Jump to content

இனவெறிக் கோஷங்களால் சிட்னி மைதானத்தில் குழப்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனவெறிக் கோஷங்களால் சிட்னி மைதானத்தில் குழப்பம்

இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின்போதும் இனவெறி கோஷம் எழுந்த நிலையில் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

spacer.png

இந்திய-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.  

இதில் மூன்றாவது நாளான நேற்றைய ஆட்டத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, மொஹமட் சிராஜ் ஆகிய இருவரையும் சிட்னி மைதானத்தில் அவுஸ்திரேலிய ரசிகர்கள் இனரீதியாக இழிவுப்படுத்தியுள்ளனர். 

எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்த போது, அவர்களை சீண்டியுள்ளனர்.

மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்ததும் இந்திய அணித் தலைவர் ரஹானே கள நடுவர்கள் பால் ரீபெல், பால் வில்சன் மற்றும் போட்டி நடுவர் டேவிட் பூன் ஆகியோரிடம் இது குறித்து புகார் அளித்தார். 

மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடமும் முறையிடப்பட்டுள்ளது.

இந்திய வீரர்களை இனவெறியுடன் வசைபாடிய ரசிகர்களை காணொளி பதிவுகளின் மூலம் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந் நிலையில் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில், சிராஜ் பந்து வீசிய பின்னர் பும்ரா பந்து வீசுவதற்கு முன் வந்தபோது பவுண்டரி கோட்டு பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.  ரஹானே, நடுவரை நோக்கி சென்றார்.  சக வீரர்களுடம் அவருடன் சென்றனர்.

இன்றைய போட்டியிலும் ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து மீண்டும் இனவெறி கோஷம் எழுந்துள்ளது.  இதுபற்றி இந்திய வீரர்கள் நடுவரிடம் புகார் அளித்துள்ளனர்.  

இதனால், போட்டி இடையில் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டன.  போட்டி நடுவர்களும், இந்திய வீரர்களும் சில நிமிடங்கள் வரை பேசி கொண்டனர்.

அதன்பின்னர் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கோஷம் எழுந்த பகுதியில் இருந்த ரசிகர்களை வெளியேறும்படி கேட்டு கொண்டனர்.  பார்வையாளர்கள் பகுதியில் சில வரிசைகள் காலியாக விடப்பட்டன.  இதன்பின்பு போட்டி தொடர்ந்தது.

இன்றைய போட்டியின் 2 ஆவது இன்னிங்சை விளையாடிய அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளுக்கு 312 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை இடைநிறித்தியது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 80 ஓட்டங்களை குவித்துள்ளது.
 

https://www.virakesari.lk/article/98207

 

Link to post
Share on other sites

மீண்டும் சிராஜை சீண்டிய ஆஸ்திரேலிய ரசிகர்கள். இந்தமுறை என்ன சொல்லி இருக்காங்க பாருங்க – வைரலாகும் வீடியோ

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த முகமது சிராஜ் இரண்டாவது போட்டியில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் முதல் முறையாக அறிமுகமாகி இருந்தாலும் அவரது பந்துவீச்சு அனைவரும் கவரும் விதத்தில் இருக்கின்றது. தான் பங்கேற்ற போட்டிகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பவீழ்த்தி வருகிறார் சிராஜ். ஒருபக்கம் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் சிராஜ் மறுபக்கம் ஆஸ்திரேலிய ரசிகர்களின் சர்ச்சையான இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார். கடைசியாக சிட்னி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ரசிகர்கள் அவரை குரங்கு, நாய் என இன ரீதியாக கேலி செய்தனர். அப்போது அது குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் அதிகளவு வைரல் ஆனது.

 

- மேலும் அப்போதே அவர் களத்தில் இருந்த அம்பயர்களிடம் ரசிகர்களின் மோசமான செயல்பாடு குறித்து புகார் அளித்திருந்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டும் இனிமேல் இந்த விடயம் மீண்டும் தொடராது என்று கூறியது. மேலும் இந்த விடயம் குறித்து ஆஸ்திரேலிய நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வரும் 4-வது போட்டியிலும் சிராஜ் ரசிகர்களின் சீண்டலுக்கு உள்ளாகியுள்ளார். அதன்படி இன்று துவங்கிய 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்த சிராஜ்யை நோக்கி ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் முதுகெலும்பில்லாத புழு என்று அவரை கூறி வம்புக்கு இழுத்தனர். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ஏற்கனவே ஆஸ்திரேலிய நிர்வாகமும் ஆஸ்திரேலிய அணி வீரர்களும் இந்திய அணி வீரர்களிடம் மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி இனி இதுபோன்ற இனவெறி சீண்டலும், வார்த்தை கேலியும் நடைபெற்றால் நாங்கள் விடமாட்டோம் என்று உறுதி அளித்திருந்தனர். ஆனால் ஆஸ்திரேலிய ரசிகர்களின் இந்த தொடர் மோசமான செயல் இந்திய ரசிகர்களிடையே கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://crictamil.in/aus-fans-teasing-again-mohammad-siraj/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

மீண்டும் சிராஜை சீண்டிய ஆஸ்திரேலிய ரசிகர்கள். இந்தமுறை என்ன சொல்லி இருக்காங்க பாருங்க – வைரலாகும் வீடியோ

 

 

தொடரை வென்று இவர்களுக்கு பதிலடி கொடுக்கலாம். இங்கிலாந்து வீரர்களை கேட்டால் பல அனுபவ கதைகள் சொல்வார்கள். சில அவுஸ்திரேலியா வீரர்களும் பார்வையாளர்களும்  போட்டியை வெல்ல எவ்வளவு கீழ் தரமாகவும் போவார்கள் (அணித்தலைவர் டிம் பயன் உட்பட). பின்பு இதெல்லாம் கிரிக்கெட்டில் சகஜமப்பா என்று கவுண்டமணி மாதிரி பதில் சொல்வார்கள்.

Edited by Ahasthiyan
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

LHS not equal to RHS 😀

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.