே இந்த 'சும்மா இரு' என்ற வார்த்தைகள் என்பது என் எண்ணக்கரு.

குழந்தை / குரங்கு போல் குழப்படி செய்யும் மனதைச் செல்லமாக 'சும்மா இரு' என்று கட்டளை இடுவதன் மூலம் அது அலைபாயாமல் ஒருநிலைப்படுத்தலாம் என்று ஒரு meditation வகுப்பில் கற்றேன். 

ஆனால், உலகியலில் ஈடுபடும் எம் போன்றோர்க்கு அன்றாடக் கருமங்களைச் செவ்வனே செய்ய மன ஒருமைப்பாடு அவசியமாகிறது. அவ்வாறு மனதை ஒருமுகப்படுத்த உங்களது இந்தப் பார்வை பெரிதும் துணை புரியும் என்பது என் எண்ணம். (மேற்கோள் காட்டப்பட்ட உங்கள் கருத்துக்களை மீண்டும் படித்துப் பாருங்கள்.)

ஆகவே ஞானியர் பார்வையிலும் சரி, உங்கள் பார்வையிலும் சரி 'சும்மா இருத்தல்' என்பது 'மனதை அலைபாய விடாமல் சும்மா வைத்திருத்தல் - தெளிந்த நீரோடை போல வைத்திருத்தல்' என்பதைப் புரிந்து கொள்கிறேன்! இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்றால், மனதை ஒருமுகப்படுத்துதலின் நோக்கமே என்பேன். அதாவது துறவறத்தில் இறைவனை அடைவதற்காகவும், உலகியலில் நம் நாளாந்தக் கடமைகளை மனவுறுதியுடனும், தெளிவுடனும், விளைவுகளில் கவனம் செலுத்தாமல் processஇல் கவனம் செலுத்தி ஆத்மார்த்தமாகச் செவ்வனே செய்வதற்கும் இந்த 'சும்மா இரு' என்ற கட்டளை துணை புரிகிறது.

'சும்மா இருப்பது - மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி?' என யாராவது கேட்டால், அதற்கான ஒரு வழிமுறை தான் இங்கு பலரும் கலந்துரையாடிய தியானம் என்கிற meditation. துறவறத்தில் இது பல நாள், மாத, வருடக் கணக்காகலாம்; உலகியலில் இதை நாம் நம் தேவையைப் பொறுத்து சில, பல நிமிடங்களுக்குள் மட்டுப்படுத்துவோம். அத்துடன் நமக்குப் பிடித்த செயல்களில் நம்மை முழுமையாக ஈடுபடுத்தியும் மனதை ஒருமுகப்படுத்துவோம்; உதாரணத்துக்கு மும்முரமான வேலை நாள் ஒன்றில் இடையிடையே பிடித்த இசையை மெய்மறந்து கேட்பது / அனுபவித்துப் பாடுவது. 

Edited by மல்லிகை வாசம்
தெளிவுபடுத்த மேலதிக விளக்கம்
 • Like 1
Link to comment
Share on other sites

 • Replies 50
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

மல்லிகை வாசம்

கள உறவுகளுக்கு வணக்கம், நம் நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு அறிஞர்கள், ஞானிகள், பெரியோர் என்று பலரிடமிருந்து எண்ணற்ற நற்சிந்தனைகளை, வாழ்வியல் தத்துவங்களை, கோட்பாடுகளைக் கேட்டிருப்போம், கற்றிருப்போம்

மல்லிகை வாசம்

ரதி, எனக்கும் இதே உணர்வு வருவதுண்டு, குறிப்பாக நம்மோடு படித்தோர்க்கு வளர்ந்த பிள்ளைகள் இருப்பதைப் பார்க்கும்போது.  எனினும் பலரும் சொல்வதுபோல 'வயது சும்மா ஒரு எண்ணிக்கை மட்டுமே' என்று நினைத்த

suvy

நீங்கள் தியானம் என்று கூறும்போதுதான் ஞாபகம் வருகுது....! தியானத்துக்கு அமைதியான இடங்கள் நல்லதுதான். ஆனால் சன சந்தடி நிறைந்த இடங்களிலும் தியானத்தை அப்பியாசிக்க முடியும். முயன்று பாருங்கள். "பத்துப

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

பிகு

இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம்தானே இதை ஒரு மேட்டர் என எடுத்து, சும்மா இவ்வளவு எழுதி இருக்கிறார் கோஷான் என என நினைபவர்கள் மன்னிக்கவும். 

என் பார்வையில் பெரும்பாலான தத்துவங்களில் புதிதாக ஒன்றும் இல்லை. பல ஞானியர், அறிஞர் பல்வேறு கோணங்களிலிருந்து, விதம் விதமான கண்ணாடிகளூடாக, வெவ்வேறு காலப்பகுதியில், வெவ்வேறு தேசங்களில் இருந்து அவதானித்ததைச் சொன்னதனாலேயே அவை எல்லாம் வெவ்வேறு தத்துவங்களாகவோ, புதியதாகவோ தெரிகின்றன; சாராம்சம் ஒன்று தான்!

இட்டிலியாகவும், தோசையாகவும், வடையாகவும் நாம் சுவைப்பதெல்லாம் உழுந்தின் பல்வேறு தயாரிப்புக்களே! ஆனாலும் தோசையின் சுவை பிடித்தோர்க்கு இட்டிலியின் சுவை பிடிபடவேண்டிய அவசியமில்லையே! 

எனவே கள உறவுகளே! உழுந்து போன்ற உண்மைகளை உங்கள் அனுபவங்கள் எனும் செய்முறை மூலம் விதம் விதமான தோசைகளாய், இட்லிகளாய், இன்ன பிறவாய் உங்கள் நற்சிந்தனைகளாகத் தாருங்கள்!

'சும்மா இரு'இல் புது ஒளியைப் பாய்ச்சி என் 'மனதைச்' சும்மா கலக்கிய உங்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் கோஷன்! 😊

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கோசான்-சே சொல்லும் "சும்மா இரு" என்பதற்கு லௌகீகமாக நல்ல விளக்கம் சொல்கிறார்....!

ஆன்மீகத்தில் அது முற்றிலும் மாறுபாடானது. உன்னுடைய மூச்சுக்காற்றை கவனித்து கொண்டிரு என்று சொல்வார்கள்.ஒருத்தர் ஒற்றையடிப் பாதையில் தனியே சென்று தன்னுடைய இலக்கை அடைவது போன்றதாகும்......!

பிறப்பெடுத்த ஒவ்வொரு ஆன்மாவின் பயணமும் முடிவில் இறையுடன் ஒன்றுவதாகும்.இடையில் வரும் இன்ப துன்பம் எல்லாம் வரும் போகும்.அதிலேயே நிக்கவோ நினைத்து மறுகவோ கூடாது.....!

அரசருக்கே செல்வம் குடுக்குமளவு செல்வந்தராக இருந்தவர் பட்டினத்தார்."அவர் அவ்வளவையும் துறந்து "காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடை வழிக்கே" என்று சொல்லிவிட்டு இரண்டு கோவணத்துடன் கிளம்புகிறார்.தாயார் மறித்து மகனே துறவறத்துக்கு போகிறாய் எதற்கு இரண்டு கோவணம் என்று சொல்ல அவர் ஒன்றை விடுகிறார். அப்போது தாய் சொல்கிறார் பரவாயில்லை கொண்டு போ ஆனால் அது தொலைந்தாலோ எலி கடித்தாலோ கவலைப்படாதே.அதாவது அதில்கூட ஆசை வைக்காதே என்கிறார்.....!

அந்த பட்டினத்தார் ஒரு கோவில் வாசலில் இருந்து பிட்சை  எடுக்கிறார் அப்போது அவரிடம் ஒருவர் வந்து யாசகம் கேட்கிறார்.பட்டினத்தார் அவரிடம் சொல்கிறார் என்னிடம் எதுவும் இல்லை நான் சும்மா இருக்கிறன் பக்கத்து வாசலில் ஒருவர் குடும்பமாய் இருக்கிறார் அவரிடம் சென்று கேள் என்கிறார். அந்த வாசலில் பத்திரகிரியார் (அவரும் ஒரு அரசன்.பின்பு துறவறம் ஏற்றவர்)கையில் ஒரு சட்டியோடும் கூட ஒரு நாயோடும் இருக்கிறார்.அதுதான் அவர் குடும்பம். வந்தவர் இவரிடம் நீங்கள் குடும்பமாய் இருக்கிறீர்கள்.அந்த வாசலில் இருப்பவர் உங்களிடம் யாசகம் கேட்க சொன்னார் என்று சொல்லவும் இவர் சட்டியையும் எறிந்து உடைத்து விட்டு அங்கே ஓடுகிறார். அங்கே அவர் யாரோ கூழ் ஊத்த வெறுங்கையில் ஏந்திக் குடிக்கிறார். பட்டினத்தார் கையில் ஒழுகும் கூழை பத்திரகிரியார் குடித்து ஞானம் பெற்றார்.....!

செம்மான் மகளைத் திருடும் திருடன்,
பெம்மான் முருகன், பிறவான், இறவான்,
"சும்மா இரு சொல் அற" என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. (12)

---அநுபூதியில் அருணகிரியார்---

 • Like 3
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பெற்றவரை, உற்றவரை நோக்கினேன், நல்லவன், வல்லவன், பண்பானவன் எனப் புகழ்ந்தார்கள். 

என் உள்ளத்தை நோக்கினைன் ஏளனமாகச் சிரித்தது.

அறியாத வயதில்..... தெரிந்து செய்ததல்ல. மனம் ஆறுதல் கொண்டது.

இது என் வாழ்வில் பெற்ற அனுபவம். எல்லோர் வாழ்விலும் நிச்சயம் இருக்கும் நம்புகிறேன்.

ஏளனம் செய்யாத உள்ளம் கொண்டவர் ஒருவர் இருந்தாலும் எனக்குக் கல்லெறியலாம்.

வேண்டுமானால் வீம்புக்கு வாதாடி மனம்தேறலாம்.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மல்லிகை வாசம் said:

கோஷன்,

'சும்மா இரு' என்ற ஞானியர் கூற்றுக்கு உங்கள் விளக்கம் சுவாரசியமானதாகவும், நியாயமானதாகவும் உள்ளது.

முற்றும் துறந்தோர்க்கு இறைவனை அடைவதே குறிக்கோளாக இருக்கும்போது,  அவர்கள் செய்யும் தவத்தின்போது மனம் அலைபாயாதிருக்க மனதை நோக்கிச் சொல்லப்பட்ட கட்டளை/அறிவுறுத்தலே இந்த 'சும்மா இரு' என்ற வார்த்தைகள் என்பது என் எண்ணக்கரு.

குழந்தை / குரங்கு போல் குழப்படி செய்யும் மனதைச் செல்லமாக 'சும்மா இரு' என்று கட்டளை இடுவதன் மூலம் அது அலைபாயாமல் ஒருநிலைப்படுத்தலாம் என்று ஒரு meditation வகுப்பில் கற்றேன். 

ஆனால், உலகியலில் ஈடுபடும் எம் போன்றோர்க்கு அன்றாடக் கருமங்களைச் செவ்வனே செய்ய மன ஒருமைப்பாடு அவசியமாகிறது. அவ்வாறு மனதை ஒருமுகப்படுத்த உங்களது இந்தப் பார்வை பெரிதும் துணை புரியும் என்பது என் எண்ணம். (மேற்கோள் காட்டப்பட்ட உங்கள் கருத்துக்களை மீண்டும் படித்துப் பாருங்கள்.)

ஆகவே ஞானியர் பார்வையிலும் சரி, உங்கள் பார்வையிலும் சரி 'சும்மா இருத்தல்' என்பது 'மனதை அலைபாய விடாமல் சும்மா வைத்திருத்தல் - தெளிந்த நீரோடை போல வைத்திருத்தல்' என்பதைப் புரிந்து கொள்கிறேன்! இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்றால், மனதை ஒருமுகப்படுத்துதலின் நோக்கமே என்பேன். அதாவது துறவறத்தில் இறைவனை அடைவதற்காகவும், உலகியலில் நம் நாளாந்தக் கடமைகளை மனவுறுதியுடனும், தெளிவுடனும், விளைவுகளில் கவனம் செலுத்தாமல் processஇல் கவனம் செலுத்தி ஆத்மார்த்தமாகச் செவ்வனே செய்வதற்கும் இந்த 'சும்மா இரு' என்ற கட்டளை துணை புரிகிறது.

'சும்மா இருப்பது - மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி?' என யாராவது கேட்டால், அதற்கான ஒரு வழிமுறை தான் இங்கு பலரும் கலந்துரையாடிய தியானம் என்கிற meditation. துறவறத்தில் இது பல நாள், மாத, வருடக் கணக்காகலாம்; உலகியலில் இதை நாம் நம் தேவையைப் பொறுத்து சில, பல நிமிடங்களுக்குள் மட்டுப்படுத்துவோம். அத்துடன் நமக்குப் பிடித்த செயல்களில் நம்மை முழுமையாக ஈடுபடுத்தியும் மனதை ஒருமுகப்படுத்துவோம்; உதாரணத்துக்கு மும்முரமான வேலை நாள் ஒன்றில் இடையிடையே பிடித்த இசையை மெய்மறந்து கேட்பது / அனுபவித்துப் பாடுவது. 

3 hours ago, suvy said:

கோசான்-சே சொல்லும் "சும்மா இரு" என்பதற்கு லௌகீகமாக நல்ல விளக்கம் சொல்கிறார்....!

ஆன்மீகத்தில் அது முற்றிலும் மாறுபாடானது. உன்னுடைய மூச்சுக்காற்றை கவனித்து கொண்டிரு என்று சொல்வார்கள்.ஒருத்தர் ஒற்றையடிப் பாதையில் தனியே சென்று தன்னுடைய இலக்கை அடைவது போன்றதாகும்......!

பிறப்பெடுத்த ஒவ்வொரு ஆன்மாவின் பயணமும் முடிவில் இறையுடன் ஒன்றுவதாகும்.இடையில் வரும் இன்ப துன்பம் எல்லாம் வரும் போகும்.அதிலேயே நிக்கவோ நினைத்து மறுகவோ கூடாது.....!

அரசருக்கே செல்வம் குடுக்குமளவு செல்வந்தராக இருந்தவர் பட்டினத்தார்."அவர் அவ்வளவையும் துறந்து "காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடை வழிக்கே" என்று சொல்லிவிட்டு இரண்டு கோவணத்துடன் கிளம்புகிறார்.தாயார் மறித்து மகனே துறவறத்துக்கு போகிறாய் எதற்கு இரண்டு கோவணம் என்று சொல்ல அவர் ஒன்றை விடுகிறார். அப்போது தாய் சொல்கிறார் பரவாயில்லை கொண்டு போ ஆனால் அது தொலைந்தாலோ எலி கடித்தாலோ கவலைப்படாதே.அதாவது அதில்கூட ஆசை வைக்காதே என்கிறார்.....!

அந்த பட்டினத்தார் ஒரு கோவில் வாசலில் இருந்து பிட்சை  எடுக்கிறார் அப்போது அவரிடம் ஒருவர் வந்து யாசகம் கேட்கிறார்.பட்டினத்தார் அவரிடம் சொல்கிறார் என்னிடம் எதுவும் இல்லை நான் சும்மா இருக்கிறன் பக்கத்து வாசலில் ஒருவர் குடும்பமாய் இருக்கிறார் அவரிடம் சென்று கேள் என்கிறார். அந்த வாசலில் பத்திரகிரியார் (அவரும் ஒரு அரசன்.பின்பு துறவறம் ஏற்றவர்)கையில் ஒரு சட்டியோடும் கூட ஒரு நாயோடும் இருக்கிறார்.அதுதான் அவர் குடும்பம். வந்தவர் இவரிடம் நீங்கள் குடும்பமாய் இருக்கிறீர்கள்.அந்த வாசலில் இருப்பவர் உங்களிடம் யாசகம் கேட்க சொன்னார் என்று சொல்லவும் இவர் சட்டியையும் எறிந்து உடைத்து விட்டு அங்கே ஓடுகிறார். அங்கே அவர் யாரோ கூழ் ஊத்த வெறுங்கையில் ஏந்திக் குடிக்கிறார். பட்டினத்தார் கையில் ஒழுகும் கூழை பத்திரகிரியார் குடித்து ஞானம் பெற்றார்.....!

செம்மான் மகளைத் திருடும் திருடன்,
பெம்மான் முருகன், பிறவான், இறவான்,
"சும்மா இரு சொல் அற" என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. (12)

---அநுபூதியில் அருணகிரியார்---

மல்லிகை, சுவி அண்ணா,

நான் சும்மா எழுதியதை, இந்த வசனத்தின் ஆன்மீக அர்த்தத்துடன் ஒப்பிட்டு சும்மா கலக்கி விட்டீர்கள் 👏🏾🙏🏾.

நான் சொல்வது உலகியலை மையப்படுத்தியே இருந்தாலும் இதில் ஆன்மீகத்துக்கு ஒரு தொடர்பிருப்பதாக நான் எண்ணுகிறேன். 

மனதை ஒரு நிலைப்படுத்தல், பட்டினத்தடிகள் போல் உலகியல் இன்ப துன்பங்களை துறந்தல் என்ப ஆன்மீகத்தின் முதல் இரண்டாம் படிகள் என வைத்துக்கொண்டால், முன் ஆன்மீக நிலை என்று ஒன்று இருக்கிறது என்பது என் கருத்து (pre spiritual stage).

இந்த முன்ஆன்மீக நிலையில் விரக்தி, எதிர்பார்ப்பு, கோப தாபங்கள் என்பனவற்றை நாம் முடிந்தளவு விலத்தி, சும்மா இருக்க பழகுவதே அடுத்த கட்டத்துக்கு போவதற்க்கான இன்றி அமையாத பயிற்சி என நான் எண்ணுகிறேன்.

ஆங்கிலத்தில் being at peace with oneself (தன்னளவில் சமாதானமாதல்) என்பார்கள். எமது வாழ்வை, இழப்புகளை, வரவுகளை, முடியாமல் போனவற்றை, சாதனைகளை இன்னும் பலதை கூட்டி, கழித்து, வாழ்க்கைக்கான சுடெண்ணை தெரிந்து கொண்டு, அதை ஏற்று கொள்ளும் நிலை.

நிச்சயமாக இந்த நிலை கைகூடும் போது, உலகியல் அன்றாட வாழ்க்கை இலகுவாகும் ஆனால் அது மட்டும் அல்ல, அடுத்த கட்டங்களான மனதை ஒரு நிலையாக்கல், பற்றுக்களை துறத்தல் என்பனவும் இலகுவாக கைகூடும் என்று நான் நினைக்கிறேன்.

இவ்வாறு  தன்னளவில் சமாதானாமாகாமல் மனதை ஒரு நிலைபடுத்துவது கஸ்டமாக இருக்கும் என நினைக்கிறேன்.

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

மனதை ஒரு நிலைப்படுத்தல், பட்டினத்தடிகள் போல் உலகியல் இன்ப துன்பங்களை துறந்தல் என்ப ஆன்மீகத்தின் முதல் இரண்டாம் படிகள் என வைத்துக்கொண்டால், முன் ஆன்மீக நிலை என்று ஒன்று இருக்கிறது என்பது என் கருத்து (pre spiritual stage).

இந்த முன்ஆன்மீக நிலையில் விரக்தி, எதிர்பார்ப்பு, கோப தாபங்கள் என்பனவற்றை நாம் முடிந்தளவு விலத்தி, சும்மா இருக்க பழகுவதே அடுத்த கட்டத்துக்கு போவதற்க்கான இன்றி அமையாத பயிற்சி என நான் எண்ணுகிறேன்.

11 hours ago, goshan_che said:

தன்னளவில் சமாதானாமாகாமல் மனதை ஒரு நிலைபடுத்துவது கஸ்டமாக இருக்கும்

உங்களது கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன் கோஷன். 👍

அத்துடன் உலகியலில் இருப்பவர், முதல் இரு நிலைகளுக்கிடையிலும் அங்குமிங்குமாக ஊசலாடுவது சகஜமானது என நான் எண்ணுகிறேன்; வயதும், பக்குவமும் அதிகரிக்க அடுத்தடுத்த நிலைகளில் உறுதியாக முன்னேறிச்செல்வது எளிதாகும் என்பதும் என் எண்ணம். 

இதே ஊசலாட்டம் இரண்டாம் படியிலிருந்து மூன்றாம் படிக்குச் சென்றபிறகும் இருக்கக்கூடும். முற்றும் துறந்த முனிவர்களுக்கும் கோபம், பெண்ணாசை போன்ற குணங்கள் வந்துபோனதுண்டு என்று சொல்வதும் இதனால் தானோ! மனம் ஊசலாடுகிறதே என்று மனம் கலங்காமல் ஒரு விழிப்புணர்வு நிலையில் 'சும்மா இரு'த்தலும் முக்கியம் என நான் நினைக்கிறேன்! 😊

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நாளை தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை உலகமெங்குமுள்ள தமிழர்கள் நாம் கொண்டாடுகிறோம். 

சூரியனுக்கும், உழவர்களுக்கும், பசு மாடுகளுக்கும் நன்றி செலுத்தும்முகமாக் கொண்டாடப்படும் இந்தத் திருநாளை முன்னிட்டு ஒரு சிறு நற்சிந்தனை:

நாம் பிறருக்கு நமது நன்றியைத் தெரிவிக்கும்போது அதனால் மகிழ்வது அவர்கள் மட்டுமல்ல; நாம் உளமார நமது நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தும்போது நமக்குள்ளும் ஏதோ ஒரு இனந்தெரியாத குதூகல உணர்வும், நேர்மறை எண்ணங்களும் எழுகின்றன. இதனால் நாம் ஆத்மதிருப்தி கொள்கிறோம்.

பொங்கல் பண்டிகையை நமது நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தும் நாளாகக் கொண்டாடும் நாம், ஏனைய நாட்களிலும் தினமும் சில நிமிடங்களாவது நமது நன்றியுணர்ச்சியை சக மனிதர்களுக்கோ, இயற்கைக்கோ, பிற உயிர்களுக்கோ அல்லது பிரபஞ்ச சக்திக்கோ உளமாரத் தெரிவிப்பதற்கு ஒதுக்கினால் நம்மில் நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது எனது தாழ்மையான எண்ணம். இதைப் பலர் சொல்லக் கேட்டும், என் அனுபவபூர்வமாகவும் உணர்ந்துள்ளேன். 

இதை நாம் நமது பூஜை அறையிலோ, வீட்டுத் தோட்டத்திலோ, கடற்கரை, park போன்ற இயற்கையை ரசிக்கும் தருணங்களிலோ, அல்லது வேறேதேனும் நமக்கு வசதியான இடங்களில் செய்யலாம். தூக்கத்திற்குச் செல்லுமுன் செய்தலும் மிக்க சிறப்பே என எண்ணுகிறேன். 

இங்கு தமது நற்சிந்தனைகளைப் பகிரும் சக உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களும். 😊

வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்! 🙏

☀️🐃🐂🐄🌾

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

🐄🐂மாட்டுப்பொங்கல் நன்னாளான இன்று, விவசாயத்துக்குத் துணை புரியும் பசு மாடு போன்ற கால்நடைகளை நன்றியுணர்ச்சியுடன் நினைவுகூருவதுடன், ஊரிலுள்ள ஏழை விவசாயி ஒருவரது குடும்பத்துக்காவது நம்மால் இயன்ற சிறு பண / பொருள் உதவிகளை அன்புடனே செய்வோம். கூடவே பசு மாடு போன்றவற்றுக்குத் தேவையான தீவனங்களையும் அன்பளிப்புச் செய்வோம். 😊

🌾இதனால் நமக்குக் கிடைக்கும் மனநிறைவுக்கு ஈடு அந்த மனநிறைவு மட்டுமே! 😊

வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!🙏

 • Like 1
Link to comment
Share on other sites

இதை இதில் எழுதலாமோ தெரியல்ல  எம்மோடு கூட படித்தவர்கள் ,சின்ன வயசில் இருந்து வளர்ந்தவர்களது படங்களை சமூக வலைத் தளங்களில் பார்க்கும் போது தான் நமக்கும் வயசு போகுது என்று ஞாபகம் வருகுது ...கூடவே லைட்டாய் பயமும் வருது :38_worried:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எம்மோடு கூட படித்தவர்கள் ,சின்ன வயசில் இருந்து வளர்ந்தவர்களது படங்களை சமூக வலைத் தளங்களில் பார்க்கும் போது தான் நமக்கும் வயசு போகுது என்று ஞாபகம் வருகுது ...கூடவே லைட்டாய் பயமும் வருது :38_worried:

ரதி,

எனக்கும் இதே உணர்வு வருவதுண்டு, குறிப்பாக நம்மோடு படித்தோர்க்கு வளர்ந்த பிள்ளைகள் இருப்பதைப் பார்க்கும்போது. 

எனினும் பலரும் சொல்வதுபோல 'வயது சும்மா ஒரு எண்ணிக்கை மட்டுமே' என்று நினைத்து அமைதிகொள்வேன். ஒரே வயதில் இருக்கும் இருவர் வெவ்வேறு விதமாக முதுமையடையலாம்; ஒருவருக்கு 50 வயதிலேயே தலைநரைத்து, தளர்ச்சியடைந்து, நோயாளியாகலாம்; மற்றவர் அதே வயதில் இன்னும் இளைஞனாக இருக்கலாம், உடலளவிலும், மனதளவிலும். 

இன்னொரு விதமாகப்பார்த்தால், ஒரு 70 வயதுடையவரையும், இன்னொரு 95 வயதுடையவரையும் நாம் வயோதிகர் என்றே சொல்கிறோம். ஆனால் இவர்களுக்கிடையில் ஒரு தலைமுறை இடைவெளியே இருக்கு; 25 வருஷ வித்தியாசம். இங்கும் கூட 95 வயதானவர் நோய்கள் எதுவும் அற்றவராகவும் (உடல் தளர்ச்சி இருக்கலாம்), மனவுறுதியுடையவராகவும் இருக்கும் அதேவேளை 70 வயதுடையவர் உடலாலும் மனதாலும் நலம் குன்றி இருக்கலாம் - ஒரே ஊரிலே ஏன் ஒரே குடும்பத்திலேயே இப்படியான இருவரைப் பார்த்திருப்போம். 

இதிலிருந்து நான் கற்றுக்கொண்டது அவ்வளவு பெரிய ரகசியமல்ல; நேர்மறை எண்ணங்களுடன் நம் physical, mental, emotional and spiritual ஆரோக்கியங்களுக்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை இயன்ற வரை செய்து, அவசியமில்லாமல் மற்றோருடன் நம்மை ஒப்பிடாது நமக்குப் பிடித்த, முக்கியமான விடயங்களில் மட்டும் நம் முழுக்கவனத்தையும் செலுத்தி நாம் வாழ்ந்தால் 'age is just a number' தான்! இது நம் வாழ்க்கை முறைத் தெரிவும் கூட - lifestyle choice. 

ஜப்பானியரில் நூறு வயதும் கடந்து வாழும் பலர் ஆரோக்கியமாக இருப்பதை நாம் அறிந்திருப்போம். சுருங்கச் சொன்னால் அவர்களது வாழ்க்கை முறையும் அதற்கு முக்கியமான ஒரு காரணம். (இணையத்திலும், YouTubeஇலும் இது பற்றிய நம்பகரமான தகவல்கள் இருக்கும். நேரமிருந்தால் பாருங்கள்). 

இதை எழுதும்போது எனக்கும் ஒருவித விழிப்புணர்வு ஏற்படுகிறது. எனவே இதை எழுதத்தூண்டிய உங்கள் கருத்துக்கு நன்றி ரதி. 

 • Like 8
Link to comment
Share on other sites

19 hours ago, மல்லிகை வாசம் said:

நான் ஒரு நாளும் என்னை வயது போவதாய் எண்ணியதில்லை ...ஆனால் இப்படி மற்றவர்களது போட்டோக்களை பார்க்கும் போது மட்டும் ஒரு வித பயம் சாடையாய் வருகின்றது 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2021 at 01:05, மல்லிகை வாசம் said:

இதிலிருந்து நான் கற்றுக்கொண்டது அவ்வளவு பெரிய ரகசியமல்ல; நேர்மறை எண்ணங்களுடன் நம் physical, mental, emotional and spiritual ஆரோக்கியங்களுக்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை இயன்ற வரை செய்து, அவசியமில்லாமல் மற்றோருடன் நம்மை ஒப்பிடாது நமக்குப் பிடித்த, முக்கியமான விடயங்களில் மட்டும் நம் முழுக்கவனத்தையும் செலுத்தி நாம் வாழ்ந்தால் 'age is just a number' தான்! இது நம் வாழ்க்கை முறைத் தெரிவும் கூட - lifestyle choice. 

இவ்வாறு சொல்வது  எளிது

ஆனால்  அதற்கு  எமக்கு பல  தடைகள் உண்டு

அதில் முக்கியமானது எமது  இச்சமூகம் 

ஆனால் ஓரளவு இதில் வெற்றி  கண்டுள்ளேன் என்ற  திருப்தியுண்டு

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உடலும் உள்ளமும்

வலுப்பெறும் வழி

நல்வழியானால், 

வாழும் வயது 

மனதுக்கு என்றும் இளமை,

உடலுக்கு என்றும் வலிமை. 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

இவ்வாறு சொல்வது  எளிது

ஆனால்  அதற்கு  எமக்கு பல  தடைகள் உண்டு

அதில் முக்கியமானது எமது  இச்சமூகம் 

ஆனால் ஓரளவு இதில் வெற்றி  கண்டுள்ளேன் என்ற  திருப்தியுண்டு

நீங்கள் சொல்வது சரி அண்ணா. 

இதை எழுதியதால் நான் ஏதோ தடைகள் இல்லாமல், அவை எல்லாவற்றையும் எப்போதும் செய்கிறேன் என்று அர்த்தமல்ல! 

அத்துடன் நீங்கள் குறிப்பட்டபடி சமூகமும் தடையாக இருக்கலாம்; அதனால் தான் அவ்வப்போது கூட்டத்தில் இருந்து விலகி நின்று சிந்திக்க வேணும் என்பார்கள். அதற்கு மிகுந்த துணிச்சலும், மனவுறுதியும் அவசியம். 

இந்த lockdown / கொறோனா காலம் பலருக்குத் தனித்திருக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கும். நம் வாழ்வை மீளாய்வு செய்து தேவையற்றதைக் களைந்தும், புதிய நல்ல விடயங்களை உள்வாங்கியும் நம் வாழ்க்கைமுறையை ஆரோக்கியமானதாக, மனநிறைவானதாக மாற்றியமைக்க இக்காலம் ஓர் அரிய சந்தர்ப்பம். அவரவர்க்கு இயன்றவரை சிறு சிறு மாற்றங்கள் செய்தாலே அதன் பலன் நிச்சயம் உண்டு. 

'தனித்திரு! பசித்திரு! விழித்திரு!' என்ற ஞானியர் வார்த்தையின் அர்த்தம் இந்த கொறோனா காலத்தில் நன்கு புரிந்தது! ('கூட்டத்திலிருந்து விலகிச் சிந்தித்து, அறிவுத் தேடலில் ஈடுபட்டுத் தெளிந்து ஓர் விழிப்புணர்வு நிலையில் இரு!' என்பதே இதன் பொருள்.)

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Paanch said:

உடலும் உள்ளமும்

வலுப்பெறும் வழி

நல்வழியானால், 

வாழும் வயது 

மனதுக்கு என்றும் இளமை,

உடலுக்கு என்றும் வலிமை. 

நீங்கள் இங்கு நல்லொழுக்கத்தைத் தானே குறிப்பிடுகிறீர்கள் பாஞ்ச் அண்ணா? 

ஒழுக்கமுடைய வாழ்க்கைமுறையை இடைவிடாது கடைப்பிடித்தால் முதுமையிலும் இளமையான மனதுடனும், திடமான தேக ஆரோக்கியத்துடனும் வாழலாம் என்பது தானே? 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

" ஆடைகளுக்கு மதம் உண்டு ஆசைகளுக்கு மதம் இல்லை 

சிலைகள், சிற்பங்களுக்கு மதம் உண்டு கல்லுக்கும்,மரத்துக்கும் மதம் இல்லை"

 ---சுவி---   

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மல்லிகை வாசம் said:

நீங்கள் இங்கு நல்லொழுக்கத்தைத் தானே குறிப்பிடுகிறீர்கள் பாஞ்ச் அண்ணா? 

ஒழுக்கமுடைய வாழ்க்கைமுறையை இடைவிடாது கடைப்பிடித்தால் முதுமையிலும் இளமையான மனதுடனும், திடமான தேக ஆரோக்கியத்துடனும் வாழலாம் என்பது தானே? 

ஆமாம் சோதரி. ஆனால் இந்த ஒழுக்க முறைகளை எங்கள் ஆசான்கள் வெளியே சென்று சிகரட் பற்றிவிட்டு மூக்குப் பொடியும் போட்டுவிட்டு வந்துதான் போதித்தார்கள்.🤧

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தத்துவங்கள் சொல்லிச் சென்ற அறிஞர்கள், ஞானிகள் எவரும் அவர்கள் வாழ்க்கை முழுவதும் புனிதர்களாக இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை; அவர்கள் விட்ட தவறுகள், அதனால் அவர்கள் அனுபவித்த இன்னல்கள் மூலம் அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களின் விளைவாக அவர்கள் மனதில் தோன்றியவையே அவர்களின் தத்துவங்கள். 

அத்துடன் அவர்களது காலத்தில் அவர்களைச் சூழ உள்ள சமூகம், வாழ்க்கைச் சூழல் மற்றும் பிற தகவல்களை உன்னிப்பாக அவதானித்து, ஆராய்ந்து, ஆழ்ந்து சிந்தித்துப் பெறப்பட்ட முடிவுகளும் தத்துவங்களாயின. 

இன்னும், ஆழ்நிலை தியானங்கள், சுய விசாரம் (self-analysis) இவை மூலம் தம்முள்ளே உண்மையை நோக்கிய தேடலை மேற்கொண்டு தாம் உணர்ந்தவற்றை ஞான மொழிகளாகச் சொல்லிச் சென்றனர் மெய்ஞானிகள்.

எனவே, இந்த அறிஞர்கள், ஞானிகளது தத்துவங்களை நம் வாழ்வில் பயன்படுத்தும் முன்னர் நம்மைப் பற்றிய சுய அறிவை வளர்த்துக் கொள்வது அவசியம். இயன்ற அளவுக்குச் சுய விசாரம் செய்வதன் மூலம் நம்மைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளலாம். இது ஓரிரவில் நிகழ்ந்துவிடக்கூடிய செயற்பாடல்ல. என்னைப் பொறுத்தவரை இது வாழ்க்கை முழுவதற்கும் நீண்டது. இதன் மூலம் நமது நோக்கங்கள், இலக்குகள் போன்றவற்றைத் தெளிவாக்கிக்கொண்டு அந்த இலட்சியங்களுக்கு ஞானிகள், அறிஞர்களின் தத்துவங்கள் எவ்வாறு பயன்படும் என்பதை ஆழ்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டும். இவ்வாறு செயற்படும்போது நமக்குப் பொருத்தமான தத்துவங்களின் பயன் அதிகரித்து அவை மேலும் அர்த்தமுள்ளதாகின்றன. மறுபுறம் நமக்குத் தேவையற்ற தத்துவங்களை இனங்கண்டு ஒதுக்கவும் இந்தச் செயற்பாடு வழிவகுக்கும். 

அத்துடன் நாம் வாழும் காலம், வாழ்க்கைச் சூழல், குறிப்பிட்ட சந்தர்ப்பங்களைப் பொறுத்தும் சில தத்துவங்கள் மிகப் பயனுள்ளதாகவும், ஏனையவை பொருத்தமற்றதாகவும் அமையலாம். எனவே, அவை பற்றிய அறிவு / விழிப்புணர்வும் நமக்கு இருப்பது அவசியம். குறிப்பாக உலகியல் சார்ந்த தத்துவங்களுக்கு இது மிக மிக அவசியம்!

("எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - அப்பொருள் மெயப்பொருள் காண்பது அறிவு" - திருவள்ளுவர்)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கல்விக்கும் கலவிக்கும் ஒரு புள்ளிதான் வித்தியாசம். மாணவர்களின் காலத்தில் கல்வியில் கவனம் சிதறின் அது கலவியின் பக்கம் திசை மாற்றிவிடும்.கல்வி கற்றோர்க்கு புள்ளிகள் பெருமை சேர்க்கும். கலவி கண்டோர்க்கு புள்ளிகள் சிறுமை தரும் கூற்றாகும்......!

--- சுவி---  

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2021 at 01:05, மல்லிகை வாசம் said:

இன்னொரு விதமாகப்பார்த்தால், ஒரு 70 வயதுடையவரையும், இன்னொரு 95 வயதுடையவரையும் நாம் வயோதிகர் என்றே சொல்கிறோம். ஆனால் இவர்களுக்கிடையில் ஒரு தலைமுறை இடைவெளியே இருக்கு; 25 வருஷ வித்தியாசம். இங்கும் கூட 95 வயதானவர் நோய்கள் எதுவும் அற்றவராகவும் (உடல் தளர்ச்சி இருக்கலாம்), மனவுறுதியுடையவராகவும் இருக்கும் அதேவேளை 70 வயதுடையவர் உடலாலும் மனதாலும் நலம் குன்றி இருக்கலாம் - ஒரே ஊரிலே ஏன் ஒரே குடும்பத்திலேயே இப்படியான இருவரைப் பார்த்திருப்போம். 

இதிலிருந்து நான் கற்றுக்கொண்டது அவ்வளவு பெரிய ரகசியமல்ல; நேர்மறை எண்ணங்களுடன் நம் physical, mental, emotional and spiritual ஆரோக்கியங்களுக்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை இயன்ற வரை செய்து, அவசியமில்லாமல் மற்றோருடன் நம்மை ஒப்பிடாது நமக்குப் பிடித்த, முக்கியமான விடயங்களில் மட்டும் நம் முழுக்கவனத்தையும் செலுத்தி நாம் வாழ்ந்தால் 'age is just a number' தான்! இது நம் வாழ்க்கை முறைத் தெரிவும் கூட - lifestyle choice. 

நாம் இப்படி நினைத்து கடந்து போகலாம் தான்.ஆனால் எனக்கு கிடைக்கும் அனுபவம் எப்படி என்டால் ஊரில் ஒரு பின் தங்கிய மாவட்டத்தில்  50 தான்டினாலே முதியோர்தான்.ஒரே முதியோர் என்டு நேரடியாகவும் மறை முகமாகவும் பரிகாசம் பண்னியோ கொண்டு விடுவார்கள்.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, சுவைப்பிரியன் said:

நாம் இப்படி நினைத்து கடந்து போகலாம் தான்.ஆனால் எனக்கு கிடைக்கும் அனுபவம் எப்படி என்டால் ஊரில் ஒரு பின் தங்கிய மாவட்டத்தில்  50 தான்டினாலே முதியோர்தான்.ஒரே முதியோர் என்டு நேரடியாகவும் மறை முகமாகவும் பரிகாசம் பண்னியோ கொண்டு விடுவார்கள்.

சுவைப்பிரியன் அண்ணா,

உங்களது ஆதங்கத்தில் நியாயம் இல்லாமலில்லை.

மற்றோரின் பரிகாசத்துக்கு அஞ்சி அஞ்சியே நாம் வாழ்வில் பலவற்றைத் தொலைத்துவிட்டோம்; மற்றோரைப் பரிகசித்தும் நமது காலத்தை வீணடித்தும்விட்டோம்.

இவ்வாறான சூழ்நிலைகளில் நான் நினைத்துக்கொள்வது: நாம் எது செய்தாலும் அதைப் பிறர் பரிகசிப்பார்கள் - பரிகசிப்பதற்கு அவர்களுக்கு ஏதாவது காரணம் தேவை. 'வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்' உலகம் இது. பிறரைப் பரிகசித்து, அவர்களை அவமானத்தால் கூனிக்குறுக வைத்து, வேடிக்கைபார்த்து அவர்கள் தாழ்ந்துபோவதில் மகிழ்வடைவோரைக் கண்டு நாம் ஏன் அஞ்ச வேண்டும்? அவ்வாறு நாம் அஞ்சுவதால் அவர்களது நோக்கத்தை நாமாகவே நிறைவேற்றுகிறோம். 

50 வயதானால் கிழவர் எனப் பரிகசிக்கும் அதே நபர்கள் 50 வயதில் 40 வயதுக்குரிய தோற்றத்தில் இருப்பவரைக் கண்டு பொறாமைப்படலாம். அதேவேளை 40 வயதுடைய ஒருவர் நோய் வந்து தளர்ந்தால் 'இப்பவே வயசாகிக் கிழவனாயிட்டாய்' என்று பரிகசிக்கவும் செய்யலாம். 

எனவே, போட்டி பொறாமைகள் நிறைந்த உலகில் இவ்வாறான யதார்த்தங்களை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, அவற்றுக்கு எதிர்வினை ஆற்றாது, பிறர் பரிகசிப்புக்களைக் கண்டுகொள்ளாது புறக்கணித்து நமது கருமமே கண்ணாக இருந்தால் நாம் நிம்மதியான, நிறைவான வாழ்க்கையை வாழலாம் என்பது எனது எண்ணம். 

இந்த மனோதிடத்தை வளர்ப்பது அவ்வளவு இலேசான விடயமுமல்ல. எவ்வாறு உடற்பயிற்சி செய்து நமது உடல் தசைகளை முறுக்கேற்றி உடல் வலுவைப் பெறுகிறோமோ, அவ்வாறே நமது மனோதிடத்தையும் தினமும் பயிற்சி செய்து வளர்க்க வேண்டும். நாம் முன்பு கலந்துரையாடிய தியானம் போன்ற விடயங்களும் இதற்கு உதவும். யோகாவையும் இதனுடன் சேர்க்கலாம். கூடவே பிரார்த்தனையின் சக்தியும் அளப்பரியது. நல்ல நூல்களைப் படித்து நமது அறிவை விருத்தி செய்தல், நல்ல இசையில், இயற்கை எழிலில் அவ்வப்போது மூழ்கித் திளைத்தல் என்று ஏராளம் விடயங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக்கிப் பயிற்சி செய்யும்போது, புறச் சூழலில் இருந்து வரும் எதிர்வினைகளின் தாக்கத்தைச் சமாளிக்கக் கூடியதாக இருக்கும். நாளாந்த முயற்சி நாளடைவில் பயிற்சியாகி நம்மில் ஓர் அங்கமாகிவிடும். தினமும் பல் துலக்குவது போல, உணவு உண்பது போல இவையும் மிக அவசியம்.

வயதைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டபடியால் இன்னொரு விடயம்: 'காவோலை விழக் குருத்தோலை சிரிக்கும்'. அந்தக் குருத்தோலையும் ஓர் நாள் காவோலையாகும். காவோலைகளும் சிரித்துப் பரிகசிக்கலாம்; எல்லா ஓலைகளுக்கும் வீழும் நாள் ஒன்று உண்டு என்பதை உணர்ந்தால் நாம் நமது சமநிலையைப் பேண அது உதவும். அந்த சமநிலை தான் இந்த உலக வாழ்வு என்ற சமுத்திரத்தில் நீச்சலடிக்க உதவும்! 😀

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மல்லிகை வாசம் said:

சுவைப்பிரியன் அண்ணா,

வயதைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டபடியால் இன்னொரு விடயம்: 'காவோலை விழக் குருத்தோலை சிரிக்கும்'. அந்தக் குருத்தோலையும் ஓர் நாள் காவோலையாகும். காவோலைகளும் சிரித்துப் பரிகசிக்கலாம்; எல்லா ஓலைகளுக்கும் வீழும் நாள் ஒன்று உண்டு என்பதை உணர்ந்தால் நாம் நமது சமநிலையைப் பேண அது உதவும். அந்த சமநிலை தான் இந்த உலக வாழ்வு என்ற சமுத்திரத்தில் நீச்சலடிக்க உதவும்! 😀

நன்றி உங்கள் கருத்துக்கு.இங்கை பிரச்சனை (பகிடி)என்னவென்டால் ரேடியோவில் ஒரு பாட்டு போய்க்கொன்டிருக்கும் போது அங்கு ஒரு வயோதிபர் என்று அவர்கள் கருதும் ஒரு நபர்(அது நானே தான்)அருகில் நின்றால் இஞசை பாருடா அவர் கேக்கிற பாட்டை என்று ஒரு கதை.😁நாங்கள் இங்கு மாதிரி உடை அணிந்தால் பாருடா அவருக்கு பெடியன் என்ற நினைப்பு.இப்டியான கதைகள் எராளாம்.😂இவளவும் நான் சொன்ன பின் தங்கிய இடத்தில் தான்.சுருக்கமாய் சொன்னால் வேட்டி கட்டாத ஊரில் வேட்டி கட்டியவனுக்கு ஏப்ற்புடும் நிலைதான்.இவளவுக்கும் இந்த ஊரில் இப்பபும் பாடசாசை செல்லும் இளைஞர் என்னிடம் கேட்ட கேங்வி நீங்கள் ரெயினில்தானே சுவிஸ் போவீர்கள் என்று.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சுவைப்பிரியன் said:

இப்டியான கதைகள் எராளாம்.😂இவளவும் நான் சொன்ன பின் தங்கிய இடத்தில் தான்.

சுவைப்பிரியன் அண்ணா,

இப்படிப் பல இடங்களில் நடப்பதுண்டு. வடிவங்கள் தான் மாறும். 

இவற்றைத் தலைக்கு எடுப்பதால் நேர விரயமும், மன உளைச்சலுமே மிஞ்சும்.

எனவே, இவற்றைக் கண்டும் காணாதது மாதிரி விட்டு விட்டு நம்ம பாட்டுக்குப் போய்க்கொண்டே இருக்க வேணும்! (காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தக்க சமயத்தில் இப்படியானவர்களுக்கு வாழ்க்கை நிறையப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்!)

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் முன்னேற நமக்குத் தன்னம்பிக்கை அவசியம் என்பது உண்மை தான்.

எனினும், நமக்குப் பிடிக்காத, நம் இயல்புக்குப் பொருந்தாத, கொள்கைக்கு மாறான விடயங்களை வெறும் கடமைக்காகவோ, நிர்ப்பந்தத்துக்காகவோ செய்ய நேரும் போது நமக்குள்ளே எழும் அவநம்பிக்கை உணர்வு இயல்பானது. இங்கே தன்னம்பிக்கை உணர்வைக் கொண்டுவர முயல்வது வெறும் செயற்கைத் தனமாகவே அமையலாம்; சில வேளைகளில்  அது வீணான திணிப்பாகவும் அமையலாம்.

ஆகவே, நமது வேலை / கடமை எதுவாக இருப்பினும், நமக்கு மிகவும் பிடித்த / நாம் மனமொன்றி மகிழ்வுடன் செய்யக்கூடிய ஓரிரு விடயங்களுக்காகத் தினமும் இயன்ற அளவு நேரத்தை ஒதுக்கினால் அவற்றைச் செய்வதன் மூலம் நமது தன்னம்பிக்கையை வளர்க்கலாம் என்பது எனது நம்பிக்கை.

உதாரணத்துக்கு, அலுவலகத்தில் வேண்டாவெறுப்பாக வேலை பார்க்கும் ஒருவர், தான் சிறுவயதிலிருந்தே ஆசைப்பட்டு நிறைவேறாதிருக்கும் இசைக்கருவி ஒன்றை இசைக்கப் பழகும் முயற்சியில் தினமும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கினால் நாளடைவில் அந்தத் திறமையை வளர்ப்பது மட்டுமல்லாது, கூடவே அவரது தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள முடியும். இதனால் அவரது பொதுவான உளநலமும் முன்னேறுகிறது; வாழ்வின் மீதான பிடிப்பு மேலும் அதிகரிக்கிறது. யாருக்குத் தெரியும், அவரது இந்த புதிய பொழுதுபோக்கு முயற்சி நாளடைவில் அவருக்கு வருமானம் தரும் பகுதி நேர, ஏன் முழு நேரத் தொழிலாகவும் மாறலாம்; அப்போது கிடைக்கும் மன நிறைவும், அவர் மனதில் எழும் தன்னம்பிக்கை உணர்வும் விபரிக்கவியலாதவை. இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. வாழ்க்கையில் இப்படி எண்ணற்ற வழிகள் உள்ளன ஒருவரது தன்னம்பிக்கையை அதிகரிக்க!

இது பற்றிய உங்களது அனுபவங்களையும் அறிய ஆவல், கள உறவுகளே!

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

🖋ஒரு சுய ஆக்கத்தை அல்லது ஆக்கபூர்வமான கருத்தொன்றைப் பதிவிடுவதால் கிடைக்கும் மனநிறைவை இங்கு பலரும் உணர்ந்திருப்போம்.

📝நம் எண்ணங்களை எழுத்துக்களாகப் பிரசவித்த திருப்தி அது - தாய்மை உணர்வின் சிறு துளி போல!

✍கூடவே நம் திறமைகளை எழுத்துருவில் வெளிக்கொணர்ந்த வெற்றிக் களிப்பாகவும் இருக்கலாம். எனினும் அதனால் கிடைக்கும்  மகிழ்ச்சி நிரந்தரமானது அல்ல என்பதையும் உணர்ந்திருப்போம். 

💡ஆக்கங்களோ, கருத்துக்களோ அதைப் படிக்கும் நூற்றுக்கணக்கான வாசகர்களில் ஒரு சிலருக்காவது அவற்றால் சிறு பயனாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை தரும் உத்வேகத்துக்கும், அவ்வாறு பயனடைகிறார்கள் என்பதை அறியும்போது கிடைக்கும் ஆத்மதிருப்திக்கும் ஈடுஇணை வேறெதிலும் உண்டோ! 😊

🗣நம் வார்த்தைகள் சிற்பியின் உளி போன்றவை; உளியால் பலர் ரசனையை / சிந்தனையைத் தூண்டும் சிற்பங்களையும் உருவாக்கலாம்; உளி கொண்டு அலங்கோலமான வடிவங்களையும் தோற்றுவிக்கலாம் - பாறையையும் உடைத்துப் பயனற்றதாக்கலாம். தெரிவு நமதே! 😊

🗒🖋

Edited by மல்லிகை வாசம்
 • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கிழக்கின் ‘முதுசொம்’மை இழந்தோம்! May 28, 2022                          —செங்கதிரோன் —  கிழக்கின் ‘முதுசொம்’மொன்றினை 11.05.2022 அன்று இழந்தோம். மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் மரணச் செய்தி கேட்டு மட்டக்களப்பின் மீன்மகள் பாட்டை நிறுத்தினாள். வாவிமகள் ஆட்டத்தை நிறுத்தினாள்.   ‘வணக்கம் மாமா’ என்று சிறுவர்கள் அவரை விளித்துச் சொல்வதும் சிறுவர்களை நோக்கி ‘வணக்கம் மருமக்களே’ என அவர் கூறுவதும் இனி மட்டக்களப்பு மண்ணிலே கேட்காது.  இலங்கை ஒலிரப்புக்கூட்டுத்தாபனச் ‘சிறுவர்மலர்’ மற்றும் ‘சிறுவர் கதைவேளை’ நிகழ்ச்சிகளின் மூலம் ‘வானொலி மாமா’ வாக வலம் வந்த மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் சிறந்த கதைசொல்லி (Story Narrator) – நாடக்கலைஞர் – வில்லிசைக் கலைஞர் – ஓவியர் – பத்திரிகையாளர் – சிறுவர் இலக்கியப்படைப்பாளி –மேடைப்பேச்சாளர் எனப் பல்துறைத் திறமை மிக்கவர்.  மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் (ஆர்.இரத்தினம் சிவலிங்கம்) இலங்கையில் வில்லுப்பாட்டுக் கலையை அறிமுகம் செய்தவர். ஈழத்தில் வில்லிசையின் பிதாமகன் அவரே. கதை சொல்லும் கலை இவருக்குக் கைவந்த கலை. சுமார் பதினெட்டு ஆண்டுகள் மட்டக்களப்பு மாநகரசபை பொது நூல் நிலையத்தில் கதைசொல்லும் கலைஞனாகப் பணியாற்றி 2003இல் ஓய்வு பெற்றவர்.  மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் மட்டக்களப்பில் மஞ்சந்தொடுவாய் எனும் கிராமத்தில் 28.03.1933 அன்று பிறந்தார். தந்தையார் திரு.ந.இரத்தினம் ஆசிரியர். தாயார் திருமதி செல்லத்தங்கம். மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்திலும் மஞ்சந்தொடுவாய் சென்மேரிஸ் பாடசாலையில் கல்வியைத் தொடங்கி (1ம் 2ம் வகுப்புக்கள்) பின் கல்லடி உப்போடை இராமகிருஸ்ண மிஷன் மகளிர் பாடசாலையில் 3ம் 4ம் 5ம் வகுப்புக்களைக் கற்றார். தொடர்ந்து மட்டக்களப்பு கல்லடி சிவானந்த வித்தியாலத்திலும் (6ம் 7ம் வகுப்புக்கள் – 1946/47) பின் மட்டக்களப்பு அரசினர் கல்லூரியிலும் (தற்போது இந்துக்கல்லூரி -1948/52) கல்வி கற்றார். புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை, பண்டிதர் வி.சி.கந்தையா ஆகியோர் இவரது ஆசான்களாக விளங்கினார். பள்ளிப்பருவத்திலேயே நல்ல ‘பகிடிகள்’ சொல்லி மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும் நன்கு அறியப்பட்டவராக இருந்தார்.  1950களின் நடுப்பகுதியில் கவிஞர் காசி ஆனந்தன் எழுதி இயக்கிய ‘அண்ணாவின் தங்கை’ எனும் நாடகம் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் (தற்போது மாநகர மண்டபம்) மேடையேற்றம் கண்டது. இதுவே மாஸ்டர் சிவலிங்கம் நடித்த முதல் நாடகமாகும். இந்நாடகத்தில் கவிஞர் காசி ஆனந்தனும் நடித்திருந்தார்.   அடுத்தது, மட்டக்களப்புத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.இராசதுரை எழுதி இயக்கிய ‘சங்கிலியன்’ நாடகத்தில் மன்னன் சங்கிலியனின் அமைச்சராக மாஸ்டர் சிவலிங்கம் நடித்தார். அறப்போரணித்தலைவர் ஆர்.டபிள்யு.அரியநாயகம் (காக்கை வன்னியன் வேடம்) கவிஞர் காசி ஆனந்தன், இன்னொரு ‘வானொலி மாமா’வான இரா. பத்மநாதன் ஆகியோரும் இதில் நடித்திருந்தனர். இராசதுரை சங்கிலி மன்னனாக நடித்த நாடகத்தில் ஒரு கட்டம்.  சங்கிலி மன்னனாக நடித்த இராசதுரை தன்னிடமிருக்கும் வாள் பற்றிய வரலாறுகளை எடுத்துச்சொல்லி அதன் பழமையைப் பெருமையோடு கூறி உறையிலிருந்து வாளை உருவுகிறார். வாள் உறையுள் தங்கிவிட பிடி மட்டும் வெளியே வருகிறது. பார்வையாளர்களின் சிரிப்பொலி.   அமைச்சராக நடித்த மாஸ்டர் சிவலிங்கத்திடமிருந்து சமயோசிதமாக அந்த நேரத்திற்குப் பொருத்தமாக அவரது சொந்த வசனம் அதிரடியாக வெளிப்படுகிறது.   ‘மன்னா! பார்த்தாலே தெரிகிறது பழையவாள் என்று’- மீண்டும் பார்வையாளர்களின் கைதட்டலுடன் கூடிய சிரிப்பொலி எழுகிறது.  நாடகம் முடிந்ததும் மாஸ்டர் சிவலிங்கம் இராசதுரை உட்பட எல்லோராலும் பாராட்டப்பெற்றார்.  பின்னர், கவிஞர் காசி ஆனந்தன் எழுதி இயக்கிய தமிழரசுக்கட்சியின் பிரச்சார நாடகமான ‘சூடு சாம்பலாச்சு போடியாரே’ எனும் நாடகத்தில், கவிஞர் காசி ஆனந்தன், இரா.பத்மநாதன் ஆகியோருடன் இணைந்து மாஸ்டர் சிவலிங்கமும் நடித்தார். இது மட்டக்களப்பில் நூறு தடவைகளுக்கு மேல் அரங்கேறிய நாடகமாகும்.  பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் ‘கார்ட்டூன்’ (நகை ஓவியம்) சித்திரத்துறையில் பயிற்சி பெறுவதற்காகத் தமிழகம் (தமிழ்நாடு சந்தனக் கலைக்கல்லூரி) சென்றார். அங்கே கவின் கலைகளில் அதிகம் நாட்டம் கொண்டார். ஓவியம், வில்லிசை ஆகியவற்றில் பயிற்சி பெற்றார். நடிப்பு, நகைச்சுவை, கதாப்பிரசங்கம், பல குரல்களில் பேசுதல் (Mimicry), வில்லுப்பாட்டு, போலச் செய்தல் (Imitation) போன்ற கலைகள் அவரை ஈர்த்தன. அங்கு திரைப்படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி சில காட்சிகளும் படமாக்கப்பட்டிருந்த வேளையில் அவரது வீட்டாருக்கு அது விருப்பமில்லாத காரணத்தால் ‘அம்மாவுக்குச் சுகமில்லை’ என்று செய்தி கொடுத்து அவரை இலங்கைக்கு வரவழைத்துவிட்டனர். 1960இல் அவர் தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பினார்.  தமிழகத்திலிருந்தபோது கொத்த மங்கலம் சுப்பு, கலைவாணர் என்.எஸ்.கிருஸ்ணன் மற்றும் பலருடைய வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நேரில் கண்டும் கேட்டும் உணர்ந்த சிவலிங்கம் அவர்கள் அதனை இலங்கையிலும் அறிமுகம் செய்ய அவாக் கொண்டார். ஆம்! 1960களில் வில்லுப்பாட்டுக் கலையை இலங்கையில் முதலில் அறிமுகம் செய்தவர் இவரேயாவர். இவரது முதலாவது வில்லுப்பாட்டு நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி உப்போடை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் ‘நமக்கும் மேலே ஒருவனடா’ என்ற தலைப்பில் நடைபெற்றது. ஆரம்பகாலத்தில் வில்லிசைக்கான கதையையும் பாடல்களையும் காசி ஆனந்தனே எழுதிக் கொடுத்தார். சில நிகழ்ச்சிகளில் காசி ஆனந்தனும் மேடையில் அவரோடிணைந்து பாடியிருக்கின்றார். பின்னர் தனது வில்லுப்பாட்டுக் குழுவில் கவிஞர். செ.குணரெத்தினம், சித்தாண்டி சிவலிங்கம், கிருபைரெட்ணம் ஆசிரியர், முழக்கம் முருகப்பா, அன்பு மணி இரா.நாகலிங்கம், வி.கந்தசாமி ஆகியோரைச் சேர்த்துக் கொண்டு இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று நிகழ்ச்சிகளை நடாத்திப் புகழ் பெற்றார். மிகக்குறுகிய காலத்தில் நூறு நிகழ்ச்சிகள் நடந்தேறின. நூறாவது நிகழ்ச்சி மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்றது.   அதன்பின் பாடசாலை மாணவ மாணவியருக்கு அக்கலையைப் பயிற்றுவிக்கத் தொடங்கினார். பாடசாலை மாணவனாக இருக்கும் போதே அவருடைய பெயருடன் ஒட்டிக் கொண்ட ‘மாஸ்டர்’ பட்டம் நிரந்தரமாகிற்று. பண்டிதர் செ.பூபாலப்பிள்ளை அவர்களின் புதல்வியார் மங்கையற்கரசி அவர்களே இவரது வாழ்க்கைத் துணை. காலஞ்சென்ற எஸ்.டி.சிவநாயகம் அவர்களே இவரது இலக்கியத்துறை வழிகாட்டி. 1966ம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டு எஸ். டி.சிவநாயம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தினபதி (தினசரி), சிந்தாமணி(வாரமலர்) ஆகிய பத்திரிகைகளில் அவை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே பணிபுரிந்தார். இப்பத்திரிகைகளின் ‘சிறுவர் பகுதி’க்கு இவரே பொறுப்பேற்றிருந்தார். இப்பத்திரிகைகளின் ஆசிரியபீடத்தில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்த சுமார் பதினேழு ஆண்டுகள் சிறுவர் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்பு பாரியது. இவரது ஆசிரியரான புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை இவரை இலங்கை வானொலியில் ‘சிறுவர் மலர்’ நிகழ்சியை நடாத்திக்கொண்டிருந்த முதலாவது ‘வானொலி மாமா’வான சரவணமுத்து அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்த பின்னர், இலங்கை வானொலியில் கதை சொல்ல ஆரம்பித்தார். 1983 ஆடிக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு, குடும்பத்தினருடன் கொழும்பிலிருந்து வெறுங்கையுடன் மட்டக்களப்பு மீண்டார்.  மட்டக்களப்புக்குத் திரும்பி வந்த மாஸ்டர் சிவலிங்கத்தை மட்டக்களப்பு மாநகரசபை அதனால் நிர்வகிக்கப்பட்டு வந்த பொது நூல்நிலையத்தில் கதை சொல்லும் கலைஞனாகப் (Story narrator) பதவியிலமர்த்தியது. இப்பதவி இவருக்கென்றே இவரது திறமையை மதித்துப் புதிதாக உருவாக்கப்பட்டதொன்றாகும்.    மட்டக்களப்பு மாநகரசபையின் கீழ் இயங்கும் மூன்று நூலகங்களுக்கும் சென்று கதை சொல்வார். மேல்நாடுகளில் கதை சொல்லுதல் ஒரு கலையாகவே வளர்ந்துள்ளது. பாடசாலைச் சிறுவர்கள் இவரது கதை சொல்லலில் நல்ல பயன்பெற்றனர். சிறுவர்களுக்கு மகாபாரதம், இராமாயணம் கதைகளை 1984 இல் தொடங்கித் தொடர்ச்சியாகச் சொல்லி வந்தார். வானொலி, தொலைக்காட்சி (ரூபவாகினி –வண்ணச்சோலை) ஆகிய ஊடகங்களிலும் சிறுவர் நிகழ்ச்சிகளை வழங்கினார். இவர் கதை சொல்லும் பாணி மிகவும் கவரக்கூடியது. நகைச்சுவை, நடிப்பு கலந்து கதை சொல்லும்போது கதாப்பாத்திரமாகவே மாறிவிடும் தன்மையர். மகாபாரதக் கதை சொல்லும் போது துரியோதனனின் ஆணவச் சிரிப்பையும் சகுனியின் வஞ்சகச் சிரிப்பையும் நடித்துக் காட்டுவார். சிறுவர்களுக்குக் கதை சொல்லும்போது கிழவிபோல் நடந்தும், சிறுவன்போல் ஓடியும், குரங்குபோல் பாய்ந்தும், யானைபோல் பிளிறியும், முயல்போல் துள்ளியும், மான்போல் வெருண்டும், பாம்புபோல் நெளிந்தும் சீறியும் இப்படி அந்தந்தப் பாத்திரங்களாகவே மாறிப் பல்வகை நடிப்புக்களையும் தனிநபர் அரங்கிலே சிறப்பாகச் செய்வார். மாஸ்டர் சிவலிங்கம் கதை சொல்ல வருகிறார் என்றால் மட்டக்களப்பிலே சிறுவர்களுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியாது. மட்டக்களப்பிலே இவரது சேவையைப் பெற்றுக்கொண்ட பாடசாலைகள், பாலர் கல்வி நிறுவனங்கள், சன சமூக நிலையங்கள் பல. மட்டக்களப்பு மாநகர சபை பொது நூல் நிலையத்தில் கதை சொல்லும் கலைஞனாக 1984செப்டம்பர் 15ந் திகதி கடமையேற்ற மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் 2003 மார்ச் 31ந் திகதி ஓய்வு பெற்றார்  வானொலியிலும் தொலைக்காட்சியிலும் தொடர்ந்து இடம்பெற்றுவந்த இவரது சிறுவர்க்கான கதை கூறல் நிகழச்சியானது பெரும் வரவேற்பைப் பெற்றது. ஈழத்து- தமிழகத்துப் பத்திரிகைகளில் அவரது நகைச்சுவை ஆக்கங்கள் நிறைய வெளிவந்துள்ளன.1993இல் உதயம் வெளியீடாக வெளிவந்த இவரது ‘பயங்கர இரவு’ சிறுவர்களுக்கான தரமான இலக்கியப்படைப்பாகும். 1994இல் ராஜா புத்தக நிலையம் வெளியிட்ட ‘அன்பு தந்த பரிசு’ நூல் வடகிழக்கு மாகாண சாகித்தியப் பரிசு பெற்றது. 1994இல் மட்டக்களப்பிலே மாஸ்டர் சிவலிங்கம் மணிவிழாச் சபை ‘மாஸ்டர் சிவலிங்கம் மணிவிழா மலர்’ வெளியிட்டு விழாவெடுத்து இவரைக் கௌரவித்தது.  இங்கிலாந்தில் இயங்கும் ‘Buds’ அமைப்பு (Batticaloa Underprivileged Development Society) தனது 10வது ஆண்டு விழாவையொட்டியதாக ‘விபுலானந்த கலை விழா’வை 19.07.1997 அன்று நடாத்தியபோது அதில் மாஸ்டர் சிவலிங்கம் அவர்களும் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.  அவ்விழாவில் ‘விண்ணுலகில் விபுலானந்தர்’ எனும் தலைப்பில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியையும் அளித்தார். இதுவே அவர் இறுதியாக அளித்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சி. இது அவரது 127வது வில்லுப்பாட்டு ஆகும். லண்டன் சென்றிருந்த போது மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய முன்னாள் அதிபர் அமரர் கணபதிப்பிள்ளை அவர்களின் நினைவு நாள், லண்டன் ஈஸ்ட்காம் முருகன் ஆலய வைபவம், லண்டன் துர்க்கை அம்மன் ஆலய நிகழ்ச்சி ஆகியவற்றிலும் கலந்து கொண்டார். லண்டன் ‘Sun Rise’ வானொலியிலும் இவரின் சிறப்புரை இடம்பெற்றது. ‘Buds’ இவருக்கு லண்டனில் ‘கதைமாமணி’ பட்டம் அளித்துச் சங்கை செய்தது.   இலங்கை கலாசார அமைச்சின் ‘கலாபூஷண’ விருது 1999′ பெற்றார். 10.10.2002 அன்று நடைபெற்ற கிழக்குப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கிழக்குப் பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் Degree of Master of letters (Honoris Causa) – Presented by the Deen, Faculty of Arts & Culture) வழங்கியது.   மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் நகைச்சுவையுணர்வு நிரம்பப்பெற்றவர். மிகச்சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர்.  1961இல் தமிழரசுக்கட்சி வடக்கு கிழக்கு மாகாணங்களில் கச்சேரிகளை மறித்துச் சத்தியாக்கிரகம் நடாத்தியது. மட்டக்களப்புக் கச்சேரி வாயிலை மறித்து நடந்த போராட்டத்தில் மாஸ்டர் சிவலிங்கம் பங்கேற்றிருந்தார்.  நகர மண்டத்திற்கு அருகிலிருந்த மட்டக்களப்பு வாடி வீட்டு மண்டபத்தில் சத்தியாக்கிரகிகள் சிலர் உறக்கத்திலிருந்த அதிகாலை இருட்டில் சிங்கள இராணுவ அதிகாரியொருவர் உறங்கிக் கொண்டிருந்தவர்களை ‘எலும்புடா’ எலும்புடா! (எழும்படா! எனும் அர்த்தத்தில்) என்று கூறிக்கொண்டு வந்தார். தவறுதலாக நிலத்தில் உறங்கிக்கொண்டிருந்த மாஸ்டர் சிவலிங்கத்தின் முழங்கால் எலும்பில் தனது சப்பாத்துக்காலினால் மிதித்தும் விடுகிறார்.  இச் சம்பவத்தைப் பின்னர் மாஸ்டர் சிவலிங்கம் மற்றவர்களிடம் கூறும்போது ‘அவன் எனது முழங்கால் எலும்பில் ஏறி மிதித்துவிட்டு ‘எலும்புடா’ என்று நான் சொல்ல வேண்டியதை அவன் சொல்லிக்கொண்டு போறான்’ என்று சொல்லிச் சிரித்தார்.   நகைச்சுவைக் குமரன் (புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை வழங்கியது), நகைச்சுவை மன்னன் (FXC நடராஜா வழங்கியது). வில்லிசைக் குமரன் (பண்டிதர் V.C.கந்தையா வழங்கியது). வில்லிசைச் செல்வர் (1987 – வடகிழக்கு மாகாணசபை), பல்கலைக்கலைஞன், கனிதமிழ்க்கலைஞன், கதை வள்ளல், கதைக் கொண்டல், கலைஞானமணி, கலைக்குரிசில், அருட்கலை திலகம் (வடகிழக்கு மாகாணசபை – 1993,(கதைமாமணி (லண்டன் – 1997), கலாபூஷணம் (1999), ஆளுநர் விருது (வடகிழக்கு மாகாணம் -2000) இலக்கிய கலாநிதிப்பட்டம் (கிழக்குப் பல்கலைக்கழகம்- 2002) ஆகிய பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருந்தாலும் இவை அனைத்துக்கும் மேலாக ‘மாஸ்டர்’ என்னும் மகுடமே மக்கள் மனதை நிறைத்து நிற்கிறது.    1970 மட்டக்களப்பில் பண்டிதர் செ.பூபாலப்பிள்ளை அவர்களின் மூத்த புதல்வி மங்கையற்கரசி அவர்களை மணம் புரிந்தார். மனைவி ஆங்கில ஆசிரியை. ஒரேமகன் விவேகானந்தன் டாக்டராவார். சிந்தாமணி வார வெளியீட்டில் சிறுவர்களுக்காக இவர் எழுதிய கதைகள் சிலவற்றைக் கொழும்பு அஸ்டலக்ஸ்மி பதிப்பகம் (320,செட்டியார் தெரு, கொழும்பு-11 தொலைபேசி : 2334004) ‘சிறுவர் கதை மலர்’ எனும் தலைப்பில் நூலாக (1ம், 2ம் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது.   தனது அந்திமக் காலத்தில் மட்டக்களப்பில் இராமகிருஸ்ண மிஸன் மாணவர் இல்லம், சாரதா இல்லம், தரிசனம், மங்கையற்கரசி மகளிர் இல்லம், மெதடிஸ்த மகளிர் இல்லம் முதலியவற்றில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு வில்லுப்பாட்டு, தாளலயம், நாடகம் முதலிய கலை நிகழ்ச்சிகளை எழுதிப் பயிற்றுவித்தார். அத்துடன் அறநெறிப் பாடசாலைகளில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசக்கதைகளை எடுத்துக்கூறியவர்.  என்னைத் தலைவராகக் கொண்ட ‘கண்ணகி கலை இலக்கியக் கூடல்’ எனும் அமைப்பு, தனது கன்னிக் கண்ணகி கலை இலக்கிய விழாவை, 2011ன் 18ஆம், 19ம் திகதிகளில் மட்டக்களப்பு மகாஐனக்கல்லூரிக் கலை அரங்கு மண்டபத்தில் நடாத்தியபோது, அதன் இரண்டாம்நாள் மாலை அமர்வான மாதவி அரங்கிற்கு (கலையரங்கும் நிறைவு விழாவும்) மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் தலைமை வகித்தமையும் — எனது ‘விளைச்சல்’ (குறுங்காவியம்) நூல் அறிமுக நிகழ்வு 16.07.2017 அன்று மட்டக்களப்பு, நாவற்குடா இந்து கலாசார நிலைய மண்டபத்தில் நடைபெற்றபோது அதனை மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தமையும் — 2019இல் எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்திருந்தபோது அவரும் நானும் மாஸ்டர் சிவலிங்கம் அவர்களை அவரது மட்டக்களப்பு வீட்டில் சந்தித்து அளவளாவி மகிழ்ந்தமையும் என் நெஞ்சகலா நினைவுகளாகும்.  மட்டக்களப்பு மண் மறக்கவொண்ணாத கலை இலக்கிய ஆளுமைகளுள் அமரர் மாஸ்டர் சிவலிங்கம் அவர்களும் ஒருவராவர்.      https://arangamnews.com/?p=7763  
  • சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட கல்லடி மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு KalmunaiMay 28, 2022    (பாறுக் ஷிஹான்) சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட  மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்ட  சம்பவம் ஒன்று பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது கடந்த வியாழக்கிழமை(26) வழமை போன்று மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி இலங்கை மின்சார சபை காரியாலயத்தில் கடமையாற்றும் 57 வயதான   நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கடமை நிமிர்த்தம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றிற்கு   சென்று மின்மானியை  பரீட்சித்துள்ளார். பின்னர் அந்த வீட்டில் தாயுடன் நின்ற  9 வயது மதிக்கத்தக்க சிறுவனை அருகில் உள்ள வீட்டின் மின் மானியை பார்வையிட துணைக்கு அழைத்து சென்றுள்ளதுடன்  அங்கு சிறுவனுடன்   பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டு  அங்கிருந்து தப்பி  சென்றுவிட்டார். இவ்வாறு குறித்த மின்வாசிப்பாளர் சென்ற பின்னர் சிறுவன் தனக்கு நடந்த அனைத்து விடயங்களையும் தனது பெற்றோரிடம்  குறிப்பிட்டுள்ளார்.இதனால்  குறித்த மின்சார சபை ஊழியர் அன்றைய தினம் தனக்கு எதிராக பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யவுள்ளதை அறிந்து   மறுநாளான   வெள்ளிக்கிழமை (27) அதிகாலை அம்பாறை மாவட்டம்  பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள  தனது வீட்டின்  அறையில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து  மனைவி உள்ளிட்ட உறவினர் தூக்கில் தொங்கியவரை மீட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.எனினும் தூக்கில் தொங்கியவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிட்டன. பின்னர் உயிரிழந்தவர்   உடல் கூற்று விசாரணையின் படி கழுத்து பகுதி சுருக்கினால் இறுகியதால்  மூச்சு திணறி  இறப்பு சம்பவித்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்த நபர் திருமணமாகியுள்ளதுடன்  இரு பிள்ளைகளளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் தொடர்பில்  பெரியநீலாவணை  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்     http://www.battinews.com/2022/05/blog-post_711.html
  • வடக்கு மக்களுக்கு இந்தியாவிடம் இருந்து உதவிகள்! இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறுபோக செய்கைக்கு தேவையான உர வகைகள் போன்றவற்றை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இவற்றை காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக எடுத்து வருவது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். தொலைபேசி ஊடாக நேற்று இடம்பெற்ற, இரண்டு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர், கடற்றொழில் அமைச்சரின் குறித்த முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.     http://www.samakalam.com/வடக்கு-மக்களுக்கு-இந்திய/
  • அங்கு போலீஸ் என்பவர்கள் தமிழருக்குள்  நிறைய குற்றம்களும் தற்கொலைகளும் அதிகரிக்கணும் எனும் நோக்கில் நீண்டகால தமிழ்  இன  அழிப்புக்கு துணையாக குந்தி இருப்பவர்கள் . உங்கள் ஜெர்மனி அப்படியா சாமி ?  வடமராட் சியின் முக்கிய நகரங்களில் தமிழ் அரசியவாதி ஒருத்தரின் மதுபான விடுதிகள்  மக்களின் எதிர்ப்பின் பின் துரத்துபட்டு புறாப்பொறுக்கி பக்கம் ஒதுங்கி உள்ளது . அதுதான் சிங்களவன் கோல்பேசில் முள்ளிவாய்க்கால் கஞ்சி  ஊத்தினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கிறான் .
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.