Jump to content

நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள் – பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பெண் உயிரிழப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள் – பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பெண் உயிரிழப்பு

அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கட்டடத்தினுள் நுழைந்தவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றாலும் அதனை ட்ரம்பும் அவரது ஆதரவாளர்களும் ஏற்க மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அவையில் இருந்தனர்.

அதேநேரத்தில், ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஜோ பைடனின் வெற்றியை ஏற்க முடியாது என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ஆயிரக்கணக்கான ட்ரம்பின் ஆதரவாளர்கள் கட்டடத்துக்கு வெளியே கூடி போராட்டத்தில் ஈடுபட்டமையினால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றக் கட்டடத்தின் மேல்பகுதியில் துப்பாக்கிகளுடன் அதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

இதேவேளை, வெள்ளைமாளிகையில் ஊடகங்களைச் சந்தித்த ட்ரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் முடிவுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, எதிர்பாராதவிதமாக நாடாளுமன்றத்தின் வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் திடீரென நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தனர்.

இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டதுடன், துணை ஜனாதிபதி பென்ஸ், சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்டோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அத்தோடு, பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் ட்ரம்ப் ஆதரவாளர்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், பாதுகாப்பு படையினருக்கும் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில், ட்ரம்ப் ஆதரவாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என சி.என்.என். செய்தி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற கட்டட முற்றுகை போராட்டம் தற்போது கட்டுக்குள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்தக் கலவரம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுடன், 5 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் மீண்டும் தேர்தல் சபை வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்றத்தில் தொடரும் என நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைத் தலைவர் நான்சி பெலோசி தெரிவித்தார்.

இதேவேளை, அண்டை நாடான கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஸோன்சன் உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்கள் இதனை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நாடாளுமன்றத்தை-முற்றுக-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க படுகொலை-டிரம்பின் வீரர்கள் எப்படி நாடாளுமன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர்

Digital News Team

ஜூலியன் போர்கெர் – கார்டியன்

தினக்குரல் இணையம்

 

2000-6-1-300x200.jpeg

தாங்கள் தங்கள் எனக்கருதிய காங்கிரஸ் உறுப்பினர்களை தேடி நாடாளுமன்றத்திற்குள் மூர்க்கத்துடன் அலைந்துகொண்டிருந்தவேளை நாடாளுமன்ற பணியாளர்கள் கதவுகளை மூடி அவர்களை தடுத்ததுடன் மேசைகளின் கீழ் பதுங்கிக்கொண்டனர்.

1000-5-300x200.jpeg

சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்த ஒருவர் சபாநாயகரின் மேசையிலிருந்து கீழே விழுந்து கிடத்த ஆவணங்களை தனது சப்பாத்துக்காலால் மிதித்தார்.
காங்கிரஸின் சுவர்களில் பல வருடங்களாக பொறிக்கப்பட்டிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் கீழே பிடுங்கி எறியப்பட்டன.

116373614_gettyimages-1230453135-1-300x1
டிரம்பின் பதாகைகளும் கூட்டமைப்பின்கொடிகளையும் நாடாளுமன்றத்தின் கைவிடப்பட்ட மண்டபங்கள் வழியாக டிரம்பின் ஆதரவாளர்கள் எடுத்துச்சென்றனர்.
புதன்கிழமை ஆறாம் திகதி மதியவேளையில்-டொனால்ட் டிரம்பின் அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான நான்கு வருட தாக்குதல் அதன் தவிர்க்க முடியாத இலக்கை எட்டியது.குடியரசின் இதயத்தை இலக்காக கொண்ட வன்முறையின் களியாட்டமே அந்த இலக்கு.

1000-6-300x200.jpeg
சில அலுவலகங்களில் பணியாளர்கள் கதவை பாதுகாப்பிற்காக மூடிக்கொண்டு மேசைகளின் கீழ் பதுங்கிக்கொண்டனர்.
நாடாளுமன்ற பொலிஸார் எங்கே ஒரு பணியாளர் தனது நண்பருக்கு குறுஞ்செய்தியொன்றை அனுப்பினார்.பொலிஸாரால் டிரம்பின் ஆதரவாளர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
அமைதியான பிளக்லைவ் மட்டர் ஆர்ப்பாட்டங்களை மூர்க்கமாக ஒடுக்கிய தேசிய காவல்படையினரையும் பெடரல் ஏஜன்ட்களையும் மாலை வரை அங்கு காணமுடியவில்லை.

1000-7-300x200.jpeg
வெளியே உள்ள தாழ்வாரங்களில் டிரம்பி;ன் ஆதரவாளர்களால் சுதந்திரமாக நடமாட முடிந்தது,தாங்கள் தங்கள் எதிரிகள் என கருதிய காங்கிரஸ் உறுப்பினர்களை அவர்கள் மூர்க்கத்துடன் தேடினார்கள்.
சிலநிமிடங்களிற்கு முன்னர் தேர்தல் முடிவுகளிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுக்கொண்டிருந்த செனட் அறைக்குள் அவர்கள் நுழைந்தனர் உரையாற்றுவதற்கு பயன்படுத்தப்படும் பகுதிக்கு சென்ற கலகக்காரர்களில் ஒருவர் டிரம்ப் தேர்தலில் வெற்றிபெற்றார் என கூச்சலிட்டார்.
ஒளிரும் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் டிரம்பின் ஆதரவாளர்கள் பெருமளவில் நுழைய தொடங்க பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகத்தினை மேற்கொண்டனர்,இதன்போது சுடப்பட்ட பெண்ணொருவர் பின்னர் காயம் காரணமாக உயிரிழந்தார் என வோசிங்டன் பொலிஸார் தெரிவித்தனர்.வெடிபொருள் ஒன்றும் மீட்கப்பட்டது.
கட்டிடத்திற்கு வெளியே காணப்பட்ட தொலைக்காட்சி பணியாளர்களை கலகக்காரர்கள் தாக்கினர்.பல பொலிஸாரும் காயமடைந்தனர்.
நான்கு வருடத்திற்கு முன்னர் பதவியேற்றவேளை டிரம்ப் அமெரிக்க படுகொலை குறித்த அச்சத்தை ஏற்படுத்தினார்.

1000-9-300x200.jpeg
முன்னர் நடந்த ஒன்று என அவர் சித்திரித்திருந்தாலும் அது இனிமேல்தான் நடக்கப்போகின்றது என்பது விரைவில் தெளிவாகியது.
பல மாதங்களாக டிரம்ப் தெரிவித்து வந்தது போன்று அவரை உலகின் மிகவும் வலுவான அதிகாரம் மிக்க பதவிக்கு கொண்டுபோய்சேர்த்த அரசியல் முறையை – அது அவரை நிராகரித்தால் படுகொலை செய்வதற்கு டிரம்ப் தயாராகயிருந்தார்.

 

https://thinakkural.lk/article/103192

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேலிக் கூத்தானது அமெரிக்க சனநாகயம் – ரம்பின் ஆதரவாளர்களின் தொடரும் வன்முறை

spacer.png Trump supporters stormed the Capitol as Congress met to confirm Joe Biden’s victoryCredit: Getty Images – Getty

டொனால் ரம் அதிபராகத் தெரிவான போது கேலிக்குள்ளான அமெரிக்க முதலாளித்துவ ஜனநாயகம் மீண்டும் இன்று உலகிற்கு தனது கோமாளித்தனத்தை நிறுவியுள்ளது. அமெரிக்காவின் 46 அதிபராகத் தெரிவான ஜோ பிடன் இன் வெற்றியை சாட்சிப்படுத்தும் நிகழ்வைத் தடுப்பதற்காக கப்பிட்டல் கட்டிடத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான ரம்ப் இன் ஆதரவாளர்களில் ஒரு பெண் இன்று – 06.01.2021 – சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். முன்னதாக இத் தேர்தல் வெற்றியைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அறிவித்த ரம்ப் கப்பிடலுக்கு தமது ஆதரவாளர்களை செல்லுமாறு வேண்டுகொள் விடுத்தார். வன்முறை அதிகரித்த வேளையில், தொலைக்காட்சியில் தோன்றிய ரம், இத் தேர்தல் ஊழல் நிறைந்தது எனினும் தெரிவானவர்களின் கரங்களுக்குள் நாம் எதுவும் சாதிக்க முடியது என்பதால் வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவித்தார். ரிவிட்டர் ரம் இன் கணக்கை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து பேஸ் புக், இன்ஸ்ர கிராம் ஆகியன ரம்ப்பின் கணக்கை முடக்கியுள்ளன.

இவை அனைத்தையும் மீறி தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறும் ரம்ப்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் நிதி வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டடத்தின் சுவர்கள், கதவுகள் மிது தாக்குதல் நடத்திய ஆதரவாளர்களில் சிலர் கட்டடத்தின் உள்ளே சென்றனர். வெளியிலிருந்த ஆதரவாளர்கள் காவலுக்கு நின்ற போலிசார் மீது தாக்குதல் நடத்தினர். கடந்த வருடம் கறுப்பின மக்களில் உரிமைக்கான போராட்டத்தில் பொதுச் சொத்துக்கும் பொலீசாருக்கும் சேதம் விளைவதாகக் கூறிய அதே ரம் ஆதரவாளர்களே இப்போது பொதுச் சொத்தையும் அமெரிக்க சனநாயகத்தின் இருதயம் எனக் கருதும் கட்டடத்தையும் சேதப்படுத்தினர்.

சுட்டுக் கொலை செய்யப்பட்ட ரம் ஆதரவாளரான பெண், நிகழ்வு நடபெற்ற அறைக்குள் சென்று அங்கு தலைவரின் இருக்கையை ஆக்கிரமித்துக்கொண்டார். புதிதாக தெரிவான அதிபர் பிடன் தொலைக்காட்சியில் தோன்றி, அமெரிக்காவின் சனநாயகம் இதுவரை எதிர்பாராத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்தார். முன்னை நாள் ரம் இன் நண்பரான பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று பாராளுமன்றத்தில் ரம்பின் குண்டர்படையைக் கண்டித்துப் பேசினார்.
 

 

https://inioru.com/கேலிக்-கூத்தானது-அமெரிக்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மிளகாய்த்தூள் இல்லையே தவிர மற்றும்படி எல்லாம் ஓகே...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கிருபன் said:

டொனால் ரம் அதிபராகத் தெரிவான போது கேலிக்குள்ளான அமெரிக்க முதலாளித்துவ ஜனநாயகம் மீண்டும் இன்று உலகிற்கு தனது கோமாளித்தனத்தை நிறுவியுள்ளது.

உலகை, நாடுகளை பிரித்து,அழித்து அதன் மூலம் வாழ நினைப்பவர்களுக்கு.....
அதன் கர்மவினை அவர்களுக்கே சூழும்.

தன் வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும்.
 

Link to comment
Share on other sites

40 minutes ago, குமாரசாமி said:

உலகை, நாடுகளை பிரித்து,அழித்து அதன் மூலம் வாழ நினைப்பவர்களுக்கு.....
அதன் கர்மவினை அவர்களுக்கே சூழும்.

தன் வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும்.
 

உலகை, நாடுகளை பிரித்து,அழித்து அதன் மூலம் வாழ நினைப்பவர்களல்ல

வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் ஐரோப்பியர்கள் என்பதே நிதர்சனமானது. 

நாங்கள் அமெரிக்கர் என்று உலகை ஏமாற்றி, அமெரிக்க மக்களை அழித்துவிட்டு, அமெரிக்காவை இன்று ஆட்சி செய்பவர்கள் ஐரோப்பியர்களே. அதில் ஆங்கிலேயர்கள் முதன்மையானவர்கள்.😲

Link to comment
Share on other sites

காங்கிரஸ் பைடனை அடுத்த ஜனாதிபதியாக உறுதிப்படுதிதியுள்ளது. அவர் 20 திகதி பதவியேற்ப்பார் 

Link to comment
Share on other sites

வன்முறையை தூண்டி வேடிக்கை பார்த்த ட்ரம்பின் பதவி உடனடியாக பறிபோகிறது?

   by : Anojkiyan

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/2020-10-23T021703Z_2143786690_RC22OJ93ZBZQ_RTRMADP_3_USA-ELECTION-DEBATE-720x450.jpg

நாடாளுமன்றக் கட்டட தாக்குதல் காரணமாக உலக தலைவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சிக்கி தவிக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

வன்முறையை தூண்டி வேடிக்கை பார்த்ததாக, காரசாரமான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள ட்ரம்ப், இன்னும் 13 நாள்கள் மட்டுமே ஜனாதிபதியாக பணியாற்றுவார் என இருந்த நிலையில், தற்போது மிகவும் மோசமான ஜனாதிபதி என்ற பெயருடன் அரியாணையிலிருந்து அவர் கீழே தள்ளிவிடப்படவுள்ளார்.

ட்ரம்பை பதவியில் இருந்து நீக்க அரசமைப்புச் சட்டத்தில் வழி இருப்பதாகவும், அதை பயன்படுத்த வேண்டும் எனவும் வெர்மான்ட் மாகான குடியரசுக் கட்சி ஆளுநர், தேசிய உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர், என்.ஏ.ஏ.சி.பி. (நேஷனல் அசோசியேஷன் ஃபார் அட்வான்ஸ்மென்ட் ஆஃப் கலர்ட் பீப்புள்) தலைவர் உள்ளிட்டோர் மைக் பென்சை சந்தித்து கோரியுள்ளனர்.

அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட அந்த 25ஆவது திருத்தத்தின் படி, ஜனாதிபதிக்கு அவரது கடமையை ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டால் அவரது பொறுப்புகள் வேறொருவருக்கு மாற்றப்படலாம்.

1967ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டதில் இருந்து இந்த சட்டத் திருத்தம் ஒரு முறைகூட பயன்படுத்தப்பட்டதில்லை. ஆனால் இப்படியொரு சரித்திர மாற்றம் நிகழுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

tr.jpg

 


அமெரிக்க கலவரம்: இதுவரை நால்வர் உயிரிழப்பு- 52பேர் கைது!

இதனிடையே, அமெரிக்க செனட் சபை அமைந்துள்ள கெப்பிட்டல் ஹில் கட்டட தொகுதியில் இடம்பெற்ற கலவரத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் 52பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 47 பேர் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 5 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, அமெரிக்காவின் வொஷிங்டன் டிசியில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

tr2.jpg

 


அவமரியாதையை பார்த்து திகைக்கிறேன்: ட்ரம்ப் குறித்து புஷ் கருத்து

ட்ரம்ப்பின் ஆதரவுக்குழுவினர் நடத்திய வன்முறைக்கு முன்னாள் ஜனாதிபதியும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் பதிவு செய்துள்ளார்.

‘தேர்தல் முடிவுகளை மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் எப்படி எதிர்க்கப்படுகிறது? இது நமது ஜனநாயக குடியரசு கிடையாது. தேர்தலுக்குப் பின்னர் சில அரசியல் தலைவர்களின் பொறுப்பற்ற நடத்தை மற்றும் நமது அமைப்புகள், சட்ட அமுலாக்கத்துறைகளுக்கு நாம் காட்டும் அவமரியாதையை பார்த்து நான் மிகவும் திகைக்கிறேன்’ என கூறியுள்ளார்.

gettyimages-1227843919-6f96723f43f1f5a67

 


ட்ரம்பின் மகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தைத் தாக்கி, வன்முறையில் ஈடுபடும் குழுவினரை தேசபக்தர்கள் என்று டுவிட்டரில் புகழாரம் சூட்டிய ட்ரம்பின் மகள் இவாங்காவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

எனினும், அவர் எதிர்ப்புகள் அதிகரித்ததையடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டு, ‘அமைதியான எதிர்ப்பே தேசபக்தி. வன்முறை என்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த வன்முறை கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

ivanka-trump-security-clearance.jpg

 


அமெரிக்க கலவரம் கவலையளிக்கின்றது: ஐக்கிய நாடுகள் சபை

உலகையே உலுக்கிய நாடாளுமன்றக் கட்டட தாக்குதல் கவலையளிக்கும் வகையில் இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகைய சூழ்நிலைகளில், வன்முறையிலிருந்து விலக வேண்டியதன் அவசியத்தையும், ஜனநாயக வழிமுறைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் மதிக்க வேண்டியதன் அவசியத்தை அரசியல் தலைவர்கள் தங்களின் ஆதரவாளர்களுக்குக் கட்டாயம் எடுத்துக்கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

7704332996_2b8f3f72cf_z.jpg

 


தீவிரமடைந்த மோதலால் பதவியை துறந்த அதிகாரிகள்!

நாடாளுமன்றக் கட்டட தாக்குதல் தீவிரமடைந்ததற்கு வன்முறைக்கு மத்தியில் வெள்ளை மாளிகையின் துணை ஊடக செயலாளர் சாரா மேத்யூஸ் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இதேபோல் முன்னாள் வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநரும், ஊடக செயலாளரும், மெலனியா ட்ரம்பிற்கான தற்போதைய தலைமைத் தலைவருமான ஸ்டீபனி கிரிஷமும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

1.jpg

 


ட்ரம்ப் ஆதரவாளர்களின் வன்முறை போராட்டங்கள்: உலக தலைவர்கள் கண்டனம்!

அமெரிக்காவில் ட்ரம்ப் ஆதரவாளர்களின் வன்முறை போராட்டங்களுக்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், இந்திய பிரதமர் மோடி, உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் அமெரிக்காவில் நடந்த வன்முறைப் போராட்டங்கள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும், ஜனநாயகம் மீண்டும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க செனட் சபை அமைந்துள்ள கெப்பிட்டல் ஹில் கட்டட தொகுதியில் இடம்பெற்ற கலவரத்தை, பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ‘அவமதிப்பான காட்சிகள்’ என கூறி கண்டித்துள்ளார்.

US-Capitol-Violence-Narendra-Modi-Boris-

 


இறுதியில் பலத்த எதிர்ப்பு- எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதல்

பலத்த எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில், ஜோ பைடன் வெற்றிபெற்றதற்கான வெற்றிச் சான்றிதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜோ பைடன் எதிர்வரும் 20ஆம் திகதி அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கிறார்.

கடந்த நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் 306 இடங்களிலும் ட்ரம்ப் 232 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

Joe-Biden-Photos.jpg

வன்முறையை தூண்டி வேடிக்கை பார்த்த ட்ரம்பின் பதவி உடனடியாக பறிபோகிறது? | Athavan News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nunavilan said:

ட்ரம்பின் மகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தைத் தாக்கி, வன்முறையில் ஈடுபடும் குழுவினரை தேசபக்தர்கள் என்று டுவிட்டரில் புகழாரம் சூட்டிய ட்ரம்பின் மகள் இவாங்காவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

கூடின கூட்டு அப்படி... 😎

The glitzy event in Hyderabad was just a glamorous selfie for Ivanka Trump  and Narendra Modi

Link to comment
Share on other sites

29 minutes ago, குமாரசாமி said:

கூடின கூட்டு அப்படி... 😎

The glitzy event in Hyderabad was just a glamorous selfie for Ivanka Trump  and Narendra Modi

அப்படி எல்லாம் சொல்லக்கூடாது சாமி அவர்களே! ட்ரம்பின் மகள் மோடியை விட உயர்ந்தவர்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுகும் கூட 
உலக போலீஸ் காரனின் 
இன்னும் ஒரு ஜனநாயகம்.

Link to comment
Share on other sites

1 hour ago, Paanch said:

அப்படி எல்லாம் சொல்லக்கூடாது சாமி அவர்களே! ட்ரம்பின் மகள் மோடியை விட உயர்ந்தவர்🤣

ம்... நல்ல உயரம் தான் அண்ணை! 😀

1 hour ago, குமாரசாமி said:

The glitzy event in Hyderabad was just a glamorous selfie for Ivanka Trump  and Narendra Modi

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதவியிலிருக்கும் ஜனாதிபதியே அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான வன்முறையை தூண்டினார்- ஒபாமா

Digital News Team

பதவியிலிருக்கும் ஜனாதிபதியே அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான வன்முறையை தூண்டினார் என முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

2000-6-300x200.jpeg2000-5-300x200.jpeg
அறிக்கையொன்றில் பராக் ஒபாமா தெரிவித்துள்ளதாவது.
சட்டபூர்வமான தேர்தலின் முடிவை பற்றி அடிப்படையற்ற விதத்தில் பொய்சொல்லிக்கொண்டிருக்கும் பதவியிலிருக்கும் ஜனாதிபதியால் தூண்டப்பட்ட அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான வன்முறை எங்கள் தேசத்தி;ற்கு ஏற்படுத்தப்பட்ட பெரும் அவமானம் என்பதை வரலாறுசரியான விதத்தில் நினைவில் வைத்திருக்கும்.

2000-1-300x200.jpeg2000-3-300x200.jpeg
ஜனாதிபதியின் கட்சியை சேர்ந்தவர்கள் பலர் இந்த வன்முறைக்கு எதிராக உரத்தகுரலில் கருத்து வெளியிட்டிருப்பதை பார்த்து நான் மனநிறைவடைகின்றேன்.
அவர்களுடைய குரல்கள் மிரட்டல்கள் அச்சுறுத்தல்களிற்கு அடிபணிய மறுத்து தங்கள் கடமையை நேர்மையாக கௌரவமாக முன்னெடுத்த ஜோர்ஜியாவிலும் ஏனைய பகுதிகளிலும் உள்ள குடியரசு கட்சி அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகளின் குரல்களிற்கு மேலும் உதாரணமாக அமைகின்றன.
ஜோ பைடன் எங்கள் அரசியலிற்கான பொதுவான நோக்கத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கு – மீட்பதற்கு முயலும் இந்த தருணத்தில் தற்போதும்-எதிர்வரும் நாட்களிலும் எதிர்வரும் வாரங்கள் மாதங்களிலும் எங்களிற்கு இதுபோன்ற தலைவர்கள் அவசியம்.
கட்சி வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு நாங்கள் அமெரிக்கர்கள் அனைவரும் பைடனின் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கவேண்டும் என ஒபாமா தெரிவித்துள்ளார்.

2000-2-300x200.jpeg

 

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறைகள் குறித்து உலக தலைவர்கள் அதிர்ச்சி

Digital News Team

அமெரிக்காவில் நாடாளுமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்தும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் குறித்தும் உலக தலைவர்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து அதிர்ச்சியடைந்துள்ளதாக ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார்.

116373643_gettyimages-1294932172-300x169
இவ்வாறான சூழ்நிலைகளில் அரசியல் தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களை வன்முறைகளை கைவிடுமாறு வலியுறுத்துவது அவசியம் என தெரிவித்துள்ள அவர் ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றுமாறும்சட்டத்தின் ஆட்சியை மதிக்குமாறும் அரசியல் தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களை கேட்டுக்கொள்ளவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விடயங்களை அவமானகரமானவை என பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன்சன் தனடுது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

116373641_gettyimages-1294932124-300x169
அமெரிக்க சர்வதேச அளவில் ஜனநாயகத்திற்கு ஆதரவான நாடு அங்கு அமைதியான விதத்தில் உரிய முறையில் அதிகார மாற்றம் இடம்பெறுவது முக்கியம் எனவும் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
வோசிங்டனில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களின் தலைவர்சார்லெஸ் மைக்கல் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க காங்கிரஸ் ஜனநாயகத்தின் ஆலயம் என தெரிவித்துள்ள அவர் ஜோ பைடனிடம் அதிகாரத்தை அமைதியான முறையில் அமெரிக்கா வழங்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடளுமன்றத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை ஜனநாயகத்தின் எதிரிகள் வரவேற்பார்கள் என ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் தெரிவி;த்துள்ளார்.

Thinakkural.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டார் இவன்கா டிரம்ப்

Digital News Team

அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறைகளில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என தெரிவித்தமைக்காக இவன்கா டிரம்ப் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளார்.

ivanka66-1-300x180.jpg
டுவிட்டர் செய்தியொன்றில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுள்ள இவன்கா அவர்களை வன்முறையில் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்க தேசப்பற்றாளர்களே பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறும் நடவடிக்கைகளோ அல்லது எங்கள் சட்ட அமுலாக்களை அவமதிப்பதோ ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இவன்காவின் இந்த டுவிட்டர் பதிவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை தொடர்ந்து அவர் அதனை நீக்கியுள்ளார்.

ivanka-tweet-231x300.jpg
டிரம்பின் ஆதரவாளர்களால் முற்றுகையிடப்பட்டுள்ள அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் காணப்பட்ட செய்தியாளர் ஜக் சேர்மன் இவன்கா டிரம்ப் ஆர்ப்பாட்டக்காரர்களை  தேசப்பற்றாளர்கள் என குறி;ப்பிட்டமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

ivanka-trump-new-300x195.jpg
அமெரிக்க தேசப்பற்றாளர்களா?நான் இங்கு முடக்கப்பட்ட நிலையில் உள்ளேன்,பாராளுமன்றம் அத்துமீறப்பட்டுள்ளது,துப்பாக்கிகள் காணப்படுகின்றன பயன்படுத்தப்படுகின்றன நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை கலகத்தில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என அவர் அழைத்துள்ளமை குறித்து டுவிட்டரில் கேள்வி எழுப்பப்பட்டதை தொடர்ந்து இவன்கா இல்லை அமைதியான ஆர்ப்பாட்டம் தேசப்பற்றை வெளிப்படுத்துகின்றது,வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது  அதனை கடுமையாக கண்டிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 
 

✂️

Link to comment
Share on other sites

அமெரிக்க ஊடகங்கள் உலகில் உள்ள மற்றைய மக்கள் கூட்டத்தை பார்த்து பயங்கரவாதிகள் என்றவர்கள் சொந்த மக்களையே பயங்கரவாதிகள் என்றழைப்பது நல்ல  திருப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, uthayakumar said:

இதுகும் கூட 
உலக போலீஸ் காரனின் 
இன்னும் ஒரு ஜனநாயகம்.

இந்த மாதம் 20ம்திகதி சிங்கன் வேலை முடிஞ்சு சொந்த வீட்டுக்கு போக பழைய பைல் எல்லாத்தை தூக்கிப்போட்டு இல்லாத பொல்லாத கூத்தெல்லாம் காட்டப்போறாங்கள்.😂

Donald Trump wollte seine Tochter Ivanka als Vizepräsidentin - DER SPIEGEL

ராசாத்தி உனக்கும் இருக்கு கூத்து...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

அப்படி எல்லாம் சொல்லக்கூடாது சாமி அவர்களே! ட்ரம்பின் மகள் மோடியை விட உயர்ந்தவர்🤣

ஐயாவும் அதே உயரம்  எல்லோ...!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள டிறம்ப் ஆதரவாளர்கள் மறுப்பு – அமெரிக்காவில் கலவரம்

 
capitol-hill1.jpg
 32 Views

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் வெற்றிபெற்றதை ஏற்றுக்கொள்ள அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிறம் அவர்களும், அவர்களின் ஆதாரவாளர்களும் தொடர்ந்து மறுத்துவரும் நிலையில் நேற்று (6) அங்கு கலவரம் வெடித்துள்ளது.

ஜோ பைடனின் வெற்றியை உறுதிசெய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இடம்பெற்ற கப்பிற்றல் கில் என்ற வளாகத்தை டிறம்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருற்தது.

முற்றுகையாளர்கள் அதிகளவில் ஒன்று கூடி கட்டிடத்தின் ஜன்னல்கள் மற்றும் ஏனைய தளபாடங்களை தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதுடன் எல்லா வழிகளையும் மூடியிருந்தனர். அங்கு காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டபோதும், முற்றுகையாளர்கள் கலைந்து செல்ல மறுத்துள்ளதுடன், அதில் ஏற்பட்ட கலவரங்களில் இதுவரையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

capitol-hill2-300x169.jpgவொசிங்டன் வளாகத்தில் தற்போது ஊரடங்கு சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிகளவு கவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த முற்றுகைக்கு ஆதரவாகவும், நடந்துமுடிந்த தேர்தல் முறைகேடானது எனவும் தனது சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டுவரும் டிறம் அவர்களின் ருவிட்டர் மற்றும் முகநூல் கணக்குகளை அந்த நிறுவனங்கள் தற்காலிகமாக முடக்கியுள்ளன.

அமெரிக்காவில் இடம்பெறும் இந்த சம்பவங்கள் தொடர்பில் உலகத்தலைவர்கள் தமது கவலைகளையும், கண்டனங்களையும் தெரிவித்துவருகின்றனர்.

 

https://www.ilakku.org/?p=38749

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க கலவரம்: பிரித்தானிய தலைவர்கள் கண்டனம்!

நேற்றைய  அமெரிக்க களேபரத்தை பார்த்த  மெக்சிக்கோ... தனது சொந்தக் காசில், அமெரிக்க எல்லையில் மதில் கட்டப்  போகின்றதாம். 😜

கனடா... தானும், ஒரு மதில் கட்டுவமோ... என்று யோசிக்கின்றதாம்.  🤣

Link to comment
Share on other sites

18 hours ago, குமாரசாமி said:

ஐயாவும் அதே உயரம்  எல்லோ...!😎

யார் அந்த ஐயா.....? அறிய ஆவலாக உள்ளது சாமியார்.🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Paanch said:

யார் அந்த ஐயா.....? அறிய ஆவலாக உள்ளது சாமியார்.🧐

 

17 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்க கலவரம்: பிரித்தானிய தலைவர்கள் கண்டனம்!

நேற்றைய  அமெரிக்க களேபரத்தை பார்த்த  மெக்சிக்கோ... தனது சொந்தக் காசில், அமெரிக்க எல்லையில் மதில் கட்டப்  போகின்றதாம். 😜

கனடா... தானும், ஒரு மதில் கட்டுவமோ... என்று யோசிக்கின்றதாம்.  🤣

 அணுகுண்டு சூட்கேஸ் இன்னும் ஆர் வைச்சிருக்கினம் எண்டது பெரிய கேள்வி....? பதவி முடிஞ்சு போறம் தானே எதுக்கும் பட்டன் வேலை செய்யுதோ இல்லையோ எண்டு அமத்தி பாக்கக்கூடிய ஆள் தான் ட்ரம்ப்..:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

அணுகுண்டு சூட்கேஸ் இன்னும் ஆர் வைச்சிருக்கினம் எண்டது பெரிய கேள்வி....? பதவி முடிஞ்சு போறம் தானே எதுக்கும் பட்டன் வேலை செய்யுதோ இல்லையோ எண்டு அமத்தி பாக்கக்கூடிய ஆள் தான் ட்ரம்ப்..:cool:

RBI's new Rs 2000 notes do not have a Nano-GPS chip | Technology News,The  Indian Express

எஸ்.வி.சேகர் மீது கோவை மாநகர ஆணையரிடம் தமுமுக புகார் | Complaint against  Coimbatore Municipal Commissioner on SV Shekar | nakkheeran

எஸ்.வி. சேகர்,  இந்தியாவில் வந்த புதிய இரண்டாயிரம் ரூபாய் தாளில்,
"சிப்" வைத்து இருக்கிறார்கள், என்றும்... 
"சற்றலைட்" மூலம் ... அடித்த,  காசு... யார் வைத்திருக்கிறார்கள் 
என்று, மோடி கண்டு பிடித்து விடுவார்.  என்று.. சொன்ன மாதிரி...

இப்பிடியும் ... ஒரு  "பீலா" கதை, கட்டி விட்டு... 
கூத்துப் பாக்கிற சனமும், இருக்குது.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்க நாடாளுமன்ற வன்முறையில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு டிரம்பை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை வலுக்கிறது

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறையில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு டிரம்பை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை வலுக்கிறது
 
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றியை உறுதிசெய்து, சான்று அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டம் 6-ந் தேதியன்று நடைபெற்றது. அப்போது, தோல்வி அடைந்த தற்போதைய ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு, நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, வன்முறையில் இறங்கினர். துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு நிலைமை விபரீதமானது. துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க வரலாற்றில் முன் எப்போதும் நடந்திராத வகையில் அரங்கேறிய வன்செயல்கள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள உலக நாடுகளை முகம் சுளிக்க வைத்தது. கண்டனங்கள் குவிந்தன.
 
 
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள், இந்த வன்செயல்களை கண்டித்ததுடன் சட்டவிரோதமான போராட்டங்களால் ஜனநாயக செயல்முறைகளை தகர்த்து எறிந்து விட முடியாது என கருத்து தெரிவித்தனர்.
 
இந்த நிலையில், நாடாளுமன்ற வன்முறையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து இருக்கிறது.
 
இந்த சம்பவத்தின்போது படுகாயம் அடைந்த அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள அமெரிக்க கேப்பிட்டல் போலீஸ் அதிகாரி பிரையன் சிக்னிக் மரணம் அடைந்தார். இது அங்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
நாடாளுமன்றத்தில் அரங்கேறிய வன்முறைகளுக்கு அதிருப்தி தெரிவித்து, டிரம்ப் மந்திரிசபையில் போக்குவரத்து மந்திரியாக இருந்த எலைன் சாவ் பதவி விலகினார். தான் மிகுந்த வேதனைக்கு ஆளாகி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
 
அவரைத் தொடர்ந்து கல்வி மந்திரி பெட்சி டிவோஸ் ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாக்கள் அமெரிக்க அரசியல் அரங்கை பரபரக்க வைத்துள்ளன.
 
இன்னும் 11 நாட்கள் மட்டுமே டிரம்ப் பதவி வகிக்க முடியும் என்ற நிலையில், நாடாளுமன்ற வன்முறைக்கு தூண்டி விட்ட காரணத்தால் அவரை பதவியை விட்டு நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவில் வலுத்து வருகிறது.
 
பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரும், ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நான்சி பெலோசியும், செனட் சபையின் ஜனநாயக கட்சி தலைவர் சக் சூமரும், துணை ஜனாதிபதி மைக் பென்சும், மந்திரிசபையும் டிரம்பை பதவியை விட்டு நீக்க வேண்டும் என்று கோரி உள்ளனர்.
 
இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில், ஜனாதிபதியின் ஆபத்தான மற்றும் தேசத்துரோக செயல்கள், அவரை உடனடியாக பதவியை விட்டு அகற்றுவதற்கான தேவையை ஏற்படுத்தி உள்ளன என கூறி உள்ளனர். இதற்கு குடியரசு கட்சி எம்.பி.க்களும் ஆதரவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
அமெரிக்க அரசியல் சாசனத்தின் 25-வது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி, டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி உள்ளனர்.
 
இந்த பிரிவானது, ஜனாதிபதியால் தனது கடமைகளை மனம் அல்லது உடல் ரீதியில் நிறைவேற்ற முடியாதபோது, துணை ஜனாதிபதி அந்த அதிகாரத்துக்கு வர வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
நாடாளுமன்ற வன்முறைகள் அரங்கேறி 24 மணி நேரம் ஆன நிலையில், நேற்று முன்தினம் டிரம்ப் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர், புதிய நிர்வாகம் ஜனவரி 20-ந் தேதி பதவி ஏற்கும். எனது கவனம், இப்போது ஒரு மென்மையான, ஒழுங்குமுறையுடனான, தடையற்ற அதிகார மாற்றத்தை உறுதி செய்வதில் திரும்பி இருக்கிறது என கூறி உள்ளார்.
 
அமைதியும், நல்லிணக்கமும் திரும்ப வேண்டும், நாடு முன்னேற வேண்டும் என்றும் அவர் அந்த வீடியோவில் அழைப்பு விடுத்துள்ளார்.
 
அதே நேரத்தில் தனது ஆதரவாளர்களை டிரம்ப் புகழ்ந்து தள்ளி உள்ளதாகவும், நமது நம்ப முடியாத பயணம் ஆரம்பம்தான் எனவும் அவர் கூறி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
 
இந்த வீடியோ முதல் முறையாக, டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, புதிய நிர்வாக பதவி ஏற்புக்கு வழிவிடுவதாக கருத்துக்கள் எழுந்துள்ளன.
 
மூத்த ஊழியர்கள் அனைவரும் ராஜினாமா செய்யவிருந்ததாலும், பதவி நீக்க குற்றச்சாட்டு தவிர்க்க முடியாததாகி இருப்பதாலும்தான் டிரம்ப் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் ஒருவர் கூறியதாக சி.என்.என். கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
Link to comment
Share on other sites

5 hours ago, உடையார் said:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள், இந்த வன்செயல்களை கண்டித்ததுடன் சட்டவிரோதமான போராட்டங்களால் ஜனநாயக செயல்முறைகளை தகர்த்து எறிந்து விட முடியாது என கருத்து தெரிவித்தனர்.

இதைத்தான் கோவிலை இடித்துவிட்டு தேவாரம் பாடுவது என்பது. அருகே உள்ள இலங்கையில் சனநாயகத்தைத் தகர்த்து எறிந்தது தன் நாடுதான் என்பதை வசதியாக மறந்துவிட்டாரோ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.