Jump to content

ரவா உப்புமாவின் சுவை இயற்கையானதா? செயற்கையானதா?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?
.
நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றமிருக்கிறது.
.
சிவன் : என்ன குற்றம் கண்டீர்?
.
நக்கீரர் : எங்கே தாங்கள் இயற்றிய செய்யுளைச் சொல்லும்?
.
சிவன் : தின்பதோ வாழ்க்கை வேலை வேறில்லை தம்பி
ஓமம் சேர்க்காமல் கண்டதும் உளதே
கடுகும், பருப்பும், மிளகாயும் சேர்த்து
எண்ணெயில் தாளித்த பாவையே! இதை விடுத்து
வேறுண்டோ நீயறியும் ரவா உப்புமாவே!
.
நக்கீரர் : இப்பாட்டின் உட்பொருள்?
.
சிவன் : நாடார் கடையில் உள்ள மளிகைப் பொருட்களை எல்லாம் வரிசையாக வாங்கிக் குவிக்கும் பெண்ணே! நீ கண்ட பொருட்களில் ரவாவைப்போல் வேறு அரியவகைப் பொருள் உண்டோ! அதில் நீ செய்த ரவா உப்புமாவிற்குத்தான் ஈடு இணை உண்டோ? என்பதே இதன் பொருள்.
.
நக்கீரர் : இப்பாட்டிலிருந்து எம்மன்னருக்குத் தாங்கள் கூறும் முடிவு?
.
சிவன் : புரியவில்லை? பெண்களுக்கு இயற்கையிலேயே ரவா உப்புமா செய்யும் ஆற்றல் உண்டு என்பதுதான் நான் கூறும் முடிவு.
.
நக்கீரர் : ஒருக்காலும் இருக்க முடியாது. அன்னையிடம் சமையல் நன்றாகக் கற்றுக் கொள்வதாலும், தொடர்ந்து சமையல் செய்யத் தெரிந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
.
சிவன் : தேவலோகப் பெண்களுக்கு?
.
நக்கீரர் : அவர்களுக்கும்தான்
.
சிவன் : சாப்பிட்டு சாப்பிட்டுத் தூங்கித் தூங்கி வழிகிறானே கும்பகர்ணன்? அவன் மனைவிக்கும் இதே கதிதானோ?
.
நக்கீரர் : அவளென்ன! நான் அன்றாடம் என் நினைவில் வைத்திருக்கும் சமையற்கலை வல்லுனன் நளமகரானின் இடப்பக்கம் அமர்ந்துள்ள தமயந்திக்கும் இதே கதிதான்.
.
சிவன் : அங்காடியில் விழுந்து புரண்டு அரிசியும் பருப்பும் தலையில் சுமந்து டெபிட் கார்டில் உள்ள மினிமம் பேலன்சும் கரைத்து வீட்டிற்கு சென்று ஏன் தாமதமாக வந்தாய் என பல்பு வாங்கும் கீரனோ எம் கவியை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?
.
நக்கீரன் : பல்பு வாங்குவது எங்கள் குலம்,
சங்கரனார்க்கு ஏது குலம்? – பல்பை
பார்த்து வாங்குவோம்! உன்னைப் போல்
ஃப்யூசு போன பல்பாக ஒரு போதும் இருக்க மாட்டோம்!!
.
சிவன் : நக்கீரா! நன்றாக என்னைப் பார். நான் எழுதிய தமிழ்ப் பாட்டில் குற்றமா?
.
நக்கீரர் : நீரே முக்கண் முதல்வராயும் ஆகுக. உமது நெற்றியில் ஒருகண் காட்டிய போதும் உடம்பெல்லாம் கண்ணாக்கி சுட்ட போதிலும் குற்றம் குற்றமே! "நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே"
.
சிவன் : நக்கீ. . . . . .ரா....!
.
மன்னர் : இறைவா! சொக்கநாதா! சோதிச் சுடரே! ஆராயாமல் எதிர்வாதம் செய்த நக்கீரனை மன்னிக்க வேண்டும். விலை மதிப்பற்ற எங்கள் தலைமைப் புலவனை மீண்டும் உயிர் பெறச் செய்ய வேண்டும்.
.
சிவன் : செண்பகப் பாண்டியா! சினம் இல்லை எமக்கு. வேதனையை விடு. எமது விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று. கொதிக்கும் ரேன் கடை பாமாயிலை மேலே ஊற்றியதால் ஏற்பட்ட காயத்தின் வெம்மை தாளாமல் அவதியுறும் நக்கீரர் நலமுடன் எழுந்து வருவார்.
.
நக்கீரர் : இறைவா! பரம்பொருளே!
உப்பும் நீயே!
பருப்பும் நீயே!
கோல்டு வின்னரும் நீயே!
பாசுமதி ரைசும் நீயே!
கத்தரிக்காயும் நீயே!
புடலங்காயும் நீயே!
வெங்காயமும் நீயே!
தக்காளியும் நீயே!
.
நக்கீரர் : அறியாமல் வாதம் செய்த என்னை மன்னியுங்கள்.
.
சிவன் : நக்கீரரே! உம் தமிழோடு விளையாடவே யாம் வந்தோம். வந்திருப்பது இறையென்றறிந்தும் சாப்பாட்டின் மீது உங்களுக்கிருந்த பற்றின் காரணமாக "நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று வாதிட்ட உங்கள் வாதம் வெகு சூப்பர்!
.
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு சமர்ப்பணம்
  

 

இது வாட்ச்அப்பில் எனக்கு வந்து நான் பெற்ற இன்பம் பெறுக யாழ் உறவுகளும் வாசகர்களும்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மனைவி கிண்டிய உப்புமாவை சாப்பிட்டு நொந்துபோன ஒருவரால்தான் இப்படி எழுதிக் குவிக்க முடியும்....!  😂

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

மனைவி கிண்டிய உப்புமாவை சாப்பிட்டு நொந்துபோன ஒருவரால்தான் இப்படி எழுதிக் குவிக்க முடியும்....!  😂

உப்புமாவைக் கிண்டக் கூடாது சுவித்தம்பி, நீர் நன்றாகக் கொதி நிலையில் உள்ளபோது ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறவேண்டும். என் மனைவிக்கு உதவி செய்து கற்றுக்கொண்டேன்.🥰

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Paanch said:

உப்புமாவைக் கிண்டக் கூடாது சுவித்தம்பி, நீர் நன்றாகக் கொதி நிலையில் உள்ளபோது ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறவேண்டும். என் மனைவிக்கு உதவி செய்து கற்றுக்கொண்டேன்.🥰

மிஸ்ட்டர் பாஞ்ச்  நீங்கள்  கிளறியபடியால்தான் உப்புமா தப்புமாவாய் போயிருக்கு....அதுதான் உங்களுக்கு பாட்டாலேயே பதில் தந்திருக்கு.......!  😂

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

மிஸ்ட்டர் பாஞ்ச்  நீங்கள்  கிளறியபடியால்தான் உப்புமா தப்புமாவாய் போயிருக்கு....அதுதான் உங்களுக்கு பாட்டாலேயே பதில் தந்திருக்கு.......!  😂

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்..........

அரிசிமாவு உப்புமா - Rice flour uppuma (thiravidan.in)

  உணவு முறைகள்

அரிசிமாவு உப்புமா

தேவையான பொருட்கள் :

 அரிசி மாவு – 150 கிராம்

 பச்சை மிளகாய் – 3

 பெரிய வெங்காயம் – 3

 எண்ணெய் – 50 மி.லிட்டர்

 கடுகு அரை தேக்கரண்டி

 உளுந்தம்பருப்பு – 1 தேக்கரண்டி

 உப்பு தேவையான அளவு

செய்முறை:

 அரிசி மாவில் த‌ண்‌ணீ‌ர் ஊற்றி நன்றாகக் கிளறி அரை மணி நேரம் அப்படியே வைத்துவிட வேண்டும்.

 • வெங்காயத்தைத் தோலுரித்து அதையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
 • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகையும் உளுந்தம் பருப்பையும் போட்டுத் தாளித்துக் கொண்டு நறுக்கிய வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்குங்கள்.
 • அவை வதங்கியதும் அரிசி மாவைக் கொட்டி உப்பையும் போட்டுக் கிளறுங்கள்.
 • அரிசி மாவு வெந்ததும் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்குங்கள். சுவையான அரிசிமாவு உப்புமா தயார்.

நன்மைகள் : கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இதனைக் கொண்டு செய்யப்படும் உப்புமா மிகவும் ஆரோக்கியமானது. மேலும் இது பல்வேறு காய்கறிகள் சேர்த்து செய்யப்படுவதால், ஆரோக்கியமானது மட்டுமின்றி, சுவையானதாகவும் இருக்கும்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.