Jump to content

யாழ். பல்கலையில் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவிடம்! பதற்றமான சூழல்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kandiah57 said:

ஆம். சரியான கருத்து  அப்ப இதைச்செய்தவர்கள் தண்டிக்கப்பாடுவார்களா?😎

படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’யாரையும் பழிவாங்க நினைக்காதே..! உன்னை ஏமாற்றியவர்கள், தன் கர்மவினையை அடைந்தே தீருவர்.. sനോe நீ அதிர்ஷ்டசாலியாக இருந்தால், அவை உன் கண் முன்னே நிகழும்..’ எனச்சொல்லும் உரை

Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

துணைவேந்தரே நினைவுச் சின்னத்தை அழிக்குமாறு கூறினார் – சிறீலங்கா அரசு

JSampath-sri-696x308.jpg
 179 Views

யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்காலில் கொல்லப்பட்ட மக்களின் நினைவு ஆலயத்தை அழிக்குமறு யாழ் பல்கலைக்கழத்தின் துணைவேந்தரே எமக்கு அழுத்தம் தந்தார். அது இனநல்லிணக்கப்பாட்டுக்கு அச்சுறுத்தலானது என துணைவேந்தர் சிறீஸ்கந்தராஜா எம்மிடம் தெரிவித்தார் என சிறீலங்கா பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கா இன்று (09) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீஸ்கந்தராஜா ஒரு நல்ல நிர்வாகி, இந்த சின்னம் வடக்கு மற்றும் தென்னிலங்கைக்கான உறவுகளை சீர்குலைக்கும் என அவர் அடிக்கடி தெரிவித்துவந்தார். எனவே தான் அதனை அழிக்குமாறு அவர் உத்தரவிட்டார். யாழ் பல்கலைக்கழகத்தில் 1500 சிங்கள மாணவர்கள் கல்விகற்கின்றனர்.

அவர் இந்த சின்னத்தை அழிப்பதற்காக சரியான நேரத்தை தெரிவுசெய்துள்ளது போற்றத்தக்கது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் 1990 களில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு தனது பதவியை தக்கவைத்த சிறீஸ்கந்தராஜா, சிங்கள அரசுடன் இணைந்து செயற்பட்டு துணைவேந்தர் பதவியை கைப்பற்றியிருந்தார் என யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தில் பணியாற்றிய முன்னாள் விரிவுரையாளர் ஒருவர் இலக்கு ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

1990 களின் நடுப்பகுதியில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினராக இருந்த அவர் தனது பதவியை தக்கவைப்பதற்காக ஏனைய விரிவுரையாளர்களின் பிரச்சனைகளைக் கூட கண்டுகொள்வதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, துணைவேந்தர் பதவியை அவருக்கு வழங்குவதற்காக சிறீலங்காவின் அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சாவினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்று தான் முள்ளிவாய்க்கால் நிiனைவுச் சின்னத்தை அழித்தல் எனவே அதனை சிறீஸ்கந்தராஜா நிறைவேற்றியுள்ளார் என யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவேல் குருபரன் தனது ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=39001

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஊரில் இருந்தபடி தனது எதிரியுடன் வாய் சண்டையில் மோதினால் ஒருவரை யொருவர் கடந்து போகும்போது முறைத்துவிட்டு போய்விடலாம்.

ஆனால் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளும் ஒரு போரில் எதிரியிடம் தோற்றுவிட்டால், ஒன்று அந்த ஊரைவிட்டு போகவேண்டும் ,

இல்லையென்றால் அவமானத்தால் கூனிகுறுகி அவன்முன் வாழவேண்டும்.

பலமுறை எம்மிடம் தோற்றுபோனவன் திடீரென்று எம் பலத்தையே அழித்து    வெற்றி கொண்டால் காலம் முழுவதும் நம்மை   அடிமைபோலவே நடத்துவான் அதுதான் இப்போது நடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பிற்கு கப்டன் விஜயகாந்த் கண்டனம்

 
506845972-vijayakanth.jpg
 46 Views

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதற்கு தேமுதிக தலைவர் கப்டன் விஜயகாந்த் தனது ருவிற்றரில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் இன மக்களை நினைவுகூரும் வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் தூண் அமைக்கப்பட்டது. ஆனால் நேற்று இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி புல்டோசர் மூலம் அதிகாரிகள் இடித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதற்கு தேமுதிக தலைவர் கப்டன் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து தனது ருவிற்றரில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “இலங்கை அரசு, இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூணை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்ட நிகழ்வு கடும் கண்டனத்திற்குரியது. இச்சம்பவத்திற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=38997

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறுமை சிறந்த ஆயுதம் – எஸ்.இ. ரதன தேரர்

WhatsApp-Image-2021-01-09-at-6.04.01-AM-
 86 Views

இந்த நினைவுசின்னம் தடை செய்யப்பட்டால், இது முன்னர் அகற்றப்பற்றிருக்கலாம் ஆனால் அது நடக்கவில்லை  இப்போது இந்த நினைவுசின்னம்  மக்களின் இதயங்களில் வேரூன்றிய  பின்னர் அகற்றப்பட்டது என்பது ஒரு பரிதாபம் என முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் அழிக்கப்பட்டது குறித்து எஸ்.இ. ரதன தேரர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

“நம் நாட்டைக் கைப்பற்றிய வெளிநாட்டிரனின் பெயரிடப்பட்ட பல கட்டிடங்களும் வீதிகளும் நகரங்களும் சிலைகளும் நம் நாட்டில் உள்ளன.
அவர்கள் நம் நாட்டிக்கு செய்த அழிவு மகத்தானது. ஆனால் யாரும் அவர்களை எதிர்க்கவில்லை.

இந்த முள்ளிவாய்க்கால் நினைவுசின்னத்தின் அழிவு அனியாயமானது.
எந்த இன பாகுபாடும் இல்லாமல் இதை கவனிக்க வேண்டும்.

இது இனவெறியின் நெருப்யை புதுப்பிக்ககக்கூடிய ஒரு செயல். அத்தகைய தீ  உடனடியாக தொடங்கலாம் ஆனால் வெளியேற்ற நேரம் எடுக்கும். அதை நாம் அனைவரும் அனுபவத்திலிருந்து அறிவோம்.

எல்லோரும் சரியாக இல்லை, ஆனால் அவர்களின் சொந்த தவறுகளை சரிசெய்ய முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/?p=38992

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலை துணைவேந்தர் அடிபணிவதைவிடப் பதவி துறப்பதே மேலானது -பொ. ஐங்கரநேசன் கண்டனம்

 
1-68.jpg
 84 Views

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி  இடித்தழிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தனது கண்டனத்தை பதிவிட்டுள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் , இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இந்த ஈனச்செயலை இராணுவத்தினர் செய்யவில்லை. அவர்களின் உத்தரவுக்கு அமைவாக, பல்கலைக்கழக நுழைவாசற் கதவுகளைப் பூட்டி விளக்குகளை அணைத்துவிட்டுத் திருட்டுத்தனமாகப் பல்கலைக்கழக நிர்வாகமே செய்து முடித்திருக்கிறது.

இதற்கு, சட்டவிரோத தூபி என்பதால் அழுத்தங்கள் காரணமாகவே அகற்ற வேண்டி ஏற்பட்டது என்று துணைவேந்தர் பேராசிரியர் சி. ஸ்ரீசற்குணராஜா அவர்கள் விளக்கம் அழித்துள்ளார். துணைவேந்தர் என்பவர் அரசின் அடிவருடி அல்லர். அடிபணிந்து ஒரு ஈனச் செயலைச் செய்வதைவிடப் பதவி துறப்பது மேலானது.

முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பை நிகழ்த்திய ராஜபக்ச சகோதரர்கள் அதற்கான சாட்சியங்களையும், தடயங்களையும் அழித்தொழிப்பதில் முழுவீச்சுடன் செயற்பட்டு வருகின்றனர். அதன் ஒரு கட்டமாகவே முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், அவர்தம் உறவினர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியைத் தற்போது பல்கலைக்கழக நிர்வாகத்தினரைக் கொண்டே இடித்தழிப்பித்துள்ளனர்.

நினைவுத்தூபிகள் பெறுமனே சீமேந்தாலும் கற்களாலும் ஆன உயிரற்ற தூண்கள் அல்ல. கருங்கல்லாக இருக்கும் வரைக்கும் காலடியில் மிதிபடும் பாறையாகக் கருதப்படுகின்ற கருங்கல் தெய்வச்சிலையாக வடிக்கப்பட்ட பின்னர் எவ்வாறு புனிதம் பெற்று வணக்கத்துக்குரியதாக மாறுகின்றதோ அதேபோன்றுதான் நினைவுக்கற்களும் நினைவுத்தூபிகளும்.

இவற்றில் மரணித்துப் போனவர்களின் ஆன்மா குடிகொண்டிருப்பதாகவே அவற்றை அஞ்சலிப்பவர்கள் நம்புகிறார்கள்.  தமிழத்தேசிய விடுதலைப் போராட்டத்தில் காத்திரமான வரலாற்றுப் பங்களிப்பை நல்கிவந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தற்போது பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் இழிசெயலால் தன் மீது கழுவ முடியாத கரியைப் பூசிக் கொண்டுள்ளது.

அரசாங்க அதிகாரிகள், அரசின் சேவகர்களாக இருக்கும் அதேசமயம் அவர்கள் சார்ந்த இனத்தின் நலன்களையும் அபிலாசைகளையும் கருத்தில் கொள்பவர்களாக இருத்தல் வேண்டும்.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் அ. துரைராஜா அவர்கள் ஒரு துணைவேந்தராக பல்கலைக்கழகத்தை நல்வழி நடத்திச் சென்ற அதேவேளை, தமிழ் இனத்தின் அரசியல் விடுதலை குறித்த தெளிவான பார்வையுடனும் செயற்பட்டிருந்தார். அதனாலேயே அவர் மாமனிதராகப் போற்றப்படுகின்றார். இப்போதுள்ளவர்கள் மாமனிதர்களாக வேண்டாம்.

குறைந்தபட்சம் மனிதர்களாகக்கூட நடந்திருந்தால் மரணித்தவர்களின் நினைவுகளைச் சுமந்துள்ள தூபியை இடிப்பதற்கான உத்தரவைச் சிரமேற்கொணடு நிறைவேற்றியிருக்கமாட்டார்கள்”   தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=38988

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்

 
Villumsen-EU-MP.jpg
 24 Views

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை நேற்று நள்ளிரவு சிறீலங்கா இராணுவம் இடித்துள்ளதை டென்மார்ச் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன வன்மையாக கண்டிப்பதுடன் அங்கு இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளுக்கான அழுத்தங்களையும் சிறீலங்கா அரசு மீது பிரயோகிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் நிகோல விலும்சன் தெரிவித்துள்ளார்.

டென்மார்க்கில் உள்ள பெருமளவான மக்களுக்கு அங்கு இடம்பெற்ற கொடுமையான வரலாறு தெரியாது. முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற போரில் 40,000 தொடக்கம் 1,00,000 வரையிலான மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களில் பெருமளவானோர் பாதுகாப்பு வலையம் என அறிவிக்கப்பட்ட இடங்களின் மீது சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள்.

இந்த படுகொலைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை நீதி விசாரணைகளை கோரிய போதும் சிறீலங்கா அரசு தொடர்ந்து மறுத்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த நினைவுச் சின்னத்தையும் அழித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/?p=39008

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிப்பு-கொளத்தூர் மணி கண்டனம்

 
1-64.jpg
 79 Views

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக ஆணையிட்டு புல்டோசர் வைத்து இடித்து தள்ளியதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டித்துள்ளது.

இதுகுறித்து கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை,

“2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் பல்லாயிரம் தமிழர்களை இலங்கை இராணுவம் இனப்படுகொலை செய்து முடித்தது. போராளிகள் மட்டுமல்ல பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரும் படுகொலைக்கு உள்ளானார்கள்.

சொந்த மக்களை பலி கொடுத்ததன் நினைவாக தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தைக் கூட சட்டவிரோதமானது என்று அறிவிக்கிறது இலங்கை அரசு.

தமிழர்களின் சுய நிர்ணய உரிமை, தாயக உரிமை, தமிழ்தேச உரிமை, ஆகியவற்றின் நினைவாக 2008இல் மாபெரும் நிகழ்வாய் நடந்த  பொங்கு தமிழ் பிரகடன கல்வெட்டு 2018இல் நினைவுத் தூணாக மாற்றி அமைக்கப்பட்டு அன்றைய துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனை சட்ட விரோதம் என்று இலங்கை அரசு கூறுவது நியாயமற்ற ஒன்று.

இந்த உரிமைகள் அய்க்கிய நாடுகளின் சர்வதேச கோட்பாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.  இந்த கல்வெட்டை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களையும் கைது செய்துள்ளது.

முன்னர் இருந்த துணைவேந்தரால் திறந்துவைக்கப்பட்டதை , இப்போது பதவிக்கு வந்துள்ள துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா அரசின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது வேதனைக்குரிய ஒன்றாகும். நியாயமாக அவர் பதவி விலகி இருக்க வேண்டும். அப்படி விலகி இருந்தால், உலகத்தில் இந்தப் பிரச்சனை மேலும் கூடுதலாக ஈர்த்து இருக்கும்.

அய்.நாவின் மனித உரிமை விசாரணை ஆணையத்தில் உள்ள இலங்கை அரசு அய்.நாவில் தந்த உறுதி மொழிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டது.

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு அண்மையில் சென்று அந்த நாட்டின் வெளிநாட்டுத்துறை அமைச்சர் சந்தித்தார். அவருடன், 13 ஆவது சட்டத் திருத்தத்தை அமுல்படுத்துமாறு தாம் வலியுறுத்தியதாக செய்தியாளர்களுக்குப்  பேட்டியும் அளித்துள்ளார்.

13 ஆவது சட்டத்திருத்தம் ஈழத்தமிழர்களுக்கு அரைகுறை உரிமைகளை வழங்கியது என்றாலும் இந்திய அரசின் தலையீட்டினால் உருவாக்கப்பட்ட சட்டத் திருத்தம் ஆகும். இதை நிறைவேற்ற வேண்டிய கடமையும்,பொறுப்பும் இந்திய அரசுக்கும் உண்டு. ஆனால் இந்திய அரசின் கோரிக்கையைப் பற்றிக்  கவலைப்படாமல் மாகாணங்களையே ஒழித்துவிட முடிவுசெய்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது மட்டுமின்றி, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு சென்று திரும்பிய ஒரு சில நாட்களிலேயே இப்படி ஒரு நடவடிக்கையை இலங்கை அரசு எடுத்திருப்பது இந்தியாவின் தலையீட்டை நாங்கள் ஏற்க மறுக்கிறோம் என்று அவமதிக்கிற ஒரு செயலாகவே கருத வேண்டும்.

ஏற்கெனவே ஈழப்போரில் உயிர்நீத்த மாவீரர்களின் நினைவுநாளை நடத்தவும், உண்ணாநிலை  என்ற அறவழிப் போராட்டம் நடத்தி உயிர்நீத்த மாவீரன் திலீபன் நினைவு நாளை அனுசரிப்பதற்கும் இலங்கை அரசு தடை போட்டது. அதன் நீட்சியாகவே இந்த இடிப்பும் இப்போது நடந்து முடிந்திருக்கிறது. இடிக்கப்பட்டது கற்களால் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் அல்ல. அந்த கல்வெட்டுக்குள் உலகம் முழுவதும் வாழும் தழிர்களின் உணர்வுகள் பொதிந்து நிற்கின்றன. இறுதிப்போரில் உறவுகளையும், குழந்தைகளையும், நட்புகளையும் இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கும் பீரங்கிகளுக்கும் பலிகொடுத்துவிட்டு நிற்கும் ஒரு இனத்தை இதைவிட வேறு எப்படி அவமதிக்க முடியும்? இப்படிப்பட்ட ஒரு இன வெறி அரசின் கீழ் தமிழ் மக்கள் எப்படி தொடர்ந்து குடிமக்களாக வாழ முடியும் ? உலகத்தமிழர்களின் முன் இந்தக் கேள்விகள்தான் இந்த இடிப்புகளின் வழியாக எழுந்து நிற்கிறது”

 

https://www.ilakku.org/?p=38967

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவிடம் அழிப்பு: தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்

 
cd18a26cd68988fe659aa00292d55b2b1e6517da
 117 Views

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராஜபக்ச சகோதரர்கள் அரசின் உத்தரவால், 2019இல் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், தமிழ் தேசிய கட்சியினர் உள்ளிட்டோர் பல்கலைக்கழக வளாகத்தில் கூடினர். இராணுவம், காவல்துறை, சிறப்பு அதிரடிப் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நினைவிடம் தகர்க்கப்படுவதை படம் பிடிக்கச் சென்ற செய்தியாளர் தாக்குதலுக்கு உள்ளானார்.

பல்கலைக்கழக வாளகத்தைச் சுற்றி, சிறப்பு அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இலங்கை அரசின் நடவடிக்கைக்கும், அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எதிராக மாணவர்கள் உள்ளிட்டோர் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. எனினும் எதற்கும் செவிசாய்க்காத இலங்கை அரசு, நேற்று இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூணை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கியது.

இந்நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவம்,

“ஈழப்பேரழிவைச் சந்தித்து ஆறா ரணத்தையும், கொடும் பேரிழப்பையும் சந்தித்து நிற்கும் தமிழர்களைச் சீண்டும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளது. பேரதிர்ச்சி அளிக்கிறது. இனப் படுகொலை செய்த ஆட்சியாளர்களின் தொடர் இன அழிப்பின் நடவடிக்கையாகத்தான் இதைக் கருதவேண்டியிருக்கிறது. முள்ளிவாய்க்கால் நிலத்தில் போர் மௌனிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் கட்டியெழுப்பப்பட்ட நினைவிடத்தை இடித்திருப்பது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. ஈழத்தில் இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றுமுடித்து, அந்தப் இழப்புக்கு நீண்டகாலமாய் நீதிகேட்டு உலகத்தமிழர்கள் உள்ளம் குமுறிக்கொண்டிருக்கையில், வெந்தப்புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போலச் சிங்களப் பேரினவாதத்தால் நிகழ்த்தப்பட்டிருக்கும் இக்கோரச்சம்பவம் ஏற்றுக்கொள்ளவே முடியாத வன்மையான கண்டனத்திற்குரியது.

ஒரு இனத்தைப் பேரழிவுக்குள் தள்ளி, இரண்டு இலட்சம் தமிழர்களைத் துள்ள துடிக்கப் படுகொலை செய்து, தமிழர்களின் வீட்டையும், நாட்டையும் அழித்து, நிலங்களை அபகரித்து, தமிழ்ப்பெண்களைச் சூறையாடி, தமிழர்களை அடையாளமற்று அழித்து முடித்து, மொத்த நாட்டையும் தங்களுடையதாக மாற்றிக் கொண்டுவிட்ட பிறகும், தமிழர்கள் மீதான வன்மமும், ஆத்திரமும் துளியளவும் சிங்களப்பேரினவாதிகளுக்குக் குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது. போர் முடிந்து, அங்கு அமைதி திரும்பி விட்டது என்றுரைத்தவர்கள் இத்தகைய அடையாள அழிப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? அன்றைக்கு யாழ் நூலகம் எரிக்கப்பட்டது; இன்றைக்கு யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள நினைவு மண்டபம் அழிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் தொடர்ச்சியே. ஒற்றை இலங்கைக்குள் சிங்களர்களோடு இணைந்து தமிழர்கள் வாழ்கிறவரை, சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கீழ் இருக்கிற வரை எத்தனை ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு இதுதான் நிலை என்பதை இச்சம்பவத்தின் வாயிலாக உலகத்தார் உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் தங்கள் பண்டிகையைக் கொண்டாடும் மாதமான தை மாதத்தில் இனப்படுகொலையாளன் ராஜபக்சே அரசு தமிழர்களுக்குப் பொங்கல் பரிசாக இந்த இடிப்பை நிகழ்த்தியிருக்கிறது.

எங்கள் மொழியைச் சிதைக்கலாம்; இனத்தை அழிக்கலாம். உரிமைகளைப் பறிக்கலாம். நிலங்களை ஆக்கிரமிக்கலாம். அடக்குமுறையை ஏவலாம். ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடலாம். பயங்கரவாதிகளெனப் பழி சுமத்தலாம். ஆனால், எங்கள் விடுதலை உணர்வுகளை எந்த வல்லாதிக்கத்தாலும், பேரினவாதத்தாலும் விளங்கிட முடியாது. அடக்கி ஒடுக்க முற்படுகிறபோதெல்லாம் சினம்கொண்டு திமிறி எழும் பேருணர்ச்சியைக் கொண்டு தமிழ்த்தேசிய இன மக்கள் நாங்கள் மீண்டெழுவோம். இந்திய வல்லாதிக்கமும், பன்னாட்டுச்சமூகமும் எங்களை வஞ்சிக்கலாம். துரோகம் விளைவிக்கலாம். ஒருநாள் இந்நிலை மாறும். களமும், காலமும் எங்கள் கைகள் வரப்பெறும். அன்றைக்கு எங்கள் நாட்டை நாங்கள் மீளப்பெறுவோம்.

அறம் தோற்றால் மறம் பிறக்கும்; மறம் தோற்றால் மீண்டும் அறமே தழைக்கும் எனும் இயற்கை நியதிகளுக்கேற்ப, அறவழியில் எங்களது தாயக விடுதலைக்காகவும், எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும் உலகரங்கில் குரலெழுப்பிக் கொண்டிருக்கிறோம். ஒருநாள் நாங்கள் அதிகார அடுக்குகளை அடைவோம். இனவழிப்புக்கு உள்ளாகி  நிர்கதியற்று  நிற்கிற வேளையில், கட்டிவைத்த நினைவிடம் கூடச் சிங்கள அரசாங்கத்தை நிம்மதியாய் உறங்கவிடவில்லை. இன்றைக்கு எதை எண்ணி  அச்சப்பட்டு ஈழத்தமிழ் மக்களை அச்சுறுத்தி  அம்மண்ணில் இருந்த ஒற்றை நினைவிடத்தையும் சிங்களப் பேரினவாதம் அழித்து முடித்ததோ, ஒருநாள் அதே மண்ணைத் தமிழர்கள் நாங்கள் ஆளுகை செய்வோம். எங்கள் தாயகத்தை மீள்கட்டுமானம் செய்வோம். அன்றைக்கு எங்களது வெற்றிச்சின்னத்தை இதே யாழ் பல்கலைக்கழகத்தில் கட்டியெழுப்புவோம். எங்கள் நாடும், எங்கள் மண்ணும் கைவரப்பெறும் நாள் வரை ஓயோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் தனது ருவிற்றர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ள இலங்கை இனவெறிப் படையினரின் இந்த இழிசெயலை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளதுடன், தமிழனத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாக சிதைக்கும், சிங்களர்களின் ஆதிக்கத்தை தகர்ப்போம் என்றும், தமிழர் அடையாளம் காப்போம் என்றும் அவர் தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/?p=38938

இது ஒரு கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு – கனேடிய அரசியல்வாதிகள் கண்டனம்

 
Canada-Politicians2-696x463.jpg
 406 Views

சிறீலங்கா அரசின் இனஅழிப்பு சிந்தனைக்கு வடிவம் கொடுக்கும் முகமாக சிறீலங்கா படையினரும், யாழ் பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிர்வாகமும் இணைந்து யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுச் சின்னத்தை இன்று (9) அதிகாலை அழித்தது தொடர்பில் கனேடிய அரசியல் தலைவர்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

மிகவும் துன்பமானது, இது தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பில் மேற்கொள்ளப்படும் கொடுமையான வன்முறை. இதனை எல்லா அரசியல் தலைவர்களும், மனித உரிமைகளுக்காக பேராடும் எல்லா அமைப்புக்களும் கண்டிக்க வேண்டும் என கனடா, ஒன்ராரியோ மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் குராடான் சிங் தெரிவித்துள்ளார்.

பல பத்தாயிரம் மக்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதை நினைவுகூரும் முகமாக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை அழித்தது என்பது கட்டமைக்கப்பட்ட ஒரு இனஅழிப்பாகும். கனடா மற்றும் அனைத்துலக சமூகம் இத்தகைய நடவகடிக்கைகளை நிறுத்துவதற்கு முன்வரவேண்டும் என பிராம்டன் நகரத்தின் முதல்வர் பற்றிக் பிரவுன் தனது ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூரும் சின்னத்தை அழிப்பது என்பதும் அவர்களின் வரலாற்றை அழிக்கும் ஒரு இனஅழிப்பாகும். யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட இந்த சின்னத்தை அழித்தது தொடர்பான செய்தி கேட்டு நான் வருத்தம் அடைந்தேன் என பிரம்டன் நகரத்தின் நகரசபை உறுப்பினர் மாட்ன் மெடிறோஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் வரலாற்றை அழிக்கும் இந்த நடவடிக்கை என்பது இனஅழிப்பின் ஒரு பகுதியாகும் என பிரம்டன் நகர சபையின் உறுப்பினர் ஹர்கிரட் சிங் தெரிவித்துள்ளார்.Canada-Politicians2-300x199.jpgதமிழ் மக்களின் வரலாற்றை அழிக்கும் நிகழ்வு துன்பமானது, இதுவும் சிறீலங்கா அரசின் குற்றமான நடவடிக்கை, இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்றால் சிறீலங்காவில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என ஸ்காபுறோ பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

பல பத்தாயிரம் மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூர்வதற்காக அமைக்கப்பட்ட சின்னத்தை சிறீலங்கா அரசு அழித்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என ஸ்காபுறோ பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=38960

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

UGC says Jaffna University war memorial “threatened North South unity”

http://www.newswire.lk/wp-content/uploads/2021/01/PSX_20210109_183303.jpg

University Grants Commission Chairman Prof. Sampath Amaratunga says the Jaffna University War Memorial was removed by the University Vice Chancellor as it could hinder the unity of the South and North of the country.

He said that the decision was taken by the Vice Chancellor of the Jaffna University.

The memorial, according to media reports, was erected in 2019, to mark the 10th anniversary of the civil war.

Meanwhile, speaking to the Hindu Newspaper University Vice-Chancellor S. Srisatkunarajah said that the memorial was removed on the instructions of higher authorities.

“Since then (2019), authorities have been asking the university administration to remove the unauthorised structure. I received multiple instructions from higher authorities, and we discussed this at several meetings with the university’s capital works, engineering and maintenance departments,” said University Vice-Chancellor S. Srisatkunarajah, who assumed charge in August 2020.

Asked who the higher authorities were, he said: “Defence, Intelligence, Education Ministry, everyone. I am a civilian carrying out an administrative responsibility. Sometimes, I have to take decisions beyond my personal likes and dislikes,” he told The Hindu.

“So, I delegated the responsibility to the concerned departments about a month ago, giving no particular date. They have executed it, that is all, ” he said. (NewsWire)

UGC Chairman 👇

http://www.newswire.lk/2021/01/09/ugc-says-jaffna-university-war-memorial-threatened-north-south-unity/

இதலிருந்து என்ன தெரிகின்றதென்றால் அங்கு படித்த சிங்கள மாணவர்கள் இதுபற்றி முறையிட்டிருப்பார்கள் உடனே சிங்களம் உபவேந்தருக்கு சொல்லியிருக்கும் நினைவுசின்னந்தை இடிக்கும்படி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகத்தை மூடுவதற்கும் ஒரு காரணம் தேடிக்கொண்டு வருவார்கள் பாருங்கள். சிங்களத் தலைமைகள் தங்களுக்கு வாலாட்டக்கூடிய படித்த மேதைகளை தேடிப்பிடித்து அமர்த்தும். அதுவும் சிங்களம் இட்ட கட்டளைக்கு மேல் சேவை செய்யும்.  படித்தவர்கள்தான் பதவி, பணம், புகழ், இலஞ்சம் என்பவற்றுக்கு விலை போவர்.   

ஆமா..... நம்ம தலீவர் இன்னும் தூங்கி எழும்பலையோ  எச்சரிக்கை விட. அல்லது கேட்ட மாத்திரத்திலேயே வைத்தியசாலையில் அனுமதி  ......? 

Link to comment
Share on other sites

1 hour ago, satan said:

படித்தவர்கள்தான் பதவி, பணம், புகழ், இலஞ்சம் என்பவற்றுக்கு விலை போவர்.   

 படிக்காதவரே, உங்களை அடையாளம் காட்டியதற்கு நன்றி. 😇

Link to comment
Share on other sites

4 hours ago, ragaa said:

இதலிருந்து என்ன தெரிகின்றதென்றால் அங்கு படித்த சிங்கள மாணவர்கள் இதுபற்றி முறையிட்டிருப்பார்கள் உடனே சிங்களம் உபவேந்தருக்கு சொல்லியிருக்கும் நினைவுசின்னந்தை இடிக்கும்படி. 

ராகா இப்படி அங்கு படித்த சிங்கள மாணவர் மீது ஒட்டு மொத்தமாக பழி சுமத்தி இன வெறுப்புணரவை தூண்டுவதன் மூலம் இப்படியான சம்பவங்ள் மேலும் நடைம்பெற உதவுமே தவிர தடுக்க முடியாது என்ற எமது பழைய அனுபவங்களை மறக்க கூடாது. இப்படியான இன வெறுப்புணர்வு இரு பக்கமும் தொடர வேண்டும் என்பது தான் ஆட்சியாளர்களின் விருப்பமான இலங்கை வரலாற்றில் என்றும் இருந்த‍து. அதற்கு பலியாக கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, tulpen said:

ராகா இப்படி அங்கு படித்த சிங்கள மாணவர் மீது ஒட்டு மொத்தமாக பழி சுமத்தி இன வெறுப்புணரவை தூண்டுவதன் மூலம் இப்படியான சம்பவங்ள் மேலும் நடைம்பெற உதவுமே தவிர தடுக்க முடியாது என்ற எமது பழைய அனுபவங்களை மறக்க கூடாது. இப்படியான இன வெறுப்புணர்வு இரு பக்கமும் தொடர வேண்டும் என்பது தான் ஆட்சியாளர்களின் விருப்பமான இலங்கை வரலாற்றில் என்றும் இருந்த‍து. அதற்கு பலியாக கூடாது. 

துல்பன் நான் ஒட்டுமொத்த சிங்கள மாணவர்களைச் சொல்லவில்லை ஆனால் அங்ஙகிருந்ந ஒரு சிலரின் முறைப்பாடும் காரணமாயிருக்கலாம் என்றுதான் சொன்னேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துணைவேந்தர் திரு சி.சிறிசற்குணராஜா அவர்களின் விளக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

படிக்காதவரே, உங்களை அடையாளம் காட்டியதற்கு நன்றி.

நீங்கள் எந்தவகை ?

Link to comment
Share on other sites

2 hours ago, ragaa said:

துல்பன் நான் ஒட்டுமொத்த சிங்கள மாணவர்களைச் சொல்லவில்லை ஆனால் அங்ஙகிருந்ந ஒரு சிலரின் முறைப்பாடும் காரணமாயிருக்கலாம் என்றுதான் சொன்னேன்

அவர்கள் மாவீரர் நினைவுத்தூபி பற்றி முறையிட்டிருந்தால் அதையன்றொ உடைத்திருப்பார்கள்? ஏன் மக்களுக்கான நினைவுத்தூபி பற்றி மட்டும் முறையிட்டார்கள்? அல்லது இதன் பின்னால் மக்களை உசுப்பிவிட விரும்பிய வேறு சக்தி உள்ளதா?

9 minutes ago, பெருமாள் said:

நீங்கள் எந்தவகை ?

கற்றது கைமண் அளவு வகை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மாணவர்களுக்காக நம் உறவுகள் கொல்லப்படவில்லை, நாம் அழிக்கப்படவில்லை என்று எமது இழப்புகளையும், அழிவுகளையும்,வலிகளையும் மறைக்க வேண்டுமா? பொறுப்பாக அவர்களுக்கு விளங்கப்படுத்தவேண்டியது இவரது கடமை அல்லவா? அவர்கள் ஏன் தெற்கில் ஆனையிறவில் தூபிகளை அமைத்திருக்கிறார்கள் என்று ஏன் கேள்வி கேட்கவில்லை? படித்த பொறுப்பில் உள்ள ஒருவர் பொறுப்பற்ற விதமாக பேசுகிறார். எல்லாம் கோத்தா பின்னால் இருக்கிறார் என்கிற துணிவு. வேறு ஒருவர் வந்து இன்னொரு  அழுத்தம் கொடுத்தால் எல்லாருக்கும் தலையாட்டி செயற்படுத்துவாரா?

12 minutes ago, பெருமாள் said:

நீங்கள் எந்தவகை ?

விடுங்கள் பெருமாள், எனது கல்விக்கான சான்றிதழ் என் தகைமையை வெளிப்படுத்தும்.  வேறெவரின் சான்றிதழும் தேவையற்றது. இதுக்கெல்லாம் பதிலளித்து நம் தரத்தை குறைத்துக்கொள்ள வேண்டாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை கொண்டே தமிழர்களை அழிக்கும் தந்திரம். ஆனால் இது நீடிக்காது நிலைக்காது.....அணையப்போகும்  சுடர் ஆரவாரமாய் எரியும் அதுதான் இப்ப நடக்குது....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி 08.01.2020 வெள்ளிக்கிழமை இரவு அரச இயந்திரத்தின் உத்தரவுடன் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.  

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக அமைக்கப்பட்டிருந்த குறித்த நினைவுத்தூபி தரைமட்டமான செய்தியை அறிந்த தமிழ் மக்கள் கொந்தளிப்புக்குள்ளானார்கள். 

அன்றிரவில் இருந்தே பல்கலைக்கழக முன்றலில் பொலிஸாரின் அடக்குமுறைகளையும் மீறி ஏராளமான உணர்வாளர்கள் குவிந்திருந்தனர். நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில் மாணவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,  சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்புக்களை காத்திரமாக முன்னெடுத்தனர். 

தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் துணைவேந்தருடனான சந்திப்பை அடுத்து இந்தப் போராட்டத்தினை இடைநிறுத்துவதாக தாங்களாகவே முடிவெடுத்து ஊடகங்களுக்கு அறிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து இரண்டு விஞ்ஞான பீட மாணவர்கள் உறுதியுடன் இருந்து உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக கூறியதை அடுத்து மேலும் சில மாணவர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.   

தற்போதும் குறித்த மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகின்றது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது நினைவுரிமையை மறுக்கும் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்-யாழ்.மாணவர் ஒன்றியம்

 
135470969_3851595364903506_5476466146007
 25 Views

“முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின்உச்சமாகும். அது பல்லாயிரக்கணக்கில் அப்பாவி பொதுமக்கள் கொன்றொழிக்கப்பட்டதன் கூட்டு நினைவாக தமிழ் மக்களது உணர்வுகளில் கலந்துறையும் ஒரு விடயமாகும்.

அதன் காரணமாக 2018ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தில் அதற்கான நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட்டது. அதுவெறுமனே கல்லாலும் மண்ணாலும் அமைக்கப்பட்ட ஒரு கட்டடம் அல்ல. மாறாக மாணவர்களதும் ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் உணர்வுகளின் உறைவிடமும் நினைவுகளின் நீட்சியுமாகும்.

அது அமைக்கப்பட்ட நாளிலிருந்தே பேரினவாத சிறீ லங்கா அரசின் கண்களை உறுத்தி வந்துள்ளது. அமைக்கப்படும் பொழுதே பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன. அமைக்கப்பட்ட பின்பும் அதனை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் அது மாணவரதும் மக்களதும் உணர்வுகளோடு கலந்த ஒரு விடயமாக காணப்பட்டதால் அவ்வாறு அகற்றுவது முடியாத விடயமாக அமைந்திருந்தது.

இந்நிலையில் கடந்த எட்டாம் திகதி வெள்ளிக்கிழமை இரவு பொழுதில் இரகசியமாக பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இந்நினைவிடம் அழிக்கப்பட்டுள்ளது. சிறீ லங்கா பேரினவாத அரசின் கைக்கூலிகள் போல யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரும் நிர்வாகமும் செயல்பட்டிருப்பது நமக்கு ஆழ்ந்த விசனத்தை தருகிறது.

இச்செயல் பல்கலைக்கழக மாணவர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயலாகும். மேலும் ஒரு மக்கள் இனத்துக்குரிய நினைவு கூரும் உரிமையை நிராகரிக்கும் செயலும் ஆகும்.

எனவே யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த அநீதமான நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழ் மக்களது உரிமைகளுக்காக தொடக்கத்திலிருந்தே குரல் கொடுத்து வந்த யாழ் பல்கலைக்கழக சமூகம் அவர்களது உரிமைகளுக்கு எதிராக இவ்வாறு செயற்பட்டிருப்பது அனைவரதும் கண்டனத்துக்குரியது.

ஆகவே யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் தனது தவறை திருத்தி பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஒன்றை மீளவும் அமைக்க முன்வர வேண்டும்.

எமது கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையிலும் நினைவுத்தூபியை மீளவும் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாணவர்களாகிய நாம் பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

எமது சில மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாளைய நாளில் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்;. இதற்கு வர்த்தக சங்கங்கள் போக்குவரத்து கழகங்கள் உட்பட அனைவரும் பூரண ஒத்துழைப்பு தருமாறு வேண்டி நிற்கின்றோம்.

தமிழ்தேசிய நிலைப்பாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் தமிழ் சிவில் சமூக அமைப்புகளும்பொதுமக்களும் எமது இந்த நினைவுரிமைக்கான போராட்டத்தில் கரம் கொடுக்க வேண்டுமென அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றோம்.” என யாழ் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

 

https://www.ilakku.org/?p=39075

நினைவு தூபி இடித்தழிப்பு – தொடரும் மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்

 
1-79-696x392.jpg
 11 Views

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி, நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் தூபி மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும் யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் 9 பேர் முன்னெடுத்துவரும் உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்றும் தொடர்கின்றது.

1-78.jpg

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த 8 ஆம் திகதி இடித்தழிக்கப்பட்டது.

4.jpg

இந்த செய்தியை அறிந்து மாணவர்களும், அரசியல் பிரதிநிதிகளும் மற்றும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதியில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 

https://www.ilakku.org/?p=39079

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பல்கலைகழக நிர்வாகம் தனது தவறை திருத்தி மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமொன்றை அமைத்து தரவேண்டும்-பல்கலைகழக மாணவர் ஒன்றியம்

Digital News Team

யாழ்பல்கலைகழக நிர்வாகம் தனது தவறை திருத்தி யாழ்பல்கலைகழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமொன்றை அமைத்து தரவேண்டும் என யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

jaffna-uni-students-union-230x300.jpg
நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு கண்டனத்தை வெளிப்படுத்துவதற்காகவும் நினைவுத்தூபி மீண்டும் அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாளை வடக்கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ள யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் வர்த்தக சங்கங்கள் போக்குவரத்து சங்கங்கள் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா அரசின் கைக்கூலிகள் போல பல்கலைகழக நிர்வாகமும் துணைவேந்தரும் செயற்பட்டிருப்பது ஆழந்;த விசனத்தை தருகின்றது எனவும் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த செயல் பல்கலைகழக மாணவர்களை மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயல் எனவும் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது ஒரு மக்கள் இனத்திற்குரிய நினைகூருவதற்கான உரிமையை மதிக்கும் செயல் எனவும் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

https://thinakkural.lk/article/103917

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.