மட்டக்களப்பு எல்லையில் நடப்பது என்ன? தொடர்ச்சியாக தாக்கப்படும் தமிழர்கள்- வேடிக்கை பார்க்கும் அரசு

By
உடையார்,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
அட நீங்கள் கருத்தில் அல்ல ஒரு எழுத்தில் தொங்க்கிகொண்டு நிற்பவரென்று இப்போதுதான் எனக்குப் புரிகிறது. (அமெரிக்கன், பிரிட்டிஷ், அவுஸ்திரேலிய ஆங்கிலத்தில் அல்லது பிரெஞ்ச், ஜேர்மனில் வெளுத்துவாங்கினால்தான் தமிழ் மக்கள் தலையில் தூக்கிக் கொண்டாடுவார்கள் என்ற உண்மை கிருபனுக்குத் தெரியாவிட்டால் அதற்கு நானென்ன செய்ய முடியும். இந்த மாயை தென் இந்தியக் கண்டத்திற்குரிய அடிமை குணாம்சம் என்று எப்போது உணர்ந்துகொள்வீர்கள் கிருபன். Theory,practice இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் இதுதான். ☹️ நானென்ன உங்களைப்போல வாசிப்புப் பழக்கதோசம் உள்ளவரா இல்லையே. அப்படி உங்களைப்போல வாசிக்கும் பழக்கதோசம் இருந்திருந்தால் போராளி கருணாவுக்கும் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த முரளீதரனுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாது நடுவில் நின்று ததிங்கிணத்தோம் பாடிக்கொண்டிருந்திருப்பேன். நல்லகாலம் தப்பித்தேன். (பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு plumbing emergency call ஒன்றுக்காக ஒரு appartment unit ஒன்றுக்கு போகவேண்டி ஏற்பட்டது. Unit ன் உள்ளே காலடி எடுத்து வத்தால் வீடு முழுவதும் புத்தகங்கள் மலை போல அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. குடியிருப்பவரோ நடுத்தர வயதினன், வெள்ளை இனத்தினன். மாதக் கணக்கில் சவரம் செய்யப்படாத முகம். மிக மிக எளிய வாழ்க்கை. குளித்து பல நாட்கள் என யூகித்தேன் ஆனால் அவரின் முகத்தில் ஒரு நிறைவு தெரிந்தது. தோற்றத்தில் ஒழுங்கின்மை தெரிந்தது. ஆள் அரவமற்ற Library போல தூசின் மணம் unit எங்குமே நிரம்பி நாசியை துழைத்தது. ஓரிரு வார்த்தைகள்மட்டும் பேசினார். போகும்போதும் வெளியேறும்போதும் அவர் புத்தம் ஒன்றை வாசித்தபடியிருந்தார். சுவர் எங்குமே விஞ்ஞானம் கணிதத்துடன் தொடர்புடைய posters இடைவெளி இல்லாமல் ஒட்டப்பட்டிருந்தன. கால் வைத்து நடக்க முடியாதபடி எங்குமே புத்தகங்கள். சமயலறையிலும் புத்தகம், கழிவறையிலும் புத்தகம். கட்டிலிலும் புத்தகம். மொட்டை மாடியிலும் புத்தகம். யன்னல் ஓரங்களிலும் புத்தகம். மேசை கதிரை எங்கும் புத்தகம் புத்தகம் புத்தகம். அதே போன்று புத்தகங்கள் மீது தூசு நிரம்பவே படிந்திருந்தது. மழைக்காலக் காட்டில், ஒத்தையடிப் பாதை எங்கும் விரிந்து கிடக்கும் மரங்களின் இடையே நடப்பது போல ஒவ்வொரு அடியாக, மிகக் கவனமாக தூக்கித் தூக்கி வைத்து உள்ளே செல்ல வேண்டி இருந்தது. சிறிது தட்டுப்பட்டாலும் புத்தகமலை சரிந்து விழுந்துவிடும் அபாயம். தட்டுப்பட்டால் நிச்சயமாக என்னால் அடுக்கி வைக்க முடியாது. அதற்குப் பல நாட்கள் ஆகலாம். புத்தகங்கள் அடுக்கி வைக்கப்ப்ட்டுள்ள ஒழுங்கும் எனக்குத் தெரியாது. மிக மிகச் சிரமப்பட்டு வேலையை முடித்தாயிற்று. வரும்போது நன்றி கூறினார் ஆனால் சிரிக்கவில்லை. என்னுடைய வேலையை நிறைவாகச் செய்திருந்தாலும் வழமையாக ஏற்படும் திருப்தி அன்று முழுவதும் எனக்கு ஏற்படவில்லை ஏன் திருப்தியில்லாமலிருக்கிறது என்று அன்று முழுவதும் யோசித்தேன். படுக்கைக்கு செல்லும் போதும் குழப்பமாக இருந்தது. மெலிதாகக் கண்ணயர்ந்தபோது திடீரென ஒரு கனவு போல appartment unit ல் குடியிருந்தவரின் முகம் வந்து போனது. திடுக்கிட்டு எழும்பினேன். படுக்கைக்குச் செல்லும்போது இருந்த குழப்பம் ஏதும் இல்லாமல் மனம் தெளிவாக இருந்தது. )
-
By balakumar2 · Posted
இப்படையணி பற்றிய பாடல் " மீனிசை (https://tamileelamsongs.com/meenisai/) " என்னும் குறுவெட்டில் உள்ளது. அக் குறுவெட்டில் உள்ள பாடல்களை எழுதியோர்:- --> அரியம், கவியுகன், புலேந்திரன், சச்சுதானந்தம். அக் குறுவெட்டில் உள்ள பாடல்களை பாடியோர்:- --> எஸ்.ஜி.சாந்தன், மனோ, சிவராஜா, குலம், யாழினியன், சந்திரமோகன் , தவமலர், கோகிலா, கலைவாணி. இசை அமைத்தோர்:- --> 2ம் லெப்டினன்ட் ரசிகன் இசைக்குழு போராளிக் கலைஞர்கள். ---> http://thesakkaatu.herokuapp.com/albums?page=4 -
என்ன பெரியப்பா இண்டைக்கும் முட்டை உங்களுக்கு வாதாவூரன் உறவை பார்க்கவும் பரிதாவமாய் இருக்கு குசா தாத்தா சொல்லுவது போல் விளையாட்டில் இதெல்லாம் சகஜமப்பா ஹா ஹா 😀😁
-
By Nathamuni · பதியப்பட்டது
புறா விடு தூது - புறாவினால் வந்த அக்கப்போர் பாகிஸ்தான் பக்கம் இருந்து இந்தியா பக்கம் பறந்து வந்த ஒரு புறா, ஒரு இராணுவ வீரர் தோலில் அமர்ந்தது. பழக்க தோசம் போலும். அதன் காலில் ஒரு துண்டு சீட்டு. அதில் ஒரு தொலைபேசி இலக்கம். அவ்வளவு தான். துப்பறிய வந்தது என்று அதனை பிடித்துக் கொண்டு போய் உள்ளூர் போலீசாரிடம் கொடுத்து வழக்கு பதிவு செய்ய ராணுவம் கோரி உள்ளது. கூண்டு ஒன்றினை வாங்கி வந்து, புறாவை, அடைத்து விட்டு, எண்ணத்தை செய்வது என்று போலீசார் முழுச, புறாவும் கூண்டுக்குள் இருந்து முழிசிக்கொண்டு இருக்குது.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.