Jump to content

பொங்கலிற்கு நீங்களும் செய்யலாம் ஈழத்தின் சிறப்பு மிக்க பயற்றம் பணியாரம்

nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நல்ல விருப்பமான   பலகாரம் .நாங்களும் இப்படித்தான் செய்வோம்.  சிலர் தேங் காயை     பாலாக விட்டு (குழைத்து பிடிக்க இலகு ) சீனியைபாணியாக காய்ச்சியும் செய்வார்கள் 
 
Link to comment
Share on other sites

22 minutes ago, நிலாமதி said:

எனக்கு நல்ல விருப்பமான   பலகாரம் .நாங்களும் இப்படித்தான் செய்வோம்.  சிலர் தேங் காயை     பாலாக விட்டு (குழைத்து பிடிக்க இலகு ) சீனியைபாணியாக காய்ச்சியும் செய்வார்கள் 
 
உண்மைதான். அம்மா இப்படித்தான் செய்யிறவா. நானும் அதே முறையில் செய்திருக்கிறேன்..நன்றி அக்கா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ செய்முறை பகிர்விற்கு நன்றி.. எங்கட ஊர் பக்கம் இதை "சொய் உருண்டை" என்டு அழைப்பார்கள்..👍

Link to comment
Share on other sites

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழீழ செய்முறை பகிர்விற்கு நன்றி.. எங்கட ஊர் பக்கம் இதை "சொய் உருண்டை" என்டு அழைப்பார்கள்..👍

நன்றி . இது ஒரு புதிய தகவல். நான் இதுவரை இந்த பெயரை கேள்விப்பட்டதில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழீழ செய்முறை பகிர்விற்கு நன்றி.. எங்கட ஊர் பக்கம் இதை "சொய் உருண்டை" என்டு அழைப்பார்கள்..👍

தோழர் ஈழத்தில் உளுந்து பயறு கவுப்பி முக்கிய தானியன்களாக பயிரிடுவோம் 
எமது உணவு பண்டங்களும் அநேகமாக அவற்றை சார்ந்தே இருக்கும் 
காரணம் இவை எப்போதும் கை இருப்பில் இருக்கும். 

(இவற்றில் அரிசிமா பனைமர ஒடியல் பணம்களி போன்றவையும் அடங்கும்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயித்தம் பணியாரம் செய்முறை நன்றாக இருக்கிறது. கொஞ்சம் சிறிதாகவும் இரண்டு மூன்று ஒட்டியும் இருந்தால் எமது கலாச்சார சிற்றூண்டி இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயித்தம் பணியாரம் எனக்கும் நல்ல விருப்பம். நல்ல பதம் தெரிஞ்சவர்கள் செய்தால் நல்லாயிருக்கும். இல்லாட்டி சுத்தியல் கோடாலிதான் வேணும். கன நாளைக்கு வைச்சிருந்து சாப்பிடக்கூடிய பலகாரம். பழுதுபடாது.

செய்முறைக்கு நன்றி nige.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/1/2021 at 03:27, குமாரசாமி said:

பயித்தம் பணியாரம் எனக்கும் நல்ல விருப்பம். நல்ல பதம் தெரிஞ்சவர்கள் செய்தால் நல்லாயிருக்கும். இல்லாட்டி சுத்தியல் கோடாலிதான் வேணும். கன நாளைக்கு வைச்சிருந்து சாப்பிடக்கூடிய பலகாரம். பழுதுபடாது.

செய்முறைக்கு நன்றி nige.

பல்லு இல்லெண்டு நேரடியா சொல்லலாம் அதென்ன சுத்தியல், கோடாலி கொண்டு உடைக்கிற 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பல்லு இல்லெண்டு நேரடியா சொல்லலாம் அதென்ன சுத்தியல், கோடாலி கொண்டு உடைக்கிற 

நான் உடனே உதைத்தான் நினைச்சனான்......நீங்கள் தூர இருக்கிறபடியால் பக்கென்று சொல்லிட்டியள். நான் சொல்ல கருக்கலுக்க அவர் படலைக்க நிப்பார்.....!   😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பல்லு இல்லெண்டு நேரடியா சொல்லலாம் அதென்ன சுத்தியல், கோடாலி கொண்டு உடைக்கிற 

 இந்த சிங்கம் சிலிர்த்ததை அப்பன் இன்னும் பார்க்கேல்லை..😁😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

நான் உடனே உதைத்தான் நினைச்சனான்......நீங்கள் தூர இருக்கிறபடியால் பக்கென்று சொல்லிட்டியள். நான் சொல்ல கருக்கலுக்க அவர் படலைக்க நிப்பார்.....!   😂 

ஆளை வெளியில வச்சி அந்த கோடாலியால மதிலில ரெண்டு கொத்து போடுங்க மனுசன் தெறிக்க ஓடுவார் 🤣

9 hours ago, குமாரசாமி said:

 இந்த சிங்கம் சிலிர்த்ததை அப்பன் இன்னும் பார்க்கேல்லை..😁😎

அத வேறு பார்க்கணுமா சாமி  அப்ப நிகே சிஸ்டர் அண்ணைக்கு ஒரு ஒரு பயத்தம் பணியாரம் பார்சல் பிளிஸ் 🤣

Link to comment
Share on other sites

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆளை வெளியில வச்சி அந்த கோடாலியால மதிலில ரெண்டு கொத்து போடுங்க மனுசன் தெறிக்க ஓடுவார் 🤣

அத வேறு பார்க்கணுமா சாமி  அப்ப நிகே சிஸ்டர் அண்ணைக்கு ஒரு ஒரு பயத்தம் பணியாரம் பார்சல் பிளிஸ் 🤣

பயற்றம் பணியாரம் கடிக்க இலகுவாய்தான் இருக்கும். லட்டுத்தான் பதம் சரியாய் வராட்டி கடிக்க ஏலாது. அந்த பிரச்சனையும் இப்ப இல்லை. பாலை கொஞ்சம் அதிகமாய் சேர்த்தால் இலகுவாய் கடிக்க முடியும். கவலையை விடுங்க 😀😀

On 12/1/2021 at 15:57, குமாரசாமி said:

பயித்தம் பணியாரம் எனக்கும் நல்ல விருப்பம். நல்ல பதம் தெரிஞ்சவர்கள் செய்தால் நல்லாயிருக்கும். இல்லாட்டி சுத்தியல் கோடாலிதான் வேணும். கன நாளைக்கு வைச்சிருந்து சாப்பிடக்கூடிய பலகாரம். பழுதுபடாது.

செய்முறைக்கு நன்றி nige.

இந்த முறையில் செய்தால் இலகுவாக கடிக்க முடியும். சீனிப்பாணி காய்ச்சி செய்தால் சிலவேளை அந்த சிக்கல் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/1/2021 at 20:35, nige said:

செய்முறைக்கு பாராட்டுக்கள் நிகே.
எந்த ஒரு கொண்டாட்டமும் பயித்தம் பணியாரம் இல்லாமல் நடைபெறாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வயசில் அயலில் கலியாணம் எண்டால் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். 

அஞ்ச்சாறு வீடு சேர்ந்து வெளியில் பெரிய தாச்சியை கல் அடுப்பில் ஏற்றி, வகை வகையா பலகாரச்சூடு நடக்கும். உதவி செய்யும் சாக்கில் போய் அகப்படுவதை லவட்டுவோம்.

அதில் எனக்கு பிடித்தமானது பயத்தம் பணியாரமும், மில்க் டொபியும். கண்ணில காட்டாத சாமான் உந்த சீனி அரியதரம்.

அச்சு பலகாரம், பால் ரொட்டி…… அது ஒரு காலம்.

ஆனால் லண்டன் ரூபீஸ்/சம்பல்காரற்ற பயத்தம் பணியாரமும் சுவைக்குச் - சொல்லி வேலை இல்லை. நல்லா இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • பயத்தம் பணியாரம் ,அறியதரம், லட்டு இது மூன்றும் என்னுடைய பேவரிட் பலகாரம் ..ஆனால் இவற்றை என்னால் ஒழுங்காய் செய்யத் தெரியாது 
     
Link to comment
Share on other sites

On 16/1/2021 at 10:22, goshan_che said:

உண்மை .. இந்த அனுபவம் எனக்கும் இருக்கு. இந்த அரியதரம் முன்பெல்லாம் பிடிக்காது ஆனால் இப்ப அதுவும் பிடிக்க ஆரம்பித்து விட்டது.நன்றி கோசன்

On 16/1/2021 at 15:10, ரதி said:
  • பயத்தம் பணியாரம் ,அறியதரம், லட்டு இது மூன்றும் என்னுடைய பேவரிட் பலகாரம் ..ஆனால் இவற்றை என்னால் ஒழுங்காய் செய்யத் தெரியாது 
     
அரியதரத்தை தவிர மற்ற எல்லாம் செய்வது இலகுதான். செய்து பாருங்கள்..நன்றி கருத்து பகிர்வுக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nige said:

அரியதரத்தை தவிர மற்ற எல்லாம் செய்வது இலகுதான். செய்து பாருங்கள்..நன்றி கருத்து பகிர்வுக்கு..

நேரம் இருக்கும் போது செய்து பார்க்கிறேன் ...நன்றி 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2021 at 17:22, goshan_che said:

கண்ணில காட்டாத சாமான் உந்த சீனி அரியதரம்.

ஒழுங்கான இடத்தில அரியாரம் இன்னும் சாப்பிடேல்ல போல......😎

முதல் கோணல் முற்றும் கோணல் எண்டுறது உத தான் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

ஒழுங்கான இடத்தில அரியாரம் இன்னும் சாப்பிடேல்ல போல......😎

முதல் கோணல் முற்றும் கோணல் எண்டுறது உத தான் 😁

😀🤣😀 இஞ்சர்ரா.... நானும் அப்பா வயசு ஆள் எண்டு அடக்கி வாசிச்சால்… வி கே ராமசாமி ரேஞ்சில போகுது பகிடி🤣😀🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

😀🤣😀 இஞ்சர்ரா.... நானும் அப்பா வயசு ஆள் எண்டு அடக்கி வாசிச்சால்… வி கே ராமசாமி ரேஞ்சில போகுது பகிடி🤣😀🤣

யாழ்களத்திலை அப்பா வயசு அண்ணாத்த வயசு  எல்லாம் பாத்தா அவ்வளவுதான்....தூக்கி கடாசிடுவானுக...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரியதரத்துக்கு சின்னகுருனல் பதமா எடுத்து அரிசிமாவுடன் கலந்து சீனியை கிரைண்டரில் அடித்துப்போட்டு அளவா உப்பும் போட்டு தண்ணி விடமல் குழைக்க அது சீனியின் ஈரத்தன்மையில் பதமா குழைத்து வரும் அப்படி  எடுக்க வேண்டும்........!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.