Jump to content

அரச தூண்டுதலினால் உருவாகும் இனவாதம் மற்றும் பயங்கரவாதத்தினை எதிர்க்குமாறு இலங்கை மக்களை வேண்டுகிறோம்-விடுதலை இயக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரச தூண்டுதலினால் உருவாகும் இனவாதம் மற்றும் பயங்கரவாதத்தினை எதிர்க்குமாறு இலங்கை மக்களை வேண்டுகிறோம்-விடுதலை இயக்கம்

இன்னுமொரு முறைவழியான இனவாத மற்றும் ஒடுக்குமுறையின் வெளிப்பாடாக சிவில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவுத் தூபியை அழிக்கும் செயலுக்கு இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இந்நினைவுச்ச்சின்னமானது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் எழுப்பப்பட்டது. ஜனவரி 8 அன்றிரவு அழிபாடுகளை நிரவல் எந்திரத்தின் மூலம் கொண்டுசெல்வதை புகைப்படங்களில் காணமுடிகின்றது.

ErONSUSXYAAxEyo-3-300x225.jpg

இறந்தவர்களுக்கான நினைவினை மேற்கொள்ளும் தமிழ் மக்களின் உரிமையை தற்போதைய மற்றும் முன்னைய அரசாங்கங்கள் மறுக்கும் நிகழ்வு இது முதல் தடவை அல்ல எனினும் தற்போதைய நிகழ்வின் நேரப்பொருத்தத்துடனான அரசாங்கத்தின் நகர்வினைப் பார்க்கையில் இவ்விடயத்தை கவனிக்க வேண்டியுள்ளது.

மாகாணசபைத் தேர்தல்கள் நெருங்கும் வேளையில் கோவிட்19 தொடர்பான திறமையற்ற செயலாண்மையினால் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ள கட்டத்தில் இந்நிகழ்வு ஏற்பட்டுள்ளது. பிரஜைகளின் தேவையை நிவர்த்தி செய்யவும் அவர்களை பாதுகாக்கவும் தவறும் அரசாங்கங்களின் விருப்பத்துக்குறிய கவனச்சிதறலாக மக்களின் மீதான இனவாத வன்முறை காணப்படுகின்றது.

சுதந்திரத்தின் பின்னர் நீண்ட காலமாக இன மற்றும் மதக்குழுக்கள் தங்களுக்கிடையில் பகைமை பாராட்டி வந்துள்ளன. விளைவாக பெரும்பான்மை சிங்கள சமூகம் சிறுபான்மை சமூகத்தோடு இணைவது தடுக்கப்படுவதோடு அரசாங்கத்தினை பொறுப்புக்கூறும் நிலையிலிருந்தும் தடுத்துள்ளது.

இச்செயல்முறை புதிதல்ல. பிரித்தாளும் கொள்கையானது பிரித்தானிய காலனித்துவவாதிகளால் சுதேச மக்கள் அரசுக்கெதிராக திரண்டெழுவதை தடுப்பதற்காக கையாளப்பட்ட செயல்திறமிக்க கொள்கையாகும். தங்கள் காலனித்துவ எஜமானர்களால் பயிற்றப்பட்ட ‘தலைவர்கள்’ இக்காலனித்துவ மரபினைப் பேண முன்னின்று செயற்பட்டனர். இருந்தும் இந்த பாசிசத்தலைவர்கள் உணரத்தவறிய விடயம் யாதெனில்இ கொடிய வன்முறையும் அடக்குமுறையும் மக்களுக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தி விடுகின்றன; இது காலத்தின் கையிலேயே உள்ளது.

கடந்த வருடத்தில் ராஜபக்ஷ அரசாங்கமானது பல தேர்தல் வாக்குறுதிகளை மீறியுள்ளது முக்கியமாக தாம் அதிகாரத்துக்கு வர உதவிய மக்களின் நலன்பேணும் விடயத்தில் கூட தோல்விகண்டுள்ளது.
வாக்களிப்பதற்காக வருகை தந்த இடம்பெயர் தொழிலாளர்கள் உண்ண வழியின்றி இருப்பிடமின்றி கைவிடப்பட்ட நிலையில் வயிற்றுப்பிழைப்புக்காக பாலியல் தொழிலை நாடும் அவலம் ஏற்பட்டுள்ளது . ஆட்கொள்ளி காலத்தின் மத்தியில் பொதுப்பூங்காக்களில் வாழும் அவ்வாறான சிலர் நாடு திரும்புவதற்காக தனியார் கொடையாளர்களில் தங்கியிருக்கும் நிலையில் உள்ளனர்.

அரசாங்கத்துக்காக வாக்களித்த சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களும் அதே நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர்; பல தடவைகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டதோடு பங்கீடுகள்இ சம்பளம் என்பவற்றை வழங்காமல் தொழில் பற்றிய நிச்சயத்தன்மையையும் வழங்காமல் கைவிடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட 14 நாள் தனிமைப்படுத்தல் காரணமாகவும் அதன் விளைவான தொழில் இழப்பினாலும் பீசீஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள பொருளாதார வசதி இல்லாததாலும் மாதக்கணக்காக குடும்பங்களை சந்திக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.

ஆட்கொள்ளி நோயின் பின்னணியில் எவ்வித பொருளாதார சமூக பாதுகாப்பு அமைப்பில்லாமல் கைவிடப்பட்ட மொறட்டுவை பாதை வியாபாரிகள் வீதிகளிலிருந்து அகற்றப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்ததோடு தமது உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளையும் இழந்துள்ளனர் .

சுற்றுலாத்துறை வீழ்ச்சியால் வருமானத்தை இழந்த சபாரி ஜீப் ஓட்டுனர்கள் எவ்வித பொருளாதார சமூக பாதுகாப்புமில்லாமல் அவதியுறுவதோடு அரசாங்கத்தின் அண்மைய சுற்றுலாத்துறை தொடர்பான திடீர் நடவடிக்கையின் திறமையற்ற செயலாண்மையால் கோவிட்19ஆல் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டு பயணிகளுடன் ஏற்பட்ட ஊடாடுகையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கோவிட்19இன் பின்னணியில் விரிவாக அலசினால் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பயனுறுதிமிக்க நலன்புரி அமைப்பும் சமூக பாதுகாப்பும் எங்கே?

ஆட்கொல்லி நோய்க்காலத்தில் உயிர்பிழைக்க கஷ்டப்படும் தன் மக்களின் விருப்பை மீளப்பெற அரசாங்கம் ஒரு கவனக்கலைப்பானை நாடவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளமை ஆச்சரியமானதல்ல.

முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களின் பூதவுடல்களை தகனம் செய்தல் இ வடக்கின் நினைவுத்தூபியை அழித்தல் ஈஸ்டர் தாக்குதலில் பலியானவர்களுக்கான நீதி வழங்குதல் என்ற போர்வையில் முஸ்லிம்களை பயங்கரவாத தடுப்புச் சட்டம் (Pவுயு) மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சாசன சட்டத்தின் (ஐஊஊPசு) மூலமும் கைது செய்து நீடித்த காலத்தில் தடுத்து வைத்தல் போன்ற இனவாத செயற்பாடுகளின் மூலம் அரசாங்கம் அதன் தோல்வியை மக்களில் இருந்து மறைக்கப்பார்க்கின்றது.

பிளவுபட்ட நிலையில் காணப்படும் நாட்டு மக்களான எங்களின் கையிலேயெ அரசாங்கத்தின் பிழைத்தல் தங்கியுள்ளது என்பதை உணர இன்னும் எத்தனை காலம் எடுக்கும்? இதனை உணர்வதற்கான எங்கள் காலம் முடிந்து விட்டதா? எங்களை எது மீளெழுச்சிநிலைக்கு கொண்டு வரப்போகின்றது?

அண்மைய சிறுபான்மைக்கெதிரான நிகழ்வுகளான கட்டாய பூதவுடல் தகனம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நினைவுத்தூபி தகர்ப்பு என்பவற்றுக்கு எதிராக எங்களின் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

forced-creamation.jpg

இநடவடிக்கைகளை சமூக பாகுபாட்டுக்கும் துருவப்படுத்தலுக்குமான அரசாங்கத்தின் முறைப்பட்ட முயற்சிகள் என அடையாளம் காண்கின்றோம்.
கடினமான இவ்வுண்மையை உணர்ந்து விழிப்படைவதற்கும் காலங்காலமாக எம்மை பிரித்து சுக்குநூறாக்கும் பாசிச அரசியலை எதிர்க்கவும் விடுதலை இயக்கம் இலங்கை பிரஜைகளாகிய உங்களை அழைக்கின்றது.

அரசாங்கங்கள் ஆட்சியை பிடிக்கவும் தக்கவைத்துக்கொள்ளவும் பயன்படுத்தும் இப்பாகுபட்ட கொள்கைகளை அடையாளம் கண்டு விலக்குவதற்கும் மக்களுக்கு அழைப்புவிடுக்கின்றது. எமக்குள் பிரிவினை மற்றும் பிரித்தாளும் முயற்சிகளை ஏற்படுத்திஇ எம்மை பின்னோக்கி இழுக்கும் அரசியல் மற்றும் ஆட்சி முறைமையை முறியடிப்பதற்கு அனைத்து சமூகங்களையும் இன மத வேறுபாடுகளைத் தாண்டி செயற்பட அழைக்கிறோம். அரச வன்முறையை எதிர்க்கவும் அரசாங்கத்தை அதன் மக்களாகிய எமக்கு பொறுப்புக்கூறும் நிலைக்கு தள்ளவும் மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்

 

https://thinakkural.lk/article/104466

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

சுற்றுலாத்துறை வீழ்ச்சியால் வருமானத்தை இழந்த சபாரி ஜீப் ஓட்டுனர்கள் எவ்வித பொருளாதார சமூக பாதுகாப்புமில்லாமல் அவதியுறுவதோடு அரசாங்கத்தின் அண்மைய சுற்றுலாத்துறை தொடர்பான திடீர் நடவடிக்கையின் திறமையற்ற செயலாண்மையால் கோவிட்19ஆல் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டு பயணிகளுடன் ஏற்பட்ட ஊடாடுகையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா கொண்டு வரும் பயணிகளை ஜீப்பில் ஏற்றினாலும் கொரோனா 
வைரஸ் பரவும் என்பது வியாத்மக ஹை இண்டெலெக்சுவள்சிற்கு தெரியாதா...? விடுதலை புலிகளுடனும் யுத்த வெற்றியுடனும் கொரோனா பண்டமிக்கை  ஒப்பிட்ட அதிமேதாவிகள் அல்லவா  அடுத்தமுறை உக்ரேனில் இருந்து வரும் உல்லாச பயணிகளை விமானநிலையத்தில் வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்தால் உள்ள இருக்கும் கொரோனா வைரஸ் பயந்துவிடும் அப்புறம்  பரவாது , இந்த சின்ன விடயத்தை கூடநாங்கள் தான் சொல்லித்தரனுமோ...என்ன ஹை இண்டெலெக்சுவல்ஸப்பா  நீங்கள். 
காகம் இருக்க பனங்காய் விழுந்த கதைகளை வைத்து  உங்களையெல்லாம் அப்பாடக்கர்கள் என்று முழு உலகமே நம்பிப்போட்டினம்,யாழ் விதிவிலக்கா என்ன   

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.