Jump to content

செய்தித்தொகுப்பு : கொவிட் வக்சீன்கள் எப்படி கணக்காய்வு/மதிப்பீடு செய்யப்படும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்பு துறப்பு

இது சுய ஆக்கம் அல்ல, கீழே கொடுக்கபட்டுள்ள ஆங்கில செய்தி மூலங்களில் உள்ள செய்திகளின் தொகுப்பே.

 

கொவிட் தடுப்பூசிகள் மூன்று மேற்கு நாடுகளில் பாவனைக்கு வந்தது தெரிந்ததே.

இவை உண்மையில் குடிசனங்களுக்கு செலுத்த பட்டபின் அவை எதிர்பார்த்த நோயெதிர்ப்பை தருகிறனவா? என்பதை கணக்காய்வு (audit) செய்வது எப்படி என்பது பற்றிய செய்தியை கார்டியன் இணையதளம் வெளியிட்டுள்ளது.

அதற்கு முன் இந்த தடுப்பூசிகள் பற்றி மேலோட்டமாக பார்போம்

பைசர்/மொடேர்னா

பைசர்/மொடோர்னா வக்சீன்கள் mRNA தொழில் நுட்பத்தில் தயாரானவை. இது இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறை இது. இந்த முறையில் ஒரு மரபணுவியல் செய்தி ஊசி மூலம் எமது உடலில் செலுத்தபடும். இந்த செய்தியானது, எமது உடலில் உள்ள கலங்களுக்கு உத்தரவு பிறப்பித்து,  அந்த கலங்கள் நோயெதிர்ப்பை எமது உடலில் ஏற்படுத்தும்.

இந்த முறையின் பரீட்சார்த்த்தத்தின் போது 94-95% சதவீதம் ஆட்களுக்கு நோயெதிர்ப்பு ஏற்பட்டதாக அறியப்பட்டது.

பைசர் வைரஸ் அதி குறைந்த வெப்ப நிலையிலும், மொர்டேர்னா அதை விட கொஞ்சம் குறைந்த வெப்ப நிலையிலும் பேணப்பட வேண்டும்.

ஒன்க்ஸ்போர்ட்/அஸ்டிரா செனக்கா வக்சீன்

இது வெக்டர் தொழில் நுட்பத்தில் தயாரானது. இது இப்போ நடைமுறையில் உள்ள ஏனைய சில வக்சீன்களும் தயாரகும் முறையாகும்.

இதில் சிம்பான்சியில் சளி காய்ச்சலை ஏற்படுத்தும் வைரசை எடுத்து அதை மரபணு மாற்றத்துக்கு உள்ளாக்கி, அந்த வலுவற்ற வைரசை எமது உடலில் செலுத்தி அதன் மூலம் நோயெதிர்ப்பு எம் உடலில் தூண்டபடுகிறது.

பரீட்சார்த்த காலத்தில் இது ரெண்டு முழு டோஸ் கொடுத்தவர்களிடம் 62% சதவீதம் நோயெதிர்ப்பையும், (தவறுதலாக) ஒரு முழு டோசும் ஒரு அரை டோசும் கொடுத்தவர்களிடம் 90% பேரில் நோயெதிர்ப்பையும் உண்டாக்கியது.

இது சாதாரண குளிரூட்டி வெப்ப நிலையில் பேணப்படலாம்.

வக்சீன்கள் வேலை செய்கிறனவா?

இவை உண்மையில் நிஜத்தில் எவ்வளவு தூரம் பாதுகாப்பு அளிப்பன என்பது இப்போது உடனடியாக தெரியவராது என்கிறது கார்டியன் செய்தி .

யூகேயில் லொக் டவுனும் வந்துள்ளதால் தொற்று குறைவது வக்சீனாலா அல்லது லொக் டவுனாலா என்ற குழப்பமும் வரும்.

February மாதமளவில் தொற்று கூடினாலும், குறைந்தாலும் அது வக்சீனாலா அல்லது வேறு காரணிகளாலா என்பதை தனியே தொற்று எண்ணிகையை வைத்து மட்டும் சொல்ல முடியாது.

ஆனால் இதற்கும் ஒரு கட்டுப்பாடு பரிசோதனையை ஏற்படுத்தி உள்ளார்கள் என்கிறது கார்டியன்.

ஆஸ்பத்திரிகளில் இப்போ நியுமோனியாவுடன் சேர்பவர்களில் கொவிட் தொற்று எண்ணிக்கையையும், பெப்ரவரியில் நியூமோனியாவுடன் சேர்பவர்களில் கொவிட் தொற்று உடையவர்களின் எண்ணிகையையும் ஒப்பிட்டு வக்சீன்கள் வேலை செய்கிறனவா என ஒரு முடிவுக்கு வர முடியுமாம்.

அதே சமயம், தென்னாபிரிக்காவில் உருவாகியுள்ள வைரசின் விகாரிக்கு எதிராக இப்போ உள்ள 3 வக்சீனும் செயல்படுமா? என்ன சதவிகிதத்தில் செயல்படும் என்பது பற்றியும் கேள்விகளை நிபுணர்கள் கேட்கிறார்கள்.

தேவைபடின் தமது வக்சீன்களை விரைவாக விகாரிகளை எதிர்கொள்ளும் படி மாற்ற முடியும் என பைசர் கூறியுள்ளது. அதே தொழில்நுட்பத்தில் தயாரான வக்சீன் என்பதால் இது மொடர்னாவுக்கும் பொருந்தகூடும். 

முடிவாக,

வக்சீன்கள் தொழில்படுகிறதா இல்லையா என்பதை நாம் யாரும் இப்போது கூற முடியாது ஆனால் அதை கணக்காய்வு செய்யும் பணிகளும் முடுக்கி விடப்படுள்ளன.

குரல்தரவல்ல அமைப்புகள் இதை பற்றி ஒரு முடிவை சொல்லும் போது யாழின் கொரோனா பதிவுகள் பக்கத்தில் இவை பதியப்படும்.

https://www.theguardian.com/society/2021/jan/03/oxford-covid-jab-delivered-this-week-when-vaccines-results

https://www.dailymail.co.uk/news/article-9110847/Matt-Hancock-worried-super-infectious-South-African-coronavirus-mutation.html

https://www.express.co.uk/life-style/health/1379431/covid-vaccine-latest-south-african-strain-vaccine-effectiveness
 

https://www.smh.com.au/world/europe/biontech-says-its-highly-likely-its-covid-19-vaccine-can-handle-mutation-20201223-p56poi.html
 

https://www.euronews.com/2020/12/31/what-are-the-differences-between-the-three-main-covid-19-vaccines 
 

Link to comment
Share on other sites

  • goshan_che changed the title to செய்தித்தொகுப்பு : கொவிட் வக்சீன்கள் எப்படி கணக்காய்வு/மதிப்பீடு செய்யப்படும்?

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.