Jump to content

சீமானை வம்புக்கு இழுக்கும் துக்ளக் தர்பார்... விஜய்சேதுபதிக்கு புதிய பிரச்னை!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 15/1/2021 at 19:40, goshan_che said:

அவர் பிள்ளையை தூக்கி கொண்டு ஆந்திரா போய், திருப்பதியில் வைத்து துலாபரம் கொடுக்கிறார்🤣.

அப்ப முருகன் முப்பாட்டன் எல்லாம் கப்ஸாவா?

தனக்கு, குடும்பத்துக்குன்னா “ஏழு குண்டலவாடா, கோவிந்தா, கோவிந்தா”.

அப்பாவி தமிழ் தேசிய இனத்தின் பிள்ளைகளுக்கு மட்டும், கறுப்பன், மாரி, சூலி, முருகனா🤣.

யாழ்கள நாம்தமிழர் கட்சி உறுப்பினர்  கருத்து என்னவோ?

WhatsApp-Image-2021-01-11-at-5.12.39-PM.jpeg

https://www.toptamilnews.com/seeman-at-the-temple/?feed_id=10289&_unique_id=5ffd415d664c5

துலாபாரம் என்று இருப்பதையும் கொஞ்சம் கவனியுங்கோ அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

திருப்பதியை பற்றி 2 கருத்து உண்டு.

1. அது ஆதியில் இருந்தே வெங்கடாசலபதி கோவில்

2. ஆதியில் முருகன் கோவில் பின்னர் தெலுங்கு வைணவர் அதை வெங்கடாசலபதி கோவிலாக மாற்றினர்.

எப்படி பார்த்தாலும், எனது இனத்துக்கான விடுதலை எனது இறையை மீட்பது என அரசியல் செய்பவர் எப்படி தெலுங்கு வைணவ கோயிலுக்கு போய் துலாபாரம் கொடுக்கலாம்?

ஒன்றில் திருப்பதியை மீட்க போராடவேண்டும் அல்லது அது வைஸ்ணவ கோவில் என ஏற்று பழனிக்கு போக வேண்டும்.

பிகு: ஏற்கனவே சொல்லிவிட்டேன் - இலங்கையில் எமக்கு பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என்பதற்காக நாங்கள் டிரம்ப்பை, பைடனை பற்றி பேசாமல் இருப்பதில்லையே?

அது போலதான் தமிழக அரசியலை பேசுவதும். அது ஸ்டாலினாகிலும் சீமானாகிலும்.

இதில் வேடுவர் கோவிலான கதிர்காமத்தை இழுத்து வருது அக்மார்க் மொட்டந்தலை+முழங்கால்🤣

Epigraphical Records of Thirumalai & Thirupathi Devasthanam's Inscriptions

The inscription belonging to 830 AD

This Temple bears on its walls several inscriptions which are of historical, cultural and linguistic importance. The number of inscriptions on the Hill Temple and in the temples of Lower Tirupati and Tiruchanur exceed one thousand and they furnish a continuous and authentic record of the transactions of the Tirumala Tirupati Devasthanams for over seven or eight centuries. We have evidence to believe that many early inscriptions on the walls of the temples have disappeared beyond recovery due to restorations and renovations undertaken from time to time.

As many as 1060 inscriptions are found engraved on the walls of the temples under the management of the Devasthanam. They are published by the , Devasthanams and are classified as follows:

Sri Venkateswara's Temple, Tirumala : No. of inscriptions. 640

Sri Govindaraja's Temple, Tirupati : No. of inscriptions. 340

Other Temples : No. of inscriptions. 80

Excepting a few, almost all the epigraphs of the Tirupati Temples are in Tamil language and in alphabet interspersed with Grantha characters. About 50 inscriptions are in Telugu and Kannada.

Apart from very few, almost all the inscriptions are in Tamil language and about 50 inscriptions are in Telugu and Kannada.

The inscriptions in the temple were found in Sanskrit, Tamil, Telugu and Kannada languages of which majority are in Tamil followed by Telugu , Kannada and Sanskrit

It was Mahant Prayagdas who started it all by doing a thorough research on the inscriptions in 1920.

Later, epigraphist and archaeologist Sadhu Subramanya Shastri took over the mantle as he did research for 11 years from 1922 to 1933 by translating hundreds of Sanskrit, Tamil, Telugu and Kannada inscriptions to English, using the `eye copy' technique.

Shastri brought to light several inscriptions engraved on temple walls, pillars and gopurams. About 640 inscriptions in Tirumala shrine, 340 in Sri Govindaraja Swamy temple, 170 in almost half a dozen temples of TTD located in and around Tirupati saw the light of the day.

All these 1,150 inscriptions were later brought out in the form of books by Shastri

Tirumala Tirupati Devasthanams Inscription Vol. I - Sadhu Subrahmanya Shastri (Devasthanam Archeologist, Tirupathi)

http://ebooks.tirumala.org/Product/?ID=1827

Epigraphical Glossary on Tirumala Tirupati Devasthanams Inscriptions - V. Vijayaraghavacharya

http://ebooks.tirumala.org/Product/?ID=1828

.....

https://en.wikipedia.org/wiki/Venkateswara_Temple,_Tirumala

http://srivenkatesa.org/…/675-tirumala-hill-shrine-and-insc…

The inscriptions in the temple were found in Sanskrit, Tamil, Telugu and Kannada languages of which majority are in Tamil followed by Telugu , Kannada and Sanskrit

https://en.wikipedia.org/wiki/Tirupati

Gold coat to hide Tirumala carvings

http://timesofindia.indiatimes.com/…/articleshow/5039959.cms

Inscriptions at Tirumala digitised

http://www.thehindu.com/…/inscriptions-at…/article749997.ece

https://en.wiki2.org/wiki/Venkateswara_Temple,_Tirumala

.....

மறைந்த கல்வெட்டு ஆய்வாளரும், தொல்லியலாளருமான சாது சுப்ரமணிய சாஸ்திரி அவர்கள் 1922 முதல் 1933 வரை பதினொரு ஆண்டுகள் ஆய்வு செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து புத்தகம் எழுதியவர்.

Tirumala Tirupati Devasthanams Inscription Vol. I - Sadhu Subrahmanya Shastri (Devasthanam Archeologist, Tirupathi)

http://ebooks.tirumala.org/Product/?ID=1827

திருமலை-திருப்பதி கோயில் கல்வெட்டு பற்றிய "கல்வெட்டியற் அருஞ்சொற்பொருள் பட்டியல்"-ஐ விஜயராகவாச்சாரியா அவர்கள் எழுதியுள்ள புத்தகம்

Epigraphical Glossary on Tirumala Tirupati Devasthanams Inscriptions - V. Vijayaraghavacharya

http://ebooks.tirumala.org/Product/?ID=1828

1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

[இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை. தொகுப்பு: டாக்டர். பி. உமேஷ் சந்தர் பால்]

http://temple.dinamalar.com/news_detail.php?id=355

.....

திருப்பதி திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன.

இந்த கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் மட்டும் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன.

மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன..

இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை.

229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை.

251 அச்சுதராயர் காலத்தவை.

147 சதாசிவராயர் காலத்தவை.

135 கொண்டை வீடு அரசர் காலத்தவை.

நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன.

எப்படி தெலுங்கு வைணவ கோயிலில் தமிழில் கல்வெட்டு ....?
வேடுவர் கோவிலான கதிர்காமத்தில் வழிபட்ட தமிழர்கள்  எல்லாம் வேடுவர்களா...? எப்போதும் ,இப்போதும் கதிர்காமத்திற்கு பாதயாத்திரை போவவர்களும் வேடுவர்களா...? இல்லை இப்போது கதரகம  தெய்யோவை தேடிவரும் சிங்களவரும் வேடுவர்களா ,அங்கே இருக்கும் நிலமேயும் வேடுவரா ...? 
மிகவிரைவில் நல்லூர் கந்தன் நல்லண்ண  தெய்யோ என்று அழைக்கப்பட நாங்களோ சீமானை இழுத்து கொண்டு வந்து சொறிந்துகொண்டிருப்போம் , அதுசரி நம்மடை  கப்பாசிட்டிக்கு எவன் மாட்டுவானோ  அவனை தானே இழுத்துகொண்டுவந்து சொறியமுடியும், நம்மட கப்பாசிட்டிக்கு  கதறகமயில் மூலையில்  இருக்கும் வேலை பார்த்து முணுமுணுத்து விட்டு வர மட்டுமே முடியும், உகந்தைக்கும்  ஏற்கனவே கட்டம் கட்டியாச்சு, நாளைக்கு நரிக்குறவர் கோவிலான உகந்தயை  கொண்டு வந்து மொட்டைத்தலை அண்ட் முழங்கால் என்று எடுத்துவிடுவோம்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

வணக்கம் அக்னி,

நீங்கள் ஏன் இவ்வளவு மினெக்கெட்டு கூகிள் பண்ணி வெட்டி ஒட்டியுள்ளீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை.

1. திருப்பதி ஒரு தமிழ் (முருகன்) கோவில் 2. அது தெலுங்கு வைணவ கோவில்

என்பது பற்றி இரு வேறுபட்ட கருத்துகள் உள்ளன என நான் இதற்கு முந்திய பதிவிலே சொல்லி விட்டேன்.

சரி, உங்கள் ஆதாரப்படி, அது ஒரு உரு மறைக்கப்பட்ட முருகன் கோவில் என வைப்போம்.

ஆனால் அது இப்போ முழுக்க, முழுக்க தெலுங்கர் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு வைணவக்கோயில்.

தமிழரின் இறையை மீட்கும் அரசியல் என்ன செய்ய வேண்டும்?

இந்த கோயிலை மீட்க குறைந்த பட்சம் அதிலே போய் தமிழ் முறையில் வழிபடும் உரிமையை கோரும் போராட்டத்தை அல்லவா செய்ய வேண்டும்.

அது சாத்தியப்படாதவிடத்து - இந்த கோவில் பற்றிய உண்மையை உலகுக்கு எடுத்து சொல்லும் வேலையை செய்ய வேண்டும்.

தமிழர் இறையை மீட்பது என்றால் இதுதான்.

ஆனால் சீமான் செய்தது என்ன?

திருப்பதி மீதான தெலுங்கர் மேலாண்மையை ஏற்று கொண்டு, வைணவ முறைப்படி வழிபட்டு, துலாபரம் கொடுத்தது. 

குமிடிபூண்டி தாண்டி தமிழ் நாட்டுக்கு வந்தவுடன் தமிழர் இறையை மீட்ப்போம் என்று பேசுவது, ஆனால் குமிடிபூண்டிக்கு வடக்கே பாடர் தாண்டியதும் நவதுவாரங்களையும் மூடியபடி, தமிழர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக புடுங்கபட்ட முருகன் கோவிலில் போய் வைணவ முறைப்படி கும்பிட்டு, துலாபாரம் கொடுப்பது.

இந்த முரண்பாட்டு அரசியலைத்தான் நான் சுட்டினேன்.

கருணாநிதியை போலவே சீமானும் மேடையில் பேசுவதற்கு நேர் எதிராக தன் தனி வாழ்க்கையில் நடக்கிறார் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

கதிர்காம ஒப்பீடு

உங்களிடம் மற்றைய கருத்தாளரின் வாயை அடைக்கும் ஒரு தந்திரம் இருக்கிறது. இதை நானும் இன்னும் சிலரும் முன்பும் சுட்டி காட்டி உள்ளோம்.

கிழக்கில் நீங்கள் ஆதரித்த அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யவில்லை என்பதை சுட்டி காட்டினால் - கூட்டமைப்பு என்ன செய்தது, நீங்கள் தேசிக்காய்கள் என்ன செய்தீர்கள் என கேட்பீர்கள்.

அதேபோல் சீமான் திருப்பதி போய் வைணவ முறையில் கும்பிட்டது சரியா? என கேட்டால்? கதிர்காமம் பறிபோய்விட்டதே நீங்கள் என்ன செய்தீர்கள், நல்லூர் பறி போக போகுதே என்ன செய்வீர்கள் என கேட்பீர்கள்🤣

நல்லுரை மட்டும் அல்ல, நாளைக்கு நான் இடையில் கட்டி உள்ள துணியை சிங்கள இனவாதிகள் உருவினாலும் என்னால் எதுவும் செய்ய முடியாது. இது எல்லாருக்கும் தெரியும். 

அப்போ இலங்கையில் நம்மால் எதுவும் செய்ய இயலாது (நீங்கள் ஆதரிக்கும் கிழக்கிலங்கை அரசியல்வாதிகளே ஒரு சில வேலை வாய்புக்க்கு அப்பால் எதுவுமே செய்ய இயலாதவர்கள் என்பதை நீங்களே ஒத்து கொண்டுள்ளீர்கள்) என்பதற்காக நாம் தமிழகத்தில், இந்தியாவில், அமெரிக்காவில் நடக்கும் அரசியல் பற்றி எதுவும் பேச கூடாதா?

உங்களிடம் கேட்கபடும் கேள்விக்கு உங்களிடம் தர்க ரீதியான பதில் இல்லை எனும் போது, இப்படி “தேசிக்காயை போய் கேளுங்கள்” “கதிர்காமத்தை மீளுங்கள்”  என சொல்லுவது கெட்டிக்காரத்தனம் என நீங்கள் நினைக்க கூடும், ஆனால் “தம்பி இன்னும் கேள்விக்கு பதில் வரவில்லை”  என்பது நிச்சயம் வாசிப்பவர்களுக்கு புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அண்ணை  இந்த கேள்விக்கெல்லாம் முக்கி பதில் தரவேண்டிய அவசியமேயில்லை 
நம்ம பாலிசியே மாற்றத்தை முதலில் நமது தெருவிலிருந்து துவங்கவேணும் எனபது தான், நம்மடை தெரு முனையில் இருக்கும் பிள்ளையாரை காப்பாற்ற வக்கில்லாத நாம் விம்பிள்டனில் இருக்கும் பிள்ளையாரை நோண்ட போகக்கூடாது, நானோ இங்குள்ள மற்ற சீமான் ஆதரவாளர்களோ திரும்ப திரும்ப சொல்வது ஒன்றுதான் யாரும்  சீமான் தனியீழம் பிடித்துத்தருவார், தமிழ்நாட்டிலிருந்து கொண்டே நந்தசேன மாத்தையாவுக்கு காட்சட்டையில் ஒண்ணுக்கு போகவைப்பார் என்று நம்புமளவுக்கு டம்மிபீசுகள் இல்லை,
ஆனால் தமிழ்த்தேசியத்தின் வேட்கை கொண்ட இனப்பற்று கொண்ட சினிமா மோகம், டாஸ்மார்க் அடிக்சன்   அற்ற ஒரு இளைஞர் படையை தமிழ்நாட்டில் உருவாக்குவது ஈழ தமிழர் எமக்கு எதோ ஒருவகையில் உதவத்தான் போகிறது, நானும் இந்தியாவில் நான்கு வருடம் கல்விகற்றவன் அதுவும் கர்நாடகாவில் 
2011 காவிரி நதிநீர் சிக்கலின் போது நானும் நையப்புடைக்க பட்டிருக்கப்படவேண்டியவன் கடவுளின் அருளால் அன்று என்னுடைய Backpack இல் கடவுச்சீட்டு இருந்துவிட்டது, காலில் விழாத குறையாக கடவுச்சீட்டை காட்டி தப்பி ஓடிவந்தேன், அன்றைக்கு தமிழ்நாட்டிலிருந்து சித்தாள், கொத்தனார் வேலைகளுக்கு ஓசூர், கிருஷ்ணகிரி  போன்ற எல்லை நகர்களிலிருந்து  வந்து  சிறிய சிறிய கொட்டகைகளில்  இருந்த தமிழர்களுக்கு விழுந்த அடிகளை நேரடியாக கண்ணால் பார்த்தவன், இதனை பற்றி அப்போதைய முதல்வர் எடியூரப்பாவும் சரி எந்த கர்நாடக தமிழர் ஆதரவு அமைப்புகளும் சரி மூச்சே விடவில்லை,
ஆனால் சீமான் மட்டும் தமிழநாட்டை தமிழரே ஆழவேண்டும் என்று சொன்னால் தமிழ்நாட்டு  எலைட்ஸுக்கு நரம்பு புடைக்க கடுப்பேறிவிடும்,  ஸ்ரீலங்கன் தமிழ் எலைட்ஸ் அதைவிட ஒருபடி மேல் புரைக்கேறுமளவு பட்டிமன்றம் வைக்க தொடங்கிவிடுவினம், சமீபத்தில் கூட வட்டாள் நாகராஜ் வான்டடாக வந்து சொறிகிறான் ஏன்...?, கண்ட மரங்களுக்கு கீழெல்லாம் புத்தரை வைத்து தன்னுடைய supremacy ஐ காட்டும் சிங்களவனுக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம்..?, எம்மிடம்  சிங்களவனை தட்டி கேட்க ஆளில்லை அதனை உருவாக்கும் சாத்தியமும் இல்லை, தமிழ்நாட்டிலும்  தட்டி கேட்க ஆளில்லை ஆனால் அப்படி கேட்க கூடிய சக்தியை உருவாக்கும் சாத்தியம் உண்டு, தஞ்சயில் தமிழில் குடமுழுக்கு செய்ததே ஒரு பெரிய வெற்றிதான் 
தமிழநாட்டிலேயே செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள்  எவ்வளவோ இருக்கிறது அதனை அவர் செய்துவிட்டு 
ஆந்திரா போக கேட்கலாம். முதலில் தமிழ்நாட்டில் சீமான் ஒரு தவிர்க்கமுடியாத  சக்தியாக வரட்டும்,
நான் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறேன், தமிழ் மொழியை நேசிக்கிறேன் ஆனால் ஆங்கிலத்தில்  பேசித்தானே தொழில் செய்கிறேன் , உங்கள் லாஜிக்கின் படி நான் சீனனுடனும் சிங்கப்பூரியனுடனும் மலாய்க்காரனுடனும் தமிழில் தானே பேசவேண்டும், சாத்தியமா ...? கதறகமையை சும்மா கொண்டுவரவில்லை அங்கு போகும் நம்மடை  தமிழ் சனம் எல்லாம் பிக்கிகள்  ஓதும் பிரித்தை கேட்டு சிங்களத்தில் கும்பிட்டுவிட்டா வருகினம், சீமானும் அப்பிடியே கும்பிட்டு வந்திருக்கலாம், என்ன சீமான் தமிழ் 
தமிழர் உரிமை ,தமிழர் வாழ்வியல் என்று பேசுவதால் கடுப்பேறி சீமானிடம் கேட்ட கேள்வியை  இதே எலைட்ஸ் கதறகமையில் வணங்கி விட்டு வரும் சாதா தமிழ்மக்களிடம் கேட்குமா ...?     
    
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அக்னி,

நீங்கள் இது விடயமாக நான் எழுதியவை சகலதையும் வாசித்திருக்க வாய்ப்பில்லை.

தமிழ் தேசியத்தை சீமான் தூக்கி வருவதில் எனக்கும் உடன்பாடே. வாட்டாள் போன்றவர்களுக்கு ஒரு எதிர்வினை தேவை என்பதையும் நான் முழுதாக ஏற்று கொள்கிறேன்.

எனக்கு நாம் தமிழரின் கொள்கையில் பிடிக்காத ஒரே விடயம், 600 வருடங்களாக தமிழ்நாட்டில் வாழ்வோரை தமிழர் இல்லை என ஓவர் நைட்டில் எதிரிகளாக்குவதுதான். இது கிட்டதட்ட எனது கணிப்பில் இப்போதைய தமிழ்நாட்டின் 30% மக்கள்.

இது அநியாயம். 

ஆனால் அதையும் தாண்டி,

இதை தமிழ் தேசியத்தை தமிழ்நாட்டில் எழும்ப விடாது காயடிக்கும் வேலையாகவே நான் பார்கிறேன். அத்தனை சதவீத மக்களை பகைத்து ஒரு போதும் தமிழ் தேசியத்தை தமிழ்நாட்டில் கட்டி எழுப்ப முடியாது.

அதே போல் சீமானின் கடந்தகாலத்தை சீர்தூக்கி பார்க்கும் போது அவர் தமிழ் தேசியத்தை நேர்மையாக கையில் எடுத்திருப்பதாக எனக்கு தெரியவில்லை.

கஸ்மீரிகளின் எழுச்சியை பாருக், ஒமர் அப்துல்லாக்களை வைத்து அடக்கியது போல, தமிழ் தேசிய எழுச்சியை தமிழ்நாட்டில் மட்டுப்படுத்தி எப்போதும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க டெல்லி இறக்கிய ஆள்தான் சீமான் என்பது என் நம்பிக்கை.

இவைதான் நான் சீமானை எதிர்க்கும் காரணங்கள்.

ஆனால் ஏஜெண்ட் அமிர்தலிங்கத்தை தூக்கி வீசிவிட்டு இலங்கை தமிழ் தேசிய அரசியல் பிராவகம் எடுத்து ஓடியது போல, ஏஜெண்ட் சீமானையும் அவர் அம்பலப்படும் போது, தூக்கி வீசிவிட்டு தமிழகத்தின் தமிழ் தேசிய அரசியல் ஓடவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

அதற்கு - சீமானின் அரசியலை நோண்டிக்கொண்டே இருப்பது அவசியம். 

ஒரு வித்து கவசத்தில் (அட அதுதாங்க nutshell) சீமானை நான் எதிர்க்க காரணம் இதுதான்.

பிகு

கதிர்காமமோ, திருப்பதியோ - சாமன்யர்களை யாரும் கேள்வி கேட்பதில்லை.

சீமான் முன்னர் சகல தமிழ் வழிபாடுகளையும் கேலி செய்தவர். பின்னர் தமிழ் இறை மீட்பு என்றார்.

இன்று? சிறை இருக்கும் திருப்பதி முருகனை ஒரு மனகிலேசமும் இல்லாமல் போய், வெங்கடாசலபதி என அவர்கள் முறையில் கும்பிட்டு வருகிறார்!

இந்த உதாரணத்துக்கு மன்னிக்கவும்.

ஆனால் இது திரு பிரபாகரன் மஹாவம்சத்தில் பதவி பிரமாணம் செய்வது போல ஒரு நிகழ்வு. 

இது எதை காட்டுகிறது - எனது பார்வையில் ஏஜெண்ட் சீமான் பெயருக்கு யாரோ சொல்லி தமிழ் தேசியத்தை ஒரு பிசினசாக செய்கிறார் என்பதைதான் காட்டுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

சமீபத்தில் கூட வட்டாள் நாகராஜ் வான்டடாக வந்து சொறிகிறான் ஏன்...?,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.