Jump to content

புதிர்ப்பக்கம்


Recommended Posts

ஒரு புதிர். ஆனால் எனக்கும் தெரியாது விடை. அதுதான் உங்க கிட்ட கேட்கிறேன்.

ஒரு தந்தைக்கு 3 மகன்கள். அவர் ஒருநாள் மூவரையும ழைத்து முறையே 9 , 19 , 29 ஆகிய எண்ணிக்கையான தேங்காய்களை கையளித்து விற்று வரும்படி கட்டளை இடுகின்றார். ஆனால் மூவரும் ஒரே விலைக்கு தான் தேங்காய்களை விற்பனை செய்கிறார்கள். ஆனால் மூவரும் சம அளவான பணத்தொகைகளைத்தான் வீட்டுக்கு கொண்டு சென்று தந்தையிடம் கொடுக்கிறார்கள். எப்படி? :angry: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 126
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

29 தேங்காய்களைப் பெற்ற மகன் அவற்றைக் காவக் கஸ்டப்பட்டிருப்பான். எனவே 10 தேங்காய்களை குறைந்த எண்ணிக்கையைக் (9 தேங்காய்கள்) காவியவனிடம் கொடுத்திருப்பான்.. சந்தையில் மூவரும் சம எண்ணிக்கையில் தேங்காய்களை சம விலைக்கு விற்று, சம அளவில் பணத்தைப் பெற்றிருப்பர்!

Link to comment
Share on other sites

அட இவ்வளவு சீக்கிரமாக பதில் வந்திட்டுதே. கிருபன் அண்ணா உங்கள் மூளை எப்படி இப்படி வேர்க் பண்ணுது. நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

உண்மையில் விற்று வீடு திரும்பும் போது 10 தேங்காய்க்கான பணத்தை இளைவனிடம் நான் கொடுத்தேன் அதுதான் நடந்தது.. :lol:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

புதிர்

ராணிக்கு வயது 54. அவரின் தாயார் மகாராணிக்கு வயது 80. எத்தனை வருடங்களுக்கு முன்னர் மகாராணியின் வயது ராணியின் வயதைவிட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹி.. ஹி.. இதற்கே இன்னமும் விடை தர யாருமில்லை. இதைவிடக் கடினமாகப் போட வேறிடம்தான் பார்க்கவேண்டும்.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிர்

ராணிக்கு வயது 54. அவரின் தாயார் மகாராணிக்கு வயது 80. எத்தனை வருடங்களுக்கு முன்னர் மகாராணியின் வயது ராணியின் வயதைவிட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது?

என்ன சார் Key stage 2 Mental arithmetic ( 8 +) கேள்வி போடுறீங்க...

சும்மா ஜோக்குக்கு சார்..

ராணிக்கு 13 வயசா இருக்கேக்க.. மகாராணிக்கு 39 வயதா இருந்திருக்குமில்ல. அப்ப.

சோ.. 80 - 39 = 41 வருடங்களுக்கு முன்னாடி.. நீங்கள் கேட்டது போல இருந்திருப்பாங்க என்று நினைக்கிறம். :P

கறுப்பி மேம்.. இந்த சார் புதிர் போடுறதில கில்லாடி. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிர்

ராணிக்கு வயது 54. அவரின் தாயார் மகாராணிக்கு வயது 80. எத்தனை வருடங்களுக்கு முன்னர் மகாராணியின் வயது ராணியின் வயதைவிட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது?

ராணிக்கு 18வயதாக இருக்கும் போது மகாராணிக்கு 54 வயதாக இருந்திருக்கும்.

அப்ப 3 மடங்கு வயது 26 வருடங்களுக்கு முதல் வந்திருக்கும் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சார் Key stage 2 Mental arithmetic ( 8 +) கேள்வி போடுறீங்க...

சும்மா ஜோக்குக்கு சார்..

ராணிக்கு 13 வயசா இருக்கேக்க.. மகாராணிக்கு 39 வயதா இருந்திருக்குமில்ல. அப்ப.

சோ.. 80 - 39 = 41 வருடங்களுக்கு முன்னாடி.. நீங்கள் கேட்டது போல இருந்திருப்பாங்க என்று நினைக்கிறம். :P

சரியான விடை நெடுக்கு.. வாழ்த்துக்கள். :D

என்ன செய்கிறது.. வருகிறவர்களுக்கு 8 வயது கணித அறிவுகூட இல்லையே. உங்களைப்போல வயதுபோனதுகள்தான் மூளையை இப்பவும் பாவிக்குதுகள்.. :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராணிக்கு 18வயதாக இருக்கும் போது மகாராணிக்கு 54 வயதாக இருந்திருக்கும்.

அப்ப 3 மடங்கு வயது 26 வருடங்களுக்கு முதல் வந்திருக்கும் :mellow:

தவறாகிவிட்டதே. உங்கள் விடை மகாராணிக்குச் சரி. ராணியின் வயது தற்போது 44 ஆக வந்துவிடுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிர்

பலசரக்குக் கடை வைத்திருக்கும் குமரன் சில்லறைக் காசு மாற்ற வைப்பகம் சென்றான். 100 ரூபாத் தாளை காசாளரிடம் நீட்டி "எனக்குக் சில இரண்டு ரூபா நாணயங்களும், அவற்றின் எண்ணிக்கையில் பத்து மடங்கு ஒரு ரூபா நாணயங்களும், மிகுதி 5 ரூபா நாணயங்களாகவும் வேண்டும்" என்று கூறினான். காசாளர் ஒவ்வொரு நாணயங்களிலும் எத்தனை கொடுத்திருப்பார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து 2 ரூபாய் = 10

ஐம்பது ஒரு ரூபாய் = 60??

ஆறு ஐந்து ரூபாய் = 30

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து 2 ரூபாய் = 10

ஐம்பது ஒரு ரூபாய் = 50

எட்டு ஐந்து ரூபாய் = 40

சாறி மன்னிக்கவும் :lol:

வாழ்த்துக்கள்.. :lol:

எதிலும் அவசரப்படக்கூடாது வில்லு!

Link to comment
Share on other sites

அம்மாக்கு எட்டும் அப்பாக்கு எட்டும் தம்பிக்கும் எட்டும் ஆனா அண்ணாக்கு எட்டாது அது என்ன சொல்லுங்க பார்ப்பம்

Link to comment
Share on other sites

அம்மாக்கு எட்டும் அப்பாக்கு எட்டும் தம்பிக்கும் எட்டும் ஆனா அண்ணாக்கு எட்டாது அது என்ன சொல்லுங்க பார்ப்பம்

உதடு :angry:

Link to comment
Share on other sites

  • 3 months later...

5 L , 3 L கொள்ளக்கூடிய 2 பாத்திரங்கள் மட்டுமே உள்ளன.

குளம் நிறையவே நல்ல தண்ணீர் உண்டு

4 L தண்ணி மட்டுமே வேண்டும்

கொஞ்சம் எடுத்துத்தாருங்களேன்

Link to comment
Share on other sites

2 பாத்திரங்களிலும் அரைவாசிக்கு தண்ணீர் எடுத்து பின்னர் பெரிய பாத்திரத்தில் ,சிறிய பாத்திரத்தை கலக்க 4 லீற்றர் தண்ணீர் பெறப்படும்.(2.5 +1.5 =4)

Link to comment
Share on other sites

1/2 வாசி என்று எடுப்பது கஸ்டம்.

முழுதாக எடுக்க முயற்சி செய்யுங்களேன்

Link to comment
Share on other sites

3L கொள்கலனில் ஒரு தரம் எடுத்து 5 Lகொள்கலனில் இரண்டு தரம் ஊற்றினால் 1 L(3L கொள்கலனில் ) மிஞ்சும்.பின்னர் 5 கொள்கலனை வெற்றாக்கி விட்டு 3ல் கொள்கலனில் எஞ்சிய 1L ஐ ஊற்றிய பின் மீண்டும் 3 கொள்கலனை நிறைத்து 5 கொள்கலனில் ஊற்றினால் 4L ஆகிவிடும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.