Jump to content

🌱கள உறவுகளின் சிந்தையில் உதித்த நற்சிந்தனைகள், வாழ்க்கைத் தத்துவங்கள்🌳


Recommended Posts

💞காதலர் தினமான இன்று மணமான தம்பதியர் தமது திருமண வீடியோவை, ஒளிப்படங்களை, காதலிக்கும் காலங்களில் பரிமாறப்பட்ட வாழ்த்து மடல்களை, கடிதங்களை, மின்னஞ்சல்களை, பரிசுகளை இருவருமாகச் சேர்ந்து பொறுமையாகவும், புதுவித ஆர்வத்துடனும், ரசனை உணர்வுடனும் பார்த்து/படித்து/தொட்டுணர்ந்து மகிழ்வதற்கு, இனிய பழைய நினைவுகளை மீட்பதற்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்குதல் சிறப்பு. 💌📜📧📀📺🎁

💖💭அவை கால ஓட்டத்தில் நாம் மறந்துவிட்ட இனிய பல நினைவுகளையும், நிகழ்வுகளையும் நினைவூட்டி எம்முள்ளே உன்னதமான உணர்வுகளை எழுப்பி ஒருவித புத்துணர்ச்சியையும் தந்து மணவாழ்வின் அர்த்தத்தையும் புரியவைக்கும். தொய்ந்துபோன அன்புணர்வையும் மீளப்புதுப்பிக்க உதவும். திருமண பந்தமும் வலுப்பெறும். காதலர் தினத்தன்று மட்டுமல்ல  வாய்ப்புக் கிடைக்கும் போது இந்த நினைவு மீட்டல்களைச் செய்வது இன்னமும் சிறப்பு.💓

💘🌹எனவே, இன்றைய காதலர்கள் இன்றே நல்ல நினைவுகளைச் சேகரிக்க ஆரம்பிக்கலாம். நாளைய மண வாழ்வில் அவை பெரிதும் உதவலாம். உங்களது கற்பனா சக்தியை காதலுணர்வுடன் கலந்து இதைச் செய்யலாம்!📸📹💌🛍

🎉🎊தம்பதியர், காதலர்களுக்கு அன்பான காதலர் தின வாழ்த்துக்கள்! தனித்திருப்போர்க்கு மகிழ்வான, நீண்ட, நிறைவான காதலுடனான மணவாழ்வு அமைய வாழ்த்துக்கள்! ❤️💐😊

 

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.