Jump to content

கனடா தமிழர்களை சிறிலங்கா நாடாளுமன்றில் காட்டிக்கொடுத்த தமிழ் கல்விமான்? கடும் கோபத்தில் உலகத் தமிழர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுனரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், கல்விமானுமாகிய கலாநிதி சுரேன் ராகவன், சிறிலங்கா நாடாளுமன்றில் அண்மையில் ஆற்றியிருந்த உரை கனடா வாழ் தமிழ் மக்களின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றது.

கலாநிதி ராகவன் தனது நாடாளுமன்ற உரையின் மூலம் கனடா வாழ் தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளதாகவும், கனடா தமிழ் மக்களை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் காட்டிக்கொடுத்துவிட்டதாகவும், கனடா மக்கள் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் பதிவு செய்து வருகின்றார்கள்.

இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப் படுகொலையே என்று வலியுத்தி கனடா ஒன்ராரியோ சட்டசபையில் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம்’ தொடர்பான 104 என்ற சட்டமூலம் முன்மொழியப்பட்டிருந்தது.

இந்த சட்டமூலத்தைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி கலாநிதி சுரேன் ராகவன் சிறிலங்கா நாடாளுமன்றில் ஆற்றியிருந்த உரை தொடர்பாகவே கனடா வாழ் தமிழ் மக்கள் தமது கடும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றார்கள்.

 

கனடா தமிழ் மக்களின் உரிமைசார் அரசியல் நடவடிக்கை ஒன்றை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியிருந்த கலாநிதி ராகவன், அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள 4800 பாடசாலைகளிலும் மே 18 முதல் 25ம் திகதி வரையிலான ஒரு வார காலத்திற்கு இலங்கையின் இனப்படுகொலை தொடர்பாக அறிவூட்டல்கள் இடம்பெறும் ஆபத்து உள்ளதென்று எச்சரிக்கையையும் விடுத்திருந்தார்.

மிக முக்கியமாக குறிப்பிட்ட அந்த சட்டமூலம் 104 இனை முன்மொழிந்த சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம், ஒரு முன்னாள் இலங்கைப் பிரஜை என்பதையும், அவர் வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதையும் அவர் சிறிலங்கா நாடாளுமன்றில் பகிரங்கப்படுத்தியிருந்தார்.

ராகவனின் குறிப்பிட்ட இந்தச் செயல் ராகவனின் உள்நோக்கம் பற்றி சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகச் சுட்டிக்காண்பிக்கும் கனேடிய தமிழ் மக்கள், சட்டமூலம் பற்றிய எச்சரிக்கையை எழுப்பபுவதே ராகவனின் நோக்கமாக இருந்தால் சட்டமூலத்தை முன்மொழிந்தவரின் பூர்வீகம் பற்றி சிறிலங்கா நாடாளுமன்றில் வெளிப்படுத்தவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றார்கள்.

வல்வெட்டித்துறை என்ற அடையாளத்தைச் சுமத்தி, அதன் மூலம் ஏதாவது அனுகூலத்தை ராகவன் பெற்றுக்கொள்ள முயல்கின்றாரா என்ற கேள்வியையும் சமூகவலைத்தளங்களில் எழுப்பி வருகின்றார்கள்.

இது அப்பட்டமான ஒரு காட்டிக்கொடுப்பு என்று கனேடிய தமிழ் மக்களால் அடையாளப்படுத்தப்படுகின்றது.

தன்னை ஒரு தமிழனாக அடையாளப்படுத்திக்கொண்டு தமிழ் இனத்திற்கு எதிராகச் செயற்படும் பலர் வரிசையில் கலநிதி ராகவன் பெயரும் வரலாற்றில் இடம்பெற்றுவிடக்கூடாது என்றும் கருத்துப் பதிவிட்டுவரும் தமிழ் மக்கள், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சைக் குறிவைத்து காய்நகர்த்தும் ராகவன் போன்ற தமிழ் புத்தஜீவிகள் அந்த காரணத்திற்காக தமிழ் மக்களின் நலன்களை அடகுவைப்பதானது ஏற்கனவே வேதனையில் இருக்கும் தமிழ் மக்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கும் ஒரு செயல் என்றும் குறிப்பிடுகின்றார்கள்.

https://www.tamilwin.com/canada/01/265836?ref=rightsidebar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தனது கடமையை தானே செய்திருக்கிறார்!

Link to comment
Share on other sites

29 minutes ago, ஏராளன் said:

அவர் தனது கடமையை தானே செய்திருக்கிறார்!

எலும்புத்துண்டுக்கு வாலாட்டுவது கடமையல்ல, அது உணர்வு, இந்த உணர்வுள்ள சிலர் நாங்களும் தமிழினத்தைச் சேர்ந்த தமிழர்கள் என்று தங்களைக் காட்டிவருவது ஒன்றும் புதியதல்ல, புதுமையுமல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தன்னைத் தமிழரென்று எப்போதாவது கூறினாரா அல்லது தமிழன் என்றால் காட்டிக் கொடுக்க மாட்டான் என்று பொருளா.. ? 

எங்கள் கண் முன்னே எத்தனை நூறு உதாரண புருசர்கள்(😏) தற்போதும் உயிரோடு உலாவுகிறார்கள். 😡

இவர் தமிழர்கழுக்கு ஆதரவாக கதைத்திருந்தால்தான் நான் ஆச்சரியமடைந்திருப்பேன்.. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அவர் தன்னைத் தமிழரென்று எப்போதாவது கூறினாரா அல்லது தமிழன் என்றால் காட்டிக் கொடுக்க மாட்டான் என்று பொருளா.. ? 

எங்கள் கண் முன்னே எத்தனை நூறு உதாரண புருசர்கள்(😏) தற்போதும் உயிரோடு உலாவுகிறார்கள். 😡

இவர் தமிழர்கழுக்கு ஆதரவாக கதைத்திருந்தால்தான் நான் ஆச்சரியமடைந்திருப்பேன்.. 😂😂

சிங்களவர் தான் சிறுபான்மையினர் என உரக்க கூறியவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கூழான் கற்களை எல்லாம் கல்விமான் நொல்லிமான் என்று கொண்டு வைரக் கற்களாக பாவனை செய்து.. கூப்பிட்டு வைச்சு பொன்னாடை போர்த்திய கனடாக்காரருக்கு வேணும்.

இன்னும் எம்மவர்களுக்கு எவன் துரோகி எவன்...நண்பன் என்று அடையாளம் காண முடியவில்லை என்றால்.. அது துரோகிகளின் தவறல்ல.. எதிரிகளின் தவறல்ல..  எமது முழு முட்டாள் தனத்தின் வெளிப்பாடு. 

Link to comment
Share on other sites

5 hours ago, Kapithan said:

அவர் தன்னைத் தமிழரென்று எப்போதாவது கூறினாரா அல்லது தமிழன் என்றால் காட்டிக் கொடுக்க மாட்டான் என்று பொருளா.. ? 

எங்கள் கண் முன்னே எத்தனை நூறு உதாரண புருசர்கள்(😏) தற்போதும் உயிரோடு உலாவுகிறார்கள். 😡

அது தானே, என்னையே தமிழரா, இல்லையா, நானேதான் Kapithanஆ என்று உங்களுக்கு அடையாளம் தெரியவில்லை. சுரேன் ராகவனை எப்படி அடையாளம் காணப்போகிறீர்கள்? 😁 நடக்கிற காரியமா?

8 minutes ago, nedukkalapoovan said:

இன்னும் எம்மவர்களுக்கு எவன் துரோகி எவன்...நண்பன் என்று அடையாளம் காண முடியவில்லை என்றால்.. அது துரோகிகளின் தவறல்ல.. எதிரிகளின் தவறல்ல..  எமது முழு முட்டாள் தனத்தின் வெளிப்பாடு

ஆகா...... கொஞ்சக்காலமாக நெடுக்கரின் கருத்துக்களை பார்க்கும்போது எங்கோ அரசமரத்துக்கு கீழே அமர்ந்துவிட்டரோ அல்லது கைலாசாவில் நித்தியானந்தம் அடைந்துவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. வாழ்த்துக்கள்😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கற்பகதரு said:

ஆகா...... கொஞ்சக்காலமாக நெடுக்கரின் கருத்துக்களை பார்க்கும்போது எங்கோ அரசமரத்துக்கு கீழே அமர்ந்துவிட்டரோ அல்லது கைலாசாவில் நித்தியானந்தம் அடைந்துவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. வாழ்த்துக்கள்

ஏன் வேப்பமரத்துக்கு கீழே அமர்ந்தால் என்னாகும்..??! நீங்களும்.. அதே குட்டையில் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

அது தானே, என்னையே தமிழரா, இல்லையா, நானேதான் Kapithanஆ என்று உங்களுக்கு அடையாளம் தெரியவில்லை. சுரேன் ராகவனை எப்படி அடையாளம் காணப்போகிறீர்கள்? 😁 நடக்கிற காரியமா?

நீங்கள் ஏன் காலை காலைத் தூக்குகிறீர்கள்.. 😂

"சுரேன் ராகவ"  க்கு குறிப்பிட்டதற்கு நீங்கள் அனுங்குவதன் காரணம் என்ன.. ?

Blood is thicker than water என்பது  பொருந்திப் போகிறதோ.. 🤣🤣

Link to comment
Share on other sites

9 minutes ago, கற்பகதரு said:

ஆகா...... கொஞ்சக்காலமாக நெடுக்கரின் கருத்துக்களை பார்க்கும்போது எங்கோ அரசமரத்துக்கு கீழே அமர்ந்துவிட்டரோ அல்லது கைலாசாவில் நித்தியானந்தம் அடைந்துவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. வாழ்த்துக்கள்😇

 

6 minutes ago, nedukkalapoovan said:

ஏன் வேப்பமரத்துக்கு கீழே அமர்ந்தால் என்னாகும்..??! நீங்களும்.. அதே குட்டையில் தான். 

யோகசுவாமிகளாகி விடுவீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கற்பகதரு said:

 

யோகசுவாமிகளாகி விடுவீர்கள். 

அவர் வில்வ மரத்துக்கு கீழ எல்லோ இருந்தவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

அவர் தனது கடமையை தானே செய்திருக்கிறார்!

இல்லை..அவர் தனது. வேலையைச்செய்துள்ளார்..விஐய். தணிகாசலம். தனது கடமையைச்செய்துள்ளார். விஐயைப்பாரட்டுகிறேன். சட்டமூலம். 104. எதிர்ப்பின்றி வெற்றிபெற்று. நடைமுறைக்குவரவேண்டும்.😁👍👍👍👍👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இந்தக் கூழான் கற்களை எல்லாம் கல்விமான் நொல்லிமான் என்று கொண்டு வைரக் கற்களாக பாவனை செய்து.. கூப்பிட்டு வைச்சு பொன்னாடை போர்த்திய கனடாக்காரருக்கு வேணும்.

கனடா காரர் என்று பொதுவா சொல்லதீங்க அங்கு பென்ஷன் எடுத்துவிட்டு இருக்கிறதுகளில் சிலதுகளுக்கு பொழுது போகணும் எல்லே அதுகளுக்கு விளையாட்டு எங்களுக்கு உயிர் போகுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

கனடா காரர் என்று பொதுவா சொல்லதீங்க அங்கு பென்ஷன் எடுத்துவிட்டு இருக்கிறதுகளில் சிலதுகளுக்கு பொழுது போகணும் எல்லே அதுகளுக்கு விளையாட்டு எங்களுக்கு உயிர் போகுது .

உண்மை..இந்தக் கூட்டத்தின் வேலையே இதுதான்...அதாவது தமிழர்களுக்கு எதிராக இயங்குவது...அதாவது சிங்கள பட்டர் பூசின தமிழர்..இவை கூடுதலாக ரோயல் கல்லூரி வாசனைபட்டவை ...எப்போதுமே அந்தப் பக்கம்தான்..சுரேனுக்கு பொன்னாடை மட்டுமல்ல முழுதகவல்களும்..போகும்..அதைவிட பெப்ருவரி 4ந் திகதி கொடியேத்திற இடத்தில் நுனிவிரலாலை மதுக்கிளாசைப் பிடித்தபடி..நுனிநாக்கில் இங்கிலீசும் பேசிக்கொண்டு நிப்பினம்...பிறகு தமிழ் திருவிழாவில் வேட்டி பட்டுச்சட்டையோடை நிப்பினம்...மாவீரர் நாளென்றால் அங்கையும் பூவோடை நிப்பினம்...போதாக்குறைக்கு எந்த கோயில் கூட்டம் தமிழர் நலம்சார் நிகழ்வில் பங்கு கொண்டு பதவியும் எடுப்பினம்.... அதுக்குள்ளை தில்லுமுல்லு செய்து நாலாக உடைச்சுப் போடுவினம்...இதுக்கெல்லாம் உதவி அந்த றோயல் கல்லூரி இங்கிலீசுதான்...முன்னமே ஒருஇடத்தில் சொல்லியிருக்கிறன்...விரைவில் எல்லா தமிழ் கோவிலிலும் புத்தர் இருப்பார் என்று..

Link to comment
Share on other sites

On 8/1/2021 at 23:22, nedukkalapoovan said:

இந்தக் கூழான் கற்களை எல்லாம் கல்விமான் நொல்லிமான் என்று கொண்டு வைரக் கற்களாக பாவனை செய்து.. கூப்பிட்டு வைச்சு பொன்னாடை போர்த்திய கனடாக்காரருக்கு வேணும்.

இன்னும் எம்மவர்களுக்கு எவன் துரோகி எவன்...நண்பன் என்று அடையாளம் காண முடியவில்லை என்றால்.. அது துரோகிகளின் தவறல்ல.. எதிரிகளின் தவறல்ல..  எமது முழு முட்டாள் தனத்தின் வெளிப்பாடு. 

ஏற்றுக்கொள்கிறேன்.நிச்சயமாக எமது முட்டாள்தனத்தின் வெளிப்பாடு தான். யார் உண்மையான துரோகி  என்பதை சரியாக இனங்காண  விரும்பாமல் எமது வசதிக்காக பிடிக்காதவர்கள் எல்லோரையும் துரோகிகள் என்று முத்திரை குத்தி எம்மை விட்டு அனுப்பியதன் விளைவு இது. ஆயுத போருக்கு முன்பிருந்தே  இந்த முட்டாள்தனத்தை தொடங்கிவிட்டோம். ஆயுதப்போரில் இந்த முட்டாள்தனத்தின் உச்சத்தை தொட்டோம். சும்மா இருந்தவர்களையும் ஆத்திரப்படுத்தி துரோகியாக்கினோம். இன்றும் வாயால் அதைத் தொடருகிறோம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.